(114) இட்லி வார்க்கப்படுகிறதா?... சுடப்படுகிறதா?
தமிழனின் பிரத்யேக உணவு இட்லி.
இன்றைக்கும் தமிழக ஹோட்டல்களில் "Largetst selling Single item" ஆகவும்"Ever green Opening item in Menu/Price list" திகழ்வது.
மெதுவடையுடனும், சாம்பாருடனும், கெட்டிச்சட்னி, கலர்கலரான சட்னிகளுடனும் இட்லி அமைக்கும் கூட்டணி வலுவானது, சுவையானது, இவற்றின் பிரிக்க முடியாத கூட்டணிதர்மம் அனைவரும் அறிந்தது!
இட்லி நீராவியில் வேகவைக்கப்ப்டுவதால் கொலஸ்டிரால்மாதிரியான உடல்நலக் குழப்பம் இல்லாத நல்ல ஆரோக்கியமான உணவு.
இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் என்பவைகளின் தொகுப்பு என்பதால் சமச்சீரான கார்போஹைடிரேட் கொண்ட ஒரு பாலன்ஸ்டு உணவு.
இப்படியான பல சிறப்புக்களைத் தன்னகத்தே கொண்ட இட்லி தயாரிக்கப்படும் முறையானது தமிழ்ப் பேச்சு வழக்கில் இரு வகையில் குறிப்பிடப்படுகிறது.
1. இட்லி சுடுதல்
2. இட்லி வார்த்தல்
இட்லிசுடுதல் என்பது இட்லித்தயாரிப்பில்சூடாக்குதல் என்பதைக் குறிக்கிறது எனில் வடை சுடுதல் என்பதான வடை தயாரிப்பில் சுடுதல்-> சூடாக்குதல் வேறாக இருக்கிறது.
வார்த்தல் என்பது வடிவப்படுத்துதல் எனும் மோல்டிங்கை குறிக்கிறது. இட்லி அதற்கான பிரத்யேக குழித்தட்டில் வார்க்கப்படுகிறது எனவே வார்த்தல் என இட்லியின் தயாரிப்பு முறை அழைக்கப்படுகிறது.
(துப்பாக்கியால்) சுடுதல் என்றும் ஒரு சுடுதல் இருக்கிறது ( இட்லி வெந்து விட்டதா என்று விரலால் குத்திப் பார்க்க இட்லியில் ஏற்படும் வடு துப்பாக்கியால் சுட்டதால் வந்ததா என்று எண்ணி சுடுதலுக்குப் பயன்படுத்தப்பட்டது ரிவால்வரா/க்லாஷ்னிகோவா /ரைபிளா /நாட்டுத் துப்பாக்கியா எனக் குழம்ப வேண்டியிருக்கிறது)
சுடுதல் என்பதாக டெர்ரகோட்டா, மட்பாண்ட, செங்கல் இவையும் சுடப்படுகின்றன. அதாவது வடிக்கப்பட்டபின், மோல்டில் வடிக்கப்பட்ட பச்சை மண் உருவங்கள் வெப்பத்தில் சுடப்படுகின்றன இதுவும் சுடுதல்தான்.
ஆக இட்லிவார்த்துச்சுடுதல் என்பதுதான் சரியாக,முழுமையாக இருக்கவேண்டும். வார்த்தல் மட்டுமாகவோ அல்லது சுடுதல் மட்டுமாகவோ என்பது இட்லியின் முழுத் தயாரிப்பு முறை அல்லவே!
குறிப்பு:
எழுதும் சப்ஜெக்டால் கடினமாகிற என் எழுத்து நடையை லேசாக்க எளிய சப்ஜெக்ட் பற்றி எழுதலாமேன்னு ஒரு முயற்சிதான் இப்பதிவு. இருப்பதிலேயே லேசானது நமக்க்கு சாப்பாடுதானே:-))
அன்புடன்,
ஹரிஹரன்