Wednesday, February 28, 2007

(123) சக பதிவர்கள் ரியாக்சன் - தமிழ்மண பின்னூட்ட உயரெல்லை 30க்கு

தமிழ்மணத்தில் வெளியான பதிவுகளுக்கான பின்னூட்ட உயர் எல்லை 30 என்கிற அறிவிப்புக்கு சக பதிவர்களது ரியாக்சன் எப்படி எல்லாம் இருக்கும் என்று கற்பனைப் பதிவு.

நட்புடன் நான் படிக்கும் எல்லாப் பதிவர்களையும் அவர்கள் பெயர்களிலேயே கலாய்ந்திருக்கிறேன். பதிவர்களுக்கு ஆட்சேபம்/விருப்பமில்லை எனில் தனிமடலில் தெரிவித்தால் நீக்கிவிட ஆயத்தமாயிருக்கிறேன்.

இலவசகொத்தனார்:(தட்டிப்பாத்தேன் கொட்டாங்கச்சி ஸ்டைலில்)

கோட்டை கட்டினேன் பின்னூட்டத்தைவச்சி
தமிழ்மணத்தால் பின்னூட்ட ஆட்டம்போச்சி

டோண்டு: (கொட்டும்மழைக்காலம் உப்பு விற்கப்போனேன் ஸ்டைலில்)

பின்னூட்ட காற்றடிக்கும் கால்ம் அனானி/அதர் ஆப்ஷன் மூடிவச்சேன்
தமிழ்மணரூல்ஸ் கொட்டும் காலம் அனானி/அதர் ஆப்ஷன் திறந்து வச்சேன்..

பெனாத்தல் சுரேஷ்: (பாட்சா ஸ்டைலில்)

நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்
நாலும் தெரிஞ்ச பின்னூட்ட ஷேர் ஆட்டோக்காரன்
பின்னூட்ட ஏழைக்கெல்லாம் நான் சொந்தக்காரன்டா..

பஞ்ச் டயலாக்: எனக்கு ஒரு பின்னூட்டம்வந்தா முப்பது பின்னூட்டம் வந்தமாதிரி..

யேய்..யேய்...யேய் நல்லவங்களுக்கு உருப்படியா முதல்லயே 29 நல்ல பின்னூட்டம் வந்து முப்பதாவதுல எல்லோரும் வாங்க நன்றின்னு உபசரிக்கும்படி செய்வான் ஆண்டவன்..
ஆனா...கெட்டவங்களுக்கு முதல்ல வர்ற முப்பதும் பின்னூட்டக் கயமையா ஆக்கி, முப்பதுக்கு மேல வர்ற உருப்படியான ஒரு பின்னூட்டமும் தமிழ்மண முகப்பில் வராது செய்திடுவான் ஆண்டவன்..

ஜொள்ளுப்பாண்டி:
முதல் முப்பது பின்னூட்டத்துலேயே எனது பதிவு சொல்லும் பொருள் பற்றிய புரிதல்கள் எல்லாத்தையும் வாசகர்கள் "ஜொள்ளி"முடிக்கமுடியுமா? நடக்கிற காரியமா இது?
"ஜொள்ளுதல் யார்க்கும் எளிய அரியவாம் ஜொள்ளியவுடன் பின்னூட்டும் செயல்" எனும் முன்னோர் வாக்கினை தமிழ்மணம் நினைவில் வைத்து மறு பரிசீலனை செய்யவேண்டும்.

வகுப்பறை S.V சுப்பையா வாத்தியார் :
எனது சோதிட அறிவியல் பதிவுகள் தொடர் படித்தால் பதிவர்களால் இந்த இக்கட்டினை எதிர்கொள்ள உதவும்.
பிரதமை முதல் பௌர்ணமி வரையிலான வளர்பிறை 15 என்பது முதல் பாதி முப்பது பின்னூட்ட வரவு என்றும், அடுத்த பிரதமை முதல் அமாவசை வரையிலான தேய்பிறை 15 என்கிற இரண்டாம் பாதி முப்பது பின்னூட்டங்கள் பி;கயமை+வரவேற்பு உபசரிப்பு என எண்ணி எதிர்கொண்டால் தற்போதைய தமிழ்மண பின்னூட்ட உயரெல்லை30 எனும் சோதனைக்காலத்தின் இக்கட்டிலிருந்து சோதிடத்தின் உதவியால் தப்பலாம்.

செந்தழல் ரவி:
அமுகவை அமுக்கப் பார்க்கும் சதி. அமுக அவ்வளவுதானா? தமிழ்மணத்தில் ஆப்புதானா?

மு.கார்த்திகேயன்:
பின்னூட்ட உயர் எல்லை வெறும் 30தானா? எங்க தல அஜீத் வழி நடக்கும் எங்களுக்கு வானமே எல்லை. தல மாதிரி முட்டி மோதி பின்னூட்டத்தை 50-60ன்னு வாங்கி தமிழ்மண முகப்பை "வரலாறு" படைச்சு ஆள்கிற இந்த நேரத்தில் தல அஜீதை ஆழத்தில் தள்ளிய ஆழ்வார் கதை மாதிரி உயர் எல்லை 30 என்று டுவிஸ்ட் தமிழ்மணம் தரலாமா?
தல போல வருமா?

கீதா சாம்பசிவம்:

பின்னூட்ட உயர்எல்லை 30 என்பது கைலாயமான உயர்ந்த இடத்திலிருக்கும் கைலாசநாதனான சிவ பெருமானின் சித்தம் என்றே கருதுகிறேன். முதல் பத்து சிவனின் நெற்றிக்கண் ரேஞ்சில் சுட்டெரிக்க வரும் விமர்சனங்களுக்கும், இரண்டாம் பத்து பின்னூட்டங்களை தன்னில் ஒருபாதியான பார்வதியான சக்தியாக விமர்சனங்களை எதிர்கொள்வதற்கும் மூன்றாம் பத்து பின்னூட்டங்களை ஜடாமுடியுடையவனான சிவனின் உடுக்கையாக பாவித்து நாம் அடிக்கும் உட்டாலக்கடி உடுக்கையடிப் பின்னூட்டங்களாகவும் பாவித்தால் பரமசிவன் அருள் கிட்டி உயர் எல்லை 30ஐத் தாண்டியதால் தமிழ்மண முகப்பில் வரவில்லையே என்ற ஏக்கமின்றி பதிவு முக்தியடையும்!

பாலபாரதி:
புதுபிளாக்கருக்கு மாறிய கையோடு டெக்னாலஜி அப்கிரேடேஷன் பின்னூட்டப்பெட்டியிலும் DTS/Dolbi digital 7.1 channel Surround sound எபெஃக்டில் செயல்படுவது. ரெண்டாவது பின்னூட்டத்தில் ஆரம்பிக்கும் ரிப்பீட்டே எக்கொ எபெஃட் அடங்கவே 30பின்னூட்டம் ஆகிடுமே!
தமிழ்மண பின்னூட்ட உயரெல்லை பெரும் தொல்லை. தமிழ்மணமும் பாகச ஆகிப்போனதா? யூ டூ தமிழ்மணம்???


வரவணை செந்தில்:
தல பாலபாரதிக்கு டிஜிடல் டெக்னாலஜியால் ரிப்பீட்டட் தொல்லை. எனக்கு பின்னூட்ட பாலா தொல்லை. முதல் முப்பது பின்னூட்டத்தில் பாலா, போலி பாலா அதற்கு என் பீலான்னு 29 ஆகிடும். மொத்தத்தில் சொசெசூ இன்னொருமுறை!

துளசி அக்கா:
நம்மாழ்வாரை நொந்துக்கமுடியுமா? நம்ம தல ஆழ்வாரா நடிச்சதை நொந்துக்கலாம். டீச்சரால் விதியை மீறமுடியுமா? விதியை வேணும்னா நொந்துக்கலாம்.

விடாதுகருப்பு:
ராம்தாஸ் ஐயர் 10 ரா. ஐயங்கார் 10 மிச்ச பத்தை டிரேட்மார்க்கான பன்னாடை பட்டாடைன்னு பட்டாசா முப்பதாக்கி உயர் எல்லையைத் தொடவேண்டியதுதான்.

நுனிப்புல் உஷர்:
எனது எழுத்துக்கள் மேம்பட்டு புக்கர், புலிட்சர் விருதுகளை நோக்கி புலிப்பாய்ச்சல் போட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் முப்பதே பின்னூட்டத்தில் வரும் விமர்சனங்கள் கொண்டு நுனிப்புல்லாகவே எனது எழுத்தைச் செறிவாக்கவேண்டிய நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கிறது.

கால்கரி சிவா:
கொத்துப்பரோட்டா பதிவைப் போட்டு பதிவுலகைப் புரட்டிப்போட்ட கொத்ஸையே புரட்டிப்போட்டிருக்கிறது தமிழ்மண பின்னூட்ட உயர் எல்லை 30 விதி. சைட்டிஷ் சால்னாவும், ஜில்ஜில் ஜிகர்தண்டா பதிவுக்கும் 30தான் பின்னூட்ட உயர் எல்லை என்பது சரியா?

ஜி.கௌதம்:
தமிழ்மணத்தில் இந்த தடாலடி அறிவிப்பு என்னை இனி தடாலடிப் போட்டிகளை அறிவிக்கமாட்டேன் என தடாலடியாக அறிவிக்க வைக்கிறது.

தமிழன்:
பதிவுத் தமிழ் வளர இருந்த ஒரு வழியை தமிழனே அடைத்துக்கொண்டமாதிரி உணர்கிறேன்.

கல்வெட்டு:
கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டிய தமிழ்மண பிரகடனமாக இதைக்காண்கிறேன்.

சர்வேசன்:
இன்னும் ஒரு சர்வேக்கு மேட்டர் தந்த தமிழ்மணத்திற்கு நன்றி!

பொன்ஸ்:
இந்த 30 பின்னூட்டம் தான் உயரெல்லை என்பது யானைக்கு சோளப்பொரி மாதிரி!

தருமி:
விளிம்புநிலை மதநம்பிக்கைகளே உயர் எல்லையாகக் கொண்டிருந்தாலும் சில நேரம் சங்கடங்களை அது தருவதுமாதிரி பின்னூட்ட உயர் எல்லை 30 என்கிற விளிம்புநிலையால் நல்ல கருத்தை தமிழ்மண முகப்பில் காட்டாத சங்கடங்கள் நேரும். Anyway Let us agree to agree with Thamizmanam.

அரைபிளேடு:
தமிழ்மணத்தின் இந்த அறிவிப்பு அரைபிளேடின் பின்னூட்ட மகசூலில் முழுபிளேடு போட்டிருக்கிறது.

பின்னூட்டப்புகழ் பாலா:
தமிழ்மணம் அய்யா, இந்த அறிவிப்பு சரியா இல்லையான்னு எங்க புரட்சிகர இயக்கச் சிங்கங்களான அசுரன் மற்றும் ராஜாவனஜ் ஐயாக்கள் ரெண்டுபேரும் தான் பின்ணணியில் இருக்கும் எல்லா ஈய, இஸங்களை எடைக்கு எடை சீர்தூக்கிப் பார்த்து அறிவிக்க வேண்டும்.

இட்லிவடை:
முதல் முப்பது பின்னூட்டங்களுக்கு இட்லிவடை பக்கத்தில் ஒருமணிநேரம் விளம்பரம் இலவசம்!

அரவிந்தன் நீலகண்டன்:
தெருவில் ஸ்டாண்டு போட்டு சைக்கிள் ஓட்றவன் கூட சிதம்பரம் நடராஜர், தேவரம் மேட்டர்ல சவுண்டு தர்றவனெல்லாம் ஓடி ஒதுங்கி, பம்மிப் பதுங்குறமாதிரி சுவிட்ஸர்லாந்துல எலக்டிரான் துகள் சைக்ளோட்டிரான் அணுவிசையகத்தில் நடராஜர் சிலை நிறுவியதைச் சொல்லி மகாசிவராத்திரி வாழ்த்துக்கள் என்று ஹைடெக் மிதாலஜி+காஸ்மாலஜி பதிவு போட்டா அனானிங்க என்ன கஸ்மாலம் கிர்ர்ர்ரடிக்குதுன்னு கும்மியடிக்காம ஓடிடுவாங்க. காஸ்மாலஜி+மிதாலஜிக்கு பின்னூட்டம் 30 என்பது உயர் எல்லைதான்!

லக்கிலுக்:
சுயமாய் உருவெடுத்த வலைப்பூ சுனாமியையே உள் இழுக்கும் வலிவுள்ள தமிழ்மணத்தின் சுனாமி அறிவிப்பு இது!

கவிதா+ராகிகஞ்சி+அணில்குட்டி:
சிம்பிளா ராகிகஞ்சி பதிவுகள் போட்டாச் சிரமம், சோதனை இல்லை. மிருகங்கள்ன்னு இனி ஹெவியா தலைப்பு வைக்கிறதை யோசிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

பத்ரி:
வலைப்பூ பதிவுகளின் மீது திணிக்கப்பட்ட வெகுஜன அச்சு ஊடகங்களை ஒத்த ஊடக வன்முறையின் தழுவலோ இல்லை இளவலோ என எண்ணவேண்டியிருக்கிறது.

என்றென்றும் அன்புடன் பாலா:
எனது உயிர் வாழ உதவி வேண்டி தொடர் பதிவுகளுக்கு சிறப்புச்சலுகை தரும்படி தமிழ்மணத்தை வேண்டுகிறேன்

படிச்சுட்டு உங்க கருத்தையும் சொல்லிட்டுப்போங்க.

அன்புடன்,

ஹரிஹரன்

Tuesday, February 20, 2007

(122) ஐயாம் டில்லி....ஐ யம் வேர்ல்டு மேப்

யோவ் மதுரை சூப்பர்வைசர் திரு.அண்ணாமலைகிட்ட அப்ரூவலுக்கு அனுப்பிச்ச ஃபைல் என்னய்யா ஆச்சு? கர்ஜித்தார் சிதம்பரம்.

நடுங்கியபடியே வந்த மதுரையை திரு.அண்ணாமலையை பாலோ அப் பண்ணச் சொல்கிறார் சிதம்பரம்.

போன அமாவாசைக்கு அனுப்பினா ஃபைலை மலையாக்குமிச்சு வச்ச திரு.அண்ணாமலை டேபிளை பவுர்ணமி வரைக்கும் சுத்தி சுத்தி வலம் வருதே ரெண்டு வாரமான்னு டென்சனாகிறார் சிதம்பரம்.

இந்தச் சிதம்பரத்தையே இந்த ஆட்டம் ஆடவைக்கிறானுங்களே. இங்கிலீஷ்ல தெளிவாப் புரிகிறமாதிரிதானே எழுதியிருந்தேன் என முணுமுணுக்கிறார்.

இதற்கிடையில் மதுரை வந்து பைல் பழனியிடம் விளக்கத்திற்குச் சென்று இருக்கிறது என்று அப்டேட் செய்கிறார்.

சிதம்பரம் துணுக்குற்று பழனிகிட்டேயா? எப்பவோ யாருக்காகவோ பின்புறமா அவனைச் சுரண்டிட்டாங்கன்னு வர்ற கோவத்தில என்னை இப்போ வெளக்கம் கேள்வின்னு உருவிக் கோவணத்தோட நிப்பாட்டிருவானே?

பைலை எப்படியும் மாற்று வழியில் சேஸ் செய்தே தீருவது என்று சிதம்பரம் முடிவெடுக்கிறார். அடுத்த டிபார்ட்மெண்ட் நண்பர் டில்லிக்கு போனைப் போடுகிறார்.

யோவ் டில்லி நீதான்யா இந்த சிதம்பரம் திரு.அண்ணாமலைக்கு அனுப்பி திரு.அண்ணாமலை பழனிக்கு அனுப்புன அந்த பைலை பழனிகிட்டேர்ந்து அவன் கேள்வி, வெளக்கம்னு கேட்டு கோவணத்தோட என்னை நிறுத்தும் முன்பு திரு.அண்னாமலைக்கு திரும்பி அனுப்பிடாம ஏழுமலைக்கு அனுப்பி வைக்கணும் என்று வேண்டுகிறார்.

டில்லியும் கலவரப்படாதே சிதம்பரம் நான் இப்பவே திருமலையை அனுப்பிவைக்கிறேன் பழனிகிட்டேர்ந்து ஃபைலை திருமலை இன்டரப்ட் செய்து ஏழுமலைக்கு பார்வர்டு செய்ய ஆவன செய்யச் சொல்கிறேன் என்று ஆறுதல் சொல்கிறார்.

கலவரமாகிய சிதம்பரமோ திருமலையா? அவர் மேட்டருக்கு வாங்கின கடனுக்கு மீட்டர்வட்டியையே காலா காலத்துக்கும் வசூல்பண்ணிக் கட்டுறதுக்கே முழிபிதுங்கி பொண்டாட்டி குடும்பத்தை விட்டுத் தள்ளியிருக்கிற டென்சன்ல இருக்கப்போராருன்னு சிதம்பரம் நண்பன் டில்லி பரிந்துரைத்த திருமலைக்கு பதிலாக திருப்பதியை அனுப்பிவைக்கச் சொல்கிறார்.

டில்லி கோபமாகிறார். என்னப்பா சிதம்பரம் நானே என்னோட பாஸ் பத்ரிநாத் தொல்லைக்கு நடுவே உனக்கு உதவ உடனே ஆளனுப்புனா திருமலை வேண்டாம் திருப்பதிய அனுப்புன்னு நச்சு பண்ணுறே? சரி சரி என் பாஸ் பத்ரிநாத் வெடவெடன்னு குளிரெடுக்கும் உயரமான அவரிடத்திலிருந்து டில்லியை ஈஸியா டிராக் செய்யப்போராரு, சிதம்பரம் உனக்கு திருமலை வேணாம் திருப்பதி தான் வேணும்னா நம்ம காசியைக் கேட்டுப்பாருன்னு ஐடியா குடுத்து போனை வைக்கிறார்.

காசியா? நேர்மை, புண்ணியம்னு பாவமாப் பேசியே கரைச்சிருவானே பழனியே பரவாயில்லை இதுக்குன்னு மனசுக்குள் நினைக்கிறார் சிதம்பரம்.

மதுரை மாதிரி அடக்கமா இருக்கானா பாரு இந்தச் சிதம்பரம்? ஆட்டமா ஆடுறானேன்னு டில்லி மனசுக்குள்ளே புலம்பியபடியே பாஸ் பத்ரிநாத்தைப் பார்க்கச் செல்கிறார்.

டில்லி ஆர்க்கிடெக்ட் அமர்நாத் கிட்டேர்ந்து ரிப்போர்ட் வந்துருச்சா? வந்துடுச்சு சார் ஆனா அமர்நாத் ஆர்க்கிடெக்ச்சர்ல பிரச்சினை இருக்குமோன்னு சந்தேகமா இருக்குங்க பத்ரிநாத்ன்னு டில்லி சொல்ல டென்சனாகிற பத்ரிநாத் ஆயிரம் ரிவ்யூ செக்யூரிட்டி இஷ்யூ எல்லாம் மினிட்ஸ் ஆஃப் மீட்டின் போது பேசி முடிச்சாச்சே டில்லி... சம்மர் வேற வருது அமர்நாத் ஆர்க்கிடெக்சர் பிரச்சினையால உரு(வா)காம இருந்தா சரி.

இதற்கிடையில் திரு அண்ணாமலைக்கு போன் வருகிறது.
ஈஸ் தட் திரு.அண்ணாமலை? ஐயாம் ஓர்லாண்டோ ஸ்பீகிங் மை செல்ப் அண்ட் மிஸ்டர் ரியாத் அலாங் வித் கதிர்காமர் விஸிட்டிங் ஃபார் இன்ஸ்பெக்ஷன் ப்ளீஸ் பிரிப்பேர் அர்ஜெண்ட் அஜெண்டா பார் அவர் செட்யூல்ட் மீட்டிங். ஓகே பை ஃபார் நௌ.

ஒர்லாண்டோ அண்ட் ரியாத் அண்ட் கதிர்காமர் டிஸ்னிலேண்ட் கார்ட்டூன்ஸ் அர்ஜெண்ட் ஆர்டினரின்னு லாண்டரி அஜண்டாவை இந்த அனகொண்டாக்களுக்கு இந்த லெஜண்ட் தயார் செய்யும் நிலையா எனப் புலம்பியபடியே திரு.அண்ணாமலை அஜெண்டாவை ரெடி செய்கிறார்.

திரு அண்ணாமலை அவசரமாக போனைப் போட்டு யோவ் டில்லி இன்ஸ் பெக்சனுக்கு நாளைக்கு சாயந்திரம் க்ளையண்ட் வர்றாங்க இடனரி டீடெய்ல்ஸ் எடுத்துக்கோ

ஒர்லாண்டோ டிபார்டிங் ஒர்லாண்டோ அண்ட் அரைவிங் அட் ரியாத் தென் ஜாயினிங் வித் ரியாத் அண்ட் தென் ரியாத் அண்ட் ஒர்லாண்டோ டுகெதர் டிபார்ட்டிங் ரியாத் அண்ட் ஜாயினிங் வித் கதிர்காமம் இன் லங்கா தென் ஒர்லாண்டோ, ரியாத்,அண்ட் கதிர்காமம் விஸிட்டிங் அவர் புவனேஸ்வர் பிளாண்ட் இஸ் தட் க்ளியர்.

டில்லி மறக்காம ஏர்போர்ட்டுக்கு பிக்கப்புக்கு அரேஞ்மெண்ட் செஞ்சுடு டில்லின்னுட்டு போனை வைச்சுடுறார்.


மறுநாள் மாலை க்ளையண்ட் இன்ஸ்பெக்ஷனுக்கு வருகிறார்கள் பரஸ்பரம் அறிமுகமாகிறார்கள்.

ஹலோ ஐயாம் ஒர்லாண்டோ.. ஹலோ ஐயாம் ரியாத்.. ஹலோ ஐயாம் கதிர்காமம்..
ஹலோ ஐயாம் அமர்நாத்... ஐயாம் பத்ரிநாத்... ஐயாம் புவனேஸ்வர்...ஐயாம் சிதம்பரம்..
ஐயம் திரு.அண்ணாமலை... ஐயம் ஏழுமலை..ஐயம் திருப்பதி...ஐயம் திருமலை...
ஐயம் பழனி... ஐயம் மதுரை...

ஹலோ மிஸ்டர் ஒர்லாண்டோ.. ஹலோ மிஸ்டர் ரியாத் அண்ட் ஹலோ மிஸ்டர் கதிர்காமம் ஹௌ ஆர் யூ ஆல்... ஐயம் டில்லி என டில்லி தன்னை அலப்பறையாக அறிமுகம் செய்து கொள்ள ஒர்லாண்டோ ஹௌ இஸ் த வெதர் இன் டில்லி என அக்கறையாகக் கேட்க.. டில்லி மீண்டும் ஐயாம் டில்லி என அழுத்திச் சொல்லுகிறார்...

இந்த பூகோள வித்தகர்கள் அறிமுகத்தை கேட்ட அப்பாவி காசிக்கு ஏதோ பூகோளப் பொறியோன்னு பொறிதட்ட ஹலோ யூ ஆல்.. ஹௌ ஆர் யூயூ.. ஐயம் வேர்டுமேப்-ன்னு சவுண்ட் விட்டுக்கொண்டார்.

குறிப்பு:
1991-92ல் சென்னையில் மவுண்ட் ரோடு-சிந்தாதிரிப்பேட்டை சிம்சன் இஞ்சின் பேக்டரியில் UVNDT (Ultraviolet Non Destructive Test) டெக்னாலஜியைப் பயன்படுத்தி புதிய இஞ்சின் பிளாக்குகளில் கீறல்கள் இருக்கிறதா இல்லையா என புற ஊதாக்கதிர்கள் மூலம் சோதிக்கும் கருவியை நிறுவும்போது அந்த டிபார்ட்மெண்ட் இன்சார்ஜுடன் அவரிடம் எனது பிஸினஸ் கார்டைத் தந்துவிட்டு அறிமுகமாகும்போது என்கையைக் குலுக்கிவிட்டு ஐ யம் டில்லி என்றார்.

நான் அவர் ஊர் டில்லி என அர்த்தம் கொண்டு ஹௌ இஸ் த வெதர் இன் டில்லி என்று கேட்டு எங்கள் அஜ்மீர் பிளாண்டுக்கு டிரைனிங் டில்லி வழியாக சென்று வந்த கெத்தில் பதிலாக டில்லி மஸ்ட் பி கோல்ட் நௌ என நானே சொல்லிக்கொள்ள மீண்டும் அவர் ஐ யாம்
டில்லி எனச் சொன்னபோது சமாளித்தது நினவில் வர இப்பதிவு.

அன்புடன்,

ஹரிஹரன்

Monday, February 19, 2007

(121) டோண்டு என்கிற கிழ மிருகம்....

சில நாட்களாகவே என் பங்குக்கு டோண்டு என்கிற கிழ மிருகத்தைக் கிழி கிழி என்று கிழிக்க வேண்டும், துவைத்துக் காயப்போட வேண்டும் என நினைத்திருந்தேன்.

எங்கும் டோண்டு
எதிலும் டோண்டு
எல்லாமே டோண்டு
அம்மம்மா டோண்டு
வலை-வம்பாலே டோண்டு
சொல்-அம்பாலே டோண்டு
டோண்டு...டோண்டூ (எங்கும் மைதிலி டியூனில் கேட்கவும்)

டோண்டு கிழ மிருகம் என்பதை அவரது இந்தப்பதிவில் படித்து அறிந்து கொண்டேன். 42 வயது கிழம் தினம் 40 கிலோமீட்டர் சைக்கிள் மிதித்து ஏற்படுத்தப்பட்ட பிரச்சினைக்குத் தீர்வுகாண முரட்டு வைத்தியத்தை இந்தக் Clever கிழவர் மிருகத்தனமான தன்னம்பிக்கையுடன் செய்து கொண்டது! டோண்டு கிழ மிருகம்தான் சந்தேகமே இல்லை!

நியாயமற்ற எதிரிக்குக்கூட குழையடித்து கூழைக்கும்பிடு போட்டு காரியத்தைச் சாதிக்கும் "ஸ்மார்ட் லிவிங் " டோண்டுவுக்கு தெரியாததால் அவர் பட்ட இன்னல்கள் அதிகம்.

இதற்காக டோண்டுவுக்கு குழையடிக்கத் தெரியாது என்று எண்ணவேண்டாம்.
டோண்டு நெடுங்குழை அடிப்பதில்வல்லவர். வலைவழியாக டோண்டு தன் எழுத்து மூலம் சந்தித்திருப்போரை, தன் திருப்பேரை மறந்திருப்போரையும் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் திருப்பெயரை தமிழ்மணம் வாயிலாக பதிவுகள் படிப்போர் நினைவில் இருத்தச்செய்பவர் டோண்டு.

தன் பெயரிலே (அய்யங்)கார் இருந்தாலும் இன்னும் வாடகைக்காரிலேதான் பயணிப்பார் டோண்டு.

தனியுடமை அனைத்தும் பொதுவுடமையாக வேண்டும் எனும் அரசியல் கோஷத்தினிடையே சத்தமில்லாமல் பொதுவுடமை மின் தொடர் வண்டியைத் தன் ரயிலாக தனியுடமையாக்கிவிடுவார் டோண்டு!

டோண்டுவும் விஜய டி.ராஜேந்தரும் ஒருவிதத்தில் இணையானவர்கள். உதடுகள் இவர்களைப் பிடிக்கவில்லை என்று சொன்னாலும் உண்மையில் இவர்கள் மேல் பிடிப்பு இருக்கும். காரணம் இருவரும் பன்முகத்தன்மையோடு கடினமாக உழைப்பவர்கள், தளராத மன உறுதியும், தன்னம்பிக்கையும் நிரம்பியவர்கள்.

இன்றைக்கு சமூகத்தில் டிரண்டாக, அரசு-வங்கிப் பணிகளில் இருப்போர் விஆர்.எஸ் என்றும் ஐடி துறையில் 40களில் இருப்பவர் Early retirement குறித்து யோசிக்கும் வேளையில் கிழவர் டோண்டு 60 வயதிலும் கடினமாக மிருகம் மாதிரி உழைப்பவர்.

டோண்டு பல வழிகளில் கிரியா ஊக்கியாக இளைஞர்களுக்கு பொறியியல் படித்து மொழிபெயர்ப்பாளராக பரிமளிப்பது, நேர விரயம் =பொருள் விரயம் என உணர்த்தும் விதமாக புரொபஷனலாக வேலை செய்வது, கடினமாக உழைக்க வயது பொருட்டல்ல என்பது, பெரும் தன்னம்பிக்கையுடன், சிதறாத மன உறுதியுடன், சிரமங்களை கூட்டமாகக் கூடித் தலைவலியாக ஏற்படுத்தினாலும், தனிப்பட்ட தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு சமாளிப்பது என சாமனியர்களிடையே அணுகக்கூடியவராக இருக்கிறார்.

டோண்டு கிழ மிருகம் தான் சந்தேகமில்லை! தன்னம்பிக்கை, தளராத உறுதி, உழைப்பில்!

குறிப்பு:

டோண்டு குறித்த என் அதிர்ச்சிகள்

அதிர்ச்சி-1

டோண்டு எதிரிகளை நூதனமாக துவம்சம் செய்வது அவரது ஹைபர் லிங்க்ஸ் பதிவுகள் வாயிலாக என்பது என் எண்ணம். எப்போதோ டோண்டுவின் ஹைபர் லிங்க் மொக்கைபதிவைப் படித்துவிட்டு இன்றளவிலும் டோண்டுவோட "ஹைபர் லிங்க் பதிவு பக்கம் போவியான்னு என்னை நானே நொந்து கொண்டு இருக்கிறேன்:-))

அதிர்ச்சி-2
தெருப்பெயரில் சாதி விஷயத்தில் காலச்சக்கரத்தில் நின்றுவிட்ட டோண்டு.

அதிர்ச்சி-3
டோண்டு புலால்-மது-புகைத்தல் இவற்றோடு உறவாடுவது என்பது தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனுக்கே டகால்டியாக டோண்டு காதுகுத்துவது என்பதாகாதா?



டோண்டுவை நோண்டி நொங்கெடுத்து அடிக்கிற தமிழ்இணைய வலைப் பதிவுகளிடையே டோண்டுவின் பல நல்லவைகளை ஆதரிக்கவும் ஒருபதிவு இருக்கவேண்டும் என்பதால் இப்பதிவு.

அடிக்கிற கைதான் அணைக்கும் எனும் வகையில் டோண்டுவை அடிக்கிற தமிழ்இணையமே டோண்டுவை அரவணைக்கும்!


அன்புடன்


ஹரிஹரன்

Sunday, February 18, 2007

(120) சுவையான வரலாற்று-சமய-அரசியல்-நகைமுரண்கள்

சில சுவைமிக்க, புகழ் பெற்ற வரலாற்று, சமய, சமூக- அரசியல் தளங்களிலான நகைமுரண்களைக் கவிதையாக்கித் தொகுத்துத் தந்திருக்கிறேன். படித்து மகிழுங்கள்:-))

1. சமணர்கள்-கொல்லாமை-கழுமரமேறுதல்

உயிர் கொல்லாமையை உலகோர்க்கு
உரத்து உரைத்த சமணர்கள்
சைவ-சமண விவாதத்தில் தோற்றபின்
சுயமாய்த் தெரிவு செய்ததோ
கழுமரமேறி அமர்ந்து உயிர்துறத்தலை!

2. விக்கிரக ஆராதனை-பேய்கள் வழிபாடு-கிறித்துவம்

இந்துமக்கள் திருக்கோவில்கள் தோறும்
பேணும் விக்கிரக ஆராதனையை
பேய்கள்வழிபாடு என்று இழித்துரைத்த
கிறித்துவமிஷ"நரிகள்" சர்ச்கள் தோறும்
பிரதிஷ்டை செய்து வழிபடுவதோ
சிலுவையில் அறையப்பட்டு உயிரிழந்து
பேயாய்த் தொங்கும் இயேசுவுருவத்தை!

3. பகுத்தறிவு-நதிகள்-சுயமரியாதை தமிழர்மேம்பாடு

இந்துஇறைமறுப்பு சுயமரியாதை பகுத்தறிவுக்கூட்டத்தினரை
தேர்ந்தெடுத்து ஆட்சி அதிகாரத்திலமர்த்தினால்-தமிழகமெங்கும்
தேனாறும்-பாலாறும் கரைபுரண்டு ஓடும்எனச்சொல்லியே
ஆட்சிஅதிகாரம் பெற்ற இந்துஇறைமறுப்பு பகுத்தறிவுகளின்
சீரிய ஆட்சியில் தமிழக தலைநகர நதிகள் சாக்கடையாயின
இதர தமிழக நதிகள் மணல் ஓடும் கருவேலந்தோப்பாயின!

(பொதுஅறிவு இப்படி இருந்தா தேனாறு-பாலாறு ஓடும்)

4. அஃறிணைகளால் மதிப்புயரும் நவீனகால உயர்திணைகள்

ப்ளாஸ்மா-டிவி டிஜிடல்-காமெராமொபைல் டயோட்டாகார்
இண்டெர்நெட்டுடனான கணிணி குளிரூட்டும் இயந்திரம்
என்பதான நவீனயுக அஃறிணைகள் நிர்ணயிக்கின்றன
இன்றைய மெத்தப்படித்த நவயுக-நாகரீக நகரத்துமாந்தர்
உண்மையில் உய்ர்வான உயர்திணைகள்தானா? என்பதை!

5. காதல்-ஜாதிஒழிப்பு-தமிழ்க்கலாச்சாரமீட்டெடுப்பு- வாக்குசுத்தம்

காதலும் வீரமும் தமிழர்தம் குணங்கள்
காதலால் ஜாதி ஒழிக்கப்படுகிறது
காதல் திருமணங்கள் காலத்தின் கட்டாயம்
ஈவெரா-இறைமறுப்பு விடுத்து ஜாதிஒழிப்பை முன்னெடுப்போம்
தமிழர் கலாச்சாரபண்பாட்டை மீட்டெடுப்போம்-ஓங்கி உரைத்தது
ஆதிதமிழர் கலாச்சார, பண்பாட்டு மீட்டெடுப்பு இயக்கம்
பிப்-14 காதலர் தினமோ தமிழர்சமுதாய-கலாச்சார-பண்பாட்டு சீர்கேடு
தமிழ்நாட்டில் காதலர்தினம் தடைசெய்யப்படவேண்டும்-அறிவித்தது
அதே ஆதிதமிழர் கலாச்சார,பண்பாட்டு மீட்டெடுப்பு இயக்கம்!

6. இந்துமதஉருவவழிபாடுஎதிர்த்த-ஈவெராஉருவவழிபாடு-ஈவெராமதம்

இந்துமதமும்-அதில் பிரதானமான உருவவழிபாட்டுமுறை யுமே
காட்டுமிராண்டித்தனத்தை உருவாக்கியதால்உருப்படாமல்போனது
தமிழ்ச்சமுதாயம் என கடவுளர்சிலைகளை உடைத்து
உருக்குலைத்த ஈவெராமசாமிக்கு இன்று ஊரெல்லாம்
உருவச்சிலை உருவாக்கி மாலைமரியாதை-நடத்துகின்றனர்
சுயமரியாதை-பகுத்தறி பக்தர்கள் உருவாக்கினர்-ஈவெராமதத்தை!


அப்படியே தங்கள் கருத்தை ஒருவரி பின்னூட்டமா சொல்லிட்டுப் போங்க!

அன்புடன்,

ஹரிஹரன்

Tuesday, February 13, 2007

(119) தாத்தா மணி எத்தனை?!!! பாஸா? பெயிலா? காய் தெரியுமா?

பள்ளிக்கூட கோவில் திருவிழா நாட்கள் நினைவுகள் தொகுப்பு-2
போடியில் இருந்த நாட்களில் முருகன் கோவிலுக்கு தினமும் மாலையில் அப்போது தடியூன்றியபடியே வெறும் நாலுமுழ வேட்டி மட்டும் அணிந்து ஒரு தாத்தா வருவார். அவரிடம் போய் தாத்தா மணி எத்தனை? என்று கேட்டால் அப்படி ஒரு ஆவேசத்துடன் அவரிடம் இருந்து வசை மொழி கிடைக்கும்.

சிறுவர்கள் கூட்டத்தினரிடம் அவர் ஆவேசம் எடுபடாது. ஒளிந்து ஒளிந்து தாத்தா மணி எத்தனை? தாத்தா மணி எத்தனை? என்று அந்தத் தாத்தவை நோக்கிக் கேட்டுக்கொண்டே ஓடுவார்கள். அந்தத் தாத்தா 360 டிகிரிக்கு கைத்தடியைச் சுழற்றி, ஆவேசமாகக் கத்தி கத்தியே ஓய்ந்துபோவார்!

கோவிலில் இருக்கும் யாராவது ஒரு நடுவயது ஆள் வந்து ரெண்டு ரெட்டைச்சுழி ரெங்குடுகளை நாலு மொத்து மொத்தி சத்தம் போடும்வரை தாத்தாவிடம் மணி கேட்டு அவரை அவேசமாக்கி அவர் ஆவேசமாவதை கண்டு சிரிப்பான சிரிப்பாகச் சிரிப்பது சிறுவர்களுக்குப் பிடித்த பல ஆண்டுகள் தொடர்ந்த ஒரு விளையாட்டு!

முருகன் கோவில் பிரகாரத்தில் முன்பு நிறையத் தென்னை மரங்கள் இருக்கும். மாவிலிங்கேஸ்வரரை அடுத்து இருந்த ஒரு தாழ்ந்து வளைந்த பெரிய தென்னை மரம் சிறுவர்கள் ஏறிவிளையாட வெகுவசதியாய் இருக்கும். கீழே உதிர்ந்து கிடக்கும் தென்னங் குரும்பைகளை ஓசி மினி இளநீர் என்று கடித்து துவர்ப்பாய் குருத்தைச் சுவைப்பது, துர்க்கை சன்னிதிக்கு எதிரே இருந்த அரைநெல்லிக்காய் மரத்தினை உலுப்பி அதிசயமாய் அரைநெல்லிக்காய் உதிர்ந்துவிட்டால் அது எத்தனை பிஞ்சாக இருந்தாலும் அதைப்பொறுக்கித் தின்பது என்பது துர்க்கையின் அருள் கிட்டிய பரவசத்தினையும் மிஞ்சும் மகிழ்ச்சிதருவதாக சிறுவயதில் நான் உணர்ந்தது :-))

கார்த்திகை, பங்குனி உத்திரம், தைப்பூசம் என்று சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் பிரஹாரத்தை 108 முறை வயதான தந்தைவழிப் பாட்டியோடு போட்டி போட்டவாறே முதலில் 108முறை சுற்றிவந்து முதலில் முடித்து பாட்டி போகலாம்.. பாட்டி போகலாம் எனப் பாட்டியைத் தொணத்தி எடுப்போம்.

தீபாவளி சமயத்தில் கோவில் பிரஹாரத்தில், கடைவீதியில் திருவள்ளுவர் சிலை மூன்றாந்தலில் நடந்தேறும் நரகாசுரவதம் நிகழ்வு, பங்குனி உத்திரக் காவடியாட்டம் என நடராஜகுருக்கள் உயிரோடு இருந்தவரை உயிர்ப்போடு இருந்தது.

நடராஜகுருக்கள் முருகப்பெருமானாக வேல் ஏந்தியபடி போரிட்டு நரகாசுரனை வதைக்கும் காட்சிகள் பெட்ரோமாக்ஸ் விளக்குகள் வெளிச்சத்தில், பக்தகூட்டத்தில் மிதந்து மெதுவாக ஊர்ந்து செல்லும் பேருந்துகளினின்று சிறப்புப் பார்வைக்கோணத்தில் கண்டுகளிக்கும் பேறு பெற்ற பஸ் பயணி பக்தர்களும் பக்திப் பரவசத்துடன் கன்னத்தில் போட்டுக்கொள்ள அரோகரா சத்தம் முழங்கும்.

கோடுபோட்ட டவுசர் தெரிய வெள்ளை வேட்டி கட்டி, டயர் செருப்பு அணிந்த பெருசுகள் கூட்டமாய் கூடிநின்று வேடிக்கை பார்க்க, என்கால்களை வதம் செய்யும் டயர் செருப்பு மிதிகள் வாங்கியபடியே நரகாசுரவதம் கண்டுகளித்த டவுசர் கால சிறு பிராய நினைவுகள் தனித்துவமானவை. இன்றைக்கு இம்மாதிரியான விஷயங்கள் முன்பு மாதிரியான விமரிசையுடனோ, ஏகோபித்த வரவேற்புடனோ நடப்பதாகத் தெரியக்காணோம்.

சித்திரை விழாக்காலங்களில் சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் வளாகத்தில் இளம்பிறை மணிமாறன், புலவர் கீரன், போன்ற பேச்சாளர்களது உரைகள் கேட்பது வாடிக்கை. பேச்சாளர்கள் உரை ஆரம்பிக்கும் முன்பாக மண்டபத்தில் ஒலிக்கவிடப்படும் பித்துக்குளி முருகதாஸின் பாடல்கள், ஊத்துக்காடு பாடல்களை பித்துக்குளித்தனமாய் முருகதாஸ் வித்தியாசமாகப் பாடக் கேட்டு ரசித்தது (பின்னாளில் அதே ஊத்துக்காடு பாடல்களை ஜேசுதாஸ், இதர பாடகர்கள் முற்றிலும் வேறுபட்டுப் பாடியதைக் கேட்டு ரசித்தது தனி)


முருகன் கோவில் தெற்குப் பிரஹாரத்தில் ஆஞ்சநேயர்-பெருமாள் சன்னதிக்கு இடையே வில்வ மரத்தின் காய்கள் கீழே விழும். கோவில் வளாகத்தில் இருந்த மரங்களின் காய்களில் தின்னமுடியாத காய் வில்வக்காய்தான். ஆனால் கொஞ்சம் பெரிய கிளாஸ் படிக்கும் சிறுவர்களிடையே வேறு விதத்தில் மரியாதையான பெருமதிப்பைப் பெற்று இருந்தது.

முழுப்பரீட்சை எழுதிவிட்டு கோடை விடுமுறையில் ரிசல்ட்டை எதிர்நோக்கியிருக்கும் பெரிய கிளாஸ் சிறுவர்கள், தங்கள் கையில் கோவில் தெற்குப் பிரஹார வில்வமரத்தில் இருந்து உதிர்ந்த வில்வக் காயுடன் வடக்கு பிரஹாரத்திலிருக்கும் நடராஜர் சன்னதி அபிஷேக தீர்த்தம் வெளிவரும் யாளிமுகத் தூம்பில் முகம்பதித்து பாஸா? பெயிலா? என்று நடராஜப் பெருமானிடம் கேள்வி கேட்டுவிட்டு கையோடு எடுத்துவந்த வில்வக் காயை தரையில் வீசி அடிப்பார்கள்.

வீசி அடித்த வில்வக்காய் சிதறி உடைந்துவிட்டால் நடராஜ பெருமானே பரீட்சையில் "பாஸ்" என்று சொல்கிறார் என்றும், அப்படி முற்றிலும் உடைந்து சிதறாமல் வெறும் கீறல்களுடன் வில்வக்காய் உருண்டோடினால் நடராஜப் பெருமானே பரீட்சையில் "ஃபெயில்" என்று சொல்வதாகவும் ஏகமனதாக வில்வக்காய் உடைதல் அருள்வாக்கு இண்டர்பிரடேஷன் சிறுவர்கள் உலகில் நிலவியது.

சிவராத்திரிக்கு சுந்தரேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடக்கும். சிவலிங்கத்தை அன்னத்தால் அலங்காரம் செய்து பூஜை , அடுக்கு தீபாராதனை முடிந்தபின் அலங்கார அன்னம் களைந்து வற்றல் குழம்பில் பிசைந்து தொன்னையில் பிரசாதமாகத் தருவார்கள்.சிவலிங்கத்தின் பழைய எண்ணைய்ப்பூச்சு (மெல்லிய)வாசத்துடன் சுவையாக இருக்கும்.

சமீபமாகச் 2006 ஆகஸ்டில் சென்றபோது மாவிலிங்கேஸ்வரர்->காசிவிஸ்வநாதராக மாறிவிட்டிருந்தார். (மாவிலிங்கேஸ்வரர் பெயர்க்காரணமான மாமரம் பட்டுப்போய் புதிய மரம் வளராததாலா? ) பிரதோஷத்துக்கு கூட்டமான கூட்டம் வருகிறது கோவிலுக்கு. 50மடங்கு அதிகமான கூட்டம்.

முன்பு கேட்ட பித்துக்குளி முருகதாஸ் பாட்டு கேட்டால் நினைவுகள் என்னை எனது டவுசர் காலத்திற்கு இட்டுச் செல்லும். விடுமுறை நாளின் 11-12 மணி காலைப்பொழுதில் வெய்யில் ஏறிய பிரகாரம், முருகன் சன்னதி துவஜஸ்தம்பத்தினைத் தொட்டு வணங்கி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கும் போது உண்டியல் மேல் அமர்ந்து கரைகின்ற காகம், உச்சிகால பூஜைக்கு இசைக்கப்படும் தவில், நாதஸ்வர, கோவில்மணி ஓசை என கால்நூற்றாண்டுக்கு முன்பான வாழ்வுமுறை நினைவுக்கு வருகிறது.

தினசரி மாலை நேரத்தில் ஒருமணிநேரத்திற்கும், வாகனமேறி உற்சவர் நகர்வலம் வரும்போதும் நாதஸ்வரக்காரரும், அவர் மகளும் என இரட்டை நாதஸ்வரம், ரெண்டு தவில் வித்வான்கள் என்று பெரிய ஈடுபாட்டுடன் இசையிலேயே உரையாடுவார்கள்.

இப்போது முருகனுக்கு முக்கால பூஜைக்கும் கருங்கல் தூண்களிடையே அந்தரத்தில் வைக்கப்பட்ட ஆட்டோமேடிக் மெஷின் மூலம் ஒலி (கர்ணகடூரமாக) எழுப்பப்படுகிறது.

காலம் ஓடிவிட்டது. வாழ்வுமுறை முழுதுக்கும் , வழிபாடுகள் வரைக்குமாக இயந்திரமயமாகிவிட்டது:-))

அன்புடன்,

ஹரிஹரன்

Thursday, February 08, 2007

(118) பிரவரி14.. காதல்...மாயை..காதலி...ம்மமனைவிவீஈஈ...

ஆண்டுதோறும் பிப்ரவரி 14 மாயையில் மலர்க்கொத்தும், அலங்கார வாழ்த்து அட்டையுமாய் லவ் நினைப்பில் மிதப்பவர்களுக்கு... நினப்புதான் பொழைப்பைக் கெடுக்கும்... லவ்வுக்கு அப்பால் கல்யாணமான பின்பு தமக்குக் கிடைக்கவிருக்கும் தினசரி அ(க)லங்கார வசைக்கொத்தும் அறியாதவர்க்கு ஒரு எச்சரிக்கை செய்ய நினத்து எழுதுகிறேன் :

லவ்வுக்கு அப்பால்....

காதலித்த தருணங்களில் ஒரு கட்டத்தில் அன்பொழுக வட்டமான முழுநிலவு நீ என்றேன்...

கல்யாணத்திற்கு அப்புறம் அதிகாரத்தில் மாவட்டமாகி மாவாட்டச் சொல்லி சம உரிமையுடன் அழுக வைக்கிறாய் என்னை..

காதலித்த நாட்களில் அன்பே
நீ நம் லவ்வைக் கணக்கிட்ட
Sharp கால்குலேட்டர்
ஆக இருந்தாய்...

ஆனால் கல்யாணம் ஆன பின்னே அன்பே நீ என்
சம்பள கேஷ்-ஐக் கரெக்டாகக் கேட்கும்
கேஷியோ கால்குலேட்டர்
ஆகிப்போனதேன்...

அன்பே நீ நாம் காதலிக்கும் போது உன்னைப் பின் தொடர்ந்து நான் வரும்போதெல்லாம் சில்லறை சிந்துவதுமாதிரி சிரிப்பான சிரிப்பு சிரிப்பாய் நீ...

ஆனால் கல்யாணமான பின்பு என் சில்லறைத் தேவைகட்குச் வேண்டும் சில்லறைக்குச் சில்லறைத்தனமாய் என்னை உன் பின்னால் அலையவிடுவது கண்டு சிரிப்பான சிரிப்பு சிரிக்கிறார்கள் நம் மக்கள்...

புரியாதது எப்போதும் புதிராகும்.. காதலித்தபோது அன்பே நீ என்னை முழுதும் புரிந்துகொண்டேன் என்றது கல்யாணத்திற்கு அப்புறம் உதாரான புதிரானது...

அன்பே உன் லவ் மீட்டர் நம் சென்னை ஆட்டோ மீட்டரை விட பிழையாகிவிட்டதா?


குறிப்பு-1:
அப்போ வாங்கிவிட்ட காதல் அறிவிப்பு / வழிதல் / வாழ்த்து அட்டைகள், பரிசுப்பொருட்கள் மற்றும் ஆர்கிட் பூங்கொத்துக்கள் ஆர்டர் தந்தவர்களுக்கும் "துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு" எனும் குறள் தமிழ் வீரம் காட்டுவோருக்கு ""உங்கள் விதி வலியது" என்று சொல்லும் "ஊழிற் பெருவலி யாவுமுளதோ?" என்ற குறளையும் கட்டாயம் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்!

குறிப்பு-2: டிஸ்கி
பெண் ஈய காவலர்களுக்கு : "கவிதைக்குப் பொய் அழகு" என்பதை நினைவில் கொள்ளவும்


இப்படிக்கு,

ஹரிஹரன்
(லவ்வுக்கு அப்பால்... எனும் சுயசரிதை மனைவி இல்லாத நேரத்தில் எழுதும் ஒரு ஆண் ஈய/பித்தளை பேரீச்சம்பழ அபலை)

Monday, February 05, 2007

(117) ராமரண்ணே வர்றாரு...

டவுசர் சிறுவனாய் எனது (ஆரம்பப்) பள்ளிக்கூட நினைவுகளில் சிலதை தொகுத்திருக்கிறேன் இங்கே!

ஜமீன்தாரிணி காமூலம்மாள் நினைவு ஆரம்பப்பள்ளி / மேல்நிலைப்பள்ளி - இது இரண்டும் நான் பிறந்த போடிநாயக்கனூரில் நான் +2 வரை படித்த பள்ளிக்கூடங்கள். 125 ஆண்டுகள் பழமையான 3000 மாணவர்கள் படிக்கும் பாரம்பரியம் மிக்க பள்ளிக்கூடம்.

ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை மேல்நிலைப்பள்ளி வளாகம் ரொம்ம்ப்ப்ப்ப்பெரியது. கிலோமீட்டர்கள் நீளமுள்ள மைதானங்கள் அடக்கியது.

ஒண்ணாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புவரை ஆரம்பப் பள்ளி இரு வேறு வளாகங்களில் அடுத்தடுத்த தெருக்களில் இருந்தவாறு செயல்படும் பள்ளிக்கூடங்கள்.

இதில் முதல் இரண்டாம் வகுப்புக்களுக்கான பள்ளிக்கூட வளாகம் ஐந்துவயதில் நேரடியாக ஒண்ணாம் வகுப்பு வரும் மாணவர்கள் தமிழ்வழிக் கல்விப் பயணம் துவக்கும் இடம்.

நெடிய அசோகமரங்கள்(நெட்டிலிங்க மரம்)நிறைந்த வளாகம். பள்ளி ஆரம்பிக்கும் நேரம் காலையில் 8.30 மணி. ராமர் அண்ணன் தான் இந்த வளாகத்தில் பியூன். பள்ளியின் கதவுகளைத் திறப்பது, வகுப்புகளுக்கு மாணவர் வருகை ஏடு (அட்டெண்டெண்ஸ் ரெஜிஸ்தர்)
சாக்பீஸ் தருவது போன்றவற்றுக்குப் பொறுப்பானவர்.

காலை 8.15க்கே 90சதவீத மாணவர்கள் பள்ளியின் மூடிய கேட் முன்னால் குவிந்து விட்டிருப்பார்கள். ராமர் அண்ணன் சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு 8.20க்கு கோவில் பக்கவாட்டு வழியாக பள்ளிக்கூடத் தெருவுக்குள் நுழைந்தவுடன் காத்திருக்கும் நூற்றுக்கணக்கான மொத்த மாணவர்களும் கோரஸாக "ராமரண்ணே வர்றாரு..ராமரண்ணே வர்றாருன்னு" அவர் அதட்டியபடியே கேட்டை திறந்துவிடும் வரை ஒரே பாட்டுதான்.


எந்த ஆசிரியருக்கும் கூட இப்படியான வரவேற்பு பாட்டு கிடையாது. தினம் பள்ளிக்கூடத்தெருவின் நூறுமீட்டர் தூரத்தை காக்கி பேண்ட் காக்கி சட்டை அணிந்து வரும் பியூன் ராமரண்ணனுக்கு மட்டுமே உரித்தான மரியாதை வரவேற்புப் பாட்டு. நான் +2 படிக்கும் போதும் பியூனாகவே இருந்து ரிடையராக இருந்த ராமரண்ணனுக்கு அதே பாட்டு அதே உற்சாக கோரஸ் ராகத்தில்.

பிரியாணிப்பொட்டலம், பேட்டாக்காசு இவைகளுக்காக லாரிக்கு உள்ளிருந்து ஆதரவுக் குரல் தருவதா? இல்லை மீட்டிங் நடக்கும் திறந்த வெளியிலிருந்து ஆதரவு தருவதா? இல்லை Issue based ஆதரவா என்பதான குழப்பங்கள் இல்லாமல் மனப்பூர்வமான பாசத்தினால் சிறுவர்கள் ராமரண்ணனுக்கு கலக்கலாக தினசரி பாச ஆதரவு கோஷம் எழுப்புவார்கள்.

பள்ளிக்கூடத்தின் முதல் தெரு திருப்பத்தில் கட்டிட கொத்தனார் சுப்பிரமணி மேஸ்திரி வீடு. பள்ளிக்கூட இடைவேளையின் போதும் , காலை வகுப்புகள் முடிந்து பள்ளிக்கூடத்தினின்று செல்லும் போது கொத்தனார் வீட்டின் முன்பாக நின்று தினமும் சில சூராதி சூரர்கள் கோரஸாக இந்தப்பாட்டு பாடுவார்கள்:

" பட்டம் பறக்குது
பள்ளிக்கூடம் தெறக்குது
கொத்தனாரு ------யில
கொய்யாப்பழம் தொங்குதுன்னு"

பெரும்பாலும் அமைதி காத்தாலும் சில நேரத்தில் கொத்தனார் வீட்டில் இருந்து யாராவது ரெட்டைவால் ரெங்குடு சூரர்களை விரட்டி வருவார்கள். கையில் அகப்பட்டவனுக்கு அவ்வப்போது மண்டகப்படி நடத்துவார்கள்.

பள்ளிக்கூடம் பக்கத்தில் வீடு இருந்தால் அங்கு வசிப்போருக்கு அளவுக்கு அதிகமாகப் பொறுமை தேவைப்படும்!

பள்ளிக்கூட இடைவேளையில் வெளியே "ஜவ்வுமிட்டாய்"விற்பவருக்கு சிறுவர்கள் தரும் மரியாதை தனியாகச் சிறப்பாகக் கிடைக்கும். ஐந்து பைசாவுக்கு வாட்ச் மாதிரி ஜவ்வு மிட்டாயிலேயே செய்து தருவார். 10பேருக்கு வாட்ச் செய்து தரும்வரை பார்வையாளனாக பொறுமையோடு இருந்தால் ஒரு இன்ச்க்கு மிட்டாயைக் கிள்ளி இலவசமாகத் தருவார்.

பாக்கெட் மணி இல்லாத எனக்கு ஜவ்வுமிட்டாயைச் சுவைக்க இருந்த ஒரே வழி பொறுமையோடு பார்வையாளனாக இருப்பது மட்டுமே .ஆதலால் கொஞ்ச நேரம் நின்று மிட்டாய்க்காரரது செய்முறையைக் கூர்ந்து கவனிப்பேன்.

ஒரு மரக் கம்பத்தின் உச்சியில் பிளாஸ்டிக் கவர் போட்டு மூடியநிலையில் மொத்த மிட்டாயும் இருக்கும். அதை குறிப்பிட்ட தடிமன், அகலத்தில் சீராக இழுத்து அதிலே வாட்சி, பொம்மை என்று செய்து தருவார். கொஞ்ச நேரம் பொம்மையாகப் பாவித்து விளையாடிவிட்டு சாப்பிட்டு மகிழலாம்.

கொய்யாப்பழம், வேகவைக்கப்பட்ட சர்க்கரை மற்றும் மரவள்ளிக்கிழங்குத் துண்டுகள், சீனிமிட்டாய், குச்சி ஐஸ், இலந்தைபழம், ஈச்சம்பழம்,அரை-முழு நெல்லிக்காய், பிஞ்சுமாங்காய், கிலாக்காய், வெள்ளரிப்பிஞ்சு, வெள்ளரிப்பழம், மதிய வெய்யிலில் சூடேறிய எவர்சில்வர் தட்டில் இளகிப் போன கமர்கட், கடலை மிட்டாய்கள், இவைகள் பள்ளி இடைவேளையில் விற்கப்படும் ஸ்னாக்ஸ்கள்.

இவைகளுடன் அரிதாகச் சில சமயம் அதிரடியாக அசைவ ஸ்னாக்ஸாக வறுக்கப்பட்ட ஈசல் ஆழாக்கு உழக்கில் அளந்து தந்து சர்க்கரையோடு விற்கப்படும் (கள்ளர் இனத்தவர்கள் அதிகமான அளவில் வாழும் பகுதி) இதனாலேயே பின்னாளில் பிபிசியில் ஒரு சிம்ஸன்ஸ் வேர்ல்டு நிகழ்ச்சியில் சீனாவில் ஸ்கார்ப்பியன் fry என்று எண்ணையில் பொரித்த தேளை சீனப் பிரத்தியேக ஸ்னாக்காக உண்பதைக் காட்சியாகக் கண்டபோது ரொம்பவெல்லாம் அதிரவில்லை நான் :-))

பள்ளிக்கூட இடைவேளையில் அருகாமை வீடுகளில் குடிக்கத் தண்ணீர் கேட்டுச் சிறுவர்கள் படையெடுப்பார்கள். எதிர்ப்படும் எவரும் அண்ணன், அக்கா தான். எனது வீடு பள்ளிக்கு அருகாமையில் இருந்ததால் சில சமயம் சிறுவர்கள் எங்கள் தெருவுக்கும்/ வீட்டுக்கும் தண்ணீர் கேட்டு வருவார்கள்.

ஒரு சித்திரைமாத வெயில் நாளன்று முற்பகல் வெயிலின் தாகத்தில் தண்ணீர் வேண்டி வந்த சிறுவர் குழாமில் ஒரு இரண்டாம் வகுப்பு மாணவன் தன் சகாக்களைப் பார்த்து டேய் இந்தவீட்டுக்கு வாங்கடா இந்த அக்கா தண்ணீர் தர்றாங்கன்னு எழுபது வயதான என் தந்தை வழிப் பாட்டியை "அக்கா"ன்னு கூப்பிட்டு அந்தமாணவன் தந்த அதிர்ச்சி ரொம்ப நாளைக்கு என்னை விட்டு அகலவில்லை :-))

அன்புடன்,

ஹரிஹரன்

Sunday, February 04, 2007

(116) அக்பரின் ஆட்சியில் தகவல் தொடர்பு

இன்றைக்கு இணையம், காமிராவுடனான கைத் தொலைபேசி, என்று அதி நவீனமாகத் தகவல் தொடர்பு இருக்கும் நிலையில் அக்பர் காலத்தில் தகவல் தொடர்பு விஷயம் எப்படி இருந்தது என்று பின்னோக்குவோம்.

அக்பரது அரசிக்கு ஆக்ராவில் குழந்தை பிறக்கும் சமயம், அக்பரால் ஆக்ராவில் இல்லாமல் டில்லியில் இருக்க வேண்டிய கட்டாயம். இருந்தபோதும் குழந்தை பிறந்ததை உடனடியாக அறிந்து கொள்ளவேண்டும் என்று ஆசைப்படுகிறார் அக்பர்.

ஆக்ராவில் இருந்து டில்லிவரையிலான 200 கிலோமீட்டர் நீளமுள்ள பாதையில் கையில் முரசுடன் பல ஆயிரக்கணக்கிலான காவல் வீரர்கள் வரிசையாக நிற்க வைக்கப் பட்டார்கள்.

குழந்தை பிறந்ததும் ஆக்ரா அரண்மனை முரசு ஒலிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக வரிசையாக டில்லி வரை பாதையெங்கும் நிறுத்திவைக்கப்பட்ட காவல் வீரர்கள் முரசு ஒலித்து முழங்க டில்லியில் தனது அரசவையில் இருக்கும் அக்பர் குழந்தை பிறந்ததை அறிந்து மகிழ்கிறார்.

இத்தனை விரிவான ஏற்பாடு செய்தும் அக்பரால் குழந்தை பிறந்ததை மட்டுமே உடனடியாக சில நிமிடங்களில் அறிந்து கொள்ள முடிந்தது.

அனைத்து அதிகாரம் நிரம்பிய அரசனாக இருந்தும் அக்பரால் ஆக்ராவில் பிறந்த குழந்தை ஆணா / பெண்ணா என உடனுக்குடன் அறியமுடியவில்லை:-))

குறிப்பு-1
மன்னராட்சியில் அரசனின் தனித்தேவைக்கு, தனிப்பட்ட ஆசைக்கு ஆயிரக்கணக்கான படைவீரர்கள் பயன்படுத்துவது சர்வ சாதாரணம். எவரும் அரச ஆசையை எதிர்த்தால்/ புறக்கணித்தால் அவர்களுக்கு வெகு நிச்சயமானது சிரச்சேதம் / நாடுகடத்தல் / ஒதுக்கப்பட்டு சமூக இறக்கம் செய்யப்படுவது என்பதானவை.)

குறிப்பு-2
புத்தியுள்ள, சிந்தித்துச் செயல்படும், அதிகாரம் நிரம்பிய அரசனை அமைச்சர்கள் தமது தனித்தேவைக்குப் பகடைக்காயாகப் பயன்படுத்தி ஆதாயம் அடைவது என்பதெல்லாம் முற்றிலுமாக நடக்காத காரியம்)


அன்புடன்,

ஹரிஹரன்