(40) எப்படி பயன்படுத்தலாம் தமிழக எம்.எல்.ஏ+எம்.பி நிதியை
சரி. உருப்படியா யோசிச்சு தமிழக எம்.எல்.ஏ மற்ரும் எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதிகளை எப்படியெல்லாம் வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம்னு பாக்கலாம்.
234 எம்.எல்.ஏக்களுக்கு ஆண்டுக்க்கு 234 கோடி
மற்றும் 39 எம்.பிக்களுக்கு ஆண்டுக்கு 78 கோடி என மொத்தமா ஆண்டுக்கு 312கோடி நிதி தமிழகத் தொகுதிகளை மேம்படுத்த மாநில, மத்திய அரசினின்று கிடைக்கிறது.
ஒரு எம்.பித் தொகுதிக்கு சராசரியாக 6 எம்.எல்.ஏ தொகுதிகள் உள்ளடக்கியதால் 6 எம்.எல்.ஏ + ஒரு எம்.பி நிதி 6+2=8கோடி ஆண்டுக்குக்க் கிடைக்கிறது.
இந்த 8 கோடியை எப்படி உருப்படியான மக்கள் பணிகளுக்குச் செலவு செய்யலாம் என்று பார்ப்போம்:
முதல் கட்டமாக மிக அவலமான விஷயங்களான மனிதக்கழிவுத் துப்புறவில் உள்ள மக்களுக்கு மேம்பட்ட இயந்திரங்கள் வழங்குவதை முதல் கட்ட திட்டமாக எம்.பித் தொகுதியில் வரும் நகராட்சி, பேரூராட்சிகளை முன்னுரிமை தரலாம்.
ஒரு இயந்திரம் 3லட்சம் என்ற பட்ஜெட்டில் நகராட்சிக்கு 10, பேரூராட்சிக்கு 5 என்று 20 இயந்திரங்களுக்கு என்று 60 லட்சம் ஒதுக்கலாம். கூடுதலான இயந்திரங்களுக்கு அந்தப் பகுதி தொழிற்பேட்டையில் இருக்கும் தொழிற்சாலைகளை சில இயந்திரங்களுக்கு ஸ்பான்ஸர் செய்யச்சொல்லி அறிவுறுத்தலாம்.
இரண்டாவது பாதாள சாக்கடையில் மனிதன் முக்குளித்துச் சுத்தம் செய்யும் அவலத்தை முற்றிலுமாக நீக்க இயந்திரப்படுத்த ஒரு இயந்திரம் 10 லட்சம் என்ற பட்ஜெட்டில் நகராட்சிக்கு இரண்டு பேரூராட்சிக்கு ஒன்று என்று முப்பது லட்சம் ஒதுக்கலாம்.
10 லட்சம் இந்த இருவகைத் துப்புறவு இயந்திரங்களின் பராமரிப்பு மற்றும் உதிரிபாகங்களுக்குப் பயன்படுத்தலாம்.
இதுவரை தொகுதி வளர்ச்சி நிதி 8கோடியில் ஒருகோடி துப்புறவு மேம்பாட்டுப் பணிக்கு செலவிட ஒதுக்கியாச்சு.
கிராமப்ப்புறங்களில் மருத்துவம் பார்க்க, மருத்துவம் வியாபாரமாகி ஏழைகள் எல்லா நோய்க்கும் கஷயம் மட்டுமே மருந்தாக எடுக்கும் நிலை மாற்றிட அதிகமான மருத்துவர்களை உருவாக்குவது அவசியம். சில ஆயிரம் மருத்துவர்கள் சில ஆண்டுகளில் முறையாக உருவாக்கப்பட வேண்டும். அதற்கு முதலில் மருத்துவக்கல்விக்கு கூடுதலாக மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட வேண்டும்.
மூன்று எம்.பி தொகுதிகளின் எல்லைகள் சந்திக்கும் இடமாகத் தேர்வு செய்து சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தொகுதி நிதியினின்றும் ஆறுகோடியை ஒதுக்கினால் மொத்தம் 18கோடி ஆண்டுக்கு ஒதுக்கலாம். ஐந்தாண்டுகளில் 100கோடிவரை ஒதுக்கிவிடலாம். பெரிய மருந்துத் தயாரிப்புத் தொழில் நிறுவனங்களை ஆய்வுக்கூடக் கருவிகளை ஸ்பான்ஸர் செய்யச்சொல்லி அறிவுறுத்தலாம். ஒத்துழைக்கும் நிறுவனங்களுக்கு முறையான சில (வரிச்)சலுகைகள் தரலாம்.
கட்டிடங்களுக்கு தமிழகத்தின் சிமெண்ட் கம்பெனிகளிடமிருந்து வாங்கிக் கட்டவேண்டும். இப்பயன்பாட்டிற்கான சிமெண்ட்டுக்கு விற்பனை வரியை முற்றிலும் நீக்கி சலுகை தரலாம். கூடுதலாக சிமெண்ட் நிறுவனங்களை சில கட்டிடங்களைக் கட்டித்தந்து ஸ்பான்ஸர் செய்ய அறிவுறுத்தலாம்.
ஆக ஒரு அரசின் முழு ஆயுளான ஐந்தாண்டிற்குள் ஒரு பத்து மருத்துவக் கல்லூரிகள் முழுமையாகக் கட்டிவிடலாம். அடுத்த அரசுகளின் எம்.எல்.ஏக்களின் நிதியில் தொடர் செலவுகளுக்குப் பயன்படுத்தலாம். மாணவர்கள் நியாயமான ஒருகட்டணம் செலுத்தவேண்டும் என அறிவுறுத்தலாம்.
இக்கல்லூரிகளில் படித்து மருத்துவப்பட்டம் வாங்குபவர்கள் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் கிராமங்களில் பணிபுரிந்தே ஆகவேண்டும். அப்படி விரும்பாமல் வெளிநாடுகளுக்கு வேலை /உயர்கல்விக்குச் செல்ல முடிவெடுக்கும் மாணவர்கள் ஈடுகட்டும் செலவாக ஒரு நியாயமான பெரிய தொகை செலுத்தியே ஆகவேண்டும். மாணவர்களது பாஸ்போர்ட்கள் / டிகிரி சர்டிபிகேட் நிர்வாகத்தின் வசம் வைத்துக் கொள்ளலாம்.
தொகுதிமேம்பாட்டு நிதியில் மீதமுள்ள ஒருகோடியை இதர நீர்வள மேம்பாடுகளுக்கு கண்மாய் தூரெடுத்தல் + சிறுபாலங்கள், சிறு சாலைகள் அமைக்க என்று பயன்படுத்தலாம்.
முதலில் இதைச் செயல் படுத்த ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் தமிழக 234 எம்.எல்.ஏக்களும் 39 எம்பிக்களும் முனைப்போடு ஈடுபடட்ட்டும். ஒவ்வொரு ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு மைல்கல் திட்டங்களாகச் செயல்படுத்தி அதில் படிப்படியாக வசதி உடையவர்கள், பெரிய நிறுவனங்கள் ஸ்பான்ஸர்ஷிப்க்கு வழிதந்து முன்னேறுவது சாத்தியமான கனவே!
அன்புடன்,
ஹரிஹரன்
11 comments:
டெஸ்ட் மெசேஜ்
//முன்னேறுவது சாத்தியமான கனவே!//
நல்ல சிந்தனை.
வாங்க நன்மனம்,
நம்ம தமிழர்களான 234 எம்.எல்.ஏக்களும் + 39 எம்.பிக்களும் நல்ல சிந்தனைகளை மீட்டெடுத்துச் சிந்திக்க வேண்டும்.
ஐந்தாண்டுத்திட்டங்கள் என்பதே மக்களின் முன்னேற்றத்திற்கானவை என்பதை மாற்றி எம்.எல்.ஏக்கள் + எம்.பிக்களின் முன்னேற்றத்திற்கானவை என்ற இன்றைய நிலை மாறியே ஆகவேண்டும்!
//நம்ம தமிழர்களான 234 எம்.எல்.ஏக்களும் + 39 எம்.பிக்களும் நல்ல சிந்தனைகளை மீட்டெடுத்துச் சிந்திக்க வேண்டும்//
ஹரிஹரன் அய்யா,
முதலில் தமிழகத்தை இந்த 234 எம்.எல்.ஏக்கள் + 39 எம்.பிக்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.
மீதி தானா நடக்கும்.
பாலா
வாங்க பாலா,
தமிழக தொகுதி வளர்ச்சி நிதியைக் களவாடும் எம்.எல்.ஏ , எம்.பி மற்றும் கூட்டுக் கொள்ளைக்காக சாதிக்கட்சி நடத்தும் நபர்கள், சாதிக்கட்சி நபர்களிடம் கைகோர்க்கும் கழகத்தலைமைகள் என்று எல்லோரையும் கேள்வி கேட்கவேண்டும்.
சாதி தாண்டி தமிழன் வளர்ச்சிக்கு ஆட்சியிலிருக்கும் ஆதிக்க சக்திகள் செயல்படும் படி தொடர்ச்சியாக கேள்விகள் கேட்கவேண்டும் பொதுமக்கள்.
கருத்து மற்றும் அது சார்ந்த மாற்றங்களை வரவேற்கிறேன்.
நன்றி..
இப்படியெல்லாம் அரசியல் வாதிங்க யோசிச்சிருந்தா, நாம எங்கேயோ போயிருக்கலாம்.
இவங்க நினைக்க மாட்டாங்க.
பூங்குழலி,
//கருத்து மற்றும் அது சார்ந்த மாற்றங்களை வரவேற்கிறேன்//
தங்களின் வரவேற்பை நான் வரவேற்கிறேன் என்ற போதும் அரசியல் வாதிகள் ஆக்கங்கொண்ட கருத்துக்களை வரவேற்கப் பாசறையில் பயில வேண்டும் அதற்குக் கழகத் தலைமைகள் முதலில் தப்பை ஒத்துக்கொண்டு திருந்தி நல்ல வளர்ச்சிக்கான இன்னிங்ஸ் ஆட மாற்றங்களை வரவேற்க வேண்டும்
முக்கியமாக சோ அவர்களை இந்த விஷயத்தில் பின்பற்றலாம். அவரது கடமையைத்தானே செய்கிறார் என்று ஜல்லியடிப்பவர்களுக்கு நான் கூற விரும்புவது ஒன்றே. அது செய்யக் கூட மற்ற பல எம்.எல்.ஏ. எம்.பி.களுக்கு வக்கு இல்லையே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வெங்கட்ராமன்,
//இப்படியெல்லாம் அரசியல் வாதிங்க யோசிச்சிருந்தா, நாம எங்கேயோ போயிருக்கலாம்//
நய்..நய்ன்னு கேள்வியா பொதுமக்கள் பயமில்லாம கேட்க ஆரம்பித்தாலே மீண்டும் வளர்சிக்கான இலக்கை நோக்கித் திரும்பிப் பயணிக்கலாம்.
//இவங்க நினைக்க மாட்டாங்க.//
பொதுமக்கள் எல்லாம் சேர்ந்து தேவர்,வன்னியர்,முதலியார்,செட்டியார், உடையார்,பிராமணர்,பறையர்,பள்ளர் என்று சிந்திக்காமல் தமிழனின் வளமான வாழ்வுக்கான வளர்ச்சி என்று மீண்டும் சிந்திக்க ஆரம்பிச்சிட்டாலே நினைக்கும் படி வச்சிடலாம் கலகம் செய்து பிழைப்பு நடத்தும் கழகங்களின் அரசியல் வாதிகளை!
வாங்க டோண்டு சார்,
மக்கள் வளர்ச்சிக்கான நிதியை அதற்கு முறையாகச் செலவு செய்து பொதுவில் பாலன்ஸ் ஷீட் காட்டும் சோ கண்டிப்பாக முன் மாதிரியானவரே!
மக்கள் நலத்திட்ட நிதியைக் களவாடி நீதியற்ற முறையில் நிந்திப்போருக்கு தமிழகத் தொகுதி வளர்ச்சிக்குச் செலவிடுவோரைக் குறைசொல்லும் அருகதையிருப்பதாகத் தெரியவில்லை!
Post a Comment