(44) மனதைத் தூய்மையாக்குவது அத்தனை கடினமானதா?
வழக்கிலே மனைதை வைத்துப் பல பழமொழிகள் உள்ளன. இருந்தாலும் மிக சரளமாக பேதமின்றி " மனம் போல மாங்கல்யம்" என்ற பழமொழி பயன்பாட்டில் உள்ளது.
அப்துல் கலாமின் மாக்ரோ கனவான 2020லே வல்லரசாக இந்தியா வரவேண்டியதை செயல்முறையிலே நனவாக்க இந்தியர்கள் மனமெல்லாம் மங்களகரமான விஷயங்களைப் பற்றி எண்ணிக்கனவு காணவேண்டியதும் அவசியம்.
எண்ணமாக இருப்பது செயலாக வடிவம் பெறுகின்றது. ஆகவே எண்ணங்களின் தரம் செயல்களின் தரம் நிர்ணயிக்கிறது என்பது நிதர்சனமான உண்மை!
சரி. மனதைச் சுத்தப்படுத்த என்ன செய்ய வேண்டும்? இந்த மனதைச் சுத்தப்படுத்தும் செயல்முறைகள் கடினமானவையா? என்றால், கண்டிப்பாக இல்லை.
ஒரு ஐந்து நிமிடம் வேண்டாம்... ஒரே ஒரு நிமிடம் ..இல்லை ஒரு 30 வினாடிகள்... அட வேண்டாம் ஒரு 10 வினாடிகள் கண்களை மூடிக்கொண்டு இருங்கள்... அமெரிக்காவிலிருந்தாலும் மனம் இதற்குள் ஆட்டையாம் பட்டியிலிருக்கும் அண்ணனிடம் தந்த பிளாங் செக்குகளின் முறையற்ற பயன்பாடு குறித்தோ, டல்லாஸில் பணிபுரியும் நீங்கள் தம்பையாசாலை ஃப்ளாட்டின் தண்ணீர் இணைப்புக்காக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தாராளமாக ஃபார்மாலிட்டீஸ் செய்ததை எண்ணி ஏன் இப்படி என்றோ, மின் இணைப்புக்காக மின்னசோட்டாவிலிருக்கும் உங்களை தங்கள் தந்தை ஏதும் செய்ய இயலாமல் ஊழல் கப்பம் கட்டவேண்டியிருந்ததை உரிமை இதுவா? என்று வருந்தியதோ இன்ன பல வேறான ஏமாறிய, ஏமாற்றிய , வஞ்சம் கொண்ட, சினம் கூடிய , எண்ண்ங்கள், சிறுவயதில் கொஞ்சி தெருவில், கோவிலில் எதிர்ப்படும் தன் நட்புகளிடம் என் பேரன் என்று அறிமுகப்படுத்தி பெருமையோடு மகிழ்ந்த பாட்டி /தாத்தா மறைந்த செய்தி கேட்டும் கடைசியாக முகம் பார்க்க முடியாமல் போனது, என ஆயிரம் எண்ணங்கள் 10 நொடியில் மனதில் அலை அலையாய் முட்டி மோதுகின்றன!
பல்வேறு எண்ணங்கள் கொந்தளித்து ஆர்ப்பரிக்கும் போது மனது பலகீனமாகிறது. மனம் பலகீனமானால் சொல், செயல் பலகீனமாகிறது. பலகீனமாகிய செயல் பாராட்டுக்கு பதில் விமர்சனத்துக்கு உள்ளாக்குகிறது. அமைதி கெடுகிறது. இதனால் மகிழ்ச்சி காணாமல் போன லிஸ்டில் இடம்பெறுகிறது.
மூன்று விதமான எண்ணங்களால் மனம் அல்லல் படுகிறது தினமும்:
1. கடந்த காலத் தோல்விகளை நினைத்து சோகத்திலேயே அமிழ்ந்திருப்பது, அவைபற்றியே எண்ணுதல், பேசுதல் என்று இருப்பது. லிவிங் இன் த பாஸ்ட் மனோபாவம். உதாரணமாக சதா ரணமான, ஒரு சாதாரணமான தோற்றுப்போன (அ) ஒருதலைக் காதலுக்காக தாடிவளர்ப்பது, குடிப்பது என்பதான செயல்கள்.
2. நிகழ்கால வெற்றிகள், வளமான வாழ்வு பற்றிய பதட்டமான எதிர்பார்ப்புடனான மனோபாவம். உதாரணத்திற்கு டோஃபில் எக்ஸாம் ரிசல்ட், H1B Visa status பற்றிய பதட்டம், கழக மாவட்டமாயிருந்து எம்.எல்.ஏ ஆக செலவிட்ட காசை மீட்டெடுக்க இலவச திட்டம் ஏதானும் காண்டிராக்டில கிடைக்குமா? என்பதான எண்ணங்களின் அலைக்கழிப்பு!
3. தமது வளமான எதிர்காலம் குறித்த பெருங்கவலை கொள்ளும் மனோபாவம்! உதாரணமாக நான் என் மகன் பேரன் வரை சொத்துச் சேர்த்த பின்னும் தனது குடும்பத்தின் 10 தலைமுறைகளும் ஏதாவது ஒரு சோழனாகிப் பெருவாழ்வு வாழவேண்டுமே என்று மனதை அரிக்கும் எண்ணங்கள்!
இப்படி சுயநல எண்ணங்களால் எகிறும் மனம் எங்கே மன அமைதியைத் தருவது? நாட்டை முன்னேற்றுவது?
பின் எப்படி அடுத்த முறை கொடைக்கானலில் குறிஞ்சிப்பூ பூக்கும்போது வல்லரசாக இந்தியா மாற்றம் கண்டு ஏற்றம் காண்பது? இன்று என்பீல்ட் புல்லட்டில் கும்பகோணம் செல்லும் நாம் இன்றிலிருந்து இரண்டாவது மகாமகத்திற்கு கும்பகோணத்திற்கு அதிவேக புல்லட் ரயிலில் எப்படிச் செல்வது?
தனி மனித மனம் தூய்மை அடைவது என்பது மிக அடிப்படையான அவசியம் முன்னேற்றம் காணவேண்டும் என்ற இலக்கை அடைய.
நாடு ஒரு தோப்பு எனில் தனி மனிதன் அந்தத் தோப்பிலிருக்கும் மரங்களாகிறான். ஒவ்வொருமரமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது தோப்பானது சிறந்த தோப்பாவதற்கு!
சிறப்பான எண்ணங்கள் தோன்றி அதனை ஆக்கசக்தியோடு கூடிய செயல்பாடுகளால் வெகுஜன பயன்பாட்டிலே உதவிடும் சாதனைகள் புரிவதற்கு தூய்மையான எண்ணங்கள் தோன்றிடும் மனம் வேண்டும்.
இதற்கு முதலில் தான் தோன்றித்தனமான எண்ணங்களால் மனம் அலைக்கழிக்கப்படுவது என்பதிலிருந்து விடுபட வேண்டும்.
தான் தோன்றித்தனமான எண்ணங்களிலிருந்து சொடுக்குப்போடும் நேரத்தில் விடுபட முடியுமா? முடியாது. தொடர்ந்து தினசரி முயற்சிக்க வேண்டும்.
தோன்றும் எண்ணங்களின் தரத்தினை நிர்ணயிப்பதில் பார்த்து வளர்ந்த சூழலின் தாக்கம், தற்போதய நட்பு, படிக்கும் புத்தகங்கள், காட்சிகள், பேசும்,கேட்கும் பேச்சு என்று பல முனைகளிலிருந்து பல்வேறு காரணிகள் தாக்குகின்றன.
மனதைச் சுத்தப்படுத்த நாம் செய்ய வேண்டிய படிப்படியான செயல் முறை என்ன?
1. மனதில் தோன்றும் எண்ணங்களின் அளவைக் குறைத்தல்
2. மனதில் தோன்றும் எண்ணங்களின் தரத்தை மேம்படுத்துதல்.
3. எண்ணங்களின் ஓட்ட திசையை மாற்றிக்கொள்ளுதல்.
இந்த மூன்றும் மிக அடிப்படையானவை. உட்கார்ந்து முயற்சி செய்யுங்கள்.
5 -10 நிமிடம் தனித்து உட்கார்ந்து முயற்சிக்கவும்.
Happiness is not measured by the amount of wealth one has.
ஒரு மனிதனின் மகிழ்ச்சியானது அவனது பணவசதி, பொருள்வசதி கொண்டு அளக்கப்படுவதில்லை.
Happiness is measured by the tranquility of that person's mind!
உண்மையான மகிழ்ச்சியானது அவனது மனதின் ஆழமான அமைதிநிலை கொண்டு அளக்கப்படுகிறது!
பதிவின் நீளம் கருதி அடுத்த பதிவில் ஒரு கேஸ் ஸ்டடி எக்ஸாம்பிளுடன் அடுத்த பதிவில் பார்க்கலாம்!
அன்புடன்,
ஹரிஹரன்
12 comments:
டெஸ்ட் மெசேஜ்!
ஹரி
அப்படியே அச்த்தீட்டிங்க!!
சூப்பரோ சூப்பர்.
பாராட்டுக்கு நன்றிகள் குமார்.
ஹரி, நல்ல கருத்துகள்
+
நன்றி கால்கரி சிவா.
உங்க + க்கு மிக்க நன்றி நன்மனம்!
Hari Excellent Thoughts!!
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள் சுந்தரி.
அடங்குற விஷயமா இது. குரங்காச்சேப்பா:-)
//உண்மையான மகிழ்ச்சியானது அவனது மனதின் ஆழமான அமைதிநிலை கொண்டு அளக்கப்படுகிறது!
nice//
காண்டீபன், இதனாலேயே பணமில்லை எனினும் கிழிந்த உடையணிந்தாலும் சிலரால் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ முடிகிறது... பட்டுத்துணி உடுத்தி மெத்தையிலே உறக்க்கம் வராது போகிறது செல்வந்தனுக்கு!
//அடங்குற விஷயமா இது. குரங்காச்சேப்பா//
துளசியக்கா,
ஆரம்பத்திலே அடங்காது இந்தமனக் குரங்கு... பழக்கினால் ஆடுறா ராமா...ஆடுறா ராமான்னு இராமன் வாழ்ந்துகாட்டிய நல்வழிக்கு எடுத்து வந்துடலாம்!
Post a Comment