Tuesday, November 14, 2006

(55) மக்கள் நலனை கோவிந்தா போடுவோருக்கு "பஜகோவிந்தம்"

"வேதமே விஷ விருட்சம் என்று அதிலே பகுத்தறிவுப் பகலவன் அமிலம் பாய்ச்சியதாகக் கருதினால் அது முழுமையான பகுத்தறிவல்ல. கனக்கும் கரும்பாறையாகி பாரதத்தின் பாரம்பர்யமான பகுத்தறியும் அறிவின் மீது விழுந்த ஒரு பாறாங்கல் சீர்மிகுந்த, செறிவான, பரந்து பட்ட இந்துமத வேதத்தை என்றைக்கும் சிதைத்திட முடியாது!"

பல்வேறு காலத்தில் இந்துமதம் ஷீணித்திருந்தபோது (வலுகுறைந்தபோது) இந்துமதத்தில் ரிஷிகள் / முனிவர்கள் மாதிரி பரந்துபட்ட அறிவுடன் பெரியோர் தோன்றி பாரதத்தின் வாழ்க்கை நெறியான இந்துமதத்தை மீண்டும் சுணக்கத்திலிருந்து மீட்பது தொடர்ச்சியாக நிகழ்வது.

சமஸ்கிருதம் பாப்பான் பாசைன்னு பல இந்துமத நூல்கள் வாழ்வியலில் தினசரியாகப் பின்பற்ற வேண்டிச் சொல்லப்பட்ட பல நல்ல கருத்துக்களைக் பல காலமாக 40-50 வருஷம் பின்பற்றாமல் விட்டு விட்டதால் தரமான வாழ்க்கைக்கு பெரிய சங்கடம் ஏற்பட்டிருக்கிறது.

இன்றைக்கு தமிழகத்தில் 40 ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கும் இயக்கங்கள், பகலவனாய் பகுத்தறிவைப் பரப்பிய தாய்க்கழகம் என்பவை ஆதி சங்கரர் அருளிய பஜ கோவிந்தத்தின் முதல் மூன்று சுலோகங்களைக் கற்று அதன் பொருளை அறிந்து அவற்றைப் பின்பற்றி இருந்தால் நாடு பெரிய அளவில் சுபிட்சம் பெற்று இருந்திருக்கும்:


எந்நேரமும் சொத்து, பொருள் என்று பேயாய் அலையும் அரசியல் தலைமையிலிருக்கும் கருணாநிதியும் ஜெயலலிதாவும், கி.வீரமணியும் கண்டிப்பாக கற்று, அறிந்து, முழுமையாகப் பின்பற்ற வேண்டிய சுலோகம் இது!

பஜகோவிந்தத்தில் இரண்டாவது சுலோகம்.

மூட ஜஹீஹி தனாகமத்ருஷ்ணம்
Moodha Jahihi Danaagamatrsnam
குரு சத்புத்திம் மனசி விதிர்ஷ்ணம்
Kuru Sadbuddhim Manasi Vitrsnam
யல்லபசே நிஜகர்மோபாடம்
Yallabhase Nijakarmopaattam
வித்தம் தேன வினோதய சித்தம்
Vittam Tena Vinodhaya Cittam
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்

Moodha - மூட - fool
Jahihi - விட்டுவிடுதல்-giveup
dana agama trsnam - பொருள் சேர்க்கும் வெறி -thirst to posses wealth
kuru - உருவாக்குதல் - create
satbudhim - உண்மை பற்றிய அறிவு - thoughts of reality
manasi- தன் மனதில் - in your mind
vithirshnam- ஆசைகள் அற்ற நிலை- devoid of passions
yathu-உடன் இருப்பவை - with whatever
labse- உனக்குக் கிடைப்பவை (முன் பிறப்பின் பரிசு)-you get (as reward of past)
nija karmaa- உனது செயல்களால்-by your actions
upattam- ஈட்டப்பட்டவை - obtained
vittam- பொருள் - the wealth
thena- அதனுடன் - with that
vinodhaya- காட்டிட- entertain
cittam- உன்மனம் - your mind
bhaj-தேடு- seek -
Govind - கோவிந்தனை

சுருக்கமாக ஆங்கிலத்தில் விளக்கம் சொன்னால் இப்படி :

Oh You fool give yp the thirst to posses / aggrandize wealth.
Create in your mind, devoid of passions, thoughts of Reality.
With whatever you get ( as a reward of your past) entertain your
mind to be content.

எப்படியாயினும் எதைச் செய்தேனும் செய்து பணம், நகை, சொத்து என்று பொருளைச் சேர்த்துக் குவிக்க என்ணும் மனதுடைய மூடனே உனது பணம், பொருள் குவிக்கும் பேராசையை விட்டு விடு! மாற்றாக உன் மனதில் இந்தப் பேராசை உந்துதல்களை நீக்கிட உண்மையான எண்ணங்களை உருவாக்கு. உனக்கான வாழ்க்கையில் எதெல்லாம் உனக்குக் கிடைக்கிறதோ அவை உனது முற்பிறப்பு எனும் செயல் cause களினால் விளைந்த carried over பலன்களின் effect. என்று உன் மனதுக்கு எடுத்துக்கூறி மனதை நிறைவடையச் செய்வாய் என்பது சுருக்கமான பொருள்.

அடிப்படையான அறிவியல் தத்துவமான Cause and Effect என்பதை இந்துமத தத்துவம் முற்பிறப்பு, பலன் என்கிறது. நவநாகரீக யுகத்தில் இது "Luck factor" என்றும் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

ஆக பணம்,நகை, சொத்து என்ற பொருள் குவிப்பு அரசியல்வாதிகளால் திறம்படச் செய்வதற்கு அவர்களது தனிப்பட்ட நிறைவற்ற, பேராசைகொண்ட மனமே பிரதான காரணம். மனதைச் சுத்தகரிக்க எந்த முயற்சியும் செய்யாமல், பொதுவாக மக்களின் நல்ல நலமான வாழ்க்கைக்குச் ஹிந்துமத வாழ்க்கைமுறையில் சொல்லப்பட்ட கருத்துக்களை கடவுள் மறுப்பு, ஜாதி, பார்ப்பானீயம், வடமொழி மறுப்பு என்று பகுத்தறிவுப் போர்வையில் முட்டாளாக்கியதில் நல்லது எது என்று அறிந்த்திடாமல் உண்மையான உண்மைக்கு விடுதலை தந்த கரும்பாறைகள் கொண்ட கொள்கைகள் பகுத்தறிவா?

அடுத்த இந்த மூன்றாவது பஜ கோவிந்த சுலோகம் கூடுதல் ஸ்டெப்னி வாழ்க்கைத்துணையுடனான பெரியார்மட(த) / அரசியல் திரா'விட' இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் அவர் வழி நடக்கும் குட்டிப் பகுத்தறிவுப் பகலவன்கள் மற்றும் சுயமரியாதைப் புலி / சிங்கங்களுக்கும் மற்றும் சுயமரியாதைப் புலி / சிங்கக் குட்டிகளுக்கும் மிக "ரெலவண்டான" சுலோகம்.

இவர்கள் இதைப் படித்து, பொருளறிந்து அதன்படி நடந்தால் நாடு சுபிட்சமடையும்!


நாரிஸ்தனபரனாபிதேசம்
Naaristanabharanabidesam
த்ரிஷ்ட்வா மா கா மோகாவேசம்
Drstva Maa Gaa Mohaavesam
ஏதான்மாம்சவாசதிவிக்ரம்
Etanmaamsavasadivikaaram
மனஸி விசிந்த்யா வாரம் வாரம்
Manasi Vicintaya vaaram vaaram
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்

நாரி -பெண் - women
ஸ்தனபரநாபிதேசம்- முலைகள்-தொப்பூள்-தேகம் -bosom
த்ரிஷ்ட்வா - பார்த்து-having seen
மா கா - வீழ்ந்து இரையாகாதே-donot fall prey
மோகாவேசம்- பெண்ணாசை -Maddening delusion
ஏதத் - இவையெல்லாம் -this is
மாமிச - மாமிச சதை - of flesh
வஸ ஆதி - கொழுப்பு ஆகியன- of fat etc..
விகாரம்- மாற்று உருப்பெற்ற- modification
மனஸி - உன் மனது- your mind
விசிந்த்யா - நற்சிந்திப்பு- think well
வாரம் வாரம் - மீண்டும் மீண்டும்- again and again
bhaj-தேடு- seek -
Govind - கோவிந்தனை

ஆங்கிலத்தில் சிறு விளக்கமாகச் சொன்னால் இது தான் அர்த்தம்:

"Donot fall prey to the maddening delusion (desire) of Seeing the full bosom ( body) of young maidens (women) and their navel. Educate your mind by telling all this is nothing but a modification of flesh and fat. Think well in your mind again and again! seek Govind.. seek Lord govind. "

பெண்ணாசை(ஆணாசை) மோகம் தம் தலைக்கேற்றிக்கொண்ட பல தமிழக அரசியல் திரா'விட' இயக்கத் தலைமைகள் அறம் பிறழ்ந்து, இல்லாள் தாண்டி, இல்லற அறம் ஸ்டெப்னியாகக்கூட இல்லாமல் இஷ்டத்துக்கும் ஸ்டெப்னி ஸ்பெஷல் சபலிஸ்டுகளாகிப்போனதில் சமூகம் தவறான வழிகாட்டலில் கலாச்சாரத்தைச் சிதைத்த முன்னோடும் கருப்பாக இருக்கின்றார்கள்.

இன்றைய அரசியல் தலைவர்கள் இந்துமதம் காட்டிய வாழ்க்கை நெறிகளை அவர்கள் பிழைப்புவாதத்திற்காக நெறிக்காமல் விட்டிருந்தால் இந்துமத, வேத, இந்திய வாழ்க்கைமுறைக்கு நெறிகட்டியிருக்காது.

"இந்துமத/ வேத நெறி வாழ்க்கை நியதி நெறிமுறைகள் பணம், பொருள், சொத்து இருக்கவே கூடாது எனக் கூறவில்லை. இவை மீது தீராத மோகம் /வெறி கூடாது என்றுதான் கூறுகிறது."

"அம்மாதிரியே பெண்/ஆண் கூடிவாழும் இல்லறமே கூடாது என்று எங்குமே கூறவில்லை. பெண்/ஆண் மீதான அளவற்ற பேராசை மோகம் தவறு என்று தான் கூறுகிறது."

நானறிந்தவரையில் கடந்த 75ஆண்டுகளாக தமிழகத்துப் பகுத்தறிவுப் பகலவன்கள் எல்லோரும் ஸ்டெப்னி துணையின்றி வாழ்ந்ததில்லை. இவர்க்ளுக்கு இது ஆளுமையாகவும் / ஆண்மையின் வெளிப்பாடாகவும் இருக்கிறது.

அரசன் எவ்வழி அவ்வழியே மக்கள்!

அளவுக்கு மீறி பெண்ணின் உடல் மீது மோகம் என்பதுதான் தமிழக திராவிட இயக்கத்தவர்களை இந்த ஸ்டெப்னி வாழ்க்கைத்துணைக் கலாச்சாரத்திற்கு இட்டுச் செல்கிறது. அதிகாரத்தைப் பயன்படுத்தி நடிகைகளோடு முறையற்ற உறவுகள் இன்ன பிற...

கூடுதலாக இந்த நெறியற்ற வாழ்தலை..தமிழர் வாழ்வுமுறை என்று ஜல்லியடிப்பு மேற்கோளாக கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்குமாதிரி கூத்தியா இருக்கணும்" என்று திசை திருப்பல்கள் வேறு!

அரசியல்வாதிக்குக் கூடுதலான ஸ்டெப்னி வாழ்க்கைத்துணை கொண்ட வாழ்க்கை என்று அமையும் போது தேவைகள் பலமடங்கு கூடுதலாகிறது. மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதிக் களவாணியாக ஆகியே தீரவேண்டும். மக்கள் நலனுக்கு மிகக் கேடான வாழ்வுநெறி இது!

எனவே மக்கள் நலனுக்கு கோவிந்தா போடுவோரை படிக்கச்சொல்லுங்கள் பஜகோவிந்தத்தை!

பகலவனாய் பகுத்தறிவு பேசி பகல் கொள்ளையடிக்கும் இந்த வெள்ளையுஞ் சொள்ளையுமாய் மஞ்சள் துண்டுபோட்ட மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதிப்பற்றாக்குறை மஞ்சக்கடுதாசி நிறையத்தரும் அரசியல் திரா'விட' பெத்தடின் இயக்கப் பிரதிநிதிகளுக்கு அவசியம் தாருங்கள் பஜகோவிந்தத்தின் புத்தம் புதிய தமிழ்ப் பொழிப்புரையுடன் கூடிய பதிவின் பிரதியை!

வேதம் , வடமொழி என்ற இவை பாப்பான்,அக்ரஹாரம் மட்டுமே படிக்கவேண்டிய விஷயம் இவை என்று இன்று இவர்கள் சொல்லுவது மிக பேதம் மற்றும் அக்கிரமமான அயோக்கியத்தனம்!

பஜ கோவிந்தம்... பஜ கோவிந்தம். கோவிந்தனைத் தொழுது தேடுவோம்! எல்லோரும் மகிழ்ச்சியான முழுமையான சீர்மிகு வாழ்விற்கு!

அன்புடன்,

ஹரிஹரன்

8 comments:

Hariharan # 03985177737685368452 said...

டெஸ்ட் மெசேஜ்!

Anonymous said...

Well Said, keep it up.

our tamilnadu is getting only because of these KALAKA KANMANIKALIN attchi. Your words are sattai adi.

முத்துகுமரன் said...

//சமஸ்கிருதம் பாப்பான் பாசைன்னு பல இந்துமத நூல்கள் வாழ்வியலில் தினசரியாகப் பின்பற்ற வேண்டிச் சொல்லப்பட்ட பல நல்ல கருத்துக்களைக் பல காலமாக 40-50 வருஷம் பின்பற்றாமல் விட்டு விட்டதால் தரமான வாழ்க்கைக்கு பெரிய சங்கடம் ஏற்பட்டிருக்கிறது.//

உங்க காமடிக்கு அளவே இல்லையா.
ஸ்டெப்புனிகளை பத்தி வேத காரர்கள் பேசுவதுதான் நகைப்பாய் இருக்கிறது

ஜயராமன் said...

ஆயிரம் ஆண்டுகளாக வேத இந்து நெறியில் தலை சிறந்து பாரத பூமிக்கே என்ன உலகுக்கே ஒரு ஒளிவிளக்காய் மிளிர்ந்தது தமிழ்மண். அதன் ஆணிவேர் மறுக்க இயலாதது. மறையாதது. இந்த காளான்களால் அந்த வேரை நறுக்க முடியவில்லை. இவர்கள் தாங்கள் சுயநலத்தால் ஒரே தலைமுறைக்குள் மக்கள் மதிப்பை இழந்து பரிதாபமானவர்கள். இவர்களை விட்டுவிடுங்கள்.

நன்றி

bala said...

//ஸ்டெப்னி வாழ்க்கைத்துணையுடனான பெரியார்மட(த) / அரசியல் திரா'விட' இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் அவர் வழி நடக்கும் குட்டிப் பகுத்தறிவுப் பகலவன்கள் மற்றும் சுயமரியாதைப் புலி / சிங்கங்களுக்கும் மற்றும் சுயமரியாதைப் புலி / சிங்கக் குட்டிகளுக்கும் மிக "ரெலவண்டான" //

ஹரிஹரன் அய்யா,

என்ன சொல்ல வரீங்க? திராவிட பகுத்தறிவு சிங்கத் தமிழன் என்ற அடைமொழி வேண்டுமென்றால் ஸ்டெப்னி கம்பல்சரியா? நம்ம
குழலி அய்யா போட்ட கண்டிஷன் லிஸ்டில் இந்த ஐடெம் இல்லையே..
ஒருவேளை போட மறந்திருப்பாரோ? அல்லது taken for granted என்ற முறையில் விட்டு விட்டாரா?
கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கய்யா.

பாலா

Hariharan # 03985177737685368452 said...

பாலா,

//குழலி அய்யா போட்ட கண்டிஷன் லிஸ்டில் இந்த ஐடெம் இல்லையே..//

இது என்ன லிஸ்ட் எனக்குத்
தெ(பு)ரியலியே :(

Hariharan # 03985177737685368452 said...

முத்துக்குமரன்,

//ஸ்டெப்புனிகளை பத்தி வேத காரர்கள் பேசுவதுதான் நகைப்பாய் இருக்கிறது //

இது உங்க காமடி :-)))

Hariharan # 03985177737685368452 said...

//இவர்கள் தாங்கள் சுயநலத்தால் ஒரே தலைமுறைக்குள் மக்கள் மதிப்பை இழந்து பரிதாபமானவர்கள்.//

உண்மை. தங்களது சுயமரியாதையையும் விடுதலை செய்தவர்கள்!