Monday, April 30, 2007

(156) பாஸ்போர்ட் பக்கம் கிழிப்பு நூதன மோசடி!அயல் நாட்டில் இந்தியத் தமிழர்களே கவனம்!

சில இந்திய விமான நிலையங்களில் அதிகாரிகளால் நடத்தப்படும் பாஸ்போர்ட் மோசடி!!
இந்தியாவுக்கு வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்கு வருகை தரும் இந்தியர்களே கவனம்!

இமிக்ரேஷன் , கஸ்டம்ஸ் அதிகாரிகள் துணையோடு நடக்கும் மோசடி இது!

வெளிநாடு செல்லும் நீங்கள் லக்கேஜ் செக்-இன் செய்துவிட்டு இமிக்ரேஷன் மற்றும் கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் உங்கள் பாஸ்போர்ட்டை அதிகாரியிடம் சோதனைக்கும், இந்தியாவிலிருந்து வெளியேறும் நாள் ஸ்டாம்ப் பதியத் தருகையில் மிகவும் கவனமாக இருக்கவும். பாஸ்போர்ட்டை அதிகாரியிடம் சோதனைக்குத் தந்துவிட்டு வேறுபக்கம் பராக்குப் பார்த்தபடி இருந்தால், தாங்கள் கவனிக்காதபோது கஸ்டம்ஸ், இமிக்கிரேஷன் அதிகாரி (??) அலுவலர் உங்கள் பாஸ்போர்ட்டில் ஒரு பக்கத்தைக் கிழித்து எறிந்துவிட்டு, உங்கள் பாஸ்போர்ட் எண்ணை அபாயகரமானவர்கள் லிஸ்டில் சிகப்பு அபாயக் குறியீட்டுடன் அகில இந்திய ஏர்போர்ட்களுக்கு அபாய அறிவிப்பைச் செய்துவிடுவார்.

பாஸ்போர்ட் ரெனியூவல், பிற நாட்டு தூதரகங்கள், வெளிநாட்டு இந்திய தூதரகத்திலும் இந்த பாஸ்போர்ட் பக்க கிழிப்பால் மிகப்பெரிய அல்லலுக்கு உட்படுவீர்கள்!

உங்கள் பாஸ்போர்ட்டில் ஒரு பக்கத்தைக் கிழிக்கப்பட்டதை அறியாத நீங்கள் அடுத்தமுறை இந்தியா செல்லும் போது, அறியாமையால் விபரம் அறியாமல் உங்களுக்கு விரிக்கப்பட்ட இந்த வலையில் வீழ்ந்து மிகப்பெரிய சட்ட சிக்கலில், கிரிமினல் குற்றத்துக்கு உள்ளாக்கப்படுகின்றீர்கள்!


உங்கள் கல்வி, பார்க்கும் வேலை, அயல்நாட்டில் பெறும் சம்பளம், உங்கள் குடும்ப விபரம் என அனைத்தையும் அறிந்துகொண்டு பெரிய அமவுண்ட் பணம் பேரம் பேசப்படும்!

அநாவசியமாக நீதி நேர்மை என்று கீழ் மட்ட கோர்ட்டுகளுக்கு அலைந்தால் உங்கள் வாழ்வு நாசமாக்கப்படும் அபாயம்! பெரிய கோர்ட்டுகளுக்குச் செல்ல பெரிய வக்கீல், லட்சக்கணக்கில் பணம் என்று பெரிய சங்கடத்தில் மாட்டிக்கொள்ள நேரிடும்!

ஹைதராபாத், மும்பாய், என பெரிய நகரங்களில் மாதம் 10-20 பாஸ்போர்ட் பக்கக் கிழிப்பு மோசடி கிரிமினல் வழக்குகளில் தங்கள் தவறு என்ன என்றே தெரியாமல் பலர் மாட்டிக்கொண்டு வாழ்க்கையை நாசமாக்கிக்கொண்டிருக்கின்றார்கள்!

வெளிநாடுவாழ் இந்தியர்களே, தமிழர்களே இந்த மோசடியைத் தாங்கள் அறிந்த வெளிநாட்டு வாழ் இந்திய, தமிழ் நண்பர்களுக்கு அறியத்தரவும்.

மிகவும் முக்கியமான விஷயமாகப் பட்டதால் சக வெளிநாடுவாழ் இந்திய/தமிழ்ப் பதிவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டி இந்தப்பதிவு!

ஆங்கில மூலமாக வந்த இ-மெயில் கீழே.

அன்புடன்,


ஹரிஹரன்


Dear All,

Be Careful At the Indian Airports

This is a well organized conspiracy by Indian Immigration, Police,
Customs and Air India staff with networking at all the Indian
International Airports. Be watchful when ever you give your
passport to Immigration/ Customs/Air India staff. The pass port can
be easily tampered and can create trouble to you. They have found
easy way of making money from NRIs. This is the way it works:

At the time of the passenger's departure, if the passenger is not
Looking at the officer while he is stamping the exit, the officer
very cleverly tears away one of the page from the passport.

When the passenger leaves the immigration counter, the case is
reported on his computer terminal with full details. Now all over
India they have got full details of the passenger with Red Flag
flashing on the Passport number entered by the departure
immigration officer. They have made their money by doing above. On
arrival next time, he is interrogated. Subject to the passenger's
period of stay abroad, his income and standing etc., the price to
get rid of the problem is settled by the Police and Immigration
people. If someone argues, his future is spoiled because there are
always some innocent fellows who think the honesty is the basis of
getting justice in India.

Please advise every passenger to be careful at the airport.
Whenever they hand over the passport to the counters of Air India,
or immigration or the customs, they must be vigilant, should not
remove eyes from the passport even if the officer in front tries to
divert their attention.

Also, please pass this information to all friends, media men and
important politicians. Every month 20-30 cases are happening all
over India to rob the NRIs the minute he lands. Similar case has
happened with Aramco's Arifuddin. He was travelling with his
family. They had six passports. They got the visa of America and
decided to go via Hyderabad from Jeddah. They reached Hyderabad.
Stayed about a month and left for the States. When they reached the
States, the page of the American visa on his wife's passport was
missing. At the time of departure from Hyderabad it was there, the
whole family had to return to Hyderabad helplessly. On arrival at
Bombay back, they were caught by the police and now it is over 2
months, they are running after the Police, Immigration officers and
the Courts.

On going in to details with him, he found out the following:

One cannot imagine, neither can believe, that the Indian
Immigration dept can play such a nasty game to harass the innocent
passengers. All the passengers travelling to & fro India via Bombay
and Hyderabad must be aware of this conspiracy. Every month 15 to
20 cases are taking place, at each mentioned airport, of holding
the passengers in the crime of tearing away the passport pages. On
interviewing some of them, none of them was aware of what had
happened. They don't know why, when and who tore away the page from
the middle of the passport.

One can imagine the sufferings of such people at the hands of the
immigration, police and the court procedures in India after that.
The number of cases is increasing in the last 2-3 years. People who
are arriving at the immigration, they are questioned and their
passports are being held and they have to go in interrogations.
Obviously, the conspiracy started about 2 to 3 years ago, now the
results are coming.

Some of the Air India counter staff too is involved in this conspiracy.

KINDLY SEND THIS TO AS MANY AS YOUR FRIENDS ACROSS THE WORLD AND
ALSO REQUEST THEM TO CHECK THE PASSPORT AT THE CHECKING COUNTERS
AND BEFORE LEAVING THE AIRPORT.

Saturday, April 28, 2007

(155) சனாதனதருமம்... Cosmic Science, Criptology

உலகில் அதிர்வு Vibration இல்லாமல் எந்த உயிரினமும் இல்லை. Cosmic Vibration என்பது எல்லாவற்றிலும் இருக்கிறது. மனித , உயிர்களின் இதயத்துடிப்பு, 50Hz, 60Hz மின்சாரம், ரேடியோ, தொலைதொடர்பு, மைக்ரோவேவ், சூரிய ஒளிக்கதிர், தெருவிளக்கு, மொபைல் போன், என Vibration இல்லாது இயக்கம் இல்லை.

Ultraviolet rays, Infra red rays, Microwave, Radio waves, Electric frequency இவை அனைத்தும் 100 ஆண்டுகளுக்குள் மேற்கத்திய விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டதாக நம்புகிறோம்.

சனாதன தருமத்தில் ஆன்மீக விஞ்ஞானிகள் காஸ்மிக் அறிவியலையும், கிரிப்டாலஜி எனும் குறியீட்டு அறிவியலையும் ஒருங்கே இணைத்து பல அறிவியல் விஷயங்களைச் சொல்லிச் சென்றிருக்கின்றார்கள் நம் சனாதன் தரும முன்னோர்களான ரிஷிகள், முனிவர்கள்.

மேக்னடிக் வைப்ரேஷன் கொண்டு மூளை, இதயம் இவைகளை ஆராயும் கருவி MRI எனப்படும் Magnetic Resonance Imaging, மற்றும் CT Scan Computed Tomography இவைகளில் பயன்படுத்தப்படும் காந்தத்தின் காந்தப்புல அதிர்வுத்திறன் அளவிடும் குறியீடு அதைக் கண்டறிந்த விஞ்ஞானி பெயரான Tesla.

காஸ்மிக் வைப்ரேஷன் குறித்து ஆராய்ந்த விஞ்ஞானி

நிக்கோலோ டெஸ்லாவின் கருத்து

சனாதன தருமத்திற்கு வருவோம். பாரதத்தின் பாரம்பரிய ரிஷிகள், முனிவர்கள் எவ்வளவு உயரிய அறிவியல் விஞ்ஞானிகள் என்பது விளங்கும்.

சனாதன தருமத்தின் பெரும் சிறப்பே சிம்பாலிஸம் எனப்படும் குறியீடுகள் வழி உணர்த்தப்படும் விஷயங்கள் தான். மொழிப்பயன்பாட்டின் தடைகளை உடைத்து இல்லாமல் செய்வது குறியீடுகள். Symbols overcome the barrier of Language என்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உணர்ந்தவர்கள் சனாதன தரும விஞ்ஞானிகளான ரிஷிகளும் , அருந்தவம் செய்த முனிவர்களும்!

சனாதன ரிஷிகள் தந்தருளிய நடராஜப் பெருமானின் உருவப்படத்தை உற்று நோக்குங்கள்:

ஒரு கையில் உடுக்கை. ஒலிக்கும் உடுக்கை ஏற்படுத்துவதோ அதிர்வுகள் vibrations! அழிக்கும் கடவுள் என்பதை உணர்த்தும் அக்கினி அடுத்த கையில். காலடியிலே பக்தனுக்குக் குறியீடு வழியாக நடராஜன் நவில்வதோ என்னை அடைய நான் எனும் "ஈகோ"வை மிதித்து அடக்கிப் பழகு என்பது. இன்னொரு கை பக்தனுக்கு அபயம் தருகிறது

சனாதன தருமத்தில் இதர மார்க்கங்கள் போல் அல்லாது இறைவனே பக்தனோடு நேரடியாகக் குறியீடுகள் வாயிலாகப் பேசுகிறான் இறைவன்!

அடுத்து சனாதன மாமுனிவர்கள் தந்தருளிய விஷ்ணு பெருமானின் உருவப்படத்தை உற்று நோக்குங்கள்:ஒருகையில் சங்கு. ஒலிக்கும் சங்கு எழுப்புவது அதிர்வுகள் Vibrations. இன்னொரு கையில் சுதர்சன சக்கரம். யுகங்களாய் வளைய வரும் காலம் நான் என்று எடுத்துச் சொல்கிறது. ஒரு கை பக்தனுக்கு அபயம் தந்து அரவணைக்கிறது.

மக்கள் பின்னாளில் மொழியால் பிரிக்கப்பட்டு அடித்துக்கொள்வார்கள் என்பதால் முக்காலம் உணர்ந்த ரிஷிகள், முனிவர்கள் இறைவனை ஆலயங்களில் குறியீடுகள் வாயிலாக பக்தனோடு நேரடியாக பேசும்படியாக அமைத்துச்சென்றார்கள் சனாதன விஞ்ஞானிகள்!

ஓம் (AUM) எனும் எழுத்து நேரடியாக இறைவன் மொழி எனப்படுவது அது ஏற்படுத்தும் காஸ்மிக் Vibration காரணமாகத்தான். அ உ ம என்று செய்யப்படும் ஓம் உச்சரிப்பு, மொழி தாண்டிய இறையுடன் ஒலி அதிர்வுகளால் இணைக்கும் இணைப்பு.

ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் அதிர்வு, அது ஏற்படுத்தும் காஸ்மிக் வைப்ரேஷன், ஓம் பற்றிய முழுவிளக்கம் Mandokya Upanisad எனும் உபநிடத்தில் முற்றிலும் விளக்கப்பட்டிருக்கிறது. வைப்ரேஷன் பற்றிய அறிவு சனாதன தரும ரிஷிகளுக்கு, முனிவர்களுக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது தெளிவாகும்.

சங்கு, உடுக்கை, ஓம் என்று காஸ்மிக் வைப்ரேஷனைக் குறியீடாக வழிபாட்டில் வைத்த சனாதன ரிஷிகள், முனிவர்கள் ஆரவாரம் இல்லாத அறிஞர்கள்!

சனாதன தருமம் உயர் அறிவியல் என்று அறிவீர்!

போற்றுவோம் பாரதப் பாரம்பரிய சனாதன தருமத்தினை!

பாரத சனாதன தருமம் பழமையானது, தொன்மையானது, இன்றைக்கும் முழுமுதலாக அறிவியல் பூர்வமானது! சனாதனப் பாரம்பரியம் கிடைத்ததற்கு பெருமை கொள்வீர்!


அன்புடன்,

ஹரிஹரன்

Monday, April 23, 2007

(154) பற்றற்ற நிலைக்கு காட்டில் முனிவராக்த்தான் இருக்கணுமா??

பற்று அற்று இருந்தால் வாழ்வில் இனிமை கூடும்! வீண்சச்சரவுகள் குறையும்!

ஆனால் இன்றைக்கு 2007ல் நாம் அனைவரும் வாழும் வாழ்க்கையில் பற்றுதல் வைக்காமல் வாழ்வது சாத்தியமா?

பற்று அற்று வாழும் முறையை அறிய நாம் ரிஷிகளை/முனிவர்களைத் தேடி காட்டுக்குப் போய்த்தான் கற்று வரவேண்டுமா?

இன்றைக்கு முற்றும் துறந்த பற்று அற்ற முனிவர்கள்/ரிஷிகள் காட்டிலாவது கிடைப்பார்களா?

இன்றைக்கு நாம் வாழும் இடத்திலேயே பற்று அற்ற தன்மைக்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன!

ஒவ்வொரு வங்கியிலும் இடஒதுக்கீட்டு வழியாகவும், திறந்த போட்டி மூலமும் வந்து பணியாற்றும் பற்று அற்ற வாழ்வு வாழும் நவீன முனிவர்கள்/ரிஷிகள் இருக்கின்றார்கள் என்பதை அறிவீர்களா?

டெல்லர் கவுண்டர் கேஷியர்கள் நவீன முனிவர்கள்! ஸ்டிராங்க் ரூம் சாவி வைத்திருப்பவர் நவீன ரிஷி!

வங்கியின் காசாளர்கள் தினமும் லட்சக்கணக்கில் / கோடிக்கணக்கில் தங்கள் கைகளால் 1000,500,100 என்று புத்தம்புதிய நாசிக் கரன்ஸி நோட்டுகளைக் கையாள்பவர்கள். இருந்தும் இல்லாமல் இரு எனும் சித்தர் தத்துவப்படி டெல்லர் கூண்டுக்குள் முனிவர்களாக வாழ்பவர்கள்.

ஸ்டிராங்ரூம் எனப்படும் லாக்கர் ரூமில் இருக்கும் எல்லா லாக்கரின் மாற்றுச்சாவி கைவசம் வைத்திருக்கும் வங்கிப்பணியாளர் லாக்கர்களில் தன்னிடம் இல்லாத பல்வேறு நகைகள், சொத்துக்களின் பத்திரங்கள் என அடுத்தவரின் எல்லா உடமைகள் இருந்தாலும் அலட்டாமல் ஸ்டிராங்ரூமில் இருப்பவர்.

கோடிகள், லட்சக்கணக்கில் தினமும் பரிவர்த்தனை செய்யும் காசாளர் அன்றைக்கு பரிவர்த்தனை செய்த பணத்தை டேலி செய்யும் போது கூட்டலில் ஒரு 100 ரூபாய் குறைந்து வித்தியாசம் வரட்டும், கோடிக்கணக்கிலான பணத்தோடு தான் இருந்த நேரத்தில் வராத பதற்றம் அவருக்கு வரும்! ஏனெனில் தனது 100 ரூபாயோடு தனக்கு இருக்கும் பற்றுதல் ஏற்படுத்தும் பதற்றம் அவரது நிம்மதியை இழக்கச் செய்கிறது!

500 ரூபாய் டேலி ஆகவில்லை என்றால் அவருடைய வீட்டில் இருப்பவரது நிம்மதியும் காலி! சில சமயம் காசாளர் டெல்லர் கூண்டுக்குள் அன்றைக்குப் பரிவர்த்தனையாகும் பணத்தைத் தனதாகக் கருதினால் என்ன ஆகும்?? கையாடல் நடக்கும்! அந்த வங்கி கிளையின் வாடிக்கையாளர்கள் நிம்மதி போகும்.

லாக்கர் ரூமின் லாக்கர்கள் தன்னுடையது என்று வங்கிப்பணியாளர் கருதி, தன்வசம் இருக்கும் மாற்றுச்சாவிகொண்டு லாக்கர்களைத் திறந்து அதில் இருக்கும் நகைகள், சொத்துப்பத்திரங்களை தனதாக எடுத்துக் கொண்டால்??

நாமிருக்கும் இந்த உலகத்தை டெல்லர்/விரைவுக் காசாளர் கூண்டு என்று எடுத்துக் கொண்டால் அங்கு நடக்கும் பரிவர்த்தனைகளில் பற்றுதல் இல்லாமல் இருக்கும்வரை நிம்மதி மேலோங்குகிறது!

நம்மூர் அரசியல் வாதிகள் பொதுமக்கள் சமூக நலத்திட்ட நிதியில் குறிப்பாக வைக்கும் பற்றுதல் ஊழலாகி உலகை வலம் வருகிறது!

இன்றைக்கு நகரங்களில் ப்ளாட்டில் வசிப்பவர்கள் ஓரளவுக்குப் பற்றுதல் இல்லாமல் வாழக் கற்றுக் கொண்டிருக்கின்றார்கள். 10 அடுக்கு மாடிக் கட்டிடத்தில் இரண்டாம் மாடியிலிருந்து 9ம் மாடி வரை வசிப்பவர்களுக்கு கீழேதரையும், மேலே கூரையும், பக்கவாட்டுச் சுவர்களும் சொந்தமில்லை!

தனி மனிதப் பற்றுதல்களை விடவும் ஆட்சி அதிகாரம் என்றுபதவியில் இருப்பவர்களின் பற்றுதல்களால் நாட்டில் அநேக குழப்பம் ஏற்படுகிறது! அதிலும் தான், தன்மகன், பேரன், பேரனின் பேரன் வரை சிந்தித்து வரும் பற்றுதல்கள் நாட்டைக் காடாக்குகிறது!

"இன்று உன்னுடையதாக இருப்பது நாளை இன்னொருவனுடையதாகிறது!"

"எதைக்கொண்டு வந்தாய் நீ அதை இழந்தேன் என்று சொல்வதற்கு?"

எனும் கீதை உரைகள் கட்டுப்பாடுகள் இல்லாமல் இருக்கும் பற்றுதல் மனப்பான்மையினை நீர்த்துப்போகவைத்து மனதை லேசாக்கும்!

"ஆசையே துன்பத்திற்குக் காரணம்" எனும் சித்தார்த்தனின் கூற்றும், ஆசையால் அடையவேண்டும் எனும் எண்ணம் எழ, ஆசைப்பட்டது கிடைக்காமல் போகும்போது ஏற்படும் ஏமாற்றம் பின் சினமாகி, சினத்தால் சிந்திக்கும் திறன் இழந்து, சரியாகச் சிந்திக்காத செயல்களால் மொத்தமாக நாசமடைவது உறுதி! கீதை படிப்படியாக மனிதனின் இறக்கத்தைச் சொல்லி முறையாக ஒருவன் தன்னை வழிநடத்த உதவுகிறது.

நிறையப் பற்றுதல்கள் பல்வேறு விஷயங்களில் நமக்கு இருக்கிறது. குழந்தை பர்ஸ்ட் ரேங்க் வரவில்லை என்றால் மனமுடைகிற பல ஆட்கள் இருக்கிறார்கள். குழந்தைக்கு படிப்பு, செயல்பாட்டுக்கு வழி காட்டுவது கடமை. அதில் சில சமயம் குழந்தையால் பிரகாசிக்க இயலாமல் போகும் போது தன் ஆசையைப் புகுத்துவதால் ஏற்படும் ஏமாற்றம் மனமுடைய வைக்கிறது.

வலைப்பதிவுகளில் பின்னூட்டத்தின் மீது பற்றுதல் வைப்பதால் ஒருவரே 10 பெயர்களில் தமக்குத்தாமே பின்னூட்டிக்கொண்டு கும்மி அடிப்பது நடந்தேறுகிறது :-))

ஒருவர் தனக்குள்ள மிகையான பற்றுதல்கள் அளவைப் படிப்படியாகக் குறைத்தாலே மனம் விரிவடையும். கொதிப்பு, கோபம் குறையும். பலரை நம்குடையின் கீழ் அனுமதிக்க, அவர்களுக்கு உதவ என அடுத்த தளம் நோக்கி முன்னேறலாம்!

வங்கிக்காசாளர் டெல்லர் கூண்டுக்குள் இருப்பதுமாதிரியான மனோபாவத்தை விரிவுபடுத்தி அடுத்த செயல்களுக்கும் அமல்படுத்தினால் மேம்படலாம்!

அன்புடன்,

ஹரிஹரன்

Saturday, April 21, 2007

(153) சனாதன தருமம்... கோபர்நிக்கஸ்..கலிலியோ

பூமியைச் சுற்றியே சூரியன் உட்பட அனைத்து கோள்களும் சுற்றிவருகின்றன் என்று கி.பி 1500 வரையில் இருந்த மேற்கத்திய நாடுகள் வகுத்த வானியல் அறிவியல் கொள்கையில் போலந்து நாட்டைச் சார்ந்த 1473 ல் பிறந்து 1543 வரை வாழ்ந்த நிக்கோலஸ் கோபர்நிகஸ் எனும் வானியல் விஞ்ஞானி அதுவரையில் பூமிப்பந்துதான் இதர கோள்களின் மையம் என்ற கருத்தை மறுத்து, சூரியன் தான் கோள்களின் மையம். பூமி உட்பட இதர கோள்கள் சூரியனை மையமாக வைத்துத்தான் சுற்றிவருகின்றன என்றார்.

வானியல் தொலைநோக்கி கண்டுபிடித்த, கி.பி 1564 முதல் 1642 வரை வாழ்ந்த இத்தாலிய நாட்டு வானியல் அறிஞரான கலிலியோ சூரியனே அனைத்துக்கோள்களுக்கும் மையமாக இருக்கின்றது எனும் கோபர் நிகஸின் வானியல்-கோள்கள் அமைப்பு முறையினை உறுதி செய்தார்.

இப்படியாக மேற்கத்திய ஐரோப்பிய வானியல், கோள்கள் பற்றிய கண்டுபிடிப்பு சூரியன் தான் மற்ற எல்லாக் கோள்களுக்கும் மையம் எனும் உண்மையை விடுதலை செய்து கிட்டத்தட்ட 450 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.

அறிவியல் என்றாலே மேற்கத்திய கிறித்துவ ஐரோப்பா சொல்லுவது தான் என்ற மறைப்பு வாதத்தில் மூழ்கிய நாமும் நம்பி வருகிறோம்.

இப்போது பாரதப் பாரம்பரியமான சனாதன தருமத்திற்கு வருவோம்.

சனாதன தரும வேத நெறி வாழ்வியல் முறை என்பது எவ்வளவுக்கு அறிவியல் பூர்வமானது என்பதை எளிதில் விளங்கிக்கொள்ளலாம்.

இந்தியாவின் பண்டைய கோவில்கள் உபவேதமான ஸ்தபதி சாஸ்திரப்படி ஆகம விதிப்படி கட்டப்பட்டன என்பதை அறிந்திருக்கின்றோம். ஒவ்வொரு பண்டைய கோவிலிலும் நவக்கிரஹங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்றும் நடைமுறையில் வழிபடுவதாக இருக்கிறது.

எந்தப் பழைய சனாதன தரும இந்துக் கோவிலில் இருக்கும் நவக்கிரஹங்களின் அமைப்பை உற்று நோக்குங்கள். மத்தியில் சூரியன் அமைந்திருக்கும். இதர கிரஹங்கள் சூரியனைச் சுற்றி அமைந்திருக்கும்.

சனாதன தரும ரிஷிகள், முனிவர்கள் இந்த வானியல் உண்மையை உணர்ந்திருந்தவர்கள். கோபர்நிகஸ், கலிலியோ இவர்கள் கண்டறிந்து சொல்லுவதற்கு பல நூறு ஆண்டுகள் முன்னரே சனாதன தருமத்தில் இவை நடைமுறை தினசரிப் பயன்பாட்டில் ஆலய வளாகங்களில் அமைக்கப்பட்டிருந்தது.

சனாதன தருமத்தில் பல விரதங்கள் மக்களின் ஆரோக்கியத்திற்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. சதுர்த்தசி விரதம், பௌர்ணமி விரதம், அமாவாசை உபவாசம், கார்த்திகை விரதம் என்பவை ஒருசில.

இப்போது கொஞ்சம் அறிவியல் மீண்டும்.
பூமியின் பரப்பில் 70% நீர், மீதி 30% நிலப்பரப்பு என்று இருக்கிறது. (இன்றைக்கு நிலவும் க்ளோபல் வார்மிங்கில் 2% நீர் கூடுதலானால் பல நாடுகள் அழியும் என்பது உண்மை)


பௌர்ணமி அன்றும், அமாவாசை அன்றும் கடல் நீர் High Tide, Low tide என்று பொங்குவதும், உள்ளிறங்குவதுமாக பாலன்ஸ் தடுமாறும். கடல் புறங்களில் இருப்பவர்களுக்கு நன்கு தெரியும். மீனவர்க்ள் இந்நாட்களில் கடலில் இறங்க மாட்டார்கள்.

மனிதனின் உடம்பில் கிட்டத்தட்ட 70% நீர், மீதி 30% எலும்பு, மயிர், நகம் எனும் திடப்பொருள் என்று அமைந்திருக்கிறது.

சனாதன தருமத்தில் சந்திரன் என்பது பஞ்சபூதங்களில் நீருக்கும், சூட்சும சரீரமான மனதிற்கும் ஆதரமான தெய்வம்(presiding deity).

சந்திரனின் தாக்கம் கடல் நீர்மீது இருப்பது போலவே மனிதர்கள் மனதின் மீதும் உண்டு. மனநலம் குறைபாடு உடையவர்களை Luna-tic என்று கிரேக்க சந்திரக்கடவுளான Lunaவின் பேரால் அழைக்கப்படுகிறார்கள். மனநலம் குன்றிய இவர்கள் செயல்பாடுகளில் பௌர்ணமி, அமாவாசை அன்று தீவிரமான தாக்கம் இருக்கும்.

மனநலம் பேண உடல் நலம், உடல் நலத்திற்காக உண்ணும் உணவு மீது கட்டுப்பாடு அவசியம் என்பதாலேயே பௌர்ணமி, அமாவாசை, சதுர்த்தசி நாட்களில் உபவாச விரதங்கள் வாயிலாக ஆன்மிகத்துடன் இணைத்து மனநலம், உடல் நலம் பேணும் வழிமுறைகள் செய்து வைத்தார்கள் சனாதன தரும ரிஷிகள், முனிவர்கள்.

அறிவியலை ஆன்மீகத்துடன் இணைத்து மக்களுக்கு நலம் தரும் வாழ்க்கைமுறையே சனாதன தருமம். நாம் சனாதன இந்து தருமத்தில் சொல்லப்பட்ட பல விஷயங்களை, பல ஆயிரம் ஆண்டுகளுகள் கழித்து,பல தலைமுறைகள் தாண்டி மக்களுக்கு மொழித்தடை தாண்டி குறியீடுகளாக சிம்பாலிஸமாக பல வாழ்வியல் நலம் பேணும் செய்திகளை நுணுக்கமாக இன்றைய அறிவியல் விஞ்ஞானிகள் வியக்கும் விதத்தில் செய்து வைத்துச் சென்றிருக்கின்றார்கள் சனாதன தரும ரிஷிகள், முனிவர்கள்.

சனாதன தருமம் நிக்கோலஸ் கோபர்நிகஸ், கலிலியோ போன்ற அறிவியல் சிந்தனையாளர்கள் தோன்றுவதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறிவியல் பூர்வமான வாழ்வுமுறையில் அதனைப் பின்பற்றிய மக்களை வழிநடத்திய அறிவியல் தொன்மை நிறைந்த வாழ்வுமுறையாக பாரதப் பாரம்பரியமாக இருந்து வருவது என்பதை அறிந்து கொள்வீர்.


ஆகம விதியில் ஸ்தபதி சாஸ்திரப்படி கட்டப்பட்ட பாரதத்திலிருக்கும் கோவில் வளாகங்கள்
சனாதன தருமத்தின் அறிவியல் வாழ்வுமுறையைப் பறைசாற்றும் ஆய்வுக்கூடங்கள் என்பதை அறியவேண்டும் அடுத்து வரும் நம் இளைய தலைமுறைகள்.

சனாதனம் போற்றுவீர்! சனாதன தருமம் அறிவியல் தருமம் என்று அறிவீர். சனாதன தருமம் பேணுவதை எண்ணிப் பெருமை கொள்வீர்!


அன்புடன்,

ஹரிஹரன்

Thursday, April 19, 2007

(152) (தமிழ்) மக்கள் டிவிசேனல்(கள்)... மலையாள டிவிசேனல்.. பிபிசி..அல்ஜசீரா ஆங்கில சேனல்கள்

பொதுவாக 24 மணி நேர தமிழ் டிவி சேனல்கள் 90% சீரியல்கள்+ சினிமாவை மட்டுமே சார்ந்த நிகழ்ச்சிகளாக ஒளிபரப்புவதால் பெரும் சலிப்பு, இந்த ஆக்கங்கெட்ட விஷயத்தில் மூழ்கி சிந்திக்கும் ஆற்றலை இழந்துவிடாமல் அடுத்த தலைமுறையை இந்த தமிழ் சேனல் சனியன்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காகாவும் தந்தையாக நான் நிறையவே மெனக்கெட வேண்டியிருக்கிறது!

தமிழ் சானல் தவிர்த்து பிடித்துப்போய் நான் பார்க்கும் டிவிசானல், சினிமா நிகழ்ச்சிகள் என்பவை:
1. உலகச் செய்திகள்.
2.ஆங்கில செய்திச் சேனலான பிபிசியில் வரும் டிம் செபாஸ்டியன் (Tim Sebastian)ஸ்டீபன் சக்கூர் (Stephen Sakur)நடத்தும் கடினமான விவாதங்கள் Hard Talk Show,
3.டெக்னிகலாக புதிய கார்கள் பற்றிய Top Gear நிகழ்ச்சி ,
3.Tim Sebastian நடத்தும் மத்திய கிழக்கு அரசியல் விவாதமான Doha Debates,
4. இன்றைய கரண் தாபரின் Hard talk India ,இந்திய நடப்புகள் மீதான முந்தைய Question time India,
5.உலகப் பயணம் சார்ந்த நிகழ்வுகளான Fast Trak , மற்றும் முந்தைய Simpsons World
6. டாம் & ஜெர்ரி, மிக்கி மவுஸ் கார்ட்டூன்கள்
7. தமிழில் விசுவின் சில ஆண்டுகள் முன்பான ஆரம்ப கால அரட்டை அரங்கங்கள்,
8.சினிமா பொழுது போக்கு நிகழ்வுகள் பெரும்பாலும் வடிவேலு, விவேக் என்று கொஞ்சமாக நகைசுவை காட்சிகள் மட்டும்
9.நல்லது என்று பரிந்துரைக்கப்பட்ட ,தமிழ் மற்றும் கோயி மில்கயா ,க்ருஷ் போன்ற டெக்னிகலாக சிறப்பான இந்தியப்படங்கள்


ரொம்ப நாட்களுக்கு அப்புறமாக வீட்டில் டிவி பொட்டிக்கு முன்னால் ஏப்ரல் 15ஆம் தேதி அன்று உட்கார்ந்து சேனல்களை என் வழக்கப்படியாக 20 செகண்டுக்கு ஒரு முறை மாற்றிக்கொண்டே இருந்தேன். ஏசியா நெட் ப்ளஸ் எனும் மலையாளச் சேனலில் சித்திரை விசு பண்டிகை சிறப்பு நிகழ்வாக நேரடி நிகழ்வாக நடந்த ஏசியா நெட் ப்ளஸ் "லிட்டில் மாஸ்டர்" எனும் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கான LIVE பாட்டுப் போட்டி நிகழ்வு என்னை சேனலை மாற்றாமல் மூன்று மணி நேரம் பார்க்க வைத்தது.

மலையாளச் சேனல் நடத்திய மலையாள புதுவருட விசு பண்டிகைக் கொண்டாட்டமான பாட்டுப் போட்டி நிகழ்வில் பங்கேற்றுக் கலக்கிய அகில் கிருஷ்ணன், ராகுல் சத்யநாதன்,ஷில்பா ராஜூ, ஸ்ருதி லக்ஷ்மி,அம்பாடி எனும் இந்து சிறுவர் சிறுமியர், கிறித்துவ சிறுமி மெரின் கிரிகோரி, உமர் எனும் இசுலாமிய மலையாளச் சிறுவன் என்று இளம் சிறுவர், சிறுமியர்கள் பாடிய லைட் & கிளாசிக்கல் மியூசிக் கலந்த இசை நிகழ்வில் பாடப்பட்ட பாடல்களில் 50% மலையாளம், 40% தமிழ், 10% ஹிந்தி என்று பட்டையைக் கிளப்பினார்கள்.

பாட்டுப் போட்டி நிகழ்வுக்கு லஜ்ஜாவதியே பாடல் புகழ் இசையமைப்பாளர் ஜெஸி கிப்ட்,
ஜெயச்சந்திரன், மோகன் சிதாரா என்று மலையாள இசை உலகில் பிரபலமானவர்கள்
கலந்து கொண்டு நிகழ்வின் இறுதியில் எண்ணற்ற தமிழ்ப்பாடல்களையும், மலையாளப் பாடல்களையும், இந்திப்பாடல்களையும் கலந்து கட்டி கதம்பமாக மலையாளப் புத்தாண்டு விசு பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடினார்கள்.

குஜாராத் டாண்டியா பாடல் புகழ் பாடகியான Phalkuni Phathak பாடிய பாடல்களையும் , மாதுரி தீக்ஷித்தின் ஏக் தோ தீன் இந்திப் பாடல்களையும், ஏசுதாஸின் மலையாளப்பாடல்களையும், சிம்பு டி.ராஜேந்தரின் அம்மாடி ஆத்தாடியையும், போக்கிரி மாம்பழம் என எல்லா மொழிப் பாடல்களையும் விகல்பமின்றி, மொழி வெறி இன்றி பாடி ஆடி, கொண்டாட்டமாக மகிழ்ந்திருக்க வெளிப்படையாக மலையாளிகளால் முடிகிறதை எண்ணி மகிழ்ந்தேன்!

எனக்கு பல சிந்தனைகளை இது ஏற்படுத்தியது.


மலையாளிகள் வெளிமாநிலத்தில், வெளி நாட்டில் எங்கு நேரில் பார்த்தாலும் மலையாளியோ? என்று கேட்டு விசாரித்துக்கொண்டு மலையாளத்தில் தான் சகஜமாகப் பேசுவார்கள்! மலையாளத்திலே உலகம் எங்கும் பேசும் மலையாளிகள் தங்களது சேனலில் தங்கள் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் மலையாளத்தோடு தமிழ், ஹிந்தி, குஜராத்தி என்று அனைத்து இந்திய மொழிகளையும் பாவித்து பாடி ஆடி மகிழ்கிறார்கள்.

தனித்தமிழ்நாடு கோரும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் வெளிமாநிலம், வெளிநாட்டில் சந்தித்தால் 90% ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு, தமிழ்நாட்டில் இந்தியை எதிர்த்துக்கொண்டு, மும்பை டெல்லியில் ஹிந்தியில் பேசிக்கொண்டு மொத்த மொழி முரண்பாளர்களாக இருப்பது!

மலையாளச் சேனலில் வந்தமாதிரி வெவ்வேறு மதங்களைச் சார்திருக்கும் மூன்று தமிழ்த் திரைப்பட இசை அமைப்பாளர்கள் சேர்ந்து வந்து மக்களோடு மக்களாக தமிழ் புதுவருடக் கொண்டாட்டத்தில் இணைந்து தமிழ் மொழிப்பாடல்களோடு இதர இந்திய மொழிகளைப் பாவித்துப் பொதுவில் ஒரு இசை நிகழ்வை தமிழ் டிவி சேனலில் தந்து விடும் சூழல் தமிழகத்தில் ஏன் முற்றிலும் இல்லாமல் போனது?

இதர இந்திய மொழி வெறுப்பும்,மொழி மறுப்பும் ஈகோவும் பெரியண்ணன் சுபாவமும் தலைமையாக வழிநடத்திக் கோலோச்சுகிறது தமிழ்நாட்டில்!விளம்பர இடைவேளையில் பாமகவின்"மக்கள் டிவி"யில் செய்தியை கேட்க நேர்ந்தது! "ஈராக்கில் தீவிரவாதிகள் வெடி குண்டுகளோடு மகிழுந்தில் வந்து தாக்கியதில் கர்பலாவில் 40 பேர் சாவு" என்று தமிழில் செய்தி வாசித்தார்கள்!

மோட்டார் கார் தமிழ்நாட்டுக்கு வந்த போது, அதுவரை இருந்த இதர மாட்டுவண்டிப் பயணம் போன்ற பயணிப்பை விட அது கூடுதல் மகிழ்வைத் தந்தது அதனால் "Pleasure Car" என்று சொல்லப்பட்ட சொல்லாடலை "மகிழுந்து " என்று தமிழாக்கி தீவிரவாதிகளின் "Car Bomb" என்பதை மகிழுந்து வெடிகுண்டு என்பதாகத் தமிழ் படுத்திய கொடுமை... தமிழ் மீது வீசப்பட்ட மகிழுந்து வெடி என்றால் தப்பில்லை!

சுமைஉந்து மோதி பலி என்று சொல்லும் செய்தியில் சொல்லப்பட்ட சுமைஉந்து என்பது லாரியா, டெம்போவா, கார்கோ ஆட்டோவா? எல்லாமே சுமை உந்து தானே? உந்து என்பதே அபத்தம். காலால் நடப்பதற்குக்கூட உந்து என்று சொல்லலாம். வண்டி என்பது உந்து என்பதைவிட எவ்வளவோ மேல்.


மக்கள் டிவியின் புதிர் நிகழ்ச்சியில் இன்னொரு அதிர்ச்சி!!

தமிழகம் முழுதும் அணைக்கரைப்பட்டி...ஆட்டையாம் பட்டி வரைவீடெங்கும் சுமீத்கள், ப்ரீத்தி மிக்ஸிகள், சௌபாக்யா கிரைண்டர்கள் நிறைந்து விட்ட இன்றைய சூழலில்:
"விரல் இல்லாத கை எது?" உலக்கை தான் அது..
"கட கடா குடு குடு நடுவிலே பள்ளம் அது என்ன?" மாவாட்டும் உரல்தான் அது- என்று புளித்த புதிரை போட்டு தமிழை மேம்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள்! அட்லீஸ்ட் மாவாட்டும் உரல், உலக்கை என்று காட்டினால் அந்த மியூசியப் பொருட்களை மாநகர, நகர,டவுன் வாழ் இந்தத்தலைமுறை தமிழர்கள் அடையாளமாவது காண்பார்கள்!

தமிழன் மட்டும்தான் மைக்கேல்பட்டி, ரோஸ்மியாபுரம் எனும் ஊர்ப்பெயரெல்லாம் சாய்ஸில் விட்டுவிட்டு டால்மியா புரத்தை மட்டும் கல்லக்குடியாக்கத் தமிழுக்காக ரயில் தண்டவாளத்தில் படுப்பது, சைக்கிளை மிதிவண்டி, மோட்டார் பைக்கை உந்து ஈருருளி, பஸ்ஸை-பேருந்து, லாரியை-சுமை உந்து, வேனை-சிற்றுந்து, காரை-மகிழுந்து, என்று தமிழ் மொழியைப் பேணுவதாக தமிழ்மொழி மீதே வெறுப்பையும், இதர மொழி மறுப்பையும் பரவலாக்கி விட்டு புழக்கத்தில் சாதரணமாகத் தமிழ்ப் பயன்பாடு என்பது வெகுதியாகக் குறைந்து போய் அவதிப்படுவது!

இம்மாதிரியான அணுகுமுறை என்பது தமிழர்களே மெனெக்கெட்டுத் தமிழ்மொழிக்கு வைக்கும் சொ.செ.சூ! அன்றி வேறென்ன??

தமிழ் மீடியத்தில் +2 வரையில் படித்தவன் என்பதால் அரசியல் மொழிவெறியால் ஏற்பட்ட கொடுந்தமிழ் கொடுமை, பயனில்லாமையை உணர்ந்து அறிந்தவன் நான். இந்தமாதிர் வெட்டியான மொழிவெறி உணர்வுள்ள ஆட்கள் குறைகடத்தியான (Semi Conductors) டிரான்ஸிஸ்டர் சுற்றுகளை (CommonEmitter, Common Collector , Common BaseTransistor Circuit) பொது உமிழ்ப்பான், பொது சேகரிப்பான், பொது அடிவாய் சுற்றுகள் என்று செய்த கொடுமை இன்னிக்கும் கசக்கிறது!

இப்படித் தன்மொழி காப்பேன், எங்கும் எதிலும் மலையாளம் என்று மலையாளிகள் சவடால் விடுவதில்லை... ஆனால் உலகம் எங்கும் தினசரிப் பயன்பாட்டில் வெகுதியாக மலையாளத்தில் பேசுகிறார்கள், மலையாளத்தில் வைத்திருக்கிறார்கள்.

தமிழ் மொழியுணர்வு+ தமிழ் மொழிவெறி அரசியல் + தமிழ் மொழிப்பற்று சவடால் வீர முழக்கம் = தமிழ் பேசாமை + இதர மொழி வெறுப்பு என்பது தமிழர்கள் நிலையாக இருக்கிறது!

அல்ஜசீரா ஆங்கில சானலில் குர்திஸ்தான் பற்றி ஒரு நிகழ்ச்சியாக ஈரான், ஈராக், துருக்கி என மூன்று தேசங்களில் வாழ்கின்ற குர்து இனத்தவர் நிலை, வட ஈராக்கிய இர்பில் நகரம், வடக்கு ஈராக்கில் குர்து இனத்தவரது சதாம் ஹூசைன் போனபின்பான வாழ்வு என்று டாகுமெண்டரி சிறப்பாக இருந்தது!

தமிழ்நாட்டு டிவி சேனல்கள் ஈழத் தமிழர் நிகழ்வுகளை நேரடியாக ஈழத்தின் ""யுத்த களத்தில்"" இருந்து எடுத்து நிதர்சன நிலையை தொடர்களாக செல்வியாகி அரசிமாதிரி எடுக்கின்றார்கள்!

புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டு திரைநாயகர்களுக்கு 4 கோடி சம்பளம் வாங்க வேர்ல்டு மார்க்கெட் ஆகி உதவுகிறார்கள், தமிழ்நாட்டு தயாரிப்பாளர்கள் தங்கள் தமிழ் படங்களை தமிழ் சேனல்களுக்கு சாட்டிலைட் ரைட்ஸ் என அதிக விலை விற்பனைக்கு உதவுகிறார்கள், தமிழ்நாட்டு செல்வி, அரசி இன்னபிற கண்றாவி அழுகை சீரியல்களுக்கு யூரோ, டொலெர் தந்து பார்த்துக்கொண்டு இருக்கும் இன்றைய நிதர்சனநிலை "சுமை இழுத்ததால் கழுத்தில் புண்ணோடு இருக்கும் எருதுக்கு திண்டாட்டம்.. ஆனால் அதைக் கொத்தித் தின்னும் காக்கைக்கோ கொண்டாட்டம்" என்பதை நினைவூட்டுகிறது!

ஈழத்தில் போரால், பட்டினியால் நிதர்சனத்தில் ஆயிரம் பேர் செத்தால், தமிழகத்தில் அரசே முன் நின்று ஒரு வசதியான நாளில் மாபெரும் பந்த் நடத்தி, பந்த் அன்று தமிழ்த் தொலைக்காட்சி சேனல்களில் உலகத்தமிழ் தொலைக்காட்சிகளில் முதன்முதலாக உலக நாயகன் கமல் இலங்கைத்தமிழ் பேசி நடிக்கும் "தெனாலி" திரைப்படத்தைக் காட்டி விட்டால் உலகத் தமிழர் உணர்வு என்பதை தீவிரமாகக் காட்டிப் போராடியதாகி விடும்!!

தமிழ்நாட்டிலிருக்கும் ராமேஸ்வர ஈழ அகதிகள் முகாமில் நிலவும் அடிப்படைக் கழிவறைப் பிரச்சினைக்கு இந்திய அரசை, 12 தமிழ் அமைச்சர்கள் கொண்ட இந்திய மத்திய அரசை வசதியாக வார்த்தைகளால் வசைபாடி முடித்து விடலாம் எனும் பச்சை சுயநல தமிழ்நாட்டு அரசியல் சித்தாந்த நிலை!


அதே சமயம் தமிழ் பேசாத இதர மொழி நடிகைகள், நடிகர்கள், பாடகர்கள் அதிகம் நடிக்கும் இடமும் தமிழ்நாடுதான். வட இந்திய நடிகை குஷ்பூக்கு கோவில் கட்டியவன் தமிழனே! பின்னர் வெளக்கமாறு காட்டியதும் தமிழனே! தமிழ்நாட்டில் தமிழர்கள் பாவிக்கும் இன்னொரு முரண்பாடு இது!


உலகளாவிய (ஆங்கில) டிவி சேனல்கள் பார்த்துக்கொண்டே தமிழகத்திலிருந்து வரும் தமிழ் சேனல்கள் நிகழ்ச்சிகளைப் பார்த்தால் மிகுந்த ஹிப்போக்கிரேஸியுடன் நிகழ்ச்சிகள் நடத்தும் தமிழ் சேனல்கள் அவற்றின் ஹிப்போக்கிரேஸி தலைமை, வழிநடத்தல்கள் ஹிப்போகிரேஸி சித்தாந்தங்கள் முகத்தில் அறைகிறது!

யதார்த்தம் துளியும் இல்லாத மொழி உணர்வு மிகை நாடகங்கள் மிகுந்த, பொய்மை வெகுதியாக நிறைந்த களமாகவே இருக்கிறது!


அன்புடன்,

ஹரிஹரன்

(151) காதல்..காதல்..காதல்..காதல்..போயின்.."நோ" சாதல்- 3

உங்க மனசுக்குள்ளே அமுக்கமா இருக்கும் காதல் பண்புக்கு "ஸ்டார்ட் மீஜிக்" சொல்லிட்டீங்கன்னு வச்சுக்குங்க..உடனே உடையைக் கிழித்துக்கொண்டு பைத்தியக்காரனாய் கீழ்ப்பாக்கம் போகாவிட்டாலும் ...கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் உள்ளத்தைக் கிளர்ந்தெழும் காதல் எண்ணங்களால் கிழித்துக்கொண்டு காதல் பைத்தியமாய் சத்தியமாய் திரிவது திகட்டாது!

மனசுக்குள் சலசலக்கும் இளையராஜா இசைக்கு, மனசுக்குள்ளேயே நடக்கும் டூயட்டுக்கு சொதப்பலா டான்ஸ் மூவ்கள் செய்ததற்கு செல்லக் கோபத்துடன் கண்டிக்கப்பட்டதாக ஒரு கற்பனையான கிராபிக்ஸ் க்ரியேட்டிவிட்டியைச் செய்துகொண்டே நண்பர்கள் கூட்டத்தில் இருக்கும்போது, நண்பர்கள் தங்களிடம் ஏதோ கதை, கதையாகச் சொன்னதுக்கெல்லாம் அனிச்சையாக சரின்னு தலையாட்டப்பட்டு கடைசியாக பில்லுக்குக் காசு தந்துடும்மான்னதும் ஏதோ உணவு விடுதியில் இருக்கீங்கன்னு முழிச்சுப்பீங்க...(அறுபது எழுபதுகிலோ ஆளான உங்களை நண்பர்களே கடத்திட்டு வந்திட்டதாக்கூட நினைக்கலாம் -காதல் கனவு கிராபிக்ஸ் அடர்த்தியைப் பொறுத்தது இது :-)) பசங்க எல்லாம் உங்களை ஏமாத்தறாதாவும்..முடியாது தரமாட்டேன்னு சொல்லி உறுதியா நின்னா நண்பர்களால் காட்டமாகக் கண்டிக்கப்பட்டு "நம்பிக்கை துரோகி" என்று பட்டம் பெறுவீர்கள்!


அது வரையிலும் இல்லாத அனுபவமான, ஒரே ஒரு நபர் குறித்த அடர்த்தியான எண்ணங்களே மனதில் 24மணிநேரமும் மேலோங்கும். காலையில் பல் துலக்கும்போது எதிரே கண்ணாடியில் பிம்பமாய்... அறிவியலைப் பொய்யாக்கி எங்கோ இருக்கும் காதல் பண்பின் டார்கெட் நபர் பிம்பமாய்த் தெரிய ஒரு அசட்டுத்தனமான / கண்றாவியான சிரிப்புடன் அன்றைய பொழுதைத் துவங்கித் துவைத்தெடுக்கும்.

மனுசன் எவனும் போவானான்னு இதுவரை நினைத்த தி.நகர ரங்கநாதன் தெரு மாதிரி சத்தம், இறைச்சல் கூடிய இடம் கூட காதல் பண்பு நினைப்புகளில் மிதக்க ஏற்ற ரம்மியமான இடமாகும்!

வழக்கமான வார்த்தைகளாகப் பேசுவதை மாற்றி எங்கும் எதிலும் கவிதைக்கோணம் மேலோங்கும்.

"வானத்தை வளைத்தேன் வில்லாய்
வாயெல்லாம் சிரித்தேன் பல்லாய்"
என்று புதுக்கவிதை பூபதியாக நீங்கள் எடுக்கும் அவதார அவஸ்தையில் உங்கள் நண்பர்களோடு தாய்த்தமிழும் கவிதையில் மாட்டிக்கொண்டு முழி பிதுங்கும்.

ஆங்கிலத்தின் நிலை அய்யோ பாவம். எனிமா தந்த மாதிரி கட்டாயமாக்கி கவிதையாக வெளித்தள்ளப்படும்! இம்ப்ரஸ் செய்தாகவேண்டுமில்லையா!! காதல் பண்பால் மொழிகளுக்கு நேர்வது இம்சையா!மேம்பாடான்னு பட்டி மன்றம் வைக்கலாம்!

என்ற போதும் சில மாதங்கள் / ஆண்டுகள் தொடரும் இந்தக் காதல் கோமாளித்தனங்களால் காதல் பண்பு துளிர்த்து காதல் அம்பு தாக்கிய ஒருவருக்கு அதுவரையிலும் தான் அறிந்த மொழிகளில் குறிப்பிடத்தக்க மேம்பாடு ஏற்படும் என்பது மினிமம் கேரண்டி!! (காதல் முடிவு(கள்) எப்படியாகினும்) ..(இந்த முதல் காதல் பிரைமர் மாட்யூல் முயற்சி என்பது அடுத்த காதல் முயற்சிக்குக் கண்டிப்பாக பெட்டர் டேக் ஆஃப் ஏற்படுத்தித் தரும் :-))

தங்கள் வெளித் தோற்றம் காட்சிப்பிழையாகத் தெரிந்துவிடக்கூடாது என்று மெனெக்கெடுவீர்கள்!

தாங்கள் சம்பாதிக்கும் பணம் சிபிZ/பல்ஸர் பைக், ப்ளையிங் மெஷின்/கில்லர் ஜீன்ஸ், அடிடாஸ் ஸ்போர்ட்ஸ் ஷூ, ரிம்லெஸ் /ரேபேன் கண்ணாடி, டைட்டன் கோல்ட் ப்ளேட்டட் மல்ட்டி டயல் வாட்ச், ரிவர்ஸிபிள் ட்யூயல் டோன் பெல்ட், திருவள்ளுவர்-அரசு விரைவு ஓட்டைப் பேருந்தில் பயணிக்க ப்ரீமியம் விஐபி ஒடிஸி ப்ரீப்கேஸ் என்று தேவைகள் முரண்பாடுகளைக் கொண்டிருந்தாலும் முனைப்பு காட்டி நவநாகரீகப் பொருட்களால் தங்களது வெளித்தோற்ற காட்சிப்பிழைக்கு முட்டுக்கொடுத்துக் கொள்வதற்குப் பெரிதும் இறைக்கப்படும்!

காதல் பண்பு கலந்த ரத்தம் உடலுக்குள்ளே மிக வேகமாகச் சுழலுவதால் எலெக்டிரிக் டிரெயினுடன் புறநகர் ரயில்நிலைய நடைமேடையில் போட்டியாக 40கிமீ வேகத்தில் ஓடி ஜெயிக்க வைக்கும்!

காதல் களத்தில் இறங்கிய பலருக்கும் "லவ்ஸ் மீ... லவ்ஸ் மீ நாட்.." எனும் நோய் தொற்றிக்கொண்டு, மெல்ல வேக மெடுத்து வியாபிக்கும்!! மாம்பலம், தாம்பரம் மாதிரியான ரயில் நிலைய VLR வெஜிடேரியன் லைட் ரெப்ரெஷ்மெண்ட் உணவகத்தில் அன்று தனக்கு கேட்டவுடன் 4இட்லி கிடைத்தால் தன் லவ் கண்டிப்பாக சக்ஸஸ் என்று பரிணாம வளர்ச்சி அடையும்!!

Love is an emotional disturbance between two fools என்பது 50% சரி என்று படும்:-))

ஒருதலை ராகம், இரயில் பயணங்களில், இதயக்கோவில் போன்ற கொடூரமான காதல்தோல்வியைச் சொல்லும் வெள்ளிவிழாப் படப் போஸ்டர்கள் கண்ணில் பட்டால் ஏனோ இனம் புரியாத ஒரு கிலி ஏற்படும் :-)) இந்த கிலி நீங்க பரிகாரமாக லவ்ஸ் மீ லவ்ஸ் மீ நாட் மீண்டும் ஒருமுறை பரிசோதனை செய்வீர்கள்!

இதுவரை ஒரு ரூபாய்க்கு தமிழில் பொங்கல் வாழ்த்து அட்டை கூட ஒருவருக்கும்அனுப்பிப் பழக்கமில்லை என்றாலும் "ஹிக்கின் பாதம்ஸ்" களில் ஒருபக்கம் இலவசமாக ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரி ரெபர் செய்து கொண்டே சிறப்பு ஆங்கிலச் சொல்லாடல் நிறைந்த ஆர்ச்சீஸ் காதல் அட்டைகள் புதன்கிழமை வாங்கி மறுநாளான சாதாரண வார நாள் வியாழக்கிழமைக்கு காதல் டார்கெட் நபருக்கு வாழ்த்து அட்டை அனுப்பி "வழி" மொழிதலை தயங்கியோ/தீவிரமாகவோ செய்வீர்கள்!

அடுத்த பகுதியில் கொஞ்சம் சீரியஸாகச் சில விஷயங்களை அலசுவோம்!

அன்புடன்,

ஹரிஹரன்

Wednesday, April 18, 2007

(150) சனாதன தர்மம் ...EMG..EEG நியூராலஜி

முதலில் கொஞ்சம் அறிவியல் பார்க்கலாம். Electro Myo Graphy (EMG) மற்றும் Electro Encepelography (EEG) எனும் டெக்னாலஜி மருத்துவத் துறையில் நரம்பியல் நிபுணர்களால் நரம்பு மண்டல, தசை , மூளை செயல்பாடுகள் பற்றி அறிய, சிகிச்சைதரப் பயன்படுத்தப்படும் அறிவியல்.

மனிதனின் இயக்கம் என்பது தசைகளின் ஊடாக மோட்டார் நெர்வ்ஸ் எனப்படும் இயக்க நரம்புகள் மூளையினின்று அவரது ஐம்புலன்கள் தரும் தகவல், மற்றும் அவரது முன் அனுபவம் எனும் டேட்டாபேஸில் இருந்து கிடைக்கும் தகவல்களுடன் ஒப்பிடப்பட்டு முடிவாக வெளிப்படும் கட்டளைகள் மின்சாரமாக வெளிப்பட்டு உடலின் பாகங்களில் இருக்கும் இயக்க நரம்புகளைச் செயல்படுத்த வைப்பதால் நடக்கிறது.

சிறு குழந்தை நெருப்பைத் தொட்டு விட்டு , நெருப்பின் சூடு விரலை பொசுக்கியதும்,விரல்நரம்புவழியாக சூடு அபாயம் எனும் தகவல் செல்ல உடனே மூளை விரலுக்கு ஆபத்து என்று கையை உதறி இயக்கி நெருப்பில் இருந்து விலக வைக்கிறது.

அடுத்த முறை குழந்தையின் இந்த சூடுபட்ட அனுபவம் , ஐம்புலனில், ஒன்றான கண் எனும்
புலன் நெருப்பைக் கண்டு அனுப்பும் தகவல் இவற்றால் குழந்தை நெருப்பின் அருகே சென்று தொடுவது இல்லை.

வயதாகி நரம்புத் தளர்ச்சி இருப்பவர்களுக்கு "நெர்வ் கண்டக்டன்ஸ்" எனப்படும் நரம்புகள் மின்சாரம் கடத்தும் திறன் குறைவால் உறுப்புக்களின் ரிப்ளெக்ஸ் எனப்படும் செயல்விரைவுத்தனம் குறைந்து காணப்படும். இதை உறுதி செய்ய ஸ்டிமுலேட்டர் எனப்படும் கருவி கொண்டு செயற்கையாக மூளையின் கட்டளைகள் உருவாக்கும் அளவுக்கான மின்சாரம் Nerve Nodes எனப்படும் நரம்பு முடிச்சுகள் மீது விநாடிக்கும் குறைவான காலத்திற்கு பாய்ச்சப்படும் போது இயக்க நரம்பின் "ரிப்ளெக்ஸ்" கண்டறியப்படும்.

உதாரணமாக உள்ளங்கையின் கீழே, மணிக்கட்டின் பின்புறம் கடிகாரப் பட்டை கட்டும் இடத்தில் இருக்கும் நரம்பு முடிச்சில் ஸ்டிமுலேட்டர் மின்சாரம் பாய்ச்சினால் நம் கட்டுப்பாட்டுல் இல்லாமல் கட்டைவிரல் மட்டும் தனியாக இயங்கும்!

இது நியூராலஜி எனும் நரம்பியல் அறிவியல். இது இப்படியே இருக்கட்டும்.

இந்துமத சனாதனதர்மம் பார்க்கும் முன் இன்னொரு அறிவியல் கோணம்.

சிரிப்பு மற்றும் அழுகை என்பது உள்ளத்தில் இருக்கும் உணர்வுகளின் அழுத்தமான வெளிப்பாடுகள். ஒருவரது முன் அனுபவங்கள் என்பதை வைத்தே உணர்வுகள் அழுகையாகவும் சிரிப்பாகவும் வெளிப்படுத்தப்படுகின்றன!

பிறந்த குழந்தையை எப்போதாவது கொஞ்சம் ஆழ்ந்து உற்று கவனித்து இருக்கின்றீர்களா?? சனாதன தருமத்தை, சனாதன தருமம் சொல்லும் மிக ஆழ்ந்த விஷயங்களை , எந்த விதமான கலப்படம் அற்ற பிறந்த குழந்தை மிக அருமையாக உணர்த்தும். சனாதன தருமம் என்பது சொல்லும் உயர்ந்த விஷயங்கள் பெரும்பாலும் உணரப்பட வேண்டியவை. உருவமாகக் காட்டப்படுவது அவசியமற்றது.

நியூராலஜி எனும் நரம்பியல் அறிவியல் படி பிறந்த குழந்தையின் மூளை முடிவுகள் எடுத்து கட்டளைகள் பிறப்பிக்க முழு வளர்ச்சி அற்றது! கை கால்கள் தானாக அசைக்க இயலாதது!
ஆப்தால்மோலாஜி அறிவியல் படி எதிரில் இருக்கும் எவரையும் பிறந்த குழந்தை அடையாளம் காணாது! ஏனெனில் கண்பார்வை முழுமை அற்றது.

பிறந்த குழந்தைக்கு காது கேட்கும் திறனும் முழுமை அற்றது!

பெற்ற தாயையே பிறந்த குழந்தை உணர்வது வாசத்தினை நுகர்வதனால்தான்!

வாழ்வியல் அனுபவம் என்பது அன்று பிறந்த குழந்தைக்கு, அதுவும் கண் திறக்காது ஒரு நாளில் சராசரியாக 20 மணிநேரத்திற்கும் மேல் உறங்கும் குழந்தைக்கு அனுபவம் எனும் பேச்சு மிக அதிகம்.

பிறந்த குழந்தை தன்னுள் எழும் வயிற்றுப் பசிக்கு "இன்ஸ்டிங்ட்" உணர்வால் அழும். அன்னையிடம் பால் குடித்துவிட்டு உறங்கும்.

அடுத்தமுறை சந்தர்ப்பம் கிடைக்கும் போது, ஆழ்ந்து உறங்கும் ஒரு பிறந்த குழந்தையை தொந்தரவு செய்யாமல் கொஞ்ச நேரம் உற்று நோக்குங்கள். உறக்கத்திலேயே தன் முகமெல்லாம் மலர அகலமாய்த் தனது பொக்கைவாய் விரித்துச் சிரிக்கும்.... சற்று நேரத்தில் முகமெல்லாம் சுண்டிப்போய் உதடுகள் துடிக்க சோகத்தை வெளிப்படுத்தி பல நேரங்களில் தூக்கத்திலேயே வாய்விட்டு அழும்!

எந்த அனுபவமும் நேரடியாகப் பெறத் தன் புலன்கள் எதுவும் முழுமையாகத் தயாராக வளர்ச்சி அடையாத, தன் மூளையின் நினைவுகள் மெமரி இன்னமும் பயன்படுத்தப்படாமல் இருக்கும் அன்று பிறந்த பச்சைக்குழந்தையின் முழுமையான உணர்வுகள் வெளிப்படுத்திச் சிரிப்பதும், உதடுகள் கோணி சோகத்தை வெளிப்படுத்துவதும் சோகம் மீறிப்போய் உடன் அழுவதும் எப்படி சாத்தியம்?

முன் ஜென்மத் தொடர்புகளால் இறைவனிடம் இறைஞ்சுகிறது பிறந்த குழந்தை! இதையே உறக்கத்தில் பிறந்த குழந்தை சிரிக்கையில் இறைவன் பூ தருவதால் சிரிக்கிறது, பூவை தராததால் அழுகிறது என்றும் பாட்டி, தாத்தா சொல்வார்கள்!

பொருள் சார் உலகில் குழந்தைப் பிறப்பு கொண்டாட்டத்திற்குரிய விஷயமாக இருக்கிறது. கரு உருவாகியதை மசக்கைவாந்தி வந்து அறிவிப்புச் செய்ததும் சந்தோஷம்...குழந்தை பிறந்ததும் பெரும் மகிழ்ச்சி என்பது பொருளியல் உலக நடப்பு.

இப்போது முன்வினை,பூர்வ ஜென்ம பாப, புண்ணியம் காரணமாக மீண்டும் மனிதப் பிறப்பெடுத்த இந்த ஆத்மாவின் அவஸ்தையைத் தாயின் கருப்பையில் விஸ்தாரமாக, விஷூவலாகக் கொஞ்சம் காண்போம்!

தலைகீழாகத் தொங்கிய நிலையிலும், ஒன்பதுமாதம் கைகால்கள் முடக்கப்பட்டும், மலம், மூத்திரம் நிறைந்த கருப்பையில் அடைக்கப்பட்டும், உணவுக்குக் கெஞ்சிக்கொண்டும், போதும்! இந்த வேதனையில் இருந்து என்னை ரட்சித்து வெளிக்கொணர்வாய் இறைவா என்று இறைவனிடம் இறைஞ்சியபடியே வெளியே வந்து பிறக்கிறது அந்த ஆத்மா பிறந்த குழந்தையாக!

40 நாட்கள் வரையில் பிறந்த குழந்தையாக புதிய வடிவெடுத்து வந்த ஆத்மா இறைவனோடு தொடர்பில் இருந்து நல்ல தருமத்தை, கர்மாக்களைச் செய்வேன் என்று இறைவனிடத்தில் வாக்குத் தந்து இந்த உலகியல் வாழ்வில் தாயை முதலாக முகம்பார்த்து அடையாளம் கண்டு சிரிக்கிறது! தாய் அறிமுகப்படுத்த தந்தையை அடையாளம் காண்கிறது... கிலு கிலுப்பைச் சத்தம் கேட்டுத் திரும்புகிறது.... மெல்ல மெல்ல இறைவனுக்குத் தான் செய்து தந்த சத்தியவாக்கை மறந்து "பூர்வஜென்ம" வாசனைகள் வசத்தில் காமம், குரோதம், லோபம், மோகம் என்று லயிக்கிறது!

எல்லாமே காட்சியளிப்பதாக, கண்ணுக்குப் புலப்படும் ஸ்தூலமாக இந்த உலகில் கிடைப்பதில்லை. கண்ணுக்குப் புலப்படாத, உணரக்கூடிய சூட்சுமமாக பல விஷயங்கள் நிறைந்திருக்கின்றன!

கண்ணுக்குத்தெரியும் நூறு கோலிக்குண்டுகள் பார்வையிலிருந்து ஒளித்து வைத்து மறைக்கப்பட்டால் நூறு என்று எண்ணிக்கையில் இருந்தும் மறைபடும்!
திறந்த நிலையில் இருக்கும் ஒரே ஒரு கற்பூரம் பார்வையில் இருந்து ஒளித்து வைக்கப்பட்டிருந்தாலும் கற்பூரம் இருப்பது உணரப்படும்!

வாசத்தால் உணரப்படும் கற்பூரம் என்பது subtler than கோலிக்குண்டு! பார்க்கமட்டுமே முடிந்த கோலிக்குண்டு என்பது Gross !

எப்போதும் Gross body is Controlled by subtler body!
இறைவன் உணரப்பட வேண்டியவன்! The subtlest of all and All Pervading!

நீக்கமற எங்கும் நிறைந்திருப்பவன், எல்லோருக்கும் உள்ளாக ஆத்மாவாக இருப்பவன், இருக்கும் அனைத்தும் இறையே!

இந்தியப் பாரம்பரியமான சனாதன தருமம் என்பது மிக ஆழ்ந்த உயர் நிலை அறிவியல்!
போற்றுங்கள் சனாதன தருமத்தை! வாழுங்கள் சனாதன தருமம் சொல்லும் வாழ்வியல் தத்துவங்கள், வேதநெறிகளின் படி! பயன் பெறுவீர் மேம்படுவீர் சனாதனத்தின் துணைகொண்டு!அன்புடன்,


ஹரிஹரன்

Saturday, April 14, 2007

(149) "சர்வஜித்" தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

தமிழில் வலைப்பூ பதிபவர்கள், பதிவுகள் படிப்பவர்கள் என அனைவருக்கும் எனது "சர்வஜித்" தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக!

இந்தத் தமிழ்ப்புத்தாண்டில் உலகத் தமிழர்கள் 1500 பேர் இருந்து தமிழால் எழுதி தமிழ் வலைப்பூ மூலம் ஏற்படுத்தும் தொடர்புகளில் மீண்டும் மீண்டும் ஆபாச போலி எழுத்து, தனிநபர் அடையாளத் திருட்டு, மோசடி என்பதிலேயே மீண்டும் மீண்டும் அருவருப்பாக உழன்று வருவது என்பது நின்றுவிடும்படி செய்துவிடுமாறு இறைவனை வேண்டுகிறேன்.

இந்தப் புத்தாண்டில் தொழில்நுட்பம் தந்த பரிசாகிய வலைப் பதிவுகளை நாம் அனைவரும் நேர்மையாகவும், நல்லவிதமாகவும் மட்டுமே பயன்படுத்துவோம் என உறுதி கொள்வோம்!

நான் அறிந்த நல்லதை அடுத்தவர்க்குப் பயன்பட வேண்டிச் சொல்லணும். அப்படி நல்லதை அடுத்தவர்க்குச் சொல்லுகின்ற போதே எனக்கான தார்மீக அருகதையையும் தொடர்ந்து செம்மைப்படுத்த வேண்டியதும் மிக அவசியமானது என்பதை உணர்ந்தே இருக்கிறேன்!

நானும் எனக்குக் கிட்டிய "விழிப்பு"உணர்ச்சியைப் பயன்படுத்தி சில சமயங்களில் சிலவிதமான எழுத்துக்கு நான் எதிர்வினை ஆற்றுகையில் எழும் கோபத்தினால் விளையும் எதிர்மறைத் தாக்கம் தரும் விதத்தில் அமைகின்ற எழுத்தை, பாங்கினை விடுத்து ஏற்றம் தரும் விதத்திலேயே முழுதும் எழுத முயற்சிப்பேன் என்பதை அறியத்தருகிறேன்!

எத்தகைய சமூக மாற்றம் வர வேண்டும் என்றி எதிர்பார்க்கிற நம் அனைவருக்கும் முதலில் அந்த மாற்றம் தன்னில் இருந்தே ஆரம்பிக்கவேண்டும்!

நல்ல மாற்றம் முதலில் என்னில் இருந்து வெளிவர நான் ரெடி! நீங்களும் ரெடிதானே!


குறிப்பு:

சமீபத்தில் "விழிப்பு" எனும் பதிவர் வேறு ஒரு பதிவில் எனது பின்னூட்டத்தின் ஒரு சொற்றொடரை அவர் பதிவில் அவுட் ஆப் காண்டக்ஸ்டில் பயன்படுத்தி என் எழுத்தை மறைமுகமாகச் சாடியிருந்தார். இந்தப் புத்தாண்டில் இருந்து எனது கருத்தைத் தாங்கிவரும் எனது எழுத்து இன்னமும் கூடுதல் பொறுப்புணர்வுடன் அமைய என்னால் ஆன அனைத்தையும் ஆவன செய்ய விழைவேன்! இடித்துரைத்த நண்பருக்கு என் நன்றிகள்!


அன்புடன்,

ஹரிஹரன்

Wednesday, April 11, 2007

(148) பீர்பல் கதைகள் தொகுப்பு-4

பீர்பல் கதை-பகுதி-1

பீர்பல் கதை-பகுதி-2

பீர்பல் கதை-பகுதி-3


அக்பர் அரசவையில் இருக்கிறார். சபைக்காவலன் ஓடி வந்து ஒரு ஓலையைத் தருகிறான்.

பாரசீகத்து மன்னன் எழுதிய சவால் மடல். இந்த மடலுடன் எமது படைவீரனுடன் ஒரு சிங்கத்தைக் கூண்டில் வைத்து அனுப்பி வைத்திருக்கிறேன். கூண்டைத் திறக்காமல், உடைக்காமல் சிங்கத்தை எடுத்துக்கொண்டு படைவீரனோடு கூண்டைத் திரும்பி சில நாட்களுக்குள் எனக்கு அனுப்பவும். தாமதித்தாலோ கூண்டு பாதிக்கப்பட்டாலோ படை எடுக்கப்படும் என்பது தான் மடல் சொன்ன செய்தி!

அக்பர் தன் அமைச்சரவை சகாக்களுடன் சென்று சிங்கக்கூண்டைப் பார்வையிடுகிறார். தன் மந்திரிகளுக்கு சவாலைச் சொல்லி உபாயம் கேட்கிறார். நெடிய யோசனைக்குப்பின்னும் எவரும் வாய்திறக்கவில்லை, உருப்படியான உபாயம் சொல்லவில்லை.

சவால் வந்த நாள் அன்று பீர்பல் வேறு ஊரில் இல்லை. எனவே அக்பர் பீர்பலை மிக அவசரமாக அரசவைக்கு அழைத்துவர ஆணையிடுகிறார்.

மறுநாள் மிக அவசரமாக பீர்பல் அரசவைக்கு அழைத்துவரப்படுகிறார். அக்பர் பீர்பலிடம் பாரசீகத்தில் இருந்து தனக்குத் தலைவலியாக வந்த சவாலைச் சொல்லி அச்சவாலை முறியடிக்கும் பொறுப்பை பீர்பலிடம் ஒப்படைக்கிறார்.

பீர்பல் சிங்கக்கூண்டினைப் பார்வையிடுகிறார். சுற்று முற்றும் வந்தவர் பழுக்கும் இரும்புக்கம்பியை எடுத்துவரும்படி பணிக்கிறார். கொதிக்கும் இரும்புக்கம்பி வந்ததும் அதைக் கூண்டின் கம்பிகளுக்கிடையே நுழைத்து சிங்கத்தை பழுக்கும் கம்பியால் தொடுகிறார்.
சிங்கம் உருக ஆரம்பிக்கிறது.

இவ்வாறு பீர்பல் தன் மதியூகத்தால் பாரசீக அரசன் அனுப்பி வைத்த மெழுகுச் சிங்கத்தைக் கூண்டைத் திறக்காமல், உடைக்காமல் உருக்கி இளக்கி, கரையவைத்து சிங்கத்தை எடுத்துக்கொண்டு பாரசீக மன்னனின் சவாலில் வென்று கூண்டைப் பாரசீகப் படைவீரனிடம் திருப்பித் தந்து அனுப்பிவைக்கிறார்!

அக்பர் மீண்டும் பீர்பலை மெச்சி பரிசுகள் தந்து கௌரவிக்கிறார்!

குறிப்பு:

அந்தக் காலத்தில் சும்மாத் தின்று தினவெடுத்த அரசர்களுக்கு அடுத்த நாட்டின் மீது படையெடுக்க எதுவேண்டுமானாலும் போதுமான காரணமாயிருந்திருக்கிறது. (இன்றைய நம் தெலுங்கு(ரீமேக்)படங்களில் நாயகன் ஹீரோயிஸம் காட்டுவதற்காக பைட் சீன் வருவதற்கு படு சப்பையான காரணங்கள் போதுமானதாக இருப்பது மாதிரி :-))


அன்புடன்,


ஹரிஹரன்

(147) காதல்..காதல்..காதல்..காதல் போயின் "நோ" சாதல்-2

காதல் பண்பு வர கண்ட்யூஸிவ் சூழல் முதலில் அவசியம். சின்னத் தூறல் மழை, வானவில், அருவி, கலகலப்பான திருவிழான்னு இதெல்லாம் காதல் பண்பை ஆம்ப்ளிபை செய்து ஒருநபரின் காதல் "அவஸ்தை" என்பதைத் தீவிரப்படுத்தும்.

எனக்குச் சின்ன வயது ஈர்ப்பு, பள்ளிக்கூடக் காதல், கல்லூரிக்காதல் அமையவில்லை.
நான் வளர்ந்த காலம் அப்படிக் கொடுமையானது! ராஜேந்தரின் ஒருதலைராகம், கிளிஞ்சல்கள், இரயில் பயணங்களில், வாழ்வே மாயம், பயணங்கள் முடிவதில்லை, என வெள்ளிவிழாக் காதல் படங்களில் வந்த ஹீரோக்கள் எல்லாம் காதலில் தோற்று, தாடி வளர்த்து வித விதமான கேன்சர் நோய் தாக்கி, இரத்த வாந்தி எடுத்து க்ளைமாக்ஸில் செத்தார்கள்!

காதல் என்றால் அது அழுக்கு தாடி + கேன்சரைக் கேரியரில் ஏற்றிக்கொண்டு காதல் வயப்பட்டவரை ரத்தம் கக்க வைக்கும் காட்டேறி ரேஞ்சில் என்னைச் சிந்திக்க வைத்தது! ஹார்மோன்களின் ஹார்மோனியம் பயத்தால் கேட்கவில்லை அல்லது கேட்காத மாதிரி ஓவர் லுக் செய்து வந்தேன்!

90களின் ஆரம்பத்தில் கோடம்பாக்கதில் கேன்சர் காதல் கதைகளுக்குக் கேன்சர் வந்து இரத்தவாந்தி எடுத்து ஹீரோ கட்டாயமாகச் சாகும் காதல் தோல்விப்படங்கள் காணாமல் போயின! இதயம் மாதிரி படங்கள் உதயம் தியேட்டரில் பார்த்ததால் மூலையில் வீசப்பட்டிருந்த ஹார்மோன் ஹார்மோனியம் இருபதுகளின் ஆரம்பத்தில் இசைக்க ஆரம்பித்தது!


கெட்டும் பட்டணம் சேர் என்ற மூதுரைப்படிக் கெடாமலே பட்டணமான சென்னைக்கு வந்ததும், சென்னை வாழ்வியலுடன் தினமும் செய்த போராட்டம் இரண்டாண்டுகளிலேயே ஒரு பெரிய நம்பிக்கையைத் தந்தது! நம்பிக்கை வந்தாலே பயம் காணாமல் போகும்.


வேலையில் உழைத்துச் சொந்தமாய் ரெண்டு காசு சம்பாதித்து, உணவு, உடை, உறைவிடத்துக்கு எவரையும் சார்ந்திருக்காமல் சுயமாய் இருக்க ஆரம்பித்திருந்ததால் பாய்ஸ் படம் வராதபோதே 1992லேயே "எனக்கொரு கேர்ள்ப்ரண்ட் வேணுமடா"ன்னு ஹார்மோன்ஸ் என்னுள் காதல் ராகம் வாசித்தது!

"இந்தக்கால இளைஞர்கள் காதலுக்கு இளையராஜாவின் பாட்டிருக்கு" எனும் உண்மைப்படி இளையராஜாவின் பாடல்கள் எல்லாம் ரெடியாகத் தொகுத்துக் கேட்டு யாராவது ஃபிகர் மாட்டினால் "மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்..உனை விரும்பினேன் உயிரேன்னு" உளறிக்கொட்டி அமைக்கும் காதல் ராஜாங்கத்துக்கு நானே ராஜா நானே மந்திரியா இருக்கணும்கிற "அர்ஜ்" எனக்குள்ளே...


நரம்படி நாகப்பன் எனும் புனப்பெயர் கொண்ட என் ராமாபுர நண்பன் பல்லவனில் போகும் ஃபிகர்களை புட்போர்டில் பயணித்து மடக்குவது எப்படி? என்று லைவ் டெமோ தந்தான்! அவன் எனக்குச் சொன்ன காதல் பால பாடங்களின் நோட்ஸை 16 ஆண்டுகள் கழித்து என் நினைவில் இருந்து எடுத்து வைக்கிறேன்.

1. ஒரே பஸ்ரூட்டில் தொடர்ந்து ஒரே நல்ல ஃபிகர் பயணிப்பதை ஒருவாரம் கவனிக்கவேண்டும்.

2.இப்போ உடனே ஆக்சனில் இறங்கவேண்டும். நம் கையில் இருக்கும் லஞ்ச் பேக்கை புட்போர்டுக்கு அருகில் இருக்கும் கடைசி ஜன்னல் ஓர இருக்கையில் இருக்கும் ஃபிகரிடம் தந்துவிட்டு புட்போர்டில் தொங்கவேண்டும்!

3. ரெண்டுரூபாய் டிக்கெட் எடுக்கச் சொல்லிப் பத்துரூபாய் தரவேண்டும். தந்துவிட்டு அடுத்த ஸ்டாப்பில் டிக்கெட் வருமுன் இறங்கிவிட வேண்டும்.

4. மறுநாள் கொஞ்சம் மறைவாய் இருந்து அந்தப் பெண் வரும் பஸ்ஸை நோக்கினால் அதில் அந்தப் பெண் முதல் நாள் டிக்கெட் எடுத்த மீத சில்லறையை வாங்காத இந்த சில்லறையைக் கண்களால் அந்த பஸ் ஸ்டாப்பில் தேடுவாள்!

5.இப்போது ஃபிகரிடம் பேச சந்தர்ப்பம் வந்தாச்சு! வண்டியில் ஓடி ஃபுட் போர்டில் ஏறிக்கொண்டு சாரிங்க வண்டி ஸ்பீடா எடுத்துட்டான்! அதான்.அ..ஆ..இ...ஈ என்று பேச்சு ஆரம்பிக்கலாம்! இதுக்கு அப்புறம் உன்னோட திறமைம்மா! அப்படின்னான் நம்ம நண்பன்!

எனக்கு இது டீப்பான ரிஸ்க்கா தெரிஞ்சுது! இதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னுட்டேன்!
நண்பன் எடுத்த காதல் டியூஷன் வேஸ்ட் செய்ததற்காக நண்பர்கள் பொதுக்குழுவில் நான் பெனல்ட்டி டீ ஸ்பான்ஸர்ஷிப் செய்யப் பணிக்கப்பட்டேன்!

டீப் ரிஸ்க் டீ+பொறையோட போச்சேன்னு டீப் ப்ரீத் விட்டு யோசிக்கையில்

ரொம்ப ஆதரவா இன்னொரு நண்பன் ஒரு சைதாப்பேட்டைச் சிங்கம் நீ பொதுமாத்து அடிவாங்கிடுவோமோன்னு பயப்படுறேன்னு பல்ஸைப்பிடித்து ஒய் ரிஸ்க்... தெரிஞ்ச பொண்ணு இருந்தா டிரை செய்! அப்படின்னு என்னிடம் போட்டு வாங்கிய சில தகவல் படி, என்னை ஹீரோ ஆக்குவது என்று பல்லவன் டிப்போ பாடிகாட் முனீஸ்வரர் மீது சபதமிட்டு எனது ஹேர் ஸ்டைலிஸ்ட், காஸ்ட்யூம் டிஸைனர் / காஸ்ட்யூம் கொடையாளர் , வெல் விஷர் என டி.ராஜேந்தர் மாதிரி எட்டு துறையை கையாண்டு டைரக்ஷனை ஆரம்பித்தான்!

சில மாதங்களுக்கு காதல் ப்ரிப்பரேஷன் ப்ரைமர் டிரைனிங் கோர்ஸ் ஃபீஸாக மாலை நேர டீ-பொறை, பொண்ணுகிட்டேர்ந்து பாஸிடிவ் ரெஸ்பான்ஸ் வந்தா பெரிய டிரீட் ஸ்பான்ஸர்ஷிப் கைமாறாக நான் செய்யவேண்டியது எனும் ஜெண்டில்மேன் அக்ரீமெண்டுடன் ஆரம்பமானது என் ப்ராஜக்ட் காதல்! (ஏழரைச் சனி உச்சத்தில் இருந்து என்னைப்பாடாய்ப் படுத்தியது என்றும் கொள்ளலாம்:-))


அடுத்த பதிவுகளில் சந்திக்கலாம். கொஞ்சம் சீரியஸ்.. நிறையக் காதல் கோமாளித்தனங்களுடன்..

அன்புடன்,

ஹரிஹரன்

Monday, April 09, 2007

(146) திருமுருகாற்றுப்படை...நக்கீரர் ..(சு)ப்ரமணியம்

தமிழ் இலக்கியத்தின் தொன்மையான பத்துப்பாட்டு நூல்களில் முதலில் இருப்பது திருமுருகாற்றுப்படை. நக்கீரர் இயற்றிய நூல்.

சிவபெருமான் நேரிடையாகத் தோன்றி தன் நெற்றிக்கண் காட்டியபோதும் தமிழுக்காக, சங்கு அறுக்கும் குலத்தில் நக்கீரர் தான் வந்ததாகச் சங்கரனார் சிவனுக்கு ஏதுகுலம்? என்று தன் சாதியைச் சொல்லி நேர்மையாகச் சிவனோடு வாதாடிய தைரியசாலியான புலவர் நக்கீரர்.

முருகவழிபாட்டை குறவரினத்தவரிலிருந்து அனைத்து சமூகத்தவரும் எப்படி வழிபட்டார்கள் என்பதைச் சொல்லும் நூல் திருமுருகாற்றுப்படை.

நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் ஷண்முகநாதன், முருகனின், சுப்ரமண்யஸ்வாமியின் ஆறுமுகங்களில் ஒவ்வொரு முகத்திற்கும் அதற்குண்டான சிறப்பைச் சொல்லி விவரிக்கையில் இப்படிச் சொல்கிறார்:

ஒரு முகமம்

மந்திர விதியின் மரபுளி வழா அது

அந்தணர் வேள்வி ஒர்க்கும் மே


விளக்கம்: மந்திரவிதி தப்பாமல், வைதீக சம்பிரதாயப்படி பிராமணர்கள் செய்கின்ற வேள்வி, ஹோமங்கள், யாகங்களை கண்டு இன்புற்று அவற்றை வளர்க்கவே ஆறுமுகனுக்கு ஒரு முகம் இருக்கிறது என்கிறார் நக்கீரர்.


சுப்பிரமணியம் பேணுவது "ப்ரமணியம்" என்பதான "வேதநெறியையே"!

சுப்பிரமணியத்தில் "சு" எனும் எழுத்து தவிர்த்து மீதம் இருப்பது "ப்ரம்மணியமே!"

தெய்வங்களில் முருகக்கடவுள் பஞ்சபூதத்தொடர்புடன் அக்கினியின் சொரூபம்.

சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து நெருப்புப் பொறியாகத் தோன்றி வாயுவினால் சுமக்கப்பட்டு சரவணப்பொய்கையில் ஆறுமுகனாகத் தோன்றி பூமி உயர்ந்திருக்கும் மலைகள் எங்கும் நிறைந்து இருப்பவர் முருகக்கடவுள்!

"வேதத்துக்கு முக்கியம் வேள்வி". யாகம், வேள்விக்கு முக்கியம் "அக்கினி". தெய்வங்களுள் சுப்ரமணியம் தான் அக்கினி.

வேத நெறி ஷீணித்தால் அதை மீட்டுப் பேணுவதே முருகக்கடவுளின் முக்கியமான செயலாக இருக்கிறது. திருஞான சம்பந்தர் முருகப்பெருமானின் அவதாரம். சமணர்களோடு வாதாடி வென்றவர் திருஞான சம்பந்தர்! ஆற்றலாக இருந்து ப்ரமணியம் பேணியவர் குமாரசுவாமிக்கடவுள்!

பிராம்மணியத்தை நிலைநாட்டினவர் சம்பந்தர். தமிழ் வேதமான தேவரம் பாடிய திருஞானசம்பந்தர் தன்னை நான்மறை சம்பந்தன் என்றே அழைத்துக்கொள்கிறார்!

வேத நெறி தழைத்தோங்கவே திருஞான சம்பந்தரின் அவதாரம் நடந்தது என்று சொல்கிறார் சேக்கிழார்.


கந்தபுராணம்தான் இருக்கும் புராணங்களிலேயே அதிகமான சுலோகங்களைக்கொண்டது!
வால்மீகி ராமாயணம்,காளிதாசரின் குமாரசம்பவம் என்பவையும் சுப்ரமணியரின் பெருமையைச் சொல்கின்றன.

மயூரவாகனரான குமாரஸ்வாமியின் உருவம் பதித்த மிகப்பழைய நாணயங்கள் வட இந்தியாவின் கோடியில் கிடைத்திருக்கின்றன. இன்றைய பாகிஸ்தானில் இருக்கும் வடமேற்குஎல்லை மாகாணத்தில் கண்டெடுக்கப்பட்ட குஷனர் நாணயங்களில் குமாரஸ்வாமியின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தன.

ரிக்வேதம் பஞ்ச சூத்திரத்தில் பரமேஸ்வரனை போற்றும் ஸூக்தத்தில் குமாரனை வழிபடும் பிதா எனத் தகப்பன்சாமியாக, சாந்தோக்கிய உபநிடத்தில் சனத்குமார-ஸ்கந்தன் எனக்குறிப்பிடப்பட்டுத் துதிக்கப்படுபவர் சுப்ரமணியர்.

வைதீக நெறியை வளர்க்கவே நீங்கா இளமையுடன் இருப்பவர் குமாரசுவாமியான முருகக்கடவுள். ப்ராம்மணர்கள்-அந்தணர்கள் பற்றி ஒழுகும் வேதநெறியை வளர்க்கிறவர் சுப்பிரமணியர்!

நான்மறை வேதங்கள், அவை சொல்லும் கர்மாக்களை வாழ்த்தி வளர்ப்பது முருகனுக்கே உவப்பான விஷேச காரியம் என திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் சொல்கிறார்!

ஒரு முகமம்
மந்திர விதியின் மரபுளி வழா அது
அந்தணர் வேள்வி ஒர்க்கும் மே

மந்திரவிதி தப்பாமல், வைதீக சம்பிரதாயப்படி பிராமணர்கள் செய்கின்ற வேள்வி, ஹோமங்கள், யாகங்களை கண்டு இன்புற்று அவற்றை வளர்க்கவே ஆறுமுகனுக்கு ஒரு முகம் இருக்கிறது என்கிறார் நக்கீரர்.

சிவபெருமானின் நெருப்பு நெற்றிக்கண்ணுக்கு அஞ்சாது வாதிட்ட நேர்மையாளர் நக்கீரர்.
அவரே பிராமணர்கள் விதி தப்பாது நடத்தும் ப்ரமணிய யாக வேள்வி கண்டு இன்புறுவது ஆறுமுகனின் ஒருமுகம் என்று தனது திருமுருகாற்றுப்படையில் சொல்லியிருக்கின்றார்.

தெய்வம், வேதம், சமஸ்கிருதம் மறுக்கும்/வெறுக்கும் தமிழ்நாட்டு பகுத்தறிவு நாத்திகவாதிகள் முருகப்பெருமானை தமிழுக்கு அரசன் என்று ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்!

முருகனான சுப்பிரமணியர் காத்துரட்சிப்பது ப்ரம்மணியம், பிராமணர்கள் பற்றி ஒழுகும் வேதநெறி யாகங்கள் என திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் சொல்லியிருக்கிறார்.

நக்கீரருக்கு நம் தமிழ்நாட்டுப் பகுத்தறிவு நாத்திக அரசியல் திரா"விட"ர்கள் நெருப்புக் காட்டுவார்களா?

இல்லை நக்கீரரும், வேத நெறி, ப்ரம்மணியம் பேணி வளர்க்கும் எம்பெருமான் சுப்ரமணியரும் பார்ப்பன அடிவருடிப் பட்டம் பெறுவார்களா??


அன்புடன்,

ஹரிஹரன்

(145) பீர்பல் கதைகள்-பகுதி-3

பீர்பல் கதை-பகுதி-1

பீர்பல் கதை-பகுதி-2


அக்பர் அரண்மனையில் தனது பேரனோடு கொஞ்சிக்கொண்டிருக்கிறார். பீர்பலிடம் என் பேரன் தான் உலகிலேயே அழகானவன் என்ன சொல்கின்றீர்கள் என்கிறார். பீர்பல் மறுத்து அரசே இல்லை உங்கள் பேரனை விட அழகானவன் இருக்கிறான் என்கிறார். அக்பர் என் பேரனை விடவுமா? சாத்தியமே இல்லை! எனச் சொல்ல , பீர்பல் அரசே என்னோடு வாருங்கள் நான் காட்டுகிறேன் என்கிறார்.

மாறு வேடத்தில் அக்பரை அழைத்துக்கொண்டு நகரின் ஒதுக்குப்புறத்தில் குடிசைகள் நிரம்பிய பகுதிக்கு பீர்பல் செல்கிறார். அங்கே ஒரு குழந்தை வீதியிலே, மண்புழுதியிலே இறங்கி விளையாடியபடி இருக்கிறது. உடலெங்கும் மண் ஒட்டியும், கிழிந்த உடைகளோடும், ஒழுகும் மூக்கோடும் இருக்கும் குழந்தையை அக்பருக்குக் காட்டி இதுதான் உங்கள் பேரனை விட அழகான குழந்தை என்கிறார் பீர்பல்.

அக்பர் திகைத்துப் போய் "இந்தக் குழந்தையா எனது பேரனை விடவும் அழகு?" என பீர்பலிடம் அதிர்ச்சியோடு வினவுகிறார்.

"ஆம் அரசே!" என்று சொல்லி பீர்பல் குழந்தையைக் கிள்ளிவிட்டு மறைவாக மறைந்துகொள்கிறார்.

பீர்பல் கிள்ளியதால் குழந்தை குரல் எடுத்துப் பெரிதாக அழுகிறது.

குழந்தையின் அழுகையொலி கேட்டு குடிசையிலிருந்து குழந்தையின் தாய் குடிசையினின்று வெளிவந்து " என் அழகான சந்திரன் மாதிரியான ஒளி வீசும் குழந்தை ஏன் அழுகிறது... என் செல்லக்குட்டி ஏன் அழுகிறது என்றவாறே குழந்தையைத் தூக்கி முத்தமிட்டு சமாதானம் செய்தவாறே தன் குடிசைக்குள் குழந்தையோடு செல்கிறாள்.

பீர்பல் அக்பரை நோக்கி " பார்த்தீர்களா அரசே! கலைந்த தலைமுடியுடன், மூக்கு ஒழுகிக்கொண்டு, உடலெங்கும் மண்புழுதியோடு இருந்தாலும் அதன் தாய்க்கு அந்தக் குழந்தை பேரழகுதான்" என்ன சொல்கிறீர்கள் என்கிறார்.

அக்பருக்கு அழகு என்பது உள்ளத்தில் அன்போடு பார்க்கும் பார்வையில் இருப்பது என்று தெளிவுபடப் புரியவைக்கிறார் பீர்பல்!

ஆம் என்று ஆமோதித்துப் பரிசுகள் தந்து பீர்பலைச் சிறப்பிக்கிறார் அக்பர்.


குறிப்பு:
ஒருவர் உள்ளத்திலே அன்பு இல்லை எனில் அடுத்தவர் மீது வீணான வெறுப்புணர்வும் அழிக்கும் அழுக்காறுமே மேலிடும்!

அன்புடன்,

ஹரிஹரன்

Saturday, April 07, 2007

(144) காஞ்சி சங்கரமடத்தின் சேவை Vs தமிழக அரசு சேவை

சின்மயா வித்யாலயா பள்ளிகள், சங்கரா வித்யாலயா பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் தருவது மக்கள் சேவையே அல்ல வெறும் வியாபாரம்தான் என்கிறார் ஜெய்சங்கர்.

முதலில் பொது மக்களுக்குச் சேவை செய்வது என்றால் அது கட்டாயம் இலவசமாகத்தான் இருந்தாகவேண்டும் எனும் எண்ணத்தால் விளைகின்ற பார்வைக்குறை காரணமாக எழும் எண்ணம் என்றே கருதுகிறேன்.

தரம்மிக்க பள்ளிக் கல்வி என்பது தமிழகத்தின் தலைநகரமான சென்னை மட்டுமில்லாமல் தமிழகமெங்கும் சென்னை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கோவை,என அனைத்துப் பகுத்திகளிலும் கிடைக்கவேண்டும் எனும் எண்ணம் சேவை மனப்பான்மையால் விளைவது.

சங்கரா பள்ளிகள், சின்மயா பள்ளிகளின் கல்விச்சேவையின் தரம் உயர்ந்தது. படிக்கும் மாணாக்கர்களின் எதிர்காலம் ஒளிமயமாக அமைக்க நல்ல கல்வி புகட்டுகிறது.

கள்ளச்சாராயம் குடித்து கெட்டு அழிவதைத் தடுக்க அதிமுக தமிழக அரசு அறுநூறு டாஸ்மாக் கடைகளை தமிழகமெங்கும் திறந்தது! டாஸ்மாக் திட்டத்துக்க்கு எதிர்ப்புத் தெரிவித்து தேர்தலில் வென்ற பாமக,திமுக கூட்டணி அரசில் டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை எட்டாயிரமாக அதிகரிக்கப்பட்டு 34000 பேருக்கு வேலை வாய்ப்புத்தரப்பட்டு "நல்ல" சாராய வியாபாரம் மூலம் 2005-2006 ஆம் ஆண்டில் 5660 கோடி லாபம் தமிழக அரசுக்குக் கிடைத்தது 2006-2007 ஆம் ஆண்டு லாபம் 6965 கோடி லாபம் டாச்மாக் சரக்குகள் மீதான விற்பனை வரிமூலம் அரசுக்கு லாபமாகக் கிடைக்கிறது! டாஸ்மாக் பிஸினஸ் விபரம் இங்கே

இலவச நிலம், இலவச டிவி, இலவச கேஸ் ஸ்டவ் திமுக கூட்டணி அரசு (திமுக+ கூட்டணிக் கட்சி சார்ந்த)பொதுமக்களுக்கு வழங்குவதற்கான செலவு சில நூறு கோடிகள்தான்
மொத்தமே ஆயிரம் கோடிக்குள் வந்துவிடும்!

இம்மாதிரி குடும்பத்தைக் குடிகொண்டு கெடுக்கும் இலவச சேவைத்திட்டங்கள் தமிழகத் தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுவது, கீழ்மட்ட தமிழ் மக்களின் வாழ்வை டாஸ்மாக் சாராயக்கடைகளில் அழித்துவிட்டு அரசு செய்வது எனும் உண்மை பெரும்பான்மை பொது மக்களுக்குப் புரியாதது முழுமையான விழிப்புத்திறன் தரும் தரமான கல்விக்கூடங்கள் வெகுதியாக தமிழக மெங்கும் இல்லாததால் தானே இந்த ஏமாற்றுதல் நடந்தேறுகிறது தமிழகத்தில்!

ஒரு பீர் பாட்டில் விலை 35 ரூபாய், ஒரு குவார்ட்டர் பாட்டில் விலை 60 ரூபாய் ஒருநாளைக்கு ஒரு குடிமகன் 50 ரூபாய்க்குக் குடித்தால் மாதத்திற்கு 1500ரூபாய் மூன்று மாதத்திற்கு 4500 ரூபாய். இது போக போதையில் தெருவில் கவிழ்ந்து கிடந்து கிழிபடும் உடைகள், தொலைக்கும் பொருட்கள், ஆரோக்கியக்குறைவுக்கு மருத்துவச்செலவு என இன்னொரு ஆயிரம் ரூபாய் சேர்த்துக்கொள்ளுங்கள்.

சின்மயா பள்ளிக்கூடத்தில் எல்கேஜிக்கு மூன்று மாத டெர்ம் கட்டணம் 2500 மிக அதிகம் என்று குற்றம் சாட்டினார் ஜெய்சங்கர். மூன்று மாதம் சாரயம் குடிப்பதற்கு ஒரு சாமானியத் தமிழன் செலவழிப்பது குறைந்தபட்ட்சம் 3500 ரூபாய்!

மூன்று மாதத்திற்கு 2500 ரூ செலவில் தரமான கல்விக்காக சங்கரா வித்யாலயா, சின்மயா வித்யாலயா பள்ளிகளில் படிக்கச் சராசரியான தமிழனால் முடியாதா??


எஸ்பிஓஏ பள்ளிகளில் வங்கிப்பணியில் இருப்போர் குழந்தைகள் தவிர பொதுவாக படிக்க விருப்பப்படும் அனைவருக்கும் வாய்ப்புக் கிடைக்கிறதா?

நல்ல சாராயத்தை, சரக்கை டாஸ்மாக்கிலே காசுகொடுத்துப் பெறும் தமிழன் நல்ல தரமான கல்வியை பெற அது இலவசமாகத் தரப்படவேண்டும் எனச் சேவை என்றால் அது இலவசமாகத்தான் எனும் திராவிட அரசியல் மனோவியாதிக்கு உட்பட்டு எதிர்பார்ப்பது சரியானதா?


தமிழ்நாட்டில் கல்வி கற்க இல்லாமையைக் காரணம் காட்டுவது மிகவும் தவறானது. அரசே மக்களுக்கு காலம் காலமாக உவப்போடு தருவது இலவசச் சேவைத்திட்டங்களும், சாரயமும் தான்! சாமானியப் பொதுமக்கள் தமிழ்நாட்டில் பெருவாரியாகக் கல்வி கற்றால் அடுத்து திமுக, அதிமுக, பாமக , தேமுதிக என இலவசத்திட்டங்கள் வாயிலாக மக்களைக் கவர்ந்து ஓட்டுப்பொறுக்கி ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடியாது.

பெருவாரியான கல்விக்கூடங்கள் தமிழகத்தில் ஏற்படுத்தப்படும் போது இடஒதுக்கீடு அரசியலும் தானே காணாமல் போகும்! ஆனால் நாற்பதாண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் தமிழகத்தில் மைனாரிட்டி கிறித்துவக் கல்வி, மருத்துவ நிறுவனங்கள் வெகுதியாகத் தெரியும்படியாகக் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையை குறைவாகவேயும், இன்னமும் படிக்க இடங்களை படிக்கும் மாணவர்களுக்கு ஒதுக்கித்தரும் அளவிலேயே இடப்பற்றாக்குறையிலேயே வைத்திருப்பது சமூக நீதி அரசியல்வாதிகளின் சமூகநீதி இயக்கங்கள்?!

டாஸ்மாக் சாராயக்கடைகளில் ஊற்றித்தர 35000 வேலைவாய்ப்பு ஏற்படுத்திய பகுத்தறிவுத் தமிழகஅரசு மிகநிச்சயமாக அழித்தது மூன்றரை இலட்சம் குடும்பங்களாவது இருக்கும்.

கழகங்களின் தமிழக அரசுகள் தரமான கல்வி நிறுவனங்கள் அமைத்து கல்வி பற்றிய விழிப்புணர்வை தமிழ்நாட்டு அடித்தட்டு மக்களிடம் ஏற்படுத்தவில்லை ஏன்? அனைவரும் கல்வி கற்றால் ஆட்சி, அதிகாரத்தில் இருந்து முதலில் காணாமல் போவது கழகங்கள் தான்!

மருத்துவ மனையில் பதிவுக்கட்டணம் 30 ரூபாயில் இருந்து 100-125 ரூபாய்க்கு சங்கரா மருத்துவமனைகளில் இருக்கிறது என்றார் ஜெய்சங்கர். சங்கரா மருத்துவமனையில் தேவையே இல்லாத எக்ஸ்ரே, லேப் டெஸ்ட்கள், என ஐநூறு ரூபாய்க்குச் செலவு என்ற இதர மருத்துவமனையில் நோயாளிகளிடம் பிடுங்குவதுமாதிரி செய்வதில்லைதானே!

சங்கரா கண்மருத்துவமனை நோயாளிகளுக்கு சிகிச்சை தரும் நவீன டெக்னாலஜியில் என்றுமே முன்னோடியாக முதன்மையில் இருக்கிறது. அரவிந்த் நிறுவனத்தையும் குறை கூறமுடியாது. என்றபோதும் கண்தான, மாற்று சிகிச்சை இவைகளில் முன்னோடி சங்கர நேத்ராலயா!

10 ஆண்டுகளுக்கு முன் சர்க்கரை நோயாளியான எனது தாய்க்கு காட் ராக்ட் கண் அறுவை சிகிச்சைக்கு லென்ஸைக் கண்விழிக்குள்ளேயே வைத்துச் செய்யும் நவீனமுறையில் 25,000 ரூபாய்க்கு செய்தார்கள் சங்கர நேத்ராலயாவில். இன்றுவரை பிரச்சினையில்லை!

சென்னையில் வேலை செய்த காலத்தில் இஎஸ்.ஐ மருத்துவமனையில் மருத்துவம் பெற என்று 3% சம்பளத்தினைப் பிடித்துக்கொள்வார்கள். இஎஸ்.ஐ மருத்துவமனைக்காக பல ஆயிரம் ரூபாய்கள் ஐந்தாண்டுகளில் கட்டாயமாகத் தந்திருக்கிறேன். சைதாப்பேட்டை, கே.கே நகர் இஎஸ்.ஐ கிளை மருத்துவமனைகளுக்கு ஒருமுறை சென்றிருக்கிறேன்! ஐயோ பரிதாபம் எனும் சேவை! இத்தனைக்கும் மாதம் பணம் கட்டாயமாக எடுத்துக்கொள்ளப்பட்ட மருத்துவச் சேவையின் இலட்சணம்! அரசு மருத்துவமனைகள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை! எல்லாவற்றுக்கும் த.நா வெள்ளை மாத்திரை + பொட்டாசியம் பெர்மாங்கனேட் ஊதாநிறத் திரவம் தான்!

முறையான கட்டணத்தில் உயர் தரமான கல்வி, மருத்துவம் தரும் முயற்சி சேவை இல்லாமல் வேறு என்ன?? இல்லாத சில ஆயிரம் ஏழைகளுக்கு ஆண்டுதோறும் நன்கொடையாளர்களுடன் இருக்கும் நல்ல உறவைப் பயன்படுத்தி இலவசமாக கல்வி, மருத்துவம் தருபவை சங்கரா, சின்மயா நிறுவனங்கள்!

அப்பல்லோவுடன் சங்கரா மருத்துவமனைகளின் சேவைத்தரத்தை வேண்டுமானால் ஒப்பிடலாம். கட்டணம் அப்பல்லோவினை விட மிகவும் குறைவானதே என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

தமிழகத்தில் வன்னியர்களது பங்களிப்பாக செங்கல்வராயன் பாலிடெக்னிக், ஆதிபராசக்தி கல்விநிறுவனங்கள் என்பவையும், சௌராஷ்டிர சமூகத்தினரது பங்களிப்பாக சௌராஷ்டிரா பாலிடெக்னிக்,கல்லூரி நிறுவனங்கள், செட்டியார்கள் சமூகத்தினரது பங்களிப்பாக அழகப்பா, அண்ணாமலை கல்வி நிறுவனங்கள், நாடார்கள் சமூகத்தினரது பங்களிப்பாக வெள்ளைச்சாமிநாடார் கல்லூரி நிறுவனங்கள் என இச்சமூகத்தினர் அடர்த்தியாக வாழும் இடங்களில் இச்சமூகத்தினரது பிரத்யேக முன்னேற்றத்திற்கென அமைக்கப்பட்ட இந்த நிறுவனங்கள் வாயிலாக அப்பகுதியில் வசிக்கும் அனைவரும் பயன்பெற்றிருக்கின்றார்கள். விழிப்பு பெற்று இருக்கின்றார்கள்.

அரசு ஆதரவு , அதிகாரம் இல்லாமல், இன்றைக்கும் லாரியிலே ஏற்றினால் நாலு பேர் குறைவார்கள் எனும் அளவுக்குக் குறைந்த அளவில் தமிழக,இந்திய மக்கள் தொகையில் இருக்கும் பிராமணர்கள் தமிழ் நாடெங்கும் , இந்தியாவெங்கும் வெகுதியாக இருப்போருக்காகவும் தமிழகம், இந்தியா முழுக்க நல்ல தரமான பள்ளிக்கல்விக்கு தரமான மத்தியக் கல்வித்திட்ட, மெட்ரிக்குலேசன் பாடத்திட்டத்தில் சங்கரா வித்யாலயா, சின்மயா பள்ளிகள், மருத்துவமனைகள் திறந்து நடத்துவது பொதுமக்கள் சேவை இல்லையா??

சசிகலாவின் மதுத்தொழிற்சாலை, உடையாரின் மதுத்தொழிற்சலை, விஜய் மல்லயாவின் மதுத்தொழிற்சாலைகளில் இருந்து வாங்கப்படும் மதுவகைகளை 7500 கோடிக்குத் தமிழகத்தில் மட்டும் ஆண்டுதோறும் சாராய வியாபரம் செய்து நல்ல சாராயத்தை டாஸ்மாக்கின் வாயிலாக பெருவாரியான பொதுமக்களுக்கு இல்லந்தோறும் 8000 கடைகள் வாயிலாக எடுத்துச்சென்று போதையில் இருக்கும் சமூகத்திற்கு சில நூறுகோடிகளுக்கு கழக ஏஜெண்டுகளுக்குக் கமிஷன், கட்டிங்குகள்குக்காக இலவச டிவி, இலவச அடுப்பு, இலவச கோவணம் என்று சீரழித்துவிட்டு
பார்ப்பனர்கள் அடிமைப்படுத்தினார்கள், பார்ப்பனர்கள் ஒடுக்கினார்கள் என்று ஓலம் போடுவதுதான் மக்கள் சேவையா??

சங்கரா வித்யாலயா, சின்மயா வித்யாலயா கல்வி, மருத்துவ நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளால் மூன்று பேரைக்கூட அழிக்காது ஆண்டுக்கு 100,000 ஒரு லட்சம் மாணவர்களுக்கும் மேல் தரமான கல்வி அறிவோடு நல்ல சிந்தனையையும் மனதில் விதைத்து சாராயபோதையில் சீரழிந்த தமிழ்நாட்டு மக்கள் சமூகத்தினை தெளிவாக்கிவரும் சேவையைச் தொடர்ந்து செய்கிறது!

இந்தக் கல்வி இயக்கங்கள் அமைத்து நல்ல கல்வி முறையான கட்டணத்தில் அனைவருக்கும் தந்து, பெரிய அளவிலான சமூக விழிப்பை ஏற்படுத்துவதில் பெரும்பங்கு ஆயிரக்கணக்கான பிராமணர்களைச் சேர்கிறது எனும் வகையில் நான் முன்பே சொன்ன கருத்தான:
"//பல ஆயிரம் பிராமணசாதியினர் தாங்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தில் சாதிப்பாகுபாடு பார்க்காமல் கல்வி , மருத்துவம் எனப் பல நல்ல விஷயங்கள் செய்துவருவதை, நல்ல முன்னுதாரணத்தை முன்னெடுத்துச்செல்வதை பிராமணீயம் என்று குறிப்பிடலாமே?//"

மிகவும் சரியானது! சமூக விழிப்புணர்வை எடுத்துவரும் தரம்மிக்க சேவையை வழமையாக பிராமணர்கள் தற்போதும் முன்ணணியில் இருந்து முன்னோடியாகச் செய்துவருகின்றார்கள் என்பதில் ஐயம் இல்லை!

பகுத்தறிவு சுடர்விட, சுயமரியாதையோடு யோசியுங்கள்!

அன்புடன்,

ஹரிஹரன்

Thursday, April 05, 2007

(143) பிராமணர்களின் கல்வி, மருத்துவப் பொதுச்சேவை பங்களிப்பு

வீ த பீப்புள் ஜெயசங்கரின் இட ஒதுக்கீட்டுப் பதிவில் அவர் பயன்படுத்திய பிராமணீயம் சொல்லாடலை மறுத்து இப்படிப் பின்னூட்டம் போட்டிருந்தேன்.

////தான் முன்னுக்கு வந்தாலும், கீழே உள்ளவனை மேலே வரவிடாமல் தன்னை சுற்றியே இந்த இட ஒதுக்கீட்டு லாபத்தை வைத்துக்கொள்வதும் ஒரு வகை பிரமணீயம் தான்.//

ஜெய்,

பச்சை சுயநலம் என்பது இடதுசாரி முட்டாள்தன வார்த்தை உருவாக்கமான பிராமணீயம் எனும் வார்த்தையை விட மிகச்சரியானது.

இன்னொருவனை மலம்தின்னவைத்தால் திண்ணியத்தில் அதைச்செய்த சாதியீயம் என்று சொல்லப்படாதது ஏன்?

ஜனநாயக விரோதமாக தலித்தை பஞ்சாயத்துத் தேர்தலில் பதவியில் இருக்கவிடாமல் செய்வதை பாப்பாபட்டி, கீரிப்பட்டி கள்ளர்ஈயம் எனச் சொல்லப்படாதது ஏன்?

வடதமிழ்நாட்டில் வயக்காட்ட்டில் வேலைசெய்யும் பெண்களை, சிதம்பரத்தில் காவல்நிலையத்தில் கற்பழித்து வன்புணர்வு கொடுமைகள் செய்யப்படுவது வன்னியஈயம் எனக் குறிப்பிடப்படாதது ஏன்?

பல ஆயிரம் பிராமணசாதியினர் தாங்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தில் சாதிப்பாகுபாடு பார்க்காமல் கல்வி , மருத்துவம் எனப் பல நல்ல விஷயங்கள் செய்துவருவதை, நல்ல முன்னுதாரணத்தை முன்னெடுத்துச்செல்வதை பிராமணீயம் என்று குறிப்பிடலாமே?

கெட்டதுக்கு சாதிசார் முத்திரை குத்தவேண்டும் எனில் பிராமண சாதியை மட்டும் செலக்டிவாக பிராமணீயம் என முத்திரை குத்துவது என்ன ஈயம்?

:-))) :-))) //

அதற்கு ஜெய்சங்கர் இப்படிக் கேட்டு ஆச்சரியப்பட்டிருந்தார். தனிமடலில் பதிலளிக்க வேண்டி இருந்தார்.

////பல ஆயிரம் பிராமணசாதியினர் தாங்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தில் சாதிப்பாகுபாடு பார்க்காமல் கல்வி , மருத்துவம் எனப் பல நல்ல விஷயங்கள் செய்துவருவதை, நல்ல முன்னுதாரணத்தை முன்னெடுத்துச்செல்வதை பிராமணீயம் என்று குறிப்பிடலாமே?//

இது எங்கே நடக்குது ஹரி??!! ஆச்சரியமா இருக்கே?? கொஞ்சம் எடுத்து சொல்லுங்க?? ஒன்னும் புரியலை?? யார் செய்யறாங்க? எங்க செய்யறாங்க?? (கலாய்க்க இல்லைங்க சீரியசா கேட்கிறேன்)//

வீ த பீப்புள் ஜெய்சங்கரின் பதிவில் பின்னூட்டமாகப் போடுவதை விடத் தனிப்பதிவுதான் சரி என்பதால் இந்தப் பதிவு.

காஞ்சி காமகோடி சங்கரமடம் எனும் அமைப்பு வாயிலாக பெருவாரியான பிராமணர்கள் அளிக்கும் பொதுச்சேவை வேறெந்த நிறுவனங்களையும் விட கல்வி, மருத்துவம், பொதுச்சேவை எனும் மக்கள் பணியை தமிழகத்தில் இந்த அளவுக்கு கடுமையான பிராமண எதிர்ப்பு அரசியல் சூழலிலும் கொள்கைப்பிடிபோடு செய்பவர்கள் பிராமணர்கள்.

மூன்று தலைமுறையாக டாக்டராக, ஆடிட்டராக, வக்கீலாக இருக்கும் பிராமணர்கள் தங்கள் வருவாயில் பெரும்பகுதியை சத்தம் போடாமல் தானமாகத் தருகின்றார்கள். மருத்துவர்கள் சேவையாகச் செய்கின்றார்கள். காஞ்சி சங்கரமடத்தின் வாயிலாகக் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் அமைத்துச் சேவையை நாட்டுமக்களின் பயன்பாட்டுக்குத் தருகின்றார்கள்.

காஞ்சி சங்கரமடம் தமிழ்நாட்டில் 38 சங்கரா பள்ளிகள் 7 ஓரியண்டல் பள்ளிகள்,
சங்கரா கல்லூரிகள், டீம்டு பல்கலைக்கழகம், சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை, சங்கரா குழந்தைகள் மருத்துவமனை, இந்து மருத்துவமனை, மற்றும் இருபத்து ஐந்துக்கும் மேற்பட்ட சங்கரா மருத்துவமனைகள், சேவை நிறுவனங்கள் என ஜெயேந்திர சரஸ்வதி அவர்களால் தமிழ்நாட்டில் 70% சேவைகளும் 30% இந்தியா முழுவதும் பொதுமக்கள் மேம்பாட்டுக்கு செய்யப்பட்டு வரும் பொதுநலத்திட்டங்களில் பெரும்பங்களிப்பு பிரமணர்களால்
பணமாக,உழைப்பு, சேவை தானமாக எனப் பல்லாண்டுகளாகத் தரப்பட்டுவருகிறது.

காஞ்சி சங்கரமடம் வாயிலாக நடக்கும் பல்வேறு கல்வி, மருத்துவ, இந்துமத மற்றும் பொதுப்பணிச் சேவைகள் முழு லிஸ்ட் இங்கே

தமிழகத்தின் எந்த ஏமாற்றும் பகுத்தறிவு இயக்கங்களோ, சுயமரியாதைப் பாட்டாளிக் கட்சிகளோ தமிழக மக்களுக்குச் செய்யாத கல்வி, மருத்துவ, துயர்தீர்க்கும் பொதுச் சேவைகளில் காஞ்சி சங்கரமடம் மிக அதிகமாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு மிக அமைதியாக இயங்கிவருவது!

தமிழகத்தின் வேறு எந்த சைவத் திருமுறை மடங்கள், மேல்மருவத்தூர் மடங்கள் இவ்வளவு பரவலாக மக்களுக்குத் தேவைப்படும் சேவைகளை விடவும் பலமடங்கு அதிகமானது.

இதர பல்வேறு தரப்பு மக்களோடு இணைந்து பிராமணர்களும் சின்மயா மிஷன் வாயிலாகவும் பெரும் அளவில் 75 சின்மயா கல்வி நிலையங்கள் வாயிலாக கல்வி, மருத்துவ, மக்கள் துயர்துடைக்கும் சேவை செய்வதில் பெரும் பங்கு ஆற்றுகிறார்கள். இந்தியாவில் மாநில வாரியாக அமைந்த சின்மயா பள்ளிகள் லிஸ்ட் இங்கே

காஞ்சி சங்கரமடத்தின் பொதுமக்கள் கல்வி & மருத்துவச் சேவை அமைப்புக்கள்

காஞ்சி சங்கரமடத்தின் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகம்

S.No Name of the Institution Principal Objectives
1 Sri. Chandrasekarendra Saraswati Vishwa Mahavidyalaya, Tamil Nadu.
Deemed University / Education

2 Sri. Sankara Samskruta Vaidika Samskruti Patashala, Kancheepuram.
Women Education
3 Sri. Sankara Smartha, Samskruta Patashala, Bangalore .
Education
4 Sri. Jayendra Saraswati Higher Secondary School, Tamil Nadu
Education
5 Kanchi Sankara Educational Health Trust, Secunderabad
Education
6 Kanchi Kamakoti Paramacharya Centenary Bhavan
Computer Education
7 Sri Sankara Senior Secondary School, Chennai
1st Sankara School CBSE School

8 Sri Sankara Vidyalaya Higher Secondary School, Chennai
Education
9 Sri Sankara Vidyalaya Metriculation Higher Secondary School, Chennai Education
10 Sri Sankara Metriculation Higher Secondary School, Chennai
Education / Branch

237 Sri Sankara Vidyalaya, Perungudi

238 Sri Sankara Vidyalaya, Raja Annamalaipuram

239 Sri Sankara Vidyalaya, Kizhkattalai

240 Sri Sankara Vidyalaya, Keelambakkam

241 Sri Sankara Vidyalaya, Sholinganallur

242 Sri Sankara Vidyalaya, Raja Kizhpakkam

243 Sri Sankara Vidyalaya, Oorapakkam

244 Jaya Jaya Sankara International School, Nazarethpet

245 Sri Sankara Vidyalaya, M.G. Road, Pondicherry

246 Sri Sankara Vidyalaya, Ranga Pillai Street, Pondicherry

247 Sri Sankara Vidyalaya, ECR, Pondicherry

248 Sri Sankara Ashramam, Villiyannur, Pondicherry

249 Sri Jayendra Saraswati Metric School, Vizhupuram

250 Sri Kanchi Sankara Vidyalaya, Orikkai

251 D. S. S. Middle School, Walajapet

252 Sri Sankara Vidyalaya, Panjupettai

253 Dhandapani Oriental School, Kancheepuram

254 Sri Sankara Oriental School, Vizhupuram

255 Sri Sankara Oriental School, Thanjavur

256 Sri Sankara Oriental School, Kumbakonam.

257 Sri Sankara Oriental School, Chidambaram

258 Sri Jayendra Saraswati Metric School, Kalavai

259 Sri Kanchi Sankara Public School, Vellore

260 Sri Kanchi Sankara Vidyalaya, Chengurichi, Ulundurpettai

261 Sri Kanchi Sankara Vidyalaya, Murukkampallam, Krishnagiri

262 Sri Kanchi Sankara Vidyalaya, Vellimalai, Kaladaikuruchi

263 Sri Kanchi Satikara Vidyalaya, Thinniyam, Lalgudi, Trichy

264 Sri Kanchi Sankara Vidyalaya,, Kambarasampettai, Trichy

265 Sri Kanchi Sankara Vidyalaya.,Nangavaram, Karur

266 Sri Kanchi Sankara Vidyalaya, Tiruvanaikaval, Trichy

267 Sri Kanchi Sankara Vidyalaya, Tuvakkudimalai, Trichy

268 Sri Kamakoti Vidyalaya, Trichy

269 Sri Jayendra Metric School, Trichy

270 Deshiya High School, Trichy

271 ER High School, Trichy

272 Sri Kanchi Sankara Vidyalaya, Pazamarneri, Tirukattupalli

273 Sri Kanchi Sankara Vidyalaya, Kandamangalam, Tirukattupalli

274 Sri Kanchi Sankara Vidyalaya, Sivaramapuram, Kuttralam

275 Sri Kanchi Sankara Vidyalaya, Orathur, Needamangalmn

276 Sri Kanchi Sankara Vidyalaya, Vettaru Palam, Kokadacherry

277 Sri Kanchi Sankara Vidyalaya, Pulivalam, Tiruvarur

278 Sri Kanchi Sankara Vidyalaya, Mayiladuthurai

279 Meyyappa Valliammai Sri Kanchi Sankara Vidyalaya ,Valayapatti, Ponnamaravadi

280 Sri Sankara Vidayalaya, Kodaikanal

281 Sri Kanchi Sankara Vidyalaya, Vellipattinam, Ramanathapuram.

282 Sri Kanchi Sankara Vidyalaya, Thirthathandavadhanam, Thondi

283 Sri Kanchi Sankara Vidyalaya, Rameshwaram

284 Sri Kanchi Sankara Bhagawati Vidyalaya, Kummidikottai, Thisayanvilai

285 Sri Kanchi Sankara Parvati Vidyalaya, Pichuvilai, Udankudi

286 Sri Sankara Academy, Tiruchendur

287 Sri Jayendra Saraswati Metric School, Sankara Nagar, Tirunelveli

288 Sri Kamakshi Middle School, Tootukudi,

289 Sri Kanchi Sankara Vidyalaya, Krishnapuram, Tirunelveli

290 Sri Kanchi Sankara Vidyalaya, Kizh Tirumalapuram, Valliyur

291 Sri Kanchi Sankara Vidyalaya, Unnankulam, Kanyakumari

292 Sri Kanchi Sankara Vidyalaya, Sengottai

293 Sri Kanchi Sankara Vidyalaya, Brahmadesam, Ambasamudram

294 Sri Sankara Vidyalaya, Palayamkottai

295 Sri Jayendra Saraswati Metric School,Surandai, Nellai

296 Sri Kanchi Sankara Vidyalaya, Nattam, Dindigul

297 Sri Jayendra Saraswati Vidyalaya, Coimbatore

298 Sri Sankara School, Brahmagiri, Mysore

299 Sri Sankara Vidyalaya, Bangalore

300 Sri Kanchi Public School, Kalady, Kerala

301 Sri Kanchi Sankara Vidyalaya, Thadepallikudam, Andhra Pradesh

302 Sri Kanchi Sankara Vidyalaya, Nindhira, Chittoor, Andhra Pradesh

303 Sri Sankara School, Bhopal, Madhya Pradesh

304 Sri Sankara School, Bhilai, Chattisgarh

305 Sri Sankara School, Shahjahanpur, Uttar Pradesh

306 Sri Sankara School, Haridwar, Uttar Pradesh

307 Sri Sankara School, Kurukshetram, Himachal Pradesh

308 Kanchi Kamakoti Cultural Centre, Gota Chowkdi, Ahmedabad, Gujarat

309 Sri Jayendra Saraswati Arts & Science College, Kommadi Kottai, Tuticorin

310 Sri Jayendra Saraswati High School & Womens College, Coimbatore

காஞ்சி சங்கரமடத்தின் மருத்துவமனைகள் & மருத்துவ மையங்கள்

S.No Name of the Institution Principal Objectives
27 Kanchi Kamakoti Sankara Hospital - Sri Jayendra Saraswati Institute of Medical Sciences, Chennai

28 Kanchi Kamakoti Childs Trust Hospital , Chennai Health Care-Paediatric
29 Sri Jayendra Saraswati Ayurvedic College & Hospital, Tamil Nadu
Health Care

30 Sri Sankara Dev Netralaya, Guwahati Health Care
31 Sri Kanchi Kamakoti Medical Trust, Coimbatore Health Care
32 Hindu Mission Hospital , Tamil Nadu Health Care
33 Sankara Academy Hospital , Chennai Health Care
34 The Voluntary Health Education & Rural Development Society (VHERDS) Chennai
Health Care & Social Work

35 Sri Mata Trust ,Chennai Poor Cancer Patients -Shelter & Food

36 Sankara Arogya & Seva Trust (Sasta), Tamil Nadu Health Care

37 Sankara Charitable Trust, Uttar Pradesh Health Care

38 Sri Sankara Health Centre, Chennai Health Care

39 Hindu Mission Health Services, Chennai Health Care

40 Sankara Rural Eye Hospital , Tamil Nadu Health Care

41 Sankara Eye Hospital , Andhra Pradesh Health Care

42 Paramacharya Chandrasekhara Saraswati Ayurvedic Kendra, Maharashtra Health Careகாஞ்சி சங்கர மடத்தின் மருத்துவச் சேவை அமைப்புகள் லிஸ்ட்:

311 Sri Jayendra Medical Centre, Vizhipuram

312 Sri Jayendra Homeo Clinic, Pudukottai

313 Sri Sankara Medical Centre-
i) Ratna Girishwarar, Chennai
ii) Thiruvanmiyur, Chennai
iii) Irulneeki, Tiruvarur District, Tamil Nadu

314 Sankara Medical Centre, Madhubani, Bihar

315 Sankara Medical Centre, Bongaigaon, Assam

316 Voluntary Health Centre, Vellore

317 B.P. Jain Medical Centre, Pammal

318 Sri Venkateswara Medical Centre, Berhampur, Orissa

319 Sri Jeyandra Nursing Home,Sorakkalpat, Cuddalore-607001

320 The Kumbakonam Hindu Mission Hospital, Kumbakonam

321 Sri Kamakshi Educational Health & Medical Trust, Thanjavur

322 Hindu Mission Hospital, Trichy

323 Hindu Mission Hospital, Madurai

324 Hindu Mission Hospital,Tuticorin

325 Hindu Mission Hospital,Tirunelveli

326 Hindu Mission Hospital,Brahmadesam

327 B.P. Jain Medical Centre, Pammal

328 Hindu Mission Hospital, Sundarapandiapuram

329 Hindu Mission Hospital, Kallaikottai

330 Sree Kanchi Sankaracharya, Free Clinic Society, Calicut.

331 Hindu Mission Hospital, Mysore

332 Hindu Mission Hospital, Tirunelveli

333 Sri Kanchi Kamakoti Medical Trust and Kanchi Sankara Foundation, Chennai

334 Hindu Mission Hospital, Chennai

335 The Voluntary Health Centre, Vellore

336 Suraj Hospitals, Chetpet

337 Sri Kanchi Kamakoti Medical Trust, Chennai

338 Sree Sankara Free Medical Centre, Trivandrum

காஞ்சி சங்கரமடத்தின் பொதுமக்கள் சேவை அமைப்புகள் Social Work

S.No Name of the Institution Principal Objectives
145 Sri Sankara Kendra Adambakkam, Chennai
Social Work

146 Sri Kanchi Kamakoti Peeta Vysya Bharata Kala Nidhi Saddas Samajam, Chennai
Community Hall

147 Sri Kanchi Kamakoti Sankara Math, Andhra Pradesh
Kalyana Mantapam

148 Janakalyan Madurai, Tamil Nadu
Social Work

149 Sri Kanchi Kamakoti Peetam, Chennai
Social Work

150 Sri Chandrasekarendra Saraswati Bhakta Jana Sabha Trust, Chennai
Social Work

151 Sri Kamakoti Kamakshi Charities, Tamil Nadu
Social Work / Branch

152 Janakalyan - Central Office, Chennai
Social Work

153 Sri Kamakshi Chhatram,Tamil Nadu
Hall

காஞ்சி சங்கர மடத்தின் தலைவர்களில் ஒருவரான ஜெயேந்திர சரஸ்வதி அவர்களால் தனது காலத்தில் எடுத்துவந்த தனிப்பெரும் சாதனை என்பது தமிழகம், இந்தியாவெங்கும் சங்கரா கல்விக்கூடங்கள் மற்றும் சங்கரா மருத்துவமனைகள் அமைத்தது.

காஞ்சி சங்கரமடம் ஒன்றின் மூலமாக பெருவாரியான பிராமணர்களது சேவை சமூகத்தில் இருக்கும் உதவிகள் தேவைப்படுவோர்க்கு தினமும் செய்யப்படுகிறது மிக மிக அமைதியாக! எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல்.

45 சங்கராபள்ளிக்கூடங்கள், சங்கரா கல்லூரிகள், சங்கரா டீம்டு யூனிவர்சிடி மற்றும் 25 சங்கரா மருத்துவமனைகள் கடந்த 20-30 ஆண்டுகளில் சாதிக்கப்பட்டவை! வேதப்படி வாழ்வியல் உண்மையில் பிராமணீயம் என்பது தன்னலமற்ற சேவையே! தமிழ்நாட்டில் அது உண்மையாகவே நடந்துவருகிறது!

கொள்ளைக்காரர்களும், திருடர்களும் அரசு அதிகாரத்தில் இருந்து மக்கள் நலத்திட்ட நிதியைத் திருடுவதில் ஐம்பதாண்டுகள் நிறைவுக்குப் பொன்விழா எடுக்கும் கொள்கையைக்கொண்ட தன்னலமற்ற தலைவனின் தலைமையில் அமைந்த அரசு அல்லவா நம் பகுத்தறிவுச் சுயமரியாதை பேணும் தமிழ்நாட்டு அரசு!

நல்லதைத் தெரிந்து தெரிவு செய்வோம்! இனியாவது வளமோடு வாழ்வோம்-இணக்கமாக!

அன்புடன்,

ஹரிஹரன்

Wednesday, April 04, 2007

(142) இடஒதுக்கீடு VS தோப்பனார்...அத்திம்பேர் தரும் விழிப்புணர்ச்சி

இடஒதுக்கீடு குறித்த செந்தழல்ரவியின் இந்தப்பதிவில் குழலி இட்ட பின்னூட்டத்தில் உண்மை கொஞ்சம் வெளிப்பட்ட பகுதி கீழே:

"முற்படுத்தப்பட்ட சாதி மாணவர்களுக்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கும் எங்கே தெரியுமா இடைவெளி? அவர்களுக்கு கிடைக்கும் சூழல், அப்பா, அம்மா, அக்கா, அத்திம்பேர் என அத்தனை படித்தவர்களின் வழிநடத்துதல் இருக்கும், ஆனால் எத்தனை பணமிருந்தாலும் இவைகள் மற்றவர்களுக்கு கிடைப்பதில்லை, கண்கூடாக நீயே கூட பார்த்திருக்கலாம், கொஞ்சம் பணம் உள்ள தொழில் செய்யும் குடும்பங்களிலே படிக்கறதை விட்டுட்டு கடையில் உக்கார் என்று சொல்வதை, இதற்கு காரணம் படிப்பை பற்றிய ஒரு விழிப்புணர்ச்சி இல்லாமை, அல்ட்டிமேட்டாக இதற்கு பின்னுள்ள காரணத்தை நோண்டினால் அது நிறுத்துமிடம் சாதியாகவே இருக்கின்றது. மேலும் பணம், வருமானம் சொத்து இவைகள் நிலையானதில்லை, எந்த நேரத்தில் பணம் சொத்துகளை இழந்து அடுத்த வேளை சோற்றுக்கு சிங்கியடிக்கலாம், அப்போது க்ரீமிலேயராக இருந்தவன் இப்போது பாவர்ட்டி லைனுக்கு கீழ் வரலாம்."


குழலியின் பின்னூட்டம் சொல்லும் இந்த உண்மையை அலசலாம்:

//முற்படுத்தப்பட்ட சாதி மாணவர்களுக்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கும் எங்கே தெரியுமா இடைவெளி? அவர்களுக்கு கிடைக்கும் சூழல், அப்பா, அம்மா, அக்கா, அத்திம்பேர் என அத்தனை படித்தவர்களின் வழிநடத்துதல் இருக்கும், ஆனால் எத்தனை பணமிருந்தாலும் இவைகள் மற்றவர்களுக்கு கிடைப்பதில்லை//

அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டுதல் தர வாழ்க்கையை நெறியோடு வாழ்ந்திருத்தல் அவசியம். நெறி என்பது எந்தப் பிராயத்தில் எதைச்செய்யவேண்டும் என்கிற வாழ்வியல் ஒழுக்கம்.

குடி, கூத்து, கும்மாளம், என்பவைகளில் தன் பெரும்பகுதி வாழ்வைச் செலவிட்டு விட்டுப் பின்னாளில் தோப்பனார்கள்.. அத்திம்பேர்கள் மாதிரி வழிகாட்ட வழிவகை இல்லாமல் இருக்கிறதே என்பதான எண்ணம் அழுக்காறை மட்டுமே தரவல்லது.

ஏழ்மையால் குடும்பம் சரிவர உண்ண உணவில்லை எனும் இயலாமையிலும் திங்கள் கிழமை பட்டினிக்கு சோமவார/பிரதோஷ சிவனுக்கு விரதம், செவ்வாய் வெள்ளிக்கிழமை பட்டினிக்கு சரஸ்வதி, லஷ்மி என்று அம்பாள் விரதம், வியாழக்கிழமைக்கு ராகவேந்திரர், தஷிணாமூர்த்திக்கு விரதம் சனிக்கிழமை பெருமாளுக்கு விரதம் என்று இயலாமையால் விளைந்த பட்டினிக்கொடுமையை தெய்வீகத்துடன் இணைத்து எதிர்கொள்ளும் மனோவலிமையை பிராமண அப்பா, அம்மா, அத்திம்பேர் தாங்கள் முன்னுதாரணமாக இருந்து வாழ்ந்து வழிகாட்டுகிறார்கள். லீடர்ஷிப்/Guidance பை எக்ஸாம்பிள் என்று வாழ்ந்து வாழ்வில் பிச்சைப்புகினும் கற்கை நன்றே என்பது முற்படுத்தப்பட்ட பிராமணசாதி மாணவர்களுக்கு அவர்கள் பெற்றோரால் சொல்லித்தரப்படுவது!

உடலைப் போற்றி வாழ்வதாக பகுத்தறிவு பேசிவிட்டு, தெய்வத்தை வழிபட்டு நெறிப்படுத்தி மனவலிமை தரும் சம்பிரதாயங்களை இழித்துரைத்து, வீசி மிதித்து எறிந்துவிட்டு ஐம்பதுகளில் தன் அடுத்ததலைமுறையை வழிகாட்ட தான் பின்பற்றிவிடாத சிறந்த நெறிகள் எங்கே திடீர் என்று வரப்போகிறது உதவிக்கு!

மூன்று தலைமுறையாக இருக்கும் பிராமண டாக்டரைப்பார்,ஆடிட்டரைப்பார், வக்கீலைப்பார் எனும் கணக்கெடுப்பு கதைக்கு உதவாது!

குடி, கும்மாளம், கூத்து, சூதாட்டம் என்று வாழ்ந்த வாழ்க்கையில் தகறாறு முற்றி கொலை,வெட்டு, குத்து என்று மிருகமாக உணர்வுகளைக் காட்டிவிட்டுப் பின்பு போலீஸ் ஸ்டேஷன், ஜெயிலில் அடைபட்டு எத்தனை பிராமண அப்பா, சித்தப்பா,மாமா, அத்திம்பேர்கள் இருக்கிறார்கள் என்று கணக்கெடுப்பு எடுத்தால் வழிகாட்டுதல் தர தோப்பனார் அத்திம்பேர்களுக்கு உதவுவது எது என்பது புலப்படும் ?

குடி, கூத்து, சூதாட்டம் , கும்மாளமாக தன் உடலுக்காகவும், உணர்வுகளுக்குமாக வாழ்வை அர்ப்பணித்து அடுத்த தலைமுறைகளுக்கு வழிகாட்ட இயலாமல் முடக்கிக்கொள்வது யார்?

உடல் சுகம், உணர்வுகளுக்கு அடிமையாவதிலிருந்து விடுதலை பெற ஒருவனுக்கு அறிவு எங்கிருந்து கிட்டும்? சிறப்பான வாழ்க்கை வாழ்ந்து அனுபவங்களை வாழ்வியல் தத்துவங்களாக, நெறிகளாகத் தொகுத்துவைத்த முன்னோர்களின் , ரிஷிகளின், முனிவர்களின், சித்தர்களின் வாக்குகளில் இருக்கிறது.

குடும்பத்தில் மேன்மையான எண்ணங்கள் அனைவரிடமும் மேலோங்க நன்னெறி ஒழுகி வாழ்க்கை வாழ்வது இன்றியமையாதது!

ஆசை உந்தித்தள்ள, உணர்வுகள் பொங்க அரிவாளைத்தூக்கி அப்பன் வழிச் சொந்தங்களை சொத்துக்காக வெட்டிவீசி தன் குடும்பத்தை, தன் வாரிசுகளை அவர்கள் சிறப்பான வாழ்க்கையை சின்னாபின்னப்படுத்துவது யார்?

பழிவாங்கும் நடவடிக்கையாக அடுத்துத் தொடர்ந்து அரிவாள் எடுத்து வெட்டிக்கொண்டு பொருதி, பொருந்தாத வாழ்வை வாழ்வது யார்? உணர்வுகளை மேம்படுத்தாமல் பிற்பட்டு, மிகவும் பிற்படுத்தப்பட்டு, தாழ்த்தப்பட்ட சிந்தனைகளைச் சிந்தித்து வாழ்க்கையில் தான் மேலே ஏறாமல் இருப்பது என்பது முற்றிலும் தனிநபர் - குடும்பத்தின் மனம்-சிந்தனை சம்பந்தப்பட்டது! குடும்பச்சூழலை உருவாக்கிக்கொள்வது ஒவ்வொரு தனிநபருமாகத்தானே!

தோப்பனார், அத்திம்பேர்கள் அறிவால் பொருதுவதால் தாங்கள் மோசடி செய்யப்பட்டாலும் பகவான் உன்னை தண்டிப்பார் என்று தன்னைத் தேற்றிக்கொண்டு அடுத்ததாக் காத்திருக்கும் தினசரி வாழ்வுப் பிரச்சினையை பார்க்கக் கிளம்பிச்செல்ல எது உதவிக்கு வருகிறது தோப்பனார், அத்திம்பேர் வகையறாக்களுக்கு??

வேதாந்தம், உபநிடம் சொல்லும் தத்துவங்களை மேற்கோள் காட்டி தினசரி வாழ்வை உணர்வுகள் கொந்தளித்து தவற்றைச் செய்து சிக்கலில் மாட்டாமல் இருக்க முற்பட்ட சாதி அப்பா, அம்மா, அத்திம்பேர்கள் மாணவர்களுக்குத் தாம் வாழ்ந்து வழிகாட்டுகிறார்கள்.

வழிகாட்ட நல்லவழியில் வாழவேண்டும். நல்லவழியை அறிய மனம் திறந்த நிலையில் இருக்கவேண்டும். தன் அப்பன், பாட்டன் நல்ல உதாரணம் இல்லை எனில் அருகாமையில் நன்னெறியில் வாழ்பவர்களது துணையோடு வழிகண்டு வாழ வேண்டும்!

எத்தனை துரோகம் செய்த உறவினராக இருந்தாலும் தோப்பனார், அத்திம்பேர்கள் நீ துரோகம் செய்த அவனைப் பழிவாங்க வேண்டும் என்று வெறுப்பு ஊட்டி வளர்ப்பதில்லை! தெய்வ சங்கல்பம்! விடு அவனை! நினைக்காதே அதை மறந்துட்டு நாரயணன் பேரைச் சொன்னாலாவது புண்ணியம் என்று வெறுப்பு வழியில் அடுத்த தலைமுறை சக்தியை விரயம் செய்து விட்டு அல்லல் படாமல் இருக்க தெய்வத்தைத் துணைக்குக் கொண்டு தோப்பனார், அத்திம்பேர்கள் வழிகாட்டுகிறார்கள்!

வெறுப்பு நொடியில் பல்கிப்பெருகி சக்தியை வீண்விரயமாக்கி ஆளைக்குழியில் தள்ளும்!

சேவல்சண்டையில் சேவல்காலில் பங்காளி, எதிரியின் சேவலைக் வெல்ல கத்தியைப் பழுக்கக் காய்ச்சி விஷத்திராவகத்தில் முக்கி, மறுபடி பழுக்கக்காய்ச்சி விஷத்தில் முக்கி என்று கத்தியே விஷம் ஆகும்படி விஷத்தை ஏற்றி எதிரியின் சேவலை வெல்லத் தன் சேவலை மூஞ்சிக்கு மேல் தூக்கிக்கொஞ்சும்போது விஷக்கத்தி தன்மீதே கீறி மாண்டு போவதற்கு இணையானதான "பார்ப்பன எதிர்ப்பு" விஷத்தை ஏற்றிக்கொண்டு திரிந்தால் பார்ப்பன எதிர்ப்பு எனும் விஷத்தை மட்டுமே விஷயமாக, விஷமமாகச் சொல்லி வழிகாட்டினால் சமூக முன்னேற்றம் ஆதாய பிழைப்புவாத அரசியலால் பிற்படுத்தப்பட்ட , மிகவும் பிற்படுத்திக்கொண்டுவிட்ட சமூகத்தினர்க்கு முறையான வழிகாட்டுதல் கானல் நீராகவே அமையும்!

வீட்டிலே அப்பா, அம்மா, அத்திம்பேர் வழிகாட்டல் உருப்படியாக அமைய முதலில் தனிமனித ஒழுக்கம் வேண்டும்! அர்ப்பணிப்பு உணர்வு வேண்டும்! தியாகம் செய்யும் மனம் வேண்டும்!

இன்று நான் மேம்பட்ட வாழ்வு வாழ்வதற்கு எனது தந்தையின் தியாகம், அர்ப்பணிப்புடன் கூடிய வழிகாட்டல் பின்புலமாக இருக்கிறது! என் தந்தை குடிக்காத சாராயம், ஆடாத சூதாட்டம், அதில் இழக்காத பொருள், மன நிம்மதி,
இறைவனிடத்தில் சமர்ப்பித்துவிட்டு அந்த சமர்ப்பண சிந்தனை தந்த மனோவலிமையால் சிரமங்களை எதிர்கொண்டது, வெற்றி பெற்றது என அனைத்தும் நல்ல நெறிகளைப் பின்பற்றி வாழ்ந்த வாழ்வியல் தந்த வழிகாட்டுதல் தந்த பரிசு!//இதற்கு காரணம் படிப்பை பற்றிய ஒரு விழிப்புணர்ச்சி இல்லாமை, //

விழிப்புணர்ச்சிக்கு விழிகள் திறந்திருக்க்க வேண்டும். உணர்ச்சிகள் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டியது அவசியம். டாஸ்மாக்கில் கட்டிங், குவார்ட்டர் என்று பொருளை விரயம் செய்து எதிர்காலம் வீணாக்குவது ஏன்? டாஸ்மாக்கில் வரிசையில் நிற்பவர்களில் யார் பெரும்பான்மையாக இருக்கின்றார்கள்? தோப்பனார், அத்திம்பேர் வகையறாக்களா?

டாஸ்மாக் மூடினால் முள்காட்டில், முந்திரிக்காட்டில் ஊறல் போட்டு சரக்க்கு காய்ச்சுவது யார்? தினம் சரக்கு உள்ளே சென்றே ஆகவேண்டிய தாமச மனோநிலையில் இருந்து உழல்வது யார்?

கல்லூரிக்குப் படிக்கையில் தினம் அருகாமை திரையரங்கில் அஞ்சரைக்குள்ளே வண்டி, பிரமீளா, பாலன் கே நாயர் நடித்த பலான படங்கள் பார்த்து உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைக்காமல், கிங்பிஷர், ஹேவர்ட்ஸ்,கல்யாணி, கோல்டன் ஈகிள் பீர் அடிப்பது எனும் முனைப்பு முக்கியமாகக் காட்டுவது யார்? தோப்பனார், அத்திம்பேர் வகையறாக்களா?

வசதி இல்லை என்றாலும் தந்தையானவன் தினமும் தீர்த்தவாரியிலேயே இருப்பது, வசதி இருந்தால் தந்தைஒருபக்கம், மகன் இன்னொருபக்கம், அல்லது தந்தை மகன், மாமா-மருமகன் என்று தீர்த்தவாரி, கும்மாளம் , சூதாட்டம், கூத்து என்று உடலைக் கொண்டாடுவது மட்டுமே வாழ்க்கை என்று தொலைநோக்கைத் தொலைத்து வாழ்வது விழிப்புணர்ச்சியைத் தருமா?

தோப்பனார், அத்திம்பேர் வகையறாக்கள் இம்மாதிரியான தொலைநோக்குடனா இருக்கின்றார்கள்? உடலைக்கொண்டாடுகின்றார்கள். அத்வைதம் சொல்லி கடவுள் உனக்கு உள்ளே இருக்கின்றார் என்று உடலை உருப்படியான தெய்வீகமான, நல்ல நெறிமிகுந்த சூழலில் இருப்பதை பேணுவதன் மூலம், தம் உள்ளத்தை ஒருமுகப்படுத்தி தொலைநோக்கை வாழ்வில் போதிக்கின்றனர்!

நாட்டிலிருக்கும் அ ஆ இ தலைவன் , தலைவி வாழ்க, என்று குவார்ட்டர்,பிரியாணி பேட்டாக்காசுக்கு வேண்டி முப்பெரும், ஐம்பெரும் விழா பகுத்தறிவு, சுயமரியாதை அரசியல் கூட்டங்களுக்கு சென்று வாழ்க்கையைத் தேடுகின்றார்களா தோப்பனார், அத்திம்பேர் வகையறாக்கள்??

ஊரில் திரையரங்குகளில் ஈஉ ஊ சினிமா நடிக நடிகையர்க்கு தற்கொலைப்படை அமைத்துத் தோரணம், கட் அவுட்க்குப் பாலாபிஷேகம் செய்த படி வாழ்க்கையை வாழ்கின்றார்களா அத்திம்பேர், தோப்பனார் வகையறாக்கள்

//மேலும் பணம், வருமானம் சொத்து இவைகள் நிலையானதில்லை,எந்த நேரத்தில் பணம் சொத்துகளை இழந்து அடுத்த வேளை சோற்றுக்கு சிங்கியடிக்கலாம், அப்போது க்ரீமிலேயராக இருந்தவன் இப்போது பாவர்ட்டி லைனுக்கு கீழ் வரலாம்."//

அடடே! குழலி ! உங்களையே அறியாமல் கீதை / உபநிடம் சொல்லும் நித்ய-அநித்ய விவேகம் சொல்லும் நிலையானது எது? நிலையற்றது எது? உண்மையைச் சொல்லும் ஞானமே நிலையானது எனும் உயர்ந்த தத்துவத்தை உணர்ந்த வார்த்தைகள் வந்து விழுகின்றன!

அன்புடன்,

ஹரிஹரன்

Tuesday, April 03, 2007

(141) இடஒதுக்கீடு குறித்து விப்ரோதலைவர் அஜீம் ப்ரேம்ஜி கருத்து

ஆண்டுக்கு 2 பில்லியன் டாலர் (1பில்லியன்=1000மில்லியன்; 1மில்லியன்= 10லட்சம்; 1 அமெரிக்க டாலர் = 44 இந்தியரூபாய் 2x1000 x 1000000 x 44 = 88,000,000,000 rupees)மென்பொருள் வியாபாரம் நடத்தும் இந்தியாவின் பிரம்மாண்டமான மென்பொருள் நிறுவன்ம் விப்ரோ!

மென்பொருள் தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் இந்திய நிறுவனமான விப்ரோ நிறுவனத்தின் தலைவர் ஆஜிம் ப்ரேம்ஜியின் இடஒதுக்கீடு குறித்த கருத்துக்கள்.

குறிப்பு: ஆஜிம் ப்ரேம்ஜி ஒரு இசுலாமியர்! பார்ப்பனர் அல்ல!

திரு. ஆஜிம் ப்ரேம்ஜியின் இடஒதுக்கீட்டு குறித்த கருத்தின் ஆங்கிலமூலத்தின் கீழே தமிழாக்கம் செய்து தந்திருக்கிறேன். படித்து ரசித்துச் சிந்தியுங்கள்!

Wipro chairman Mr. Azim Premji's comment on reservation:

I think we should have job reservations in all the fields.
I completely support the PM and all the politicians for promoting this.

வேலைக்கான இட ஒதுக்கீடு என்பது அனைத்துத் துறைகளிலும் வரவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். இடஒதுக்கீட்டை முன்னெடுத்துச் செல்லும் பிரதமரையும் இதர அரசியல்வாதிகளையும் முழுமையாக நான் ஆதரிக்கிறேன்!

Let's start the reservation with our cricket team.
We should have 10 percent reservation for Muslims.
30 percent for OBC, SC/ST like that.

முதலில் இடஒதுக்கீட்டை இந்தியக் கிரிக்கெட் அணியிலிருந்து ஆரம்பிக்கலாம்.
இந்திய கிரிக்கெட் அணியில் 10% இடஒதுக்கீடு இசுலாமியர்க்குத் தரப்படவேண்டும்.
முப்பது சதவீத இடஒதுக்கீடு மிகப்பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர்க்கு இந்திய அணியில் தரப்படவேண்டும் என்பதாக இடஒதுக்கீட்டை அமல்படுத்தலாம்!


Cricket rules should be modified accordingly.
The boundary circle should be reduced for an SC/ST player.

கிரிக்கெட் விளையாட்டின் விதிகளிலும் இடஒதுக்கீட்டுக்கு ஏற்ப மாற்றங்கள் ஏற்படுத்தவேண்டும்.

இடஒதுக்கீட்டில் வரும் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர்க்காக பவுண்டரி வளையத்தின் சுற்றின் அளவைக் குறைக்கவேண்டும்!


The four hit by an OBC player should be
considered as a six and a six hit by an OBC player should be counted as 8 runs.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட விளையாட்டுவீரர் அடிக்கும்:
நான்கு ரன்கள் பவுண்டரி என்பது ஆறு ரன்களுக்கு இணையாகக் கருதப்படவேண்டும்!
ஆறு ரன்கள் சிக்ஸர் என்பது எட்டு ரன்களாக கருதப்படவேண்டும்!


An OBC player scoring 60 runs should be declared as a century.

ஒரு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட விளையாட்டுவீரர் அடிக்கும் அறுபது ரன்கள் என்பது நூறுரன்களாகக் கருதப்பட்டு செஞ்சுரியாக்கப்படவேண்டும்!

We should influence ICC and make rules so that the pace bowlers like
Shoaib Akhtar should not bowl fast balls to our OBC player.

உலக கிரிக்கெட் கவுன்சிலுக்கு நெருக்கடி தந்து இடஒதுக்கீட்டில் வந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட இந்திய விளையாட்டுவீரர்களுக்கு ஷோகைப் அக்தர் போன்ற அதிவேக பந்துவீச்சாளர்கள் பந்துவீசக்கூடாது என்று விதிகளை மாற்றம் செய்ய வேண்டும்!

Bowlers should bowl maximum speed of 80 kilometer per hour to an OBC
player. Any delivery above this speed should be made illegal.

பந்து வீச்சாளர்கள் இடஒதுக்கீட்டில் வந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட இந்திய விளையாட்டுவீரர்களுக்கு உச்சபட்சமாக 80 கி.மீ வேகத்துக்கு மேல் பந்து வீசக்கூடாது! மீறி இடஒதுகீட்டில் வந்த மட்டையாளருக்கு அதி வேகமாக பந்து வீசினால் விதிகளை மீறியதாக அறிவிக்கவேண்டும்!

Also we should have reservation in Olympics.
In the 100 meters race, an OBC Player should be given a gold medal if he runs 80
meters.

இம்மாதிரியே ஒலிம்பிக்கிலும் இந்திய வீரர்கள் இட ஒதுக்கீட்டு முறையிலேயே தேர்ந்தெடுக்கப்படவேண்டும்! ஒலிம்பிக் நூறு மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்கும் இடஒதுக்கீட்டில் வந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட இந்திய விளையாட்டுவீரர்களுக்கு 80 மீட்டர் தூரம் ஓடினாலே தங்கப்பதக்கம் தரவேண்டும்!

Also we should have reservation in pregnancy .. all
SC/ST/OBC Female carry babies for 6 months only

பிள்ளைப்பேறு விஷயத்திலும் இடஒதுக்கீடு அவசியம் வேண்டும்!
இடஒதுக்கீட்டில் வந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட , தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினப் பெண்களுக்கு கர்ப்பம் சுமக்கும் காலம் ஆறுமாதங்கள் என இட ஒதுக்கீட்டுச் சிறப்புச் சலுகை அமல்படுத்தப்படவேண்டும்!


There can be reservation in Government jobs also.
Let's recruit SC/ST and OBC pilots for aircrafts which are carrying the
ministers and politicians (that can really help the country...)

அரசு வேலைகளில் இடஒதுக்கீடுகள் அவசியம் வேண்டும்!
தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ,விமானிகள் மட்டுமே அமைச்சர்கள், அரசியல்வாதிகளை ஏற்றிச்செல்லும் விமானங்களை இயக்கவேண்டும்! (இது இந்திய தேசத்துக்குப் பயன் விளைவிப்பதாக அமையும்..)


Ensure that only SC/ST and OBC doctors do the
operations for the ministers and other politicians.
(Another way of saving the country...)

தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ,டாக்டர்கள் மட்டுமே அமைச்சர்கள், அரசியல்வாதிகளுக்கு இதய அறுவைசிகிச்சை போன்ற சிகிச்சைகள் தரவேண்டும். (இந்திய தேசம் காக்கப்பட இன்னொரு வழி..)

Let's be creative and think of ways and means to guide
INDIA forward...

இந்தியாவை முன்னெடுத்துச்செல்ல ஆக்கபூர்வமான வழிகள் சிந்தித்துக் காண்போம்!

Lets show the world that INDIA is a GREAT country.

உலகுக்குத் தெரியப்படுத்தலாம் இந்தியா மிக மேன்மையான தேசம் என்று!

Let's be proud of being an INDIAN...

இந்தியராய் இருப்பதில் பெருமை கொள்வோம்!

May the good breed of politicians like ARJUN SINGH
long live...

அர்ஜூன் சிங் வகையறாக்களான அரசியல்வாதிகள் நீண்ட ஆயுளோடு வாழட்டும்!!


மிக முக்கியக் குறிப்பு:
விப்ரோ (மென்பொருள்) நிறுவனத்தின் தலைவரான திரு.ஆஜிம் ப்ரேம்ஜி ஒரு இசுலாமியர்! சித்பவன் பார்ப்பனர் அல்ல! :-)))அன்புடன்,

ஹரிஹரன்

Monday, April 02, 2007

(140) இட ஒதுக்கீடு Vs மிகப்பிற்படுத்தப்பட்டவர் நிறைந்த தமிழகமும்

ஐஐடி, ஐஐஎம், என்.ஐடி பொன்ற உயர் கல்வி நிறுவனங்களில் 27% பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்கு நேர்மையான விளக்கம் இல்லை.

ஆனால் தமிழகத்தில் இரவோடு இரவாகக் கருணாநிதியால் பொது பந்த் நடத்தப்படுகிறது! சமூக நீதியின் குரல் வளைப்பவர்கள் சமூகநீதிக்காவலர்களாக வேடம் போட போட்டா போட்டி போடுகிறார்கள்!

இட ஒதுக்கீடு ஓட்டுப்பிச்சை கேரண்டி தரும் அட்சய பாத்திரம் என்பதாலேயே இந்தப் போட்டா போட்டி! பகுத்தறிவு, சுயமரியாதை வெட்டிப்பேச்சு வீணர்களின் ஓலம்! ஆளுக்கொரு கட்சி! கட்சிக்கொரு தொலைக்காட்சி சேனல்!

சமூக நீதி எப்படி பேணப்படுகிறது? நாற்பதாண்டுகள் திரா"விட" ஆட்சியில் 69% இட ஒதுக்கீட்டில் சமூக நீதி நிதர்சனமான நிஜம் தமிழகத்தில் எப்படி இருக்கிறது என்று காண்போம்!

சமூக நீதியின் தலைநகரம் சென்னை. சென்னையின் இதயம் அண்ணாசாலையில் எதையும் தாங்கும் இதயம் கொண்ட அண்ணாதுரையின் சிலை அருகே சாக்கடை அடைப்புநீக்க சாராயம் குடித்து மலம், நச்சு அமிலங்கள், வேதிப்பொருட்கள், விஷ வாயு என நிறைந்த சாக்கடைக்குழிக்குள் சாராயம் போதையோடு கயிறு கட்டி இறங்கும் துப்புறவுத் தொழிலாளார்களைத் தினமும் பகுத்தறிவு, சுயமரியாதைத் தலைநகரமான சென்னையில் தினமும் பல தரம் பார்க்கலாம்.

இந்த நவீன யுகத்திலும், போர்டு, ஹூண்டாய், அசோக்லேலண்ட், ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ், ராணுவக் கவசவண்டி தயாரிப்புத் தொழிற்ச்சாலை என பெரும் இயந்திரமாக்கப்பட்ட கனரகத் தொழிற்சாலைகள் நிறைந்த தமிழகத் தலைநகரத்தில் இன்னமும் மலம் அள்ள, சாக்கடைத் தூர்வாங்க, குப்பைத் துப்புறவுக்கு இயந்திரம் ஏன் பயன்படுத்தப்படாமல் இம்மனிதர்கள் மலக்குழியில் முழுகி அடைப்பு எடுக்க வேண்டிய நிலை?

சுயமரியாதைப், பகுத்தறிவைத் தலைமையாகக் கொண்ட தமிழகத்திலும் அதன் தலைநகரமான சென்னையிலும் சமுகநீதிகாக்கும் 69% இட ஒதுக்கீடு ஏன் இன்னும் இந்த துப்புறவுத் தொழிலாளிகளை கல்வியில், வாழ்க்கைத்தரத்தில் மேம்படுத்தவில்லை?

தென்சென்னை, வடசென்னை மீனவக் குப்பங்கள் அயோத்தியா குப்பம் "வீரமணி" போன்ற தாதாக்களை உருவாக்குகிற அவல இடமாகத் தொடர்கிறதே அன்றி கல்வி கற்று மேம்பட்ட விவேகமணிகளை உருவாக்கிட தமிழகத்தின் 69% சமூகநீதி காக்கும் இடஒதுக்கீடு ஏன் பயன்படவில்லை?

சென்னையின் புதுப்பேட்டையும், சேத்துப்பட்டும் மாநகரப்பேருந்துகளில் பயணிபோரிடமும், மின் தொடர் வண்டிகளில் பிரயாணிக்கும் பயணிகளிடம் பிளேடு போட்டு பிக்பாக்கெட்டு அடிக்கும் தொழில் நுட்பக்கல்லூரி நடக்கும் இடமாக இருக்கிறது. தமிழகத்தின் சமூகநீதி காக்கும் 69% இட ஒதுக்கீடு தமிழகமெங்கும் நீக்கமறக்காணப்படும் இந்தப் பிக்பாக்கெட்டுகளை ஏன் கல்வி ஒளி தந்து சீர்படுத்த வில்லை?

சென்னையின் புதுப்பேட்டையில் பத்துநிமிடம் பல்ஸர்பைக்கை பார்க் செய்துவிட்டுப்போனால் பல்ஸர் பைக் ஸ்பேர் பார்ட்ஸாகி பைக் உரிமையாளரின் பல்ஸ் எகிற வைக்கும் சூழல்! சமூக நீதி காக்கும் 69% இட ஒதுக்கீடு கல்வி ஒளி தந்து திருட்டைச் சமூகத்தில் இருந்து ஏன் நீக்கவில்லை?

நாற்பதாண்டுகளாக நடக்கும் பகுத்தறிவு, சுயமரியாதை திரா"விட" ஆட்சிக்குப் பின்னரும் இன்றும் நாற்றமெடுக்கும் கூவம் , அடையாறு நதிக்கரை, கடற்கரையோரம் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான அடித்தட்டு மக்களை 69% சமூகநீதி இடஒதுக்கீடு ஏன் கல்வி, பொருளாதாரத்தில் மேலேற்றவில்லை??

தமிழ்நாட்டில் நடக்கும் நாற்பதாண்டு கால பகுத்தறிவு, திரா"விட" ஆட்சியில் சுயமரியாதையின் இலட்சணம் இதுதான்!

மூன்று முறை தமிழக முதல் அமைச்சராக மு.கருணாநிதியும், தமிழகத் தலைநகரான சிங்காரச் சென்னையின் நகரத்தந்தையாக (மேயராக), உள்ளாட்சித்துறை அமைச்சர் எனப் பல பதவிகளில் மு.க ஸ்டாலின் எனப் பல ஆண்டுகள் பதவிகளில் இருந்திருக்கிறார்கள் இந்த சமூக நீதிக்காவலை தமிழகத்தில் 999 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்த திரா"விட"க் குடும்பக் கட்சியினர்.


தமிழ்நாட்டில் ஆதிகாலத்தில் இருந்து ஆதிக்க சாதியினராகவே தொடரும், மக்கள் தொகையில் அதிகமான வன்னியரும், தேவரும், அகமுடையாரும், கவுண்டரும், யாதவரும் இருபத்திஒன்றாம் நூற்றாண்டில் சமூகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாமா?

இவர்களுக்கு இடஒதுக்கீட்டுச்சலுகை எனும்போது பிச்சைக்காரவேசம் போடுவதும், விளைநிலத்தில் பணிபுரிபவரை வன்புணரும்போது பண்ணையார் என உயர்வதும், திண்ணியத்தில் சக திராவிடருக்கு மலத்தைத் தின்னத் தரும்போது ஆதிக்க சாதி வெறியாட்டம் போடுவதும் கை வந்த கலை! அரசியல் வழியாக எம்.எல்.ஏ, எம்.பி ஆகித் தமிழகத்திலே சமூகநீதியைப் பேணும் சமூகநீதிக்காவல் காரர்கள் இக்கயவர்கள்தான்!!

தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் இந்த ஆதிக்க ஜாதியினர் தம் சுயநல சலுகைகளுக்காகக் கூட்டமாக ஓட்டுப்போட்டதால், இந்தியநாடு சுதந்திரம் பெற்ற சமயத்தில் முன்னேறிய சமுகமாய் இருந்து, திராவிட கட்சிகளின் ஆட்சியில் சலுகைகளுக்காக பிற்படுத்தப் பட்டவர்களாகி, சலுகைகள் தொடர சாலை எங்கும் நிழல்தந்த மரங்கள் பல வெட்டி வீழ்த்தி மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாகி சமூக நீதி காக்கின்றார்கள் இந்த முன்னாள் பல்லவ, சேர,சோழ, பாண்டியர்கள்?

மெய்யாக பொருளாதாரத்தில் நலிந்த அனைத்துப்பிரிவினரும் மேம்பட கல்வியில் , அரசு வேலையில் இட ஒதுக்கீடு என்பது பொருளாதார நிலை கொண்டே நிர்ணயிக்கப்படவேண்டும்.
பொருளாதாரத்தில் மேம்பாடு வந்தாலே சமூகநிலையில் மேம்பாடு தானே வரும்.

பார்ப்பனர் உட்பட முதலியார்,பிள்ளைமார்,உடையார், வன்னியர், தேவர், அகமுடையார், கவுண்டர், யாதவர் என அனைத்து ஆதிக்க சாதியினராலும் அழுத்திவைக்கப்பட்ட துப்புறவுத் தொழிலாளர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் என வெகுசிலருக்கு மட்டும் சிறப்புச்சலுகையாகப் பொருளாதாரநிலையோடு சாதியும் சேர்த்து இரண்டும் கருத்தில் கொள்ளப்படலாம்.

"வன்னியர், தேவர், யாதவர், செட்டியார், முதலியார், பிராமணர்,கவுண்டர்,பிள்ளைமார், பொற்கொல்லர், நாடார், கிறித்துவர், இசுலாமியர் எனப் பொருளாதாரத்தில் நலிவுற்ற அனைத்துப்பிரிவினரும் வீட்டுக்கு ஒருவர் உத்திரவாதத்துடன் உயர் கல்வி கிடைத்து முன்னேற வழி வகுக்கும் திட்டமாக இட ஒதுக்கீட்டுத் திட்டம் அமைய வேண்டும்.

"அரசியல் கட்சிகளுக்கு ஓட்டுப் பொறுக்கும் சமூக சீரழிப்புத் திட்டமாக அரசியல் வாதிகளால் அலைக்கழிக்கப்படும் திட்டமாக இடஒதுக்கீட்டுத்திட்டம் இருப்பது அறவே உடனே நிறுத்தப்பட வேண்டும்."

ஒருமுறை அரசு இட ஒதுக்கீட்டில் மருத்துவ, பொறியியல், உயர் கல்வி, அரசு வேலை வாய்ப்பு பெற்று முன்னேறியவர்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தும்போதே அவரது அடுத்த தலைமுறைக்கு அந்த இட ஒதுக்கீட்டு முறை முன்னுரிமை அளிக்கப்படமாட்டாததை ஏற்று ஒப்புதல் அளிக்கும் புகைப்படம் + கைரேகை + ஐரிஸ் (கண்விழி) இமேஜ் அடையாளத்துடன் கூடிய படிவத்தில் கையொப்பம் இடவேண்டும்.

எம்.எல்.ஏ, எம்பி, மாவட்ட கலெக்டர், உதவி கலெக்டர், இன்ஸ்பெக்டர், எஸ்பி, டிஐஜி, ஐஜி, தாசில்தார், கல்லூரிப் பேராசிரியர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் , மின்வாரிய துணை இஞ்சினியர்கள் போன்ற மாதம் 20000/- மத்திய, மாநில, வங்கிப்பணி போன்ற அரசு வேலையில் இருந்து சம்பளம் பெறுவோர், இதர துறைகளிலான சீனியர் அரசு அலுவலர்கள் என மாதம் 20,000/- (அனைத்துப்படிகளுடன் கூடிய மொத்தத்தொகை Gross salary) சம்பள நிலை வரும் போது இம்மாதிரியான இடஒதுக்கீட்டுக்கு அவசியமில்லாத நிலையை உறுதி செய்யும் கைரேகை+ ஐரிஸ்(கண்விழி)இமேஜ்+புகைப்பட அடையாளத்துடன் கூடிய படிவத்தில் ஒப்புதல் தரவேண்டியது கட்டாயமாக்கப்படவேண்டும், இவர்களது பணிக்காலம் முடிந்து ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதியோடு இந்த இட ஒதுக்கீட்டுத் தகுதி இணைக்கப்படவேண்டும்.

ஒரு நபர் பெற்ற இட ஒதுக்கீட்டுப் பயன்கள் உதாரணமாக: உயர்கல்விக்கு மூன்றாண்டு டிப்ளோமோ, நான்காண்டு பொறியியல், பல்கலைக்கழக மூன்றாண்டு பட்டப்படிப்பு, முதுகலைப் பட்டப்படிப்பு, எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பு, உயர் மருத்துவப்படிப்பு, நர்சிங் படிப்பு, பல்மருத்துவப்படிப்பு, அரசு வேலை (சம்பள அடிப்படையில்) என ஒரு நபரின் /ஒரு குடும்பத்தின் இடஒதுக்கீட்டுப் பயன்பாட்டை அறியும் வகையிலான கட்டாயப் பாயிண்ட் சிஸ்டம் அறிமுகப்படுத்தலாம்.

எலக்டிரானிக் கார்டு வெரிபிகேஷனுடன் கூடியதாக இந்த இடஒதுக்கீட்டுப் பயன்பெறுதல் தனிநபர்/குடும்ப அளவில் நடைமுறைப்படுத்தல் என்பது இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ போன்ற தனியார் நிறுவனங்களால் அரசியல்வாதிகள் தலையீடு, குறுக்கீடு இல்லாமல் மேலாண்மை செய்யப்பட வேண்டும்.


தமிழ்க்குடிதாங்கி மருத்துவர் ராமதாஸ், கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி, தயாநிதி, கலாநிதி, ஜிகே.மணி, காடுவெட்டி"மாவீரன்" குரு, மருத்துவர் சேதுராமன், வைகோ, சசிகலா-நடராஜன், வீரபாண்டி ஆறுமுகம், ஜிகேவாசன், கிருஷ்ணசாமி,பீட்டர் அல்போன்ஸ்,பார்வர்டு பிளாக் கார்த்திக், விஜய்காந்த், சரத்குமார்,ராதிகா, விஜய், அஜீத், விவேக், சிநேகா, ஏஆர்.ரகுமான், யுவன் சங்கர் ராஜா, போன்றோர் தன் மகனுக்கு, பேரனுக்கு, கொள்ளுப்பேரனுக்கு இன்னும் 1931 அடிப்படையிலான சமூக நிலையினை அடிப்படையாகக் கொண்ட சுயநல, சமூகச் சீரழிவான ஓட்டுப்பொறுக்கி இடஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கும் சமூக அநீதி முற்றிலும் தடுக்கப்படவேண்டும்!


பொருளாதாரத்தில் மேம்பட்ட அனைத்து ஜாதியைச் சார்ந்தவர்களுக்காக ஒரு குறிப்பிட்ட சதவீதம் கூடுதலாகப் பணம் கட்டிப் படிக்க என் ஆர் ஐ கோட்ட்டா போன்ற ஒரு வழிமுறையை ஏற்படுத்த வேண்டும்.

அயல்நாட்டில் மாதம் ஆயிரத்து ஐந்நூறு அமெரிக்க டாலர்களுக்கு இணையான சம்பளத்தில் ஐந்தாண்டுகள் பணிபுரிந்திருந்தால் குறைந்தகட்டணத்தில் கல்வியிடங்களில் இட ஒதுக்கீட்டுச் சலுகைக்கு உள்ளூரில் முன்னுரிமை விலக்கப்படவேண்டும்.

இப்படிச் செய்தாலே அன்றி சமூகத்தில் பொருளாதாரரீதியாக உண்மையில் நலிந்த பல ஜாதியைச் சார்ந்த பல லட்சக்கணக்கான நலிந்த மக்கள் அனைவரும் இட ஒதுக்கீட்டில் பயன்பெற்று முன்னேறுவது அடுத்த 50-100 ஆண்டுகள் கழிந்தாலும் கனவிலும் நடக்காது.


மு.கருணாநிதி குடும்பத்தில் நாற்பதாண்டுகளில் ஒவ்வொருவரும் பல நூறு கோடிகளுக்கு அதிபதிகள்! இட ஒதுக்கீட்டு சமூகநீதி காத்ததால் கருணாநிதி பெற்றது பத்துக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சானல்கள்! ஸ்டாலின் மகன் உதயநிதி நுங்கம்பாக்கத்தில் ஸ்நோ பௌலிங் செண்டர் எனும் பொங்கு தமிழ் பண்பாட்டு விளையாட்டுக்குத் தன்னை அர்ப்பணித்து சொந்த செலவில் அரங்கமைத்து சமூக நீதி காக்கிறார்!

தமிழ்நாட்டில் சமூகத்தில் படித்த 30 வயது சாமானியன், பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் மாதம் 1லட்சம் சம்பளம் வாங்கினால் நுங்கம்பாக்கத்தில் 800 சதுர அடிக்கு அடுக்குமாடி ப்ளாட் வீடு வாங்க 40 லட்சத்துக்கு 10 ஆண்டுகள் முதுகு உடைய உழைக்கவேண்டும்! கருணாநிதி 30வயது பேரனுக்கு 20,000 இருபதாயிரம் சதுர அடிக்கு நுங்கம்பாக்கத்தில் பிரதான இடத்தில் "ஸ்நோ பௌலிங்" செண்டர் சொடக்குப்போடும் நேரத்தில் அமைந்துவிடுகிறது!

அரசியல் சமூக நீதிக்காவல் என்பது செக்யூரிட்டி கூர்க்கா / செண்ட்ரி என்பது மாதிரி அல்லல் படுவதில்லை! பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தையே அன்புமணிக்குப் பெற்றுத்தர தமிழ்க்குடிதாங்கி மருத்துவர் ராமதாசு கூட்டணி தர்மம் என ஜிப்மர் தர்மம் பண்ணுமாறு மத்திய அரசை வற்புறுத்துவது சமூகநீதிக் காவல்!

வந்தேறி பார்ப்பனர்கள் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆடுமேய்த்து வந்து தமிழனை ஏய்த்துத் தலையில் மிளகாய் அரைத்தனர் எனும் புருடாவை விட்டு கிருமிலேயர் ஓபிசி சிங்கங்கள் உண்மையில் நலிந்தவர்கள் தலையில் மிளகாய் அரைப்பது சமூக நீதி என்று குடும்ப /கட்சி சார் தொலைக்காட்சிகளில் முழங்குவது சமூக நீதியா?

கடைந்தெடுத்த சமூக ஏய்ப்பு!!

அன்புடன்,

ஹரிஹரன்