Thursday, April 19, 2007

(152) (தமிழ்) மக்கள் டிவிசேனல்(கள்)... மலையாள டிவிசேனல்.. பிபிசி..அல்ஜசீரா ஆங்கில சேனல்கள்

பொதுவாக 24 மணி நேர தமிழ் டிவி சேனல்கள் 90% சீரியல்கள்+ சினிமாவை மட்டுமே சார்ந்த நிகழ்ச்சிகளாக ஒளிபரப்புவதால் பெரும் சலிப்பு, இந்த ஆக்கங்கெட்ட விஷயத்தில் மூழ்கி சிந்திக்கும் ஆற்றலை இழந்துவிடாமல் அடுத்த தலைமுறையை இந்த தமிழ் சேனல் சனியன்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காகாவும் தந்தையாக நான் நிறையவே மெனக்கெட வேண்டியிருக்கிறது!

தமிழ் சானல் தவிர்த்து பிடித்துப்போய் நான் பார்க்கும் டிவிசானல், சினிமா நிகழ்ச்சிகள் என்பவை:
1. உலகச் செய்திகள்.
2.ஆங்கில செய்திச் சேனலான பிபிசியில் வரும் டிம் செபாஸ்டியன் (Tim Sebastian)ஸ்டீபன் சக்கூர் (Stephen Sakur)நடத்தும் கடினமான விவாதங்கள் Hard Talk Show,
3.டெக்னிகலாக புதிய கார்கள் பற்றிய Top Gear நிகழ்ச்சி ,
3.Tim Sebastian நடத்தும் மத்திய கிழக்கு அரசியல் விவாதமான Doha Debates,
4. இன்றைய கரண் தாபரின் Hard talk India ,இந்திய நடப்புகள் மீதான முந்தைய Question time India,
5.உலகப் பயணம் சார்ந்த நிகழ்வுகளான Fast Trak , மற்றும் முந்தைய Simpsons World
6. டாம் & ஜெர்ரி, மிக்கி மவுஸ் கார்ட்டூன்கள்
7. தமிழில் விசுவின் சில ஆண்டுகள் முன்பான ஆரம்ப கால அரட்டை அரங்கங்கள்,
8.சினிமா பொழுது போக்கு நிகழ்வுகள் பெரும்பாலும் வடிவேலு, விவேக் என்று கொஞ்சமாக நகைசுவை காட்சிகள் மட்டும்
9.நல்லது என்று பரிந்துரைக்கப்பட்ட ,தமிழ் மற்றும் கோயி மில்கயா ,க்ருஷ் போன்ற டெக்னிகலாக சிறப்பான இந்தியப்படங்கள்


ரொம்ப நாட்களுக்கு அப்புறமாக வீட்டில் டிவி பொட்டிக்கு முன்னால் ஏப்ரல் 15ஆம் தேதி அன்று உட்கார்ந்து சேனல்களை என் வழக்கப்படியாக 20 செகண்டுக்கு ஒரு முறை மாற்றிக்கொண்டே இருந்தேன். ஏசியா நெட் ப்ளஸ் எனும் மலையாளச் சேனலில் சித்திரை விசு பண்டிகை சிறப்பு நிகழ்வாக நேரடி நிகழ்வாக நடந்த ஏசியா நெட் ப்ளஸ் "லிட்டில் மாஸ்டர்" எனும் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கான LIVE பாட்டுப் போட்டி நிகழ்வு என்னை சேனலை மாற்றாமல் மூன்று மணி நேரம் பார்க்க வைத்தது.

மலையாளச் சேனல் நடத்திய மலையாள புதுவருட விசு பண்டிகைக் கொண்டாட்டமான பாட்டுப் போட்டி நிகழ்வில் பங்கேற்றுக் கலக்கிய அகில் கிருஷ்ணன், ராகுல் சத்யநாதன்,ஷில்பா ராஜூ, ஸ்ருதி லக்ஷ்மி,அம்பாடி எனும் இந்து சிறுவர் சிறுமியர், கிறித்துவ சிறுமி மெரின் கிரிகோரி, உமர் எனும் இசுலாமிய மலையாளச் சிறுவன் என்று இளம் சிறுவர், சிறுமியர்கள் பாடிய லைட் & கிளாசிக்கல் மியூசிக் கலந்த இசை நிகழ்வில் பாடப்பட்ட பாடல்களில் 50% மலையாளம், 40% தமிழ், 10% ஹிந்தி என்று பட்டையைக் கிளப்பினார்கள்.

பாட்டுப் போட்டி நிகழ்வுக்கு லஜ்ஜாவதியே பாடல் புகழ் இசையமைப்பாளர் ஜெஸி கிப்ட்,
ஜெயச்சந்திரன், மோகன் சிதாரா என்று மலையாள இசை உலகில் பிரபலமானவர்கள்
கலந்து கொண்டு நிகழ்வின் இறுதியில் எண்ணற்ற தமிழ்ப்பாடல்களையும், மலையாளப் பாடல்களையும், இந்திப்பாடல்களையும் கலந்து கட்டி கதம்பமாக மலையாளப் புத்தாண்டு விசு பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடினார்கள்.

குஜாராத் டாண்டியா பாடல் புகழ் பாடகியான Phalkuni Phathak பாடிய பாடல்களையும் , மாதுரி தீக்ஷித்தின் ஏக் தோ தீன் இந்திப் பாடல்களையும், ஏசுதாஸின் மலையாளப்பாடல்களையும், சிம்பு டி.ராஜேந்தரின் அம்மாடி ஆத்தாடியையும், போக்கிரி மாம்பழம் என எல்லா மொழிப் பாடல்களையும் விகல்பமின்றி, மொழி வெறி இன்றி பாடி ஆடி, கொண்டாட்டமாக மகிழ்ந்திருக்க வெளிப்படையாக மலையாளிகளால் முடிகிறதை எண்ணி மகிழ்ந்தேன்!

எனக்கு பல சிந்தனைகளை இது ஏற்படுத்தியது.


மலையாளிகள் வெளிமாநிலத்தில், வெளி நாட்டில் எங்கு நேரில் பார்த்தாலும் மலையாளியோ? என்று கேட்டு விசாரித்துக்கொண்டு மலையாளத்தில் தான் சகஜமாகப் பேசுவார்கள்! மலையாளத்திலே உலகம் எங்கும் பேசும் மலையாளிகள் தங்களது சேனலில் தங்கள் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் மலையாளத்தோடு தமிழ், ஹிந்தி, குஜராத்தி என்று அனைத்து இந்திய மொழிகளையும் பாவித்து பாடி ஆடி மகிழ்கிறார்கள்.

தனித்தமிழ்நாடு கோரும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் வெளிமாநிலம், வெளிநாட்டில் சந்தித்தால் 90% ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு, தமிழ்நாட்டில் இந்தியை எதிர்த்துக்கொண்டு, மும்பை டெல்லியில் ஹிந்தியில் பேசிக்கொண்டு மொத்த மொழி முரண்பாளர்களாக இருப்பது!

மலையாளச் சேனலில் வந்தமாதிரி வெவ்வேறு மதங்களைச் சார்திருக்கும் மூன்று தமிழ்த் திரைப்பட இசை அமைப்பாளர்கள் சேர்ந்து வந்து மக்களோடு மக்களாக தமிழ் புதுவருடக் கொண்டாட்டத்தில் இணைந்து தமிழ் மொழிப்பாடல்களோடு இதர இந்திய மொழிகளைப் பாவித்துப் பொதுவில் ஒரு இசை நிகழ்வை தமிழ் டிவி சேனலில் தந்து விடும் சூழல் தமிழகத்தில் ஏன் முற்றிலும் இல்லாமல் போனது?

இதர இந்திய மொழி வெறுப்பும்,மொழி மறுப்பும் ஈகோவும் பெரியண்ணன் சுபாவமும் தலைமையாக வழிநடத்திக் கோலோச்சுகிறது தமிழ்நாட்டில்!விளம்பர இடைவேளையில் பாமகவின்"மக்கள் டிவி"யில் செய்தியை கேட்க நேர்ந்தது! "ஈராக்கில் தீவிரவாதிகள் வெடி குண்டுகளோடு மகிழுந்தில் வந்து தாக்கியதில் கர்பலாவில் 40 பேர் சாவு" என்று தமிழில் செய்தி வாசித்தார்கள்!

மோட்டார் கார் தமிழ்நாட்டுக்கு வந்த போது, அதுவரை இருந்த இதர மாட்டுவண்டிப் பயணம் போன்ற பயணிப்பை விட அது கூடுதல் மகிழ்வைத் தந்தது அதனால் "Pleasure Car" என்று சொல்லப்பட்ட சொல்லாடலை "மகிழுந்து " என்று தமிழாக்கி தீவிரவாதிகளின் "Car Bomb" என்பதை மகிழுந்து வெடிகுண்டு என்பதாகத் தமிழ் படுத்திய கொடுமை... தமிழ் மீது வீசப்பட்ட மகிழுந்து வெடி என்றால் தப்பில்லை!

சுமைஉந்து மோதி பலி என்று சொல்லும் செய்தியில் சொல்லப்பட்ட சுமைஉந்து என்பது லாரியா, டெம்போவா, கார்கோ ஆட்டோவா? எல்லாமே சுமை உந்து தானே? உந்து என்பதே அபத்தம். காலால் நடப்பதற்குக்கூட உந்து என்று சொல்லலாம். வண்டி என்பது உந்து என்பதைவிட எவ்வளவோ மேல்.


மக்கள் டிவியின் புதிர் நிகழ்ச்சியில் இன்னொரு அதிர்ச்சி!!

தமிழகம் முழுதும் அணைக்கரைப்பட்டி...ஆட்டையாம் பட்டி வரைவீடெங்கும் சுமீத்கள், ப்ரீத்தி மிக்ஸிகள், சௌபாக்யா கிரைண்டர்கள் நிறைந்து விட்ட இன்றைய சூழலில்:
"விரல் இல்லாத கை எது?" உலக்கை தான் அது..
"கட கடா குடு குடு நடுவிலே பள்ளம் அது என்ன?" மாவாட்டும் உரல்தான் அது- என்று புளித்த புதிரை போட்டு தமிழை மேம்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள்! அட்லீஸ்ட் மாவாட்டும் உரல், உலக்கை என்று காட்டினால் அந்த மியூசியப் பொருட்களை மாநகர, நகர,டவுன் வாழ் இந்தத்தலைமுறை தமிழர்கள் அடையாளமாவது காண்பார்கள்!

தமிழன் மட்டும்தான் மைக்கேல்பட்டி, ரோஸ்மியாபுரம் எனும் ஊர்ப்பெயரெல்லாம் சாய்ஸில் விட்டுவிட்டு டால்மியா புரத்தை மட்டும் கல்லக்குடியாக்கத் தமிழுக்காக ரயில் தண்டவாளத்தில் படுப்பது, சைக்கிளை மிதிவண்டி, மோட்டார் பைக்கை உந்து ஈருருளி, பஸ்ஸை-பேருந்து, லாரியை-சுமை உந்து, வேனை-சிற்றுந்து, காரை-மகிழுந்து, என்று தமிழ் மொழியைப் பேணுவதாக தமிழ்மொழி மீதே வெறுப்பையும், இதர மொழி மறுப்பையும் பரவலாக்கி விட்டு புழக்கத்தில் சாதரணமாகத் தமிழ்ப் பயன்பாடு என்பது வெகுதியாகக் குறைந்து போய் அவதிப்படுவது!

இம்மாதிரியான அணுகுமுறை என்பது தமிழர்களே மெனெக்கெட்டுத் தமிழ்மொழிக்கு வைக்கும் சொ.செ.சூ! அன்றி வேறென்ன??

தமிழ் மீடியத்தில் +2 வரையில் படித்தவன் என்பதால் அரசியல் மொழிவெறியால் ஏற்பட்ட கொடுந்தமிழ் கொடுமை, பயனில்லாமையை உணர்ந்து அறிந்தவன் நான். இந்தமாதிர் வெட்டியான மொழிவெறி உணர்வுள்ள ஆட்கள் குறைகடத்தியான (Semi Conductors) டிரான்ஸிஸ்டர் சுற்றுகளை (CommonEmitter, Common Collector , Common BaseTransistor Circuit) பொது உமிழ்ப்பான், பொது சேகரிப்பான், பொது அடிவாய் சுற்றுகள் என்று செய்த கொடுமை இன்னிக்கும் கசக்கிறது!

இப்படித் தன்மொழி காப்பேன், எங்கும் எதிலும் மலையாளம் என்று மலையாளிகள் சவடால் விடுவதில்லை... ஆனால் உலகம் எங்கும் தினசரிப் பயன்பாட்டில் வெகுதியாக மலையாளத்தில் பேசுகிறார்கள், மலையாளத்தில் வைத்திருக்கிறார்கள்.

தமிழ் மொழியுணர்வு+ தமிழ் மொழிவெறி அரசியல் + தமிழ் மொழிப்பற்று சவடால் வீர முழக்கம் = தமிழ் பேசாமை + இதர மொழி வெறுப்பு என்பது தமிழர்கள் நிலையாக இருக்கிறது!

அல்ஜசீரா ஆங்கில சானலில் குர்திஸ்தான் பற்றி ஒரு நிகழ்ச்சியாக ஈரான், ஈராக், துருக்கி என மூன்று தேசங்களில் வாழ்கின்ற குர்து இனத்தவர் நிலை, வட ஈராக்கிய இர்பில் நகரம், வடக்கு ஈராக்கில் குர்து இனத்தவரது சதாம் ஹூசைன் போனபின்பான வாழ்வு என்று டாகுமெண்டரி சிறப்பாக இருந்தது!

தமிழ்நாட்டு டிவி சேனல்கள் ஈழத் தமிழர் நிகழ்வுகளை நேரடியாக ஈழத்தின் ""யுத்த களத்தில்"" இருந்து எடுத்து நிதர்சன நிலையை தொடர்களாக செல்வியாகி அரசிமாதிரி எடுக்கின்றார்கள்!

புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டு திரைநாயகர்களுக்கு 4 கோடி சம்பளம் வாங்க வேர்ல்டு மார்க்கெட் ஆகி உதவுகிறார்கள், தமிழ்நாட்டு தயாரிப்பாளர்கள் தங்கள் தமிழ் படங்களை தமிழ் சேனல்களுக்கு சாட்டிலைட் ரைட்ஸ் என அதிக விலை விற்பனைக்கு உதவுகிறார்கள், தமிழ்நாட்டு செல்வி, அரசி இன்னபிற கண்றாவி அழுகை சீரியல்களுக்கு யூரோ, டொலெர் தந்து பார்த்துக்கொண்டு இருக்கும் இன்றைய நிதர்சனநிலை "சுமை இழுத்ததால் கழுத்தில் புண்ணோடு இருக்கும் எருதுக்கு திண்டாட்டம்.. ஆனால் அதைக் கொத்தித் தின்னும் காக்கைக்கோ கொண்டாட்டம்" என்பதை நினைவூட்டுகிறது!

ஈழத்தில் போரால், பட்டினியால் நிதர்சனத்தில் ஆயிரம் பேர் செத்தால், தமிழகத்தில் அரசே முன் நின்று ஒரு வசதியான நாளில் மாபெரும் பந்த் நடத்தி, பந்த் அன்று தமிழ்த் தொலைக்காட்சி சேனல்களில் உலகத்தமிழ் தொலைக்காட்சிகளில் முதன்முதலாக உலக நாயகன் கமல் இலங்கைத்தமிழ் பேசி நடிக்கும் "தெனாலி" திரைப்படத்தைக் காட்டி விட்டால் உலகத் தமிழர் உணர்வு என்பதை தீவிரமாகக் காட்டிப் போராடியதாகி விடும்!!

தமிழ்நாட்டிலிருக்கும் ராமேஸ்வர ஈழ அகதிகள் முகாமில் நிலவும் அடிப்படைக் கழிவறைப் பிரச்சினைக்கு இந்திய அரசை, 12 தமிழ் அமைச்சர்கள் கொண்ட இந்திய மத்திய அரசை வசதியாக வார்த்தைகளால் வசைபாடி முடித்து விடலாம் எனும் பச்சை சுயநல தமிழ்நாட்டு அரசியல் சித்தாந்த நிலை!


அதே சமயம் தமிழ் பேசாத இதர மொழி நடிகைகள், நடிகர்கள், பாடகர்கள் அதிகம் நடிக்கும் இடமும் தமிழ்நாடுதான். வட இந்திய நடிகை குஷ்பூக்கு கோவில் கட்டியவன் தமிழனே! பின்னர் வெளக்கமாறு காட்டியதும் தமிழனே! தமிழ்நாட்டில் தமிழர்கள் பாவிக்கும் இன்னொரு முரண்பாடு இது!


உலகளாவிய (ஆங்கில) டிவி சேனல்கள் பார்த்துக்கொண்டே தமிழகத்திலிருந்து வரும் தமிழ் சேனல்கள் நிகழ்ச்சிகளைப் பார்த்தால் மிகுந்த ஹிப்போக்கிரேஸியுடன் நிகழ்ச்சிகள் நடத்தும் தமிழ் சேனல்கள் அவற்றின் ஹிப்போக்கிரேஸி தலைமை, வழிநடத்தல்கள் ஹிப்போகிரேஸி சித்தாந்தங்கள் முகத்தில் அறைகிறது!

யதார்த்தம் துளியும் இல்லாத மொழி உணர்வு மிகை நாடகங்கள் மிகுந்த, பொய்மை வெகுதியாக நிறைந்த களமாகவே இருக்கிறது!


அன்புடன்,

ஹரிஹரன்

10 comments:

Hariharan # 03985177737685368452 said...

டெஸ்ட் மெசேஜ்!

பங்காளி... said...

இப்போதுதான் நம்ம மங்கையின் பதிவொன்றில் ஊடகங்களை சாடிவிட்டு வந்தேன்....அதற்குள் நீங்களும் அதே தொனியில் ஒரு பதிவிட்டிருக்கிறீர்கள்.....

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.....

உமையணன் said...

//தனித்தமிழ்நாடு கோரும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் வெளிமாநிலம், வெளிநாட்டில் சந்தித்தால் 90% ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு, தமிழ்நாட்டில் இந்தியை எதிர்த்துக்கொண்டு, மும்பை டெல்லியில் ஹிந்தியில் பேசிக்கொண்டு மொத்த மொழி முரண்பாளர்களாக இருப்பது!//

நீங்களும் தமிழர்தானே. நீங்கள் தனித்தமிழ்நாடு கோருகிறீர்களா? நான் கோரவில்லை. ஒட்டுமொத்த தமிழர்களும் தனித்தமிழ்நாடு கோருவது போல ஏன் பேசுகிறீர்கள்.
நீங்கள் ஏன் தமிழர் என்பரை மூன்றாமவர் போல் பேசுகிறீர்கள்? அல்லது நீங்கள் தமிழர் என்று நீங்கள் உணரவில்லையா?
வெளிநாட்டில் தமிழர்கள் 90 விழுக்காடு தமிழில் பேசுகிறார்கள் எனபது ஆதாரமில்லாத வாதம். வெளிநாடு சென்றாலும் தங்கள் கடைகளுக்கு தமிழிலேயே பெயர் வைத்து அதை பெயர்ப்பலகையிலும் எழுதும் தமிழர்கள் அவ்வாறு பேசுவதில்லை. தமிழர்கள் வெளிநாடு சென்றாலும் தமிழை மறப்பதில்லை என்பதற்கு இந்த வலையுலமே சிறந்த உதாரணம். தமிழ்நாட்டில் இந்தியை எதிர்த்தது தவறு என்று சொல்கிறீர்கள். அதை நான் ஏற்றுக்கொள்லவில்லை. அப்படியே அது தவறென்றாலும் டெல்லியிலும் மும்பையிலும் ஹிந்தி பேசுவது எப்படி தவறாக முடியும்? இது எப்படி மொத்த மொழி முரண்பாளர்கள் என்பதற்கு சரியான வாதம். கவனியுங்கள் மொத்த மொழி முரண்பாளர்கள் என்று நீங்கள் மிக அழகாக பயன்படுத்திய சொல் தனித்தமிழ் ஆர்வலர்களாலேயே விளைந்தது. 50 ஆண்டுகளுக்கு முன் இப்படி ஒரு வார்த்தையை பயன்படுத்த பாரதிக்கே தோன்றியிருக்காது.

//தமிழ் மீடியத்தில் +2 வரையில் படித்தவன் என்பதால் அரசியல் மொழிவெறியால் ஏற்பட்ட கொடுந்தமிழ் கொடுமை, பயனில்லாமையை உணர்ந்து அறிந்தவன் நான். இந்தமாதிர் வெட்டியான மொழிவெறி உணர்வுள்ள ஆட்கள் குறைகடத்தியான (Semi Conductors) டிரான்ஸிஸ்டர் சுற்றுகளை (CommonEmitter, Common Collector , Common BaseTransistor Circuit) பொது உமிழ்ப்பான், பொது சேகரிப்பான், பொது அடிவாய் சுற்றுகள் என்று செய்த கொடுமை இன்னிக்கும் கசக்கிறது!//
நானும் தமிழ் வழியில் படித்தவன்தான். எனக்கு இனித்தது உங்களுக்கு கசக்கிறது. மின்னோட்டம், மின்னழுத்தம், மின்னழுத்தமானி போன்ற சொற்கள் எனக்கு பாடத்தை மனப்பாடம் செய்யாமலே தேர்வு எழுத உதவின. ஆங்கில சொற்கள் அவ்வாறு உதவ முடியுமா? இதை மொழி வெறி என்று சொல்கிற நீங்கள் ஜப்பானியர் இவ்வாறு செய்வதை என்ன சொல்வீர்கள்? படிப்பது மட்டும் ஆங்கிலத்தில் படிக்கலாம். சிந்திப்பது மட்டும் ஏன் தமிழில் சிந்திக்க வேண்டும்? குழந்தைகளை தமிழை மறக்கச்சொல்லி ஆங்கிலத்தில் பேசச்சொல்லுங்கள். ஆங்கிலமே உலகளாவிய மொழியாக இருக்கிறது. அப்படியானால் இந்தியாவுக்கு மட்டும் ஹிந்தி தேசிய மொழி ஏன்? ஆங்கிலத்தை(மட்டும்) தேசிய மொழியாக ஆக்கி விடலாமா? சொல்லுங்கள். அப்படி இல்லாமல் ஹிந்தியை தேசிய மொழியாக்கினால் அது மொழி வெறியா? உருவாக்கிய கலைச்சொற்களைக் கொண்டு தமிழில் கற்பது என்பது ஒரு முயற்சி. இது வரை அது வெற்றியையே தந்திருக்கிறது. இனியும் வெற்றியையே தரும் என்ற நம்பிக்கையில் செய்யப்படுகிறது. இதை வெட்டியான மொழிவெறி, கொடுந்தமிழ் கொடுமை என்றெல்லாம் மோசமான வார்த்தைகளில் சாடுவது உங்கள் புத்தாண்டு சபதத்தை நீங்கள் கடைபிடிக்கவில்லை என்பதையே காட்டுகிறது.
இன்னும் நிறைய எழுத வேண்டியிருக்கிறது. கொஞ்சம் ஆணி இருக்கிறது.

அன்புடன்,

உமையணன்

Hariharan # 03985177737685368452 said...

//நீங்களும் தமிழர்தானே. நீங்கள் தனித்தமிழ்நாடு கோருகிறீர்களா? நான் கோரவில்லை. ஒட்டுமொத்த தமிழர்களும் தனித்தமிழ்நாடு கோருவது போல ஏன் பேசுகிறீர்கள்.//

வாங்க உமையணன்,

கோபமா வந்திருக்கீங்க.

தனித்தமிழ்நாடு கோரியவர்கள் கையில் தான் ஆட்சி அதிகாரம், சேனல்கள், என அனைத்தும் உள்ளது??

உங்களை என்னை மாதிரி சாமானியர்கள் எண்ணங்கள் இந்த மொழிக் கொள்கை வரைவுகளில் கணக்கில் எடுக்கப்பட்டிருக்கிறதா??

//வெளிநாட்டில் தமிழர்கள் 90 விழுக்காடு தமிழில் பேசுகிறார்கள் எனபது ஆதாரமில்லாத வாதம். //

நானும் இதைத்தானே சொல்லவந்தேன்!

//வெளிநாடு சென்றாலும் தங்கள் கடைகளுக்கு தமிழிலேயே பெயர் வைத்து அதை பெயர்ப்பலகையிலும் எழுதும் தமிழர்கள் அவ்வாறு பேசுவதில்லை.//

இவர்கள் விழுக்காடு மிகக்குறைவு. மற்றும் அரசு மொழிக்கொள்கைகளை நிர்ணயிக்கும் அரசியல், சேனல்வாதிகள் அல்ல இவர்கள்.

மகிழுந்து வெடிகுண்டு என்று car Bombக்கு மொழிபெயர்ப்பு மிக அபத்தம்! அரசியல் வாதிகளின் மேடைத்தமிழ் அபத்தமானது.

தமிழனாய் உணராவிட்டால் தமிழில் எழுத முடியாது. தமிழன் என்பதாலேயே இம்மாதிரியான அபத்தங்களை விமர்சனம் செய்யக்கூடாது என்பது நம் மடத்தனங்களை அறிந்தாலும் சொல்லக்கூடாது எனும் தீக்கோழித்தனம்... இதனால் பயன் குறைவு!

ஜப்பானியருக்கான சூழல் வேறு. இந்தியாவின் தமிழ்நாட்டில் நமக்கு இருக்கும் சூழல் வேறு.

ஜப்பானியனுக்கு ஒரே மொழிதான். இந்தியாவில் 500 கிமீக்கு மொழி மாறும்! 10 மாநிலங்களில் இந்தி தழுவி மொழிகள் பேசப்படுவதால் இந்தி பொது இணைப்பு மொழியாக அமைகிறது.

ஆங்கிலம் 100% ஆங்கிலவார்த்தையை மட்டுமே பிரயோகிக்கவேண்டும் என்று இறுக்கமாக இருந்திருந்தால் இன்றைக்கு இருப்பது மாதிர் உலகம் முழுவதும் பரவியிருக்காது! ஆங்கிலத்தின் பிரதான சிறப்பு பிற மொழி வார்த்தைகளை தனதாக்கிக்கொள்வதுதான்!

தமிழ் மொழி வெறியாக இருந்து லகர, ளகர, ழகர பிழைகள், அபத்தமான மொழிக்கொள்கை அமைத்து மொழிபெயர்ப்பு செய்வதை விட தமிழ் மொழி மீது உண்மையான அக்கறையோடு விமர்சனம் செய்வது தமிழுக்குப் பயன் தரும் செயலாகும்!

தமிழ்மொழி மீது விமர்சனம் செய்தால்
தமிழுணர்வு இல்லையா? எனும் வினா எழுப்ப வேண்டியது அவசியமற்றது.

என் தாய் தந்தையரே என்றாலும் பல விஷயங்களில் எனது கருத்தாக கடுமையான விமர்சனத்தை வைத்தே வந்திருக்கிறேன். இதனால் கசப்பான சூழல், குடும்ப நபரே அல்ல என்றாகிவிடவில்லை. மாறாக குடும்ப மேம்பாட்டுக்கு உதவியது!

விமர்சிக்கும் போது உணர்வு ரீதியாக அணுகக்கூடாது! விமர்சனத்தை உணர்வுரீதியாக படிப்பதையும் தவிர்த்தால் நல்ல விவாதம் நடக்கும்!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Hariharan # 03985177737685368452 said...

//வெட்டியான மொழிவெறி, கொடுந்தமிழ் கொடுமை என்றெல்லாம் மோசமான வார்த்தைகளில் சாடுவது உங்கள் புத்தாண்டு சபதத்தை நீங்கள் கடைபிடிக்கவில்லை என்பதையே காட்டுகிறது.//

"Pleasure Car Bomb" என்பதை மகிழுந்து வெடிகுண்டு என்று செய்திகளில் தமிழ் மொழிபெயர்ப்பாகச் செயல்படுத்திவரும் பாங்கை என்ன என்று சொல்வது?

இது அகஸ்மாத்தாக தமிழ்சேனல் செய்திகள் வாசிப்பை பார்த்ததில்/கேட்டதில் நான் உணர்ந்த அபத்தமான மொழிவெறி அபத்தங்களில் சில மட்டுமே சொல்லியிருக்கிறேன்!

விமர்சனத்தையே விட்டுவிடுவேன் என்று புத்தாண்டு சபதமாகச் சொல்லவில்லை. மிக மோசமான தாக்குதல்களை செய்யவில்லை என்றே கருதுகிறேன்.

டால்மியாபுர பெயர் தமிழ் மாற்றத்துக்கு தண்டவாளத்தில் தலைவைத்த தமிழர் மைக்கேல்பட்டி, ரோஸ்மியா புர பெயர்கள் தமிழில் மாற்றம் பெற தலைப்படாத செயற்கைத்தனம் என்பது தமிழ் சேனல்களில், பல தளங்களில் பல நிகழ்ச்சிகளில் நிறைந்து இருப்பதை அப்படியே சுட்டிக்காட்ட கிடைத்த நேரடி வார்த்தைகள் மொழிவெறி, கொடுந்தமிழ், முரண்பாட்டுத்தனம் அவ்வளவே!

உமையணன் said...

//
//வெளிநாட்டில் தமிழர்கள் 90 விழுக்காடு தமிழில் பேசுகிறார்கள் எனபது ஆதாரமில்லாத வாதம். //

நானும் இதைத்தானே சொல்லவந்தேன்!//
மன்னிகவும் சிறு தவறு. நான் ஆங்கிலத்தில் எனபதற்கு பதிலாக தமிழில் என்று எழுதி விட்டேன்.

//ஆங்கிலம் 100% ஆங்கிலவார்த்தையை மட்டுமே பிரயோகிக்கவேண்டும் என்று இறுக்கமாக இருந்திருந்தால் இன்றைக்கு இருப்பது மாதிர் உலகம் முழுவதும் பரவியிருக்காது! ஆங்கிலத்தின் பிரதான சிறப்பு பிற மொழி வார்த்தைகளை தனதாக்கிக்கொள்வதுதான்!//
ஆங்கிலம் உலகம் தழுவி வளர்ந்தற்கு அது காரணமில்லை. நிறைய பேர் இதைப் பற்றி நன்றாக எழுதி இருக்கிறார்கள்.
//தமிழ்மொழி மீது விமர்சனம் செய்தால்
தமிழுணர்வு இல்லையா? எனும் வினா எழுப்ப வேண்டியது அவசியமற்றது.//
நான் தமிழ்மொழி மீது விமர்சனம் செய்ததால் சொல்லவில்லை. தமிழர்கள் செய்கிறார்கள் என்று நீங்கள் தமிழ்ர்களை விட்டு விலகி நின்று சொல்வது போன்ற நடையில் சொன்னததாலேயே அவ்வாறு கேட்டேன். உங்கள் கோபம் திராவிட இயக்கத்தினர் மீது என்று தெரிகிறது. ஆனால் மக்கள் திராவிட இயக்கத்தினரை தேர்ந்தெடுத்ததாலேயே அவர்கள் செய்யும் எல்லாவற்றையும் ஆதரிப்பார்கள் என்றில்லை. திராவிட இயத்தினரை செய்ய வேண்டிய விமர்சனங்களையெல்லாம் ஒட்டு மொத்த தமிழர்களையும் நோக்கி செய்வது போல இருக்கிறது உங்கள் விமர்சனம்.

அன்புடன்,

உமையணன்

Hariharan # 03985177737685368452 said...

//தமிழர்கள் செய்கிறார்கள் என்று நீங்கள் தமிழ்ர்களை விட்டு விலகி நின்று சொல்வது போன்ற நடையில் சொன்னததாலேயே அவ்வாறு கேட்டேன்.//

இன்று இதரமொழிகளுக்கு பொழுதுபோக்கு நிகழ்வுகளில் மறந்தும் கூட இடம் தரவே கூடாது எனும் மனப் போக்கு சானல் நிர்வாகத்தில் இருக்கும் அக்மார்க் அரசியல் தமிழுணர்வு காரணமாக பரப்பப்படும் மொழிசார்ந்த அதீத நிலைப்பாடு. இந்த அதி தீவிர மொழிக்கொள்கை எடுப்பவர்கள் தமிழர்கள் தானே?

//உங்கள் கோபம் திராவிட இயக்கத்தினர் மீது என்று தெரிகிறது. ஆனால் மக்கள் திராவிட இயக்கத்தினரை தேர்ந்தெடுத்ததாலேயே அவர்கள் செய்யும் எல்லாவற்றையும் ஆதரிப்பார்கள் என்றில்லை.//

நான் சாமானியப் பார்வையாளர்களைவிட சானல் நிகழ்ச்சி நிர்வாகத்தினரையே பிரதானமாக விமர்சித்திருக்கிறேன். அரசியல் பிழைப்புவாத அதீத தமிழுணர்வைத் திணிப்புச் செய்வது அரசியல், சானல் நிர்வாகத்தினர்தானே!// திராவிட இயத்தினரை செய்ய வேண்டிய விமர்சனங்களையெல்லாம் ஒட்டு மொத்த தமிழர்களையும் நோக்கி செய்வது போல இருக்கிறது உங்கள் விமர்சனம்.//

இது கொஞ்சம் ஸ்வீப்பிங் கமெண்ட்டாக இருக்கிறது .

Hariharan # 03985177737685368452 said...

மரக்காணம் பாலசந்திரன்,

சிறிது தணிக்கை செய்து தங்கள் பின்னூட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
தணிக்கையின் காரணம் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.
------------------------------------மரக்காணம் பாலா has left a new comment on your post "(152) (தமிழ்) மக்கள் டிவிசேனல்(கள்)... மலையாள டிவி...":

மகிழுந்து வெடிகுண்டு பற்றி தாங்கள் சொல்வது சரியென்றே படுகிறது. அதே போல் அறிவியல் பாடத் தமிழில் அரசாங்கம் சொல்லிக் கொடுக்கிற வார்த்தைகளை தமிழ் பாடத்தில் சொல்லிக் கொடுக்கலாம்.

ஏனென்றால் அடுத்தடுத்த மேல்நிலைக் கல்விகள் தொடர்ந்து தமிழில் இல்லாத போது இப்படி சுத்தத் தமிழ் வார்த்தைகளைப் பொட்டு மாணவர்களின் உயிரை எடுப்பது ரொம்பக் கொடுமை தான்.

நீங்கள் சொல்வது போல் பிற நாடுகளை ஒப்பீடு செய்யும் போது கருத்தில் கொள்ளப்பட வேண்டிய அம்சங்கள் ஏராளமாகவே இருக்கிறது. மாநிலம் தான்டினாலே ஒரு ###யிரையும் புடுங்க முடியாது. இதுல சுத்தத் தமிழ் வேண்டுமாம்.

தமிழ் தமிழ்'னு அலையிற ***ய்ங்க எதுவாவது தமிழனைப் பற்றி கவலைப்படுகிறதா. குறிப்பாக சாதி பார்த்து

Indian Guest said...

எனக்கு ஒவ்வொரு முறை ஏசியாநெட் பார்க்கும்போதும், இவர்களுக்கு இருக்கும் பரந்த மனப்பான்மை, நமது தமிழ் தொலைக்காட்சிகளுக்கு ஏன் வரவில்லை என்று தோன்றும்.

Gomathi said...

Fantastic
it was great reading your views on various subjects. i am a new entrant to tamil blogs
i do not know how to use tamil in computer
you are doing a good job keep it up
gr