Wednesday, January 31, 2007

(115) பீர்பல் கதைகள்

பீர்பல்-அக்பர் விவாதக் கதைகள் சுவாரசியமானவை.

"To Reach a person's Heart is through his stomach" என்பது பீர்பலுக்கும் எனக்கும் ஓரளவுக்குச் சரி. குவைத்தில் பிரபலமான மொகல் ரெஸ்டாரண்டில் மெனுகார்டில் பீர்பலின் விருப்ப உணவுகள் எனும் பகுதி மட்டுமே எனக்கு உகந்த வெஜிடேரியன் உணவு வகைகள் என்பதாலும் வெஜிடேரியனான பீர்பல் எனக்கு இன்றளவில் இன்னும் சுவாரஸியம் கூட்டுகிறார்.

சரி முதல் பீர்பல் கதைக்கு வருவோம்.

அக்பர் பீர்பலிடம் சவால் வைக்கிறார்.

அக்பர் விடுத்த சவால் இதுதான்: "பீர்பல் நீ செய்யும் ஒரு காரியம் எனக்கு கோபம் வரவழைக்க வேண்டும். அக்காரியத்தை ஏன் செய்தாய் என நான் வினவ நீ சொல்லும் பதில் எனக்குப் படு பயங்கரமான கோபத்தை வரவழைக்கவேண்டும்"

சவாலை பீர்பல் ஏற்கிறார்.

அன்றையதினம் அக்பர் அரண்மனை உப்பரிகையில் (பால்கனி) இருந்து வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார். திடீரென்று தனது பின்புறமாக பிருஷ்டத்தில் கிள்ளப்பட்டதை அறிந்து கோபாவேசமாகத் திரும்பிப் பார்க்கிறார்.

பார்த்தால் அங்கே பீர்பல் இருக்க்கிறார். அக்பர் பீர்பலிடம் கோபத்தோடு ஏன் இப்படிச்செய்தாய் என்று கேட்கிறார்.

பீர்பல் அக்பரை நோக்கி " ஓ நீங்களா அரசே... நான் மகாராணியார் என்றல்லவா நினைத்திருந்தேன்" என்கிறார்.

அக்பர் தன்வசமிழந்து கோபப்படுகிறார்.

பீர்பல் அக்பருக்கு அவர் விடுத்திருந்த சவாலை நினைவூட்டுகிறார். பாராட்டும் பரிசும் கிடைக்கிறது பீர்பலுக்கு.

பீர்பல் கதை ரெண்டு:

ஒரு நாள் மாலை அக்பர் பீர்பலிடம் "ஒரு நபர் தன் தினசரி வாழ்வில் எதிர்கொள்ளும் மிகச் சாதாரணமன ஒரு தினசரி விஷயம் அதே நபருக்கு மிக அதிக மகிழ்ச்சியைத் தந்துவிடாது" என்கிறார்.

பீர்பல் அக்பரின் கூற்றை எதிர்த்து இல்லை அரசே கண்டிப்பாக ஒரு நபர் தன் தினசரி வாழ்வில் எதிர்கொள்ளும் மிகச் சாதாரணமன ஒரு தினசரி விஷயம் அதே நபருக்கு வெகு அதிக மகிழ்ச்சியைத் தரும் என்கிறார்.

அக்பர் தன் கூற்றை மறுத்து எதிர்க்கும் பீர்பலிடம் கோபப்பட்டு "இன்னும் 24 மணி நேரத்தில் எனக்கு அதிகமகிழ்ச்சி தருமாறு சாதாரணமான தினசரி விஷயத்தை , அந்த அதிமகிழ்வு அனுபவத்தை நீ ஏற்படுத்தி எனக்கு உணர்த்தாவிடில் நாளை மாலை நேரம் சிரச்சேதம் செய்யப்படுவாய் எனச் சொல்லிச் செல்கிறார்.

மறுநாள் விடிகிறது. காலை நேரம். அக்பர் அவரது பிரத்யேக ஓய்விடத்தில் ஓரிடத்தில் அமராமல் இங்கும் அங்குமாக உலாவுகிறார். பீர்பல் அங்கே வருகிறார். என்ன அரசே ஏன் இப்படி இருப்புக் கொள்ளாமல் இருக்கின்றீர்கள் என வினவுகிறார். அக்பர் காலை நேரம் எனது காலைக்கடன் முடிக்க இயலாதபடி அனைத்து கழிவறைக் கதவுகள் மூடியிருக்கின்றன. யாரெனத் தெரியவில்லை.

பீர்பல் சென்று பார்க்க கழிவறைக்கதவு திறக்கப்படுகிறது. அக்பர் பாய்ந்தோடுகிறார் கழிவறைக்குள்.

காலைக்கடன் கழித்து வந்த அக்பர் யார் கழிவறைகளை மூடும்படி செய்தானோ
அவனை இழுத்துவா என்கிறார். பீர்பல் கொணரப்படுகிறார். அக்பர் ஏன் இப்படிச் செய்தாய் என வினவ, அக்பரை நோக்கி பீர்பல் இன்றைய காலைக்கடன் நிகழ்வு முன்னெப்போதும் இருந்ததை விட அதி மகிழ்ச்சியை உங்களுக்குத் தந்ததா? எனக் கேட்டு அக்பரின் சவாலை நினைவூட்டுகிறார்.

பீர்பலின் நுண்ணறிவு கண்டு மெச்சி பரிசளிக்கிறார். பாராட்டுகிறார்.

(மன்னராட்சியில் மதிக்கூர்மை இல்லையெனில் அமைச்சருக்குச் சிரச்சேதம் மினிமம் கேரண்டி:-)), புத்தியுள்ள மன்னரை ஏமாற்றி சாதித்துக்கொள்வது என்பது நடக்காத காரியமே)

அன்புடன்,

ஹரிஹரன்

(114) இட்லி வார்க்கப்படுகிறதா?... சுடப்படுகிறதா?

தமிழனின் பிரத்யேக உணவு இட்லி.

இன்றைக்கும் தமிழக ஹோட்டல்களில் "Largetst selling Single item" ஆகவும்"Ever green Opening item in Menu/Price list" திகழ்வது.

மெதுவடையுடனும், சாம்பாருடனும், கெட்டிச்சட்னி, கலர்கலரான சட்னிகளுடனும் இட்லி அமைக்கும் கூட்டணி வலுவானது, சுவையானது, இவற்றின் பிரிக்க முடியாத கூட்டணிதர்மம் அனைவரும் அறிந்தது!

இட்லி நீராவியில் வேகவைக்கப்ப்டுவதால் கொலஸ்டிரால்மாதிரியான உடல்நலக் குழப்பம் இல்லாத நல்ல ஆரோக்கியமான உணவு.

இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் என்பவைகளின் தொகுப்பு என்பதால் சமச்சீரான கார்போஹைடிரேட் கொண்ட ஒரு பாலன்ஸ்டு உணவு.

இப்படியான பல சிறப்புக்களைத் தன்னகத்தே கொண்ட இட்லி தயாரிக்கப்படும் முறையானது தமிழ்ப் பேச்சு வழக்கில் இரு வகையில் குறிப்பிடப்படுகிறது.

1. இட்லி சுடுதல்
2. இட்லி வார்த்தல்

இட்லிசுடுதல் என்பது இட்லித்தயாரிப்பில்சூடாக்குதல் என்பதைக் குறிக்கிறது எனில் வடை சுடுதல் என்பதான வடை தயாரிப்பில் சுடுதல்-> சூடாக்குதல் வேறாக இருக்கிறது.

வார்த்தல் என்பது வடிவப்படுத்துதல் எனும் மோல்டிங்கை குறிக்கிறது. இட்லி அதற்கான பிரத்யேக குழித்தட்டில் வார்க்கப்படுகிறது எனவே வார்த்தல் என இட்லியின் தயாரிப்பு முறை அழைக்கப்படுகிறது.


(துப்பாக்கியால்) சுடுதல் என்றும் ஒரு சுடுதல் இருக்கிறது ( இட்லி வெந்து விட்டதா என்று விரலால் குத்திப் பார்க்க இட்லியில் ஏற்படும் வடு துப்பாக்கியால் சுட்டதால் வந்ததா என்று எண்ணி சுடுதலுக்குப் பயன்படுத்தப்பட்டது ரிவால்வரா/க்லாஷ்னிகோவா /ரைபிளா /நாட்டுத் துப்பாக்கியா எனக் குழம்ப வேண்டியிருக்கிறது)


சுடுதல் என்பதாக டெர்ரகோட்டா, மட்பாண்ட, செங்கல் இவையும் சுடப்படுகின்றன. அதாவது வடிக்கப்பட்டபின், மோல்டில் வடிக்கப்பட்ட பச்சை மண் உருவங்கள் வெப்பத்தில் சுடப்படுகின்றன இதுவும் சுடுதல்தான்.

ஆக இட்லிவார்த்துச்சுடுதல் என்பதுதான் சரியாக,முழுமையாக இருக்கவேண்டும். வார்த்தல் மட்டுமாகவோ அல்லது சுடுதல் மட்டுமாகவோ என்பது இட்லியின் முழுத் தயாரிப்பு முறை அல்லவே!


குறிப்பு:
எழுதும் சப்ஜெக்டால் கடினமாகிற என் எழுத்து நடையை லேசாக்க எளிய சப்ஜெக்ட் பற்றி எழுதலாமேன்னு ஒரு முயற்சிதான் இப்பதிவு. இருப்பதிலேயே லேசானது நமக்க்கு சாப்பாடுதானே:-))

அன்புடன்,

ஹரிஹரன்

Sunday, January 28, 2007

(113) பழையன கழித்துப் புது Blogger புகுவிழா

புதுபிளாக்கர்க்கு ஜம்ப்லிங்கமா ஜம்ப் செய்ததை ஜல்லியடிக்கும் ஜல்லிப் பதிவு. பழைய பதிவுகளில் பின்னூட்டமிட்டவர்கள் அடையாளம் தெரியாத புதிய பிளாக்கருக்கு மாறியதும் வேற்று மொழிக்காரர்களாக ஆகிவிட்டார்கள்.

பதிவைப் படிக்கும் மென்பொருள் வல்லுனர்கள் கொஞ்சம் உதவுங்கள். அட்வான்ஸ் நன்றிகள் பல தங்களுக்கு.

அன்புடன்,

ஹரிஹரன்

Saturday, January 27, 2007

(112) இங்கே பழைய வெங்காய சமையல்குறிப்பு வாங்கப்படும்

நைட் ஈகிளுக்கு டாஸ்மாக் சிரப்பு அடிச்ச சென்னைச் சிரப்பு ரிப்போர்டர் அனுப்பிய செய்தி மூலம் சென்னையில் வெங்காயச் சமையல் குறிப்பு குறித்த பழைய பேப்பர் வாங்கும் இடம் அறிந்துகொண்டேன்.

//தி. ராஸ்கோல்கள் குழு ஒன்று குடியரசு தினம் அன்று வலைபூக்களில் பெரியவர் மீதும், தி. ராஸ்கோல்கள் மீதும் நடக்கும் ஆபாச தாக்குதல்களை பிரிண்ட் அவுட் எடுத்து பெரியவர் திடலுக்கு போய் தி.ரா.க்களின் பெரிய தலைவரை (எண்கவுண்டரில் கொல்லப்பட்டவரின் பெயர் கொண்டவர்) நேரில் சந்தித்து புகார் தெரிவித்தார்களாம். இதற்கான அப்பாயிண்ட்மெண்ட் சிங்கப்பூரில் வாங்கப்பட்டதாம்.

ஜறிகரன், கடாயு, போண்டா மாதவன், கால்மாரி, கரவெட்டி ப்ளூகண்டன், மாங்காமரத்தான், மூஞ்சுமூடி, உட்டது ரெட்டு போன்றவர்கள் எழுதிய பதிவுகள் அந்த பிரிண்ட் அவுட்டில் இருந்ததாம். விரைவில் அரசுரீதியான நடவடிக்கைகள் தமிழ் வலைப்பூக்கள் மீது பாயும் என்று நமது சென்னை சிரப்பு செய்தியாளர் தெரிவிக்கிறார்
.//

உங்ககிட்ட ஏதானும் வெங்காயச் சமையல் குறிப்பு இருக்கும் பழைய பேப்பர் இருந்தா, "இங்கே பழைய வெங்காய சமையல்குறிப்பு வாங்கப்படும்" என போர்டு போட்டு புதுயாவாரம் ஆரம்பித்திருக்கும் சூரமணி ஐயாகிட்ட மூட்டை கட்டிக் கொண்டுபோய் எடைக்கு எடை போட்டு அதை வெங்காயபஜ்ஜி, வெங்காய போண்டா, வெங்காயதோசையாக மாற்றிக்கொள்ள சென்னையில் வேப்பிறக்கித் திடல்ல கொண்டுபோய்க் கொடுத்தா உங்க ஆசை நிறைவேறும்ங்கோ!

அல்ட்டிரா மாடர்ன் நாடான சிங்கப்பூர் போயும் பழைய வெங்காய சமையல் குறிப்பு பேப்பர் எடைக்கு எடை யாவரம் டீல்தானா? புதுசா யோசிங்கப்பா? நைட் ஈகிள் சிரப்பு ரிப்(பேரான)போர்டருங்களா :-))

அன்புடன்,


ஹரிஹரன்

Thursday, January 25, 2007

(111) மேஜிக்..சூப்பர் மேஜிக் ஷோ அனுமதிக்கு அல்லேலூயாசொல்லு

செந்தழலார் ரெண்டு ரூபாய்க்கு பாபா மேஜிக் காட்டினார். இந்த மேஜிக்ல கிடைக்கிறது ஒரு பவுன் மோதிரம், வீபூதி, ரோசாப் பூ என மேக்ஸிமம் வேல்யூ மொத்தமே 10,000 ரூபாய்தான். அதுவும் உங்களுக்குக் கிடைப்பது வீபூதி, ரோசாப்பூ மட்டும்தான். துரைமுருகன், தயாநிதி ரேஞ்சில் இருந்தால் ஒருபவுன் மோதிரம். நாமெல்லாம் ஏழைபாழைங்க நமக்கு மோதிரம் மாதிரி மதிப்பான பொருள் கிடைக்க சான்ஸ் கம்மிதானே!

நான் சொல்லும் இன்னொரு சூப்பர் மேஜிக் ஷோக்கு டிக்கெட் ரெண்டுரூபாய்க்குக்கூட எடுக்க வேண்டியதில்லை. சும்மா ரெண்டுவாட்டி அல்லேலூயா அல்லேலூயான்னு கத்துங்க போதும்.


*குருடர்கள், சரியா கண்ணுத் தெரியாதவருக்கு பார்வை வர கண்தானம் பெற்றுச் சிகிச்சைன்னு விஞ்ஞான ரூட்டில் போனா பஸ், டிரெய்ன், தங்குமிடம்னு அது மட்டுமே 10,000/- செலவாகும்

லேசர் டிரீட்மெண்ட் ரூட்ல போனா 25,000/- விஜயா அகர்வால்ன்னு அலைஞ்சு அல்லோலப்படணும்.

*செவிடர்கள் செவிட்டு மிஷின், செவி அறுவை சிகிச்சைன்னு 10,000/- க்கு மேலெ செலவு செய்யணும். ஈ.என்.டி ஆஸ்பத்திரியா ஏறி இறங்கி ஈனப்பொழப்பாத் திரியவேண்டிவரும்.

*முடவர்கள் ஜெய்ப்பூர் செயற்கைக்கால், தாங்குகட்டை, வீல் சேர்ன்னு ஏகப்பட்ட செலவு குறைந்தது 10,000/- செலவழிக்கணும்

ஜெய்ப்பூர் செயற்கைக் கால்கள் எடைமிகுந்ததாய் இருப்பதால் ஊனமுற்றவர்கள் படும் அவதியை விஞ்ஞானிஅப்துல்கலாம் எடைகுறைந்த செயற்கைக் கால்களைக் கண்டுபிடித்துத் தீர்த்தார்.

அப்துல்கலாம் மாதிரியான விஞ்ஞானிகள் உலகமறியாத முட்டாள்.

நம்மூர் சென்னை மெரீனாகடற்கரை சீரணி அரங்கில் நடக்கும் "அற்புத சுகமளிக்கும் சுவிசேஷக் கூட்டத்தில்" பங்கேற்கும் முடவர்கள் நடக்கின்றார்கள், செவிடர்கள் கேட்கிறார்கள்,
குருடர்கள் பார்க்கின்றார்கள்.. பெங்களூருவில் அமெரிக்காவில் இருந்து வந்து பாதிரிமார்கள் சென்ற ஆண்டு இப்படி பெரிய அளவில் அற்புத சுகமளிக்கும் கூட்டம் நடத்தினார்கள். நீங்களும் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.


இந்த அற்புத சுகமளிப்புக்கூட்டத்தில் டிவிகேமெராவில் பார்க்கவேண்டிய சிரமமும் இருக்காது நேரிலேயே முட,செவிட்டு,குருட்டுக் குறைபாடுள்ளவர்கள் அல்லேலூயா...அல்லேலூயான்னு கண்ணைமூடிக் கத்தியபடியே சரியாகி மேடையிலேயே பார்த்து, கேட்டு, நடந்து குறைபாடு சரியாகி பரவசப்பட்டு ஆனந்தமாவார்கள்.

மக்களே உங்கள் ஊரில் இருக்கும், உங்களுக்குத் தெரிந்த இந்த உடல் குறைபாடுள்ளவர்களை டி.ஜி.எஸ் தினகரன், காருண்யா நிறுவனத்தையோ ஜோஷுவா நிறுவனத்தையோ அணுகும்படி செய்வீர். பாபாவின் தங்க மோதிர மதிப்பை விட பன்மடங்கு மதிப்புள்ள மருத்துவ சிகிச்சை கிடைக்கும் அவர்களுக்கு இங்கே.

இல்லையேல் இந்துமத வெறிகொண்ட ஜெயலலிதாவால் இடிக்கப்பட்டு, பகுத்தறிவுக் கருணாநிதியால் புனரமைக்கப்பட்ட மெரீனா கடற்கரை சீரணி அரங்கில் நடைபெறும் ஆண்டுத் திருவிழாவான " அற்புத சுகமளிக்கும் சுவிசேஷக் கூட்டங்களுக்கு" வந்து நேரடியாகப் பலன் பெற்று வாழும் நேர்மையான சீரிய வழி இருப்பதைத் தெரிவிக்கவும்.

குறிப்பு-1:
தியேட்டர் ஆர்டிஸ்டாக கூத்துப்பட்டறை / பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் இடம் கிடைக்காதவர்கள் நேரடியாகத் திறமையான நடிப்புப் பயிற்சி பெற சீரணி அரங்க அற்புத சுவிசேஷக் கூட்டங்களில் பங்கேற்கவும். இழந்ததைப் பெறுவீர்கள்.

குறிப்பு-2:
இந்தப் பதிவு எண் 111 என்று அமைந்தது தற்செயலான விஷயம் :-)))

இப்படிக்கு,

ஹரிஹரன்

Wednesday, January 24, 2007

(110) எனக்குப் பிடிக்காததே என் வாழ்வாவது

எனக்குப் பிடிக்காதது ஒன்றாயிருக்க காலம் இதுவரை அதற்குள்ளேயே வம்படியாக என்னைத் தள்ளிவிட்டு வந்திருக்கிறது.

*பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது பத்தாம் கிளாஸ் வரைக்கும் அறிவியல் பாடத்தில் வரும் இயற்பியல் (பிஸிக்ஸ்)பகுதி பிடிக்காது!

*அடியேன் ப்ளஸ்டூவில் பர்ஸ்ட் குரூப்பில் இருந்தபோது பிஸிக்ஸ் தனியான ஒரு பாடமாகப் படிக்கவேண்டியிருந்தது. (இருந்தாலும் சமாளித்து ரொம்ப ரசித்துப் படித்து 92% எடுத்தேன்)

*பிளஸ்டூவில் பிஸிக்ஸ் பாடத்தில் வரும் எலக்டிரானிக்ஸ் பகுதி எனக்கு பிடிக்காது! (செமி கண்டக்டர் பிஸிக்ஸில் ஒரு டிரான்சிஸ்டரை அடிவாய், உமிழ்ப்பான், சேர்ப்பான் என்றும் Commonbase சர்க்யூட்ஐ பொது அடிவாய்ச் சுற்று என்று கல்வித்துறை மொழிபெயர்ப்பும், கலைச்சொற்களும் தமிழில் படுத்தி எடுக்கும் :-(( )

*கல்லூரியில் பட்டப் படிப்பில் இண்டஸ்டிரியல் எலக்டிரானிக்ஸ் எனது முதன்மை பிரிவு என்றானது :-(

*இண்டஸ்டிரியல் எலக்டிரானிக்ஸ் கல்லூரிப்படிப்பில் ஒரு சப்ஜெக்டான "இன்ஸ்ட்ரூமெண்டேஷன்" சப்ஜெக்ட் எனக்குப் பிடிக்காது

*மேற்படிப்பாக "டிஜிடல் இன்ஸ்டிருமெண்டேஷன்" பிற்பாடு படிக்கவேண்டியதானது

*வேலைக்கு வந்து முதன் முதலா "டெக்னிகல் சேல்ஸ்& மார்க்கெட்டிங்" சேர்ந்தபோது தலைநகர் சென்னையில் ஆங்கிலம் பேசத் தடுமாறி (தமிழ்மீடியத்திலே பள்ளியிறுதி வரை படித்ததால்) வேலையை ராஜினாமா செய்துவிட்டு பொட்டியைக் கட்டிக்கொண்டு சென்னையைத் துறந்து சொந்த ஊர் சென்று அடுத்த ஆறுவாரத்தில் சுவற்றில் அடித்த பந்துமாதிரி சென்னைக்குத் திரும்பி வந்தேன். மீண்டும் சென்னை வந்து வேலையிலும் ஆங்கிலத்திலும் தேர்ச்சி பெற்றேன்.

*தற்போது பத்தாண்டுகளாகச் சோறு போடுவது "டெக்னிகல் சேல்ஸ் & மார்க்கெட்டிங்" சார்ந்த வேலை தான்!

*வாழ்க்கையில் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கொள்வது என்று ஆசைப்பட்டேன். ஆனா கல்யாணம் செய்து மனைவியைக் காதலிக்கிறேன். (கல்யாணம் பண்ணிட்டும் இன்னும் எனக்குக் காதலிக்கத் தெரியவில்லை என்பது மனைவியின் கம்ப்ளைண்ட்)

*இப்போ சமீப காலங்களா தமிழ்நாட்டு அரசியல் சுத்தமா இல்லைன்றதாலே அரசியலே சுத்தமாப் பிடிக்கிறதே இல்லை எனக்கு (எந்தத் தேர்தலுக்கும் ஊரில் இல்லாததாலும் வாக்காளர் அட்டை இல்லாததாலும் இதுவரை ஓட்டுக்கூடப் போட்டதில்லை அடியேன்)

*இதுவரையிலான என்னோட வரலாற்று வாழ்க்கையை அலசியதன்படி அரசியல்வாதி ஆகிடுவேனோன்னு ஒரே பயமா இருக்குங்க எனக்கு

*தமிழ்நாட்டு மக்களுக்கு விதிவலியது என்று இருந்தால் கல்விஉதவி-சமூகசேவை-அரசியல்ன்னு என்னை எதிர்கொள்ள வேண்டியிருக்குமோ?

*தமிழ்நாட்டோட ஜாதகத்தை ஒரு காப்பி அனுப்பவும் எனக்கு. பின்னே என்னோட ஜாதகம் தமிழ்நாட்டோட பொருந்திப் போகுறதையும் கணிச்சாத்தானே வெற்றியடையமுடியும் ( ரஜினி-கே.எஸ்.ரவிகுமார் ஜாதகப் பொருத்தம்..சக்குபாய் படம் டிராப்பானது பேக்டிராப்ல வருதா?)

*நல்ல ஜோஸியர் இருந்தால் ரெக்கமெண்ட் செய்யவும். பகுத்தறிவோடு அரசியல் எதிர்காலம் கணிக்கத்தாங்க! பின்ன அரசியல்வாதியானா என்ன கலர் துண்டு போடனும்னு முதல்லயே முடிவு செஞ்சுடணும்ல!

*விஜய்காந்த் மாதிரி நேர்மையான போலீஸ் ஆபீசர் சினிமாவா நிறையப் பார்த்ததில் "அசிஸ்டெண்ட் கமிஷனர் ஹரிஹரன் ஐபிஎஸ்"-ன்னு போலீஸ்ஜீப்ல கொடிபறக்க ஆகணும்னு (கொடிபறக்குது ரஜினி அசிஸ்டெண்ட் கமிஷனர் ஈரோடு சிவகிரி) ஆசைப்பட்டேன்... ஆனா இதுக்கெல்லாம் நேரெதிரா எங்கே திருடனா ஆகிடுவேனோன்னு (மக்கள் மனதைத் திருடும் திருடனாத்தாங்க) தனியா இருக்கிறப்போ இப்போ ஃபீலிங்ல சீலிங்கை அப்பப்போ பார்க்கிறேன்.

அன்புடன்,


ஹரிஹரன்

Tuesday, January 23, 2007

(109) இந்துக் கோவில்களைக் கொள்ளையடிக்கும் அரசாங்கம்

இந்துக் கோவில்களில் ரீபார்ம்ஸ்-2 இங்கே தரப்பட்டுள்ள கோவில்கள் பட்டியலில் இடம்பெற்று இருக்கும் 171 வரலாற்றுச் சிறப்புடனும், பல சொத்துக்கள் உடையனவாயும், பக்தர்களின் உண்டியல் வருவாயோடும் இருக்கும் அற(மில்லாத) நிலையத்துறையின் கீழ் வருபவைகளில் ஒரு பகுதி எண்ணிக்கையே. இதுபோக உண்டியல் வைத்த ஆயிரமாயிரம் கோவில்கள் அதன் சொத்துக்களும் இந்த அரசுத் துறையின் கீழ் வருபவையே.

1.பழனி தண்டாயுதபாணி கோவிலில் பக்தர்களால் வரும் வருமானம் மட்டும் 150 கோடிகள்.

2. திருவள்ளூர் வீரராகவன்,சோளிங்கர்,வேலூர்-ரத்னகிரி,திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களால் வருமானம் 150 கோடிகள்

3. மதுரை மீனாட்சி, அழகர், கூடல் கோவில், வருமானம் 150 கோடிகள்

4. திருச்சி, திருவானைக்கோவில், திருவரங்கம் கோவில் வருமானம் 150 கோடிகள்

5. நாமக்கல் ஆஞ்சநேயர்,கிரிவலப்புகழ் திருவண்ணாமலை கோவில் வருமானம் 100 கோடிகள்

6. சென்னை வடபழனி, பார்த்தசாரதி,கபாலி,அஷ்டலட்சுமி,காளிகாம்பாள், மருந்தீஸ்வரர் கோவில்கள் வருமானம் 150கோடிகள்

7. தேனி வீரபாண்டி கோவில், மாங்காடு காமாட்சி அம்மன், திருவேற்காடு கருமாரியம்மன்,சமயபுரம் மாரியம்மன், பண்ணாரி அம்மன், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில்கள் வருமானம் 200 கோடிகள்

8. கும்பகோண மகாமகக் கோவில்கள், தஞ்சைக் கோவில்கள் வருமானம் 100 கோடிகள்

9. ராமேஸ்வரம், நெல்லையப்பர், சுசீந்திரம், கன்னியாகுமரி கோவில்கள் வருமானம் 150 கோடிகள்

10. கோவை ஈச்சனாரி விநாயகர், மருதமலை, பேரூர், ஈரோடு, திருப்பூர்,நீலகிரி,சத்தியமங்கலம் கோவில்கள் வருமானம் 150 கோடிகள்

11. திருச்செந்தூர் முருகன், தென்காசி கோமதியம்மன், ராஜபாளையம், விருதுநகர், சிவகாசி,கோவில்பட்டி, குற்றாலீஸ்வரர் கோவில்கள் வருமானம் 150 கோடிகள்

12. பிள்ளையார்பட்டி விநாயகர், குன்றக்குடி முருகன், காரைக்குடி, புதுக்கோட்டை கோவில்கள் வருமானம் 100 கோடிகள்

13. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோபி, விழுப்புரம், கோவில்கள் 100 கோடிகள்

14. திண்டுக்கல், காஞ்சி,கரூர், திருவாரூர், நாகப்பட்டினம்,கடலூர், கோவில்கள் வருமானம் 100கோடிகள்


ஆக இந்துக் கோவில்களில் பக்தர்கள் உண்டியல் மூலம், நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றுதல் மூலம், திருக்கல்யாணம், தேர் இழுப்பு, மொட்டையடித்தல், அர்ச்சனை, அபிஷேகம், ப் என்பதான சடங்குகள் மூலம், பிரசாத விற்பனை என்பதன் மூலமும்,வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்களுக்கு மன்னர்கள் எழுதிவைத்த பல ஆயிரம் ஏக்கர்கள் நிலங்கள், கோவிலைச் சுற்றிய வீதிகளில் இருக்கும் கடைகள் மூலம் மிகமிகக் குறைந்த குத்தகை இவைகளின்று வரும் வருமானத்தின் அளவு என்பது

150+150+150+150+100+150+200+100+150+150+100+100+100= 1800கோடிகள்

குறைந்தபட்ச வருமானம் என்பது கோவில்கள் வாயிலாக 1800 கோடிகள்.

கோவில்கள் வழியாக வரும் இதுபோக சைவ ஆதீனங்களது சொத்துக்கள் வழியாக வரும் வருமானம் வேறு. பல ஆயிரம் கோடி சொத்துக்கள் பல்வேறு சைவ ஆதினங்களுக்குச் சொந்தமானவை.

காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு செப்டம்பர் இரண்டாம் தேதி சென்றிருந்தேன். இரண்டுநாள் முன்பாக ஆகஸ்ட் 30தில் குடமுழுக்கு நடந்த கோவிலில் பிரகாரத்தில் விளக்கு இல்லை. கோவில் கோபுரத்திற்கு மஞ்சள்காவி மொத்தமாக சிற்பங்கள்மீது அடித்து துவம்சம் செய்திருந்தார்கள். கோவில்கள் பராமரிப்புக்கு இவ்வளவுதான் செலவு.

ஹூண்டாய் கார் கம்பெனி மாதிரி பெரிய நிறுவனங்கள் 5-10% நிகர லாபத்தில் இயங்குகிறது. ஒரு தொழிலில் , மொத்த விற்பனையில் 10%லாபமாக 1800 கோடி வருமானம் வரவேண்டும் எனில் 18,000 கோடிக்கு விற்பனை நடக்க வேண்டும்.

18,000 கோடி விற்பனை செய்யும் நிறுவனம் மக்களால் மதிக்கப்படும். அதன் ஊழியர்கள் சிறப்போடு கவனிக்கப்படுவார்கள். அதன் வாடிக்கையாளர்கள் கொண்டாடப்படுவார்கள்.

தமிழகத்தில் 1800 கோடிக்கும் மேலாக வருமானம் தரும் துறை இந்துக் கோவில்கள் துறை, தமிழகத்தின் 2006-07 பட்ஜெட் 39,000கோடியில் 5% வரவு வருவது இந்துக்கள் கோவில்கள் துறை.

மக்கள் முட்டாள் சீரியல்கள், நிகழ்ச்சிகள் மூலம் 500 கோடி பிசினெஸ் செய்யும் சன்குழுமம் நடத்தும் டிவி நிறுவங்களுக்கும், ஜெயாடிவிக்கும் தரும் கவனத்தை, 1800 கோடிகள் வருமானம் தரும் கோவில்களுக்குச் சிறப்பு மரியாதை, மதிப்பைத் தரப் பழகவேண்டும்

மேல்மருவத்தூர் கோவில் நிறுவனம் இந்தத் துறையின் கீழ்வராததால் விளைந்த நன்மைகள்:
1)பாலி டெக்னிக் கல்லூரி
2)இஞ்சினியரிங் கல்லூரி
3) மருத்துவப் படிப்புக்கல்லூரி + மருத்துவமனை என மக்களுக்கு பக்தர்களின் காணிக்கை, சடங்குகள் வழி வருமானம் செலவிடப்பட்டிருக்கிறது.

காஞ்சி சங்கரமடம் மற்றும் மடத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஞ்சி காமாஷி கோவில் + இதர கோவில்கள் வழி பக்தர்கள் அளிக்கும் காணிக்கை, சடங்குகள், ப்ரஸாத விற்பனை வருமானம் சங்கரா பள்ளிகளாக, சங்கரா கல்லூரிகளாக தமிழகமெங்கும் மக்களுக்கு உதவும் வழியில் செலவிடப்பட்டு வருகின்றன.

இந்துமதம் கிறித்துவ மிஷநரி மாதிரி மருத்துவமனை, பள்ளிகள் என்று மக்களுக்குப் பயன்படுமாதிரியான நல்லதைச் செய்வதில்லை என்பது பொதுவான குற்றச்சாட்டு மக்களிடத்தில் இருப்பது.

1800 கோடிகளைச் செலவழித்து 50 கல்லூரிகள் கட்டலாம். படிப்புக்கு இட ஒதுக்கீடு அவசியப்படாமல் கேட்டால் படிப்பு கிடைக்கும் படி இடஒதுக்கீட்டை இல்லாமல் ஆக்கிவிடலாம். மருத்துவமனைகள் பல கட்டி மக்களின் சுகாதார, ஆரோக்கியம் பேணலாம்.

இந்துக்கோவில்கள் வழி வரும் 18000 கோடி வருமானத்தை கடவுளே இல்லை..இல்லை..இல்லை கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி என்கிற கொள்ளைக்கூட்டம் கொள்ளையடிக்கிறது தமிழக அரசு அதிகாரத்தில் 40 ஆண்டுகளாக இருந்தபடியே.

வெட்டியான பிராமண எதிர்ப்பு என்பதில் மக்களை திசைதிருப்பி, காணிக்கையை உண்டியலில் மட்டுமே போடவும் என்று அறிவிப்புப் பலகைகள் வைத்து, மிக மலிவாக குத்தகையை கழகக் கண்மணிகளுக்கு விட்டு, என்று எல்லாவகையிலும் மொத்தமாக கோவில் வருமானங்களான நிதியைக் கொள்ளையடிப்பது தமிழக அரசுகள்.

ஆந்திராவில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் வருமானத்தில் ஒரு யூனிவர்சிட்டி, 25 கல்லூரிகள், கல்விநிலையங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் என இறைவனால் கிடைக்கும் வருமானம் கல்விக்கு முழுமையாகப் பயன்படுத்துகிறது.

பொதுமக்களே பிரபலமான கோவில்களின் வருமான விபரங்கள்,கடைகள், நிலக்குத்தகை விபரங்கள், குத்தகை எடுத்திருப்போர் விபரங்கள், குத்தகைக் கட்டணமும் மார்க்கெட் நிலவரமும் பொதுவில் வெளியிடப்பட வேண்டும் என்று கோரிக்கையை உங்கள் பகுதியில் உள்ள கோவில்களில், மாவட்ட ஆட்சித்தலைவருக்கு கோரிக்கையாக எழுத்துமூலம் வையுங்கள்.

அரசியல் திரா"விட"க் கொள்ளைக் காரர்களைக் கேள்விகள் கேட்டுத் துளைத்து எடுத்துத் துரத்தி அடிப்போம்.


கீழே தகவலுக்காக, கொஞ்சம் பிரபலமான, அரசுக் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்கள் லிஸ்ட்.

அன்புடன்,

ஹரிஹரன்Sl.
No. District Temple Name & Place
1. Chennai Arulmighu Parathasarthyswamy Temple, Triplicane, Chennai
2. Arulmighu Kapaleeswarar Temple, Mylapore, Chennai
3. Arulmighu Vadapalaniandavar Temple, Vadapalani, Chennai
4. Arulmighu Ekambareswarar Temple, Thangasalai, Chennai
5. Arulmighu Gangadheeswarar Temple, Purasawalkam, Chennai
6. Arulmighu Marundheeswarar Temple, Thiruvanmiyur, Chennai
7. Arulmighu Mahalakshmi Temple, Besant Nagar, Chennai
8. Arulmighu Mundakakanniamman Temple, Mylapore, Chennai
9. Arulmighu Kalikamabal Temple, Thambu Chetty Street, Chennai
10. Arulmighu Sakthi Vinayakar Temple, K.K. Nagar, Chennai
11. Arulmighu Agastheeswarar & Prasanna Venkatesaperumal Temple, Chennai
12. Arulmighu Agastheeswarar Temple, Villivakkam, Chennai
13. Thiruvallur Arulmighu Subramaniyaswamy Temple, Thiruthani
14. Arulmighu Devikarumariamman Temple, Thiruverkadu
15. Arulmighu Thiyagarajaswamy Temple, Thiruvottriyur
16. Arulmighu Mahishasuramardhini Temple, Mathur
17. Arulmighu Vedhapureeswarar Temple, Thiruverkadu
18. Arulmighu Vadaranyeswarar Temple, Thiruvalangadu
19. Kanchipuram Arulmighu Devarajaswamy Temple, Kancheepuram
20. Arulmighu Kamatchiamman Temple, Mangadu
21. Arulmighu Kandaswamy Temple, Thirupporur
22. Arulmighu Subramaniaswamy Temple, Vallakottai
23. Arulmighu Sundareswarar Temple, Kovur.
24. Vellore Arulmighu Lakshminarasimhaswamy Temple, Sholingar
25. Arulmighu Balamurugan Temple, Rathinagiri
26. Arulmighu Ellaiamman Temple, Vettuvanam
27. Arulmighu Vilvanatheeswarar Temple, Thiruvalam, Katpadi Taluk
28. Thiruvannamalai Arulmighu Arunachaleswarar Temple, Thiruvannamalai
29. Arulmighu Renugadeviamman Temple, A.K.Padavedu
30. Arulmighu Mariamman Temple, Pudur, Sengam
31. Trichy Arulmighu Ranganathaswamy Temple, Srirangam
32. Arulmighu Mariamman Temple, Samayapuram
33. Arulmighu Thayumanavaswamy Temple, Rockfort, Trichy
34. Arulmighu Vekkaliyamman Temple, Uraiyur, Trichy
35. Arulmighu Jembukeswarar Akilandeswari Temple, Thiruvanaikkaval
36. Arulmighu Prasanna Venkatachalapathy Temple,. Gunaseelam,
37. Arulmighu Pundarikatshaperumal Temple, Thiruvallarai
38. Arulmighu Subramaniaswamy Temple, Kumaravayalur
39. Arulmighu Uthamar Temple, Pitchandarkoil
40. Arulmigh Gneelivaneswarar Temple, Thiruppaigneeli, Manachanallur
41. Karur Arulmighu Kalyanavenkatramanaswamy Temple, Thaanthondrimalai
42. Arulmighu Kalyanapasupatheeswarar Temple, Karur Town
43. Arulmighu Mariamman Temple, Karur Town
44. Perambalur Arulmighu Mathurakaliamman Temple, Siruvachur
45. Arulmighu Kaliyuha Varadarajaperumal Temple, Kallankuruchi
46. Arulmighu Madhanagopalaswamy Temple, Perambalur Town
47. Pudukottai Arulmighu SanthanathaswamyTemple, Pudukottai Town
48. Arulmighu Veeramakaliamman Temple, Peramur
49. Arulmighu Muthumariamman Temple, Konnaiyur, Thirumayam Taluk
50. Thanjavur Arulmighu Mariamman Temple, Punnainallur
51. Arulmighu Swaminathaswamy Temple, Swamimalai
52. Arulmighu Venkatachalapathyswamy Temple, Uppliyappankoil
53. Arulmighu Kodiamman Temple, Thanjavur
54. Arulmighu Mullaivananathaswamy Temple, Thirukkarugavur
55. Arulmighu Thenupureeswarar Temple,Patteeswaram
56. Arulmighu Naganathaswamy Temple, Thirunageswaram
57. Arulmighu Neelakandapillyar Temple, Enthal, Peravurani Taluk
58. Arulmighu Suriyanarayanaperumal Temple, Suriyanarkoil
59. Thiruvarur Arulmighu Thiagarajaswamy Temple, Thiruvarur
60. Arulmighu Rajagopalaswamy Temple, Mannarkudi Town
61. Arulmighu Mahamariamman Temple, Valangaiman
62. Arulmighu Abathsahayeswarar Temple, Alangudi
63. Arulmighu Sowrirajaperumal Temple, Thirukkannapuram, Nannilam Taluk
64. Nagapattinam Arulmighu Neelayathatchiamman Temple, Nagapattinam
65. Arulmighu Prasanna Mariyamman Temple, Mayiladuthurai
66. Arulmighu Subramaniaswamy Temple, Ettukudi
67. Arulmighu Uthvaganathaswamy Temple, Thirumanancheri
68. Arulmighu Swetharanyeswarar Temple, Thiruvenkadu
69. Arulmighu Vedaranyeswarar Temple, Vedaranayam
70. Arulmighu Amirthakadeswarar Temple, Thiurkadaiyur
71. Arulmighu Vaidhayanathaswamy Temple, Vaitheeswarankoil
72. Villupuram Arulmighu Anjaneyar Temple, Vizhupuram Town
73. Arulmighu Chandramouleeswarar Temple, Thiruvakkarai
74. Arulmighu Angalamman Temple, Melmalaiyanoor
75. Arulmighu Subramaniaswamy Temple, Mylam
76. Cuddalore Arulmighu Padaleeswarar Temple, Thirupathiripuliyur
77. Arulmighu Devanathaswamy Temple, Thiruvanthipuram
78. Arulmighu Viruthagireeswarar Temple, Virudhachalam
79. Arulmighu Kolanjiyappar Temple, Manavalanallur, Virudhachalam
80. Arulmighu Veera Anjaneyaswamy Temple, Cuddalore
81. Madurai Arulmighu Meenakshi Sundareswarar Temple, Madurai
82. Arulmighu Koodalazhagar Temple, Madurai
83. Arulmighu Subramaniaswamy Temple, Thirupparankundram
84. Arulmighu Kallazhagar Temple, Azhagarkoil, Melur Taluk
85. Arulmighu Mariamman Temple, Vandiyur Theppakulam, Madurai Town
86. Arulmighu Kalamehaperumal Temple, Thirumohoor
87. Arulmighu Solaimalai Murugan Temple, Alagarkoil
88. Arulmighu Prasanna Venkatesaperumal Temple, Thallakulam, Madurai
89. Dindugal Arulmighu Kalahastheeswarar Temple, Dindugul Town
90. Arulmighu Dhandayuthapaniswamy Temple, Palani
91. Arulmighu Gopinathaswamy Temple, Reddiarchathiram
92. Arulmighu Kottai Mariamman Temple, Dindigul Town
93. Arulmighu Kulanthaivelappar Temple, Ottanchathiram
94. Arulmighu Kurinji Andavar Temple, Kodaikanal
95. Theni Arulmighu Gowmariyamman Temple, Veerapandi
96. Arulmighu Meenakshi Sundareswarar Temple, Andipatti
97. Arulmighu Moongilanai Kamakshiamman Temple, Devathanapatti,
98. Sivagangai Arulmighu Vettudaiyar Kaliyamman Temple, Ariyakurichi
99. Arulmighu Adaikalamkatha Ayyanar Temple, Madapuram, Sivagangai Taluk
100. Arulmighu Karpagavinayagar Temple, Pillayarpatti
101. Arulmighu Koppudayanayakiamman Temple, Karaikudi
102. Arulmighu Muthumariamman Temple, Thayamangalam
103. Arulmighu Muthumariamman Temple, Meenakshipuram, Karaikudi Town
104. Ramanatha-puram Arulmighu Ramanathaswamy Temple, Rameswaram
105. Arulmighu Bahampiriyal Vanmeeganathaswamy Temple, Thiruvottriyur
106. Virudhunagar Arulmighu Mariamman Temple, Irukkangudi
107. Arulmighu Nachiar Temple, Srivilliputhur
108. Arulmighu Vannivinayakar Temple, Madam Chinnaodaipatti
109. Arulmighu Viswanathaswamy Temple, Sivakasi
110. Arulmighu Vaidhyanathaswamy Temple, Madavarvilagam
111. Arulmighu Chokkanathaswamy Temple, Aruppukkottai Town & Taluk
112. Thirunelveli Arulmighu Nellaiyappar Temple, Tirunelveli Town
113. Arulmighu Courtralanathaswamy Temple, Courtralam
114. Arulmighu Sankaranarayanaswamy Temple, Sankarankoil
115. Arulmighu Kasiviswanathaswamy, Thenkasi
116. Arulmighu Thirumalaikumaraswamy Temple, Panpozhi
117. Arulmighu Palvanna Nathaswamy Temple, Karivalamvanthanallur
118. Arulmighu Suyambulingaswamy Temple, Uvari, Radhapuram Taluk
119. Tuticorin Arulmighu Subramaniyaswamy Temple, Thiruchendur
120. Arulmighu Sankara rameswarar Temple, Tuticorin Town
121. Arulmighu Poovanna nathaswamy Temple, Koilpatti
122. Arulmighu Mutharamman Temple, Kulasekarapattinam
123. Arulmighu Sivakoluntheeswarar Temple, Thiruchendur
124. Kanniyakumari Arulmighu Bagavathiamman Temple, Kanniyakumari
125. Arulmighu Dhanumalayaswamy Temple, Suchindram
126. Arulmighu Bagavathiamman Temple, Mandaikadu
127. Arulmighu Nagaraja Temple, Nagarkoil
128. Arulmighu Isakkiamman Temple, Muppanthal
129. Coimbatore Arulmighu Subramaniyaswamy Temple, Maruthamalai
130. Arulmighu Koniamman Temple, Coimbatore Town
131. Arulmighu Vanapadirakaliyamman Temple, Theakkampatti
132. Arulmighu Vazhaithottathu Ayyan Temple, Ayyampalayam
133. Arulmighu Vinayagar Temple, Eachanari
134. Arulmighu Maasaniamman Temple, Anamalai
135. Arulmighu Patteeswaraswami Temple, Perur
136. Arulmighu Aranganathaswamy Temple, Karamadai
137. Arulmighu Thandumariamman Temple, Coimbatore
138. Arulmighu Visveswarar & Veeraraghavaperumal Temple, Thirupur Town
139. Arulmighu Iyappaswamy Temple, Pudhusithapudur
140. Arulmighu Avinasilingeswarar Temple, Avinashi
141. Arulmighu Amanalingeswarar Temple, Thirumoorthimalai
142. Arulmighu Velliangiriandavar Temple, Poondi
143. Arulmighu Mariamman Vinayakar Temple, Sulakkal
144. Nilgiris Arulmighu Mariamman Temple, Udhagamandalam
145. Arulmighu Vinayakar Temple, Coonor
146. Erode Arulmighu Bannariamman Temple, Bannari
147. Arulmighu Subramaniyaswamy Temple, Sivanmalai
148. Arulmighu Sangameswarar Temple, Bhavani
149. Arulmighu Subramaniaswamy Temple, Chennimalai
150. Arulmighu Periamariamman group Temple, Erode
151. Arulmighu Kondathukaliamman Temple, Paariyur
152. Arulmighu Magudeswarar Temple, Kodumudi
153. Arulmighu Veerakumaraswamy Temple, Vellakoil
154. Arulmighu Velayuthaswamy Temple, Thindalmalai
155. Arulmighu Selleeswarar Group Temples, Andhiyur
156. Arulmighu Kadu Hanumantharayaswamy Temple, Dharapuram Town & Taluk
157. Salem Arulmighu Sugavaneswar Temple, Salem
158. Arulmighu Kasiviswanathaswamy Temple, Salem
159. Arulmighu Kottaimariamman Temple, Salem
160. Arulmighu Vennangudi Muniappaswamy Temple, Zahirammapalayam
161. Arulmighu Orukkamalai Varadharajaperumal Temple, Sangagiri Town
162. Arulmighu Prasanna Venkatesaperumal Temple, Sev vaipettai
163. Arulmighu Prasanna Venkatramanaswamy Temple, Karuvalli
164. Arulmighu Badhrakaliamman Temple, Mecheri
165. Arulmighu Siddheswarar Temple, Kanjamalai
166. Namakkal Arulmighu Arthanareeswar Temple, Thiruchengode
167. Arulmighu Lakshminarasimhaswamy Temple, Namakkal
168. Arulmighu Athanoor Amman Temple, Rasipuram
169. Arulmighu Kailasanathaswamy Temple, Thiruchengode Town
170. Dharmapuri Arulmighu Sivasubramaniyaswamy Temple, Dharmapuri
171. Arulmighu Chandrasoodeswarar Temple, Hosur

(108) அனைவரும் அர்ச்சகராகலாமா?

கோவிலின் உள்ளே தெய்வங்கள் உடைகளின்றி இருப்பதை விட வெங்காயம் உடையோடு சிலையாகி இருப்பது நாகரீகமானது என்று திருவாய் மலர்ந்த கருணாநிதியால், இந்து என்றால் திருடன் என்று திருவாய் மலர்ந்தருளிய கருணாநிதியால், இந்துக் கடவுள்களைச் செருப்பால் அடித்த கொள்கையுடைய, இந்துக் கடவுளே இல்லை இல்லை இல்லை ..கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி என்கிற வெங்காயத்தின் கொளுகையைச் சிங்கமாகக் காக்கும் கருணாநிதியால் எடுத்து வரப்பட்ட திட்டமான அனைவரும் அர்ச்சகராகலாம் என்பது எத்துணை அக்கறையானது என்பதில் இருக்கும் போலித்தனம் தாண்டியும், கருத்தாகிய "அனைவரும் அர்ச்சகராகலாமா" என்கிற விஷயத்தைப் பார்க்கலாம்.

முதலில் அனைவரும் அர்ச்சகராகலாமா என்பதை விட யாரெல்லாம் அர்ச்சகராகக்கூடாது எனப் பார்க்கலாம்.

யாரெல்லாம் அர்ச்சகராகக் கூடாது:

1. இந்துவென எம்மையும் சாக்கடையில் தள்ளாதே என்கிற எண்ணமுடையோர்

2. கடவுள் இல்லை இல்லை இல்லை இல்லவே இல்லை என்கிற எண்ணமுடையோர்

3. கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி என்கிற எண்ணமுடையோர்

4. தன் வீட்டில் காலைச்சிற்றுண்டி இட்லிக்குத் தான் கேட்ட கெட்டிச்சட்னி கிடைக்கவில்லை என்றால் கூட சமூகநீதி மறுக்கப்பட்டதாக உணர்ந்து அதை உணர்த்தும் விதமாக கடவுளின் சன்னதிக் கருவறையில் தனது வீட்டு நாப்கின்களை உலர்த்துவேன் என்கிற எண்ணங்களை உடையவர்கள்

5. சொந்த செலவிலே பிறர்க்கும், தனக்கும் சூனியம் வைக்கின்ற சிந்தனை உடையவர்கள்

6. தன் சொந்த அப்பாவை வீட்டிலே மாமா என்று அழைக்க அறைகூவும் எண்ணம் உடையவர்கள்

7. கால்டுவெல் சொன்ன திராவிடத்தில் நம்பிக்கை உடையவர்கள்

8. மேற்சொன்ன இறை அவமதிப்புக் கொள்கைகளைக் கொண்ட அரசியல் இயங்களோடு மனப்பூர்வமாக இணைத்துக் கொண்ட மனம் உடையவர்கள்

9. இந்து வாழ்வியல் வேத நெறிமுறைகள், வேதங்கள், உபநிடங்கள், இவைகள் சொல்லப்பட்ட வேத மொழி, இந்துமதக் கலாச்சாரம், சடங்குகள், இந்துமதப்பண்பாடு, இந்துமதப் பண்டிகைகள் இவைகளைத் தூற்றும், கேவலமானதாக நினைக்கும் அடிமைச் சிந்தனை மனம் உடையவர்கள்

10. இந்து என்றால் திருடன் என்று சொல்லிக் கஞ்சியை நக்கும் நயவஞ்சகனைத் தலைவனாக ஏற்றுக்கொள்ளும் மனம் உடையவர்கள்


மேற் சொன்ன இந்தக் கருத்துக்களை மனதில் கொண்டவர்கள், இக்கருத்துக்களை வெளியிலிருந்து ஆதரிப்பவர்கள், இக்கருத்துக்களை சிறப்பானதாகப் போற்றுபவர்கள் என்போர் இந்துக் கோவில்களில் என்றும் அர்ச்சகராகத் தகுதியில்லாதவர்கள்.

மேற்சொன்ன கருத்துள்ளவருக்காக கருத்தாகக் கருணாநிதி எல்லோரும் அர்ச்சகராகலாம் என்று திட்டம் தீட்டியிருந்தால், அம்மாதிரியானவர்களை அர்ச்சகராக்கினால், தமிழ்நாட்டில் இது சமூகச் சீரழிவையே எடுத்துவரும். சமூகத்திற்குச் செய்யும் நீதியாக ஒருக்காலும் அமையாது.

அப்போ யாரெல்லாம் இந்துக் கோவில்களில் அர்ச்சகராகலாம்?

மேற்சொன்ன பத்துவிதமான எண்ணங்கள் எவையும் இல்லாத எவரும், மனம் முழுதும் இறைபக்தி, தெய்வநம்பிக்கை, இரக்கம், நேர்மை என்பவைகளால் நிறைந்த எவரும் முறையான சாஸ்திர, சம்பிரதாயங்களில் பயிற்சி எடுத்துக் கொண்டு இந்துக்கோவில்களில் அர்ச்சகராகலாம்.


அன்புடன்,

ஹரிஹரன்

Sunday, January 21, 2007

(107) இந்துக்கோவில்களில் ரீஃபார்ம்கள்

ஜி.ராகவன் தனது இந்தப்பதிவில் இந்துக்கோவில்களில் வரவேண்டிய ரீபார்ம்ஸ் குறித்துச் சொல்லியிருந்த பல பாயிண்டுகளில் எனது இரண்டனாவாக சில கருத்துக்களைச் சொல்லியிருந்தேன்.

எனது கருத்திற்கு அவர் சொல்லியிருந்த சில பதில்களுக்கு / எழுப்பிய வினாக்களுக்கு எனது பதில் கருத்தைத் தனியாகவே பதிவாக இங்கே இடுகிறேன் ஜி.ராகவனின் கருத்துக்கள் நீல வர்ணத்திலும் எனது கருத்துக்கள் சிவப்பு வர்ணத்திலுமாக வரிசையாக இடப்பட்டிருக்கிறது:

1. திருக்கோயிலில்களில் சாதீய பாகுபாடுகள் இன்றி விருப்பமுடைய எவரும் பூசனை செய்யும் நிலை வர வேண்டும். இதை ஏற்காமல் வழிவழி வருவது என்ற வாதம் செய்வது எடுபடாது. வழிவழி வரத்தொடங்கியது எப்பொழுதிலிருந்து என்று ஆய்ந்தால் பல இடங்களில் உண்மை தெளிவாகும்.

ஹரி: *விருப்பம் மட்டுமே போதுமா?
இங்கே விருப்பத்தினை விட மிக அவசியமானது இறைவன் மீதான நம்பிக்கையும், தெய்வத்தின் மீதான பக்தியும் மிக அவசியமில்லையா? வெறும் விருப்பம் மட்டும் எனில் இறைவனே இல்லை என்போரும் வர விரும்பலாம் இறை பக்தி தவிர்த்த இதர பல்வேறு விஷயங்களுக்காக:

ஜி.இராகவன்: என்ன சொல்கின்றீர்கள் ஹரிஹரன். நான் அனைத்துச் சாதியினரும் பூசை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்கிறேன். நீங்கள் அதைப்பற்றி ஒன்றும் சொல்லாமல் இறைநம்பிக்கையில்லாதாரும் வேறுபல காரணங்களுக்காக வருவார்கள் என்கிறீர்களே. அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு?

ஹரி: என்ன தொடர்பா? இந்து அறநிலையத்துறை இருப்பது அரசின் நேரடிக்கட்டுப்பாட்டில். தற்போதைய வழிவழியாக அர்ச்சகர்கள் இறைவனின் சேவைக்கு வரும் நிலை அறவே நீக்கப்பட்டு, விருப்பமுடைய எவரும் ஆகலாம் எனும் சூழலில், அர்ச்சகர்கள் போஸ்டிங் என்பது இதர அரசுத்துறை நிறுவனங்களில் நடக்கும் பணி நியமனங்கள் போன்றதாகவே நடைமுறையில் செய்யப்படும்.

அரசு நிறுவனங்களில் பணி நியமனங்கள் நேரடியாக அரசியல் கட்சிகளின் வட்ட , மாவட்ட, அமைச்சர்கள் கையூட்டுப் பெற்றுக்கொண்டு செய்கின்ற பரிந்துரையின்படியே நடக்கின்ற நிதர்சனம் மாதிரியே இனிமேல் இந்துக் கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனங்களும் நிகழும்.

அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வட்ட, மாவட்டங்கள் அர்ச்சகர் பணிக்குப் பரிந்துரைப்பதில் முன்னுரிமை அந்தக் கட்சிகளின் விசுவாசிகளுக்கே தரப்படும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஆக தற்போதிருக்கும் வழி வழி அர்ச்சகர்கள் நியமனம் கட்டுடைக்கப்பட்டு முற்றிலும் மாற்றப்படுவதில் கோவில் செல்லும் உண்மையான ஆன்மீகப் பற்றுதல் உள்ள பக்தர்களுக்குப் பலனாக விளைவது என்பது:

1. அர்ச்சனை டிக்கெட்டில் 5 ரூபாய் என இருந்தாலும் அர்ச்சனைக்கு முதலிலேயே 20 ரூபாய் தந்தாக வேண்டும் / தட்டில் போட்டாக வேண்டும்.
(நியமனத்திற்கு வட்ட/மாவட்ட அரசியல் தலையிடம் தந்த பணத்தைத் திரும்பப் பெற்றாகவேண்டிய கட்டாயம் அரசு நியமித்த பொதுவில் வரும் அர்ச்சகருக்கு நிர்பந்தமாகிறது)

2. வட்டார போக்குவரத்து அலுவலகம், (ஆர்டிஓ ஆபீஸ்), ரெவென்யூ டிபார்ட்மெண்ட் மாதிரி கோவில் நிகழ்ச்சிகளுக்கு திருக்கல்யாணம், தேர்புறப்பாடு, வடைமாலை சாற்றுதல் போன்றவற்றுக்கு கட்டளைதாராக ஸ்பான்ஸர் செய்ய விரும்பினாலும் கோவில் அரசு நியமன பொது அர்ச்சகர்கள் /அலுவலர்கள் சிண்டிகேட்டுக்கு ஃபார்மாலிட்டீஸ், கவனிப்பு என்று தனியாக வெட்ட வேண்டிய கட்டாயம் வரும்.
(அரசியல் கட்சி வட்ட மாவட்ட தலைமைகளுக்குக் கையூட்டுத் தந்து பெறும் நியமன பணிகளில் வருவோர் நிதர்சனத்தில் கையூட்டாகத் தந்ததைத் திருப்பி எடுப்பதில் முன்னுரிமை முனைப்புக் காட்டுவார்கள்)

3. வெளிப்புற நடைமுறை உலகில் நிரம்பியிருக்கும் விஷயங்களில் கொடுமை, கொடுமை என்று கோவிலுக்குள் வந்தால் நிஜமாக கொடுமை தலைவிரித்தாடும். மெய்யான ஆன்மீக பக்தர்கள் நியமன அர்ச்சகர்களின் எதிர்பார்ப்பு/தேவைகளை பூர்த்திசெய்யாத நிலையில் அர்ச்சனை/தீபாராதனை என எதுவும் நிகழாது!

4. ஏற்கனவே அர்ச்சனை செய்யப்பட்ட பூக்கள் / ஏற்றப்படாத கற்பூரம் போன்றவை கோவில் தெருமுனையில் நம்பிக்கையான ஆட்கள் மூலம் ரீ-சேலுக்கு அனுப்பப்படும்!

5. அர்ச்சகராக நியமனம் செய்ய பரிந்துரைத்த வட்ட/மாவட்ட அரசியல் பின்ணணியுடன் கூடிய ஒரு குறிப்பிட்ட பங்க் கடையில் மட்டுமே பூஜைப் பொருட்கள் வாங்கும்படி மெய்யான ஆன்மீக பக்தர்கள் அறிவுறுத்தப்படுவர்.

6. குறிப்பிட்ட கடையில் அர்ச்சனை பூஜைப்பொருட்கள் வாங்காத பக்தர்கள் மீது சுடுசொற்கள் அர்ச்சனை செய்யப்படும் நிலை வரும்.

7.கோதண்டராமர், கல்யாணராமர், பட்டாபிராமர் கோவில்களில் மூலவர், உற்சவர் சிலைகளில் இருக்கும் சீதையின் முதுகில் அணிலுக்கு இருப்பதான கோடுகள் இருக்கிறதா எனும் சீரிய ஆராய்ச்சியில் ஈடுபடுவார்கள்.

(இப்போதைக்கு இந்த ஏழு காரணங்கள் போதும் :-)) )

3. ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் கோயில் அருச்சகர்களவோ பூசாரிகளாகவோ வர வேண்டும். தூய்மை என்று சாக்குச் சொல்லக் கூடாது. இன்று ஆண்களும் பெண்களும் இணைந்து பல இடங்களில் வேலை செய்கிறார்கள். அங்கெல்லாம் தூய்மை கெட்டு விட்டதா! அனைத்தையும் கடந்த பரம்பொருள் இதனால் தீட்டாவார் என்று நினைப்பது அறிவீனம். பெண்களின் உடல்நலம் பாதிக்கப்படும் என்று சொல்வதும் தகாது, அந்த சமயங்களில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். இன்றைக்குப் பெரிய கோயில்களில் எத்தனை அருச்சகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ஒரு நாள் விடுப்பில் ஒன்றும் குறைந்து விடாது, அது போலத்தான் இங்கும்.

ஹரி: *புதிதாய்ச் சொல்ல ஏதுமில்லை இதில்.
பெண்களுக்குத் தேவையான உடனடித் தேவையாக இது இருக்கிறதா?
பெண்கள் பூசாரியானால், அதே இடத்தில் தெய்வ பக்தி, இறைவனை நம்பாத வெறும் விருப்பம் மட்டும் இருக்கும் நபர் பூசாரி வேலையில் இருக்கும் நிலையில் பூஜை பகவானுக்கு நடக்குமா?
அர்ச்சக அம்பாளை மட்டுமே விருப்பத்தால் வேலையாக ஏற்றவர் ஆறுகாலம் தாண்டியும் துதித்து பூஜை தொடர்வது தெய்வக் குத்தமாகிவிடாதா?:-)))

ஜி. இராகவன்: அப்படியானால் பெண்களுக்கு இறைபக்தி கிடையாது என்கின்றீர்களா? இதென்ன அபத்தம். பணிக்கு ஆளெடுக்கையில் தகுதியானவர்தானா என்று பார்த்துதான் எடுக்க வேண்டும். அவர் எந்தச் சாதியாக இருந்தால் என்ன....எந்தப் பாலினமாக இருந்தால் என்ன? பக்தி இருந்தால் பெண் என்ன...திருநங்கைகளும் பூசனை செய்யலாம்.
ஹரி: நான் பெண்களுக்கு பக்தியில்லை என்று எங்கே சொன்னேன் ராகவன்?

கோவிலில் பெண்கள் அர்ச்சகராகின்ற சூழலில், அதே கோவிலில் வட்ட, மாவட்ட அரசியல் தலைமையின் பரிந்துரையில், கையூட்டுத் தந்து அரசினால் நியமிக்கப்பட்ட, இப்பணியில் விருப்பமுடைய நபர் அர்ச்சகராக வரும் நிலையில் தழைப்பது ஆன்மீகமாக இருக்குமா? கோவில் இன்னொரு ஆர்டிஓ ஆபீஸ் ஆகும். இத்தகையவர் பணியிடத்தில் இருக்கும் பெண்களை ஆறுகாலம் தாண்டியும் துதித்துப் பூஜிப்பது தெய்வகுத்தம் இல்லையா என்பதே நான் கேட்பது.


ஜி.இராகவன்: திருத்தணியில் பாக்குப் பொட்டலத்தை வாயில் பிரித்துப் போட்டுக் கொண்டு திருநீறும் குங்குமமும் கொடுக்கிறார்களே..அவர்களா பக்திப் பழங்கள்?

ஹரி: ஒத்துக்கொள்கிறேன் இவர்கள் பக்திப் பழங்கள் இல்லை. ஆனால் அரசுத்துறை நியமன பணியாளர்கள் மாதிரி அழுகல் பழங்களாக இல்லை. மாநில அரசைத் தேர்ந்தெடுக்க ஐடியல் குவாலிட்டீஸ் பார்த்து தேர்ந்தெடுக்க வாய்ப்பிருக்கிறதா பொதுமக்களுக்கு? இல்லையே? இருப்பதில் குறைவான கேடுதருவது எது என்பது தானே பார்க்கிறோம்?

இன்று இருக்கும் அர்ச்சகர்கள் நியமனம் வழிவழியாக வருவது என்பதான நடைமுறை இன்றளவில் முற்றுலும் திருப்தி அளிக்கும் இறைச்சேவையை பக்தர்களுக்கு அவர்கள் தராமலிருக்க அரசு அவர்களுக்குத் தரும் மிகக் குறைவான ஊதியம் முதன்மைக் காரணம்.

அரசுப் போர்வையில் அரசியல் கட்சிகளின் வட்ட / மாவட்டத் தலைமைகள் கையூட்டுப் பெற்றுச் செய்யும் அர்ச்சகர்கள் நியமனத்தின் மூலம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு 95% அழுகல் சேவையும், கூடுதலாக பல நூறுமடங்கு மனநிம்மதி இழப்பும் மட்டுமே எடுத்துவரும்.அரசுத்துறைகளில் அரசியல் கட்சிகளால் வழிவழி நடக்கும் பணி நியமனங்களில் ஆராயாமலே அழுகல் தெரியவில்லையா? இல்லை இதுமாதிரி ஆலயங்களில் வரவேண்டியதுதான் வரவேண்டிய சமூக நீதியா?

சொல்லுங்கள் ஜி.ராகவன்.

(ஜி.இராகவன் பரிந்துரைக்கும் இதர இந்துக்கோவில் ரீபார்ம்ஸ்கள் பாதுகாப்பு / மொழிரீதியானவைகளைச் சாய்ஸில் தற்போதைக்கு விடுகிறேன்)

அன்புடன்,

ஹரிஹரன்Wednesday, January 17, 2007

(106) துணிவு வரும் வழி

கல்லூரி வாழ்வில் பத்தோடு பதின்னொன்னா எந்த செயல்பாட்டிலும் சிறப்பான தனித்துவம் ஏதும் இல்லாம இருந்தாலும் சிங்கமாக ஏற்றுக்கொள்ளப்படுவீர்கள். பாழாய்ப்போன ஒம்போதா இருந்தா... அதுவும் கல்லூரி வகுப்பில் ஒரு ஒம்போது மாணவன் படும்பாடு ..த்சௌ..த்சௌ சொல்லி மாளாது. உடன் பயிலும் அறிவுசீவிகள் ஒவ்வொரு வகுப்பிலும் அந்த ஒம்போது மாணவனின் சுயமரியாதையை எள்ளி நகையாடுவதை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

எனது கல்லூரி வாழ்க்கையில் சில ஆண்டுகள் ஒம்போது மாணவனாக இருந்த நேரடி அனுபவம் எனக்கு இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. இது ரீலு இல்ல ரியலு ஸ்டோரி.

***************************** சீன் 1 *************************

எனது கல்லூரி வகுப்பில் எனது ரோல் நம்பர் ஒம்போது. எனது வகுப்போ மாணவியரும் உடன் பயிலும் கோ-எட்.

அட்டண்டன்ஸ் எடுக்கும்போது வேறு எதிலாவது கவனத்துடன் இருந்தால் ஒம்போது நான் தான் என ஒத்துக்கொள்ளும் வரையில் மீண்டும் மீண்டும் ஒலிக்கப்படும்.

வகுப்பின் பின் வரிசையில் இருந்து பாகுபாட்டையும்,சாதியையும் அறவே ஒழித்துவிட்ட வடதமிழகத்து பகுத்தறிவுப் பகலவன்களின் கொழுந்துகள் டேய் அய்யரு... ஒம்போது... புரொபஸர் கூப்புடுறாருன்னு.. நினைவூட்டல்கள் அத்துணை அன்பாய்ச் சொல்வார்கள்.

ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஆறு முறை ஆறு வகுப்புகளில் கூப்பிடப்படும் போதோ, சுயமாய் எழுந்தோ ஒம்போது உள்ளேன் ஐயா / ப்ரஸண்ட் சார் என்று சொல்லி அலையாய் எழும் விஷமச் சிரிப்புக்கிடையே எனது வருகையைப் பதிய வேண்டிய கட்டாயம்.


0,1,2,3,4,5,6,7,8 இவைகளுக்கு இல்லாத சிறப்பு கவனிப்பு 9 எண்ணுக்கு அதுவும் எதிர்மறையாக ஏன் என்று நான் குழம்பியதில்லை, கூச்சப்பட்டதும் இல்லை. நல்லவேளை எனக்கு ஒன்பது எனும் எண்ணை "ஒம்போது" என்கிற சொல்லாடலின் பின்ணணியில் இருக்கும் கேலித்தொனி கல்லூரியில் நான் படிக்கிற காலத்தில் எனது பிரக்ஞையில்(Consiousness) இதரமாணவர்களின் பிரக்ஞை மாதிரியே இல்லாதிருந்தது இறைவன் எனக்குத் தந்த வரம். (இன்னிக்கும் பல விஷயங்களில் எனது பிரக்ஞை அப்படியே)

******************************** சீன் 2 *******************

எனது கல்லூரி வாழ்வின் இறுதியாண்டில் 1989ல் நிகழ்ந்த சம்பவம். கல்லூரி நாள் விழாவில் நிகழ்வு அரங்கின் கடைசி வரிசையில் எங்கள் வகுப்பு மாணவர்களோடு கலகலப்பாக இருந்த சமயத்தில் அடுத்த துறையின் புரொபஸர் மதியழகன் எங்களிடம் வந்து தேவையில்லாமல் ஏதோ கடிந்து சொல்லிவிட்டு அவர் நகரும் போது ஏஏய்ய்...ன்னு ஒரு பெரிய சவுண்ட் எங்களது குழுவிலிருந்து யாரோ எழுப்ப அந்த இளம் வயது புரொபஸர் மீண்டும் எங்களிடம் வந்து யார்ரா அவன்? நேரா வாடா? என சில துறை மாணவிகள் அங்கே இருந்ததால் கூடுதலாக சவாலுடன் வீரியமான வீரம் காட்டினார்.

மூட் அவுட் ஆகி எங்கள் குழுவினர் அரங்கிலிருந்து கல்லூரி நுழைவு வளைவில் நின்று பேசிக்கொண்டிருக்கும் போது அதே புரொபஸர் அவரது மோட்டார் பைக்கில் எங்களைக் கடந்து சென்றார். அடுத்த விநாடி ஏஏஏய்ய்ய்..னு மீண்டும் அதே சவுண்ட் எங்கள் குழுவிடமிருந்து எழுந்தது. பைக்கைத் திருப்பி திரும்பவும் கல்லூரிக்குள் சென்ற புரொபஸர் நேராக முதல்வர் அலுவலகத்தினுள் சென்றார். நாங்களும் கலைந்து அவரவர் இருப்பிடம் சென்று விட்டோம்.

மறுநாள் காலையில் நோட்டீஸ் போர்ட் அருகே பரபரப்பு. எல்லாத் துறை மாணவர்களும் குழுமியிருந்தார்கள். எனது வகுப்பு மாணவனான இருப்போரிலேயே ஆறு அடி உயரம், கனத்த மீசை, என புரொபஸர் மாதிரியான உடல் வாகோடு இருந்த எனது நண்பன் கும்பகோணம் படையாச்சி குமாரவடிவேல் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதான அறிவிப்பு. சம்பவம் நடந்த போது நாங்கள் இருவரும் அருகருகே இருந்தோம். அவன் ஏதும் செய்யவில்லை என எனக்குத்தெரியும்.

நேராக பிரின்ஸிபால் பொன்னுசாமியின் அறையில் நுழைந்த நான், "சார் குமாரவடிவேல் எதுவும் செய்யவில்லை, நேற்று புரொபஸர் மதியழகனைப் பார்த்து இருமுறை ஏஏஏய்ய்ய்ன்னு ஒலி எழுப்பியது நான் தான் என்றேன்". முதல்வர் பொன்னுசாமி திகைத்தார். ஒடிசலான தேகம், எண்ணைய் போட்டு படிய வாரிய தலை, நெற்றியில் சந்தனம், கண்ணில் கண்ணாடி, காலிலே செருப்பு என இருந்த என்னை மேலும் கீழுமாக சிலமுறை பார்த்தார் புரொபஸர் மதியழகனை வரச்சொல்லி பியூனை அனுப்பினார்.

புரொபஸர் மதியழகன் வந்ததும் நான் தான் நேற்றைய சம்பவத்தில் அவரைப் பார்த்து ஒலி எழுப்பியது என்பதை ஒப்புக்கொண்டு நண்பன் குமாரவேல் தவறுதலாக தண்டிக்கப்பட்டதை மாற்றும் படி முதல்வரிடம் வேண்டிக்கொண்டேன். புரொபஸர் மதியழகன் என்னைப் பார்த்து ஒலிஎழுப்பியது நீயா? நம்பமுடியவில்லை என அதிர்ந்த நிலையில், நான் சஸ்பெண்ட் செய்யப்பட்தை கல்லூரி நோட்டீஸ்போர்டு சில மணித்துளிகளில் சொன்னது. தவறிழைக்காத குமாரவடிவேல் செஸ்பெண்டு செய்யப்பட்டது நீக்கப்பட்டு வகுப்பில் அனுமதிக்கப்பட்டான்.

தவறு செய்யாத எனது நண்பன் அவனது தோற்றம் + கல்லூரிக்கு வராமை+ ஏகப்பட்ட அரியர்ஸ் இவைகளால் அவன் செய்யாத ஒரு விஷயத்திற்கு நான் அனுபவிக்க வேண்டிய தண்டனையை அவனுக்குத் தரப்பட்டதை ஏற்க இயலாத எனது நேர்மையான மனம் பிரின்ஸிபலை அணுகும் துணிவை எனக்குத் தந்தது.

************************ சீன் 3***************************

லிண்டா குட்மேன் எனும் ஆங்கில ஜோதிட,ஜாதக, எண்கணித நிபுணர் கணிச்சா அப்படி இப்படி என்று எனது பிறந்த தேதி 18 என்பதின் கூட்டுத்தொகை 9, ராசி ஸ்கார்ப்பியோ, பிறந்த தேதியின் கூட்டுத்தொகை ஒன்பது என்றிருக்கும் + ஸ்கார்ப்பியோ ராசிக்காரர்கள் துணிவானவர்கள், அவர்கள் தரப்பு வாதத்தை, செயல்பாட்டை (இரக்கமில்லாமல்) மிக உறுதியாகச் செயல்படுத்துவார்கள் எனவே லிண்டா குட்மேன் கணிப்புப்படி நான் பேட் மேன் என எனது மனைவி கல்யாணமான புதிதில் எனது இயல்பான ஒருதரம் சொன்னா நூறுவாட்டி சொன்னமாதிரின்னு (அமைதியாத்தாங்க)எனது சுபாவத்துக்கு எனது பிறந்த தேதி எண்ணிக்கையை லிண்டா குட்மேன் வழியாக் கண்டுபிடிச்சு சொன்னப்பவும் நான் குழம்பியதில்லை.

பிற்பாடு சாவகாசமாக ஒருநாள் மெல்லமாக என் மனைவியிடம் (பெண்ணீயத்துக்கு முன்னாடி ஆண் ஈயம், பித்தளையா பேரிச்சம்பழத்துக்கு இணையானவனா ஆகிடுறதாலே மெல்லமாத்தான் பேசவேண்டி இருக்கு) நான் சுயமாகச் சம்பாதிக்க ஆரம்பித்த 1990ல் இருந்து கூடுதலாக ஒரு செட் டிரஸ் எடுக்க 1999 வரையில் எனது பிறந்தநாள் 18வது டிஸம்பர் 1969ன்னு நினைச்சு தீபாவளி சமயத்துலேயே மூணு செட் டிரஸ் எடுத்து வைச்சுக்கிறது வழக்கம். 2000ல் கால்கட்டுப்போடணும்னு என் கல்யாணத்துக்கு பொண்ணு பாக்க ஆரம்பிக்கும்போது அப்பா அம்மா பழையபேப்பரை தூசி தட்டியபோது கவனித்ததில் எனது பிறந்தநாள் 18வது நவம்பர் 1969ன்னு கண்டுபிடிச்சேன்னு சொன்னப்போ என்மனைவி என்னை ஒரு மார்க்கமாகப் பார்த்து ஒரு மனிதனுக்குத் தன் பிறந்தநாளே சரியாகத் தெரியாதா? 30வயது வரை தன் ஜாதகத்தையே பார்த்ததே இல்லையான்னு ஒரே ஆச்சச்சர்யம்(அதிர்ச்சி).

நான் இப்பவும் அப்படித்தான். ஆங்கில ராசியான அம்பு எய்யும் சஜிட்டாரியஸிலிருந்து பழைய கட்டம் கட்டிய ஜாதக பேப்பரால், பட்டென்று கொட்டுகின்ற ஸ்கார்ப்பியோவுக்கு சந்தர்ப்பவசமா மாறிட்டேன்!

ஜாதகம், ராசிபலன் எல்லாம் எனக்கு ஜாலிக்குத்தான். விளையாட்டா எப்போவாவது ராசிகள் பேப்பரில், வார இதழ்களில் நான் பார்க்கும் போது 12ராசிகளில் எதுக்கு அமோகமா பலன்கள் இருக்கோ அது என்னோடதுன்னு பாவிக்கிறது இப்பவும் என்னோட சுபாவம்.


பகுத்தறிவுச் சுயமரியாதைச் பகலவன்களின் தொலைக்காட்சியில் மேஷ ராசிக்காரகளுக்கு சூரியன் அஸ்தமிக்கும் மேற்கு திசை ஆபத்து என்றும் ஜெயத்து டிவியோ சூரியன் உதிக்கும் கிழக்கு திசைதான் மிகுந்த ஆபத்தானது என்றும் தெற்குதிசையிலிருந்து மக்களை வடக்கிருக்கச் சொல்கின்றார்கள்.

பகுத்தறிவுகள் பரப்பும் தொலைகாட்சி நிகழ்வுகளில் நியூமராலஜிகொண்டு எண்ணங்கள் செயல்களில் எண்கணிதப் பித்து முற்றித்திரியவைக்கிறார்கள். பெயரின் எழுத்துகளின் ராசி எண்மதிப்புக் கூட்டுத்தொகைக்கு குறுக்கீடு என எண்கணிதர் சொல்லி இனிஷியலையே மாற்றுகிறார்கள்... இனிஷியலே மாறுகிறதே என்கிற குற்ற உணர்வே இல்லை!
வாழ்க பகுத்தறிவு... வாழ்க சுயமரியாதை தொலை(க்காட்சி)நோக்கு பரப்பல்!

ஆக ஒரு நபருக்கு மனத் துணிவைத் தருவது எது?

ஒம்போது என்ற நம்பர் தருவது துணிவா? ஸ்கார்ப்பியோ எனும் ராசி தருவது துணிவா? ஒரு நபருக்குத் துணிவென்பது இந்த ரெண்டுவழியாக வர்ற விஷயமா?

உண்மையை நேர்மையா அப்படியே எதிர்கொள்வது என்பதில் அல்லவா துணிவு என்ற ஒன்று ஒருவரிடம் இருப்பது வெளிப்படுகிறது.

என்ன நான் சொல்றது?

அன்புடன்,


ஹரிஹரன்

Tuesday, January 16, 2007

(105) எனது முதல் Close Shave அனுபவம்!!!

திகிலான அனுபவத்தை காயம் படாமல் அதிர்ஷ்டத்தினால் தப்பிப்பதை "க்ளோஸ் ஷேவ்" என்பார்கள். இங்கே Peer Pressure காரணமாக கல்லூரி நாட்களில் ஏற்பட்ட எனது குளோஸ் ஷேவ் அனுபவத்தினைச் சொல்லியிருக்கிறேன்! கல்லூரியில் எனது வகுப்பில் இருந்த பலரை திகிலுக்குள்ளாக்கின சம்பவம் இது!

முதலாண்டு விடுமுறை முடிந்து இரண்டாமாண்டு முதல் நாளில் மாணவர்கள் எல்லாம் மீசை தாடி வளர்த்த நிலையில் சந்திப்பதாக முதலாண்டு இறுதி நாளில் தீர்மானம். மீசையே அப்போது அரும்ப ஆரம்பித்த நிலையில் எனக்கு பிளேடு தினமும் போடும்படி அறிவுரைத் தீர்மானம் வேறு. 30நாளில் தாடி வளர்ப்பது எப்படி? தானாக அரும்பியிருந்த மீசை & தாடி??!! யை அப்படியே விட்டுவைத்துவிடவா இல்லை பிளேடு போடவா?

தந்தையில் சிங்கிள் பிளேடு ரேஸர் அஸெம்பிள் செய்து ஷேவ் செய்வதற்குள் சேட்டிலைட் லாஞ்ச் செய்துவிடலாம் அவ்வளவு டெக்னிக்குகள் அந்த புராதன ரேஸருக்கு பயன்படுத்தப்படவேண்டும். முப்பதாண்டுகள் தந்தைக்கான தனித்த சேவையில் இருந்ட்த ரேஸர் மறை தேய்ந்து அதில் நூல் சுற்றி டைட்செய்யப்படவேண்டும் இல்லை இல்லை மறை கழண்டு ரத்தம் பார்க்கும். சலூனில் கட்டிங் அண்ட் ஷேவிங் காஸ்ட்லியாகும். ஷேவிங் காசை சேவிங் செய்து பாக்கட் மணியாகப் பயன்படுத்தலாமே... பாக்கெட் மணியில் பிளேடு போடலாமா என்கிற குழப்பம். எனது தந்தையிடம் கல்வி விஷயங்கள் தவிர்த்து வேறெதுக்கும் தம்பிடி பெயராது எனவே பக்கெட் மணி ரேஞ்சில் இல்லாத பாக்கெட் மணிக்கு பங்கம் வராமல் ஆனால் முப்பத்தோராவது நாளில் திருவள்ளுவரைச் சவாலுக்கு இழுக்கும் வகையில் தாடி வேறு விளைவித்தாக வேண்டும்.

சரி துணிந்து தந்தையின் லேஸர் டெக்னாலஜி ரேஸரைப் பயன்படுத்திவிடுவதே எல்லாவகையிலும் லாபகரமானது என்று முடிவெடுத்து கோத்ரெஜ் வட்ட சோப்,குழைக்கும் பிரஷ், ரசம் போன கண்ணாடி, நூல்கட்டிய 7'ஓ கிளாக் பிளேடு தாங்கிய ரேஸர் சகிதம் 8 ஓ கிளாக்குக்கு முதல் சவரம் செய்ய ஆரம்பித்தேன்! அ..ஆ..ஆ ரசம் போன கண்ணாடியில் மூக்கு மட்டுமே தெரிகிறது... குத்து மதிப்பாக ...பட படப்புடன் அவசர அவசரமாக வலது பக்கம் ஒரு இழு... இடது பக்கம் ஒரு இழு... உதட்டுக்கு மேல்... தாடையில் ஒரு இழு இழுத்து முகம் கழுவும் போது ஸ்ஸ்ஸ்...ஆஆஆ துண்டில் ரத்தம்.. முகத்தில் அநேக வெட்டுக்குத்து.

ரகஸியமாக ஷேவ் செய்ய எண்ணியிருந்தது முகமெங்கும் ரத்தக் காயத்தால் வீட்டிலே ஹாட் டாபிக் ஆகிப் போனது. பெருங்குற்றமிழைத்துவிட்ட மாதிரி பார்வை எள்ளல்கள்... அதிகப்பிரசங்கித்தனம் முணு முணுப்பு... சரி விஷயத்தை ஆறப்போட்டே ஆகவேண்டிய அளவுக்கு தோலை அழுத்தி ரேஸரை இழுத்ததில் தோலே காது டூ கன்னம் காணாமல் போனதைத் தேடிக்கிட்டே இருந்ததில் நாட்கள் ஓடிவிட்டன.

கல்லூரியின் இரண்டாம் ஆண்டு முதல்நாளில் வகுப்பு நண்பர்கள் எல்லோரும் திருவள்ளுவர்க்குப் பேரனாக வந்திருக்க நான் மட்டும் கவர்னர் மாதிரி போயிருந்தேன். ( ஆட்டுக்கு தாடி... நாட்டுக்கு கவர்னர் என்பதை நினைவில் கொள்ளவும்)

இரண்டாமாண்டு முதல் நாளில் எனது தாடியைக் கண்டு கதிகலங்கி திகிலடைந்தது கட்டாய தாடி வளர்ப்புத் தீர்மானம் போட்ட நண்பர்கள் (?!)

அன்புடன்,

ஹரிஹரன்

Monday, January 15, 2007

(104) இந்துக்கடவுளர்கள்... விலங்குத்தோல்...புலால்

இந்துமதத்தில் சிவன் புலித்தோல் மீதமர்ந்துபடியும், ஆதிசங்கரர் புலித்தோல், புள்ளி மான் தோல் மீது அமர்ந்தும் தியான நிஷ்டையில் இருந்து அருள்பாலிக்கின்றார்கள். அப்படியாயின் இந்துக்கடவுளர்கள், சாமியார்கள் புளூகிராஸ் அமைப்பினால் தேடப்பட்டு தண்டிக்கப்பட வேண்டியவர்களா?

இந்துக் கடவுளர்களூம், சாமியார்களும் புலி, மான் என மிருகங்களை வதை செய்கின்றதாகத்தானே அர்த்தம் என்கிற சந்தேகம் சர்வேசனின் இந்தப்பதிவில் வெளிப்படுகிறது.

இந்துமதத்தில் பல்வேறு குறியீடுகள் symbolism வழியாக அரிய வாழ்வியல் தத்துவங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. புலித்தோல் மீது அமர்ந்திருப்பது என்பது தமோ குணம் எனப்படும் குணாதிசயத்தால் மனதில் ஏற்படும் தீய ஒவ்வாத எண்ணங்களால் உந்தப்பட்டு புலியின் வன்மையான ஆற்றலோடு தர்மத்திலின்று விலகி கொடுந் தவறுகள் செய்வதிலின்று மனிதன் தன்னை மீட்க, தன்னிலிருக்கும் அந்தத் தமோகுணமாகிய புலியைக் கொன்று கிழித்து, மனதினை, எண்ணங்களை வென்று அதன் மீதமர்ந்து இறைவனை தியானித்து நற்கதியடைவது என்பதை குறியீடாகக் காட்டுவதே!

மான் தோல் மீதமர்ந்திருப்பதான சிம்பாலிஸம் ரஜோகுணம் என்கிற குணாதிசயத்தால் ஏற்படும் அதிகார, ஆசைகூடிய எண்ணங்களால், மான்மாதிரி 45 டிகிரி வளைந்து வளைந்து விரைவாக மனதில் வந்தெழும் எண்ணங்களின் உந்துதலில் நெறியற்ற செயல்கள் செய்து மனிதன் வருந்துவதற்குக் காரணமான ரஜோகுணம் ஒழித்து அதனை வென்று அதன்மீதமர்ந்து இறைவனை துதித்து, தியானித்து, உணர்ந்து இறைவனோடு இரண்டறக்கலக்கவேண்டும் என்பதைக் குறியீடாக சிம்பாலிக்காகக் காட்டுவதே.

புலால் உண்பது பற்றி அது முற்றிலும் தவறு....கூடவே கூடாது என்பதாக கட்டளைகள் இந்துமதத்தில் ஏதுமில்லை. என்ற போதும் புலால் தமோ, ரஜோகுணம் மனதில் எழ பிரதான காரணியாகிறது என்கிற அறிவுறுத்தல் சொல்லப்பட்டிருக்கிறது.

துடிக்கும் தூண்டில் புழுவை உண்ண வாய் வைக்கும் மீன் தூண்டிலில் மாட்டி இழுக்கப்பட்டு நீரினின்று நீங்கி துடியாய்த் துடிக்கிறது. துடித்தபடியே மாள்கிறது. துடிதுடிக்கும் மீனை துடிப்போடு உண்ணும் மனிதனோ இன்னும் எப்படியெல்லாம் துடியாய்த் துடிக்கப்போகிறானோ என்று எண்ணி எண்ணியே நான் அஞ்சுகிறேன் என்கிற வள்ளலார் கருத்து எனக்கு முற்றிலும் உடன்பாடானதே!

சனாதன இந்துமத வேத நெறி வாழ்வியலில் இப்படி மட்டுமே இரு என்று எங்குமே கட்டளைகள் கிடையாது. இப்படியான காரணிகள் இம்மாதிரியான குணாதிசய /செயல்பாட்டு விளைவுகளை ஏற்படுத்தும் என்கிற அறிவிப்புகள் மட்டுமே.

சாத்வீகமான குணம் இருப்பதிலேயே சிறப்பானது. சாத்வீக எண்ணங்களின் உந்துதலில் செய்யப்படும் செயல்பாடுகளில் தெளிவு இருப்பதால் குற்ற உணர்வு நீங்கிய நிலையில் வாழ அது மனதில் நிரந்தரமான மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

சனாதன தரும இந்துமத வேத நெறியில் இருக்கும் தெய்வ உருவ வழிபாட்டின் சிறப்பே அதன் ஊடாக சிம்பாலிஸமாக வெளிப்படுத்தப்படும் வாழ்வியல் தத்துவங்களே!

உலகில் இருப்பதிலேயே மிகச்சிறப்பான வாழ்வியல் தத்துவங்க்கள் சனாதன இந்து தருமத்திலேயே மிகச் சிறப்பாக, மனிதனின் தினசரி வாழ்வுக்கு, மேம்பாட்டுக்கு, ஆவேசமில்லாத மனதினைப் பெறுவதே நிரந்தரமான மகிழ்ச்சி என்பதைச் சொல்லும் அறிவியல் சிந்தனைகள் இங்குமட்டுமே காணப்படும் சிறப்பாகும்.

அன்புடன்,

ஹரிஹரன்.

Saturday, January 13, 2007

(103) போகி பொங்கல் பண்டிகை வாழ்த்துக்கள்!!

நாளைக்கு போகிப் பண்டிகை, நாளான்னிக்குப் பொங்கல் பண்டிகை!

கிராமங்களில் உழைக்கும் மாடுகளுக்கு கொம்புகளுக்கு வர்ணம் தீட்டுவது, இருக்கும் வீடுகளுக்கு சுவர்களுக்கு வெள்ளையடித்து,வர்ணம் தீட்டுவது என்பதாக தினசரி வாழ்வின் அங்கமாகிய இவை சிறப்பாக எடுப்புடன் தெரிவதற்கு, அவைகளுக்கான நமது பாரம்பரிய தேங்க்ஸ் கிவிங் என்பதாகச் செய்யப்படுவது.

போகிப் பண்டிகை என்பது குப்பை கூளங்களைக் கொட்டி எரித்து சுற்றி நின்று தம்பட்டம் தட்டுவது என்பதாக சென்னையில் சம்பிரதாயமாகச் செய்யப்படுகிறது.

குப்பை, கூளங்களால் நிறைந்த மனம் எனும் வீடு, அதில் எழும் அழுக்குகள் கூடிய எண்ணங்கள் சுத்தப்படுத்தப்பட வேண்டும் என்கிற தாத்பரியத்தை நினைவில் கொள்ள வேண்டும்.

உழவினால், உயிர்களை, உலகைக் காக்கும், தெய்வமாகிய சூரியனுக்கும், உடன் உழைக்கும் அஃறிணைகளுக்கும் முழுமையாக அர்ப்பணிப்பு உணர்வோடு நன்றி செலுத்த உள்ளத்தில் நிறைந்துகிடக்கும் குப்பைக் கூளங்களாகிய பயனற்ற எண்ணங்களைக் களைய வேண்டியது அவசியம் என்பதை உணர்த்துவது போகிப்பண்டிகை.

இந்த போகிப்பண்டிகையின் போது பழையன கழிதலும், புதியன புகுதலும் பொருட்கள் என்கிற அளவில் மட்டும் இல்லை. தனக்கும்,பிறர்க்கும் ஊறு விளைக்கும் குப்பை கூளமாகிய பழைய எண்ணங்கள் சிந்தனைகள் நீக்கி, புதிய நல்ல சிந்தனைகளால் மனமும் சிந்தனைகளும் புதுப்பிக்கப்பட வேண்டியது மிக அவசியமானதாகும்.ஆசிரியர் மகனாகவும், கிராமமும் இல்லாமல் பெரியநகரமும் இல்லாமல் ஒரு டவுனில் பள்ளிக்காலம் வரை படித்ததாலும் சங்கராந்திப் பண்டிகையான அறுவடைத்திருநாள் பொங்கலுக்கு ஒரு பயிர் பச்சையோடு மாடு, கன்று என வாழ்கின்ற முழுமையான விவசாயியின் 100% சொந்தமான அறுவடைநாள் கொண்டாட்ட அனுபவம் கிட்டியதில்லை.

என்ற போதும் என் தாய்வழி மாமன்கள் நேரடியாக வயலில் இறங்கி விவசாயம் செய்து வாழ்ந்ததால் மிக அரிதாக விடுமுறைக்குப் போகும் சமயங்களில் எப்போதாவது கிராமத்துக் களத்துமேட்டில் நெற்கதிர்களைக் கட்டுக்கட்டாகக் கட்டியும், சில சமயம் டிராக்டர் வைத்து போரடிக்கும் காட்சிகளை டவுசர் போட்டபடியே, உடலைச் சொறிந்தவாறே "போரடிக்கும்" பொழுதுபோக்காகப் பார்த்து வளர்ந்திருக்கிறேன்.

எனது தாய்வழிப் பாட்டனின் பழைய காரைச் சுண்ணாம்பு வீட்டின் மாடியில் காயப்போட்ட நெல்லை கணிப்பைப் பொய்யாக்கி சட்டென்று வரும் பெரும் மழைத்தூறலினின்று காக்க மாடி சுண்ணத்தரையில் இருக்கும் துவாரம் மூலம் மாடியினின்று நேரடியாக நெற்களஞ்சியத்திற்கு
அனுப்பும் பொருட்டு ஒருசமயம் நானும் காலால் காய்கின்ற நெல்குவித்து என் கால் பாதம் முழுக்க நெல்லால் அக்குபங்சர் செய்த அனுபவம் கொஞ்சம் உண்டு.

விவசாயியாக இருப்பவன் அத்லடிக் மாதிரி ஆக்டிவாக இருந்தாக வேண்டும். வலுத்து இறங்கும் மழைத்துளிகள் பெருமழையாக்கி அந்த போகத்தில் விளைந்த விளைச்சலை நாசமாக்கிடும் முன்பாக, மொட்டை மாடி முழுக்க காயப்போடப்பட்ட நெல் ஐந்து நிமிடத்திற்குள் களஞ்சிய துவாரங்களுக்கு முன்பாக குவிக்கப்பட்டாக வேண்டும்.

காரைச்சுண்னாம்பு மொட்டை மாடி பெரிய லோக்கல் எகானமியே சொல்லிவிடும். மொட்டை மாடியின் சுண்ணாம்புத் தரையில் எத்தனை களஞ்சிய துவாரங்கள் இருக்கின்றனவோ அவை வயல்காட்டு நிலத்தின் அளவு, விளையும் விளைச்சல், மாடியில் காயப்போடப்பட்ட நெல் சேமிக்கப்படும் களஞ்சியங்களின் எண்ணிக்கைகளைச் செல்லும்.

வயல்காடு, களத்துமேடு, என உழைக்கும் வண்டிமாடுகள் பியூட்டி பார்லர் செல்கின்ற வருடாந்திர தருணம். கொம்புகள் வர்ணம் தீட்டப்பட்டு, கொல்லையில் இருக்கும் கறவை மாடுகளை கவர்செய்யும் பொருட்டு அடிக்கப்பட்ட புதிய லாடத்தினால் சத்தமாக குளம்பொலி எழுப்பி (ஆபீசர் ஷூ போட்டு டக் டக் என நடப்பதுமாதிரி) காராம் பசுக்களைக் கறாராகக் கரெக்ட் செய்யும் காலம்.

கட்டுக் கரும்பை, ராமர் கரும்பு என்பதாகிய சர்க்கரை ஆலைக்கான கரும்பிலிருந்து, ஐந்து பைசாவுக்கு ரெண்டு கணு என கடிக்கக் கடினமான அதிக இனிப்புச்சுவையுடனான அடிக்கரும்பும், அதே ஐந்து பைசாவுக்கு நாலு கணுவாக சோகைக்கு அருகில் இனிப்புக்குறைந்த தட்டைக்கரும்பையும் சுவைத்த டவுசர் நாட்கள் நினைவுகளை மகிழ்வோடு மாடு கரும்புச் சொகையை அசைபோடுவது மாதிரி நினைவு கூர்கிறேன்.

இந்த போகிப் பண்டிகைக்கு மனவீட்டையும் குப்பை கூளங்கள் குறைவானதாக முயற்சிப்போம்!

தை மாதம் பிறந்து எல்லோருக்கும் நல்ல வழிகளைக் காட்டட்டும்.

எல்லோருக்கும் இனிப்புச்சுவையோடு கூடிய எனது பொங்கல் பண்டிகைத் திருநாள் வாழ்த்துக்கள்!அன்புடன்,


ஹரிஹரன்

Thursday, January 11, 2007

(102) ஈவெரா ஆதரவாளர்கள் மெய்மறந்து ஆத்மாவை ஆமென்றது

இழப்பை எதிர் கொள்ளும் போது மனம் தத்துவரீதியாகத் தயாராகி எத்தனை பெரிய இழப்பையும் நேரடியாக எதிர்கொண்டு உள்வாங்கி ஜீரணிக்கத் தேவையான மனோதைரியத்தை மனிதனுக்கு அளிக்கிறது. இந்துமத வாழ்வியல் வேத நெறிகள் அப்படியானவையே!

ஈவெரா மற்றும் இந்துக் கடவுள் / வேதநெறி மறுப்பு என்பதில் தீவிரமாக இருக்கும் நண்பர் முத்துக்குமரனின் இந்தப்பதிவில் வரும் இந்த வார்த்தைகள் " இன்று காலை 8.17, மணி அளவில் எனது அப்பத்தா மரணம் அடைந்தார்கள். நீண்ட காலமாய் உடல்நலன் குன்றியிருந்த அவர்கள் இன்று தனது வாழ்க்கைப்பயணத்தை நிறுத்தி கொண்டுவிட்டார்கள்.....நீண்ட வருடங்களால குழந்தை பேறில்லாமல் இருக்கும் என் அக்காவின் மகளாக மறுபடியும் எங்களிடம் வருவார்கள் என்ற பிராத்தனையோடு என் அஞ்சலிகளை அவர்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்."

சனாதன தருமம் எனப்படும் இந்து வேத நெறி வாழ்வியல் தத்துவத்தில் இறப்பு என்பதே கிடையாது என்பது வலியுறுத்தப்படுகிறது. ஆத்மா என்பது அணிந்திருக்கும் சட்டையே உடல், ஆத்மாவைப் பிரதிபலிக்க இயலாத அளவுக்கு உடல் தளர்ந்து போகும் போது ஆத்மா விடுபட்டு புதிய தகுதியுடைய பிரதிபலிப்புத் தளமாக புதிய உடலைத் தெரிவுசெய்கிறது என்பது இந்துமத தத்துவம்.

தத்துவம் என்பதே தத் + வம், தத்= இறை, வம்= நான் இறையும் நானும் இணைந்தது என்பதே தத்துவம்.

செயல் ஒன்றில் முழுமையாகத் தன்னை அர்ப்பணித்து ஈடுபடும் போது தான் என்கிற உடல் பற்றிய, அந்த உடலுடன் தொடர்புடைய அனுபவங்களின் தொகுப்பாகிய மனம் ஏற்படுத்தும் சஞ்சலங்கள் தாண்டித் தன்னுள் இருக்கும் இறைசக்தியாகிய ஆன்மாவின் பிரதிபலிப்பாக அச்செயல் பூரணமாக அமைந்துவிடும்.

ஒரு இசைக்கலைஞன் தான் என்கிற நிலையினின்றும், தனது என்பதான நினைவுகள் தரும் கர்வத்தினின்று விடுபட்டு இசையோடு இணைந்து அர்ப்பணித்துச் சாதகமாக, வேள்வியாக இசைக்கருவிகளோடு தன் விரல்கள் மூலம் ஆன்மாவைப் பிரதிபலிக்கும்போது அது மிக அருமையான இசையாகி, கேட்போர் உள்ளம் உருக்கி எழுந்து நின்று "ஸ்டேண்டிங் ஓவேஷன்" பாராட்டைப் பெற்றுத்தரும்.

மெய்மறத்தல் என்பது உடலை மறந்து லயித்தல் என்பது. இறைவனிடம் பக்தி கொள்ளும்போது மெய் மறந்து இறையொடு ஒன்றாகியதாக உணர்வது பேரானந்தம்.

முத்துக்குமரனின் பதிவில் வரும் மேற்சொன்ன வரிகள் அவர் மெய்மறந்த நிலையில் வரது ஆழ்மனதில் அவர் மானசீகமாகப் பின்பற்றும் இந்துதருமம் வார்த்தைகளாக வந்து வெளிப்பட்டிருக்கிறது. மெய்மறத்தல் விடுதலை செய்த உண்மை கறுப்புச்சட்டை போட்டு கடவுள் இல்லை என்பவர் தனது அப்பத்தாவின் ஆத்மா அக்காவின் மகளாக மீண்டும் தம்மிடம் வரவேண்டும் என்கிற அவாவாக வெளிப்பட்டு இருக்கிறது.

முத்துக்குமரனின் அந்தப் பதிவில் பின்னூட்டங்கள் வாயிலாக, ஈவெரா ஆதரவாளர்களாக வலம் வரும் பலர் ஆத்மாவை அது மீண்டும் வேறு வடிவமாக வரும் என்பதை ஒப்புதல் அளித்து இருப்பது கடவுள் இல்லை இல்லை இல்லவே இல்லை கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி என்பது வெறும் உதட்டளவில் எழுப்பப்படுவது மட்டுமே என்பதை உறுதிப்படுத்துகிறது.

கடந்த செப்டம்பரிலேயே உடனே இதுபற்றி எழுதவேண்டும் என எண்ணியிருந்தேன். என்றபோதும் அது அப்போது எழுதப்பட்டால் அநாகரீகம் என்பதால் தவிர்த்தேன்.

நண்பர் முத்துக்குமரன் அவரது பதிவின் வரிகளை, இந்தப் பதிவில் சுட்டிக் கையாண்டதை தவறாக எண்ணமாட்டார் என்று கருதுகிறேன்.


அன்புடன்,


ஹரிஹரன்

Tuesday, January 09, 2007

(101)மத்தியகிழக்கு கருப்புத்தங்க அரசியலால் கருப்பானஉலகம்

அரேபிய ஜிஹாதிகள் வெகு நிச்சயம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களே!

மத்தியகிழக்கில் கிடைக்கும் கருப்புத்தங்கம் எனப்படும் பெட்ரோலியம் மத்தியகிழக்குநாடுகளை கடல் கொள்ளைக்காரர்கள், மீன்பிடிப்பு என்பதான வாழ்வு ஆதாரங்களினின்று கடின உழைப்பேதும் செய்யாமல் தாயம், ஒண்ணு ,ரெண்டு என்று உழைத்து மேலே வராமல் பரமபத பெரிய ஏணியில் கால்வைத்த பலனாய் 40 ஆண்டுகளில் நீட்டிய காகிதங்களில் கையெழுத்துப் போடும் பெரும்பான்மை மத்தியகிழக்கு நிர்வாக மேலாளர்களால் உலக வரலாற்றில் இரண்டாம் உலக நாடுகளாக மேம்பட இறைவனின் கொடையான கருப்புத்தங்கம் உதவிவருகிறது.

இதே கருப்புத்தங்கத்தை இறைவனின் பூமியில் இருந்து உற்பத்தி செய்ய மேற்கத்திய வெள்ளைக்காரர்கள் என்கின்ற Might is Right கொள்ளைக்காரர்கள் 50% டவுன் ஸ்ட்ரீம் ரைட்ஸ் என்று உற்பத்தியில் ஆளுக்குப் பாதி என்று மத்தியகிழக்கு அரச ஆட்சியாளர்களுடன் ஆளுக்குப் பாதி என்று லாபத்தினைப் பிரித்துக்கொள்ளுகின்றார்கள்.

பிரிட்டிஷ் நிறுவனங்கள் ஆரம்ப காலங்களில் மத்தியகிழக்கு எண்ணை உற்பத்தியில் கோலோச்சியிருக்கின்றார்கள். பெரும்பாலும் பிபி எனும் பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனம் தனியாகக் காலனியாதிக்கத்தின் தொடர்ச்சியாக தனி நிறுவனமாகக் கோலோச்சியிருக்கிறது.

மத்தியகிழக்கில் எண்ணைய் வர்த்தகத்தில் அமெரிக்க ஆதிக்கம் 1970களில் ஆரம்பித்தது. ஜூன் 1967ல் ஆறு நாட்கள் நடந்த இஸ்ரேல்-அரபியர் போர், அதன் பின் விளைவாக அரேபியர்களின் எண்ணைய் ஏற்றுமதி மறுப்பு இவை முக்கியமான திருப்புமுனை மத்திய கிழக்கு எண்ணைய் வர்த்தகத்தில் ஏற்படுத்தியது.

எண்ணைய் வளத்தினை அரசியலாக்கியது அமெரிக்கர்கள் அல்ல. அரேபியர்களே. தன்னிடம் இருக்கும், இதர உலகோர் பயன்படுத்தும், தமது வாழ்வியலுக்கு அடிப்படையாகிய ஒரே வளமான கருப்புத்தங்கத்தினை வைத்து பிளாக்மெயில் அரசியல் 1967-ல் ஆரம்பித்தது அரேபியர்களே அன்றி அமெரிக்கா இல்லை.

அரேபிய முட்டாள்கள் தமது வாழ்வு 100% சார்ந்த தம்மிடம் இருக்கும் ஒரே வளத்தினை வைத்து உலகையே ஸ்தம்பிக்கச் செய்யும் முதல் பிளாக்மெயிலை ஆரம்பித்துவைத்தனர். இதில் அதிகம் பாதிக்கப்பட்டது அமெரிக்கா!

மத்தியகிழக்கு அரசியலில் அமெரிக்காவின் நிலைப்பாடற்ற நிலைப்பாட்டிற்கு, மத்திய கிழக்கில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை வெளிப்படையாக வானவில்லாக பலவர்ணமுடையதாகக் காணப்படுவது 1967க்குப் பின் எந்த ஒரு சமரசமில்லாமல் அமெரிக்க ரிபப்ளிகன், லேபர் பார்ட்டி அரசியல்வாதிகள் கையாள்வதும் இந்த அரேபியர்களின் கருப்புத்தங்க ஒத்துழையாமை பிளாக்மெயில் சம்பவத்திற்குப் பின்பே!

மத்தியகிழக்கு நாடுகளின் தினசரித் தேவைகளான 1000 பொருட்களும் வேறு நாட்டில் இருந்து வந்தாக வேண்டும். மத்திய கிழக்கின் ஒரே ஏற்றுமதி கருப்புத்தங்கம் மட்டுமே.

இந்த கருப்புத்தங்கமான ஒன்றையும் எல்லா உலக நாடுகளின் துணையோடு , எல்லா உலக நாடுகளுக்கும் விலைக்கு விற்று அதில் வரும் பொருள் கொண்டு இவர்கள் தினசரித் தேவைக்கான ஆயிரம் பொருட்களை மீண்டும் எல்லா உலக நாடுகளிடமிருந்தும் இறக்குமதி செய்யவேண்டியது இன்றைக்கும் இருக்கும் சூழல். (ஆங்காங்கே இதர நாடுகளின் லேபர்களால் தற்போது மத்தியகிழக்கு நாடுகளில் விளைவிக்கப்படும் உருளைக்கிழங்கு மாதிரியான காய்கறிகள் விவசாயத்தை தள்ளுபடியில் விடுகிறேன்)

மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பாவினர்க்கு மத்திய கிழக்கு எண்ணைய் வளம் சார்ந்த பொறியியல் + உட் கட்டமைப்பு வியாபாரம் மிக லாபகரமானது. ஏனெனில் நீட்டிய காண்டிராக்ட் தாளில் கையெழுத்து உபயோகமான கேள்வி ஏதும் கேட்காமலே அரேபிய நிர்வாகிகளால் கடல்கடந்து சென்றும் / மத்தியகிழக்கு அரண்மனைகளிலும் எளிதாக நடக்கும்.


இன்றைக்கு க்ரீன் ஹவுஸ் கேஸ் என்றும், இன்ன பிற வாகன எரிபொருள் புகையாலும் ஓஸோனில் ஓட்டை, அண்டார்டிகா ஐஸ் கிளேசியர் உருகுதல், கடல்நீர்மட்டம் உயர்வு, சைக்ளோன்கள், ஹரிக்கேன்கள் ஒரேநாளில் ஆயிரம் மிமீ மழை என இயற்கை கொந்தளித்து மனிதன் வாழ்வைக் கருப்பாக்கிவருவதற்கு முக்கிய மூலாதார அடிப்படை இந்தக் கருப்புத்தங்கத்தின் மிதமிஞ்சிய பயன்பாடுதான்!

கருப்புத்தங்கத்தை உறிஞ்சி எடுக்க எடுக்க ஆழமாக பூமியில் ஏற்படும் மென் அகழ்வுகள் காரணமாக யூரோஷிய நிலத்தட்டு மோதல்கள், சீஸ்மிக் ஆக்டிவிட்டி அதிகமாகி இந்தியா உட்பட பல நாடுகள் பூகம்பப் பிரதான பிரதேசமாகியுள்ளன!

பண்டைய காலத்தில் கடற்கொள்ளை மட்டுமே வாழ்வாதாரமாயிருந்த மத்தியகிழக்கு நாட்டவர்களின் இன்றைய ஒரே வாழ்வாதாரம் கருப்புத்தங்கம். மேற்கத்திய கொள்ளைக்காரர்கள் கட்டமைப்புப் பொறியியல் தொழில்கள் மிக முக்கியமான அதிக லாபம் தரும் பிரதேசம் மத்தியகிழக்கு நாடுகள்.

அமெரிக்கா மனித உரிமைப் போர்வையில் மத்தியகிழக்கு ஈராக்கை முற்றிலுமாக அதன் ரஷியப் பொறியியல் கொண்டு அமைக்கப்பட்ட கட்டமைப்பை அழித்துப் புதிய ஈராக் உருவாக்குவது அமெரிக்காவின் பொறியியல் தொழில்சார் பொருளாதாரம் முழுமையாக செழித்திருக்கவே. யூரோவினை விடை யூஎஸ் டாலர் குறைவாக்கி வித்தைகாட்டுவதும் அமெரிக்கப் பொருளாதார வித்தையே.

மொத்தத்தில் மிக மலிவாக / இலவசமாக அமெரிக்காவிற்கும் பிரிட்டன், ப்ரான்ஸ் மாதிரி ஐரோப்பிய நாட்டினர்க்கும் மத்திய கிழக்கின் கருப்புத்தங்கம் கிடைக்க அரேபிய அரசர்களின் சுயநல மத்திய கிழக்கு அரசியல் நாடகத்தில் ஈராக் மேம்பாடு சதாம் அழிப்பு என்று மீண்டுமொருமுறை தற்போதும் வழிசெய்து தந்திருக்கின்றார்கள். உண்மையில் இந்தியா மாதிரி வளரும் நாடுகள் இந்த அரேபிய அரசர்களின் / சர்வாதிகாரிகளின் சுயநலப் போர் அரசியலுக்கு கருப்புத்தங்கத்துக்கு அதிக விலை தந்து வாங்கி என ஈடு செய்கிறோம்.

கியாட்டோ புரோட்டோக்கால் என்கிற அதீத கருப்புத்தங்கப் பயன்பாட்டில் எழும் க்ரீன் ஹவுஸ் வாய்க்கள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் மாசு குறைப்பு வழிமுறையை கொத்துப் புரோட்டாமாதிரி அமெரிக்கா பிய்த்துப் போட்டிருக்கிறது!

ஜப்பானிய கியாட்டோவில் நடந்ததாலே ஜப்பானியர்களாவது மதிப்பளித்து டயோட்டா முதல் மாஸ்டா, நிஸ்ஸான், மிட்சுபிஷி, ஹோண்டா என ஜப்பானியக் கார் கம்பெனிகள் மின்சார மோட்டார் + கருப்புத்தங்கம் பயன்பாட்டில் புதிய தொழில் நுட்பத்தில் மனிதர்க்கு ஊறு விளைக்கும் மாசு, சுற்றுச்சூழலுக்கு உகந்தவாறு தயாரித்து 2004ல் இருந்து பயன்பாட்டில் இருக்கிறது.

உலக நாடுகளில் பலவற்றில் இருக்கும் நிலக்கரி எல்லாம் அகழ்ந்து எடுக்கப்படாமலேயே நிலக்கரிசார் தொழில்நுட்பம் 25-30 ஆண்டுகள் ஆட்சி செய்து பின் காலாவதியாகி, அடுத்த பரிணாமமாக பெட்ரோலியத் தொழில்நுட்பம் வந்து க்ரீன்ஹவுஸ் வாய்க்கள் சுற்றுச்சூழல் மாசுபடுத்தி மனிதனைப் படுத்தி அடுத்த தொழில் நுட்பமாக எலக்ட்ரிக் + சிக்கனபெட்ரோலிய மோட்டார்,அடுத்து முற்றிலும் மாசு ஏற்படுத்தாத நீரிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருள் எஞ்ஜின் தொழில் நுட்பம் வரவேண்டியிருப்பது காலத்தின் கட்டாயம்.

நிஜமாகவே பூமியில் மனிதனைப் பாடாய்ப்படுத்திய தொழில் நுட்பம் பெட்ரோலியத் தொழில் நுட்பம்.

மத்திய கிழக்கில் வெகுதியாகக் கிடைக்கும் ஏக எஞ்ஜின் கருப்புத்தங்க பெட்ரோலியத் தொழில்நுட்பம் மனிதனுக்கு வெளிப்புறமுள்ள் சுற்றுச்சூழலில் மட்டும் மாசு ஏற்படுத்தவில்லை. ஏக இறைவன் என்று வன்மையாகப் புகுத்தப்படும் ஜிஹாத் முறை குண்டுவெடிப்புகள், கொலைகள், கலவரங்கள் என மனித வாழ்வியல் மாசுபட மனித சிந்தனையையும் மாசுபட வைத்தது மத்திய கிழக்கில் இன்று வெகுதியாகக் கிடைக்கும் கருப்புத்தங்கம்.


கருப்புத்தங்கத்தினை அரசியலாக்கிய காரண கர்த்தாக்கள் அரேபியர்கள். கருப்புத்தங்கத்தின் பலனை முழுமையாக அனுபவிப்பவர்கள் மத்தியகிழக்க்கு + மேற்கத்திய, தொழில் + வாழ்வுமுறை கொள்ளைக்காரர்கள்!

என்மாதிரி இந்தியர்களும் இதர பன்னாட்டு ஆட்களும் இந்த கருப்புத்தங்கத்தினால் எழுந்த மத்திய கிழக்குப் பொருளாதாரத்தினைச் சார்ந்த வாழ்க்கை மாற்று எரிபொருள் தொழில் நுட்பத்தினால் பாதிக்கப்பட்டாலும் உலகத்தின் சுற்றுச்சூழல் நன்மைக்கும், மனிதர்கள் ஜிஹாத் குண்டுவெடிப்புகளில், வன்முறைகளில் இருந்து அமைதியான வாழ்வு வாழவும் கருப்புத்தங்கம் சாராத, அல்லது கருப்புத்தங்கத் தேவை தற்போதிருப்பதிலிருந்து 50% குறைக்கப்பட்ட தொழில் நுட்பம் எத்தனால் 40% பிளண்ட் பயன்படுத்தும் தொழில் நுட்பம் கரும்பு விவசாய இந்தியாவைச் முழுவதும் சுபிட்சமாக்கும்.

இந்த கருப்புத்தங்கம் தவிர்த்த தொழில்நுட்பத்தினால் (மத்தியகிழக்கு உட்பட) மொத்த உலகமும் ஏகாந்தமாக ஏகத்துவ ஜிஹாதிகளின் மாசுபடுத்தல்களில் இருந்து, உலகெங்கும் தினசரியாக மனித வாழ்வு வெடிகுண்டுகள் வைத்து ஓட்டைபோடப்பட்ட ஓஸோன் படலமாக்கப்படும் வன்முறைப் படலத்திலிருந்து விடுதலை பெறும்!

1967ல் அரேபியர்கள் தங்களிடம் கிடைக்கும் கருப்புத்தங்கத்தினை இசுலாமிய நாடுகளல்லாத இதர உலக நாடுகளுக்கு ஏற்றுமதி மறுப்பால் பிளாக்மெயில் செய்து தங்களது உயிர் வாழ்விற்கு உலக நாடுகளைச் சார்ந்திருப்பதை மறந்து அரசியல் தலையீடு கைப்பாவை அரசர்கள் நிர்வாகம் என்று வெளித்தெரியாத பிரச்சினைக்குள்ளாக்கிக் கொண்டமாதிரி, அனைத்து உலகநாடுகளுக்கும் தம்மிடமுள்ல கருப்புத்தங்கத்தினை விற்றுச் சேர்ந்த பொருளினைக் கொண்டு உலக நாடுகளையே குண்டுவெடிப்பு வன்முறையால் அச்சுறுத்தும் ஜிஹாத், ஏகத்துவம் என்று வெளிச்சூழல் மாசு வெள்ளைக்காரனுக்குத் தராத ஞானத்தினை 9/11 மற்றும் இதர அரேபியர்களின் ஜிஹாத் வன்முறையால் வெள்ளைக்காரனுக்குத ஏற்பட்ட உள்மனச்சூழல் மாற்றம் புதிய தொழில்நுட்பத்தினைக் கண்டுபிடித்துப் பயன்பாட்டில் எடுத்துவந்திருக்கிறது.

அரேபிய ஜிஹாதிகள் வெகு நிச்சயம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களே!


அமெரிக்காவின் வாகனத் தேவை ஜப்பானியக் கார்கம்பெனிளின் வாழ்வு! அமெரிக்காவின் பெட் ரோல் சார்பைக் குறைக்கும் கொள்கைகு அமெரிக்கனை விடவும் ஜப்பானியன் அதிகம் சிந்திக்கிறான் ;-))

எனவே மகிழ்ச்சியோடு வரவேற்போம் ஜப்பானின் (அமெரிக்காவின் ;-) ) இந்தப் புதிய வாகன தொழில் நுட்பத்தினை!

அன்புடன்,

ஹரிஹரன்

Sunday, January 07, 2007

(100) மிக ஆபத்தான மருந்துகள் D cold, விக்ஸ் action 500

மிக ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தும், உலகநாடுகளில் தடைசெய்யப்பட்டாலும் பரபரப்பாக இந்தியாவில் இன்னும் விற்பனையில் இருக்கும், நம்மூரில் சாதாரணமாக வெகுஜனங்கள் பயன்படுத்தும் பல மருந்துகளின் பெயர்கள் இந்த லிஸ்டில் இருக்கிறது.

மக்களே. இமெயிலில் இந்த செய்தி வந்தது. கடி ஜோக் மெயில் ஃபார்வர்டு செய்வது மாதிரி கவனமில்லாமல் குப்பைக்கூடைக்குச் சென்று விடக்கூடாதே என்பதால் இன்னிக்கு நூறாவது பதிவாக இதையே இடுவது என்று முடிவு செய்தேன்!

இதில் பல்வேறு மருந்துகள் நோவால்ஜின்/அனால்ஜின், டி-கோல்டு, விக்ஸ் ஆக்ஷன் 500 போன்ற பல சாமானியர்களாகிய நாம் தினசரி வாழ்வில் பயன்படுத்துபவை.


DANGEROUS DRUGS THESE DRUGS HAVE BEEN GLOBALLY DISCARDED BUT ARE AVAILABLEIN INDIA . The most common ones are D cold, action 500 & Nimulid.


ANALGIN:
This is a pain-killer. Reason for ban: Bone marrow depression.
Brand name: Novalgin
___________________________________________________________
CISAPRIDE:
Acidity, constipation. Reason for ban : irregular heartbeat
Brand name : Ciza, Syspride
____________________________________________________________
DROPERIDOL:
Anti-depressant. Reason for ban : Irregular heartbeat.
Brand name : Droperol
______________________________________________________________
FURAZOLIDONE:
Antidiarrhoeal. Reason for ban : Cancer.
Brand name : Furoxone, Lomofen
_____________________________________________________________
NIMESULIDE:
Painkiller, fever. Reason for ban : Liver failure.
Brand name : Nise, Nimulid
________________________________________________________________________

NITROFURAZONE:
Antibacterial cream. Reason for ban : Cancer.
Brand name : Furacin
________________________________________________________________________

PHENOLPHTHALEIN:
Laxative. Reason for ban : Cancer.
Brand name : Agarol
________________________________________________________________________
PHENYLPROPANOLAMINE:
cold and cough. Reason for ban : stroke.
Brand name : D'cold, Vicks Action-500
________________________________________________________________________
OXYPHENBUTAZONE:
Non-steroidal anti-inflammatory drug. Reason for ban : Bone marrow depression.
Brand name : Sioril
_______________________________________________________________________
PIPERAZINE:
Anti-worms. Reason for ban : Nerve damage.
Brand name : Piperazine
________________________________________________________________________
QUINIODOCHLOR:
Anti-diarrhoeal. Reason for ban : Damage to sight.
Brand name : Enteroquinol


கண்பார்வை பாதிப்பு, நரம்பு பாதிப்பு, பக்கவாதம், புற்று நோய், கல்லீரல் பாதிப்பு, எலும்பு மஜ்ஜை பாதிப்பு, தடம் மாறிய இதயத்துடிப்பு என்று மிக ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்தும் மெடிக்கல்ஸ்டோரில் சாதாரணமாக இந்தியாவில் கிடைக்கக் கூடிய மருந்துகளைத் தாங்களும், தங்கள் பெற்றோர், உறவினர், நண்பர்கள் எனப் பயன்படுத்துவோர்க்கு எச்சரிக்கை செய்து இம்மருந்துகளை உட்கொள்ளாமல் தவிர்க்கச் சொல்லுங்கள்!

அன்புடன்,


ஹரிஹரன்

(99) சித்தர்கள் சொன்னது சார்வாகம்? (OR) வேத நெறி?

பண்டைய தமிழ்ச் சித்தர்கள் பாடல்கள் வழிச் சொன்ன வாழ்வியல் தத்துவங்கள், சார்வாக வாழ்வியல் தத்துவங்கள் என்பன இந்துமதத்தின் சனாதன தர்ம வேதங்கள் சொல்லும் வாழ்வியல் நெறித்தத்துவங்களுக்குச் சரியான மாற்றுத் தத்துவங்கள் என்கிற மாதிரி பகுத்தறிவு, சுயமரியாதை, பொதுவுடமைச் சிந்தனாவாதிகள் பேசுகிறார்கள்.

"இந்துமத சனாதன தர்ம வேத நெறித் தத்துவங்கள் என்பன ஏதோ வேறுவகை தனித்த ஆதி தமிழர் பின்பற்றிய மற்றும் பாரதத்தில் இருந்த சார்வாகம், பவுத்தம், சமணம் என்பதான பல்வகை இதர தத்துவங்களைப் பார்ப்பனர்களாகிய ஆரியர்கள் திருடித் தொகுத்த தொகுப்பே இந்துமத சனாதன தர்மமும் அதன் நான்கு வேதங்களும்"
என்பதாக உண்மையை விடுதலை செய்கின்ற பகுத்தறிவு வெங்காயமான ஈவெரா அய்யாவழி வந்த கோயபல்ஸ் குரல்களுக்குச் சொந்தக்காரர்களுக்கு உண்மையை மீண்டும் ஒருமுறை விடுதலை செய்து நிஜமான நிதர்சனத்தைக் காட்டவே இந்தப் பதிவு.

பண்டைய தமிழ்ச் சித்தர் பாடல்கள் என்ன சொல்கின்றன என ஒரு சாம்பிளாக நாம் அனைவரும் அறிந்த ஒரு சரணமாகிய "நந்தவனத்தில் ஓர் ஆண்டி" என்பதை உள்ளடக்கிய கடுவெளிச் சித்தர் பாடிய முழுப்பாடலையும் எடுத்துக்காட்டாகக் கொண்டு படித்துப் பொருளை உணர்வோம்.

கடுவெளிச் சித்தர் பாடல்

பல்லவி:

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே

சரணம் 4

நந்த வனத்திலோ ராண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி. (பாபஞ்செய் யாதிரு)

சரணம் 6

நல்ல வழிதனை நாடு- எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு.

சரணம் 7
நல்லவர் தம்மைத் தள்ளாதே - அறம்
நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே
பொல்லாக்கில் ஒன்றுங்கொள்ளாதே - கெட்ட
பொய்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே
.

சரணம் 8
வேத விதிப்படி நில்லு - நல்லோர்
மேவும் வழியினை வேண்டியே செல்லு

சாத நிலைமையே சொல்லு - பொல்லாச்
சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு
.

சரணம் 9

பிச்சையென் றொன்றுங்கே ளாதே - எழில்
பெண்ணாசை கொண்டு பெருக்கமாளாதே
இச்சைய துன்னையாளாதே - சிவன்
இச்சை கொண்டதவ்வழி யேறிமீளாதே.

சரணம் 10

மெஞ்ஞானப் பாதையி லேறு - சுத்த
வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு

அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு - உன்னை
அண்டினோர்க் கானந்த மாம்வழி கூறு.

சரணம் 11
மெய்குரு சொற்கட வாதே - நன்மை
மென்மேலுஞ் செய்கை மிகவடக்காதே
பொய்க்கலை யால்நடவாதே - நல்ல
புத்தியைப் பொய்வழி தனில் நடத்தாதே
.( நந்த வனத்திலோ)

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

அரசியல் திரா"விட" பெத்தடினில் மூழ்கிய பகுத்தறிவுச் சிங்கங்கள், சுயமரியாதைத் தங்கக்கட்டிகள், பார்ப்பன எதிர்ப்புபத் தத்துவப் பேச்சாளர்கள், பொதுவுடமை ஜால்ராக்கள், வெட்டி வெங்காய இஸம், அண்ணாயிஸம், கருணாநிதியிஸம் என்கிற பிழைப்புவாத அரசியல் திரா"விட"இஸம் மற்றும் ஆங்கிலத்தில் A-Z -ism பேசி வருவோர், தமிழில் 247 எழுத்துக்களில் தொடங்கும் இஸங்களை ரசமாகக் குடித்தவர்கள் பண்டைய தமிழ்ச்சித்தரான கடுவெளிச் சித்தரை மேற்கண்ட பாடல் பாடியதற்காக கடுப்பாகி "வந்தேறிகளின் ஆரியமாயையில் சிக்கிய பார்ப்பன அடிவருடி" எனத் தமிழினத்தில் இருந்து வெளியேற்றுவார்களா?

இல்லை இந்த மார்கழி மாதத்தில் இதுநாள் வரை பிழைப்புக்காகப் பொய் பேசி வயிறு வளர்த்ததற்காகத் திருவரங்கனைத் தொழுது தவறுணர்ந்தபடியே தரிசித்து மேம்பட அரங்கனின் படுக்கையான பாம்பின் நீட்சிமாதிரி கியூவரிசையில் நின்றபடியே, வெறும் பொய்யுரை மட்டுமே பகுத்தறிவு, சுயமரியாதை என்று பேசிக் குழப்பிய, திருவரங்கத்தில் வைக்கப்பட்ட பகுத்தறிவு வெங்காயம் ஈவெராவின் சிலையிலிருந்து, தத்தம் நெற்றியில் திருமண் , திலகமிட்டபடி வரிசையில் நின்று வைகுண்ட நாதனை நோக்கி ரங்கா..ரங்கா இதுநாள்வரை நாங்கள் செய்தது எல்லாம் ராங்கோ.. ராங்கப்பா... அரங்கப்பா நீ எம்மேல் கொஞ்சம் மனம் இரங்கப்பா என்று திருவரங்க அரங்கனைப் போற்றுவார்களா?

சிந்திப்பீர்!! மன இருளை அகற்றுவீர்!! இந்துமத வேதம் சொல்லிய படியே இறைவனைப் போற்றுவீர்!!! பிழைப்புக்காகப் பொய்யைச் சொல்லும் கூட்டமாயிருக்காதீர்!!

அன்புடன்,


ஹரிஹரன்

(98) உயர்ந்த ஆத்மா ( Elevated Soul)

எல்லோருக்குள்ளும் ஆத்மா இருந்தாலும் சிலரது சிந்தனை, செயல்பாடுகளிலேயே அவர் சாதாரணர் இல்லை என்பது புலப்பட்டுவிடும். நான் மிஸ்டிசிஸம் எனும் மாயவித்தை பற்றிப் பேசவில்லை. பின்பற்றப்படும் வாழ்வியல் தத்துவ வேத நெறி முழுமையாக தினசரி வாழ்வில் பேணும் போது விழைகின்ற வியத்தகு மாற்றம் குறித்தே பேச்சு.

வாழ்வின் மீதான தனிமனிதனின் பார்வைக் கோணம் அவன் வாழ்வு அனுபவங்களைச் செங்கற்களாகக் கொண்டு கட்டப்பட்ட வாழ்க்கைக் கோட்டை மகிழ்ச்சிக் கோட்டையா இல்லை சோகமான சிதிலமடைந்த மாளிகையா என்பதாக அமைக்கிறது.

ஞானி என்கிற உயர்ந்த ஆத்மாவாக ஒரு நபர் தன்னை உயர்த்திக் கொள்ளுவது சிரமமான விஷயமா எனில் முற்றிலும் அப்படியாக இல்லை. பொதுவாழ்வில் சாதாரணனுக்குப் பகலாக இருப்பது ஞானிக்கு இரவாக இருக்கும். உதாரணமாக என்ன சீரியல் கோலங்களா, சித்தியா, அண்ணாமலையா,செல்வியா என்பதிலிருந்து டபுள் சீஸ் பீட்ஸாவா கொண்டாட்ட கோக்கா என்பதெல்லாம் ஞானிக்கு இரவு மாதிரி ஆனால் நம்மில் பெரும்பாலானவர்க்கு இதுதான் பகல் மட்டுமில்லை மொத்த வாழ்க்கையே!

ஒரு ஆத்ம ஞானிக்கு இறந்தகாலம் குறித்த வருத்தம் கிடையாது, எதிர்காலம் பற்றிய கவலையும் கிடையாது. ஞானிக்கும் நமக்கும் பெரிய வித்தியாசம் நமது நிகழ்கால வாழ்வு மிகவும் குறுகியது. ஞானிக்கு இறந்த காலமும் எதிர்காலமும் இணைந்து நிகழ்காலம் கூடுதலாகிறது.

குழப்பமாக இருக்கும். சரி ஒரு எளிய உதாரணம் மூலம் பார்க்கலாம்.

ஒரு மரத்தின் மீது ஞானி இருக்கிறார். கீழே சாமானியன் மரத்தின் கீழே இருக்கிறான். ஞானி சாமானியனிடம் சொல்கிறார்... காய்கறி வண்டி வருகிறது என்கிறார். சாமானியன் வெளியே எட்டிப் பார்த்து ஞானியிடம் பொய் சொல்லாதே வண்டியே வரவில்லை என்கிறான். சிறிது நேரம் கழித்து காய்கறி வண்டி வருகிறது. சாமானியன் அட ஆமா காய்கறிவண்டி என்கிறான்.

வீட்டு வாசலில் இருந்து காய்கறிவண்டி நகர்ந்து சென்றதும் சாமானியன் காய்கறி வண்டி போய்விட்டது என்கிறான். ஞானி சொல்கிறார் இல்லை காய்கறி வண்டி போக வில்லை என்று. சாமானியன் மீண்டும் ஞானியைப் பார்த்து பொய் சொல்கிறாய் என்கிறான்.

இரண்டுபேரின் பார்வைக் கோணம் வேறு வேறு. இரண்டு பேர் அனுபவிப்பதும் வெவ்வேறான அனுபவம். சாமானியனின் பார்வைக் கோணத்தினால் அவனது நிகழ்கால அனுபவம் மிகக்குறைவு. ஞானியின் பார்வைக்கோணம் இறந்தகாலத்தில் ஒருபகுதியையும், எதிர்காலத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கிய நீண்ட நிஜ நிதர்சனங்களை உள்ளடக்கிய நிகழ்காலம்.

சாவு / இறப்பு குறித்த சாமானியனின் சிந்தனை கண்முன்பாக காய்கறி வண்டியைக் காண்பதுமாதிரி இப்படியானதே. ஞானி தனது மேம்படுத்தப்பட்ட பார்வைக் கோணத்தினால் ஆத்மாவாகிய தான் எங்கிருந்து வந்து நிகழ்காலமாய் இருந்து இந்த உடலை உதறி அடுத்து எங்கே செல்கிறது ஆத்மா என்பதை உணர்ந்து கொள்கிறான்.

ஆத்மா எனும் இந்த உண்மையை உணர்ந்து கொள்ள வேத நெறி சொல்லும் மெய்ஞான சிந்தனா வழி முறைகள் மனிதனுக்கு உதவுகிறது. பரப்பிரம்மமாகிய ஆத்மா அணிந்திருக்கும் சட்டையே உடல் என்கிற மெய்ஞானம் வருகின்றபோது, இந்த உண்மையை உணர்கின்ற போது மரணம் பற்றிய பயம் விலகுகிறது. மரணம் என்கிற ஒன்றே வெறும் மாயையான உணர்வு என்று தெரியவரும்.

ஆத்மா பற்றிய உணர்வு வந்துவிட்டாலே பொறிகளும், புலன்களும் ஓரளவுக்கு நமது கட்டுப்பாட்டில் வரும். பெரும்பாலும் பொருள்சார் உலகில் புலன்கள், பொறிகளின் கட்டுப்பாட்டிலேயே உழல்கிறோம்.

ஆத்மாவின் இருப்பை உணராத வெறும் சட்டைகளாக மட்டுமே வாழ்கின்ற நிலையில், வாழ்வின் அர்த்தம் உணராத சட்டைகளாகிய உடல்களுக்குள்ளாக பாகுபேதம், அதனால் எழும் பல்வேறு சண்டைகள், சர்ச்சைகள் மட்டுமே விஞ்சி நிற்கும்!

சனாதன தர்மமாகிய இந்துமத ஞானமார்க்கம் என்கிற வழியில் உள்முகமாகப் பயணிக்க நேரும் போது ஆத்ம சக்தி அவனுள் திரேஜஸாக பரிமளிக்கிறது. ஆத்மாவை உணர உணர ஆத்ம சக்தியானது சாதாரணமாக வீணாகும் வகையிலான உணர்வுகள், செயல்கள் குறைந்து எல்லாவற்றிலும் "Oneness" எனப்படும் பார்வைக் கோணம் மேம்படும். நீ வேறு, நான் வேறு, அவன் வேறு என்பதாகிய பாகுபேதங்கள் தானே விலகும்.

குண்டலினியோகம் என்கிற முறையில் யோகிகளுக்கு ஆத்மசக்தியாகிய இது தலைக்கு மேலே சென்று தன்னைத் தனது உடம்பிலிருந்து முற்றிலுமாகத் தனித்து நோக்கும் பாங்கு "துரியாதீதப் பெருவழி" எனப்படுகிறது. உடலின் வருத்தம் தன்னைப் பாதிக்காமல் இருப்பது. இது எல்லாமே மனக்குவிப்பு என்பதால் கிடைக்கிறது.

இறைவனை நினைத்தபடி ஜெபம் என்று ஆரம்பித்து தன்னுள்ளே பயணப்பட ஆரம்பித்து தியானம் என முன்னேறி ஒரு நபர் யோகியாகப் பரிமளிப்பது.

சாதரணமாக ஒரு நபர் தன் உடலுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து தனது மனதை இறைசக்தியான ஆத்மாவை உணர்வதற்காக ஒரு புள்ளியில் குவித்து மனதைப் பழக்குவதன் மூலம் புத்தியானது மாஸ்டராகி மனதையும், உடலையும் நெறிப்படுத்தி வாழ்வது!

மனம் ஆசைகளால் சினம்,ஏமாற்றம், வருத்தம் என உழல்வதை, மன அமைதியான நிம்மதி என்பது எத்தகைய பேரானந்தம் என்பது அறிந்து அதில் திளைக்கும் ஆத்மா உயர்ந்த ஆத்மா!

இதைவிடச் சிறந்த தனிமனித Anger / Anxiety Management டூல் ஏதும் கிடையாது.

அன்புடன்,

ஹரிஹரன்

Saturday, January 06, 2007

(97) தமிழர் பேணியது வேதநெறியா / சார்வாக நெறியா?

இறை மறுப்புப் பேசும் பகுத்தறிவு, சுயமரியாதை, பொதுவுடமை, பின்நவீனத்துவப் பார்ட்டிகள் சார்வாக வாழ்வியல் தத்துவத்திற்கு அன் அப்போஸ்டு மற்றும் அன் கண்டிஷனல் சப்போர்ட் தந்திருப்பதைப் பார்த்து சார்வாகத்தத்துவத்தினை நிறுவிய முனிவருக்கு அவர் வழிபட்ட பிரம்மா, விஷ்ணு, சிவனாகிய மும்மூர்த்திகள் நேரில் வந்தருளிய போது கிட்டியதற்கு இணையான தெய்வீகமான ஒரு பரவசம் கிட்டியிருக்கலாம்.

உடம்பைத் தாண்டி ஏதுவுமே இல்லை என்பது சார்வாக தத்துவம். உடலைமகிழ்ச்சியாய் வைத்திருக்க என்ன கடன்பட்டாலும் கவலையில்லை என்பதுதான் சார்வாகத்தின் உயர் தத்துவம்.
பெண்டாட்டி பிள்ளைகள் குறித்துக் கவலை கொள்ளாமல் டாஸ்மாக்கில் கவிழ்ந்து கிடக்கும் மனோபாவமும் ஒருவகையில் சார்வாக , சுயநல எண்ணமே!

ஜெர்மனியில் குறியை அளந்து காட்டிய ஈவெரா சார்வாக வாழ்வியல்தத்துவத்தின் நவீன ரிஷி வடிவம் என்கிற கூற்று கூப்பாடாக வெளிவருவதில் சுயநல மனித வாழ்வியல் தத்துவ காலரியில் எப்படியாவது ஒரு ஓரத்திலாவது ஈரோட்டு வெங்காயத்துக்கு கர்ச்சீஃப் போட்டு இடம் பிடிக்கிற முனைப்பு தெரிகிறது.

உடலினைக் கட்டுப்பாடின்றி கொண்டாடிய பின் நவீனத்துவ மகரிஷி ஈவெரா எனும்படியான விவாதங்கள் சுய செலவில்லாமல் பொது மின்கம்பியில் கொக்கி போட்டு தெருமுனை மீட்டிங்குக்கு மின்சாரம் உரிமையோடு எடுப்பது மாதிரியானது!

பொதுவாக ஒரு மனிதன் பேசும் மொழி என்பது அவனது கலாச்சாரத்தினை வெளிப்படுத்திவிடும் ஒரு கருவியாகப் பயன் படுத்தப்படும். ஒரு மொழியின், அதன் தினசரி வெகுவாரியான மக்கள் பயன்பாட்டிலேயே பல தொன்மையான கலாச்சார, பண்பாட்டு விஷயங்களை "டீ கோட்" செய்துவிடலாம்.


தமிழ் மொழியில் ஒரு நபருக்கு உடம்பு சரியில்லை எனில் " எனக்கு உடம்பு சரியில்லை" என்றுதான் கூறுவது வழக்கம். ஆக சாதரணமாகிய காய்ச்சல், ஜலதோஷத்திலிருந்து கேன்சர் வரை வந்தாலும் தமிழ் பேசும் நபர் சொல்வது " எனக்கு உடம்பு சரியில்லை" என்பது தான்.

ஆக தான் வேறு, உடல் வேறு என்கிற வேத நெறி மெய்ஞானத்தில் திளைத்திருக்கிறது தமிழ்மண். அவஸ்தையில் உழல்வது ஆத்மாவாகிய தானல்ல... ஆத்மா அணிந்திருக்கும் சட்டையாகிய தனது உடல் தான் அவதிப்படுகிறது என்பதை மிகத் தெளிவான ஆன்ம ஞானத்தோடு தினசரி வாழ்வில் வார்த்தை வெளிப்பாடுகளில் கூட மிகக் கூர்மையாக வெளிப்படுத்தியிருக்கின்றார்கள் நம் தமிழ்மக்கள்.

ஆங்கிலத்தில் இதையே சொல்ல வேண்டுமானால், நான் சரியில்லை என்று பொருள்படும் விதமாக அமைந்த "I am not well" என்றுதான் கூறுவார்கள். மேற்கத்தியவர்கள் உடலே பிரதானம் என்கிற மிகுந்த சுயநலத்தோடு, ஆன்மா மற்றும் இறை பற்றிய எந்த ஒரு விரிவான தத்துவங்கள், புரிதல்களை அவர்களது வாழ்வியலில் காட்டி வாழ்ந்ததில்லை / வாழ்வதில்லை.

ஆக உடம்பே பிரதானம் என்பதான தனிநபர் சுயநலமே பிரதானமான வாழ்க்கைத் தத்துவம் என்பது நமது அடிமைச் சிந்தனையூக்கியான மெக்காலே கல்வி மேதைகளாகிய பகுத்தறிவுப் பகலவன்களை, மேற்கத்திய நாகரீக அடிவருடிகளை ஆட்கொள்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை. மெக்காலே கல்வியின் தொலைநோக்கே இந்தியர்கள் தனது வீட்டுப் பெருமைகளை விளக்குமாறு கொண்டு விளாசிவிட்டு மேலைநாட்டு காட்டு வாழ்வியலை /ஒத்ததை கையெடுத்துத் தொழும்படியான தாழ்வு மனப்பான்மையில் வைப்பதே.

ஆத்மா என்ற ஒன்று இல்லவே இல்லை, உடம்பே பிரதானம் உடம்பின் அழிவே அனைத்தின் முடிவு என்கிற சார்வாகத் தத்துவம் வெகுவாகப் பின்பற்றப்படும் வாழ்வியல் நெறியாக இருந்திருந்தால் மொழி வெளிப்பாட்டில் "எனக்கு உடம்பு சரியில்லை" என்பதாக தனது ஆரோக்கியக் குறைவினை வெளிப்படுத்தியிருக்க முடியாது!

பெருமளவுக்குச் சுயநலம் மேலோங்கிக் காணப்படும் இன்றைக்கும் கடன் வாங்கிக் கவலை இல்லாமல் தன் உடல் சுகத்துக்காக குடித்துக், கும்மாளமிட்டபடி வாழலாம் என்கிற ஒரு குடும்பத் தலைவனின் சார்வாக தத்துவ வாழ்வியல் நெறிக்குச் சேரியிலும், சிங்கிள் பெட்ரூம் பிளாட்டிலும், பங்களா வாழ்விலும் பெரும்பான்மையாகக் கிடைப்பது விளக்குமாற்று சாத்தல் தான்!

ஈவெரா ஆதரவாளர்கள் சார்வாகத்துக்குக் கொடிபிடிப்பது என்பதை இருவழிகளில் பார்க்க வேண்டியதாகிறது:

1. சுயநல உடல் மகிழ்ச்சிக்காக உண்பது, உடுப்பது,குடிப்பது,படுப்பது என்பதைத் தாண்டிச் சிந்திக்காததுதான் இவர்கள் தத்துவம் என்பது.

2. சார்வாகத் தத்துவ நெறியினை நிறுவிய முனிவரை ஏற்றுக்கொள்ளும் பகுத்தறிவுவாதிகள், அம்முனிவர் தொழுத இறைவர்களான இந்து மும்மூர்த்திகளாகிய பிரம்மா, விஷ்ணு, சிவன் என்கிற இறைவனாகிய இவர்களை ஏற்றுக்கொள்ளாமல் கடவுளே இல்லை, இல்லை...இல்லவே இல்லை... கடவுளைத் கும்பிடுபவன் காட்டுமிராண்டி என்பது ஏனோ?

தானும் குழம்பி, இருப்பவர் எல்லோரையும் குழப்பிச் சுயநலத்திற்காக வாழ்வது பகுத்தறிவு, சுயமரியாதை எனத் தமிழகத்தில் அழைக்கப்பட ஒரு புதிய ஆரம்பம் செய்து தந்தவர் ஈவெரா!

தமிழர் பேணியது சார்வாக நெறியே அல்ல. ஆத்மா, உடல் எனும் வேதநெறி சொன்ன மெய்ஞான பிரக்ஞையோடு குழப்பமேதும் இல்லாமல் சீரிய முறையிலே தினசரி வாழ்வு வாழ்ந்திருக்கின்றார்கள் நம் தமிழ்மக்கள்.

சற்றே சிந்திப்பீர்! குழப்பங்களில் இருந்து தெளிவடைவீர்!!


அன்புடன்,

ஹரிஹரன்

(96) துக்ளக் சோ.ராமஸ்வாமி திமுகவில் இணைகிறார்!!!

பரபரப்பான தகவல் கிட்டியிருக்கிறது. துக்ளக் அரசியல் செய்திப் பத்திரிக்கையின் ஆசிரியரான சோ ராமஸ்வாமி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையப்போகிறார் என்பதே செய்தி.

சோ ராமஸ்வாமியின் மகன் மாநகராட்சி விதிமுறையை லட்சியம் செய்யாமல் விதிமுறைகளை மீறிய செயலாகக் கட்டிய வளாகத்தினை, அதில் மீறிய விதிகளைச் ஆறுமாத காலத்தில் சரி செய்யாவிடில் சென்னை மாநகராட்சியே ஆறுமாதம் கழித்து இடிக்கும் என்று நீதிமன்றம் தீர்ப்புச் சொல்லியிருக்கிறது!

முன்பு டி.ராஜேந்தராக இருந்தபோது திமுகவின் கொபசெவாக இருந்து நீக்கப்பட்டு/நீங்கி தனியாக இயக்கம் கண்ட தற்போதைய லட்சிய திமுக கட்சித் தலைவர் விஜய டி.ராஜேந்தர் அவர்களின் வீடு தி.நகரில் முன்பு விதிமுறை காரணங்கள் காட்டி இதே திமுக அரசினால் அவசரமாக இடிக்கப்பட்டதும், இதனால் பல லட்சங்களைத் தான் இழந்தாலும் லட்சியங்களை இழக்கக்கூடாது என்பதால் லட்சியதிமுகவை விஜய டி.ராஜேந்தர் ஆரம்பித்தார் என்பது நினைவூட்டப்படுகிறது!.

ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தினால் ஆளும் திமுககட்சியினால் மண்டகப்படி மண்டையிடி என இருக்கும் தேமுதிக நடிகர் தலைவர் விஜய்காந்தும் நினைவுக்கு வந்துசெல்வது தவிர்க்க இயலாததாகிறது.

இந்த திமுக அரசின் இப்படியான கட்டிட இடிப்பு கடமையாற்றுதல்- பாதிக்கப்பட்டவர் லட்சியக் கட்சி துவக்குவது (தனது மக்கள் நலனுக்காகத்தாங்க) முன் நிகழ்வுகளை வைத்துப் பார்க்கையில் தனது கட்டிடத்திற்காக துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் சோ ராமஸ்வாமியும் அலட்சியமாக லட்சியம் காக்க வேண்டி தனிக்கட்சி துவங்குவாரா? என்பது பரபரப்பாக அரசியல் பார்வையாளர்களால் துக்ளக் இதழில் அட்டை-டூ-அட்டையில் எங்காவது கார்ட்டூனாக வருமா என்று கார்ட்டூன்ஸ்களாகியோர் எதிர்பார்க்கின்றனர்!

இதுவரையில் தமிழகத்தில் அரசியல் இயக்கங்களை ரவுடிகள், பேச்சாளர்கள், உரைஎழுதுவோர்,நடிகர், நடிகையர்கள், மரவெட்டிகளே துவக்கியுள்ளநிலையில் அரசியல் விமர்சகரான துக்ளக் சோ ராமஸ்வாமி அரசியல் இயக்கம் காண சரியான காரணம் கிடைத்திருக்கின்றதைப் பயன்படுத்தி நேரடியாக அரசியல் களம் காண்பாரா என்பது தேர்தல் இல்லாத நிலையிலும் தமிழகத்தில் ஒரு பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியையே தனது ரசிகராகவும், அரசியல் மாணாக்கராகவும் பெற்ற துக்ளக் ஆசிரியர் சோ ராமஸ்வாமி என்ன செய்யப் போகிறார்? தனிக்கட்சி காண்பாரா?

இல்லை அறிவார்ந்தவர்கள் செய்யும் முறையான அறிவாலயம் சென்று, வெறும் ஒரு தேங்காய்ப்பூ துண்டை எடுத்து திமுக தலைமை நிதியுடன் கை குலுக்கும்போது கைகளை மறைத்து மாட்டுவியாபாரம் பேசுவதுமாதிரி திமுகழகத்துக்கு நிதி எனும் கப்பம் கட்டிச் சிக்கலைச் சரிசெய்து கொண்டு, திமுகவில் இணைந்து சூழலை வென்று விடுவாரா?

இல்லை தமிழக அரசியல் வானில் இல்லாத நேர்மையைக் காட்டும் விதமாக தனது மகனால் மீறப்பட்ட கட்டிட விதிகளை மீட்டெடுப்பதன் வாயிலாக வணிக வளாகக் கட்டிடத்தைச் விதிக்குட்பட்டவாறு சீரமைத்துச் சிறியவனாகவே இருகப்போகிறாரா?

மக்கள் நலத்திட்ட நிதியிலிருந்து நீக்கித் தன்நிதி நிதியெனக் குவித்த மூத்த நிதியைக் கார்ட்டூனாகப் போட்ட நீ கழகத்தில் இணைவது ஏச்சாகும் என எண்ணுவாய் எனில், நம் அண்ணாத்தே வைகோவைப் பார், லட்சியத்திற்காக வாழ்ந்தவாறே மூத்த நிதியை குருபக்தியோடு ஏற்ற விஷயஞானமுள்ள விஜய.டி.ராஜேந்தரைப் பார்! சமீபத்திய மதிமுக எல்.கணேசன், செஞ்சி. ராமச்சந்திரனைப் பார் -என்ன செஞ்சாலும் அஞ்சாத நெஞ்சம் கிட்டும் உனக்கும்!

கட்டிடம் காப்பதில் நீ விஜய டி.ராஜேந்தரா? இல்லை விஜய்காந்தா? நிதி நிதியான ரீதியில் நீதியாகத் தமிழகத்தை குவலையம் போற்ற ஆளும் திருக்குவளை அரசனுக்கு நீ ஒரு நிதியைக் கப்பமாகச் செலுத்துவாயா? இல்லை சம்பந்தப்பட்ட உன் மகன் தவறிழைத்துக் கட்டிய கட்டிட வளாகத்தினை உடைத்துச் செதுக்கி விதிமுறையில் உள்ளபடிக்கே சீரமைப்பாயா?

நவீன தமிழகத்து தர்மமான தன்கட்டிடம் "தருமத்துக்கும்" இடிக்கப்பட்டால் உதயமாகும் ஒரு கட்சி என்கிற பின்நவீனத்துவ தர்மம் பேணுவாயா?

என்ன செய்யப்போகிறாய் நீ துக்ளக் சோ ராமஸ்வாமி?
ஒரு முறை சொல்லிவிடு..ஆறு மாதத்திற்குள்ளாக துக்ளக்கில் கார்ட்டூன் எதிர்பார்க்கும் ஒரு கார்ட்டூனாக,


ஹரிஹரன்


குறிப்பு:
சிவபாலனின் இந்தப்பதிவில் இந்தத் தகவலைப் பின்னூட்டமாக நான் இட எண்ணியிருந்ததை, பின்னூட்ட நீளம் கருதியும் (எனது வலைப்பூவை 100வது பதிவை நோக்கி முன்னேற்ற இதுவே ஒரு பதிவாக இருக்கட்டும் என்பதாலேயும்) எனது எண்ணத்தினை மாற்றிக்கொண்டு தனிப்பதிவாக இடத்தீர்மானித்தேன்.