Wednesday, January 31, 2007

(114) இட்லி வார்க்கப்படுகிறதா?... சுடப்படுகிறதா?

தமிழனின் பிரத்யேக உணவு இட்லி.

இன்றைக்கும் தமிழக ஹோட்டல்களில் "Largetst selling Single item" ஆகவும்"Ever green Opening item in Menu/Price list" திகழ்வது.

மெதுவடையுடனும், சாம்பாருடனும், கெட்டிச்சட்னி, கலர்கலரான சட்னிகளுடனும் இட்லி அமைக்கும் கூட்டணி வலுவானது, சுவையானது, இவற்றின் பிரிக்க முடியாத கூட்டணிதர்மம் அனைவரும் அறிந்தது!

இட்லி நீராவியில் வேகவைக்கப்ப்டுவதால் கொலஸ்டிரால்மாதிரியான உடல்நலக் குழப்பம் இல்லாத நல்ல ஆரோக்கியமான உணவு.

இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் என்பவைகளின் தொகுப்பு என்பதால் சமச்சீரான கார்போஹைடிரேட் கொண்ட ஒரு பாலன்ஸ்டு உணவு.

இப்படியான பல சிறப்புக்களைத் தன்னகத்தே கொண்ட இட்லி தயாரிக்கப்படும் முறையானது தமிழ்ப் பேச்சு வழக்கில் இரு வகையில் குறிப்பிடப்படுகிறது.

1. இட்லி சுடுதல்
2. இட்லி வார்த்தல்

இட்லிசுடுதல் என்பது இட்லித்தயாரிப்பில்சூடாக்குதல் என்பதைக் குறிக்கிறது எனில் வடை சுடுதல் என்பதான வடை தயாரிப்பில் சுடுதல்-> சூடாக்குதல் வேறாக இருக்கிறது.

வார்த்தல் என்பது வடிவப்படுத்துதல் எனும் மோல்டிங்கை குறிக்கிறது. இட்லி அதற்கான பிரத்யேக குழித்தட்டில் வார்க்கப்படுகிறது எனவே வார்த்தல் என இட்லியின் தயாரிப்பு முறை அழைக்கப்படுகிறது.


(துப்பாக்கியால்) சுடுதல் என்றும் ஒரு சுடுதல் இருக்கிறது ( இட்லி வெந்து விட்டதா என்று விரலால் குத்திப் பார்க்க இட்லியில் ஏற்படும் வடு துப்பாக்கியால் சுட்டதால் வந்ததா என்று எண்ணி சுடுதலுக்குப் பயன்படுத்தப்பட்டது ரிவால்வரா/க்லாஷ்னிகோவா /ரைபிளா /நாட்டுத் துப்பாக்கியா எனக் குழம்ப வேண்டியிருக்கிறது)


சுடுதல் என்பதாக டெர்ரகோட்டா, மட்பாண்ட, செங்கல் இவையும் சுடப்படுகின்றன. அதாவது வடிக்கப்பட்டபின், மோல்டில் வடிக்கப்பட்ட பச்சை மண் உருவங்கள் வெப்பத்தில் சுடப்படுகின்றன இதுவும் சுடுதல்தான்.

ஆக இட்லிவார்த்துச்சுடுதல் என்பதுதான் சரியாக,முழுமையாக இருக்கவேண்டும். வார்த்தல் மட்டுமாகவோ அல்லது சுடுதல் மட்டுமாகவோ என்பது இட்லியின் முழுத் தயாரிப்பு முறை அல்லவே!


குறிப்பு:
எழுதும் சப்ஜெக்டால் கடினமாகிற என் எழுத்து நடையை லேசாக்க எளிய சப்ஜெக்ட் பற்றி எழுதலாமேன்னு ஒரு முயற்சிதான் இப்பதிவு. இருப்பதிலேயே லேசானது நமக்க்கு சாப்பாடுதானே:-))

அன்புடன்,

ஹரிஹரன்

19 comments:

Hariharan # 03985177737685368452 said...

டெஸ்ட் மெசேஜ்!

பொன்ஸ்~~Poorna said...

உண்மை தான். சுடுதல், வார்த்தல் ஒரு குழப்பம் தான்..

தோசையையும் சிலர் சுடுகிறார்கள், சிலர் வார்க்கிறார்கள்.

இட்லியைச் செய்ய, ஒரு வார்ப்பு (mould) இருக்கிறது. அதனால், அதை வார்க்கலாம். ஆனால், தோசைக்கு வார்ப்பேதும் இல்லை. அப்படியும் தோசையை வார்க்கிறோம்.

சப்பாத்தி செய்ய பலர் வார்ப்பு பயன்படுத்துகிறார்கள், வட்டவடிவ மூடியை வைத்து அமுக்கி வட்டம் கொண்டுவருபவர்களைப் பார்த்திருக்கிறேன். அப்படியானால், சப்பாத்தியும் வார்க்கப்படுவதா? அல்லது சுடப்படுவதா?

அப்புறம் பணியாரம். இட்லியை விட அருமையான வார்ப்பு பணியாரத்தினுடையது. அப்படியும் பணியாரம் சுடத் தான் படுகிறது..


உப்புமா கிளறுவது, பொங்கல் வைப்பது மாதிரி பொருத்தமான சொற்களால் ஏனோ தோசையும் இட்லியும் சொல்லப்படுவதில்லை.

எண்ணெய் விட்டு வேக வைப்பதால் சுடுவது என்றால், இட்லி ஏன் சுட வேண்டும்?

ஹி ஹி.. ரொம்பவும் என் மொழியார்வத்தையும் பசியையும் கெளறி விட்டுட்டீங்க :)))

ரவி said...

எனக்கு தெரிந்து ஒன்லி அய்யர் ஹோம்ஸ்ல மட்டும்தான் இட்லி வார்க்கிறது / தோசை வார்க்கிறது என்ற பதத்தை பயன்படுத்தி வருகிறார்கள்...

அதை தவிர ஆனந்த விகடனில் சிலசமயம் வரும்...( கதைகளில் / ஜோக்ஸ்ல...)

வரவனையான் said...

இட்லிக்கு பருப்பு சாம்பார் மற்றும் வெங்காய சாம்பார் ரொம்ப நன்னாயிருக்கும் என்று பின்னூட்ட புகழ் 'பாலா" ஒருமுறை என்னிடம் சொல்லியுள்ளார்

G.Ragavan said...

ஆயிரம் இருந்தாலும் இட்டிலியோடு பொடியைக் குழைந்த்து நன்றாகப் பிசைந்திழைத்து விழுங்கும் போது..அடடா! சுகமோ ஆயிரம்.

என்னதான் தேங்காய்ச் சட்டினியோடும் சாம்பாரோடும் இட்டிலிக்குத் திருமணம் நடந்து விட்டாலும் வெங்காயச் சட்டியோடு ஒரு கள்ளத் தொடர்பு வைக்கையில்...ஆகா! என்ன சுகம்! என்ன சுகம்!

வார்ப்பது என்ற சொல் இட்டிலிக்கு முழுதாகப் பொருந்தாது. தோசைக்குப் பொருந்ததே பொருந்தாது.இட்டிலிக்கு வேகுதல்..வேக வைத்தல் ஆகிய சொற்களே சரி. இட்டிலி வேக வெக்கிறேன் என்று சொல்ல வேண்டும். தோசை சுடுகிறேன் என்று சொல்லலாம்.

சொல் ஒரு சொல் மாதிரி ஆயிருச்சு. :-)

Hariharan # 03985177737685368452 said...

சப்பாத்தியாவது வட இந்திய உணவு சுட்டிச் சொல்லும் போது சுடப்பட்டதாகவோ வார்க்கப்பட்டதாகவோ இருந்துவிட்டுப் போகட்டும் மொழிபெயர்ப்பு எரர் என விட்டு விடலாம் :-))

பின்னூட்டத்தில் இட்லியில் ஆரம்பித்து தோசை,சப்பாத்தி,பணியாரம்,உப்புமா,பொங்கல், வடை என ரவுண்டு கட்டினால் பசியைக் கிளற வேண்டாம் தானாகவே கிளர்ந்தெழும்:-))

Hariharan # 03985177737685368452 said...

//எனக்கு தெரிந்து ஒன்லி அய்யர் ஹோம்ஸ்ல மட்டும்தான் இட்லி வார்க்கிறது / தோசை வார்க்கிறது என்ற பதத்தை பயன்படுத்தி வருகிறார்கள்...

அதை தவிர ஆனந்த விகடனில் சிலசமயம் வரும்...( கதைகளில் / ஜோக்ஸ்ல...)//

ஒன்லி அய்யர் ஹோம்ஸ்ல மட்டும்தான் இட்லி வார்க்கிறது என்பதை விட பெரும்பாலும் என்பது சரி ;-))

குமுதத்தில் கூட வார்க்கப்படுகிறது கதை/துணுக்குகளில் :-))

ஜொள்ளுப்பாண்டி said...

ஹரி அண்ணாச்சி என்னாங்க நம்மளை மாதிரியே உங்களுக்கும் இப்படிப்பட்ட வரலாற்று சந்தேகமெல்லாம் வருது போல இருக்கே ??;)))))))))))

Hariharan # 03985177737685368452 said...

//இட்லிக்கு பருப்பு சாம்பார் மற்றும் வெங்காய சாம்பார் ரொம்ப நன்னாயிருக்கும் என்று பின்னூட்ட புகழ் 'பாலா" ஒருமுறை என்னிடம் சொல்லியுள்ளார் //

க்யூ வரிசை மாதிரி பருப்பு சாம்பார்.
பருப்பு இல்லைன்னா அது சாம்பாரே கிடையாதுங்க வரவணை :-)) குழம்பு

இட்லிப்"பொடி" வச்சு ஏதோ சொல்லியிருக்கீங்க. வேணாம் கார நெடி :-))

சாம்பார் ருசிக்கணும்னா முருங்கை, கத்திரி,தக்காளி உடன்
"வெங்காயத்தையும்" நல்லா நறுக்கிப்போட்டா வாசம் + ருசி சூப்பரா வரும் வரவணையான்.:-))

Hariharan # 03985177737685368452 said...

//வார்ப்பது என்ற சொல் இட்டிலிக்கு முழுதாகப் பொருந்தாது.//

// தோசைக்குப் பொருந்ததே பொருந்தாது.//

தோசைக்கான வட்ட வடிவு தானாய் அமைவதில்லையே வார்க்கப்படுகிறது வட்டமாய் எனவே வார்த்தல் எனும் பதம் தோசைக்கும், இட்லிக்கான அளவில் பாதியளவு பொருந்தும்தான்.

இட்லியை "அவித்தல்" எனவும் கிராமங்களில் சொல்வார்கள்.

அனைவரையும் கவர்ந்த இட்லிக்கு ஜே!

Hariharan # 03985177737685368452 said...

//ஹரி அண்ணாச்சி என்னாங்க நம்மளை மாதிரியே உங்களுக்கும் இப்படிப்பட்ட வரலாற்று சந்தேகமெல்லாம் வருது போல இருக்கே ??;)))))))))))//

அதொண்ணும் இல்லை ஜொள்ஸ்,

வார்க்கப்பட்ட இட்லி ஆவிபறக்கக் கையைச் சுட்டதால் வரலாற்றுப் பின்ணணி ஆராய்ச்சி டிரிக்கர் ஆகிடுச்சு:-))

(என் பதிவுகளில் அ முதல் ஃ வரையிலான எல்லா ஈயம்/இஸம்களை எடைக்குப்போட்டு நிறைய பேரீச்சம்பழம் சாப்பிட்டு சர்க்கரை ஏறிக்கிடக்கு அதான் இட்லிக்கு கொஞ்சம் மாறியாச்சு :-)))

நீ சும்மா இருந்தாலும் உன்வாய் சும்மாயிருக்காதுன்னு ஈய/ இஸம் இழுத்துரும் :-))

சேதுக்கரசி said...

எங்க பக்கம் இட்லி அவிக்கிறதுன்னு தான் சொல்லுவோம். இட்லி சுடுறது, வார்க்கிறது -- இதெல்லாம் இன்னிக்கு வரைக்கும் நான் கேள்விப்பட்டதேயில்லை (நெசமா! :-))

துளசி கோபால் said...

சுடறதோ, வார்க்கறதோ, அவிக்கறதோ இதுலே எதோ ஒண்ணைச் செஞ்சு இன்னிக்கு
உண்மையிலும் இட்டிலி தின்னாச்சு. அதுசரி, இப்பெல்லாம் 'கன் பவுடர்'ன்னு
ஒண்ணு கிடைக்குதாமே இந்த இட்டிலியுடன்! ( எல்லாம் சரவணபவன் மெனுவில்
இருந்து படிச்சதுதான்)

SP.VR. SUBBIAH said...

இட்லி அவிப்பது / அல்லது வேகவைப்பது தான் சரியானது

அம்மா சுட்ட தோசை' என்ற பாடல் உள்ளது! சுடுவது என்பது தோசைக்குரிய சொல்!

Hariharan # 03985177737685368452 said...

//இட்லி சுடுறது, வார்க்கிறது -- இதெல்லாம் இன்னிக்கு வரைக்கும் நான் கேள்விப்பட்டதேயில்லை (நெசமா! :-))//

சேதுக்கரசி,

மெய்யாலுமேவா?? :-))

Hariharan # 03985177737685368452 said...

//இப்பெல்லாம் 'கன் பவுடர்'ன்னு
ஒண்ணு கிடைக்குதாமே இந்த இட்டிலியுடன்! ( எல்லாம் சரவணபவன் மெனுவில்
இருந்து படிச்சதுதான்)//

கன்பவுடர்? நக்ஸலைட் இட்லியோ?
கல்லு இட்லியை விட கன்பவுடர் சேதாரம் குறைவாச் செய்யுமோ? :-))

வருகைக்கும் கன் தகவலுக்கும் நன்றி!

சேதுக்கரசி said...

//மெய்யாலுமேவா?? :-))//

ஆமாங்க!

Hariharan # 03985177737685368452 said...

சுப்பையா சார்,

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

லக்ஷ்மி said...

நீர் வார்த்தல் - இந்த பதப்பிரயோகத்தை கேட்டிருக்கீங்களா? திரவ நிலையிலிருக்கும் மாவை எதில் ஊற்றினாலும்(இட்லி தட்டு/தோசைக்கல்) அது வார்த்தல் அப்படின்றது என் அபிப்ராயம்.