Sunday, January 07, 2007

(99) சித்தர்கள் சொன்னது சார்வாகம்? (OR) வேத நெறி?

பண்டைய தமிழ்ச் சித்தர்கள் பாடல்கள் வழிச் சொன்ன வாழ்வியல் தத்துவங்கள், சார்வாக வாழ்வியல் தத்துவங்கள் என்பன இந்துமதத்தின் சனாதன தர்ம வேதங்கள் சொல்லும் வாழ்வியல் நெறித்தத்துவங்களுக்குச் சரியான மாற்றுத் தத்துவங்கள் என்கிற மாதிரி பகுத்தறிவு, சுயமரியாதை, பொதுவுடமைச் சிந்தனாவாதிகள் பேசுகிறார்கள்.

"இந்துமத சனாதன தர்ம வேத நெறித் தத்துவங்கள் என்பன ஏதோ வேறுவகை தனித்த ஆதி தமிழர் பின்பற்றிய மற்றும் பாரதத்தில் இருந்த சார்வாகம், பவுத்தம், சமணம் என்பதான பல்வகை இதர தத்துவங்களைப் பார்ப்பனர்களாகிய ஆரியர்கள் திருடித் தொகுத்த தொகுப்பே இந்துமத சனாதன தர்மமும் அதன் நான்கு வேதங்களும்"
என்பதாக உண்மையை விடுதலை செய்கின்ற பகுத்தறிவு வெங்காயமான ஈவெரா அய்யாவழி வந்த கோயபல்ஸ் குரல்களுக்குச் சொந்தக்காரர்களுக்கு உண்மையை மீண்டும் ஒருமுறை விடுதலை செய்து நிஜமான நிதர்சனத்தைக் காட்டவே இந்தப் பதிவு.

பண்டைய தமிழ்ச் சித்தர் பாடல்கள் என்ன சொல்கின்றன என ஒரு சாம்பிளாக நாம் அனைவரும் அறிந்த ஒரு சரணமாகிய "நந்தவனத்தில் ஓர் ஆண்டி" என்பதை உள்ளடக்கிய கடுவெளிச் சித்தர் பாடிய முழுப்பாடலையும் எடுத்துக்காட்டாகக் கொண்டு படித்துப் பொருளை உணர்வோம்.

கடுவெளிச் சித்தர் பாடல்

பல்லவி:

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே

சரணம் 4

நந்த வனத்திலோ ராண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி. (பாபஞ்செய் யாதிரு)

சரணம் 6

நல்ல வழிதனை நாடு- எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு.

சரணம் 7
நல்லவர் தம்மைத் தள்ளாதே - அறம்
நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே
பொல்லாக்கில் ஒன்றுங்கொள்ளாதே - கெட்ட
பொய்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே
.

சரணம் 8
வேத விதிப்படி நில்லு - நல்லோர்
மேவும் வழியினை வேண்டியே செல்லு

சாத நிலைமையே சொல்லு - பொல்லாச்
சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு
.

சரணம் 9

பிச்சையென் றொன்றுங்கே ளாதே - எழில்
பெண்ணாசை கொண்டு பெருக்கமாளாதே
இச்சைய துன்னையாளாதே - சிவன்
இச்சை கொண்டதவ்வழி யேறிமீளாதே.

சரணம் 10

மெஞ்ஞானப் பாதையி லேறு - சுத்த
வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு

அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு - உன்னை
அண்டினோர்க் கானந்த மாம்வழி கூறு.

சரணம் 11
மெய்குரு சொற்கட வாதே - நன்மை
மென்மேலுஞ் செய்கை மிகவடக்காதே
பொய்க்கலை யால்நடவாதே - நல்ல
புத்தியைப் பொய்வழி தனில் நடத்தாதே
.( நந்த வனத்திலோ)

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

அரசியல் திரா"விட" பெத்தடினில் மூழ்கிய பகுத்தறிவுச் சிங்கங்கள், சுயமரியாதைத் தங்கக்கட்டிகள், பார்ப்பன எதிர்ப்புபத் தத்துவப் பேச்சாளர்கள், பொதுவுடமை ஜால்ராக்கள், வெட்டி வெங்காய இஸம், அண்ணாயிஸம், கருணாநிதியிஸம் என்கிற பிழைப்புவாத அரசியல் திரா"விட"இஸம் மற்றும் ஆங்கிலத்தில் A-Z -ism பேசி வருவோர், தமிழில் 247 எழுத்துக்களில் தொடங்கும் இஸங்களை ரசமாகக் குடித்தவர்கள் பண்டைய தமிழ்ச்சித்தரான கடுவெளிச் சித்தரை மேற்கண்ட பாடல் பாடியதற்காக கடுப்பாகி "வந்தேறிகளின் ஆரியமாயையில் சிக்கிய பார்ப்பன அடிவருடி" எனத் தமிழினத்தில் இருந்து வெளியேற்றுவார்களா?

இல்லை இந்த மார்கழி மாதத்தில் இதுநாள் வரை பிழைப்புக்காகப் பொய் பேசி வயிறு வளர்த்ததற்காகத் திருவரங்கனைத் தொழுது தவறுணர்ந்தபடியே தரிசித்து மேம்பட அரங்கனின் படுக்கையான பாம்பின் நீட்சிமாதிரி கியூவரிசையில் நின்றபடியே, வெறும் பொய்யுரை மட்டுமே பகுத்தறிவு, சுயமரியாதை என்று பேசிக் குழப்பிய, திருவரங்கத்தில் வைக்கப்பட்ட பகுத்தறிவு வெங்காயம் ஈவெராவின் சிலையிலிருந்து, தத்தம் நெற்றியில் திருமண் , திலகமிட்டபடி வரிசையில் நின்று வைகுண்ட நாதனை நோக்கி ரங்கா..ரங்கா இதுநாள்வரை நாங்கள் செய்தது எல்லாம் ராங்கோ.. ராங்கப்பா... அரங்கப்பா நீ எம்மேல் கொஞ்சம் மனம் இரங்கப்பா என்று திருவரங்க அரங்கனைப் போற்றுவார்களா?

சிந்திப்பீர்!! மன இருளை அகற்றுவீர்!! இந்துமத வேதம் சொல்லிய படியே இறைவனைப் போற்றுவீர்!!! பிழைப்புக்காகப் பொய்யைச் சொல்லும் கூட்டமாயிருக்காதீர்!!

அன்புடன்,


ஹரிஹரன்

2 comments:

Hariharan # 03985177737685368452 said...

பிளாக்கர் சொதப்பல்.
தொந்திரவுக்கு மன்னிக்கவும்.

டெஸ்ட் மெசேஜ்! :-))

ஜடாயு said...

அருமையான பதிவு ஹரி. நல்ல சித்தர் பாடலைக் கொடுத்து அறியாமைப் பகுத்தறிவாளர்கள் நல்வழி தேடும் மார்க்க்கத்தைக் காண்பித்திருக்கிறீர்கள். நன்றி.