(96) துக்ளக் சோ.ராமஸ்வாமி திமுகவில் இணைகிறார்!!!
பரபரப்பான தகவல் கிட்டியிருக்கிறது. துக்ளக் அரசியல் செய்திப் பத்திரிக்கையின் ஆசிரியரான சோ ராமஸ்வாமி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையப்போகிறார் என்பதே செய்தி.
சோ ராமஸ்வாமியின் மகன் மாநகராட்சி விதிமுறையை லட்சியம் செய்யாமல் விதிமுறைகளை மீறிய செயலாகக் கட்டிய வளாகத்தினை, அதில் மீறிய விதிகளைச் ஆறுமாத காலத்தில் சரி செய்யாவிடில் சென்னை மாநகராட்சியே ஆறுமாதம் கழித்து இடிக்கும் என்று நீதிமன்றம் தீர்ப்புச் சொல்லியிருக்கிறது!
முன்பு டி.ராஜேந்தராக இருந்தபோது திமுகவின் கொபசெவாக இருந்து நீக்கப்பட்டு/நீங்கி தனியாக இயக்கம் கண்ட தற்போதைய லட்சிய திமுக கட்சித் தலைவர் விஜய டி.ராஜேந்தர் அவர்களின் வீடு தி.நகரில் முன்பு விதிமுறை காரணங்கள் காட்டி இதே திமுக அரசினால் அவசரமாக இடிக்கப்பட்டதும், இதனால் பல லட்சங்களைத் தான் இழந்தாலும் லட்சியங்களை இழக்கக்கூடாது என்பதால் லட்சியதிமுகவை விஜய டி.ராஜேந்தர் ஆரம்பித்தார் என்பது நினைவூட்டப்படுகிறது!.
ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தினால் ஆளும் திமுககட்சியினால் மண்டகப்படி மண்டையிடி என இருக்கும் தேமுதிக நடிகர் தலைவர் விஜய்காந்தும் நினைவுக்கு வந்துசெல்வது தவிர்க்க இயலாததாகிறது.
இந்த திமுக அரசின் இப்படியான கட்டிட இடிப்பு கடமையாற்றுதல்- பாதிக்கப்பட்டவர் லட்சியக் கட்சி துவக்குவது (தனது மக்கள் நலனுக்காகத்தாங்க) முன் நிகழ்வுகளை வைத்துப் பார்க்கையில் தனது கட்டிடத்திற்காக துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் சோ ராமஸ்வாமியும் அலட்சியமாக லட்சியம் காக்க வேண்டி தனிக்கட்சி துவங்குவாரா? என்பது பரபரப்பாக அரசியல் பார்வையாளர்களால் துக்ளக் இதழில் அட்டை-டூ-அட்டையில் எங்காவது கார்ட்டூனாக வருமா என்று கார்ட்டூன்ஸ்களாகியோர் எதிர்பார்க்கின்றனர்!
இதுவரையில் தமிழகத்தில் அரசியல் இயக்கங்களை ரவுடிகள், பேச்சாளர்கள், உரைஎழுதுவோர்,நடிகர், நடிகையர்கள், மரவெட்டிகளே துவக்கியுள்ளநிலையில் அரசியல் விமர்சகரான துக்ளக் சோ ராமஸ்வாமி அரசியல் இயக்கம் காண சரியான காரணம் கிடைத்திருக்கின்றதைப் பயன்படுத்தி நேரடியாக அரசியல் களம் காண்பாரா என்பது தேர்தல் இல்லாத நிலையிலும் தமிழகத்தில் ஒரு பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினியையே தனது ரசிகராகவும், அரசியல் மாணாக்கராகவும் பெற்ற துக்ளக் ஆசிரியர் சோ ராமஸ்வாமி என்ன செய்யப் போகிறார்? தனிக்கட்சி காண்பாரா?
இல்லை அறிவார்ந்தவர்கள் செய்யும் முறையான அறிவாலயம் சென்று, வெறும் ஒரு தேங்காய்ப்பூ துண்டை எடுத்து திமுக தலைமை நிதியுடன் கை குலுக்கும்போது கைகளை மறைத்து மாட்டுவியாபாரம் பேசுவதுமாதிரி திமுகழகத்துக்கு நிதி எனும் கப்பம் கட்டிச் சிக்கலைச் சரிசெய்து கொண்டு, திமுகவில் இணைந்து சூழலை வென்று விடுவாரா?
இல்லை தமிழக அரசியல் வானில் இல்லாத நேர்மையைக் காட்டும் விதமாக தனது மகனால் மீறப்பட்ட கட்டிட விதிகளை மீட்டெடுப்பதன் வாயிலாக வணிக வளாகக் கட்டிடத்தைச் விதிக்குட்பட்டவாறு சீரமைத்துச் சிறியவனாகவே இருகப்போகிறாரா?
மக்கள் நலத்திட்ட நிதியிலிருந்து நீக்கித் தன்நிதி நிதியெனக் குவித்த மூத்த நிதியைக் கார்ட்டூனாகப் போட்ட நீ கழகத்தில் இணைவது ஏச்சாகும் என எண்ணுவாய் எனில், நம் அண்ணாத்தே வைகோவைப் பார், லட்சியத்திற்காக வாழ்ந்தவாறே மூத்த நிதியை குருபக்தியோடு ஏற்ற விஷயஞானமுள்ள விஜய.டி.ராஜேந்தரைப் பார்! சமீபத்திய மதிமுக எல்.கணேசன், செஞ்சி. ராமச்சந்திரனைப் பார் -என்ன செஞ்சாலும் அஞ்சாத நெஞ்சம் கிட்டும் உனக்கும்!
கட்டிடம் காப்பதில் நீ விஜய டி.ராஜேந்தரா? இல்லை விஜய்காந்தா? நிதி நிதியான ரீதியில் நீதியாகத் தமிழகத்தை குவலையம் போற்ற ஆளும் திருக்குவளை அரசனுக்கு நீ ஒரு நிதியைக் கப்பமாகச் செலுத்துவாயா? இல்லை சம்பந்தப்பட்ட உன் மகன் தவறிழைத்துக் கட்டிய கட்டிட வளாகத்தினை உடைத்துச் செதுக்கி விதிமுறையில் உள்ளபடிக்கே சீரமைப்பாயா?
நவீன தமிழகத்து தர்மமான தன்கட்டிடம் "தருமத்துக்கும்" இடிக்கப்பட்டால் உதயமாகும் ஒரு கட்சி என்கிற பின்நவீனத்துவ தர்மம் பேணுவாயா?
என்ன செய்யப்போகிறாய் நீ துக்ளக் சோ ராமஸ்வாமி?
ஒரு முறை சொல்லிவிடு..
ஆறு மாதத்திற்குள்ளாக துக்ளக்கில் கார்ட்டூன் எதிர்பார்க்கும் ஒரு கார்ட்டூனாக,
ஹரிஹரன்
குறிப்பு:
சிவபாலனின் இந்தப்பதிவில் இந்தத் தகவலைப் பின்னூட்டமாக நான் இட எண்ணியிருந்ததை, பின்னூட்ட நீளம் கருதியும் (எனது வலைப்பூவை 100வது பதிவை நோக்கி முன்னேற்ற இதுவே ஒரு பதிவாக இருக்கட்டும் என்பதாலேயும்) எனது எண்ணத்தினை மாற்றிக்கொண்டு தனிப்பதிவாக இடத்தீர்மானித்தேன்.
6 comments:
டெஸ்ட் மெசேஜ்!
பொறுத்திருந்து பார்ப்போம்... என்ன நடக்கிறதென்று...
ஹ , நாங்கெள்ளாம் காங்கிரீட் பூங்கா வைச்சு அறிவாலத்த காப்பாத்திக்கல ? இந்த பாப்பானுங்களுக்கு அறிவே இல்லையப்பா , முன்னாடி ஒரு வெங்காய சிலைய செச்சிருந்தா இடிக்க முடியுமா ?
36000 கோடி வச்சிருக்கற எங்களாலயே ஒரு 10 செண்ட் பூங்காவுக்கு கொடுக்க முடியல , இவிங்கெல்லாம் ...
ஹரி,
உங்கள் பரிதவிப்பை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது ;-)
இதனை அதிகமாக்க கலைஞர் ஏதாவது செய்ய வேண்டும் என்று மனதாற விரும்புகிறேன்.
//உங்கள் பரிதவிப்பை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது//
ஹா..ஹா எனக்கு இதில் தனிப்பட்டு பரிதவிப்பு என்ன இருக்க முடியும் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?
இது வெறும் செய்தி விமர்சனமாகக்கூட ஏன் உங்களால் பார்க்க இயலவில்லை என்பது அறியப்படுவது சுவையாக இருக்கிறது :-))
//இதனை அதிகமாக்க கலைஞர் ஏதாவது செய்ய வேண்டும் என்று மனதாற விரும்புகிறேன்.//
கருணாநிதிக்கும் சோவுக்கும் அப்படி ஒரு பொருத்தம் இருக்கிறது. துக்ளக் புகழ் பெற்றதே கருணாநிதியினை விமர்சித்த துக்ளக் எரிப்புச் சம்பவம்தானே ;-))
சோவின் துக்ளக்கின் சர்க்குலேஷன் குலையாமல் காப்பது திருக்குவளையார் இம்மாதிரி நடத்தும் செயல்களால்தானே
:-)))
//All the brahmin hating bloggers can write a blog post and
give vent to their perversions.//
:))))
Post a Comment