Thursday, December 28, 2006

(95) எல்லோருக்கும் எனது 2007 புத்தாண்டு வாழ்த்துக்கள்

எனக்கு தனிப்பட்டு 2006 நல்ல சிறப்பான வருடம். வலைப்பூ உலகம் என்கிற இணைய உலக ஜோதியில் இணைத்துக்கொண்ட வருடம். ( பலருக்கு இதனாலேயே 2006 மோசமான வருடமாக இருந்திருக்கலாம் :-)) ;-)))

2006ல் வேறு எப்போதும் இல்லாத அளவுக்கு எனது மூளையை கசக்கியிருக்கிறேன். (உனக்கு மூளையே கிடையாதுன்னு உன் எழுத்துதான் சொல்லுதே என்று செல்லமாக ஓசை எழுப்புபவர்களுக்கு) அட்லீஸ்ட் இந்த 2006ல் என்னோட மூளையைத் தேட ஆரம்பித்து இருக்கிறேன்! இனிமையான சாம்பிராணி மணத்துடன் எனது எழுத்துத் தமிழ் மணம் வீசியது என்றே நான் நினைக்கின்றேன்!

இணைய வலைப்பூ வாசத்திற்குப்பின் வாசிப்புக்களால் அறிவு என்பது மேம்பட்டது. பல்வேறு மாற்றுக் கண்ணோட்டங்களை மிக அருகே இருந்து ஒன் டூ ஒன் என்கிற மாதிரி ரசித்து அனுபவித்து, விமர்சித்து, விமர்சனப்படுத்தப்பட்டு, வசவுகள் தராமலே வசவுமேல் வசவு வாங்கி மனோதிடம் மேம்படுத்தப்பட்டு, கருத்தைக் கருத்தாகப் பார்ப்பது என்பது கடினமான பக்குவம் என்று படித்ததன் அர்த்தத்தை முழுதும் உணர்ந்து பயணிக்க வலைப்பூ வாசம் உதவியது.

2006ல் எனது தனித்த நேரம் எனது வலைப்பூ மூழ்கலால் களவாடப்பட்டது என்ற போதும் பயனுள்ளதாகவே கருதுகிறேன். வீட்டில் எப்போதும் பெரிய சிந்தனைவாதி மாதிரி தனித்து இருக்கும்படி செய்து கொள்ளவேண்டியதில் எனது வலைப்பூ வாசம் வீட்டில் இருப்பவர்களால் எதிரியாகப் பார்க்கப்படுகிறது.

2007 புதிய ஆண்டில் வலைப்பூ வாசம் குறைத்துக் கொள்ள திட்டமிட்டிருக்கிறேன்!
(நான் திட்டமிட்டால் அது நடக்காது என்பது என் ராசி) எனவே உடனே மிகுந்த மகிழ்ச்சி அடைய வேண்டியது இல்லை :-)))

எனது பதிவைப் படிக்காத, படித்த, படித்துப் பின்னூட்டமிட்ட , பின்னூட்டமிடாத, விமர்சித்த, பாராட்டிய, வசவுகளை அள்ளித்தெளித்த என அனைவருக்கும் எனது 2007 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

எல்லோரும் 2006ல் பெற்ற நல்-அனுபவங்களினும் கூடுதலாக இந்த 2007 புத்தாண்டில் இன்னும் சிறப்பான நல்ல அனுபவங்களைப் பெற்று தத்தம் நல்ல குறிக்கோள்களில் வெற்றியடைந்து மேலும் மேம்பட எனது நல்வாழ்த்துக்கள்.

மீண்டும் 2007 புத்தாண்டில் சந்திக்கலாம்.

அன்புடன்,

ஹரிஹரன்

13 comments:

Hariharan # 26491540 said...

டெஸ்ட் மெசேஜ்!

tbr.joseph said...

உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஹரி!

அன்புடன்
ஜோசஃப்

லக்கிலுக் said...

test வாழ்த்துக்கள்!

bala said...

ஹரிஹரன் அய்யா,

புத்தாண்டு வாழ்த்துக்கள். கட்டவிழ்ந்து,நெறி கெட்டு ஓடும் குஞ்சுகளுக்கு நேர்வழி காட்டும் உங்கள் முயற்சி தொடரட்டும் அய்யா.

பாலா

கார்மேகராஜா said...

அய்யா! பாலா அய்யா!

பொழிகிறீர்கள் போங்கோ!

வடுவூர் குமார் said...

எழுதின கை சும்மா இருக்காது ஹரி. :-))
புது வருடத்தில் இணையலாம்

நன்மனம் said...

ஹரிஹரன் அவர்களே,

2007 இனிதே அமைய வாழ்த்துக்கள்.

மிதக்கும் வெளி said...

வாழ்த்துக்கள் ஹரி

Krishna (#24094743) said...

இனிய நெஞ்சம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் ஹரிஹரன்.

உங்கள் புனித வலைப் பயணம் தொடர ப்ரார்த்தனைகள்!

chella said...

தங்களுக்கும் எனது வாழ்த்துக்கள். கருத்து வேறுபாடுகள் நிச்சயம் இருக்கும்! நீங்கள் எழுதுவதை மற்றும் குறைத்து விடவேண்டாம் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் என்று! மற்றபடி செல்லாவிற்கு தனிமனித காழ்ப்புணர்ச்சி ஒரு போதும் இருந்ததில்லை! Happy 2007!

OSAI CHELLA

மனிதன் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் ஹரிஹரன்.
அன்புடன்,
ராமச் சந்திரன்.

கீதா சாம்பசிவம் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஹரிஹரன். நூற்றுக் கணக்கில் பதிவுகள் எழுதவும் வாழ்த்துகிறேன்.

Hariharan # 26491540 said...

.:: மை ஃபிரண்ட் ::. @ .:: My Friend ::. has left a new comment on your post "(95) எல்லோருக்கும் எனது 2007 புத்தாண்டு வாழ்த்துக்கள்":

வணக்கம் ஹரி..

இதற்கு முன் நான் உங்கள் ப்ளாக்கில் பின்னூட்டம் இடாவில்லாலும், தொடர்ந்து உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன். உங்கல் பதிவு மிகவும் பயனுள்ளதாக்வே இருக்கு. இன்ன்ம் நிரைய எழுதுங்கள்.

உங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகுக. :-)