Wednesday, December 06, 2006

(76) ஈவெரா.சாமியுடன் குவைத்தில் உலா -1

ஈவெரா வெளியே சற்று உலவிட நினைத்தார். சரி. இதுவும் நல்ல சந்தர்ப்பம் குவைத் வாழ் பெருவாரியான அடித்தட்டுத் தமிழ் பிழைப்பாளிகளைக் காட்ட என்று நினைத்தவாறே ஈவெராவை மட்டும் வெளியே அழைத்துச் சென்றேன்.

ஹரி: மை பிரண்ட் மனதை மாற்ற கடற்கரைக்குச் செல்லவிருப்பமா? இதமான குளிருடன் 18 டிகிரிதான் வெயில் மாற்றாக குவைத்தில் பிழைக்கும் அடித்தட்டுத் தமிழர்களைச் சந்திக்கலாமா? எது விருப்பமோ அங்கே செல்லலாம்.

ஈவெரா: பயனுள்ள வகையில் தமிழ்மக்களைச் சந்திப்பதே சிறப்பு. சென்னையில் பார்க்காத பெரிய வெங்காயக் கடற்கரையா இங்கே இருக்கிறது மீண்டும் மீண்டும் செல்ல?

ஹரி: தகவல் சொல்லாமல் திடீர் என்று விஸிட் அடிப்பது தான் பலவகையிலும் நல்லது.

மை பிரண்ட் குவைத்தில் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் இந்தியர்கள் வேலை செய்து பிழைக்கின்றார்கள். இதில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் தமிழர்கள். இதில் 70சதவீதம் கூலிவேலை தான் காண்டிராக்டிங் கம்பெனிகளில் சொற்ப சம்பளத்துக்கு ஊரிலே ஏராளமான ஏமாற்றுக்கார ஏஜெண்டுகளிடம் காசைக் கட்டி வந்து அல்லல் படுகிறார்கள். இதில் இள வயது இருபதுகளில் இருப்பவர்களும் இன்னும் படிக்காமல் கூலிக்கு வருவது அவலம். இவர்கள் அப்பன்கள் அரசியல் திரா"விட"க் கட்சிகளுக்காக எதற்காக என்று பகுத்தறிவைப் பயன்படுத்தாது சும்மா பிரியாணிப்பொட்டலத்துக்கும், அன்றைக்கு பேட்டாக்காசு வாங்கியும் வாழ்க ஒழிக என்று கோஷம் தமது தலைமுறையின் வாழ்வைக் கெடுத்துக்கொண்டு இன்றைக்கு 2006லும் அடுத்த தலைமுறையினைக் கடல்தாண்டியும் வாணம் தோண்டுவது, என்று கூலி வேலைக்குத்தான் தயார் செய்ய பகுத்தறிவு பயன்பட்டிருக்கிறது.

ஈவெரா: தமிழ்நாட்டில் பகுத்தறிவு இயக்கங்கள் வெகுதியாக 69% இட ஒதுக்கீடு செய்திருக்கின்றார்களே பின் எப்படி கூலிவேலைக்கு இப்படி பெரும்பாலான அக்மார்க் தமிழர்கள் மீண்டும் இக்காலத்திலும்?

ஹரி: தமிழக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் உயர் ஆதிக்க சாதியினரது பிழைகள் நிறைந்த இடஒதுக்கீட்டு அமலாக்கத்தினால் கிருமி லேயர் ஒன்று உருவாகி இட ஒதுக்கீட்டால் மேலேறி வந்தவர்களே மீண்டும் மீண்டும் பயனுற்றும், மக்கள் தொகை ஏற்றம், எல்லோரும் கல்விகற்க வேண்டிய கட்டாயத்தேவை எனும் அவசியமான அளவிற்கு இந்து அறநிலையத்துறை கோவில்கள் மூலம் வரும் கோடிக்கணக்கான நிதியால் தமிழகஅரசின் உயர் கல்வித்துறை புதிய உயர் கல்விச்சாலைகளை இந்த நாற்பதாண்டுகளில் ஏற்படுத்தாதாலும் உண்மையில் இந்த அடித்தட்டு தமிழனை மேலே ஏற விட்டுவிடாமல் அவர்கள் மட்டுமே இப்போதிருக்கும் இட ஒதுக்கீட்டில் பெரும்பகுதியை அரசியல் சாணக்கியத்தில் அரசு கெஜட்டில் மட்டும் சாதீ ரீதியாக பின்னோக்கி மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாக்கிக் கொண்டு அரசில் அமைச்சர்கள், அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளாகிய எம்.எல்.ஏ, எம்.பி, மருத்துவர்கள், தொழிலதிபர்கள் என்று இவர்களது க்ரீமி வளையம் மட்டுமே இந்த இடப்பங்கீட்டில் மேலேறிவர அந்த மேம்பாட்டுத் திட்டத்தினை மிகச்சரியாகப் பயன்படுத்திக்கொண்டுவிட்டு இதோ கீழிருக்கும் இந்த அடித்தட்டு மக்களைப் பாருங்கள் மாக்கள் மாதிரி கடல்தாண்டி வந்தும் அதே நிலைதான்.

நாற்பதாண்டுகள் பகுத்தறிவு திரா'விட'கழகங்களின் ஆட்சியில் அடித்தட்டுத்தமிழன் இந்தியாவிலிருந்து கடல்தாண்டி பீ அள்ளுவதை இந்தியாவில் கொண்டுவந்து திணித்தவர்களது பக்கத்து தேசமான இங்கு வந்தும் சாக்கடை-பீஅள்ளும்-கக்கூஸ் கழுவுவது, மண்வெட்டுவது, எடுபிடிவேலை, கூலிவேலை என்று குவைத்தில் இருக்கும் தமிழர்களில் பெருவாரியானவர்கள் 70% இங்கு இந்த மாதிரி வேலைகளைத்தான் செய்கிறார்கள்! குவைத்தில் இந்திய சகோதரன் கையில் மலத்தினைத் தந்தது திரா'விடப்' பகுத்தறிவு இயக்கங்கள் + அவர்கள் 40 ஆண்டுகள் செய்த நல்லாட்சி!

ஈவெரா: வெங்காயத்தினை உரிப்பதைவிட வேதனையான நிலைதான். இதற்கு ஊரிலேயே கௌரவமாக இருக்கலாமே!

ஹரி: ஊரில் திராவிட இயக்கங்கள் இவர்களைக் கால்நடைகள் மாதிரி லாரியில் பேரணி, மாநாடு, மறியல், கிளர்ச்சி, ஆர்ப்பாட்டம், முப்பெரும் விழா, எழுச்சிக்கூட்டம்,சிறைநிரப்பும் போராட்டம் என்று ஆண்டுக்கும் பிரியாணிப்பொட்டலத்துக்கும் சில்லறை பேட்டாக்காசுக்கும் என்று சீரழிப்பதற்க்கு இவர்களில் பலர் இது பரவாயில்லை என்கிறார்கள்!

ஈவெரா: அப்படியா? எதற்கும் நேரடியாக சோதித்து அறிந்துவிடலாமே

ஹரி: ஆஹா! தாராளமாக! இதோ இங்கே ஏராளமான தமிழர்கள் தங்கியிருக்கும் பகுதி. நாம் உள்ளே செல்லலாம்.

இறங்கி உள்ளே செல்ல கூட்டம் கூடிவிடுகிறது... சட் என்று ஒரு அறைக்குள் உள்ளே நுழைகிறோம். அறையில் சுற்றிலும் நோட்டம் விடுகிறார். நான்கு திசையிலும் மூன்றடுக்கு பங்கர் படுக்கைகள் 15க்கு 15 ரூமில் 12 பேர் தங்கியிருக்கின்றார்கள். நடுவே மேஜைமீது ஏராளமான புத்தகங்கள்.

ஈவெரா: புத்தகங்களைக் கண்டதும் புன்முறுவல் பூக்கிறார். அந்த அறையிலிருக்கும் நபர்களிடம் கேட்கிறார். நிறையப் புத்தகங்கள் படிக்க வேண்டும் அப்போது தான் பகுத்தறிவு வளரும்.

நபர் 1 : ஆமாம் ஐயா இங்கு இதைவிட்டால் வேறு பொழுதுபோக்கு இல்லை. இங்கு இருக்கும் வெவ்வேறு அறைநண்பர்கள் புத்தகங்களைப்படித்தபின்பு பரிமாற்றம் செய்து கொள்வோம்.

ஈவெரா: நல்லது. பரஸ்பரம் புத்தகங்கள் பரிமாற்றம் செய்து கொள்வதால் குறைவான செலவில் அதிகம் புத்தகம் படிக்கலாம். அறிவையும் பெருக்கிக் கொள்ளலாம்.

நபர் 2: சரியாகச் சொன்னீர்கள் ஐயா! அதைத்தான் நாங்கள் செய்துவருகிறோம்.

மேஜையை நெருங்கி புத்தகங்களைப் பார்வையிட எத்தனிக்கிறார். பிளாஸ்டிக் கவரில் புதிய புத்தகங்கள் இருக்கின்றன. கடல்கடந்து வந்தும் விருந்து, சரோஜாதேவி, நெற்றிக்கண், நக்கீரன் போன்ற புத்தகங்களே படிப்பதை அறிந்து துணுக்குற்றூ வேதனைப்படுகிறார்!

ஹரி: மை பிரண்ட் மாணவர்கள் ஆபாசப் புத்தகங்கள் படிக்கக்கூடாது என்று நீங்கள் கூட சொல்லியிருக்கிறீர்கள் இல்லியா?

ஈவெரா: ஆம் நான் விடுதலையில் 17.5.62அன்று சொன்னது பெரிய குரலில் முழங்குகிறார்:

"மாணவர்கள்-மாணவியர் ஆபாசப் படங்கள், கருத்துகள் கொண்ட புத்தகங்களை வாங்கிப் படித்து வாழ்க்கையில் கெட்டுப் போகிறார்கள். அறிவுப் பெருக்கம் நிறைந்த-நல்ல கருத்துகளைக் கொண்ட புத்தகங்களை வாங்கிப் படித்துச் சிந்தித்து அறிவு ஆராய்ச்சி பெற வேண்டும்."

ஹரி: வாழ்க்கையில் நாம் எல்லோருமே எப்போதுமே மாணவர்கள்தானே! வயது வித்தியாசம் இல்லாமல் ஏதாவது ஒன்றை எல்லாநேரங்களிலும் கற்றுக்கொண்டு தானே இருக்கிறோம். குறிப்பாக ஆண், பெண் குறிகளை, கூடுதலை பிரத்யேகமாகப் படம் போட்டு கேவலமான ஆபாச வர்ணிப்பு எழுத்தைப் படிப்பவர்கள் தன் சிந்திக்கும் திறனை எத்தகைய மீள முடியாத குழிக்குள் போட்டு புதைத்துவிடும் என்பதை உணராத தற்குறிகள் தானே!

ஈவெரா: ஒரு வேளை வயசுக் கோளாறாக இருக்கலாம் அல்லவா?

ஹரி: இவர்கள் 25-30 வயதினர் "சொல்லி ஒன்றும் தெரிவதில்லை மன்மதக் கலையே" என்பது உண்மை என்றாலும் ஆர்வக்கோளாறு என்று கொண்டாலும் இம்மாதிரியான புத்தகங்களில் வரும் வருணனைகளின் தாக்கம், உறவுமுறைகளைச் சிதைத்து காமம் மட்டுமே பிரதானமாக என்று இந்த அறிய கருத்தைப் படித்த எவரும் இன்னும் அடுத்த தலைமுறையைச் சிதைக்கவே செய்வார்கள்.

சரி அடுத்த விடுதியினரைப் பார்க்கலாம். இதோ இவர்கள் திருமணமானாலும் குடும்பத்தைப் பிரிந்து வாழும் தொழிலாளர்கள் வசிக்கும் அறையில் திடீர் என்று உள் நுழைகிறோம். அறையினைச் சுற்றி நோட்டம் விடுகிறார். சாயம் போன நக்மா போஸ்டர், நவயுக நமீதா, சிநேகா, பிசின் போட்டு ஒட்டப்பட்ட அஸின்கள், லூசுப்பெண் நயந்தாரா ... ஒரு நபர் அவரது பெட்டியைத் திறந்து ஏதோ பொருளை எடுக்கும்போது பெட்டிக்குள் நஞ்சுபோனாலும் அவர் நெஞ்சில் இன்னும் இருக்கும் ஜெயமாலினி, ஜோதிலட்சுமிக்களின் இளவயது போஸ்டர் எனக் கண்டு ஈவெரா திகைக்கிறார், அதிர்கிறார், துணுக்குறுகிறார்.

ஈவெரா: இதென்ன வெங்காயம் அறைபூரவும், சினிமாக்காரப் பொம்பளைங்க போட்டோவா ஒட்டிவச்சிருக்கீங்க! இதுவா சோறு போடுது உங்களுக்கு?

நபர் 1: எங்களை எளிய ஏழைகள் என்பதால் சுளுவாகச் சாடிவிடுகின்றீர்கள். உங்கள் பிரதம சிஷ்யன், பாசறையில் பயின்று பகுத்தறிவுப் பதக்கம் பெற்ற கருணாநிதி சமீபமாக ஆட்சிக்கு வந்தவுடனே தள்ளாத எண்பது சொச்ச அகவையிலும் முன் வரிசையில் அமர்ந்து கட்டழகி நமீதாவின் ஆட்டத்தை, இன்ன பிற அழகுக் கிளிகள் குனிந்து குத்தாட்டம் போட்டதை பகுத்தறிவுக் கலரான கறுப்புக் கண்ணாடி போட்டவாறே ரசித்ததை எவராயினும் தட்டிக்கேட்டனரா? வந்து விட்டீர்கள் தனிமையில் வாடும் எங்களை கேள்விகள் கேட்க ஓடோடி!

ஈவெரா: என்ன வெங்காயமான செய்கைகள் இவை? எங்கே செல்கிறது தமிழர் சமுதாயம்? ஏன் இப்படி சினிமா சினிமா சினிமா என்று பித்துப் பிடித்து அலைகிறார்கள்?

ஹரி: முன்னுதாரணமான தலைமை எதைக்காட்டுகிறதோ அதை அப்படியே பின்பற்றும் ஆட்டுமந்தைத்தனம் மாற பகுத்தறிவு செயல்பட அடிப்படையில் இவர்களுக்குக் கல்வியோடு கலாச்சாரம் பண்பாடு இவைகளை தெய்வ நம்பிக்கையோடு வேத நெறிப்படி வாழ்ந்து காட்டும் மக்கள் அக்கறையில் அக்கறையுள்ள தலைமை வேண்டும்.

நபர் 2: எங்களுக்கு இங்கு சன் டிவி ஜெயா டிவி வரமாட்டேங்குது. சினிமா விஷயங்கள் தெரியமாட்டேங்குது. செல்வி என்ன ஆச்சோ? காளி, மாரி, மகமாயின்னு பக்தித் தொடர்கள் என்ன ஆச்சுன்னு தெரியமாட்டேங்குது. நாங்க ரொம்பவும் பின் தங்கிப்போயிட்டோம்!

ஈவெரா: வெங்காயம்... வெங்காயம் இப்படி சினிமா ஆசா பாசங்களினால் வெறும் ஆபாசங்களிலேயே மூழ்கிக்கிடந்தால் எப்படி? பகுத்தறிவைப் பயன்படுத்தி லேட்டஸ்டா இருக்கிற மாதிரி முன்னேற வேண்டாமா?

நபர் 3: நாங்களும் லேட்டஸ்டாத்தான் இருக்கிறோம் அதெல்லாம் கவலைப்படாதீங்க. ஏதோ சிங்கப்பூர் மலேஷியாத் தமிழர்களால நாளைக்கு ரிலீசாகப்போற படத்தையெல்லாம் நேத்தே பார்த்துடறோமில்ல! தமிழனா கொக்கா?

ஹரி: மை பிரண்ட் குடிப்பழக்கத்தினை நீங்கள் பகுத்தறிவோடு எதிர்த்ததாகத் தகவல் சரிதானே நான் சொல்வது?

ஈவெரா: ஆமாம். அந்த பாழாய்ப்போன பழக்கத்தினால் எப்போதுமே அல்லல்தான். அதனாலேயே ஆயிரம் தென்னைமரங்களை வெட்டிச்சாய்த்து கள் இறக்கும்/குடிக்கும் பழக்கத்தினை தீவிரமாக எதிர்த்தோம் பகுத்தறிவாக!

நபர் 3: முருகேசா .... மேலே ஏறி பிளாஸ்டிக் பக்கெட்டுகளை நல்லா கிளறிவிடு என்று கூவுகிறார்! முருகேசன் என்கிற நபர் மேலே ஏறி பரணில் இருந்த சில மூடப்பட்டிருந்த பிளாஸ்டிக் பக்கெட்டுகளை திறந்து கிளறிவிடுகிறார். பெரும் நாற்றம் கிளம்பி வருகிறது.

ஈவெரா: என்ன இது அழுகல் வெங்காயமா" இவ்வளவு நாற்றம் தீடீரென வருகிறது?

நபர் 3: வேறொண்ணும் இல்லை வாரக்கடைசிகளில் அப்புறம் வீட்டில் இருந்து லெட்டர் வந்தா மனசு சோகமாகிடுமில்லியா சோக நிவாரணத்துக்கு சுயமாகத் தயாரிக்கவேண்டியிருக்கு. ஊர்ல இருக்கிறவெனெல்லாம் குடுத்து வச்சவன். அரசாங்கமே நல்ல சரக்கா டாஸ்மாக்கில விக்கிறாங்க! இங்க பாட்டிலு 40 KD ஆவுது. நம்ம மாச சம்பளமே அவ்வளவுதானே! கட்டுபடியாகுமா? ரொம்ப பிஸியா தயாரிக்க முடியலைன்னா ஹோம் டெலிவரிக்கு ஆள் இருக்கு. என்ன பண்றதுங்க "தன் கையே தனக்கு உதவின்னு" இருந்துக்க வேண்டியதா இருக்கு!

ஈவெரா: குவைத் இசுலாமிய நாடுதானெ இதெல்லாம் இங்கு தடைசெய்யப்பட்டதல்லவா?

ஹரி: இங்கு எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டு. சட்டம் தடுக்கும் பொருட்களுக்கு மவுசு கூடுதலாக இருக்கும்! அதுசரி இந்த ஊர்க்காரனை விடுங்கள். பகுத்தறிவோடு நீங்கள் வழிகாட்டிய குடிப்பழக்க ஒழிப்பு மற்றும் அய்யன் திருவள்ளுவர் அருளிய கள்ளுண்ணாமை இதெல்லாம் உங்க சிஷ்யகோடிகள் "தண்ணி"ய ஆறா ஓடவிட்டு கோடிகோடியா அள்ளி இந்த கடைத்தட்டுத் தமிழனெல்லாம் குடித்தழியும் கேடியாக ஆக்கியிருக்கின்றார்கள். கடல் கடந்தும் காய்ச்சும் பழக்கம் விடுகிறதா பாருங்கள்! எதுக்குப் போய் தன்கையே தனக்கு உதவி உதாரணம் பாருங்கள்!

ஈவெரா: கோபமுற்றவராய்... அதென்னா வீட்டிலிருந்து கடிதம் வந்தால் சோகம்? மகிழ்ச்சி தானே வர வேண்டும்!

நபர் 4: அடப் போங்க... ஊரில் இருந்த வரநான் சூரியக் கட்சி, எந்தம்பி இலைக்கட்சின்னு கவனமா லாரியில ஏறிக் கூப்பிட்ட இடத்துக்குப் போவோமுங்க... சூரியக்கட்சிக்காக சிறைநிரப்பியிருக்கேனுங்க பலதரம்... வெளியில இருந்ததை விட கட்சிக்குன்னு திரிஞ்சு திரிஞ்சு போனது போதும்னு ஏஜெண்டுகிட்ட காசு கட்டி இங்க வந்து இருக்கேன்... இப்ப எம்மவனும் இதே மாதிரி லாரிக்கு ஆள்பிடிக்கிறது அடிதடின்னு திரியிறானாம்...

நபர் 5: ஏற்கனவே எவனையும் மதிக்க, மரியாதையா பார்க்கன்னு எங்க கொளுகைக்கார கட்சித் தலைவருங்க நடந்துக்கிட்டு நாங்க பாத்ததுமில்லை எங்களுக்கு பாசறைப் பயிற்சியிலயும் சொல்லியே தந்ததில்லை... இதுல பொழுதுபோக்கச் சினிமா பாப்போம்னா தமிழ் சினிமாவுல மணிவண்ணன் விவேக்னு உங்கப்பன் வெளிநாடுபோய் 2வருஷமாச்சு உன் தம்பிக்கு 1வயசுன்னா எப்படின்னு "காமநெடி" ஆராய்ச்சிக் காமடி பார்த்ததிலேர்ந்து ஒரே வெறுப்பா இருக்குங்க... இப்பதான் ஊருக்குப் போய்வந்து ஒரே மாசத்துல பொண்டாட்டி மாசமா இருக்கான்னு போன்ல/ லெட்டர் வந்தா திக்குங்குதுங்க எங்க சிரமம் உங்களுக்கு எங்க தெரியும்!

ஈவெரா: உங்கள் புத்தியைப் பயன்படுத்தவேண்டாமா? பார்ப்பன சதி ஏதும் இதில் இருக்கலாமில்லியா?

நபர் 6: பெரியவரே... உங்க கூட வந்திருக்கிற இந்த சார் கூட அய்யருதான்... ஓவர்டைம் கூடத்தருவாரு... எங்ககூட ஒண்ணா உட்கார்ந்து அவர் சாப்பாட்டை எங்களுக்குக் கொடுத்து எங்களோட மொத நாள் பழைய சாப்பாடானாலும் மொகமெல்லாம் சிரிப்போட சாப்புடுவாரு... இந்த சாரு சொல்லி நம்ம அழகரு அவரு பொண்ணை எம்சி.ஏ கம்ப்யூட்டரு படிப்பு படிக்கவைக்கிறாருங்க... ஊர்ல இருந்தா வெறும் பிரியாணிப்பொட்டலம் பேட்டாக்காசுக்கு மட்டும் தான் லாயக்குன்னு தான கச்சிக்காரனுங்க மதிக்கிறானுங்க! நடத்துறானுங்க!

நபர் 1: ராசேந்திரா நில்லு நானும் வர்றேன் நீயாப் போயிராத.... ஓடோடி சட்டையைப் போட்டபடியே ராசேந்திரனுடன் வெளியே செல்கிறார்...

நபர் 2: வீட்டுல போட்டுக்குடுதாலும் கேக்குறானா பாரு... மானம் கெட்டவன்... ரெண்டுமூணு வருசத்தில கல்யாணத்துக்கு இவன் பொண்ணு ஊர்ல ரெடியாகிடும்... கெட்டொழியிறான் அப்பன் இங்கே...

ஈவெரா: என்ன வெங்காயம் நடக்குது இங்கே...

நபர் 3: அந்த ராசேந்திரன் டிரைவரா வேலை பாக்குற இடத்துல சிலோன்கார சிங்களப் பொம்பளையாளு ரெண்டு வேலை செய்யுது... அதுங்களோடல்லிசா சரச சல்லாபத்துக்குத்தான் இப்படி கார்த்திகை மாச நாய் கணக்கா ஓடுறானுங்க... வீட்டுக்கார குவைத்திக்கு என்னிக்காவது இந்தக் கசமுசா தெரிஞ்சு இந்த ஊர்ல கெடந்து ஜெயில்ல குப்புஸைத் தின்னுட்டே கம்பி எண்ண வேண்டியதுதான்... என்ன சொன்னாலும் கேக்க மாட்டேங்குறான்... இந்த நாயி இதுல தீவிரமான கருணாநிதி கட்சிக்காரன் வேற! சிறிலங்காவுல நம்மாட்களை கொன்னுபோடுறானுங்கன்னு பேப்பர்ல படிச்சு மட்டும் என்ன பிரயோசனம்? சிங்களக்காரிங்க புட்டத்துக்கு பின்னாடி ஓட்டமா ஓடுறானுங்க... தமிழன் மானம் பாலைவனத்துலயும் இந்த வெக்கங்கெட்ட தமிழனாலேயே போகிறதே!

ஈவெரா: யப்பா ஹரிஹரா... எனக்கு தலை கிர்ர்ர்ன்னு வருது.... கொஞ்சம் கைத்தாங்கலா பிடிச்சுக்கப்பா.... இனி பார்ப்பன சதின்னு மொட்டையாச் சொல்றதுக்கு முன்னாடி பகுத்தறிவை யோசிக்கிறேன்... என்னை என்னோட பாசறைக்கு கொண்டுபோய் கொஞ்சம் விட்டுடமுடியுமா?

(பின்ணணியில் மக்கள் பேச்சு சத்தம் அது..இது...எல்லாஞ்சரி...இருந்தாலும் சன் டீவி, கேடீவி , ஜெயாடிவி இதெல்லாம் இங்கேயும் வந்தா இன்னும் நல்லாயிருக்கும்.. சீரியல் பாக்காம பித்துப்பிடிக்குது...!)

ஈவெராவை அவரது துணையுடன் பாசறையில் விட்டுவிட்டு திரும்புகிறேன்.

(தேவைப்படும் போது சந்திக்க முழு அனுமதி எனக்கு தந்திருக்கிறது பெரிய வெங்காயம் ஈவெரா)"எனது பதிவுகள் 66 முதல் 76 வரை பகுத்தறிவுப் பகலவன் ஈவெராவுக்கு அர்ப்பணித்துச் சமர்ப்பிக்கிறேன்!"


தாய்மண்ணே வணக்கம்!

தமிழ்த்தாயே அருள்புரிவாய்!!

அன்புடன்,

ஹரிஹரன்

5 comments:

Hariharan # 26491540 said...

டெஸ்ட் மெசேஜ்!

Varadhan said...

ஹரி

எப்படிப் பாராட்டுவது என்றே புரியவில்லை. பிடியுங்கள் எனது முதல் பாராட்டுக்களை. அற்புதமானதொரு கட்டுரை. இதுக்கு மேலே நமது சீரழிந்து கிடக்கும் தீரா விடக் கலாச்சாரத்தை விளக்க முடியாது. நீர் வாழ்க. உம் துணிவு ஓங்குக. என்னோட முந்தய பின்னூட்டம் ஒன்றைத்தான் போட வில்லை இதையாவது போடுங்கள். காட்டம் ஏதும் இல்லாமல் எழுதியிருக்கிறேன்.

அன்புடன்

bala said...

ஹரிஹரன் அய்யா,

கரும் பாறை நம்ம முத்துகுமரன் அய்யா கவிதைக்கு உருகுமோ உருகாதோ தெரியாது;ஆனால் உங்அளுடைய 66-76 பதிவுகளுக்கு கண்டிப்பாக உருகும்.

பாலா

Hariharan # 26491540 said...

வரதன்,

இங்கே குவைத்தில் தினமும் பார்க்கும் காட்சிகளைப் பாசாங்கில்லாமல் எழுதியிருக்கிறேன். ஆக்கங்கெட்ட பழக்கத்திற்குள் அடிமையாகிவிட்ட இவர்கள் நெறியற்ற கொள்கைகளின் தாக்கங்களில் புதையுண்டு தங்களைத் தாங்களே சிதைத்துக் கொள்வதை தினம் கண்டு ஆட்சியாளர்கள் மீதும் அவர்கள் இவர்கள் மேல் பிரயோகித்த முற்றிலும் தவறான கொள்கைகளின் பலியாடுகள் இந்த சாதரணர்களே.

என்னளவில் தனிநபர்களுக்கு அடுத்த தலைமுறையினர் கல்வி பயில வேண்டிய கட்டாயத்தை அதற்கான பொருளை இவர்களாகவே தங்களைச் சுயமாக கெடுக்கும் குடி, புகைப்பைக் குறைத்து பயன்படுத்த அறிவுறுத்துகிறேன்!

பல குடும்பச் சிக்கல்கள் கேட்டாலே மனம் உடைந்துபோகும் நிகழ்வுகள் என்று இவர்கள் கிடந்து உழல்வதற்கு பிரதான காரணம் இவர்க்ள் நம்பிய பொய்யான கொள்கைகள் & தலைமைகள்!

அக்கறையுள்ள எவராலும் நாம் என நினைக்கும் எவராலும் உண்மையை தைரியமாக எழுதமுடியும். சாதாரணமாக உண்மையைப் பேசுவது கூட சாதனை என்று எண்ண வைக்கிற அளவுக்கு தினசாரி வாழ்வை பொய்மைக்குள் புதைத்துவிட்ட சமூக கொள்கைகளைக் கண்டனம் செய்யவேண்டியது அவசியமாகிறது!

Hariharan # 26491540 said...

பாலா,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!