(82) நம் தமிழச்சிகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை!
நம் தமிழ்நாட்டில் வாழ்கின்ற அனைவரும் அறிந்த ஒரு பொதுவான விஷயம்தான் இது. நானாக எவ்வளவோ முறை திங்க்"கிங்" ஆக திங்கிங் செய்தும் ம்ம்ஹூம் பிடி கிட்ட மாட்டேங்குது! ஆரவாரமா வெட்டிப் பெருமையாக மட்டும் என்று சும்மாக் கேட்டுக் கேட்டு புளிச்சுப்போச்சு எனக்கு! இன்னிக்குக் கம்ப்ளீட்டா சுத்தமா சின்னதாக்கூட தொடர்ச்சின்னு இல்லாம் ஒட்டுமொத்தமா எப்படி விட்டுப்போச்சு? இன்னிக்கும் இல்லாமப் போன இந்த விஷயத்தை எப்படி ரிஜுவனேட் பண்ணாம அப்படியே தேமேன்னு இருக்கிறோம்னு தோணும்!
இங்கே அரேபியர்களுடன் சேர்ந்து வெளியே உணவு உட்கொள்ளும் போது உப கடிக்கும் உணவான ஊறுகாயிலோ இல்லை வெனிகரில் ஊறிய முழுப் பச்சை மிளகாயை நான் ஒதுக்கினால் உடனே அரேபியர்கள் இந்தியனாய் இருந்து கொண்டு மிளகாயை சாப்பிடாமலே ஒதுக்குகிறாயா என்று இதுவரை "ஹரிஹரன் மிளகாய் ஒதுக்கு சகஸ்ரநாமமாய்" விடாது கருத்தினை ஆச்சர்யமில்லாத ஆச்சர்யமாக நிறையவே காட்டியிருக்கின்றனர். முழுமையான இந்தியன் எனில் அரேபியர்களுக்கு பச்சைமிளகாய் தின்று நிரூபிக்கவேண்டிய கட்டாயம் இருந்து என் மாதிரி பலரை பச்சைமிளகாய் லிட்மஸ் டெஸ்டுக்கு ஆட்படுத்திவருவதை அரிய தகவலாக அறியத்தருகின்றேன்!
உலக அளவில் பிற நாட்டவர்களுக்கு இந்திய உணவு காரமானது ...இந்தியனின் சிறப்பு பச்சை மிளாகாயை அப்படியே சாப்பிடுவது. இந்த இந்தியனின் சிறப்புக்கு ஆவக்காய், பெசரட்டு ஆந்திராப் பார்ட்டிகள் அதி இந்தியனாய் இருந்து இந்தியாவின் மிளகாய் சிறப்பைப் கடல் கடந்தும் பேணுகிறார்கள்!
அதுமாதிரியே இந்தப் பழந்தமிழ்ப் பெருமையை நான் எந்த ஊர் மிருகக்காட்சி சாலைக்குச் சென்றாலும், படங்களில் பார்த்தாலும் எனக்கு நமது இந்தத் தமிழச்சிகளைப் புரிந்து கொள்ள முடியாத பழைய வீராப்பான பாரம்பர்யமாக வெறுமனே கேட்டுச் சலித்த விஷயம் நினைவுக்கு வருவது தவிர்க்க இயலாதது!
மேட்டர் என்னன்னு சொல்லாம இவ்வளவு பில்ட் அப்பா? என டென்ஷனாக வேண்டாம்.
தோ வந்தாச்சு!
இன்றைக்கு தமிழகத்தில் "பறந்து படம் காட்டும் கரப்பான் பூச்சிகள்" காதல் தூதுவனாக சிலருக்கும், அண்ணன் அப்பன்களுக்கு எரிச்சலான பயக் கூக்குரலாகவும் நானறிந்து சமீபமாக 30 ஆண்டுகளாக நம் தமிழச்சிகளின் வீரமாக அறியப்படுகிறது!
நமது இளம் தமிழச்சிகள் தேய்ந்து கிழவிகளாகும் போது கொட்டுகின்ற கொளவி, பறக்கும் கரப்புகளை பிராயத்தில் அவர் தம் வீரத்தினை கப்பலேற்றி மானம் வாங்கியதால் ஸ்லிப்பரால் அடித்து வீர சூரம் காட்டி வீட்டில் மற்றவர்களுக்குப் பயந்தரும் படம் காட்டுகிறார்கள்!
கிராமத்துச் சூழலில் உருட்டுக்கட்டை, கதிர் அருவாள் என்று உபகரணங்கள் இருக்கின்ற சூழலில் பாம்பு, வயல் எலி என்று அடித்து விரட்டி சாதனையான வீரத்தை வெளிப்படுத்துகிறார்கள். வெறியோடு குலைத்து வரும் நாய் நம்முடைய கிராமத்து தமிழச்சிகளையும் குலைநடுங்க வைத்துவிடுகிறது!
ஆக இன்றைய நிதர்சனமாக நான் பார்த்தது என்பது நமது தமிழச்சிகளின் வீரம் உச்சபட்சமாக உபகரணங்களுடன் பாம்பு, பெருச்சாளிவரை அடித்து துவம்சம் செய்தவரையே இருக்கிறது!
அரிசியில் கல் பொறுக்கிப் புடைத்துச் சுத்தம் செய்யும் போது வந்து உறுமிய புலியை எப்படி முறத்தால் அடித்து விரட்டினாள் நம் தமிழ்நாட்டுப் பழந்தமிழ் மறத்தமிழச்சி என்பதே எனது இன்றளவுக்கும் நேரில் கண்டுவிடாத, யோசித்தும் பிடிபடாத வரலாற்றுச் சிறப்பு!
ஒரிஜினல் வன் புலியையே தனது கைவசம் இருந்த முறத்தால் அடித்து விரட்டிய பாரம்பர்யமுடைய நம் மறத்தமிழச்சிகள் இன்று நகரங்களில் என்றில்லாமல் கிராமங்களில்கூட ஈவ் டீசிங், பலாத்காரம், வன்புணர்வு என்று கடுமையாக வீரம் காட்டப்பட வேண்டிய சூழல்களில் அவலமாகப் பலியாவதேன்?
வரிப்புலிதனை தன் கையிலிருந்த முறத்தால் அடித்து விரட்டிய பாரம்பர்யத்துடனான நம் தமிழச்சிக்கு இன்றைய காலகட்டத்தில் தினசரியாகவே பெண்ணுரிமை என்று ஏன் தனியாகப் புகட்டப்பட வேண்டியிருக்கிறது?
இல்லை புலியை முறத்தால் அடித்து விரட்டிய வீரத்தமிழச்சிகள் வாழ்ந்த இடம் தமிழகம் என்பது வெறும் வரலாற்றுப் பின்ணணியில்லாத வெற்று இயக்கங்களின் வழக்கமான வெட்டியான மேடை ஆரவாரம் மட்டுமேயா?
There is no smoke without fire எனும் அடிப்படையில் நமது பழந்தமிழ்ப் பெண்டிரின் வீரம் பேசும் இந்த முறத்தால் புலியை விரட்டிய வீரச்சம்பவத்துக்குத் தொடர்பான உண்மையான வரலாற்றுப் பின்ணணி யாது?
இல்லை முறத்தால் அடித்து விரட்டியது சிங்கம்புலி என்ற பெயர் கொண்ட ஏதாவது சண்டித்தனம் செய்த அப்பாவி?! நபரையா?
உண்மை அறிந்தவர்கள் வரலாற்று ஆதாரத்துடன், இப்பழந்தமிழ் வீரச்செயலின் சூழலை விளக்கினால் தெளிவு கிடைக்கும்!
அன்புடன்,
ஹரிஹரன்
4 comments:
டெஸ்ட் மெசேஜ்!
பாலா,
எதனை ஆதாரமாக வைத்து தமிழ்ப்பெண்டிரின் வீரத்தின் உரைகல் நிகழ்வாக முறத்தினால் புலியையே விரட்டிய பெருமை உடைய பெண்டிர் என்பதை அறிய விழைந்ததாலேயே விவாதமேடைப் பிரிவில் இப்பதிவு.
நீங்கள் நையாண்டி/கிண்டலை விட்டு வெளிவந்து யோசித்து உரிய கருத்தைக் கூறவும்.
பாலா,
நீங்கள் சொன்ன கருத்து விளக்கம் பதிவை ஹைஜாக் செய்து விடும். எனவே வெளியிடாமல் வீண்சர்ச்சையைத் தவிர்க்கிறேன்!
தனி மடலிடவும். தங்கள் தனிமடல் தங்கள் பதிவில் இல்லை!
Post a Comment