Wednesday, December 27, 2006

(94) இந்து மதம் சார்வாக வாழ்வியலைத் தின்று செரித்ததா?

ஹஸ்தபதம்-> Husband சமஸ்கிருத ஹஸ்தபதம் எனும் சொல்லிலிருந்து ஆங்கிலம் உள்வாங்கியது
கட்டுமரம்->Cuttamaran தமிழ் கட்டுமரம் என்பதிலிருந்து ஆங்கிலம் உள்வாங்கியது
பதார்த்த கறி->Curry தமிழ் கூட்டுகறி என்பதிலிருந்து ஆங்கிலம் உள்வாங்கியது

ஆங்கிலம் செறிவோடு இருக்க அது எல்லா உலக மொழியிலிருந்தும் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டது. இந்த அடாப்டபிளிட்டி என்பதனால் ஆங்கிலம் தமிழை உள்வாங்கி அழித்தது என்று சொல்ல முடியுமா? அப்படிப் பேசினால் சுயமரியாதை, பகுத்தறிவுப் பேச்சாக ஆகுமா?

குகைக் கோவில்கள் என்று பாறையில் இறைவன் உருவங்கள் செதுக்கப்பட்டு வழிபட்ட பழக்கம் பின்னால் ஆகம விதிகளுடன் கர்ப்பக்கிரஹம்,பிரஹாரம், கோபுரம், தெப்பக்குளத்துடன் கூடிய ஆலய வளாகங்கள் என்பதாக காலஓட்டத்தில் அடுத்தநிலைக்கு ஏற்றத்துடன் பரிணாம வளர்ச்சி அடைந்தன. இதனை குகைக் கோவில் கலாச்சாரத்தினை ஆலய வளாகங்கள் உள்வாங்கிச் செரித்தன என்று பேசினால் அது சுயமரியாதை, பகுத்தறிவுப் பேச்சாகுமா?

பண்டைய குடவரைக் கோவில்கள் பண்பாட்டினை, கலாச்சாரத்தினை ஆஹம ஆலயவளாகங்கள் அழித்தன என்றாகுமா?

அடுத்த முன்னேறிய நிலைக்குச் செல்கிற பயணம் என்பது முந்தைய நிலையினை அழித்தது என்பதாகப் பொருள் கொண்டு குழப்புவதுதான் பகுத்தறிவா?

இந்து வேத நெறி வாழ்வியலில் தத்துவங்கள் பல பரிணாம வளர்ச்சிக்கு உள்ளாகியிருக்கின்றன.

சார்வாக வாழ்க்கை முறை என்று ஒன்று இருந்தது! திராவிட இயக்கங்கள் பஞ்சமர்களை அழித்து உள்வாங்கியது வேத நெறி வாழ்க்கை முறை என்று கூப்பாடு போடுவது இன்னும் நகைச்சுவை.

நீலகிரியில் இன்றும் தோடர்கள் அவர்களது பிரத்யேக வீடுகள், வழிபாடு, பண்பாடு, கலாச்ச்சரத்துடன் இருகின்றார்கள். படித்து வெளியுலகோடு தொடர்புகொள்ளும் தோடர்கள் இதர சமூகத்தினர் மாதிரியே வாழ எத்தனிப்பது என்பது தோடர்களது பண்பாட்டை, கலாச்சாரத்தினை இந்துமதம் தின்று செரித்ததாக எண்ணமுடியுமா?

சார்வாக வாழ்க்கை முறை என்பது என்ன? சார்வாக மகரிஷியின் தத்துவங்கள் சார்வாக வாழ்க்கைமுறை. சார்வாக வாழ்க்கைமுறையில் ஒரு சின்ன சாம்பிள் பார்ப்போம்.

"Runam Krithva Ghritham piba"
ருணம் கிரித்வா கிரிதம் பிபா
"கடன் வாங்கியாவது நெய் குடி"

இது சார்வாக வாழ்வியலில் ஒரு சுலோகம். உடலை மட்டுமே பிரதானமாகக் கொண்டாடும் வாழ்வியல் தத்துவம் சார்வாக தத்துவம். கடனை வாங்கியாவது நெய் பருகி உடலைப் பேணச்சொல்லும் வாழ்க்கைத் தத்துவம் என்பது மாதிரி மனிதன் பிறந்ததே புலன் இன்பங்களை அனுபவிப்பதற்கே என்கிற ஆரம்பநிலை வாழ்வியல் தத்துவம்.

இப்படி உடலை மட்டுமே பிரதானம் என்கிற புள்ளியினும் சிறிய சிந்தனையாகிய சார்வாக தத்துவம் எப்படி எதனால் என்பது மாதிரியான கேள்விகளை கேட்கச் சொல்வதில்லை. சார்வாகத்தில் எல்லாமே ஏன் கேள்விகள்தான். ஏன் என்பது இருப்பதிலேயே எளிதாக எந்தப் புரிதலும் இல்லாத அளவிலேயே எவராலும் ஏராளமாக எழுப்ப முடிகிற எளிதான கேள்வி!

ஆக உடலை மட்டும் பேணும், ஏன் என்று மட்டும் கேள்வி கேட்பது இருப்பதிலேயே எளிதான ஆரம்ப நிலை வாழ்வியல் முறை. இதில் சிந்தனைக்கு இடம் எங்கே இருக்கிறது? "ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை" என்பது மாதிரி சார்வாக வாழ்வியல் இருந்தது.

மனிதனுக்கு வேதநெறி வாழ்வியல் என்கிற சர்க்கரை கிடைத்தால் இனிப்புச் சுவைக்கு இலுப்பைப் பூவுக்கு ஏன் செல்லப்போகிறான். எனவே சார்வாக வாழ்வியல் முறை காலஓட்டத்தில் மனித நாகரீகத்தின் பரிணாம வளர்ச்சி என்கிற மியூஸியப் பொருளாக ஆனது. புள்ளி அளவில் சிந்தனை, உடலே அல்டிமேட் என்கிற வாழ்வியல் முறையின் அருகே பெரிய ஹைவேஸ் மாதிரி வேதநெறி வாழ்வியல் பல்விதமான எதனால், எப்படி என்கிற subjective inquiry களுக்கு அறிவியல் விளக்கங்கள் தந்தபடி நான்கு வேதங்கள்,கல்வி, கலைகள்,மருத்துவம், போர்கருவிகள், ஆன்மீக உயர்தத்துவ உபநிடங்கள், வழிபாட்டுமுறைகள், என்று பரிணாம வளர்ச்சி அடைந்தது கடந்த 10,000 ஆண்டுகளில்.

எது நேர்மையானதோ எது மனிதனின் பரிணாம வளர்ச்சியோடு சிந்தனைகளுக்கு வழிகாட்டுகிறதோ அதுவே மனிதனின் வாழ்வியல் முறையாக தினசரி வாழ்வில் நீடிக்கும். வலிந்து திணிப்பதால் தத்துவங்கள், வாழ்வியல் நெறி என எதுவும் காலத்தினை வென்று நெடுங்காலம் நீடித்து நின்றிடாது.

Anything and everything is subjected to evolution. Time changes anything and everything. The one that fails to cope up to face the challenges and upgrade / evolve to the legitimate requirements will diminish because of the builtin deficiency.

சார்வாக வாழ்வியல் தத்துவத்தினை இந்து வேதநெறி தின்று உள்வாங்கியதாகச் சொல்வதெல்லாம் பரிணாம வளர்ச்சியினை முன்னேற்றத்தினை இல்லை என்று மறுப்பதற்கொப்பானது.

பகுத்தறிவு என்று கூடுதலாக ஏழாவது சென்ஸ் என்பதெல்லாம் தேவையில்லை! சாதாரணப் பொதுஅறிவு இருந்தாலே போதும் மாற்றம் என்பது முன்னேற்றத்திற்கான பரிணாம வளர்ச்சிக்கான கட்டாயத்தேவை என்பதை உணர்வதற்கு!

அன்புடன்,

ஹரிஹரன்

29 comments:

Anonymous said...

My question is also like the oldest Sarvaganaa. ...

Did you hope in this your article had justify Sarvaganaa is the primary part of your so-called religions ...


If a society have such good questions for their growth is better than Unquestionable Slaves (like Suthraas, Dalits and Females in your so-called religion).


Sarvaganaas had leave as Materialist. If you against them or thougt about would be old and waste do you live with feelings or knowledge without air/water/food.

-aasath

Hariharan # 03985177737685368452 said...

//My question is also like the oldest Sarvaganaa. ...

Did you hope in this your article had justify Sarvaganaa is the primary part of your so-called religions ...


If a society have such good questions for their growth is better than Unquestionable Slaves (like Suthraas, Dalits and Females in your so-called religion).


Sarvaganaas had leave as Materialist. If you against them or thougt about would be old and waste do you live with feelings or knowledge without air/water/food.//

பகத்,

என்ன சொல்ல விழைகின்றீர்கள் என முழுமையாக விளங்கிக்கொள்ள இயலவில்லை. தங்களது கேள்வி/கருத்தை விளக்கவும்.

Anonymous said...

it is not your fault.. it is from your s religions' fault


Sarvaganaas searched the realism from the materials without any so-called philosophies like Vedha ...

So they had the first materialist whom against Aryaas.

If you see that pls read your "Mahabharatham" at re-ender of Indhrabrastham of Dharma.


-aasath

Anonymous said...

ஹரிஹரன்,

வழக்கம் போல் இந்தப் பதிவிலும் ஒவ்வொரு வரியும் அடுத்த வரியுடன் முரண்பட்டு நிற்கிறது..


//உடலை மட்டுமே பிரதானமாகக் கொண்டாடும் வாழ்வியல் தத்துவம் சார்வாக தத்துவம்.//

// ஏன் என்பது இருப்பதிலேயே எளிதாக எந்தப் புரிதலும் இல்லாத அளவிலேயே எவராலும் ஏராளமாக எழுப்ப முடிகிற எளிதான கேள்வி!//

//உடலே அல்டிமேட் என்கிற வாழ்வியல் முறையின் அருகே பெரிய ஹைவேஸ் மாதிரி வேதநெறி வாழ்வியல் பல்விதமான எதனால், எப்படி என்கிற subjective inquiry களுக்கு அறிவியல் விளக்கங்கள் தந்தபடி நான்கு வேதங்கள்,//


சாரவாகம் பற்றிய சில அடிப்படை உண்மைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்..

சாரவாகம் கி.மு 700 ம் நூற்றாண்டு வாக்கில் இருந்து கி.பி 1400ம் நூற்றாண்டு வரையில் இந்திய தத்துவ ஞான மரபில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வந்த தத்துவ மரபு. உடலுக்கு வெளியேயும் உள்ளேயும் - பரமாத்மா - ஜீவாத்மா- என்கிற எந்த புண்ணாக்கும் கிடையாது என்று ஆணித்தரமாக மறுத்து நின்ற இயக்கம் சார்வாக தத்துவ இயக்கம்.

மிக முக்கியமாக சார்வாகம் சாதி பிரிவை முற்றிலுமாக மறுத்ததோடல்லாமல் பார்ப்பனீயர்களையும் அவர்கள் தாங்கிப் பிடித்து வந்த வேதங்களையும் மிகக் கடுமையாக சாடி வந்தவர்கள்..

( இது ஒன்றே போதும் அவர்கள் எப்படி அழிக்கப் பட்டிருப்பார்கள் என்று நாம் யூகித்துக் கொள்ளலாம்)

இப்போதும் பார்ப்பனர்கள் எவரையாவது திட்ட 'பிரகஸ்பதி' என்ற பதத்தை உபயோகிக்க காரணம் உள்ளது.. 'பிரகஸ்பதி' என்பவர் தான் இந்த தத்துவத்தை நிறுவியவர்.

மரணத்துக்குப் பின் வாழ்வு இல்லை என்ற கருத்தை மக்களிடம் பரப்பி, சாமி/ பூச்சாண்டி அச்சத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர் - இது யார் பிழைப்பில் மண் போடும் செயல் என்று படிக்கும் வாசகர் முடிவுக்கே விட்டு விடுகிறேன் ;)

நீங்கள் சொல்வது போல் தத்துவஞான மரபில் நிகழ்ந்த 'பரினாம' வளர்ச்சியினால் சார்வாகம் ஒழியவில்லை. அற்புதமான விஞ்ஞான பார்வையை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் ஏற்பட்ட இந்த இயக்கம், ஆதிக்க சக்திகளுடன் பார்ப்பனீய மதமும் அதன் வேதக் கருத்துக்களும் கைகோர்த்ததன் காரணமாகவே ஒழிக்கப் பட்டது..

இப்போதுள்ள சாதிமுறை முன்னேற்றமா? இதற்குக் காரணமான ஸ்மிருதிகள் முன்னேற்றமா? இல்லை இதெல்லாம் வேண்டாம் என்று சொன்ன சார்வாகம் முன்னேறிய கருத்தா?

உங்களிடம் நேர்மையான பதில் எதிர்பார்க்க முடியாது.. நான் இந்தக் கேள்விகளை படிக்கும் வாசகன் கருத்துக்கே விட்டு விடுகிறேன்

நன்றி

ராஜாவனஜ்

Madhu Ramanujam said...

பகத்..

ஹரி கேட்ட அதே கேள்விதான் இங்கேயும். உங்கள் கேள்வி இன்னும் சற்று தெளிவாயிருப்பின் நல்லது.

புரிந்த வரையில் பதில்லளிப்பதாயின்...இதோ என் பதில்.

//If a society have such good questions for their growth is better than Unquestionable Slaves (like Suthraas, Dalits and Females in your so-called religion//

எவர் எப்பொழுது எதில் சொன்னர்கள் தலித்கள் கேள்வி கேட்கக்கூடாது என்று?

//Did you hope in this your article had justify Sarvaganaa is the primary part of your so-called religions//

எனக்குப் புரிந்த வரையில் இதுதான் மூலம் என்று அவர் கூறவில்லை. இப்படி ஒன்று இருந்தது, அது அதிலிருந்து இன்னொன்றாக ஏன் மாறியது என்று மட்டுமே கூறியுள்ளார் அவர்.

சரி தானே ஹரி?

Anonymous said...

முந்தய பின்னூட்டத்தில் சொல்லாமல் விட்ட சில வரிகள்,

நீங்கள் சொன்ன சாரவாகப் பாடலின் மற்ற வரிகள் -

யகஜ்ஜீவித் சுகம் ஜீவித்
ரினம் க்ருத்வா க்ருதம் பிபத்
பாஷ்மிபூதஸ்ய தேஷாயா
புணரகமரணம் குதா

( பிழை இருக்கலாம் மறந்து விட்டது)

பொருள் -

"வாழும் வரையில் சந்தோஷமாய் வாழு,
கடன்பட்டாவது நெய்யைக் குடி
சாம்பலில் இருந்து எழவா போகிறாய்"

எத்தனை பொருள் பொதிந்த வார்த்தைகள்..

கார்ல் மார்க்ஸ் சொன்னபடி எங்கெல்லாம் கருத்துமுதல்வாதம் இருக்கிறதோ அங்கெல்லாம் பொருள்முதல்வாதப் பார்வை கொண்ட எதிர்வினையும் தோற்றியே வந்துள்ளது..

இந்திய தத்துவ ஞான மரபில் வந்த சார்வாகம் என்னும் லோகாயதம் பொருள்முதல்வாதப் பார்வை கொண்ட ஒரு தத்துவம்.

யாகம் ஹோமம் பூசை சடங்கு ஆகமம் என்று முட்டாள் தனமான எந்த அறிவியல் அடிப்படையும் இல்லாத கருத்துக்களுக்கு அன்று
சார்வாகம், புத்தம், சமனம் என்று இடையில்லாத எதிர்ப்பைக் காட்டி வந்தனர்..

இந்த இழையின் தொடர்ச்சியாகத் தான் -நீங்கள் வெங்காயம், மாமா என்றெல்லாம் வெறுப்பை உமிழ்கிறீர்களே அந்த ஈரோட்டுக் கிழவன் கிளம்பி வந்தான்..

அவன் போய்விட்டலென்ன,
இன்று நாங்கள் இருக்கிறோம்.. எங்களால் இந்தப் போரில் வெல்ல முடியாவிட்டாலும் எங்களுக்குப் பின்னே இன்னும் இன்னும் பொருள்முதல்வாதிகள் வந்துகொண்டே இருப்பார்கள்...

அறிவியலின் ஒவ்வொரு முன்னேற்றமும் கருத்துமுதல்வாதத்தின் சாவு மணி.. எங்கள் பணி அந்த சாவுமணியின் ஓசையை பறையடித்து பட்டி தொட்டியெல்லாம் பரப்புவதே..

தொடரட்டும் உங்கள் புரட்டல்.. நாங்களும் பார்க்கிறோம் எத்தனை நாட்கள் இந்தப் படம் ஓடுகிறதென்று

Hariharan # 03985177737685368452 said...

ராஜாவனஜ்,

//வழக்கம் போல் இந்தப் பதிவிலும் ஒவ்வொரு வரியும் அடுத்த வரியுடன் முரண்பட்டு நிற்கிறது..//

இந்தப்பதிவில் அது மெய். ஏனெனில் ஒருவரி சார்வாகம் பற்றியது அடுத்தவரி வேதநெறி பற்றியது எனவே முரண்பட்டுத்தான் இருக்கும்!



//இந்திய தத்துவ ஞான மரபில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வந்த தத்துவ மரபு. உடலுக்கு வெளியேயும் உள்ளேயும் - பரமாத்மா - ஜீவாத்மா- என்கிற எந்த புண்ணாக்கும் கிடையாது என்று ஆணித்தரமாக மறுத்து நின்ற இயக்கம் சார்வாக தத்துவ இயக்கம்.//

கண்டிப்பாக புண்ணாக்குகளின் சிந்தனை தானே இது. கண்ணின் கண்ணாக இருந்து கண்ணில் பார்வை தெரிய ஆத்மா என்கிற இறைசக்தி இல்லை என்கிற தத்துவம் புண்ணாக்கு தத்துவம் தான் ஐயா!

கருவிகளாக உடலும் உடல் உறுப்பும் செயல்பட இறைசக்தி இல்லை எனில் உடலில் இருந்து "எது" பிரிந்து அதுவரையிலான உடல் பிணமாகிறது?

சார்வாக தத்துவம் இதற்கு விடைதராது!

//இப்போதும் பார்ப்பனர்கள் எவரையாவது திட்ட 'பிரகஸ்பதி' என்ற பதத்தை உபயோகிக்க காரணம் உள்ளது.. 'பிரகஸ்பதி' என்பவர் தான் இந்த தத்துவத்தை நிறுவியவர்.//

பிரஹஸ்பதி என்பது குருபகவானயும் குறிக்கின்ற சொல் ஐயா! பிரஹஸ்பதி என்பது வஞ்சப்புகழ்ச்சி புத்தியில்லாதவனை பிரஹஸ்பதி என்று மிக உயர்வாகச் சொல்வது!

தாங்கள் சார்வாகதத்துவத்தின் அடிப்படையாகச் சொன்னது எதுவுமே உண்மையில்லை ஐயா!

Sridhar Narayanan said...

சார்வாக மதம் பற்றிய பல புதிய தகவல்களுக்கு நன்றி!

மரத்தடியில் ஜெயமோகன் மிக அழகாகாவும் விளக்கமாகவும் சார்வாக மதத்தைப் பற்றி விளக்கம் அளித்திருக்கின்றார். பதிவுக்கு தொடர்பாக தோன்றியதால் இங்கு இடுகின்றேன்.

http://www.maraththadi.com/article.asp?id=1039&print=1

Hariharan # 03985177737685368452 said...

மதுசூதனன்,

எனக்கு பகத் என்பவர் கேட்ட கேள்வி/பின்னூட்டம் புரியவில்லை.
நீங்கள் சொல்லியிருக்கும் பதில்களை வைத்துக் கேள்விகளை கண்டுபிடிப்பதை விட பகத் கேள்வியை தெளிவு படுத்துவது நல்லது!

Anonymous said...

//Did you hope in this your article had justify Sarvaganaa is the primary part of your so-called religions//

நல்ல கேள்வி பகத்.. ஆதி சங்கரன் வரும் வரை இங்கே மதம் என்று நிறுவனமயமான எதுவுமே கிடையாது..

பழமையான வேதம் என்று இவர்கள் பீற்றிக் கொள்ளும் ரிக் வேதத்தில் வெறும் துதிப் பாடல்களும் ( இயற்கையை நோக்கியும் இவர்களாக இயற்கைக்கெல்லாம் தலைவன் என்று கருதிய இந்திரனை நோக்கியும் தான்)
எனக்கு ஆகாதவன் கண்ணை நோண்டு காதைப் பிடுங்கு என்கிற லெவலில் தான் அந்தப் பாடல்களும் உள்ளதாம் - சாரு நிவேதிதாவின் ஒரு கட்டுரை 'கோனல் பக்கங்களில் உள்ளது' அதைப் பார்க்க.

ஆதி சங்கரனின் 'சங்கர விஜயத்துக்கு' முன் 64 வகையாத தத்துவ மரபுகள் நடைமுறையில் இருந்துள்ளது.. ஆதி சங்கரன் தான் அவற்றில் சிலதை அழித்தும் சிலதை திரித்துக் கலந்தும் ஷன்மதங்கள் என்று அட்டவனைப் படுத்தியவன்..

இந்து என்கிற பெயர் வெளிநாட்டுக்காரன் இவர்களுக்கு போட்ட பிச்சை. செத்துப் போன கிழட்டு சங்கரனே இதை ஒப்புக் கொண்டுள்ளான்.

Hariharan # 03985177737685368452 said...

//அவன் போய்விட்டலென்ன,
இன்று நாங்கள் இருக்கிறோம்.. எங்களால் இந்தப் போரில் வெல்ல முடியாவிட்டாலும் எங்களுக்குப் பின்னே இன்னும் இன்னும் பொருள்முதல்வாதிகள் வந்துகொண்டே இருப்பார்கள்...

அறிவியலின் ஒவ்வொரு முன்னேற்றமும் கருத்துமுதல்வாதத்தின் சாவு மணி.. எங்கள் பணி அந்த சாவுமணியின் ஓசையை பறையடித்து பட்டி தொட்டியெல்லாம் பரப்புவதே..

தொடரட்டும் உங்கள் புரட்டல்.. நாங்களும் பார்க்கிறோம் எத்தனை நாட்கள் இந்தப் படம் ஓடுகிறதென்று//

எதில் நேர்மையான உண்மை அதிகம் இருக்கிறதோ அது நிலைக்கும். உங்கள் ஸ்கூல் ஆஃப் தாட்ஸ் உங்களுக்கு, எனது ஸ்கூல் ஆஃப் தாட்ஸ் எனக்கு!

போர்முழக்கம் பறை ஒலிப்பு எல்லாம் விவாதத்தில் வேண்டாமே!

Anonymous said...

//கண்டிப்பாக புண்ணாக்குகளின் சிந்தனை தானே இது. கண்ணின் கண்ணாக இருந்து கண்ணில் பார்வை தெரிய ஆத்மா என்கிற இறைசக்தி இல்லை என்கிற தத்துவம் புண்ணாக்கு தத்துவம் தான் ஐயா!//

ஹிஹி.. கண்ணில் பார்வை தெரிய 'ஆத்மா' தேவையில்லை நன்பா! லென்சும், ரெட்டினாவும் அதை மூளையோடு இனைக்க நரம்புகளும் தான் தேவை.

//சார்வாக தத்துவம் இதற்கு விடைதராது!//

ஏனென்றால் அப்போது விஞ்ஞானம் கிடையாது.. இன்றைக்கு கேட்டால் விடை தரும்..

//பிரஹஸ்பதி என்பது குருபகவானயும் குறிக்கின்ற சொல் ஐயா! பிரஹஸ்பதி என்பது வஞ்சப்புகழ்ச்சி புத்தியில்லாதவனை பிரஹஸ்பதி என்று மிக உயர்வாகச் சொல்வது!//

அது எனக்கும் தெரியும் நன்பா! பார்ப்பனீய குதர்க்கம் எப்படி வேலை செய்யும் என்று காட்டவே அதைச் சொன்னேன்.. மீண்டும் நான் ஏற்கனவே சொன்னதே சரி என்று உறுதி செய்கிறேன்.


//தாங்கள் சார்வாகதத்துவத்தின் அடிப்படையாகச் சொன்னது எதுவுமே உண்மையில்லை ஐயா! //

நீங்க சொன்னா சரியாதானுங்க இருக்கும்..

இந்த மேலாதிக்க மனப்போக்கின் காரணமாகத்தானே இத்தனை புரட்டல்கள்?

Hariharan # 03985177737685368452 said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

ஹரி,

//எதில் நேர்மையான உண்மை அதிகம் இருக்கிறதோ அது நிலைக்கும். உங்கள் ஸ்கூல் ஆஃப் தாட்ஸ் உங்களுக்கு, எனது ஸ்கூல் ஆஃப் தாட்ஸ் எனக்கு!

போர்முழக்கம் பறை ஒலிப்பு எல்லாம் விவாதத்தில் வேண்டாமே!//

சரி சரி விடுங்க... ஆமா ஒரு விளக்கம் ப்லீஸ் - அடிக்கடி வேத நெறி வேத நெறின்னு அடிச்சு விடறீங்களே.. அதென்னங்க வேத நெறி?

இந்த கட்டுரையில சாரு நிவேதிதா என்னவோ சொல்றாரு பாருங்க (http://www.charuonline.com/kp195.html) இதான் வேத நெறியா?

எங்களுக்கு இந்த நெறி வேண்டாம்ங்க.. விட்றுங்க நாங்க பாவம்..

Anonymous said...

ஹரி,

//
இந்துமத வேதங்களும் அறிவியலும்

உள்ளுறையும் ஆத்மா

இந்துமத தத்துவங்கள்

மரணம் இருக்கிறதா//

ஒவ்வொன்னுக்கும் ஒரு எதிர்வினைப் பதிவு போடறேன்.. அப்ப வாங்க வச்சுக்கலாம் நம்ம கச்சேரிய...
அதுக்கு முன்னால நான் ஏற்கனவே கேட்ட மாதிரி சாருவோட கட்டுரைய படிச்சு வேத நெறி என்னான்னு ஒரு விளக்கம் மட்டும் குடுங்க போதும்.

இராம. வயிரவன் said...

ஒன்று இன்னொன்றை உள்வாங்கிக்கொண்டு மாறுபாடடைகிறது, அதனால் அது பரிணாம வளர்ச்சியடைகிறது என்பதை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. பல நேரங்களில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகின்றன மாற்றங்கள். அப்படிப்பட்ட மாற்றத்திற்கு உள்ளான ஒன்று அழிவைத்தொடுகிறது.

Hariharan # 03985177737685368452 said...

//ஒன்று இன்னொன்றை உள்வாங்கிக்கொண்டு மாறுபாடடைகிறது, அதனால் அது பரிணாம வளர்ச்சியடைகிறது என்பதை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. பல நேரங்களில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகின்றன மாற்றங்கள். அப்படிப்பட்ட மாற்றத்திற்கு உள்ளான ஒன்று அழிவைத்தொடுகிறது.//

பரிணாமம் என்பதே அடுத்தநிலைக்குப் போவது தானே? முந்தைய நிலையை நினைத்து வருந்துவதா?

பல்லவர்கள் குகைக்கோயில் கலாச்சாரம் பண்பாடு பல்லவர்கள் காலத்திலேயே பரிணாம வளர்ச்சியில் வேத ஆஹம விதிகளுடன், ஸ்தபதி சாஸ்திரத்துடன் கோவில் வளாகங்களாக பலமடங்கு கலைநயத்துடன் மிளிர்ந்ததை எண்ணி மகிழ்வீர்களா இல்லை குகைக்கோவில் கலாச்சாரத்தினை அழித்ததது வேத நெறி ஸ்பதி சாஸ்திரம் என்று வருந்துவீர்களா திரு. இராம. வயிரவன்?

Hariharan # 03985177737685368452 said...

//ஹிஹி.. கண்ணில் பார்வை தெரிய 'ஆத்மா' தேவையில்லை நன்பா! லென்சும், ரெட்டினாவும் அதை மூளையோடு இனைக்க நரம்புகளும் தான் தேவை.//

ராஜா வனஜ்,

எனது முந்தைய இந்தப் (34,54,57,74,87) பதிவுகளில் கூடுதல் தகவல்கள் வேதம் எப்படி அறிவியல் என்பது குறித்து இருக்கிறது.

இந்துமத வேதங்களும் அறிவியலும்

உள்ளுறையும் ஆத்மா

உருவவழிபாடு

இந்துமத தத்துவங்கள்

மரணம் இருக்கிறதா

VSK said...

சுவையான இந்த விவாதத்தை ரசிக்கும் வேளையில், அடுத்தவரைக் குதறவெனவே சிலர் பண்பு தவறி இடும் பின்னூட்ட சொற்களைத் தவிர்த்தால், விவாதம் இன்னும் சூடு பிடிக்கும்!

இயலாதவர்கள்தாம், சரியான வாதம் இல்லையென நம்புபவர்தான் தரக்குறைவான சொல்லாடல் செய்வார்கள் எனப் படித்திருக்கிறேன்.

கண்ணியம் காக்கலாமே!

புத்தாண்டு வாழ்த்துகள்!

Madhu Ramanujam said...

/இயலாதவர்கள்தாம், சரியான வாதம் இல்லையென நம்புபவர்தான் தரக்குறைவான சொல்லாடல் செய்வார்கள் எனப் படித்திருக்கிறேன்.//

புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் சரிதான். வேதங்களும் எல்லாமே வெரும் வெங்காயம்தான் என்போர் கொஞ்சம் வலை தளங்களில் தேடிப்பார்த்தால் தேவலாம். அப்படியே இன்னொரு நூல் பற்றியும் சொல்கிறேன். "விமானிக ஷாஸ்திரா" எனும் ஓர் சமஸ்கிருத நூல் பற்றியும் சற்று தேடிப்பாருங்களேன்.

bala said...

//இந்து மதம் சார்வாக வாழ்வியலைத் தின்று செரித்ததா//

ஹரிஹரன் அய்யா,

இந்து மதம் சார்வாக வாழ்வியலை தின்றூ செரிக்க வில்லை என்பது உங்கள் கருத்து என்றால், அது சார்வாகத்தை கடித்து துப்பியதா என்று விளக்க கடமைப் பட்டுள்ளீர்கள். கிறித்துவம்,யூதம்,இஸ்லாம் சார்வாகத்தை என்ன செய்தது என்பதையும் விளக்க கடமைப்பட்டுள்ளீர்கள். இந்த கேள்வியை எங்அள் தலைவர் அசுரன் அய்யா கேக்கச் சொன்னாரய்யா.

பாலா

Krishna (#24094743) said...

//ஹிஹி.. கண்ணில் பார்வை தெரிய 'ஆத்மா' தேவையில்லை நன்பா! லென்சும், ரெட்டினாவும் அதை மூளையோடு இனைக்க நரம்புகளும் தான் தேவை.//

லென்சும், ரெட்டினாவும், மூளையும், நரம்புகளும் கொடுத்தால் ராஜவனஜ் அவர்கள், எல்லோருக்கும் பார்வை கொடுத்து விடுவார். இதை எல்லோரும் நம்பியே ஆகணும். இல்லையென்றால் நீங்கள் பைத்தியங்கள். சாரு நிவேதிதா போன்றவர்கள் தமிழக எழுத்தாளர்களின் அவமானச் சின்னங்கள். அவருடைய கிறுக்கல்களுக்கு ஒருவர் முக்கியத்துவம் கொடுத்துப் பேசுவதே, பேசுபவரின் தரத்தைக் குறைக்கிறது.

//இந்து என்கிற பெயர் வெளிநாட்டுக்காரன் இவர்களுக்கு போட்ட பிச்சை.//
கேட்டு வாங்கினால் தான் அது பிச்சை. கேட்காமல் கொடுக்கப்படுவது என்ன என்பதை உங்கள் முடிவுக்கே விடுகிறேன். உங்கள் சான்றிதழ்களில் என்ன போட்டிருக்கிறது என்பதை படித்து விட்டு விரலை அடுத்தவர் மீது காட்டவும்.

சார்வாகம் ஹிந்து சன்மார்க்கத்தின் ஒரு அங்கம். ஹரி கூறியுள்ளபடி உடலை மட்டுமே போற்றி வாழும் வாழ்க்கை முழுமையானதல்ல, மனித குலம் அதற்கு அடுத்த பரிணாமத்திற்கு போக வேண்டும் என்று வலியுறுத்துவது தான் வேத நெறி. புரிந்து கொள்ள அடிப்படை தகுதிகள் வேண்டும். அது அனைவருக்கும் கிடைத்து விடுவதில்லை. சதைப் பற்றாளர்களெல்லாம் தங்களை விஞ்ஞானிகள் ரேன்ஜிற்கு உயர்த்தி, அறிவியலால் விளக்க முடியாதவற்றை விளங்க மறுத்து, மற்றவர்களை நையாண்டி மட்டுமே செய்து வாழ்வதற்கு பெரிய அறிவு எதுவும் தேவையில்லை. ராமசாமி போல இருந்தாலே போதும். உங்களுக்குப் புரிந்தது தான் உலகம் என வாதிடுவது வடிக்கட்டின முட்டாள்தனம்.

Anonymous said...

//லென்சும், ரெட்டினாவும், மூளையும், நரம்புகளும் கொடுத்தால் ராஜவனஜ் அவர்கள், எல்லோருக்கும் பார்வை கொடுத்து விடுவார்//

அல்லாரும் நல்லா கேட்டுக்கங்கபா.. நம்ம கிருஷ்னா இதெல்லாம் இல்லாமயே பார்வைய குடுத்துருவாராம்.. காருன்யா தினகரன் தோத்தான்யா!

//சார்வாகம் ஹிந்து சன்மார்க்கத்தின் ஒரு அங்கம்.//

ஆமா எதுங்க ஹிந்து சன்மார்க்கம்?
எனக்குத் தெரிஞ்ச வரைக்கும்
1) சாங்கியம் 2) நியாயம் 3) வைஷேஷிகம் 4) பூர்வ மீமாம்சம் 5)யோகம் 6) வேதாந்தம்

இது போக , ஆதி சங்கரன் நிறுவிய ஷன்மதங்களும் தான் இன்றைக்கு நீங்கள் 'ஹிந்து மதம்' என்று பீற்றிக் கொள்ளும் மதங்கள்..

இதில் எங்கே சார்வாகம் வந்தது? எப்போது வந்தது?

மேலே நான் கேட்ட கேள்விகளை யோசியுங்கள்

//இப்போதுள்ள சாதிமுறை முன்னேற்றமா? இதற்குக் காரணமான ஸ்மிருதிகள் முன்னேற்றமா? இல்லை இதெல்லாம் வேண்டாம் என்று சொன்ன சார்வாகம் முன்னேறிய கருத்தா?//

இந்து வேதங்களின் சாரு ( எழுத்தாளர் அல்ல) என்று சொல்லப் படும் கீதையிலேயே வருணங்கள் பற்றிய கிருஷ்னன் (நீங்கள் அல்ல) உளரிக்கொட்டியுள்ளானே.. சார்வாகர்கள் இந்த வருண/ சாதிப் பிரிவுகளை எதிர்த்ததை இல்லை என்று சொல்ல முடியுமா?

அப்புறம் எழுத்தாளர் சாரு நிவேதிதா..
யார் எழுதினார்கள்? அவர்கள் 'தரம்' எப்படிப் பட்டது என்றெல்லாம் எனக்குக் கவலையில்லை.. உங்கள் பார்வையில் அவர் தரங்கெட்டவர் என்றால்.. அவர் பார்வையில் நீங்கள் தரம் கெட்டவராயிருக்கலாம்...

அவர் சொன்ன விஷயங்களைப் பற்றி மட்டும் கருத்து சொல்லுங்கள்..

Hariharan # 03985177737685368452 said...

ராஜா வனஜ்,

நியாயம் மற்றும் வைசேஷிகம் இவை இரணும் தாரக சாஸ்திரத்தின் பிரிவுகள் இவை தனித்தவை அல்ல.

தீயிஸ்டிக் தீயிசம் என்கிற முழு ஆஸ்திகத்தின் கீழ் வருவது:

உத்தரமீமாம்சம் (வேதாந்தம், பிரம்மசூத்திரம்,வியாஸா உள்ளடக்கியவை)

தீயிஸ்டிக் அதீயிஸம் என்கிற வகைப்படுத்தலின் கீழ்
தாரக சாஸ்திரம்(நியாயம்-கௌதம) வைசேஷிகம் (கானடா),

சாங்கியம், (நிர்-ஈஸ்வர சாங்கியம், ஸா-ஈஸ்வர சாங்கியம்),

பூர்வ மீமாம்சம் (ஜைமினி)

ஆஸ்திகம் & நாஸ்திகம் என்பது இணைந்ததே இந்துமதம்.

நாஸ்திகம் என்பது இந்து வேத நெறியின் பகுதியே.

நாஸ்திகத்தில் அதீயிஸ்டிக் தீயிஸமாக ஜைனிசமும் அதீயிஸ்டிக் அதீயிஸமாக புத்தமும், சார்வாகமும் இருக்கின்றன.

நாஸ்திகமாகிய இந்த இந்து மத பிரிவுகள் சொல்கின்ற தத்துவங்களில் தனித்த முழுமையான வாழ்வியல் வழிமுறைகள் இல்லை!

சார்வாகத்தில் கலைகள், இசை, அறிவியல்,விஞ்ஞானத் தொழில்நுட்பம், என இருந்தால் கண்டுபிடித்துச் சொல்லுங்கள் ராஜாவனஜ்!

புத்தம், ஜைனத்திலும் எவ்வளவுக்கு இந்த வாழ்வியல் முழுமையாக இருந்தன என்பதையும் சொல்லுங்கள்!

Anonymous said...

All of you didn't answer my question ... Do you anybody had read the part of Mahabharatham on the scenerio of re-enter of Dharma into the city of Indhrabrastha ....

If you read it, you should find out the annihilation nature of Hindu religion against Sarvaganaas ...

Hari! Great joke of this year done by you (by "nasthigam is the part of Vedham as well as AAsthigam)

Anonymous said...

//ஆஸ்திகம் & நாஸ்திகம் என்பது இணைந்ததே இந்துமதம்.

நாஸ்திகம் என்பது இந்து வேத நெறியின் பகுதியே.//

புல்லரிக்குது போங்க.. விட்டா அப்படியே உள்ளது எல்லாத்தையும் இந்து மதத்தோட சேர்த்துடுவீங்க போலயே..

//தத்துவங்களில் தனித்த முழுமையான வாழ்வியல் வழிமுறைகள் இல்லை!//
//சார்வாகத்தில் கலைகள், இசை, அறிவியல்,விஞ்ஞானத் தொழில்நுட்பம், என இருந்தால் கண்டுபிடித்துச் சொல்லுங்கள் ராஜாவனஜ்!//

எந்த மதத் தத்துவமுமே முழுமையான நிலையான வாழ்க்கைத் தத்துவத்தை தந்துவிட முடியாது.. உதாரணம் 'இந்து' என்று நீங்கள் சொல்லிக் கொள்கிற மதம்!
வேதநெறி வேதநெறி என்று அடிக்கடி உட்டாலக்கடி கிரிகிரி வேலை காட்டுகிறீர்களே.. அப்படி அந்த வேதத்தில் உள்ள வாழ்க்கை முறை யாது?

- குதிரை/மாடுகளை வெட்டிப் போட்டு (அவிர் பாகமாக) யாகங்கள் நடத்துதல்.
- இந்திரனைப் பார்த்து என் எதிரியை ஒழித்து விடு என்று கூவுதல் (மந்திரமாம்!?)
- சதி
- சாதி

அதர்வண வேதத்தில் போர் முறைகளும் வைத்திய முறைகளும் உள்ளது என்று பீற்றிக் கொள்கிறீர்களே.. அதை இன்று இந்திய ராணுவத்துக்கும் ஹார்ட் அட்டாம் பேஷண்டுக்கும் பரிந்துரை செய்ய முடியுமா?

அதெல்லாம் (வேதங்கள்) அன்று நாகரீகம் வளராத காலங்களில் மக்கள் அறிவு வளர்ச்சி பெறாத காலத்தில் பின்பற்றி வந்த வாழ்க்கை முறைகளும் பழக்கங்களும் தான்..
இன்று எவ்வளவோ முன்னேறிய பின்னும் ஏன் ரிவர்ஸ் கியர் போடவேண்டும் என்கிறீர்கள்?

இன்னைக்கெல்லாம் யாருங்க இந்த வாழ்க்கை முறையை பின்பற்ற முடியும்? குறைந்த பட்சம் என்னால் குதிரைக் கறி தின்ன முடியாது .. மாட்டுக்கறி ஓக்கே :)))

so.. வாழ்க்கை நெறி என்பது மாறும் காலச் சூழலுக்கும் சமூக முன்னேற்றத்தோடும் மாறக் கூடியது.. பின் எங்கே இருந்து வந்தது ஸோ கால்டு 'வேத நெறி'?

//புத்தம், ஜைனத்திலும் எவ்வளவுக்கு இந்த வாழ்வியல் முழுமையாக இருந்தன என்பதையும் சொல்லுங்கள்!//

எனக்குப் பிடித்த கேள்வி :))

முதலாவது புத்தமும் ஜைனமும் ஒரு மதமாகத் துவங்கவில்லை... ஒரு இயக்கமாகத்தான் துவங்கியது.. பிற்பாடு இவ்வியக்கத்தை பார்ப்பனீய ஆதிக்க சக்திகளிடம் இருந்து காப்பாற்றத்தான் நிறுவனமான மதமாகியிருக்க வேண்டும்..

மக்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்று வரையறுக்க இவன்கள் யார்?
சமூகம் தன்னுடைய ஒவ்வொரு வளர்ச்சிப் போக்கையும் தானே தீர்மானிக்கும்.. அதில் வாழும் மக்களின் வர்க்கங்களின் இடையே எழும் விரிசல்களும் அழுத்தங்களும் சேர்ந்து சமூக அமைப்பின் அடுத்த கட்டத்துக்கு சமூகத்தை எடுத்துச் செல்லும்..
மக்களின் வாழ்வு என்பது மாறும் சமூக சூழலின் அடிப்படையில் அமையும் ( I think "individual life influenced by society" will be the right statement)

இதில் எங்கே வந்தது மதமும் வேதமும்? இதெல்லாம் பழைய குப்பைகள் - அவ்வளவு தான்..

Anonymous said...

//நாஸ்திகத்தில் அதீயிஸ்டிக் தீயிஸமாக ஜைனிசமும் அதீயிஸ்டிக் அதீயிஸமாக புத்தமும், சார்வாகமும் இருக்கின்றன.//

hahahaha ... Completely wrong statement.. Can you elaborate this and make me to laugh some more?

:)))))

Krishna (#24094743) said...

//அல்லாரும் நல்லா கேட்டுக்கங்கபா.. நம்ம கிருஷ்னா இதெல்லாம் இல்லாமயே பார்வைய குடுத்துருவாராம்.. காருன்யா தினகரன் தோத்தான்யா!//
அடிப்படையே தவறு ராஜாவனஜ் அவர்களே! நாங்கள் பேசுவது அகக்கண் திறப்பது குறித்து. நீங்கள் பேசுவது வேத தத்துவங்களின் அடிப்படை நிலையான புற உறுப்புக்கள் பற்றியது. அகமோ, புறமோ - உங்கள் விஞ்ஞானத்தால் விளக்க இயலாத சக்தியின்றி பார்வை கொடுப்பேன் என்பது சுத்த பிதற்றல்.

வேத நெறிகளில் சார்வாகத்தினைப் பற்றிய உங்கள் கேள்விகளுக்கு ஹரிஹரன் அவர்கள் பதிலளித்து விட்டார்கள் - உங்களுக்குப் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

மற்றபடி, உங்களுக்கு என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். புதிய ஆண்டில் உங்கள் சாதனைப் பயணம் தொடர, ஹிந்து சன்மார்க்க வழக்கப்படி, ஆத்மார்த்தமாகப் ப்ரார்த்திக்கிறேன்.

Unknown said...

Hi. While the arguments are varied and wide, I would like to draw attention to a few things that starkly stand out:
1.While vaada and vivaada are welcome and enlightening, vithandavaada is futile and divisive. It serves no CONSTRUCTIVE purpose.
2.While there has been a lot of talk on Hinduism(??)(someone had even said it is a pichai from Adi Sankara), I urge one and all to understand that this word does not have a great etymology and look beyond at perhaps what is Sanathana Dharma.
3.The above will lead one to understand how inclusive and great is our ancesteral tradition that even those who conclusively argued that there is no God was conferred with the title of Brahma Rishi.
4.It would also do good for our friends to understand that beside theists and atheists, there is one more group amongst us called agnostics. Let us explore before condemning and rubbishing others. I take pleasure in quoting the great man Thiruvalluvar who urged us to think before we speak our minds and inbuilt misunderstandings.Epporul yaar yaar vaai ketpinum apporul meipporul kaanbadhu arivu.
5.I have also been always intrigued by the assumption that pagutharivu automatically means atheism. Who are we to rubbish someone who has sought God and has perhaps realised the concept of God?? If we have to develop at an emotional and intellectual level, should we not be more open to seek and understand ourselves. I feel we should neither follow nor condemn others blindly just to put up half baked arguments.

Regards / Srikanth