Wednesday, October 11, 2006

(34) வேதங்கள் மூடத்தனமானதா? அறிவியலா?

பகுத்தறிவு என்ற ஒரே வார்த்தையை வைத்துக்கொண்டு அரசியல் திரா'விட'ப் பெத்தடின் ஏற்றும் கூட்டம் நமது பாரம்பர்யமான வேதங்கள் என்றாலே வேப்பங்காய், மூட நம்பிக்கைகளும் நடைமுறைக்கு ஒத்துவராத விஷயங்களும் மட்டுமே என்று பிழைப்புவாத ஜல்லியடிப்பு தொடர்ந்து செய்துவருகிறார்கள்.

நமது பாரம்பர்ய அறிவு, வேதங்கள் பற்றி ஒரு flow chart பார்க்கலாம்.

கொஞ்சம் பொறுமையோடு பிரிவுகளைப் படிக்கவேண்டுகிறேன். முழுமையாகப் படித்தல் அவசியம்.

வித்யா (Knowledge) - பரந்த அறிவு

பரந்த இந்த அறிவு இரண்டாக வகைப்படுத்தப்படுகின்றன்.
1. ஸ்ருதி (Sruthi) - மரணமற்ற கோட்பாடுகள் - தியரி
2. ஸ்மிருதி(Smirtis) - மரணமற்ற கோட்பாடுகளை உபயோகத்தில் எடுத்துவரும் ப்ராக்டிகல்ஸ்

இதில் ஸ்ருதி (Sruthi) - மரணமற்ற கொள்கைகள் - Eternal Principles என்ற தியரியில் நான்கு வேதங்கள் வருகின்றன.

வேதங்கள் இரு பெரும் பிரிவாக்கப்பட்டுள்ளன:

1.1கர்ம காண்டம் -தினசரி செயலாக்கம் - Actions to Implement
1.2.ஞான காண்டம் - Design,Conceptualization, BrainStorming

கர்ம காண்டம் மேலும் இரு உட்பிரிவுகளாக

1.1.1சம்ஹிதாஸ்(SAMHITAS) -Mantras- மந்திரங்கள்
1.1.2ப்ரம்மணாஸ்(Brahmanas)-Ritualistic -வழிபாட்டுமுறைகள்

ஞான காண்டம் இரு உட்பிரிவுகளாக்கப்பட்டுள்ளன.

1.2.1 Aaranyakaas(ஆரண்யகாஸ்)-நெறிநடத்தல்-Contemplatives
1.2.2 Vedanta (வேதாந்தம்)வேதங்களின் இறுதிப்பகுதி-உபநிடதங்கள்-தத்துவங்கள்

இனி most interesting பகுதி as ever படித்ததை / கற்றதைச் செயல்படுத்தும் ப்ராக்டிகல்ஸ் பகுதியான ஸ்மிருதி (Smiritis).

ஸ்மிருதி ஆறுவகைப் படுத்தப்படுகிறது.

2.1 உபவேதங்கள் (Upavedas)
2.2 வேத அங்கங்கள்-Vedaangaas
2.3 வேத உப-அங்கங்கள்-Veda-upa angaas
2.4 தர்மசாஸ்த்திரம்-Dharma Saastras
2.5 புராணங்கள்-Puraanas
2.6 இதிகாசங்கள்-Itihaasas

இதில் உப வேதங்கள் நான்கு வகைப்படுத்தப் படுகின்றன.

2.1.1 ஆயுர்வேதம்
மருத்துவம் & வாழ்வுசார் அறிவியல் பற்றியது- Medicine & Science of Life

2.1.2 தனுர்வேதம்
போர் மற்றும் போர்த்தளவாடம் பற்றியது- Science of Warfare and defence

2.1.3 காந்தர்வ வேதம்
இசை, கலைகள் , இசைக்கருவிகள் பற்றிய அறிவியல் -Science of Music and Arts

2.1.4 ஸ்தபதி சாஸ்திரம்
கட்டிடம், சிற்பம், இயந்திரங்கள் பற்றிய அறிவியல் -Science of Construction & mechanics.

ஸ்தபதி சாஸ்திரமான கட்டிடக்கலை, சிற்பக்கலை போன்றவை கோவில்கள் என்ற அளவிற்கு மட்டுமே என்று சுருக்கப்பட்டுவிட்டது. 1000 ஆண்டுகளுக்கு முன்பாக இன்றைய டயமண்ட் கட்டிங் டூல்ஸ்களுக்கு இணையான கருவிகளோடு கிரானைட் கற்களைக் குடைந்து இமயம் முதல் குமரி வரை பல்வேறு பிரம்மாண்ட ஆலயங்கள், கோவில்கள், பிரத்யேக நாட்களில் ஒளி சந்நிதியில் விழுகின்ற துல்லியத்துடன் கட்டுமானத்துறையில் வேதங்களின் வழியிலான அறிவியல் பிரகாசித்தது.

ஆயுர்வேதம் தீராத நோய்களைத் தீர்த்துவைத்தது. பயோ மெடிசின், பக்கவிளைவுகளற்ற வைத்தியம் சாத்தியமாகியிருந்தது வேதங்கள் சார்ந்த மருத்துவ அறிவியலால். இன்று க்ரானிக் அல்சருக்கு அலோபதி ஆங்கில மருந்து எடுத்தால் 6மாதம் கழித்து கண்ணுக்கு குவி/குழி லென்ஸ் ப்ரேம்லெஸ்ஸாகவோ, கான்டாக்ட் லென்ஸாகவோ அணிவிக்க வேண்டியதில்லாமல் இருக்க முடிந்தது.

தனுர் வேதத்தில் போர்க்கருவிகள், போர்முறைகள், போர்த்தளவாடங்கள், ராக்கட்டுகள், பல்வகை விமானங்கள், கெப்பாசிட்டி அட்ஜஸ்டிங் விமானங்கள், ஏவுகணைகள் என டிபன்ஸ் மற்றும் டிரான்ஸ்போர்டேஷனுக்கு இதிலே நம்ம ISRO, DRDO, VSSC, இவைகள் இன்னும் இன்ஸ்பயர் ஆகி சாதிக்க ஏராளமான கான்ஸப்ட்கள் இன்னுமிருக்கிறது.

காந்தர்வ வேதத்தில் இசை, கலைகள், இசைக்கருவிகள் தயாரிப்பு என்று ஏகப்பட்ட விஷயம் பயன்பாட்டிற்கு இருக்கிறது.

வேதங்கள் டெக்னாலஜி தன்னிறைவுக்கு அறிவியல் பூர்வமாக மானிட அவசியத்திற்கான எல்லாவற்றுக்கும் அறிவியல் பூர்வமாக தீர்வுகளைத் தந்திருக்கின்றது.

வெறுமனே பகுத்தறிவு என்று சும்மா பகுத்தறிவு, சுயமரியாதைச் சுனாமியாய்ச் சுற்றிச் சுற்றி ஆரிய மாயை, வேதம் என்பதே மூடத்தனம் என்பது தன் பிழைப்புக்காக அரசியல் திரா'விட'ப் பெத்தடின் ஏற்றிவிட்டுத் திரிவது பகுத்தறிவு அல்ல... ஆற்றல் குன்றிக் குந்திய அறிவாகும்!

பதிவின் நீளம் கருதி இன்னொரு பாகத்தில் இதர வேதப் பிரிவுகளை பார்க்கலாம்.

அன்புடன்,

ஹரிஹரன்

5 comments:

Hariharan # 03985177737685368452 said...

டெஸ்ட் பின்னூட்டம்

வஜ்ரா said...

உங்கள் நல்லெண்ணம் போற்றத்தக்கது.

இவை அனைத்தும் இருக்கு என்று தெரிந்தே அதை மட்டம் தட்டும் கூட்டத்தினை என்னவென்று சொல்வது? அதனை நம் நல்வாழ்விற்கு பயன் படுத்தும் வகையில் நாம் தான் செயல் படவேண்டும். குறைகளை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். நடத்திக்காட்டினால் வயை அடத்துக் கொள்வர்.

Hariharan # 03985177737685368452 said...

வாருங்கள் வஜ்ரா ஷங்கர்,

எங்க ஜோதிடம் பார்த்துப் பரிகார மஞ்சத்துண்டு போர்த்திக்கொண்டு யோகாவும் செய்தவாறே வேதம் என்பது வெங்காயம் என்பதான தலைமைகளில் ஆட்சி நடக்கும்போது வேதங்களின் உண்மைத்தன்மையை, அதன் அறிவியல் செறிவை மீட்டு மீண்டும் முழு உபயோகத்தில் எடுத்துவர வேத நம்பிக்கையாளர்கள் பெரு அவரவர் அளவில் முயற்சி எடுக்கவேண்டும்.

savepozhichalur said...

மிக நல்ல பதிவு.

Hariharan # 03985177737685368452 said...

பொழிச்சலூர்,

வருகைக்கு நன்றி. பொழிச்சலூர் பிழைக்குமா? இல்லை அரசியலில் ஒழிச்சலூர் ஆகிவிடுமா?