Monday, October 30, 2006

(37) கருணாநிதியே நீ நூறாண்டு வாழவேண்டும்!

...
கருணாநிதியே பல்லாண்டுகளாய் நீ
குறள்தொல்காப்பிய உரை எழுதியதில்
தமிழகம் கண்ட தமிழின் தமிழானாய்!

திரா'விட' உணர்வு', தமிழ் மொழிப்பற்று என்று நீ மக்களை உசுப்பி உந்திவிட்டு, உனது இயக்கத்தின் நிரந்தர நம்பர் 2 நபர் கூட ராமையா என்ற பெயரை அன்பழகனாக்க நீ மட்டும் அண்ணாவே சொன்னதால் தியாகத்துடன் கருணாநிதியாகவே தொடர்ந்ததுடன் உன் குடும்பத்தினர்க்கு ஸ்டாலின், கலாநிதி,தயாநிதி, பேரனுக்கு உதயநிதி என்றும் உன் குடும்ப நிறுவனங்கள் அனைத்துக்கும் பார்த்துப் பார்த்து தமிழ் மொழி உணர்வை ஊட்டிடும் பெயர்களான் சன், சன்நியூஸ், சன்மீஜிக், உதயா,சூர்யா,கே.டிவி என்று பெயரிட்டதால் தானே தமிழக்த்தின் வாழைமட்டைத் தமிழன் உனக்குத் தமிழின் தமிழ் என்று புகழாரம் சூட்டினான்!

தமிழ் வியாபாரி அல்லவோ நீ! உன்னிலும் மேலான வெகுதியான தமிழிலக்கியங்களுக்கு கோனார்உரை எழுதிய அச்சகத்தாரே தமிழின் தமிழ், முத்தமிழ் பட்டங்களுக்கு முழுத்தகுதி உடையவர்கள்!

தமிழன் நெஞ்சுக்கு நீதி இதுவன்றோ!

கருணாநிதியே நீ மட்டும்
நீண்ட வாழ்க்கை வாழ்ந்திருக்காவிடில் தமிழகம்
விழிப்புற்று முழித்திருக்காது!

இந்த நேரத்தில் நீ டால்மியாபுரத்தினை கல்லக்குடி என்று பைந்தமிழில் பெயர் மாற்றம் செய்ய ரயில் வராத தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்துச் செய்த வீரப்போராட்டம் நினைவில் ருசிக்கிறது! நிஜமான அரிதாரம் பூசிய கலைஞன் கூட இவ்வளவுக்கு ஓபன் ஸ்டேஷன் தியேட்டர் பர்பார்மன்ஸ் தந்திருக்கமுடியுமா! சோத்தாலடித்த பிண்டமான தமிழன் இதனால் தானே உன்னை கலைஞர் என்று சிலாக்கியமாய் அழைக்கிறான்!

கருணாநிதியே உனக்கு மட்டும்
அகண்ட அகவை வாய்க்காதிருப்பின் தமிழகம்
வாய்மைகளை மீட்டெடுத்திருக்காது!


உழவுத் தமிழன் உணவு சாகுபடிக்கு உற்ற தேவையான, உரிமையான காவிரி நீர் பங்கீடு, பெரியாறு நீர் பங்கீடு எனத் தமிழனின் வாழ்வாதார நதிநீர்ப் பிரச்சினை 40ஆண்டுகளாய்த் தீர்க்கப்படாமலிருக்க ரோமாபுரி மன்னன் நீரோ மாதிரி ஐந்து முறை முதல் அமைச்சனாக பட்டம்,பரிவட்டம் சூட்டிக் கொண்ட நீ குஜராத் பைங்கிளி நமீதா ஆட்டத்தில் நயந்ததென்ன, திரிஷவின் ஆட்டத்தில் திளைத்ததென்ன! நதிநீர் பங்கீட்டிலே உன் வாய்மைதான் என்ன எனத் தெரிந்துவிட்டதே!

கருணாநிதியே உனது நெடுநாள்
வாழ்க்கையால் உணர்ந்திருக்கிறது தமிழகம்
பகுத்தறிவுப் பல்கலைக்கழகம் நீ என்பதனை!


ஈ.வெ.ரா, அண்ணாவின் பகுத்தறிவுப் பாசறைகளின் முதல் மாணவனான நீ முதிர்ந்த வயதில், கொள்கைச் சிங்கமாய், தற்(செயல்)குறியாய் மஞ்சள் துண்டணிந்து காமாலை வந்தவன் பாடிய பாமாலையாய் வலம் வருவதென்ன? பெண்களின் தாலி, பொட்டு போன்ற அடையாளங்களே அடிமைத்தளை என உனது தாய்க்கழகக் கொள்கையிருக்க.. நீரோ நீயோ உன் குடும்பப் பெண்களை ஒரு ரூபாய் அளவுக்கு குங்குமப் பொட்டுடன் வளைய வர நீ ஆவன செய்த அதி தீரம்தான் என்ன?! காட்டிய ஆதுரம் தான் என்ன என்ன?

பம்மாத்துப் பகுத்தறிவிலே பகலவனான பாசறை குரு ஈ.வெ.ரா வை மிஞ்சிய பல்கலைக்கழகம் நீ!

தொழில் நுட்ப ஊழலில் நாட்டுக்கே நீ நிகரற்ற பல்கலைக்கழகமாகத் திகழ்கிறாய்! பீகாரின் ஊழல் லாலு பாடம் படிக்கிறார் உன்னிடம். 3கிலோ கோழிக்கு 27கிலோ தீவனம் என்று கணக்கெழுதி சில கோடிகள் ஊழல் செய்ததை எண்ணி எண்ணி வெட்கப்படுகிறார் உன் சர்க்கார்தோறுமான சர்க்காரியா சாதனைகளை அறிந்தபின்பு!

கருணாநிதியே முதியவனாகி நீ
பெரிய கோவில் கட்டாமலே தமிழகம்
கண்ட ராஜராஜசோழன் ஆகிப்போனாய்!


மலைகளற்ற தஞ்சையில் இமயத்தினிறு பாறைகொணர்ந்து தரையிலே நிழல் விழாமல் கலை அதியமாய் பெரியகோவில் கட்டி வரலாற்றில் இடம்பெற்றான் சோழமாமன்னன் இராஜராஜன்.

ஆனால் தற்காலச் சோழன் நீயோ தமிழகத் திருக்கோவில்களுக்கு கைப்பிடி மண்ணைக்கூட அள்ளிப்போடாதவன்.

அரசு ஆலயங்களுக்கு நிதி உதவி செய்த நியதியை மாற்றிய ஆலயத்தினின்று நிதியை நீக்கியவன் நீ!

கருணாநிதியே அறுபதாண்டுகளாய் நீ
அரசியல் பொதுவாழ்வில் இருந்த்ததில் தமிழகம்
உணர்ந்தது சாணக்கியன் நீஎன!

2004ல் நடுவண் அரசமைய தமிழக எம்.பிக்கள் ஆதரவு இன்றியமையாததானபோது காவிரி, பெரியாறு நதிநீர் பங்கீட்டினை முனைந்து முடித்திடும் அதிகாரம் தரும் மத்திய நீர்வளத்துறை அமைச்சினைப் பெறாது நின்குடும்ப வளத்துக்கான தொலைதொடர்புத்துறைக்கு நின் பேரன் தயாநிதியை அமைச்சனாக்கி உன் குடும்பத் தொலைக்காட்சித் தொழில் விரிவாக்கி போட்டியாளர்களான ராஜ், விஜய், ஜெயா டிவிக்களை கட்டுப்பாட்டில் வைத்திட மன்மோகன்சிங்கை மிரட்டிப் பெற்ற நீ ஒப்பற்ற சுயநல அரசியல் சாணக்கியனே!

கருணாநிதியே பன்னிரண்டு ஐந்தாண்டுகளாய்
மக்களோடு மக்களாய் வாழ்ந்ததில் தமிழகம்
பார்த்த பொருளாதாரமேதையானாய் நீ!


அறுபதாண்டுகளுக்கு முன் ஆயிரம் ரூபாய்க்கு உனக்கு ஐந்துபேர் சாட்சிக்கையெழுத்துப் போடும் படியான பொருளாதாரத்திலிருந்த நீ சில திரைப்படங்களுக்கு கதை, வசனமெழுதியதோடு ஐந்து முறை முதல் அமைச்சனாகி சர்க்காரியா கமிஷன் கண்ட சர்க்கார் நடத்தியதில் இன்று ஆசியாவின் முதல் மூன்று கோடீஸ்வரக் குடும்பப் பட்டியலில் கேடித்தனம் பல செய்து ஜொலிக்கிறாய்!

நோபல் பரிசு பெற்ற பொருளாதாரமேதை அமெர்த்தியா சென்னை கையமர்த்திய சுயநல பொதுநிதி கையாடல் மேலாண்மை முனைவரல்லவோ கருணாநிதி நீ!

இப்படித் தமிழனை, மறத்துப் போன தமிழனை உனது நீண்ட, நெடிய வாழ்வு, தர்மத்தின் வாழ்வு தனைக் கவ்விய உனது சூது வாழ்வு பொட்டில் அடித்தமாதிரி சரித்திரத்தில் காணக்கிடைக்கும் உன் தியாக வாழ்வு பல காலத்திற்கும் இனி பம்மாத்து எது? பயன் தருவது எது? என்று பகுத்தறியும் திறனைத் தந்திருக்கிறது.

ஆகவே கருணாநிதியே நீ நூறாண்டு வாழ்வாயாக!

அன்புடன்,

ஹரிஹரன்














63 comments:

Hariharan # 03985177737685368452 said...

டெஸ்ட் மெஸேஜ்

bala said...

//ஆகவே கருணாநிதியே நீ நூறாண்டு வாழ்வாயாக//

ஹரிஹரன் அய்யா,

நம்ம சூப்பர் காக்கா கவிஞர் வைரமுத்துவின் கவிதையை விட பிரமாதமய்யா உம் பாடல்..

பாலா

லொடுக்கு said...

பள்ளியில் பயிலும் போது எனக்கு இது போல எடுத்துக்காட்டை தந்து வஞ்சப்புகழ்ச்சி அணி நடத்தியிருந்தால் நானும் தமிழ் காக்கும் வீரனாகியிருப்பேனோ?

Hariharan # 03985177737685368452 said...

வாங்க பாலா!

நல்லாயிருந்ததுங்களா! நன்றிகள் பாராட்டுக்கு. படைப்பாளிக்கு பாராட்டு தானுங்களே சாப்பாடு! (அடங்குடா மவனே இது என் மனசாட்சி நம்ம பெனாத்தலார் கோச்சுக்ககூடாது)

Hariharan # 03985177737685368452 said...

ஆரண்யவராகமே வருக!

ஆமாங்க இவனுங்க பம்மாத்துல நமக்கு மருவாதி கொஞ்சம் கம்மியாத்தான் போச்சு. ஒருகூட்டம் என்னத்துக்கு நாங்க ஹிந்தி கத்துக்கணும்னு ஜல்லி அடிக்கும்! புத்திசாலிதாங்க பல மொழி கத்துக்குவான்! எப்ப புரிஞ்சுக்க! முழிச்சுக்க!

Geetha Sambasivam said...

உள்ளேன் ஐயா!!!!!!!!!!! :D

Hariharan # 03985177737685368452 said...

வாங்க லொடுக்கு!

என்னத்த இவனுங்க தமிழைக் காத்து வீரனாகியிருக்கானுங்க! வெளிநாட்டு வீரமாமுனிவர் கூட தமிழ்மொழி எழுத்தை மேம்படுத்தியிருக்காரு.

டென்மார்க்கிய சீகன்பால்கு தமிழ் முதல்ல அச்சுல வர முயற்சி செஞ்சிருக்காரு.

பலம் மிகுந்தவன் பழம் தின்கிறான் இந்த சொற்றொடரில் பலம் வார்த்தைக்கு அவசியமான அழுத்தம் ப எழுத்தில் வருகிறதா? தமிழின் தமிழ் வீரமாமுனிவர் மாதிரி முயன்றாரா ஏதாவது?

Hariharan # 03985177737685368452 said...

கீதாஜி,

வருகைக்கு நன்றி!

Bajji(#07096154083685964097) said...

அதுதான் திராவிட பெத்தடின்கள் என்று கூறிவிட்டீர்களே. (நீங்கள்தானே அதைக் கூறியது?)

மாணவரின் உயிரைத் தியாகம் செய்து சமீபத்தில் 1972-ல் (நன்றி டோண்டு சார்) டாக்டர் பட்டம் பெற்றத் தியாகச் செம்மல் அல்லவா அவர். நூறாண்டுகள் வாழ்க அவர்.

உலக மகா கவிஞர் என்ற பட்டம்கூட அவர் கூச்சமே இன்றி வாங்கியிருப்பதாக அறிகிறேன்.

கிருஷ்ணன்

Hariharan # 03985177737685368452 said...

வாங்க கிருஷ்ணன்,

பெத்தடின்கள் எப்படி டின் டின்களாக எத்தனை பம்மாத்துத்தனத்துடனானவர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றி ஏற்றுகிறார்கள் என்பதை சுத்திச் சுத்திச் சுட்டிக் காட்டினாலே ஏற்றிய பெத்தடின் சென்ட்ரிப்யூகல் போர்ஸில் வெளியேறினாலேயே "டி அடிக்ஷன்" ஆக ஆரம்பிக்கும்!

Sridhar Narayanan said...

ஹரிஹரன் அவர்களே,

//மலைகளற்ற தஞ்சையில் இமயத்தினிறு பாறைகொணர்ந்து//

ராஜராஜ சோழன் நாரத்தை மலையிலிருந்துதான் கல் கொண்டு வந்தார் தஞ்சாவூருக்கு.

சேரன் செங்குட்டுவன்தான் இமயத்திலிருந்து கல் கொண்டு வந்து கண்ணகிக்கு கோயில் கட்டினார் என்று படித்து இருக்கிறேன்.

மற்றபடி பதிவைப் பற்றி No Comments. :-)

ஜோ/Joe said...

ஹரிஹரன்,
நல்ல வயித்தெரிச்சல் மாத்திரை வாங்கி சாப்பிடுங்க .எல்லாம் சரியாயிடும்.

Hariharan # 03985177737685368452 said...

//தமிழக மக்களின் தரமும் இது போன்ற அயோக்கியர்களைப் போலவே இருப்பதால் இது போன்ற ரவுடிகள் இத்தனை செல்வாக்காக இருக்க முடிகிறது.//

வரதன்,

ஒட்டு மொத்தமாக தமிழ் மக்களின் தரம் என்பது சரியல்ல. பாசறையில் பயின்று அரசியல் திரா'விட'த்தில் ஆதாயம் காணும் சில பலருக்கு என்பது சரியாக இருக்கும்.

//இது போன்ற ஆட்களைப் பார்த்தால் மக்களுக்கு பாவ புண்ணியங்களில் எப்படி நம்பிக்கை பிறக்கும். ஆண்டவன் எங்கோ தவறு செய்கிறார்//

உயரமாக ஏறவிட்டு வேடிக்கை காட்டும் போது தொலைதூரத்தில் இருப்பவரும் கண்டுகொள்வார்கள் என்ன சொல்லிவிட்டு என்ன செய்கிறார்கள் என்பது தெளிவாகும்.
ஆண்டவனெல்லாம் தவறு செய்தால் தாங்குமா? அதற்கான காலம் கனியவிட்டுக் காத்திருக்கிறார்.

Hariharan # 03985177737685368452 said...

வாங்க ஜோ,

//நல்ல வயித்தெரிச்சல் மாத்திரை வாங்கி சாப்பிடுங்க .எல்லாம் சரியாயிடும்//

இது 3.5கோடி மக்களுக்கு இருக்கிற ஆதங்கம். அப்ப இந்த மாத்திரை காண்டிராக்ட்ல கூட காசு பாக்க வழியிருக்கு! மருத்துவர் ஐயா வேற இருக்காரு கூட்டணிலே!

நன்மனம் said...

ஏனுங்க ஜோ!

இதுல தப்பு இருந்தா சொல்லுங்க அத விட்டுபுட்டு.....

Hariharan # 03985177737685368452 said...

வாங்க நன்மனம்,

//ஏனுங்க ஜோ!

இதுல தப்பு இருந்தா சொல்லுங்க அத விட்டுபுட்டு..... //

இதுவல்லவோ நன்மனம். தக்க சமயத்தில் உண்மைக்கு ஆதரவுகுரல் தந்த நன்மனமே வாழ்க! வாழ்க!

அப்புறம் நன்மனம் எங்க ரொம்ப நாளா நம்ம பதிவுகள் பக்கம் காணோம்? அஜர்பைஜான் எப்படி இருக்கு?

Hariharan # 03985177737685368452 said...

//ஹரிஹரன்,
நல்ல வயித்தெரிச்சல் மாத்திரை வாங்கி சாப்பிடுங்க .எல்லாம் சரியாயிடும்//

கடற்புரத்தானே! சோ என்று பேரலை அடித்தாலும் நடுநிலமை தவறமாட்டாய் என்றெண்ணியிருந்தேனே ஜோ உனது நடுவுநிலைமை குறித்து! இப்படி அறிவாலயத்தானென்று அறிவித்துவிட்டாயே!

வெங்கட்ராமன் said...

/*********************************
இது போன்ற கயவர்கள் எல்லா வளங்களும் பெற்று இத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்வதைக் கண்டால் இறைவன் என்று யாரும் இருக்கிறார்களா என்ற சந்தேகம்தான் வருகிறது.
*********************************/

வரதன் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.

நன்மனம் said...

அஜர்பைஜான்ல குளிர் ஆரம்பிச்சிடுச்சுங்க.

//அப்புறம் நன்மனம் எங்க ரொம்ப நாளா நம்ம பதிவுகள் பக்கம் காணோம்? //

படிச்சு தெரிஞ்சுக்கறதோட சரிங்க பின்னூட்டம் போட்டா மட்டும் தான் எழுதுவீங்கங்கறது இல்லங்கறதுனால பதிவேடுல கையெழுத்து போடல.

நல்லா தான் இருக்குதுங்க பதிவு எல்லாம்.

வடுவூர் குமார் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி!!
புடிங்க பொற்கிழி:டிவி & நிலத்தை. எங்க அனுப்பனும்?

Hariharan # 03985177737685368452 said...

வாருங்கள் வெங்கட் ராமன்,

அப்படியெல்லாம் மனம் தளர்ந்திடலாமா? மாற்றம் கண்டிப்பாக வரும். ஊழலில் உச்சிக்கு போனதெல்லாம் ஒருநாள் இறங்கித்தானே தீரும்!

Hariharan # 03985177737685368452 said...

நன்மனம்,

//படிச்சு தெரிஞ்சுக்கறதோட சரிங்க பின்னூட்டம் போட்டா மட்டும் தான் எழுதுவீங்கங்கறது இல்லங்கறதுனால பதிவேடுல கையெழுத்து போடல//

உங்க கருத்துக்களடங்கிய பின்னூட்டங்கள் என் எழுத்தை மேம்படுத்திக்கொள்ள உதவும். கண்டிப்பா படிச்சகையோடு கருத்தைப் பதிங்க!

குழலி / Kuzhali said...

கருணாநிதி என்ற மனிதனின் இருப்பே சிலருக்கு இத்தனை எரிச்சல் என்றால் அதற்காகவேனும் இந்த மனிதன் நூறாண்டுகள் வாழவேண்டும். அந்த மனிதன் இன்னும் சாகவில்லையே என்ற ஒரு மட்டமான சிந்தனை இந்த பதிவில் வஞ்சப்புகழ்ச்சியாக வெளிவருகின்றது, இந்த பதிவிற்கு பின்னூட்டமிட்டவர்களுக்கு இதுவாவது புரிந்ததா? ஹரிகரா உனக்கு மனசாட்சியே இல்லையா?

Hariharan # 03985177737685368452 said...

வாங்க குமார்,

என்ன கிழி கிழின்னு சொல்லி கிலியாக்குறீங்க! 21' டி.வியெல்லாம் வேண்டாம் ப்ளாஸ்மால 42" தாங்க, நிலம் மெரினா பீச்ல 2 ஏக்கர் ஒதுக்குங்க சாமி புண்ணியமாப்போகும்!

Hariharan # 03985177737685368452 said...

வாங்க குழலி,

//கருணாநிதி என்ற மனிதனின் இருப்பே சிலருக்கு இத்தனை எரிச்சல் என்றால் அதற்காகவேனும் இந்த மனிதன் நூறாண்டுகள் வாழவேண்டும். அந்த மனிதன் இன்னும் சாகவில்லையே என்ற ஒரு மட்டமான சிந்தனை இந்த பதிவில் வஞ்சப்புகழ்ச்சியாக வெளிவருகின்றது, இந்த பதிவிற்கு பின்னூட்டமிட்டவர்களுக்கு இதுவாவது புரிந்ததா? //

இளநீர் சாப்பிடுங்க முதல்ல! கோபாவேசமா வந்திருக்கீங்க!

கருணாநிதியின் செயல்பாடுகளில் சுயநலமே பிரதானம், கொளுகைப்பிடிப்புக்கெல்லாம் மூச்சுப்பிடிப்பு வந்துவிட்டது என்பதையும் சுட்டியிருக்கிறேன்.

தளபதி டயலாக் மாதிரி " சாவுக்கு காத்திருக்கிறேன்"... யாரோட சாவுக்கு... கருணாநிதியோட சாவுக்குன்னு நீங்களே பேசிக்கிட்டா நான் என்ன நினைச்சு எழுதினேன்னு நீங்களே கருத்துச்சுதந்திரத்தோட பேசிட்டீங்களே குழலி!

தமிழகத்தில் வளமான் மாற்றத்திற்குத்தான் ஆசைப்படுகிறேனே அன்றி எவர் மரணத்திற்கும் அல்ல!

//ஹரிகரா உனக்கு மனசாட்சியே இல்லையா? //

ஏஞ்சாமி இப்பிடி வைய்யிறீங்க! உங்களுக்கு மன சாட்சியே இல்லீங்களா குழலி! இப்படி பதிவை திசை திருப்புறீங்களே!

நன்மனம் said...

குழலி அவர்களே!!

உப்பு தின்னவன் தண்ணி குடிச்சு தான் ஆகனும் தப்பு பண்ணவன் இந்த மாதிரி ஏச்சு பேச்சு கேட்டு தான் ஆவனும்....

கருணாநிதியின் நன்மை / தீமைகளை சீர் தூக்கி பாத்து உங்க மனசாட்சிக்கு எது சரினு படுதோ அதன் படி வெச்சுக்கங்க.

இங்க மத்தவங்க மனசாட்சிய அவங்க அவங்க சிந்தனைகளால் சீர் தூக்கி பாக்கறாங்க அவ்வளவு தான்.

இதுக்கு கருணாநிதி வந்து அழுதார்னா பாத்துக்கலாம்.

Hariharan # 03985177737685368452 said...

நன்மனம்,

//உப்பு தின்னவன் தண்ணி குடிச்சு தான் ஆகனும் தப்பு பண்ணவன் இந்த மாதிரி ஏச்சு பேச்சு கேட்டு தான் ஆவனும்....//

இது நியாயமான பேச்சு.

//கருணாநிதியின் நன்மை / தீமைகளை சீர் தூக்கி பாத்து உங்க மனசாட்சிக்கு எது சரினு படுதோ அதன் படி வெச்சுக்கங்க.//

குழலி ஐயா கூட்டணித்தலைமையை எப்படி 100% நல்லவர்ன்னு நம்பி என்னைக் கோச்சுக்கிட்டாலும் உண்மையில் கருணாநிதி யார்னு அவருக்குத் தெரியும்னு நம்புகிறேன்!

இப்படி உண்மைக்கு நன்மனம் மாதிரி குரல் கொடுங்க சாமிகளா!

Muthu said...

ஹரிஹரன் எப்பவுமே சூடு தான்.அவர் ஃபீலிங்ஸ் அவருக்கு.நன்மனம் ஏன் ஆவேசமா இருக்கார்?:))

Hariharan # 03985177737685368452 said...

வாங்க முத்து(தமிழினி)

//ஹரிஹரன் எப்பவுமே சூடு தான்.அவர் ஃபீலிங்ஸ் அவருக்கு.//

கருணாநிதி போன்றோரின் வழிநடத்தலில் மொழிப்போரில் செத்தவெனெல்லாம் கிறுக்கன்னு வஞ்சப்புகழ்வாய் வாழ்க்கையை அமைத்துக் கொண்ட தலைமையிடம் சூடுதானே காட்ட வேண்டும்!

லீடர்ஷிப் பை எக்ஸாம்பிள்னு வாழ்ந்த ஆளா கருணாநிதி? பின்பு பம்மாத்து தலைமைப்பண்புகளோடு இருக்கும் தலைமையிடம் என்ன மாதிரி ஃபீலிங்ஸ் காட்டுவது?

நான் பதிவிலே சுட்டியதில் உண்மையையே பிரதானமாகச் சொல்லியிருக்கிறேன்!

குழலி கருத்தை எதிர்கொள்ளாமல் கருணாநிதியின் கருமாதியை நான் எதிர்பார்ப்பதாக எழுதியிருப்பது என்ன ஆவேசமோ சாமி?!

நன்மனம் said...

முத்து அவர்களே!!

இங்க வந்து கருணாநிதிய பு.பி(நன்றி முத்து(தமிழினி) ;-)) யா ஆக்க நெனச்சதுக்கு தான் இந்த ஆவேசம்.

அப்புறம் பின்னூட்ட மிட்டவங்கள பத்தி பேச குழலி யாருங்க.

ஜோ/Joe said...

ஹரிஹரன்,
உங்களோடு விவாதம் செய்யும் எண்ணமில்லை .கலைஞர் செத்தால் தான் உமக்கு நிம்மதி என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள். அதை கண்டிப்பதற்கு நான் அறிவாலயத்தானத் தான் இருக்க வேண்டுமென்றால் அப்படியே இருந்து விட்டு போகிறேன்.

Hariharan # 03985177737685368452 said...

//மனிதன் இன்னும் சாகவில்லையே என்ற ஒரு மட்டமான சிந்தனை இந்த பதிவில் வஞ்சப்புகழ்ச்சியாக வெளிவருகின்றது//

இப்படியானது குழலியின் பார்வையாக இருந்துவிட்டுப்போவதில் ஆட்சேபம் இல்லை!

//இந்த பதிவிற்கு பின்னூட்டமிட்டவர்களுக்கு இதுவாவது புரிந்ததா?//

இது குழலி மாதிரியே அனைவரும் பார்க்கவில்லை என்ற குழலியின் ஆதங்கம் அப்படியே ஏற்றுக்கொள்கிற மாதிரியா இருக்கிறது?

கருத்துச்சுதந்திரம் பேசும் குழலி தன்கருத்தைத் திணிப்பதேனோ?

Hariharan # 03985177737685368452 said...

ஜோ,

//கலைஞர் செத்தால் தான் உமக்கு நிம்மதி என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்//

நானெங்கே சொன்னேன் கருணாநிதி சாகவேண்டும் என்று? இது உங்கள் கருத்து!

//உங்களோடு விவாதம் செய்யும் எண்ணமில்லை //

சரி உங்கள் விருப்பம். ஆனால் சொல்லாத சாவை தெளிவாய்ச் சொன்னதாக விதண்டாவாதமாக சொல்லியிருக்க வேண்டாமே! :-(

Muthu said...

ஹரிஹரன்,

உணர்வு புரிகிறது.

முற்பிறவி பாவத்தினால் திராவிடனாக பிறந்தவர்களுக்குத்தான் கருணாநிதியின் தேவை புரியும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு கோபம் இருக்கத்தான் செய்யும்.இது நன்மனத்திற்கும் பொருந்தும்.

நன்றி.

நன்மனம் said...

முத்து அவர்களே!!!

ஒரு வட்டத்தை விட்டு வெளியே பார்க்க விரும்பாத (பார்த்தாலும் அதை வெளியே சொல்லாத)திராவிடர்களுடைய எண்ணமும் புரிகிறது.

இது உங்களுக்கும் பொருந்தும் என்பதை புரிந்து கொண்டேன்.

நன்றி.

Hariharan # 03985177737685368452 said...

முத்து(தமிழினி)

//பாதிக்கப்பட்டவர்களுக்கு கோபம் இருக்கத்தான் செய்யும்.//

உண்மையில் இந்தக் கோபத்தினை உங்களிடமும் நியாயமாக எதிர்பார்க்கிறேன்!

(நீங்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறுவது கல்வி/அரசு வேலையில் இடஒதுக்கீடு என்ற அடிப்படையில் எனில் நான் இவைகளை இழந்ததாகவே எண்ணவில்லை. எனது முயற்சி, திறமை, அதிர்ஷ்டம் என்னவோ அது எனக்குக் கிடைத்தது என்று நிறைவாகவே இருக்கிறேன்!)

//முற்பிறவி பாவத்தினால் திராவிடனாக பிறந்தவர்களுக்குத்தான் கருணாநிதியின் தேவை புரியும்.//

எனக்குச் சத்தியமாக இது என்ன பாயிண்ட் ஆஃப் வியூ என்பது புரியவில்லை!

ஜோ/Joe said...

//நானெங்கே சொன்னேன் கருணாநிதி சாகவேண்டும் என்று?//
மன்னிச்சுகுங்க .கருணாநிதி வாழவேண்டும் என்று மனதார வாழ்த்தும் உங்கள் நன்மனம் புரியாமல் தவறாக நினைத்து விட்டேன்.

Hariharan # 03985177737685368452 said...

//கருணாநிதி வாழவேண்டும் என்று மனதார வாழ்த்தும் உங்கள் நன்மனம் புரியாமல் தவறாக நினைத்து விட்டேன்.//

ஜோ, உண்மையில் என்மனம் நினைப்பது கருணாநிதி மனம் திருந்தி வாழவேண்டும் என்பதே!

இட்ஸ் ஓகே. இப்பவாவது சரியாகப் புரிஞ்சுக்கிட்டீங்களே!

Hariharan # 03985177737685368452 said...

வாங்க Sridhar venkat,

//ராஜராஜ சோழன் நாரத்தை மலையிலிருந்துதான் கல் கொண்டு வந்தார் தஞ்சாவூருக்கு. //

பாறையை நர்மதை நதியோடும் வடக்கில் விந்தியமலையிலிருந்தும் என்றும் துறையூர் பச்சைமலை என்றும் பல்வேறு கூற்றுக்கள் உள்ளன. இமயவரம்பன் சேரன்செங்குட்டுவனே!

Hariharan # 03985177737685368452 said...

மதுசூதனன் ராமானுஜம் has left a new comment:

நாடு நலம் பெற இதுபோன்ற சில தலைவர்கள் (இவர் ஒருவரே போதும் என்று நினைக்கிறேன்) நிச்சயம் வேண்டும்.

இதையெல்லாம் படித்தபின் மட்டும் திருந்தி வருந்தவா போகிறார்கள். அதென்னவோ கிடையாது.

இதற்கு ஒரே வழி இவர்கள் அனைவரையும் ஓய்வெடுக்க அனுப்பி விட்டு நாம் ஆட்ச்சிக்கு வருவது தான்

Hariharan # 03985177737685368452 said...

மதுசூதனன் ராமானுஜம் has left a new comment:

//நாடு நலம் பெற இதுபோன்ற சில தலைவர்கள் (இவர் ஒருவரே போதும் என்று நினைக்கிறேன்) நிச்சயம் வேண்டும்.//

:-)))

//இதையெல்லாம் படித்தபின் மட்டும் திருந்தி வருந்தவா போகிறார்கள். அதென்னவோ கிடையாது. //

சொல்லமுடியாது. இணையமும் ஒரு மீடியா என்பதால் பார்வைக்கு இம்மாதிரியான கருத்துக்கள் போகவும் வாய்ப்பிருக்கிறது!

//இதற்கு ஒரே வழி இவர்கள் அனைவரையும் ஓய்வெடுக்க அனுப்பி விட்டு நாம் ஆட்ச்சிக்கு வருவது தான்.//

நம் போன்ற புதிய தலைமுறை படித்த இளைஞர்கள் ஓரளவுக்காவது அரசியலில் பகுதிநேரமாவது பங்கேற்க வேண்டும்.

Hariharan # 03985177737685368452 said...

வாங்க சிநேகிதன்,

//அடுத்து மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தாலும், அதில் தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக ( தகவல் தொழில்நுட்பம் அல்லது ஒளிபரப்புத்துறை அமைச்சராகத்தான்) இருப்பார்.//

கருணாநிதிதான் சுயநல அரசியல் நடத்துவதில் சாணக்கியனாச்சே!

//இது புரியாத பல வலைஞர்கள் இங்கே ஜல்லியடித்திக்கொண்டிருப்பது சாதிப்பற்றாக இருக்கலாம் அல்லது ஜாதி கூட்ட்ணி பற்றாக இருக்கலாம் அல்லது அறியாமையாகக் கூட இருக்கலாம்//

மேலாக கொள்ளையடிக்க சிலபல ஏரியா ரைட்ஸ்! சப்-காண்டிராக்ட்கள்!
மருத்துவரி ஐயா பாண்டிச்சேரி ஜிப்மரை முழுங்கிடலாமே பத்துக்காசு செலவில்லாம!

வெங்கட்ராமன் said...

/****************************
ஜோ, உண்மையில் என்மனம் நினைப்பது கருணாநிதி மனம் திருந்தி வாழவேண்டும் என்பதே!
*****************************/

சின்னபுள்ள தனமால்ல இருக்கு உங்க எண்ணம்.

/*****************************
அடுத்து மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தாலும், அதில் தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக ( தகவல் தொழில்நுட்பம் அல்லது ஒளிபரப்புத்துறை அமைச்சராகத்தான்) இருப்பார்.
*****************************/

உணமையை சொல்லி இருக்கிறீர்கள். இது சோனியா காந்திக்கே நன்றாக தெரியுமே. . . . . .

ஜோ/Joe said...

//ஜொ-வும் கலைஞருக்கு ஆதரவு தெரிவித்திருப்பது, அவர்கள் சார்ந்திருக்கும் மதம், ஜாதியின் ஆதரவாளராக கலைஞர் இருப்பதாக காட்டிக்கொண்டிருப்பதை நம்பித்தான்.//

சிநேகிதன்,
உங்கள் கண்டுபிடிப்புக்கும் அறிவுரைகளுக்கும் நன்றி!

முத்துகுமரன் said...

50 :-)

Hariharan # 03985177737685368452 said...

எனது புதிய பதிவான (39) எம்டன் மகன் 'n' கருணாநிதி தமிழ்மணத்தில் இணைக்க இயலவில்லை என்ன காரணம்?
எம்டன் மகன் 'n' கருணாநிதி

வெங்கட்ராமன் said...

வரதன் அருமையான வாதம்.

Hariharan # 03985177737685368452 said...

வாங்க முத்துக்குமரன்,

சிக்கனமா 50 :-) மீதி? :-)))

Hariharan # 03985177737685368452 said...

வரதன்,

உங்க பாயிண்ட் # 10 கொச்சையா இருக்கு. கோபம் வார்த்தைகளில் நயமோடு வெளிப்படுத்தினால் விவாதம் திசை திரும்பாது. புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

Hariharan # 03985177737685368452 said...

கருத்து,

உங்கள் கருத்து பதிவிற்குச் சம்பந்தமில்லாதது. எனவே வெளியிடவில்லை. புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன். வருகைக்கு நன்றி

Hariharan # 03985177737685368452 said...

//ஜோ, உண்மையில் என்மனம் நினைப்பது கருணாநிதி மனம் திருந்தி வாழவேண்டும் என்பதே!
*****************************/

சின்னபுள்ள தனமால்ல இருக்கு உங்க எண்ணம்.//

வெங்கட் ராமன்,
சின்னபுள்ளையா சிந்திச்சா சிறப்பானது தானுங்களே! என்ன சொல்றீங்க!

ஸ்ரீ சரவணகுமார் said...

நீங்கள் சார்ந்திருக்கும் ஜாதிக்கு கலைஞர் எதிரானவர் என்று தான் இத்தனை வன்மம், இத்தனை வெறி உங்கள் பதிவில். ஒரு மனிதன் சாக வேண்டும் என்று உளமார எண்ணுகின்ற உங்களைப் போன்ற உயர்ந்தோர் இருக்கும் வரை தமிழ்நாடு மட்டுமல்ல எந்த நாடும் உருப்படாது. வாழ்க உங்கள் ஊளை (நரிகள் தான் ஊளையிடுமோ.. மன்னிக்கவும்)

Hariharan # 03985177737685368452 said...

வாங்க Sreesharan,
//நீங்கள் சார்ந்திருக்கும் ஜாதிக்கு கலைஞர் எதிரானவர் என்று தான் இத்தனை வன்மம், இத்தனை வெறி உங்கள் பதிவில். ஒரு மனிதன் சாக வேண்டும் என்று உளமார எண்ணுகின்ற உங்களைப் போன்ற உயர்ந்தோர் இருக்கும் வரை தமிழ்நாடு மட்டுமல்ல எந்த நாடும் உருப்படாது. வாழ்க உங்கள் ஊளை (நரிகள் தான் ஊளையிடுமோ.. மன்னிக்கவும்)//

அப்படியெல்லாம் ஏதுமில்லை சார்.
சொல்லப்போனா தமிழனாகிய எல்லோருக்குமே இருக்கிற ஆதங்கம். வட்டம், மாவட்டம்னு கழக ஆட்சிகளில் பயன்பெறும் கூட்டமெனில் இப்படியாக நீங்கள் பேசுவதுமாதிரி பாவ்லா காட்டி சாதியைச் சுட்டிக்காட்டி உண்மையை மறைக்க முயல்வது பாசறைப் பயிற்சியின் விளைவே எனப் புரிந்து போகும்.


இந்தப்பதிவுல கூட இப்படி ஊளையிட்டிருக்கேன்

இதையும் படிங்க. படிச்சு உங்களுக்குத் தெரிஞ்ச சுயநல கழக வட்டம், மாவட்ங்களுக்கும் எடுத்துச் சொல்லுங்க!

வெங்கட்ராமன் said...

Sreesharan அவர்களே,

உண்மையை உணரவேண்டும்.
Varadhan சொன்ன பத்து சாம்பிள் காரணங்களை படித்து விட்டுத்தான் பின்னூட்டம் போட்டீர்களா. . .?

Madhu Ramanujam said...

நாடு நலம் பெற இதுபோன்ற சில தலைவர்கள் (இவர் ஒருவரே போதும் என்று நினைக்கிறேன்) நிச்சயம் வேண்டும்.

இதையெல்லாம் படித்தபின் மட்டும் திருந்தி வருந்தவா போகிறார்கள். அதென்னவோ கிடையாது. இதற்கு ஒரே வழி இவர்கள் அனைவரையும் ஓய்வெடுக்க அனுப்பி விட்டு நாம் ஆட்ச்சிக்கு வருவது தான்.

Anonymous said...

It seems that you have spent quite a bit of time thinking and organising your thoughts into words.Very well said..Even to this day such people exist who canot diffrentiate between knowledge & liguistic intrests. Unlike Tamil , English-hindi.. (or for that matter even bhojpuri or german ) is another language.Just by learning a language (other than ""THE SUGGESTED" LANGUGE) one does not become supirior or inferior to one another.
People tend to forget the basic purpose of language.History reveals that language was established (or created/invented.. whatever u call it) just for the purpose of conveying thoughts & ideas between people.In the current context (only tamil-only Kannada..etc etc) we tend to become "kinatthu thavalai"..Hope such people realise that individual and social growth in wisdom happens only when we realise the idea convyed to us though the medium of language
((applause)))

மனதின் ஓசை said...

கரிகரன்.. யார் என்ன சொன்னா என்ன?
உங்க நடுநிலைமை இங்க இருக்கர எல்லருக்கும் நல்லாவே தெரியும்..
கவலையே படாம எழுதி தள்ளிகிடே இருங்க..

அப்படியே இதே பானியில இந்த செல்வி.. சாரி.. அம்மா ஆயிரம் வருஷம் வாழனும்னு நீங்க எழுதப்போற பதிவ பத்தியும் மத்தவங்களுக்கும் சொல்லிடுங்களேன்..

Hariharan # 03985177737685368452 said...

வாருங்கள் தீபா,


//People tend to forget the basic purpose of language.History reveals that language was established (or created/invented.. whatever u call it) just for the purpose of conveying thoughts & ideas between people.In the current context (only tamil-only Kannada..etc etc) we tend to become "kinatthu thavalai"..//

இது ஒரு உணர்வு பிஸினஸாக சில அரசியல் கல(ழ)க இயக்கங்களால் அவர்கள் பிழைப்பு வாதத்திற்காகத் தமிழ்மொழி ஆக்கப்பட்டிருக்கிறது.

Hariharan # 03985177737685368452 said...

வாருங்கள் மனதின் ஓசை,

//கரிகரன்.. யார் என்ன சொன்னா என்ன?
உங்க நடுநிலைமை இங்க இருக்கர எல்லருக்கும் நல்லாவே தெரியும்..
கவலையே படாம எழுதி தள்ளிகிடே இருங்க..//

மொதல்ல பெரிய நன்றி காலையிலே நல்ல சிரிக்கவச்சதுக்கு. ஓசைப்படாமல் நீங்க பெரிய நகைச்சுவை உணர்வுள்ளவர்ன்னு உணர்த்தியிருக்கின்றீர்கள் மனதின் ஓசை!

ஹரிஹரனை கரிகரன் என்று சிரமப்பட்டு விளித்து தங்கள் தலைமை கருணாநிதி போன்றே தமிழ்ப்பற்றை உணர்த்தியிருக்கும் நீங்கள் சன் டி.வியை ஞாயிறு தொலைக்காட்சி, கேடிவியை க தொலைக்காட்சி, சன் மீஜிக்கை ஞாயிறு இசைத் தொலைக்காட்சி என்று விளிக்கின்றீர்களா என்று சிரிக்காமல் உங்கள் மனதின் ஓசை என்ன சொல்கிறது என்று கேட்டுக்கொள்ளுங்கள்!

கருணாநிதிக்கு மாறன் மனச்சாட்சியான மாதிரி உங்கள் மனச்சாட்சி கருணாநிதியாக இருக்காது என நம்ப முடியவில்லை! :-)))

//அப்படியே இதே பானியில இந்த செல்வி.. சாரி.. அம்மா ஆயிரம் வருஷம் வாழனும்னு நீங்க எழுதப்போற பதிவ பத்தியும் மத்தவங்களுக்கும் சொல்லிடுங்களேன்..//

அது எப்படிங்க கருணாநிதியை விமர்சனம் செஞ்சா உடனே ஜெ.அம்மாவோட ஆளாயிடணுமா என்ன? இதைத்தாண்டி வாங்கசார்! நல்லதுக்கு நாம எல்லாம் சேர்ந்து யோசிக்கலாம்! அப்ப வாணும் விடிவு வரட்டும் தமிழகத்துக்கு!

மனதின் ஓசை said...

பரவாயில்லயே.. பின்னுட்டம் போட்டு 1 1/2 நாள்லயே publish பன்னிட்டீங்க போல..வெரிகுட்..

//அது எப்படிங்க கருணாநிதியை விமர்சனம் செஞ்சா உடனே ஜெ.அம்மாவோட ஆளாயிடணுமா என்ன? //

ஏனுங்க? நான் உங்கள ஜெ.அம்மாவோட ஆள்ன்னு சொன்னேனா? நீங்கதான் //தங்கள் தலைமை கருணாநிதி // ன்னு சொல்லி நான் கருனநிதி ஆள்னு சொல்றீங்க.. அது எப்படின்னு சொல்றீங்களா?


சரி.. அரசியல் பத்தி பேசறீங்க. ஒரு தலையா எழுதாம அம்மா பத்தியும் கூடவே எழுதி இருந்தா நான் பின்னுட்டம் போட்டே இருக்க மாட்டேன். ஒரு தலையா எழுதியது தவறு என்பதைதான் அப்படி சொன்னேன்.. ஒருவேளை ஜெ பத்தி அப்புரம் எழுதுவீங்களொன்னு கெட்டேன். உடனே எனக்கு கருனாநிதி ஆள்னு பட்டம் கொடுத்துட்டீங்க. சிரிப்புதான் வருது உங்கள பாத்து..
என்னவோ போங்க..

எனக்கு உங்கள் பதிவில் கருனநிதியின் மீது இருக்கும் காழ்ப்புனர்வுதான் தெரிகிறதே ஒழிய வெறு எதுவும் தெரியவில்லை.. தமிழ்நாட்டுக்கு நல்லது செய்ய எழுதறேன் அதுஇதுன்னு சப்பகட்டு கட்டாதீங்க.. கேவலமா இருக்கு. ரெட்டவேஷம் போடாம தைரியமா பேசுங்க...

//இதைத்தாண்டி வாங்கசார்!//

சார்.. நாங்க எல்லாம் எப்பவோ தாண்டியாச்சு.. தாண்டி வர வேண்டியது நீங்கதான்.

// நல்லதுக்கு நாம எல்லாம் சேர்ந்து யோசிக்கலாம்! அப்ப வாணும் விடிவு வரட்டும் தமிழகத்துக்கு! //

எல்லரும் சேந்து நல்லதா என்ன யோசிச்சீங்கன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?

Hariharan # 03985177737685368452 said...

மனதின் ஓசை,

உங்க அலப்பற தாங்க முடியலைங்க!
நான் பார்த்தவுடனேயே உங்க பின்னூட்டத்தை பப்ளிஷ் பண்ணிட்டேனே!

//சார்.. நாங்க எல்லாம் எப்பவோ தாண்டியாச்சு.. தாண்டி வர வேண்டியது நீங்கதான்//

எதை நீங்க தாண்டியாச்சு எதை நாங்க தாண்டணும்.

//எனக்கு உங்கள் பதிவில் கருனநிதியின் மீது இருக்கும் காழ்ப்புனர்வுதான் தெரிகிறதே ஒழிய வெறு எதுவும் தெரியவில்லை.. தமிழ்நாட்டுக்கு நல்லது செய்ய எழுதறேன் அதுஇதுன்னு சப்பகட்டு கட்டாதீங்க.. கேவலமா இருக்கு. ரெட்டவேஷம் போடாம தைரியமா பேசுங்க... //

நான் தைரியமாத்தான் ஆட்டோவரும்னு தெரிஞ்சும் எழுதறேன். கருணாநிதியின் செயல்பாடுகளில் கடும் அதிருப்தின்னு சொல்லலாம். காழ்ப்புணர்வெல்லாம் அவசியமில்லை எனக்கு!

//ஜெ பத்தி அப்புரம் எழுதுவீங்களொன்னு கெட்டேன். உடனே எனக்கு கருனாநிதி ஆள்னு பட்டம் கொடுத்துட்டீங்க. சிரிப்புதான் வருது உங்கள பாத்து..
என்னவோ போங்க..//

எப்போ கேட்டீங்க? கேக்க நெனச்சிருகீங்க மறந்துட்டு கேட்டதா சொல்லியிருக்கீங்க. இப்ப எனக்கு உங்களப் பாத்து சிரிப்பு வரலை சார்.


//// நல்லதுக்கு நாம எல்லாம் சேர்ந்து யோசிக்கலாம்! அப்ப வாணும் விடிவு வரட்டும் தமிழகத்துக்கு! //

எல்லரும் சேந்து நல்லதா என்ன யோசிச்சீங்கன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா? //

என்னத்த யோசிச்சு இப்படி எழுதியிருகீங்க?

ஒரு நேரத்துல ஒண்ணு எடுத்து எழுதலாமேன்னு முதல்ல திமுகவின் கருணாநிதியைத் தேர்வு செய்தேன்.

அதிமுகன்னா எம்.ஜி.ஆர், ஜெ.ன்னு கூடுதலா யோசிக்கணும் பதிவெழுதலாம் இவங்களையும் அடுத்து!

மனதின் ஓசை said...

அலப்பர பன்றது எல்லாம் எனக்கு தெரியாதுங்க. பின்னுட்டம் பொட்டுட்டு அடுத்த நாள் பாத்தேன்... என் பின்னுட்டம் அதுவரை வரவில்லை. உண்மையா இல்லயான்னு உங்களூக்கு தெரியும். சரி விடுங்க..

என்ன எப்படி கருனாநிதி ஆள்னு சொன்னிங்கன்னு கெட்டேன்.. எத வச்சு சொன்னிங்க?

//எதை நீங்க தாண்டியாச்சு எதை நாங்க தாண்டணும்.//

அது நீங்க சொன்னதுதானே.. சரி. சொல்றேன்.. ஏதவது ஒன்னு சொன்ன அவன் ஆள் இவன் ஆள்னு பச்சைகுத்துவதை விட்டு வெளிய வர சொன்னிங்க.. வெளிய வர வேண்டியது நீங்கதான்னு சொன்னேன்.. ஏன் சொன்னென்னு மறுபடியும் கேக்காதீங்க.. ப்ளிஸ்...

//நான் தைரியமாத்தான் ஆட்டோவரும்னு தெரிஞ்சும் எழுதறேன்.//

நான் அத சொல்லலன்னு உங்களுக்கு நல்லவே தெரியும். திரும்ப திரும்ப என்னால சொல்ல முடியல.. என் பின்னுட்டத்த படிச்சி பாருங்க..
சாம்பிலுக்கு .ரெட்டவேஷம் போடாம தைரியமா பேசுங்க...

//என்னத்த யோசிச்சு இப்படி எழுதியிருகீங்க?//

தெளிவாதானே கெட்டு இருக்கேன்??
புரியலயா??????

//ஒரு நேரத்துல ஒண்ணு எடுத்து எழுதலாமேன்னு முதல்ல திமுகவின் கருணாநிதியைத் தேர்வு செய்தேன்.

அதிமுகன்னா எம்.ஜி.ஆர், ஜெ.ன்னு கூடுதலா யோசிக்கணும் பதிவெழுதலாம் இவங்களையும் அடுத்து!//

இது உண்மைன்னா நிஜமாவே எனக்கு சந்தோஷம்தான்.. உங்க அடுத்த பதிவ பார்த்திட்டு பதில் சொல்றேன்.

Hariharan # 03985177737685368452 said...

மனதின் ஓசை,

பின்னூட்டம் வியாழன் மதியத்திலிருந்து சனிகாலை வரை வரவில்லை எனில் அது குவைத்துக்கு வார விடுமுறை என்பதே!

மற்றபடி மாற்றுக்கருத்தை வார்த்தைகளில் தனிமனித,ஆபாச தாக்குதல் இல்லை எனில் தடை செய்வதில்லை நான்!

சரிங்க சார் இனி பரஸ்பரம் பச்சை குத்திக்கொள்ளவேண்டாம்!

அதிமுக ஜெ. பத்தியும் கண்டிப்பா எழுதுவேன் சார். அடுத்தபதிவிலேயே என்று இல்லை.

அடுத்த ஆட்டோவுக்கும் தயாராக கொஞ்ச அவகாசம் தாங்க சார்!