Thursday, February 28, 2008

(189) சுஜாதா எனும் வரலாற்று மைல்கல்!

சுஜாதா காலமானார் என்ற செய்தி அறிந்தவுடன் என் மனம் கனத்து வெறுமையானது.

சுஜாதாவின் பாசாங்கு குறைவான சாமானியனுக்குப் புரிகிற மாதிரியான நாடகத்தனம் இல்லாத அவரது தமிழ் எழுத்து அவருடன் வாசகனுக்கு ஒரு நெருங்கிய மானசீகமான நட்பை, உறவை, இணைப்பை ஏற்படுத்துகிறது.

சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் போன்ற அனுபவப்பகிர்வு எழுத்து அவரை ஓரளவுக்கு ஒவ்வொரு வாசகனும் தனிப்பட்டு அறிந்து கொண்ட நிறைவைத் தந்த உபயோகமான வழிகாட்டுதல் எழுத்து.

சுஜாதாவின் எழுத்து இரண்டு தலைமுறையையும் தாண்டி எளிமையான வெகுஜன சாமனியர்களை விரைந்து கவர்ந்திழுத்தது.

பெரும்பாலும் பொறியியல் படிப்பு, பெரிய நிறுவனத்தில் நல்ல உயர்ந்த வேலை என்று வசதியும் வாய்ப்பும் கிடைத்தால் முழுமையான தமிழில் எழுதுவது, பேசுவதை தவிர்க்கும் நமது சமூகத்தில் பொறியாளர்,விஞ்ஞானி, பெரிய நிறுவனத்தின் டைரக்டர் என்று வாய்ப்புக்கள் கிடைக்கப்பெற்றும் எளிமையாக தமிழில் அளவளாவி, தன் தமிழ் எழுத்துக்களால் வெகுஜனத்தைக் கட்டிப்போட்ட திரு. சுஜாதாவின் மீதான மரியாதை பன்மடங்கு அதிகரிக்கிறது.

2000-ல் இங்கே குவைத்தில் "தமிழ் பொறியாளர்கள் அமைப்பு"(Tamil Engineers Forum-TEF) துவக்க விழாவில் கலந்து கொண்டு தமிழ் பொறியாளர்கள் அமைப்பு விழாவில் தமிழில் பேசாவிட்டால் சாப்பாடு கிடைக்காது என்று மிக எளிமையாக பேச்சைத் துவங்கினார். விழா முடிந்து இரவு உணவின் போது கையில் உணவுத்தட்டை ஏந்தியபடி மிக சகஜமாக அளவளாவிய எளிமையை வெளிப்படுத்திய அனுபவத்தை நினைவு கூர்கிறேன்.


சுஜாதா அவரது அறிவியல், கணினி விஞ்ஞானம், கதை, கவிதை, கட்டுரை, சினிமா, பொது அறிவு என்று தமிழில் அவரால் எழுத முடிந்த அவரது பன்முகத் திறன் அவருக்கு வெகுஜன சாமானிய மக்களால் தனித்து தனக்கென்று சாம்ராஜ்ஜியம் அமைக்க முடிந்ததற்கு காரணம்.

சுஜாதாவின் எழுத்துக்கு இருந்த வரவேற்பை அவர் வீட்டு சலவைத்துணிக் கணக்கை வாராந்திர பத்திரிக்கை வெளியிட்டதில் அறிந்து கொள்ள முடிந்தது. அப்படித் தனக்கு இருந்த வெகுஜன ஆதரவை உணர்ந்து பொறுப்பாக அவரது தமிழ் எழுத்தில் கணிணி, அறிவியல் பதங்கள் என்று தமிழை செம்மொழி ஆக்கியதில் தனது பணியைச் செய்தவர்.

சுஜாதா மிக எளிமையாக்கிய திருக்குறளை படிக்கும் போது சுஜாதா பொறியாளராக, விஞ்ஞானியாக தமிழை மீட்டெடுத்து மீண்டும் வெகுஜன புழக்கத்தில் எடுத்துவருவதில் அவருக்கான பங்களிப்பை செவ்வனே செய்தவர்.

சுஜாதாவை பாகுபாடு இல்லாமல் வெகுஜனங்களைக் கவர்ந்த ஒரு நன்கு அறியப்பட்ட தமிழ் ஆசானாகவே உணர்கிறேன். பரந்துபட்டு தனக்குக்கிடைத்த வாழ்க்கையினை கட்டுரைகளாக்கிய அனுபவப்பகிர்வின் மூலம் வெகுஜனங்களுக்குக் கிடைத்த வழிகாட்டியாகவும் உணர்கிறேன்.

ஒரு தமிழ் ஆசானை, ஒரு வழிகாட்டியை இழந்த இரட்டை சோகம்!

சுஜாதா என்ற ஒரு தமிழ் எழுத்தாளன் தன் மறைவால் இத்தனைக்கு இழப்பாக உணரவைத்திருக்கிறான்!

சுஜாதா ஒரு வரலாற்று மைல்கல்.


வெறுமையை உணரும் சுஜாதாவின் வாசகனாக,

ஹரிஹரன்

Monday, February 11, 2008

(188) சுய பரிமாறல் பிணங்களினூடே நான்

சென்னை மாதிரி பெரு நகரமானாலும், கிராமமானாலும் மனித உடல் எரியூட்டப்படும் இடம் சுடுகாடு! பிணமாகிவிட்ட மனித உடல் சுடுகாட்டில் எரிக்கப்படுவது விறகினாலா அல்லது மின்சாராத்தாலா என்பது வேண்டுமானால் வேறுபடலாம். உடல் மனித மிருகத்தினுடையதாக இருப்பின்! சுடுகாட்டில் பிணத்தை எரியூட்டும் நபர் வெட்டியான்!

பிணம் எரிக்கப்படும் ஒரு சுடுகாட்டுக்கு வார இறுதியில் செல்லவேண்டும் என்று எந்த மனிதனும் விரும்புவதில்லை!

பிணம் எரிக்கப்படும் சுடுகாடுகளுக்கு நட்சத்திர அந்தஸ்து என்று தந்து மனிதன் வார இறுதி மற்றும் கொண்டாட்ட நாட்களைக் கொண்டாடுவதில்லை.

ஏனெனில் உயிரிழந்து பிணமான நிலையில் சுடுகாட்டுக்கு எடுத்து வரப்படுவது முற்றிலும் தன்னை ஒத்த உயிரினம் என்பதால்!

ஆனால் உயிருள்ள போது மனிதன் இதர பிராணிகளுக்குச் செய்யும் கொடுமைகளில் கொடூரமானது ஐந்து நட்சத்திர ஸ்டார் ஹோட்டல்கள் முதல் தட்டேந்தும் தள்ளுவண்டி உணவகம் வரை தினசரியாகக் காணப்படுவது!

ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அலுவலக விஷயமாக சுயபரிமாறல் பஃபே லன்ச் ஆன் அல்லது டின்னர் என்றாலே பல்வேறு உயிரனங்கள் பிணங்களாக்கப்பட்டு பிணவாடை நிறைந்த அந்த நிகழ்வு என்னை வேறு தளத்தில் இட்டுச்செல்லும்.


தண்ணீரில் நீந்தும் மீனைப் பிணமாக்கிக் குடல்நீக்கிக் கொதிக்கும் எண்ணைய்ச் சட்டியில் போட்டு எடுத்து அடுக்கிவைக்கப்பட்டவை ஒருபுறம்!

ம்மே...ம்மே என்று நியுஸிலாந்தில் பிறந்து பாலைவன குவைத்துக்கு கப்பலில் பயணித்து பாலைவனத்தில் பட்டியில் அடைக்கப்பட்டு ஒரு நல்ல நாளில் "ஹலால்"முறைப்படி கொலை செய்யப்பட்டு Lamb Stewவாகி விட்ட ஆட்டுக்குட்டியை நிரப்பிய சுடுசட்டி இன்னொருபுறம்!

தான் வாழமுடிந்தவரையில் எந்த ஒரு சுடுசொல்லும் பேசியிருக்கமுடியாத வாயில்லா ஜீவனான காளையின் நாக்கு துண்டிக்கப்பட்டு Ox tongue என்று சிறப்பு உணவாக ஒருபுறம்!

மெக்கானிக்கல்,குவார்ட்ஸ், கடிகாரம் என்று காலம் உணர்திடும் கருவிகள் வருமுன்னே, இருள் கவிந்த அதிகாலையில் வெயில் கொண்டு விழும் நிழலால் காலம் உணர்த்திய ஆதவனைப்போல் மனிதனுக்கு அவனது பொக்கிஷமான காலம் தூக்கத்தில் விரயமாகாமல் பல்வேறு ஆக்கமான காரியங்களுக்கு உதவிட கொக்கரக்கோ என்று கூவியும்... தொடைதட்டி சவால் ஏதும் விடாமல் பக்..பக்..பக் என்றபடிக்கு இருந்த சேவக்கோழிகள் தொடையறுக்கப்பட்டு வறுக்கப்பட்ட Leg Pieces அடுக்கப்பட்ட தட்டு இன்னொருபுறம்.

ஆடு, மாடு, கோழி, மீன், நண்டு, இறால் இதர உயிரினங்களின் நெஞ்செலும்பு, மூளை, தலைக்கறி, ஆட்டுக்கால்சூப்பு, குடல்குழம்பு, ஈரல், இரத்தப்பொறியல்-ன்னு மனிதன் மிருகங்களைப் பிணமாக்கி, அதைத்துண்டுகளாக்கி அதை நீராவியில் வேகவைத்தும், நேரடியாக நெருப்பில் வாட்டியும், எண்ணையில் பொரித்தும் என்று செய்யும் வெகுபிஸியான ஹைடெக் வெட்டியான்!

வெந்த அரிசிக்குள்ளே புதைக்கப்பட்ட வேகவைத்த பிராணியின் பிணத்தை பிரியாணி என்று மென்று தின்று கொண்டாடுகிறான்!

கரி நெருப்பில் பாதி எரிக்கப்பட்ட பிணத்தை பார்பிக்யு என்று பாராட்டுகிறான்!

ஐந்து நட்சத்திர Buffet உணவகக் காட்சி என்னை எப்போதும் நிலைகுலைய வைக்கும்! சுய பரிமாறல் செய்யப்படும் பல்வேறு வகைப் பிணங்களினூடே, மீன், நண்டு, இறால், ஆட்டுக்குட்டி சதை, மாட்டிறைச்சி எனப் பலவாக அடிக்கும் பிணவாசனைக்கு மத்தியில் மனம் முற்றுலும் ஒடுங்கிய நிலையில் ப்ளைன் ரைஸ் + யோகர்ட் (தயிர்) உண்ணும் யோகியாகி யோசிக்க வைக்கும்.

கொல்லப்பட்டு உண்ணப்படுவது நம்மை மாதிரியான அதே வகை உயிரினம் எனில் மட்டுமே நம்மால் கொடுமையை முழுதும் உணரமுடியும்!

நம்மில் வலிவானவன் நம்மை அடிமைப்படுத்தி வளர்த்து பின்பு நம்மில் சிலரைப் பிணமாக்கி, நமது செத்த உடலை மூளை, குடல், நாக்கு, சதை, நெஞ்செலும்பு, பிக் லெக் பீஸ், ஈரல் என்று ஈவு இரக்கம் இன்றிப் பலவகைகளில் நீராவியால் வேகவைத்து, நெருப்பில் சுட்டு, எண்ணையில் பொரித்து என்று பப்பே முறையில் பல விதமாகவும், நமது தொடை எலும்பினூடே இருக்கும் திரவத்தை உறிஞ்சி ரசித்து உண்டால் எப்படி?

நம் வீட்டுக்குழந்தை மாதிரிக் கொல்லையில் பேர் வைக்கப்பட்டு வளர்ந்த பிராணியை வராத விருந்தினர் வந்தார்ன்னு தண்ணிக்குள் முக்கித் திணறடித்தும், கழுத்தைத் திருகியும், தலையைக் கொய்தும் கொன்று அதன் பிணத்தை உணவாக உண்டு மகிழ்வது...சே! என்ன ஒரு கொடூரம்!

பிணமாக்கப்பட்ட கோழியின் உடலோடு மிளகாய், மிளகு, பூண்டு என்று சேர்த்து Chilly Chicken, Pepper Chicken, Garlic Chicken... அடப்பாவிகளா அடுத்தமுறை ஷேவிங் ரேஸர் கீறல்மீதும், அடுக்களைக் காய்கறி நறுக்கிய கீறல் சிராய்ப்பின் மீதும் மிளகாய், மிளகு, பூண்டு பூசிப் பாருங்க... ஊண் செய்து உண்ணும் பெருங்கொடூரம் உறைக்கும்!

இதிலே நவீன உரிமைக்குரலாக இந்த பண்டிகைக்கு ஒட்டகத்தைத் தான் அறுத்துப் பிணமாக்கி உண்டு களிப்போம் என்று தான் வாழும் பகுதிக்குச் சம்பந்தமில்லாத ஒரு பிராணியைக் கொன்று பிரியாணியாக்கி உண்பது தங்கள் உரிமைக்குரல் என்று அடிமைத்தனம் நிரம்பிய ஒட்டக வெட்டியானாக விரும்பும் பாலைவன நம்பிக்கையாளர்கள்!

இதிலே கழுத்தை அறுத்துக் கொலை செய்வதில் கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று பேச்சு!

தன் இருப்பை, பஞ்சபூதங்களை உணர்ந்து கொள்ளும் "கான்ஷியஸ்னஸ்" உள்ள, இதர சக பிராணிகளின் உயிரை எடுத்து பிணமாக்கி உணவாக்குவது இன்னொரு பிராணியான சிந்திக்க முடிந்த மனிதனுக்குள்ள உரிமையா? நிச்சயமாக இல்லை! முற்றிலும் இயற்கை ஸ்வரம் பிசகிய கொலை வெறி ஏறிய அசுரம்!


Cause and Effect நியதிப்படி இன்றைக்கு ப்ரைட்ய் லெக் பீஸ் , சிக்கன் 65, சிக்கன் பிரியாணி என்று ஊண் உண்ணும் பார்ட்டிகள் எல்லாம் பிறப்பு இறப்பு சங்கிலியில் அடுத்ததாக கொத்துக் கொத்தாக கோழிகளாகப் பிறந்து பறவைக்காய்ச்சல் என்று அறுபட்டு பிறப்பு நீக்கவேண்டி வரும்! After all Every Effect has to have a Cause!


பிராணிகளைக்கொலை செய்து உண்ணும் செயல்களின் விளைவுகள் அனைத்தும் தனக்கே திரும்பவரும்.

நான் மறை வேதங்கள் மற்றும் தமிழ்மறை சொன்ன வள்ளுவர் முதல் வள்ளலார் வரை ஆன்றோர் பெருமக்கள் அனைவரும் மனிதர்களை அறிவுறுத்தும் கோட்பாடு கொல்லாமை!

விலங்குகள் போல் இதர பிராணிகளின் பிணந்தின்னியாக மனிதன் வாழவேண்டிய கட்டாயம் இல்லை!

பகுத்தறிந்து கொல்லாமைக் கோட்பாடு பேணி வாழுங்கள்!

அன்புடன்,

ஹரிஹரன்

(187) அபசகுனம் பார்த்தல்

இன்னார் முகத்தில இன்னிக்கு முழிச்சேன் நாளே நாசமாயிடுச்சு...என்று சகுனம் பார்ப்பது எனும் வழக்கம் சகட்டுமேனிக்கு நகரம் கிராமம் என்று பாகுபேதம் இல்லாமல் மக்களிடையே, ஆள்வோரிடையே பல நூறு ஆண்டுகளாக நீண்ட காலமாக இருக்கிறது.

சின்னக் கதை பார்க்கலாம்.

ஒரு அரசன் வேட்டையாட காட்டுக்குக் கிளம்பிச்செல்கிறான். செல்லும் வழியில் முகவெட்டு மோசமான மனிதன் எதிர்ப்பட்டு வருகிறான். காட்டில் வேட்டையாடும் போது குதிரை மீது இருந்து கீழே விழுந்து அரசன் காயமடைகிறான்.

காயம் பட்டது அரசன் அல்லவா? காலையில் தான் வேட்டைக்குச் சென்ற வழியில் எதிர்ப்பட்ட முகவெட்டு சரியில்லாத மனிதனைத் தேடி விசாரணைக்கு அழைத்து வரும்படி காவலர்களுக்கு அரசாணை பறக்கிறது!

முகவெட்டு சரியில்லாத நபர் அரசவைக்கு கொணரப்படுகிறார்!
வேட்டையில் அரசன் குதிரையிலிருந்து கீழே விழ, காயம்பட காரணமாக முகவெட்டு சரியில்லாத அந்நபர் எதிரே வந்த சகுனமே என்று அரசன் கருதியதால் அம்மாதிரி அபசகுனநிலை எதிர்காலத்தில் தனக்கு நேர்வதைத் தடுக்க அந்நபருக்கு மரண தண்டனை வழங்குகிறான் அரசன்.

அரசாணைப்படி கொலைக்களத்திற்குக் காவலர்களால் இட்டுச்செல்லப்படுகிறான் முகவெட்டு சரியில்லாத மனிதன். மரண தண்டனை நிறைவேற்றப்படுமுன்பாக அவனது இறுதி ஆசை கேட்கப்படுகிறது.

தனக்கு ஏன் இந்த மரண தண்டனை என்பதை முழுவதும் விளங்கிக்கொள்ள முடியாத முகவெட்டு சரியில்லாத நபர் அரசனைக் காண விரும்புவதை இறுதி ஆசையாகச் சொல்கிறான்.

இறுதி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு அரசனை சந்திக்க அழைத்துச்செல்கிறார்கள். இருவருக்கும் இடையே திரையிடப்பட்டு தன்னை ஏன் காண விரும்பினாய் என்று அரசன் வினவுகிறான்.

முகவெட்டு சரியில்லாத நபர் அரசனிடம் ஒரு தவறும் செய்யாத தனக்கு ஏன் என்கிறான். பதிலளிக்கும் அரசன் தான் வேட்டையின் போது குதிரையில் இருந்து கீழே விழுந்து காயம்பட்டது உன் முகத்தை எதிரே பார்த்த சகுனத்தால் தான் என்கிறான்.

மரண தண்டனை நபர் அரசே என்னைப் பார்த்ததால் தங்களுக்கு சிறு காயம் தான். என்னைப் பாருங்கள் உங்கள் முகத்தை பார்த்ததன் பலனாக மரண தண்டனைக்கு உள்ளாகிவிட்டேன்.


நரி மூஞ்சியில் முழிச்சா நல்லது... பூனை குறுக்கே ஓடினால் காரியத்தடை என்று மிருகங்கள் உலகத்திலும் நுழைவது அக்மார்க் அத்துமீறல்!

அபசகுனம் என்று அடுத்த நபர் மீதும், பரிகாரங்களின் மீதும் தனது பலகீனத்தை மறைப்பது மூடத்தனம்.

அபசகுன எபஃக்ட் மேம்படுத்திக்கொள்ள நிரந்தர மஞ்சள் துண்டு / பச்சை ஆடைன்னு பக்குவமா இருப்பது பகுத்தறிவான்னெல்லாம் ஆராய்ந்து தனிநபர் தாக்குதல் கேள்வி ஏதும் கேக்கக்கூடாது! :-))

அன்புடன்,

ஹரிஹரன்

(186) காதல்....ஐ லவ் யூ ப்ரோபோஸல்... பின் விளைவுகள்!

காதல்..காதல்..காதல்-பாகம்-1

காதல்..காதல்..காதல்-பாகம்-2

காதல்..காதல்..காதல்-பாகம்-3

பிப்ரவரி 14 வருது. முன்னெச்செரிக்கையா இருந்துக்குங்க! பல்லு போனவன் ப்ளூரைட் ஜெல் பேஸ்ட் விற்ற கதையாக இது:-))

என்னிடம் போட்டு வாங்கிய என் வாயாலேயே சொல்லிய விபரங்களை வைத்து எனக்குக் காதல் வியூகம் அமைக்க, எங்கே நான் பயத்தில் காதலைச் சொல்லுமுன் உளறி, சொதப்பிவிடுவேன் என்பதால், என் காதல் அறிவிப்பை ஆடியோ காசட்டில் பதிந்து சொல்லும்படி எனக்குத் தன்னார்வ காதல் டைரடக்கராகிய நண்பன் சைதாப்பேட்டை டி.ராஜேந்தர் என்னை இயக்கி அவன் திறமையை சோதித்துக் கொண்டிருந்தான். What to say? I was letting him to shoot from my shoulders??? :-)))

But I must confess, those were the MOST happiest, fun& laughter filled, high-energy days of my life!


நான் வேணாம் என்றாலும் அவனுக்கு இந்த டைரக்டர் போஸ்ட் மிகவும் பிடித்துப்போனது. சென்னையில் இருந்து திருச்சி வரை வேலை சம்பந்தமாக ரெண்டுபேரும் செல்லும் சந்தர்ப்பத்தை வலிய உருவாக்கிக்கொண்டு பாரத மிகுமின் நிறுவனத்தில் வேலையை அவசரமாக முடித்துக்கொண்டு மலைக்கோட்டையிலே இருந்த எனது தூரத்து மாமா வீடிருக்கும் தெருவரை வந்து தெரு முனையிலேயே அவன் டைரக்ஷனுக்குக் கிட்டிய ஒரே ஹீரோவான ஹரிஹரனின் சில பல கலவர, ரணகள முக எக்ஸ்பிரசன்கள் கண்டு கலவரமாகி, என் காதல் ஹை டிராமா கிளைமாக்ஸ் காதலைச் சொல்லிவிடாது மனசுக்குள்ளேயே முடக்கிக்கொள்ளும் முரளி -கதிர் படம் மாதிரி ஆகிவிடக்கூடது என்று என் நிழல் மாதிரி விடாது துரத்திய ஏழரையாக எனக்கு ஆரம்பமான என் ப்ராஜக்ட் காதல் தந்த ரிசல்ட் பற்றி
இந்தப்பதிவில் கொஞ்சம் சொல்லியிருக்கிறேன் :-))!

I wish I get such a wonderful, colourful days all again! This time I can SELF-direct myself SUCCESSFULLY better, as all mandatory ,strategic points can be CAREFULLY adhered to with a better (SELECTION of the)feasible Love Target!:-))


தனது காதலைத் தான் விரும்பும் பெண்ணிடம் சொல்லிவிடுவது என முடிவெடுக்கும் போது மிக முக்கியமாக "இல்லை" என நிராகரிக்கப்பட நேர்ந்தால் எப்படி ரியாக்ட் செய்வது, எதுமாதிரி எதிர்கொள்வது என்பது காதல் ப்ரொபோஸல் ப்ராஸஸில் முக்கியமான மாட்யூல்! பெரும்பாலும் காதல் ப்ரோபோஸல் செய்யும் எல்லோரும் செண்டிமெண்ட் / ஓவர் கான்பிடன்ஸால் இதற்குத் தன்னைத் தயாரிக்காமல் சாய்ஸில் விடும் விஷயம் இது! இதன் பின் விளைவுதான் தாடி, குடி, புகை, இருமல் என்கிறதெல்லாம்!

அதே மாதிரியாக பெண்களின் சாமர்த்தியமான "காதல் ப்ரொபோசல் ரிஜெக்டர்"-கள் பற்றியும் தெரிந்து வைத்திருக்கவேண்டும். முக்கியமாக காதல் கடிதம்-ப்ரொபோஸல் க்ரீட்டிங்ஸ் அம்புடன் வருபவரைச் சாய்க்கும் பிரம்மாஸ்திரமான "அண்ணா" என்று விளித்து சிதற அடிப்பது! இதுக்கும் அடங்காதவனை ஆகஸ்டட் மாதத்தில் முதல்"ராக்கி" கயிறு கட்டி சகோதரி பாசத்தை வெளிப்"படுத்திவிடுவது. இவற்றில் எதாவது ஒன்றுக்குத் தயாராக மனதைப் பக்குவப்படுத்திக்கொண்ட பின்னரே காதலைப் ப்ரொபோஸ் செய்வது நல்லது!

அதுவரையில் டைம்பாஸ் டீ-பொறை நண்பர்கள் வீரம் அற்றவன், வெட்டி.. இன்னபிற என்று ரேக்கி ஏற்றிவிடுவதற்கெல்லாம் ரெஸ்பான்ஸ் தரவேண்டாம்:-))

அடடா! அண்ணனாக நினைத்தவளிடம் கடிதம் தந்துவிட்டேனே / ILU சொல்லிப் ப்ரோபோஸ் செய்துவிட்டேனே எனும் உளவியல் கலக்கம், கழிவிரக்கம் சார்ந்த டிப்ரஷென்கள் இந்த மனத்தயாரிப்புடன் போனால் மனநோயாகக் காதல் தோல்வியின் உப விளைவாக உள்ளே வராது!


காது கேட்காமலே செவிடாக இருந்தால் கூட பரவாயில்லை... ப்ரோபோஸ் செய்த பெண் அண்ணா எனச் சொல்வதைத் தெளிவாக உள்வாங்கிப் பின்னர் காயடித்த ஆடு மாதிரி தனிமையில் புகை, குடி போன்ற பழக்கத்தின் துணையோடு 7:1 டிஜிடல் எபெக்டில் காதிலே திரும்பத்திரும்ப அந்த அண்ணாவும், சூழலும் நினைவுகளில் உறைந்ந்து போய்விடும்!

கழிவிரக்கம், இயலாமை, சோகப்பாடல்கள் இவை மிகச்சரியாக காதல் நிராகரிப்பை நினைவூட்டும்! Tend to induce a conducive climate for reclussive life! செயற்கையாக தைரியமாக இருந்து, நகைச்சுவைப்படம் பாருங்கள்! வெற்றிக்கதைகள் படியுங்கள்!

"அண்ணா" என அழைத்து பிடிக்காத / சரிப்படாது என நினைக்கும் காதலை நிராகரிப்பது ரசாபாசம் தவிக்கும் பெண்களின்உத்தி! அவ்வளவே!

தினசரி டைம் பாஸ் டீ-பொறைக்காக உள்ளுறைந்திருந்த காதல் பண்பை "ஸ்டார்ட் மீஜிக்" சொல்லி ஆரம்பிக்க ஐடியா தந்த நண்பர்கள் நிலை "நிராகரிப்பு" எனும் இக்கட்டத்திற்குப் பின்னால் பரிதாபமாகும
:-))


நிராகரிக்கப்பட்டவனுக்கு அந்தி மாலையில் சூரியன் மறைவது தன் சோகத்தினைப் பார்த்துதான் என எண்ணத்தோன்றும்! காயடிக்கப்பட்ட ஆடு மாதிரி நகரமுடியாமல் சோகம் மனதில் பாரமாக அமுக்கும்! காதல் நிராகரிக்கப்பட்டவன் நிலை நிஜமாகவே ஐயோ பாவம் தான்!

ஆறடி உயரம், ஓங்குதாக்கான உடம்பு, தினசரி காலை 6 மணிக்கு 7'0 Clock பிளேடு போட்டு ஷேவிங் செய்து மாலை 4 மணிக்கே 5'0 Clock shadow வாக தாடி, மீசை எக்ஸ்பிரஸ்வேகத்தில் வளர்கிற ஆண்மை ஹார்மோன்கள் மிககுந்த நபரையும் இந்தக் காதல் நிராகரிப்பு தூக்கம் வராத இரவுகளில் துக்கம் மேலிட்டு தலையணை நனைக்க வைக்கும்!

தான் விரும்பிய பெண்ணால் காதல் நிராகரிப்பு என்பது ஒருவனுக்கு நியூக்ளியர் பியூஷன் மாதிரியான தொடர் எதிர்விளைவுகளை, பெரும்பாலும் எதிர்மறையாக ஏற்படுத்தும். குறைவான காலத்தில் பெருவாரியான விளைவுகள் மனத்தில் ஏற்படும்!

ஒரு இளைஞன் தன் காதலை சொல்லிவிடும் செயலோடு அவனுக்குள் Latentஉறைநிலையில் அதுவரையில் இருக்கும் பெரும் மனோசக்தியானது, ஹைவோல்டேஜ் மின்சாரம் மாதிரி உடன் உருவாகித் தயார் நிலையில் இருக்கும்! தான் விரும்பிய பெண்ணால் தனது காதல் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டால் உடனே பெரு மகிழ்ச்சி, ட் ரீட், ஒரே பைக்கில் சுற்றுவது, ஒரு இளநீரில் ரெண்டு கொழாய் போட்டு உறிஞ்சுவது என்று இந்த சக்தி செலவாகிவிடுகிறது, வீட்டுக்குத் தெரிந்தால் அதை எதிர்கொள்ள இந்தச் சக்தி உருமாறி உதவுகிறது!

காதல் நிராகரிக்கப்படுகின்ற போது இளைஞனின் இந்த மனோ சக்தி, ஹைவோல்டேஜ் எனர்ஜி செலவாக வழி இல்லாமல் போகிறது. இந்த சக்தியானது உடனே வேறு உருப்படியான விஷயத்தில் முறையாகத் திருப்பி விடப்படவேண்டும்! இல்லையேல் இந்த ஹை எனர்ஜி அந்த ஆளை உருக்குலைத்துவிடும்! புகை,குடி, கஞ்சா, வெறுப்பு, பற்றற்றதனம், உலகம் தனக்கில்லை எனும் ஆதங்கம் காரணமாக தாடி மழிக்காமல், தலை சீவாமல், உடை மீது கவனம் காட்டாமல் தடம் பிறண்டு போக வழி அமைத்துத் தரும்!

ஏதாவது ஒரு நெகடிவ் இம்பாக்ட் ஏற்படுத்தியே தீரும் காதல் தோல்வி என்பது! தன் காதல் ராஜாங்கத்துக் கொடியை , காதல் மலையின் உச்சியில் நாட்டப் பயணித்த வேளையில், காதலி(??)யின் காதல் நிராகரிப்பால் ப்ரேக் பெயிலியர் ஆன வண்டியை, வாழ்க்கைப் பள்ளத்தாக்கில் பாய்ந்து உருளவிடாமல், வாழ்வனுபவச்சாலையோர மரத்தில் ஓரமாக இடித்து நிறுத்துவது மாதிரி சிறு இழப்போடு நிறுத்த முனைய வேண்டும். நான் தேர்ந்தெடுத்தது குறைந்தபட்ச(மாக எனக்குப்பட்டது) எதிர்மறை விளைவு புகைப்பு!

1992இறுதியில் ஆரம்பித்த புகைப்பழக்கம் பதிநான்கு ஆண்டுகள் கழித்து 2005ஏப்ரலில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளாகப் புகைப்பதை அகில உலக டைரக்டரான இறைவனின் அருளாலும், இறைவன் தந்த சரியாய்ச் சிந்திக்கும் பகுத்தறிவினாலும் உணர்ந்து முற்றிலுமாக நிறுத்தியும் விட்டேன்!

தாய் தந்தையர் பேச்சைக் கேட்டுக்கொண்டு அமைதியாக வாழ்ந்திருந்தால் கிடைத்திராத வாழ்வை எதிர்கொள்ளும் அனுபவம், ஒரு நிராகரிப்பை, மறுப்பை அதுதரும் தளர்ச்சியை சமாளித்து சக்தியை வெற்றி நோக்கித் திருப்பிக்கொள்ளும் லாவகம் எனக்கு கிடைக்கப்பெற்றது!

காதல்... காதல்... காதல்...காதல் போயின் நன்கு வாழ்தல்!

அடுத்த பதிவில் ப்ரொபோஸல் ரிஜெக்டர்-2 ல் Combo-வான " உங்களை எப்பவுமே அண்ணனாகத்தான் நினைச்சேன்" ஆனா நான் மிஸ்டர்----- ஐ மிகவும் விரும்புகிறேன் Can U help me? என்று உங்கள் ஒருதலைக் காதலியால் நீங்கள் காதல் தியாகியாக ஆக்கப்படும் பெருங்கொடுமை Ever green Double Shot பட்டாசு சமாளிப்புகேஷன் பற்றிப்பார்க்கலாம் :-))

அன்புடன்,

ஹரிஹரன்