Monday, February 11, 2008

(187) அபசகுனம் பார்த்தல்

இன்னார் முகத்தில இன்னிக்கு முழிச்சேன் நாளே நாசமாயிடுச்சு...என்று சகுனம் பார்ப்பது எனும் வழக்கம் சகட்டுமேனிக்கு நகரம் கிராமம் என்று பாகுபேதம் இல்லாமல் மக்களிடையே, ஆள்வோரிடையே பல நூறு ஆண்டுகளாக நீண்ட காலமாக இருக்கிறது.

சின்னக் கதை பார்க்கலாம்.

ஒரு அரசன் வேட்டையாட காட்டுக்குக் கிளம்பிச்செல்கிறான். செல்லும் வழியில் முகவெட்டு மோசமான மனிதன் எதிர்ப்பட்டு வருகிறான். காட்டில் வேட்டையாடும் போது குதிரை மீது இருந்து கீழே விழுந்து அரசன் காயமடைகிறான்.

காயம் பட்டது அரசன் அல்லவா? காலையில் தான் வேட்டைக்குச் சென்ற வழியில் எதிர்ப்பட்ட முகவெட்டு சரியில்லாத மனிதனைத் தேடி விசாரணைக்கு அழைத்து வரும்படி காவலர்களுக்கு அரசாணை பறக்கிறது!

முகவெட்டு சரியில்லாத நபர் அரசவைக்கு கொணரப்படுகிறார்!
வேட்டையில் அரசன் குதிரையிலிருந்து கீழே விழ, காயம்பட காரணமாக முகவெட்டு சரியில்லாத அந்நபர் எதிரே வந்த சகுனமே என்று அரசன் கருதியதால் அம்மாதிரி அபசகுனநிலை எதிர்காலத்தில் தனக்கு நேர்வதைத் தடுக்க அந்நபருக்கு மரண தண்டனை வழங்குகிறான் அரசன்.

அரசாணைப்படி கொலைக்களத்திற்குக் காவலர்களால் இட்டுச்செல்லப்படுகிறான் முகவெட்டு சரியில்லாத மனிதன். மரண தண்டனை நிறைவேற்றப்படுமுன்பாக அவனது இறுதி ஆசை கேட்கப்படுகிறது.

தனக்கு ஏன் இந்த மரண தண்டனை என்பதை முழுவதும் விளங்கிக்கொள்ள முடியாத முகவெட்டு சரியில்லாத நபர் அரசனைக் காண விரும்புவதை இறுதி ஆசையாகச் சொல்கிறான்.

இறுதி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு அரசனை சந்திக்க அழைத்துச்செல்கிறார்கள். இருவருக்கும் இடையே திரையிடப்பட்டு தன்னை ஏன் காண விரும்பினாய் என்று அரசன் வினவுகிறான்.

முகவெட்டு சரியில்லாத நபர் அரசனிடம் ஒரு தவறும் செய்யாத தனக்கு ஏன் என்கிறான். பதிலளிக்கும் அரசன் தான் வேட்டையின் போது குதிரையில் இருந்து கீழே விழுந்து காயம்பட்டது உன் முகத்தை எதிரே பார்த்த சகுனத்தால் தான் என்கிறான்.

மரண தண்டனை நபர் அரசே என்னைப் பார்த்ததால் தங்களுக்கு சிறு காயம் தான். என்னைப் பாருங்கள் உங்கள் முகத்தை பார்த்ததன் பலனாக மரண தண்டனைக்கு உள்ளாகிவிட்டேன்.


நரி மூஞ்சியில் முழிச்சா நல்லது... பூனை குறுக்கே ஓடினால் காரியத்தடை என்று மிருகங்கள் உலகத்திலும் நுழைவது அக்மார்க் அத்துமீறல்!

அபசகுனம் என்று அடுத்த நபர் மீதும், பரிகாரங்களின் மீதும் தனது பலகீனத்தை மறைப்பது மூடத்தனம்.

அபசகுன எபஃக்ட் மேம்படுத்திக்கொள்ள நிரந்தர மஞ்சள் துண்டு / பச்சை ஆடைன்னு பக்குவமா இருப்பது பகுத்தறிவான்னெல்லாம் ஆராய்ந்து தனிநபர் தாக்குதல் கேள்வி ஏதும் கேக்கக்கூடாது! :-))

அன்புடன்,

ஹரிஹரன்

3 comments:

Hariharan # 03985177737685368452 said...

42043

டெஸ்ட் மெசேஜ்!

ஜயராமன் said...

ஹரிஹரன் ஐயா,

அடிக்கடி தமிழ்நாட்டில் பலருக்கு கனவில் வெங்காயங்கள் வந்து அருள் வழங்குவது நல்ல சகுனமா, கெட்ட சகுனமா ஐயா?

அதற்கு ஏதாவது பரிகாரம் இருக்கிறதா?

ஜயராமன்

மங்களூர் சிவா said...

நல்லா சொல்லியிருக்கீங்க!!!

ராகுகாலம் வரதுக்குள்ள இந்த கமெண்ட் பப்ளிஸ் பண்ணுங்க
:))))))))))