(188) சுய பரிமாறல் பிணங்களினூடே நான்
சென்னை மாதிரி பெரு நகரமானாலும், கிராமமானாலும் மனித உடல் எரியூட்டப்படும் இடம் சுடுகாடு! பிணமாகிவிட்ட மனித உடல் சுடுகாட்டில் எரிக்கப்படுவது விறகினாலா அல்லது மின்சாராத்தாலா என்பது வேண்டுமானால் வேறுபடலாம். உடல் மனித மிருகத்தினுடையதாக இருப்பின்! சுடுகாட்டில் பிணத்தை எரியூட்டும் நபர் வெட்டியான்!
பிணம் எரிக்கப்படும் ஒரு சுடுகாட்டுக்கு வார இறுதியில் செல்லவேண்டும் என்று எந்த மனிதனும் விரும்புவதில்லை!
பிணம் எரிக்கப்படும் சுடுகாடுகளுக்கு நட்சத்திர அந்தஸ்து என்று தந்து மனிதன் வார இறுதி மற்றும் கொண்டாட்ட நாட்களைக் கொண்டாடுவதில்லை.
ஏனெனில் உயிரிழந்து பிணமான நிலையில் சுடுகாட்டுக்கு எடுத்து வரப்படுவது முற்றிலும் தன்னை ஒத்த உயிரினம் என்பதால்!
ஆனால் உயிருள்ள போது மனிதன் இதர பிராணிகளுக்குச் செய்யும் கொடுமைகளில் கொடூரமானது ஐந்து நட்சத்திர ஸ்டார் ஹோட்டல்கள் முதல் தட்டேந்தும் தள்ளுவண்டி உணவகம் வரை தினசரியாகக் காணப்படுவது!
ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அலுவலக விஷயமாக சுயபரிமாறல் பஃபே லன்ச் ஆன் அல்லது டின்னர் என்றாலே பல்வேறு உயிரனங்கள் பிணங்களாக்கப்பட்டு பிணவாடை நிறைந்த அந்த நிகழ்வு என்னை வேறு தளத்தில் இட்டுச்செல்லும்.
தண்ணீரில் நீந்தும் மீனைப் பிணமாக்கிக் குடல்நீக்கிக் கொதிக்கும் எண்ணைய்ச் சட்டியில் போட்டு எடுத்து அடுக்கிவைக்கப்பட்டவை ஒருபுறம்!
ம்மே...ம்மே என்று நியுஸிலாந்தில் பிறந்து பாலைவன குவைத்துக்கு கப்பலில் பயணித்து பாலைவனத்தில் பட்டியில் அடைக்கப்பட்டு ஒரு நல்ல நாளில் "ஹலால்"முறைப்படி கொலை செய்யப்பட்டு Lamb Stewவாகி விட்ட ஆட்டுக்குட்டியை நிரப்பிய சுடுசட்டி இன்னொருபுறம்!
தான் வாழமுடிந்தவரையில் எந்த ஒரு சுடுசொல்லும் பேசியிருக்கமுடியாத வாயில்லா ஜீவனான காளையின் நாக்கு துண்டிக்கப்பட்டு Ox tongue என்று சிறப்பு உணவாக ஒருபுறம்!
மெக்கானிக்கல்,குவார்ட்ஸ், கடிகாரம் என்று காலம் உணர்திடும் கருவிகள் வருமுன்னே, இருள் கவிந்த அதிகாலையில் வெயில் கொண்டு விழும் நிழலால் காலம் உணர்த்திய ஆதவனைப்போல் மனிதனுக்கு அவனது பொக்கிஷமான காலம் தூக்கத்தில் விரயமாகாமல் பல்வேறு ஆக்கமான காரியங்களுக்கு உதவிட கொக்கரக்கோ என்று கூவியும்... தொடைதட்டி சவால் ஏதும் விடாமல் பக்..பக்..பக் என்றபடிக்கு இருந்த சேவக்கோழிகள் தொடையறுக்கப்பட்டு வறுக்கப்பட்ட Leg Pieces அடுக்கப்பட்ட தட்டு இன்னொருபுறம்.
ஆடு, மாடு, கோழி, மீன், நண்டு, இறால் இதர உயிரினங்களின் நெஞ்செலும்பு, மூளை, தலைக்கறி, ஆட்டுக்கால்சூப்பு, குடல்குழம்பு, ஈரல், இரத்தப்பொறியல்-ன்னு மனிதன் மிருகங்களைப் பிணமாக்கி, அதைத்துண்டுகளாக்கி அதை நீராவியில் வேகவைத்தும், நேரடியாக நெருப்பில் வாட்டியும், எண்ணையில் பொரித்தும் என்று செய்யும் வெகுபிஸியான ஹைடெக் வெட்டியான்!
வெந்த அரிசிக்குள்ளே புதைக்கப்பட்ட வேகவைத்த பிராணியின் பிணத்தை பிரியாணி என்று மென்று தின்று கொண்டாடுகிறான்!
கரி நெருப்பில் பாதி எரிக்கப்பட்ட பிணத்தை பார்பிக்யு என்று பாராட்டுகிறான்!
ஐந்து நட்சத்திர Buffet உணவகக் காட்சி என்னை எப்போதும் நிலைகுலைய வைக்கும்! சுய பரிமாறல் செய்யப்படும் பல்வேறு வகைப் பிணங்களினூடே, மீன், நண்டு, இறால், ஆட்டுக்குட்டி சதை, மாட்டிறைச்சி எனப் பலவாக அடிக்கும் பிணவாசனைக்கு மத்தியில் மனம் முற்றுலும் ஒடுங்கிய நிலையில் ப்ளைன் ரைஸ் + யோகர்ட் (தயிர்) உண்ணும் யோகியாகி யோசிக்க வைக்கும்.
கொல்லப்பட்டு உண்ணப்படுவது நம்மை மாதிரியான அதே வகை உயிரினம் எனில் மட்டுமே நம்மால் கொடுமையை முழுதும் உணரமுடியும்!
நம்மில் வலிவானவன் நம்மை அடிமைப்படுத்தி வளர்த்து பின்பு நம்மில் சிலரைப் பிணமாக்கி, நமது செத்த உடலை மூளை, குடல், நாக்கு, சதை, நெஞ்செலும்பு, பிக் லெக் பீஸ், ஈரல் என்று ஈவு இரக்கம் இன்றிப் பலவகைகளில் நீராவியால் வேகவைத்து, நெருப்பில் சுட்டு, எண்ணையில் பொரித்து என்று பப்பே முறையில் பல விதமாகவும், நமது தொடை எலும்பினூடே இருக்கும் திரவத்தை உறிஞ்சி ரசித்து உண்டால் எப்படி?
நம் வீட்டுக்குழந்தை மாதிரிக் கொல்லையில் பேர் வைக்கப்பட்டு வளர்ந்த பிராணியை வராத விருந்தினர் வந்தார்ன்னு தண்ணிக்குள் முக்கித் திணறடித்தும், கழுத்தைத் திருகியும், தலையைக் கொய்தும் கொன்று அதன் பிணத்தை உணவாக உண்டு மகிழ்வது...சே! என்ன ஒரு கொடூரம்!
பிணமாக்கப்பட்ட கோழியின் உடலோடு மிளகாய், மிளகு, பூண்டு என்று சேர்த்து Chilly Chicken, Pepper Chicken, Garlic Chicken... அடப்பாவிகளா அடுத்தமுறை ஷேவிங் ரேஸர் கீறல்மீதும், அடுக்களைக் காய்கறி நறுக்கிய கீறல் சிராய்ப்பின் மீதும் மிளகாய், மிளகு, பூண்டு பூசிப் பாருங்க... ஊண் செய்து உண்ணும் பெருங்கொடூரம் உறைக்கும்!
இதிலே நவீன உரிமைக்குரலாக இந்த பண்டிகைக்கு ஒட்டகத்தைத் தான் அறுத்துப் பிணமாக்கி உண்டு களிப்போம் என்று தான் வாழும் பகுதிக்குச் சம்பந்தமில்லாத ஒரு பிராணியைக் கொன்று பிரியாணியாக்கி உண்பது தங்கள் உரிமைக்குரல் என்று அடிமைத்தனம் நிரம்பிய ஒட்டக வெட்டியானாக விரும்பும் பாலைவன நம்பிக்கையாளர்கள்!
இதிலே கழுத்தை அறுத்துக் கொலை செய்வதில் கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று பேச்சு!
தன் இருப்பை, பஞ்சபூதங்களை உணர்ந்து கொள்ளும் "கான்ஷியஸ்னஸ்" உள்ள, இதர சக பிராணிகளின் உயிரை எடுத்து பிணமாக்கி உணவாக்குவது இன்னொரு பிராணியான சிந்திக்க முடிந்த மனிதனுக்குள்ள உரிமையா? நிச்சயமாக இல்லை! முற்றிலும் இயற்கை ஸ்வரம் பிசகிய கொலை வெறி ஏறிய அசுரம்!
Cause and Effect நியதிப்படி இன்றைக்கு ப்ரைட்ய் லெக் பீஸ் , சிக்கன் 65, சிக்கன் பிரியாணி என்று ஊண் உண்ணும் பார்ட்டிகள் எல்லாம் பிறப்பு இறப்பு சங்கிலியில் அடுத்ததாக கொத்துக் கொத்தாக கோழிகளாகப் பிறந்து பறவைக்காய்ச்சல் என்று அறுபட்டு பிறப்பு நீக்கவேண்டி வரும்! After all Every Effect has to have a Cause!
பிராணிகளைக்கொலை செய்து உண்ணும் செயல்களின் விளைவுகள் அனைத்தும் தனக்கே திரும்பவரும்.
நான் மறை வேதங்கள் மற்றும் தமிழ்மறை சொன்ன வள்ளுவர் முதல் வள்ளலார் வரை ஆன்றோர் பெருமக்கள் அனைவரும் மனிதர்களை அறிவுறுத்தும் கோட்பாடு கொல்லாமை!
விலங்குகள் போல் இதர பிராணிகளின் பிணந்தின்னியாக மனிதன் வாழவேண்டிய கட்டாயம் இல்லை!
பகுத்தறிந்து கொல்லாமைக் கோட்பாடு பேணி வாழுங்கள்!
அன்புடன்,
ஹரிஹரன்
18 comments:
டெஸ்ட் மெசேஜ்!
ஹரிஹரன் சார்,
நல்ல பதிவு. ஆம்லேட் பற்றி ஒன்னும் சொல்லவில்லையே.
:)
பரவாயில்லை. முட்டை விலை ஏறியதற்கும், இறச்சி மீன் வகையாறாக்கள் விலை ஏறியதற்கும் காரணம் தெரியுமா ?
கோவி.கண்ணன்,
//ஆம்லேட் பற்றி ஒன்னும் சொல்லவில்லையே//
அடடா விடுபட்டுவிட்டது. சுட்டியதற்கு நன்றி
//முட்டை விலை ஏறியதற்கும், இறச்சி மீன் வகையாறாக்கள் விலை ஏறியதற்கும் காரணம் தெரியுமா ?//
பொருளாதாரத்தைப் பொய்யாக்கும் வகையில் இதற்கும் லாரியில் ஏற்றினால் நாலுபேர் கம்மியாகிற மக்கள் தொகைகொண்ட வகையாறாவினர்தான் காரணம்னு சொல்லமாட்டீங்கன்னு தெரியும்.
சரியான தகவல் இருந்து பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!
//முட்டை விலை ஏறியதற்கும், இறச்சி மீன் வகையாறாக்கள் விலை ஏறியதற்கும் காரணம் தெரியுமா ?//
எலிமெண்டரி மிஸ்டர் கண்ணன், மக்கள் தொகை பெருக்கம்தான். அவைகளை சாப்பிடும் மக்கள் குடும்ப கட்டுபாட்டை பின்பற்றாமல் வத வத என்று பெருகியதால் வந்த வினை இது. அவர்கள் பெருகிய அளவிற்கு இறைச்சி உற்பத்தி பெருகவில்லையே.
யாருமே சாப்பிடாத கறிகாய் மட்டும் விலை கம்மியாகிவிட்டதா என்ன?
http://pstlpost.blogspot.com/2008/02/blog-post_9330.html
Do you know what is the climax of this movie ?
It is related to what you have written in this post.
Man eating his lover's flesh.
Hariharan # 03985177737685368452
அவர்களுக்கு வணக்கம்.
//நம்மில் வலிவானவன் நம்மை அடிமைப்படுத்தி வளர்த்து பின்பு நம்மில் சிலரைப் பிணமாக்கி, நமது செத்த உடலை மூளை, குடல், நாக்கு, சதை, நெஞ்செலும்பு, பிக் லெக் பீஸ், ஈரல் என்று ஈவு இரக்கம் இன்றிப் பலவகைகளில் நீராவியால் வேகவைத்து, நெருப்பில் சுட்டு, எண்ணையில் பொரித்து என்று பப்பே முறையில் பல விதமாகவும், நமது தொடை எலும்பினூடே இருக்கும் திரவத்தை உறிஞ்சி ரசித்து உண்டால் எப்படி?//
க்ளோனிங் முறையில் மனிதனின் ஸ்டெம் ஸெல்கள் மூலமாக மனித உறுப்புகள் தயாரிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது. இன்னும்
ஒரு 50 முதல் 70 ஆண்டுகளில் ஸ்பேர் பார்ட்ஸ் ஆக, மனிதனின் கிட்னி, லீவர்,
இருதயம்,மூளை எனத் தயார் செய்யப்படும்போது, demand and supply படி
ஒருவேளை சப்ளை அதிகமாக ஆகிற நேரத்தில் நீங்கள் சொல்லுவது சாத்தியம்
எனவே தோன்றுகிறது.
நிற்க. இந்த சைவம் அசைவம் விஷயத்தில் நீங்கள் இவ்வளவு கோபப்படவேண்டாம் எனத்தோன்றுகிறது. வெவ்வேறு இனங்களின் பரிணாம வளர்ச்சியில் ஒரு இனத்தின் முடிவு தான் மற்றொரு இனத்தின் உணவாக இருக்கிறது. "கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்" என்றார் வள்ளுவர். உண்மைதான்.
தொழத்தான் முடியும். வேறு என்ன செய்ய முடியும்? சில தேசங்களில் பாம்பு, எலி உணவு கூட சமைக்கின்றார்களாம். கரப்பான் பூச்சியை நெய்யில் வறுத்து கடலை மாவுடன் கலந்து ஃப்ரை செய்து பக்கோடா செய்கிறார்களாம்.
'லோகோ பின்ன ருசிஹி" என்கிறது மறை. அது ஒரே ருசிக்கு ஆசைப்பட்டதானால்,அடிமைப்பட்டது என்றால், ஆபத்தாகத் தான் முடியும். ஆக, யார் யாருக்கு எது எது பிடிக்குமோ அதை அதை சாப்பிடட்டும். எங்க குலதெய்வம் கருப்புக்கு, நாங்கள்
இன்னமும் சுருட்டும், கள்ளும் தான் ( அது என்ன சாராயமோ , நான் அறியேன்)
நைவேத்தியம். சில கோவில்களில் கடாவை பலி கொடுக்கிறார்கள்.
சைவம் என்பது ஒரு லட்சியம். வ்யவஹாரிகம் ஆக முடியாது.
அது கிடக்கட்டும். அது என்ன உங்கள் பின்னால் அத்தனை நீட்டத்திற்கு ஒரு நம்பர்?
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கால்கரி சிவா.
எலிமெண்டரி எனும் தொடக்க வார்த்தையைத் தவிர்த்திருக்கலாம்.
//யாருமே சாப்பிடாத கறிகாய் //
காய்கறி நிலமை இவ்வளவுக்கு ஆகிவிட்டதா??
சாம்பார்வடை,
வருகைக்கு நன்றி!
//Man eating his lover's flesh.//
loved the Flesh ONLY! என்ன கோரம்!
வாங்க சுப்பு ரத்தினம்,
//சில தேசங்களில் பாம்பு, எலி உணவு கூட சமைக்கின்றார்களாம். கரப்பான் பூச்சியை நெய்யில் வறுத்து கடலை மாவுடன் கலந்து ஃப்ரை செய்து பக்கோடா செய்கிறார்களாம்//
மதுரை அருகே நம்மக்களின் ஒரு பகுதியினரே ஈசல் பூச்சியை வறுத்து நாட்டுச்சர்க்கரையுடன் கலந்து ஸ்நாக் சாப்பிடுவதைக் கண்டிருக்கிறேன்!
//அது கிடக்கட்டும். அது என்ன உங்கள் பின்னால் அத்தனை நீட்டத்திற்கு ஒரு நம்பர்?//
நீங்கள் புதியவரா தமிழ் வலைப்பதிவுக்கு?
எனது பெயர் களவாடல்/மோசடி செய்யப்பட்டு ஆபாசமாக - ஆபத்தான கருத்துக்களை செய்யப்பட்டது. எனது ப்ளாக் எண் சேர்த்து அடையாளம் மேம்படுத்தும் நிலை வாய்க்கப்பெற்றது. தற்போது இப்படியான அடையாளத் திருட்டு மற்றும் போலித் தொல்லை இல்லை என நினைக்கிறேன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நல்ல பதிவு.
சாப்பிட்டு வந்தவுடன் படித்தேன் வயத்தை குமட்டுகிறது இத்தனைக்கும் நான் சாப்பிட்டது சைவம்தான்.
//
கோவி.கண்ணன் said...
ஹரிஹரன் சார்,
நல்ல பதிவு. ஆம்லேட் பற்றி ஒன்னும் சொல்லவில்லையே.
:)
//
ஆம்லெட் கேட்டா பொண்டாட்டி போட்டு தள்ளீடுவாங்கிற குசும்பன் பதிவு ஹரிஹரன் ஐயா படிச்சிருப்பார் போல அதனாலதான் ஒண்ணும் சொல்லலை :(
அசைவம் சாப்பிடுபவர்களின் மனதைப் புண்படுத்தும்விதமாக இருக்கிறது இந்தப் பதிவு. நிற்க.
பச்சைக் காய்கறிகளும் ஓர் உயிரினமே. அதை மட்டும் கொத்துக் கொத்தா அவிச்சி சாப்பிடலாமா. அந்த மரமும், செடியும் கண்ணீர் விடுமே.
இந்த யாக குண்டத்தில் போடப்படும் மிருகத்திற்கு சொர்க்கமாமே.
அசைவ உணவாகும் மிருகங்கள் மேல் இருக்கும், பச்சாதாபம், மற்றைய உயிர்கள் வந்துட்டா, லோகம் ரொம்ப நல்ல இடமாகிடும்.
கால் கரி(றி) = லெக் பீஸ்...? ;)
புரியல்ல. தயவு செய்து விளக்கவும்
நான் மறை வேதங்கள் மற்றும் தமிழ்மறை சொன்ன வள்ளுவர் முதல் வள்ளலார் வரை ஆன்றோர் பெருமக்கள் அனைவரும் மனிதர்களை அறிவுறுத்தும் கோட்பாடு கொல்லாமை!
பகிர்வுக்கு நன்றி...
//Garlic Chicken//
recipe please :)
////Cause and Effect நியதிப்படி இன்றைக்கு ப்ரைட்ய் லெக் பீஸ் , சிக்கன் 65, சிக்கன் பிரியாணி என்று ஊண் உண்ணும் பார்ட்டிகள் எல்லாம் பிறப்பு இறப்பு சங்கிலியில் அடுத்ததாக கொத்துக் கொத்தாக கோழிகளாகப் பிறந்து பறவைக்காய்ச்சல் என்று அறுபட்டு பிறப்பு நீக்கவேண்டி வரும்! After all Every Effect has to have a Cause! /////
ஹாஹா. actually, போன ஜென்மத்துல நான் கோழியா இருந்தேன். இந்த ஜென்மத்துல பழிக்குப் பழி வாங்கறேன் ;)
circle of life தெரியுமுல்ல?
அரைகுறை ஆடையுடன் வந்த ஸ்ரேயாவின் அருகாமையில் இருக்க தமிழுணர்வுடன் ச்சுரேய்யா ஆக்கிய தலை மாதிரி இந்த ஹரிஹரனை கரிகரனாக்கிய டிபிசிடி அய்யா,
இன்ஸ்டிங்க்ட் வழி வாழும் குறைந்த கான்ஷியஸ்னஸ் படைத்த இதர விலங்குகளுக்கு நீங்கள் சொல்லும் உயிர்சுழற்சி என்பது சரி... இண்டெலக்ட் பயன்படுத்திவாழும் மேம்பட்ட கான்ஷியஸ்னஸ் அமைந்த மனிதர்கள் மீண்டும் இன்ஸ்டிங்ட் வழி உயிர்கொன்று வாழும் உயிர்சுழற்சியினின்று மேம்பட்டே ஆகவேண்டும்!
பசுவிடம் பால் கறப்பதால் அந்தப் பசு உயிரிழப்பதில்லை. எனவே அது கொலைசெயல் வகை ஆவதில்லை.
வெள்ளம் வந்தாலோ, நெருப்பு பற்றி எரிந்தாலோ, புயல் காற்று வீசினாலோ கோழி, ஆடு, மாடு ,பறவை போன்றவை அவற்றினால் ஏற்படும் தீங்கை உணரும் கான்ஷியஸ்னஸ் பெற்றிருப்பதால் மனிதனைபோன்றே வெள்ளம், நெருப்பு, புயல்காற்றில் இருந்து தத்தம் இண்டெலக்ட் பயன்படுத்தி தப்பும்.
ஆனால் தாவரங்கள் தன் இருப்பை உணராத ஜட உயிரினங்கள். கான்ஷியஸ்னஸ் / இன்ஸ்டிங்ட் / இண்டலக்ட் அற்றவை தாவரங்கள்.
ஆக்ஸிடண்ட், மதகலவர, இன்னபிற மரணங்கள் கடவுளா நடத்தினார்?? கடவுளைச் சாடுகிறீர்கள்! மனிதர்தம் ஊழ்வினையின் பலன் அது!
தொன்மையான பாரத தருமமான சனாதன தருமத்தின் உண்மையான தத்துவ உட்கூறுகளை மதிக்க வேண்டும்.
பண்டைய சனாதன தருமத்தைஏறி மிதித்துவிட்டு டிபிசிடி போன்றோர் மாக்ஸ்முல்லர் - கால்டுவெல் போன்ற வெளிநாட்டு நபர்கள் உளறியதை தெய்வவாக்காக ஏற்பார்கள்.
யாகம் , வழிபாடு, மந்திரங்கள் என்பவை தீவிர ஈடுபாட்டுடன் ஒரு குறிப்பிட்ட பலனை அடைவதைக் குறிக்கோளாக வைத்துச் செய்யப்படுபவை.
(எ.கா: கருணாநிதியை தெய்வமாக கருதி ஓயாமல் தமிழின் தமிழே, நவீன ராஜராஜனே..இன்னபிற மந்திரங்களைத் தொடர்ந்து சொல்லிச் செய்யும் கட் அவுட் யாகத்தினால் ஒரு உடன்பிறப்புக்கு வட்ட/மாவட்டமாகி திட்டங்களில் கமிஷன் அடிக்கும் பலனை கருணாநிதி எனும் தாமஸக் கடவுள் தருவது மாதிரி)
யாகம் , வழிபாடு, மந்திரங்களின் தன்மை என்பது தெரிவு செய்யும் மனிதர்களைப் பொறுத்தது. சத்வ, ரஜோ, தாமஸ குணாதிசயங்களை பிரதிபலிப்பதாகவே இருக்கும்.
தாமஸ குணாதியசத்தைப் பிரதிபலிக்கும்படியான மந்திர உச்சாடனங்கள், சாராயம், மிருகபலி வகையில் யாகம் செய்வது என்பது என்னவிதமான பலன் வேண்டிச் செய்கிறார் அந்த நபர் என்பதை பொறுத்தது.
சத்ரு சம்ஹார யாகம் என்று ஒன்று இருக்கிறது. (எதிரி அழிப்பு யாகம்)
இதன் மந்திரங்கள் அனைத்தும் புரிந்து கொண்டால் யாகம் செய்பவரின் மனதில் தயை / அன்பை அதிகரிக்கும் வகையிலான பொருள் கொண்ட தயாபாவ மந்திரங்கள்... இரண்டுமணி நேரம் அமர்ந்து, இறைவன் உதவுவான் எனும் மனக்கட்டமைப்பில் அக்னிமுன் அமர்ந்து நல்ல குணம் என்பவை இவை இவை என்று மந்திரம் ஓதிச் சொல்லக் கேட்டால் எதிரியாக நினைக்கும் நபர்களைப் பற்றி நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டு அணுகுமுறைகளில் மேம்பாடு ஏற்பட்டு மனதில் சத்ருபாவம் சம்ஹாரம் செய்யப்படுகிறது.
அதே நபர் மித்ருபாவம் மேலிடுவதால் நண்பனாகிறான்.
டிபிசிடி அய்யா நான் பதிவிட்டது கொல்லாமை எனும் தத்துவம் அனைவராலும் பேணப்படவேண்டும் என்று. நீங்கள் வழக்கமான மார்க்ஸ்முல்லர்-கால்டுவெல் ரேஞ்ச் அறிவுப்பேழையினின்று பார்ப்பனர், பன்றிக்கறின்னு ரிலீஸ் செய்கிறீர்கள்!
நேற்று சைவமா இருந்தமாதிரி என்றும் இருக்க வேண்டுகிறேன்!
//அசைவம் சாப்பிடுபவர்களின் மனதைப் புண்படுத்தும்விதமாக இருக்கிறது இந்தப் பதிவு.//
பிராணிகளின் உடலைப் புண்ணாக்கி உண்பவர்களிடையே கொல்லாமை சிந்தனையே மேம்படுத்தும் விதமாக இப்பதிவின் மையக்கருத்து அமைந்திருக்கிறது!
பறவைக்காய்ச்சல் வந்திருக்கும் இறைச்சியை உண்ணாதே ஆரோக்கியம் கெடும் எனும் அறிவிப்பைப் போன்று
"கொலைசெயல் செய்து பிராணிகளின் புண்ணை ஊண் என உண்ணாதே" எனும் பாரத பாரம்பரிய சனாதன தரும தத்துவ அறிவிப்பாக எடுத்துக்கொள்ளவும்
கொஞ்ச நாள் இந்த பக்கம் வராமல் போய்விட்டேன்...
இவ்வளவு நடந்திருக்கா?
நல்ல பதிவு.
நல்ல பதிவு
வாழ்த்துக்கள் நண்பரே!!
Post a Comment