Thursday, November 30, 2006

(69) ஈவெரா.சாமியுடன் குவைத்தில் ஒரு நேரடி சந்திப்பு-பகுதி1

ஹரிஹரனுக்கும் பகுத்தறிவுப் பகலவன் ஈவெரா.சாமிக்கும் இடையே நடந்த சம்பாஷணையின் முதல் பகுதி இது: கொஞ்சம் நீளமாகிவிட்டது என்ற போதும் முழுமையாகப் படிக்கவும்:-))

குவைத்தில் அல்-பாஹஹீல் பகுதி அல்-குத் கடற்கரையில் நேற்றுமாலை தனிமையில் அமர்ந்திருந்தபோது தூரத்தில் தள்ளாட்ட நடையுடன் சற்றுக்குள்ளமான நபர் மீது சாய்ந்த்தபடி எனை நோக்கி நடந்து கொண்டிருந்தார். அருகே வரவும் விளக்கொளியில் தெரிந்தது அது நம்மூர் வெள்ளை தாடிக்கார கிழவர் பகுத்தறிவுப் பகலவன் (பகலவன் என்றபோதும் விளக்கின் ஒளியில் தான் அடையாளம் கண்டேன்) அருகே இருந்த நபர் குஷ்புமாதிரி தோற்ற அமைப்புடன் பெண்"மணி".

சரி ஈவெரா வெங்காயச்சாமி படத்துக்குக்கூட ஃபாரின் லொகேஷன்ல ஷூட்டிங்கோன்னு யோசிச்சா சாட்சாத் நம்ம பெல்லாரிமேன் பகுத்தறிவு பெரிய வெங்காய வியாபாரி ஈவெரா.சாமிதான் அதுன்னு புரிஞ்சு போச்சு!

இனி ஹரிஹரனுக்கும் ஈவெரா.சாமிக்கும் இடையே நடந்த நீநீண்ண்ட சம்பாஷணை:

ஹரி: (குஷ்புவை எட்டிப் பார்த்தபடி)நமஸ்காரம் ஈவெரா.சாமி!

ஈவெரா: என்ன பெரிய வெங்காயம் சாமி...பூதம்ன்னுட்டு..

ஹரி : (மனசுக்குள்) குவைத்துக்கு வந்தும் பெல்லாரி நினைப்பு விடலியே!
சிச்சுவேஷனுக்கு ஏத்தமாதிரி என்ன பெரிய பேரீச்சம்பழம்ன்னு சொல்லலாம்ல!
சரீரீ..இன்னிக்கு தமிழ்நாட்டுல கி. வீரமணி, அண்ணா, கருணாநிதி, குடிதாங்கின்னு
அரசியல் திரா'விட'த்துல முழுகி முத்தெடுத்தவெனெல்லாம் பகுத்தறிவு, பகுத்தறிவுன்னு
கூடி கும்மியடிக்கிற கான்சப்டை எப்படி கண்டுபிடிச்சீங்க?

ஈவெரா: என்ன பெரிய வெங்காய பகுத்தறிவு! வீரமணியா... அண்ணன்
எப்பப் போவான் திண்ணை எப்போக் காலியாகும்னு இருந்தபயதான.. அந்த
முதலியார்பய அண்ணா என்னோட "மணி"யை வைச்சுக்கச் சொன்ன ஈனபுத்திக்காரன்
தானே! (உணர்வுகள் கொந்தளிப்பில் ஈவெரா.சாமியின் உதடுகள் துடிக்கின்றன)

உண்மையில பகுத்தறிவுன்னா புண்ணாக்கைத் தின்னவனா கோயில் மாடுமாதிரி
கோபப்படாம முழுசா மூளையையும் பயன்படுத்தினா அதுதான் பகுத்தறிவு!
வெண்ணைய் அறிவை மறைக்கக்கூடாது!

ஹரி: பகுத்தறிவுப் பாசறையிலே பயின்றவன்னு கறுப்புச்சட்டைய
மாட்டிக்கிட்டு உதார்விட்டவாறேராமசாமிக்கும், குஷ்புவுக்கும் வேற வெங்காயத்துக்கும்
சிலை வைக்கிறவன் பத்தி உங்கள் கருத்து என்ன தாத்தா?


ஈவெரா: தட்டுத்தள்ளாடியபடியே வெகுண்டெழுகிறார்... யாரு தாத்தா?
உன்னோட அப்பாவோட அப்பா உனக்குத்தாத்தா... அவரோட அப்பா உன்
அப்பாவுக்குத் தாத்தா பெரிய வெங்காயம்...பெரிய வெங்காயம்...
வாட் பிக் ஆனியன்.. வாட் பிக் ஆனியன்...

பார்வையாளர் : ஜி இதர் ஆப் ப்யாஜ் பேஜ் ரஹே ஹை க்கியா? ஹமே பி தேயேகா க்யா?

ஈவெரா தொடர்கிறார்.. தாத்தாவாம் தாத்தா... பாத்தாத் தெரியலை
பக்கத்தில் இருக்கும் குஷ்பூ மாதிரி பெண்"மணி"யைக் காட்டியவாறே மிகுந்து
ஆவேசப்படுகிறார்!
தோ நீ கூட ஒத்தக்கொலையா தனீயாக் காத்துவாங்குறே... என்னைப்பார்...
நடக்கும்போது சாய்ந்துகொள்ளத் தோளும்... அமரும்போது சரிந்து கொள்ள மடியும்..
என்று இருக்கும் நானா தாத்தா... கூட இருந்த களவாணிப்பயலுக கூட யாருக்கும்
தெரியாம வச்சுக்கலாமேன்னு ஐடியா குடுத்தவனுக்கு கடுக்கா குடுத்து கட்டிட்டு ஊரறிய
வச்சு வாழ்றேன்... என்னையா தாத்தான்னு சொல்லுற...
(இல்லாத பற்களை மேலும் வன்மையாக நறநறக்கிறார்!)

ஹரி: (மனசுக்குள்) அடங்கமாட்டாரு போல! விட்டா ஊருக்குப்போய்
சுந்தர்.சிக்கு முன்னாடியே ஒரிஜினல் குஷ்புவுக்கே நூல்விட்டு சிக்கலாக்குவாராட்டம்
தெரியுதே!
(யோசித்தபடியே சற்று அமைதி காக்கிறேன்)

ஈவெரா: என்ன பெரிய வெங்காயம் கிடைச்ச தட்சிணை எண்ணிக்கையை
எண்ணுகிர பாப்பான் மாதிரி அமைதி அங்கே?


ஹரி: ஒண்ணுமில்லை மை ப்ரண்ட் ( எல்லாம் என் நேரம் கிழ போல்ட்)
நீங்க சும்மா கொக்கரக்கோ கும்மாங்கோவா இருங்க! ஓல்ட் ப்ரண்ட் நீங்க விழுந்து
புரண்டுட்டு வெளியே புரட்டா உங்க இந்தப் பெண்"மணி" சீர்திருத்தமா சிந்திச்சதா
அறிக்கை அப்பயே திருத்தமா பகுத்தரிவோட எப்படி விட்டீங்க?

ஈவெரா: உண்மையான கேரண்டீயான பகுத்தறிவு வளர உண்மை, விடுதலை, குடியரசைப்படி...

ஹரி: அட நீங்கவேற உண்மையும் விடுதலையும் உங்க "மணி"பேர்ல
வல்லத்துல கட்டுனபாலிடெக்னிக், ஆசிரியப்பயிற்சி நிறுவனங்கள்ல படிக்கிறவங்க கிட்ட
வெல்லம் மாதிரி ஆண்டுசந்தாக் காசை வாங்கிட்டு அரசு சலுகைவிலையில் தபால்ல
தள்ளிவுடுறதுக்குன்னே அச்சடிக்கிறதுதானுங்களே உண்மை? பஞ்சகல்யாணிக்கு கூட
புத்தம்புதிய காப்பியைத் தின்ன தூக்கிப்போட்டாலும் மூஞ்சைத் திருப்பிக்குது...
அதால கூட உண்மையில விடுதலையாகிற கருத்துக்களை ஜீரணம் பண்ணமுடியலையாம்!

ஈவெரா: என்ன நீ பெரிய வெங்காயம் மாதிரி எங்கிட்டயே உண்மையை
உண்மையா, விடுதலையை விடுதலை செய்யுறியா அதுவும் எங்கிட்டேயேவா...
வெங்காயம் வெங்காயம வாட் பிக் ஆனியன் ...வாட் பிக் ஆனியன்....

பார்வையாளர் : ஜி முஜே லக்தா ஹை ஆஜ் இதர் சஸ்தே மே ப்யாஜ் ஜரூர் மில் ஜாயேகா

ஹரி: பகுத்தறிவுப் பகலவன்னு உங்களை தமிழ்நாட்டுல மேடைக்கு மேடை
சொல்றாங்களே..அப்போ நீங்க "பல்பு"ன்னு அப்பவே பாசறை ஆட்களுக்கு
பாசறைப் பயிற்ச்சியின் போதே அறியத்தந்தீர்களா?

ஈவெரா: அவனுங்க கெடக்குறானுங்க பெரிய வெங்காயமூட்டைங்க...
நான் சொன்னது அசரீரின்னு பப்ளிக் அட்ரசிங் கான்சப்ட் சொல்லிய வேதத்தால
அறிவியல் பூர்வ ஒலி பெருக்கியை கண்டுபிடிசானா... விமானத்தை
மந்திரசக்தியில இயக்கினவன் இயந்திரசக்தியில் ஏன் இயக்கவில்லை...
மனித அறிவு பயன்பட்டதா...இன்ன பிற பகுத்தறிந்தானா...

ஹரி: மனசுக்குள் (இத விட கேட்க எங்களாலும் முடியும்) சற்று அமைதியாக சிந்திக்கிறேன்..

ஈவெரா: என்ன பெரிய வேதபண்டிதர் மாதிரியான முகபாவம் இது?

ஹரி: இல்லை மை ப்ரண்ட். மனித அறிவின் ஆற்றலை அறிந்த
தமிழகத்தின் ஐன்ஸ்டீனாக உங்கள் காலத்தில் விளங்கிய நீங்கள், உங்கள் வாயில்
அடிக்கடி வந்து விழும் பெரிய வெங்காயத்தின் தோலை கையால் உரிக்காமல்
இயந்திரத்தில் உரிக்கும் இயந்திரம் ஏன் கண்டுபிடிக்கவில்லை? என்று தான்
எனது யோசிப்பு...

ஈவெரா: திருவிளையாடல் தருமி மாதிரி சடன் ஜெர்க் தருகிறார்...
என்னது... கண்டுபிடிப்பா.. நானா... எனக்குப் பேசத்தான் தெரியும்...
என் முதல் சிஷ்யகோடி அண்ணாதுரைமுதலியார் மூலமா நாக்குதான் நமக்கு
மூலதனம்னு சொல்லியிருக்கேனே கேட்டதில்லையா நீ... பெரிய வெங்காயம்
மாதிரி க்ராஸ் கொஸ்டினெல்லாம கேட்கப்படாது என்னை! இதுமாதிரி
கேள்விக்கெல்லாம் நான் எப்பவுமே பதில் சொல்ல மாட்டேன்..
என்னிடம் பதில் இல்லை... பதில் தெரியாது எனக்கு..

ஹரி: மை ஓல்ட் ப்ரண்ட் உங்க பகுத்தறிவுக் கும்மியடிப்புல ஒண்ணை..
ஒரு மெயின் டாபிக் பத்திப் பேசணுமே?

ஈவெரா: பெரிய வெங்காயம் என்னத்துக்கு நானிருக்கேன்... தாரளமாப் பேசலாமே!

ஹரி: ப்ரண்ட் பசிக்குது பக்கத்துல பஹஹீல் சிட்டியில இருக்குற உடுப்பி
ஹோட்டலுக்குப் போய் சாப்டுட்டுப் பேசலாமா?

ஈவெரா: டென்சனாகிறார். உடுப்பி ஹோட்டலா? பாப்பான் கடல் தாண்டி
இங்கேயும் வந்துட்டானா? கவுச்சி கிடைக்காத இடம் எனக்கெதற்கு? மாட்டுக்கறி
மாட்டுற இடம்தான் எங்களுக்குப் பிடித்தது.

ஹரி: ஓகே மை பிரண்ட். இந்த ஊர்க்காரன் உணவு விடுதியில் மாட்டுக்கறி
சாண்ட்விச் மற்றும் சூடான நாய் (ஹாட் டாக்) நீரும் உம்ம செட்டப்பும் குமுறி
எடுங்க... நான் அங்கனயே வெஜிடேரியன் சாண்ட் விச் அடிக்கிறேன்...
ஓகே டீல்!

ஈவெரா: என்ன பெரிய வெங்காயமோ மாட்டுக்கறின்னா சரிதான் எங்களுக்கு!

ஹரி : பிரண்ட் ஒரு சந்தேகம்... உங்க பொஸ்தகத்தைப் படிக்கிறவங்க எல்லாம்
"மணி'ப்பிரவாள நடை.. "மணி"ப்பிரவாள நடைன்னு மட்டுமே சொல்றாங்க...
இது அநீதி...நான் இனி "நாக"ப்பிரவாள நடைன்னுதான் சொல்லலாம்ணு இருக்கேன்..

ஈவெராவின் பெண்'மணி" : இதுக்கு முடிவா எனக்கு ஒரு வழி சொல்லுங்க முதல்ல..

ஹரிஹரன் ஈவெரா சந்திப்பு இங்கு குவைத்தில் வெள்ளிக்கிழமை வீக் எண்டிலும் இருக்கிறதால் சனி/ஞாயிறன்று அடுத்த வெளியீடு!

அன்புடன்,

ஹரிஹரன்

Wednesday, November 29, 2006

(68) ஈவெராவின் கன்னட வெறி! (இதுவரை அறியப்படாதது)

"தமிழ்மண்ணை வணங்கி ஈவெராவின் இந்த தமிழின துரோகத்தைஇதுவரை எவரும் கண்டுபிடிக்காததை மிகுந்த சிரமப்பட்டு ஆராய்ந்து, கண்டறிந்து சரித்திர, பூகோளத்தின் அடிப்படையில் உண்மையை உண்மையாகவே நிறுவியிருக்கிறேன். மனதை திடப்படுத்திக்கொண்டு மேலே படியுங்கள்."

தமிழர் தந்தை, பகுத்தறிவுப் பகலவன், சமூக விஞ்ஞானி என்று அஞ்ஞானிகளான தமிழ்ப் பொது மக்கள் உச்சிமோந்து, தலையில் வைத்தபடி ஆனந்தக்கூத்தாடும் ஈவெரா.சாமி எப்படிப்பட்ட கன்னட வெறியர் என்பதை புரட்டாக இதுவரை இருந்ததை புரட்டிப்போடும் உண்மையாக கீழ்க்காணும் உண்மை வரலாற்றின் மூலம் அடைபட்டுக்கிடந்த
"உண்மை"யை "விடுதலை" செய்வது எனது தலையாய சமூகப் பொறுப்புணர்வுடன், நெறிபிறழாது, செம்மையாகச் செய்யவேண்டிய கடமை என்பதால் Truth is Released here:

ம(ற)ரத் தமிழனே.... " உண்மை"யான வரலாற்றை மறந்துவிட்ட தமிழனே!
"விடுதலை"யாகு உனது அடிமைத்தனத்தினின்று. உணர்ந்திடு இந்தப் பெரிய வெங்காய சரித்திர உண்மையை! நீ பகுத்தறிவுப் பகலவனின் இந்த புரட்டு வரலாற்றை அறிந்து உணராவிட்டால் வேறு யாராவது லெமூரியாக் கண்டத்துக் கணவாய் வழியாக வேகவேகமாக வந்த செக்கோஸ்லோவேகியா ஆட்களோ, திங்கறதுக்குன்னே திங்க,புதன்,வியாழன் வெள்ளிக்கிழமையன்று செவ்வாய்க்கிரகத்திலிருந்து வந்த சனியன்கள் யாராவது வந்து இப்பேருண்மையை விடுதலைசெய்து பொதுஅறிவு என்றைக்கும் எழாத ஞாயிறான உனக்கு உணர்த்திவிடக்கூடிய அபாயம் இருக்கிறது!


பெரியார் ஈவெரா.சாமி எல்லா மேடைகளிலும் எல்லாவற்றையும், எப்போதும் , எவரையும் இது என்ன வெங்காயம் என்று அணுகுவார். இது சாதரண விஷயமாகச் சிலராலும் சதா"ரண" விஷயமாகப் பலராலும் இன்றும் பார்க்கப்படும் வரலாறு!

மேடைக்கு மேடை உண்மையை உரிப்பதாக உதார் விட்ட ஈவெரா.சாமி எப்பொழுதும் ஏன் ஒன்லி வெங்காயம் என்று சொல்லி உரிக்கவேண்டும்? மட்டைதேங்காய் என்று சொல்லியிருக்கலாமே? மட்டைத் தேங்காயைக் கூடத்தான் உரிக்க வேண்டும்.

ஏனெனில் கன்னடநாடான கர்நாடகத்தில் இருக்கும் பெல்லாரி எனும் ஊர் மீது அவருக்கு அவ்வளவு அளவிடமுடியாத ஈர்ப்பு. உலக வரைபடத்தில், இந்தோ யூரேஷியன் நிலத்தட்டில் அமைந்த இந்தியத் துணைக்கண்டத்தில் இருக்கும் நமது இந்திய தேசத்தின் வரலாற்றில் கன்னட கர்நாடகாவில் இருக்கும் "பெல்லாரியையும்-வெங்காயத்தையும்" எப்படி பிரிக்க முடியாதோ அதே மாதிரி ஈவெரா.சாமியின் கன்னடவெறியால் கன்னட ஊர் பெல்லாரியின் நினைவுகள் உந்தித்தள்ள இந்தப் பெரிய வெங்காயம் எல்லாரையும் என்ன பெரிய வெங்காயம் என்று மேடைக்கு மேடை வெங்காய வியாபாரிகூட செய்யாத வெங்காய மார்க்கட்டிங் செய்தது காய்கறிவெறியா? இல்லை சமூக அக்கறையா? கிடையவே கிடையாது இது கண்டிப்பாக முழுக்க முழுக்க ரத்தத்தில் ஊறி(ரி)ப்போன கன்னட ஊர் பெல்லாரி வெறியே! பகுத்தறிவு ஆய்வகத்தில் டிஎன்.ஏ சோதனையில் வெளிவந்த உண்மை!

இதில் தமிழ் காட்டுமிராண்டி பாசையாம்? கன்னட ஊர் பெல்லாரி மீதும் அங்கு விளையும் பெரிய வெங்காயத்தின் மீதும் பசை மாதிரியான மொழி/ஊர் ஒட்டுதலால்தானே இப்படியெல்லாம்?

ஈவெரா.சாமி மேடைகளிலே சின்ன வெங்காயம் என்று ஏன் கூறவில்லை? தமிழ்நாட்டில் இட்லி/வடை/சாம்பாரில் பயன்படுத்தப்படும் சின்னவெங்காயம் தமிழகத்திலேயே ஏராளமாக விளைவதால்தானே? மட்டைத்தேங்காய் கூட தமிழகத்திலே நிறையக் கிடைப்பதுதானே?
ஏன் இப்படிப் பச்சையான பாகுபாடு?

பகுத்தறிவுப் பெரிய வெங்காயம் ஈவெரா.சாமியின் பெல்லாரி பாசக் கன்னடவெறிதானே இது?

"இனியானும் இருப்பவனையெல்லாம் சும்மாவானும் நிந்திப்பதைவிட்டு சிந்தித்துப் பகுத்தறிவுக்கு வேலை கொடு!"

தாய்மண்ணே வணக்கம்!

அன்புடன்,

ஹரிஹரன்

(67) ஈவெரா.சாமி ஒரு (தீர்க்க) தரிசி

குடியரசில் ஈவெரா.சாமி 18.12.43 அன்று சொன்னது:

"கட்சிகள் இந்த நாட்டில் பெரும்பாலும் சாதி இனத்தைப்பற்றியவைகளாக இருப்பதால், பொதுமக்கள் நலத்தைவிட அவரவர்கள் கட்சி நலத்தையே கருதி அரசியல் நடக்கிறது".

தமிழகத்தில் பகுத்தறிவு இவரது சிஷ்யகோடிகள் கருணாநிதி, கி.வீரமணி, ராமதாசு, தொல்.திருமா, டாக்டர்.கிருஷ்ணசாமி, போன்றவர்களின் ஆக்கமான செயல்பாட்டால் தன்னிறைவு பெற்ற நிலையில் இன்றிருக்கும் காட்சி:

1. திமுக தொகுதி வாரியாக சாதிவேட்பாளர்களை அறிமுகப்படுத்திய கட்சி
2. அதிமுக தேவர்கள் சாதிக்கான கட்சி
3. பாமக குடிதாங்கியால் துவங்கப்பட்ட வன்னிய சாதிக்கட்சி
4. பார்வர்டு பிளாக் - முக்குலத்தோர் சாதியின் கட்சி
5. விடுதலை சிறுத்தை - தாழ்த்தப்பட்டவர்களின் கட்சி
6. புதிய தமிழகம் - தலித்களின் கட்சி
7. புதியநீதிக்கட்சி - முதலியார்கள் கட்சி
8. "நியூ"மக்கள் தமிழ்தேசம் - யாதவர்களின் கட்சி

9. சரத்குமார் நாடார் சாதிக்கென ஒருகட்சியை கூடிய விரைவில் துவங்கலாம்!


அய்யா ஈவெரா.சாமி அந்தக்காலத்தில் 1943-ல் தரிசித்ததைக் காட்டிலும் அவரது சிஷ்யகோடிகள் சாதிப் பாகுபாட்டிற்கு கடினமாக உழைத்து வெங்காயத்தினை தீர்க்கதரிசி ரேஞ்சுக்கு உயர்த்தியிருக்கின்றார்கள்!

இன்று 2006ல் தமிழகத்தில் அரசியல் திரா'விட'த்தினால் எங்கு காணினும் சாதீ, சாதீ, சாதீயடா.... சாதீய உணர்வில் தன்னிறைவு பெற்று எங்கு வேண்டுமானாலும் எக்ஸ்போர்ட் செய்யுமளவுக்கு எக்ஸ்பர்டைஸ் கைவசம் இன்று இருக்கிறது!

க்ரேட் ஒர்க் கீப் இட் அப்னு காட்டுமிராண்டித் தமிழ் இல்லாமல் ஆங்கிலத்தில் கூட வாழ்த்தமுடியாத அவலம்!

அன்புடன்,

ஹரிஹரன்

Tuesday, November 28, 2006

(66) ஈவேரா சொன்னதும் சிஷ்யகோடிகள் செய்வதும்

ஒரு சேஞ்சுக்கு ஈவெரா.சாமி சொன்ன வார்த்தைகளை வெங்காயத்தின் பாசறையில் பயின்ற அறிஞர் அண்ணா, கருணாநிதி போன்ற முதன்மை அக்மார்க் பகுத்தறிவு சிஷ்யகோடிகள் எப்படி அர்ப்பணிப்புடன் பின்பற்றி சமூகத்தில் பகுத்தறிவை பரப்பியிருக்கின்றார்கள் என்று பார்க்கலாம்:(விடுதலையில் ஈவெரா 9.4.1962 அன்று சொன்னது:

"மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் பள்ளியில் படிக்கும் காலத்தை வீணடித்துக் கொள்ளக்கூடாது. பள்ளியில் படிக்கும் காலம் மிகமிக அருமையானது. எனவே, வெளியில் நடக்கும் எவ்வித நிகழ்ச்சிகளிலும் மாணவர்கள் தங்கள் மனத்தை அலையவிடக்கூடாது. குறிப்பாக கூறவேண்டுமானால் கிளர்ச்சிகளில் பங்கு கொள்ளக்கூடாது."


நடைமுறையில் பகுத்தறிவுப் பகலவன் ஈவெராவின் சிஷ்யகோடிகள் அண்ணா,கருணாநிதி செய்து வருவது:

1965-ல் மாணவர்களை முன்னிறுத்தி ஹிந்தியை எதிர்த்து தமிழகத்தில் மொழிப்போர் கிளர்ச்சி செய்யவிட்டு குளிர்காய்ந்தது. ஏராளமான தமிழ் மாணவர்கள் உயிரிழந்தனர்!

1967-ல் மாணவர்களை அரசியலில் மாணவரணியாக்கி அதிகாரத்திற்கு வந்தது! இன்னிக்கும் மாணவரணி இல்லாத அரசியல் திரா'விட' இயக்கமே கிடையாதேன்னு தன்னிறைவு அடைந்திருக்கிறது தமிழ்நாடு!

இன்றைக்கும் 2006ல் சென்னை நந்தனம், பச்சையப்பாஸ், மாநிலக்கல்லூரி இவைகளில் பாடங்களை விட அரசியல் திரா'விட' இயக்கங்களின் மாணவரணி அரசியலே பிரதானம்.

மாணவர்களை ஊறுகாயா ஆக்கியதாலே எல்லாரும் சத்தமாச் சொல்லுங்கோ!
கருணாநிதி ஜிந்தாபாத்!
அறிஞர் அண்ணா ஜிந்தாபாத்!
விடுதலையில் ஈவெரா 23.7.56 அன்று சொன்னது:


"பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் நல்ல நகைகள், ஆடம்பர உடைகள் உடுத்துவதுதான் பெருமையென்று கருதாமல் எளிய உடைகளே உடுத்த வேண்டும். படிக்கக்கூடிய இடத்தில், எல்லாப் பிள்ளைகளும் கலந்து பழகும்படியான இடங்களில், பேதங்கள் இல்லாமலிருப்பதுதான் நல்லது."


நடைமுறையில் பகுத்தறிவுப் பகலவன் ஈவெராவின் சிஷ்யகோடிகள் கருணாநிதி மற்றும் கழக வாரிசுகள் செய்து வருவது:

* பள பள கார்ல / பைக்ல கல்லூரி வரும் கழக வாரிசு மாணவர்கள் உதார் விட்டு உதிர்க்கும் வார்த்தை முத்துக்கள்..... டேய் வாத்தி...ஸாரி புரொபஸர்...நான் யாருன்னு தெரியும்ல ----மந்திரி மகன் ---- எம்பி மகன் ----எம்.எல்.ஏ மகன் தொலைச்சுடுவேன் --ங்காத்தா ----- மவனே!

ஆகா நம்ம எல்லோரும் ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே பொது இடங்களில் பேதங்கள் இல்லாமல் கழகங்கள் மறைத்ததற்கு!


விடுதலையில் ஈவெரா 17.5.62அன்று சொன்னது:

"மாணவர்கள்-மாணவியர் ஆபாசப் படங்கள், கருத்துகள் கொண்ட புத்தகங்களை வாங்கிப் படித்து வாழ்க்கையில் கெட்டுப் போகிறார்கள். அறிவுப் பெருக்கம் நிறைந்த-நல்ல கருத்துகளைக் கொண்ட புத்தகங்களை வாங்கிப் படித்துச் சிந்தித்து அறிவு ஆராய்ச்சி பெற வேண்டும்."


விடுதலையில் ஈவெரா 15.7.62அன்று சொன்னது:

"முதலாவதாக, மாணவர்கள் ஆசிரியருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அடுத்து, ஒழுங்குமுறை பழக வேண்டும். அதற்கு அடுத்தாற்போல்தான் பாடம்."காலங்காலமா இந்த ரெண்டையும் கரடியா கத்தினாலும் தயிர்சாதம் தின்றவங்களோட, வீரம்குறைந்தவர்கள் பேசும் வீணான பேச்சுல்ல இது! தயிர்சாதத்துக்கு வெங்காயமும் மாவடுமாதிரியே நல்ல டேஸ்டுதாங்க! என்ன சொல்றீங்க!
குடியரசில் ஈவெரா 9.12.28 அன்று சொன்னது:

பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள் கேள்வி மாத்திரத்திலேயே ஒன்றை நம்பிவிடக்கூடாது, எழுதி வைத்திருப்பதாலேயே ஒன்றை நம்பிவிடக்கூடாது. வெகுகாலமாக நடந்து வருவதாகத் தெரிவதனாலேயே ஒன்றை நம்பிவிடக்கூடாது. அநேகர் பின்பற்றுவதாலேயே நம்பிவிடக்கூடாது. கடவுளாலோ, மகாத்மாவாலோ சொல்லப்பட்டது என்பதாலேயே நம்பிவிடக்கூடாது. ஏதாவது ஒன்று நம்முடைய புத்திக்கு ஆச்சரியமாய்த் தோன்றுவதாலேயே அதைத் தெய்வீகம் என்றோ மந்திர சக்தி என்றோ நம்பிவிடக்கூடாது. எப்படிப்பட்டதானாலும் நடுநிலைமையிலிருந்து பகுத்தறிவுக்குத் தாராளமாய் மனம்விட்டு ஆலோசிக்கத் தயாராயிருக்கவேண்டும்.

பின்ன அப்படியே விட்டுருவமா? மஞ்சள் துண்டு ஆக்கம்தரும்னு தானே போட்டிருக்கீங்கன்னு கருணாநிதிய மனசு விட்டு கேட்டுத் துளைச்செடுக்குறோம்ல நாங்க ஆன்மீகப்பகுத்தறிவு இருக்கிறதால.
108 காரணம் ஒரு செயலுக்கான்னு மயக்கம் போட்டு விழலையே . நாங்க மெய்யாலுமே ரொம்ப ஸ்டெடியாச்சே! அநேகம்பேரால பகுத்தறிவுன்னு பம்மாத்துக் காட்டினானும் நம்பலயே எந்தப் பகுத்தறிவு வெங்காயத்தையும் நம்பி நாசமாப் போகலையே நாங்க!

குடியரசில் ஈவெரா 26.2.33 அன்று சொன்னது:

"நீங்கள் எந்த முறையில் கடவுளை நிர்ணயித்தாலும் எந்த முறையில் எவ்வளவு நல்ல கருத்தில் மதத்தை நிர்மாணித்தாலும் பலன்கள் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்குமே தவிர, மூட நம்பிக்கைக் கடவுளை விட, குருட்டுப்பழக்க மதத்தைவிட சீர்திருத்தக் கடவுளும், பகுத்தறிவு மதமும் ஒன்றும் அதிகமாய்ச் சாதித்துவிடப் போவதில்லை."

நடைமுறையில் பகுத்தறிவுப் பகலவன் ஈவெராவின் சிஷ்யகோடிகள் கருணாநிதி மற்றும் கி.வீரமணி மிகச்சமீபத்தில் செய்து வருவது:

திருவரங்கத்தில் ரங்கநாதர் கோவில் முன்பாக வெங்காயத்திற்கு சிலை வைக்க அரசாணை கருணாநிதி ஒப்புதல் தந்து கி.வீரமணி ஈவெரா.சாமியின் கரும்பாறைச் சிலை உருவம் பிரதிஷ்டை.

இந்தியாவில் இன்னுமொருமதம் பெரியார்/பகுத்தறிவுமதம் ஏற்படுத்திய வெங்காய வியாபாரிகளுக்கு பாராட்டுக்கள்!அன்புடன்,

ஹரிஹரன்

குறிப்பு:
ஈவெராவின் வார்த்தைகளை ஓரிடத்தில் வைத்த பிருந்தனுக்கு நன்றிகள்!Monday, November 27, 2006

(65) தீண்டாமை தோன்றிய விதம்

தீண்டாமையை உருவாக்கியவன் பாப்பான் என்பது குற்றச்சாட்டு! வேதம் பயின்ற பிராமணர்கள்தான் முதலில் பேதம் பார்த்தனர் என்பது பகுத்தறிவுப் பழிச்சொல்.

மனிதனை மனிதன் வெறுக்கும் அளவுக்குத் தீண்டாமை எப்படித் தோன்றியது என்று பார்க்கலாம்.

ஒரு சிறு கதைமூலம் எப்படி மூடநம்பிக்கைகளை நமது புரிதல் குறைவு, அக்கறையின்மை, அல்லது சோம்பேறித்தனத்தால் உருவாக்குகிறோம் என்று காண்போம்.

ஒரு சிறிய கதை முதலில்:

ஒரு முனிவரின் குருகுலத்தில் மாணாக்கர்கள் கல்வி பயின்று கொண்டிருந்தார்கள். வகுப்பறையில் பூனை ஒன்று தினமும் நுழைந்து அன்றைய பயிற்சியின் இறுதியில் முனிவர் கண்ணைமூடியபடி இறைவழிபாட்டிலிருக்கும் போது இறைவனுக்கு நைவேத்தியம் செய்ய வைக்கப்பட்டிருந்த பாலைக் குடிப்பது என்று சில நாட்களாக பழக்கமாகியிருந்தது. இதைக்கண்டு முனிவர் அடுத்தநாளிலிருந்து வகுப்பறைக்குள் வந்த பூனையை கயிற்றால் அங்குள்ள தூணில் கட்டிவைத்தார். இதனால் பயிற்சி முடிந்து நைவேத்தியம் தடையின்றி நடந்தது.
சில ஆண்டுகள் கழித்து முனிவர் இறைவனடி சேர்ந்தார்.

இதைக் கண்டவாறே அடுத்து பொறுப்பில் வந்த நபர்கள் தொடர்ச்சியாக குருகுல பயிற்சியை தொடர நைவேத்தியத்தின் போது கண்டிப்பாக பூனை தூணில் கட்டப்பட்டிருக்கவேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்தினர். பின்னாளில் அடுத்து வந்த நபர்கள் கறுப்புப்பூனையைத் தூணில் கட்டினால் தான் முழுமையான நன்மை என்று அடுத்தடுத்த மூடநம்பிக்கைகளைக் குட்டி போடவைத்தனர்.


சரி இப்போ தீண்டாமைக்கும் வேத நெறி வாழ்ந்த பிராமணனுக்கும் வருவோம்:

தீண்டாமையை உருவாக்கியவன் பாப்பான் என்பது பிரதான குற்றச்சாட்டு! வேதம் பயின்ற பிராமணர்கள்தான் முதலில் பேதம் பார்த்தனர் என்பது பழிச்சொல்

அக்கிரஹாரத்திலே நடக்கும் போது செருப்பைக் கையில் எடுத்துச்செல்ல வற்புறுத்தினவர்கள் பிராமணர்கள் என்பது அடுத்த குற்றச்சாட்டு!


அக்கிரஹாரத்தில் நுழைந்தவுடன் பிரதானமாக இருக்கின்ற பத்து இருபது வலது இடது வரிசை வீடுகளின் நடுநாயகமாக இருப்பது பெருமாளோ/ கிருஷ்ணனோ விநாயகரோ சுப்ரமணியனோ அமர்ந்திருக்கும் கோவில். அக்கிரஹாரத்தின் அடுத்தமுனையில் ஓடுகின்ற ஆறு என்பதுதான் அக்கிரஹாரத்தின் அமைப்பு. ஆறு இல்லை என்றாலும் கோவில் 100% எல்லா அக்கிரஹாரத்திலும் இருக்கும்.

ஐம்பது நூறாண்டுகள் முன்பு அக்கிரஹாரத்தில் தினசரி கோவிலில் ஏதாவது ஒரு யாகம், ஹோமம், பூஜைகள் என்று தெய்வம் சார் நிகழ்வுகள் நடந்தபடியே இருக்கும். இரண்டாவதாக அக்கிரஹாரத்தினை ஒட்டி நீர் ஓடும் ஆற்றில் செருப்பத்தூக்கியவாறே போவது சிரமம் இதன் பொருட்டே செருப்பை அக்கிரஹாரத்தில் தவிர்க்கவேண்டும் என்ற நடைமுறை வந்தது. அக்கிரஹாரத்து வயதான கிழப் பிராமணர்கள் செருப்பைக் கையில் எடுத்தவாறே நடந்திருப்பதை நான் 1970களின் இறுதியில் எனது உறவுக்காரர்கள் இருந்த கிராமத்து அக்கிரஹாரத்தில் நேரில் கண்டிருக்கிறேன்!

இன்றைக்கும் இறைநம்பிக்கை உடையவர்கள் உற்சவம் திருவுலா என்று தெய்வம் இருக்கும், தெய்வ நிகழ்வுகள் நடக்கும் ஒரு இடத்தில் இன்றைக்கும் காலில் செருப்போடு நாம் யாரும் போக விழைவதில்லை.

"பிராமணர் வீட்டிலே வேலைசெய்யும் இதரசமூகத்தினர் தொட்டால் தீட்டு என்று பாத்திர பண்டங்கள் மீது நீர் தெளித்து இழிவுசெய்தனர் என்பது அடுத்த குற்றச்சாட்டு."

அம்பது நூறாண்டுகளுக்கு முன்பாக இருந்த சூழலை நிகழ்வின் பின்ணணியாக எண்ணிக்கொள்ளுங்கள்.

முந்தைய காலத்தில் பிராமணன் வீட்டிலே நாலு பசுமாடு ரெண்டு காளைகள் கன்னுக்குட்டி என்று கால்நடைகள் பராமரிப்பும் இருந்தது. வீட்டிலே வேலை செய்பவர்கள் பால் கறந்த குவளையைக்கூட நேரடியாக வீட்டினுள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டதில்லை. நன்கு தேய்த்துக்கழுவிய பாத்திரத்தில் கை பட்டுவிடாமல் தூக்கித்தான் பால் ஊற்ற அறிவுறுத்தப்பட்டார்கள். காரணம் மாடுகளுக்கு கோமாறி நோய், கொள்ளை நோய் என்று தொற்று நோய் வேறு வீடுகளில் இருக்கும் மாடுகளைப் பராமரிக்கும் நபர் மூலமாக வீட்டில் உள்ள குழந்தைகளிடம் பரவி விடும் வாய்ப்பை குறைக்கவே. அறிவியல் பூர்ணமான "க்வாரன்டைன் செய்யும் ஆக்டிவிட்"டி!

வயல் காடுகளிலும், களத்து மேட்டிலும் உழவு மாடுகள் என்று கால்நடைகளோடு புழங்கியவர்கள் அக்கிரஹாரத்தில் நுழையுமுன்பே குறைந்த பட்சமாக Rinse cleaning காக ஆற்றிலே குளித்தபின்னர் வருவர். வீட்டுநபர்கள் இல்லாத நபர்கள் தொற்று நோய் அச்சம் /சுகாதாரம் காரணமாக பின்வாசலைப் பயன்படுத்தப்பட்டது.

இன்றைக்கும் கொள்ளையிலே போறவனே என்பது கிராமங்களில் வசவாகவே பயன்படுத்தப்படுகிறது. கொள்ளை நோயின் தீவிரம் இதிலிருந்தே ஓரளவுக்கு உணரலாம். பழைய தாத்தா/பாட்டிகள் நாங்க 14பேர் கூடப்பிறந்தவங்க ஆனால் 6பேர் சின்னப்பவே 10வயசாகும் முன்பே இறந்துட்டாங்கன்னு சொல்ல அக்கால குழந்தைகள் இறப்பு, தொத்து நோய் தீவிரம் உணரலாம்!"முடிவெட்டிக்கொண்ட பின்பு வீட்டிலே நுழைவதிலிருந்து குளியல் அறை வரைக்கும் அடிமேல் அடிவைத்து முன்னே நடக்க நடக்க பின்னாலேயே தண்ணீர் தெளித்தவாறே வருவது என்பது பிராமணவீடுகளில் இருந்த பழக்கம்."

இங்கும் அறிவியல் பூரணமான காரணமே இச்செயலின் பின்புலம். ஐம்பது நூறாண்டுகளுக்கு முன்பாக கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த வாழ்க்கை முறையில், மருத்துவ வசதிகள் இல்லாத அந்தக் காலகட்டத்தில் வீட்டுத் திண்ணையிலே முடிவெட்டி / சவரம் செய்து கொண்டு வரும்போது நுண்ணிய முடித்துகள்கள் பறந்து பரவி வீட்டிலிருக்கும் சிறு குழந்தைகள்/ முதியவர்க்கு சுவாச அசௌகர்யம் இன்னபிற தொந்தரவுகள் வராமலிருக்க கொல்லைப்புறம் குளியல் அறை வரையில் முன்னே ந்டக்க நடக்க வீட்டினர் பின்னே நீர் தெளித்தபடி, பின் துணியால் மொழுகித்துடைத்து என்று சுகாதாரம் முன்னிறுத்திய செயல். நாவிதர் இல்லாமல் சுயமாய் சவரம் செய்தாலும் பிராமணவீட்டில் சவரம் செய்து கொண்ட ஆளுக்கு இதே மரியாதைதான். சவரப் பொருட்கள் மூட்டைகட்டி வீட்டிலே பரணில் இல்லை புழக்கம் குறைந்த எங்காவது தனிமைப்படுத்தப்பட்ட இடத்திலேயே வைக்கப்படும். இதிலிருந்தே இது நாவிதர்க்கு அநீதி இழைக்கச் செய்யப்பட்ட செயலில்லை எனப் புரியும்.

அடுத்த குற்றமாக பிராமணர்கள் எவனையும் மதிப்பதில்லை எல்லாரையும் நீ வா போ என்று ஒருமையில் மரியாதை இன்றி அழைத்து இழிவு செய்பவர்கள்.

பாசாங்கின்றி தன்வீட்டாரை எங்கனம் அழைக்கிறானோ அப்படியே தானெ வீட்டில் வேலை செய்ய போவோர் வருவோரிடம் பிராமணர்கள் பழகுகின்றார்கள்! இதைக் குறையாக மட்டுமே ஏன் பார்க்கின்றீர்கள். இதில் இன்றைக்கு பிராமணர்களிடையே பெரிய மாற்றம் வெளியுலகோடு தொடர்பு என்ற விதத்தில் ஏற்பட்டு இருக்கிறது.


இப்போ முதலில் சொன்ன கதையில் குருகுலத்தில் க்ளாஸ் நடக்கும் போது பூனையைப் பிடித்து தூணில் கட்டியே ஆகவேண்டும் என்பது இன்றியமையாத நடைமுறை என்று ஆக்கி அதில் கட்டப்படும் பூனையின் நிறம் எவ்வளவு முக்கியம் என்கிற அளவுக்கு விவாதிக்கும் நாம் ஏன் பூனை தூணில் கட்டப்பட்டது என்பதை அறிய முற்படுவதில் நேர்மையாக கவனம் செலுத்துவதில்லை.

இதிலே சமூகத்தில் பல பிரிவிலும் இருந்த ஆதிக்கமனப்பான்மை கொண்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் அச்சமயங்களில், அந்தக் காலகட்டத்தில் வேறு நல்ல காரணத்திற்காக இருந்த மனிதர்களைக் "க்வாரன்டைன் செய்யும் நடைமுறைகளின்" பின்ணணியில் இருக்கும் அறிவியல் உண்மையை அறியாமலோ இல்லை மறைத்தோ ஒரு பிரிவு ஆட்களின் மீது ஆதிக்கம் செலுத்த, அடிமைப்படுத்திய பிரித்தாளும் சூழ்ச்சியோடு ஆங்கிலேயன் இன்னும் பலமாக நடைமுறைப்படுத்திச் சென்றான்.

சுயநலம் மேலோங்கிய இன்றைய 2006லும் வேதம் என்ற கடலின் ஓரத்தில் கட்டைவிரலை நனைக்க முயலும் என்னாலேயே ஓரளவுக்கு மேம்படும் முயற்சியாக மனிதனாகச் சிந்தித்து மனிதனாய் நடந்து பிறரை மனிதனாய் நடத்தவே வேத நெறி என் மனம் வழி நடத்துகிறது. முழுமையாக வேதத்தினை அறிந்து நடந்த முன்னோர்களின் ஒரு சமுதாயம் மனிதனை மனிதனாகத்தான் நடத்தியிருக்கும்.

பிராமணன்தான் தீண்டாமைக்கு மூல காரணம் என்பது அறிவியல் பூர்வமாக ஆகாது. ஆதிக்க சாதியினர், சாதிவியாபார அரசியல் பிழைப்புவாதிகளுக்கு உண்மைகளால் ஆதாயமில்லை எனவே செக்குமாடு மாதிரி பிராமணன் மட்டும் தான் அனைத்திற்கும் காரணம் என்கிற ஆதாரமற்ற ஆதாயப் பேச்சுக்களைத் தொடர்கின்றனர்.

இன்றைக்கு மருத்துவ வசதிகள் வந்து தொற்றுநோய் அச்சம் குறைந்து குழந்தை இறப்பு பயம் நீங்கியதில் மனிதர்களை இதன் காரணமாக "க்வாரன்டைன்" செய்யவேண்டிய நடைமுறையின் அவசியம் குறைந்து கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது.

அதேமாதிரி கிராமத்திலேயே அக்கிரஹாரத்திலேயே சாதிப்பெருமை பேசியபடியேதான் வாழ்வேன் என்று பெரும்பான்மையான பிராமணர்கள் வெட்டிப் பெருமை பேசி வீணாகவில்லை.

கால மாற்றத்தில் முதலில் சீர்திருத்தம் வீட்டில் எடுத்துவருப்வர்களாக பெரும்பான்மை பிராமணர்கள் இருக்கின்றார்கள்.

இன்றைக்கும் சாதி ஆதிக்கம் வேறு யாரோ செய்ய பழியைச் சுமக்கும் சுமைதாங்கியாக இருந்துகொண்டே ஆக்கமாகச் செயல்படுகின்ற பிரிவாகவே இருக்கின்றார்கள்.

முழு வால்யூமில் மைக்கும் ஸ்பீக்கரும் அருகருகில் வைத்தால் காது கிழிய கூகூகூஊஊ என்று காது கிழிகின்ற பேச்சுக் கேட்காத Haunting High frequency sound வரும் அதுதான் இப்போ பிழைப்புவாத ஜாதிவியாபாரி அரசியல் வாதிகள் போடும் சாதிக் கூச்சலில் பொதுஜனத்திற்குக் கிட்டிய பயன்.

அன்புடன்,

ஹரிஹரன்

Sunday, November 26, 2006

(64) பகவான் கிருஷ்ணனின் கோபியர் களியாட்டங்கள்!

பகவான் கிருஷ்ணனின் பாவப்பட்ட நிலைமை மாதிரி நம்மில் வேறு யாருக்கும் குறிப்பாக திராவிட பகுத்தறிவுப் பார்ட்டிகளுக்கு வந்திருந்தால் சின்னா பின்னமாகிச் சிதறி தெறித்துக் காணாமல் போயிருப்பார்கள்!

திராவிட பகுத்தறிவு வாதம் பகவான் கிருஷ்ணனை கோபியருடன் காமக்கேளிக்கை கெட்ட ஆட்டம் போட்டவராக நிறுவிச் சந்தோஷப்பட்டுக் கொள்கிறது. கிருஷ்ணனின் வாழ்க்கையை க்ரோனாலாஜிக்கலாகப் பார்க்காமல் Crook's Logic உடன் பார்ப்பதையே திராவிடப் பகுத்தறிவுக் கூட்டம் விரும்புகிறது!

பகவான் கிருஷ்ணன் பிறந்ததே சிறைக்குள்! சோக நம்பர் 1 இது. சிறைக்குள்ளாக அதுவும் தாய்மாமன் கம்சன் எப்போ ஆண்குழந்தை பிறக்கும் கொன்றுபோடலாம் என்று காத்திருக்க வெறுப்புச் சூழலில் சிறையில் பிறப்பது என்பது சோகமன்றி வேறென்ன?


கம்சன் என்பவன் சாவைக்கண்டு பயந்த தற்குறி, கோழை, மூர்க்கன்!

கம்சன் என்பதன் அர்த்தம் Kha sah என்பதன் அர்த்தம் Who is GOD? Where is HE? என்பதுதான் இன்றைய திராவிட பகுத்தறிவாளர்களது அதே கருத்தில் இருந்தவன்தான் கம்சன்!


இப்படி சோகமயமான் சூழலில் பிறந்த கிருஷ்ணன் தந்தை வசுதேவரிடம் அசரீரியாக யமுனை நதிக்கரையின் அக்கரையில் கோகுலத்தில் எடுத்துச் சென்று விடும்படி உரைக்க, வசுதேவர் சிறைமூலையிலிருந்த பழைய கூடைக்குள் தனது அழுக்கு வேட்டியைப் போட்டு கிருஷ்ணனை கூடைக்குள் வைத்து யமுனை நதிக்கரைக்கு நடக்கிறார்.

சிறைக்குள்ளேயே கிடந்த வசுதேவருக்கு வெளியில் வானிலை எப்படி இருக்கும் என எப்படித் தெரியும்? புயல் மழை கொட்டுகிறது. பிறந்த குழந்தையான கிருஷ்ணன் பிறந்து சில நிமிடங்களில் மழையில்! இது சோகம் நம்பர்2.

யமுனை நதி பொங்கிப் பிரவாகமெடுத்து சீறியபடி பாய்ந்து செல்கிறது. வசுதேவர் திகைத்தாலும் குழந்தையாக் வந்திருப்பது விஷ்ணுவே என்பதை அறிந்திருக்கிறார். யமுனையில் இறங்கி நடக்க தண்ணீர் மேலுதடு வரை வந்துவிட குழந்தை கிருஷ்ணன் தனது காலை கூடையினின்று கீழே தொங்கப்போட அது வசுதேவரின் மூக்கு மட்டத்திலிருக்க யமுனை அதற்கு மேல் பொங்கினால் கிருஷ்ணனின் காலை நனைக்க வேண்டியிருக்கும் குழந்தைக்கு நிமோனியா வந்துவிடக்கூடதே என்று யமுனை கருணைகாட்ட வசுதேவர் மூக்களவு நீரில் நதியைக்கடந்து அக்கரை சேர்கிறார்!

வசுதேவர் நம் மாதிரி இருந்திருந்தால் என்ன விஷ்ணு அவதாரம் நான் அல்லவா தண்ணீரில் நனைந்து மூழ்கிக்கொண்டிருக்கிறேன் How irrational என்று திரும்பி இறங்கிய கரைக்கே ஓடிவந்திருப்பார். இறைவன் துணையிருக்கிறான் என்ற நம்பிக்கையோடு வசுதேவர் இருந்தார்!

பிறந்த உடனே பெற்ற தாய் தேவகியையும் தந்தை வசுதேவரையும் பிரிந்து போவது கிருஷ்ணனின் வாழ்வில் அடுத்த சோகம்!

சரி உண்மையில் கோகுலத்தில் கிருஷ்ணன் தனது ஏழு வயது வரை மட்டுமே இருந்திருக்கிறான். கோகுலத்து கோபியர் என்பவர்கள் எல்லாம் திருமணமான பெண்கள்.

இன்றைக்கும் கொண்டித்தோப்பில், அயோத்தியாகுப்பத்தில் கூட ஏழு வயதுக் குழந்தை எத்தனை கேடித்தனமான போக்கிரி, ரௌடியின் குழந்தை என்றாலும் தனது ஏழுவயதில் இன்றும் பவித்ரமான சிந்தனைகள், விளையாட்டுத்தனம் என்றுதான் இருக்கிறது!

இங்கே பகுத்தறிவு ஜீவி யாரோ முற்போக்காகச் சிந்தித்து கண்டறிந்த உண்மை " பகவான் கிருஷ்ணன் ஆப்பிரிக்க நீக்ரோ இனத்தைச் சார்ந்தவன் அதனால் கிருஷ்ணனின் "அது" நீளமாம் அதனால் அவரைச் சுற்றி கோபியர் கூட்டமாம்!

"ஆபாச பகுத்தறிவு ஈவெரா வெங்காயம் சிந்தனையில் இருந்து ஆபாசமாய் கற்பனையில் எப்படி பொங்கி வழிகிறது? பகவான் கிருஷ்ணனின் வாழ்க்கையாக பகுத்தறிவு வக்கிரமாக எப்படிச் சீறிப்பாய்கிறது! இது பகுத்தறிவின் முற்போக்குச் சிந்தனையினால் வரும் வக்கிர நகைச்சுவை!"

ஏழாவது வயதில் தாய்மாமன் கம்சன் நயவஞ்சகமாய் திருவிழாவுக்கு வரும்படி இன்வைட் செய்ய திருவிழா பார்க்க வந்த கிருஷ்ணனை வரவேற்றது மல்யுத்தர்கள் அவர்களோடு போரிட்டு கம்சனைக் கொன்ற கிருஷ்ணன் கம்சனது தந்தையிடம் அரசை ஒப்படைத்து துவாரகை செல்கிறான்!

"ஏழுவயதில் கோகுலம்விட்டு வெளியேறிய பின் பகவான் கிருஷ்ணன் தன் வாழ்நாளில் இறக்கும் வரை மீண்டும் கோகுலம் திரும்பவே இல்லை!"

துவாரகையில் தான் முயன்று உருவாக்கிய அரசு நிர்வாகத்தை தனது உறவுக்கார யாதவர்களின் தொல்லை, எனக்கு ரெகமெண்டேஷன் செய், இந்தப் பதவி வேந்தும் என்ற உபத்திரவம் தாளாது ஒருநிலையில் யாதவர்களிடம் இனி நீங்களே ஆட்சி செய்யுங்கள் என்று பதவி ஆசை இல்லாமல் தான் உருவாக்கிய அரசை தாரைவார்த்து விட்டு டெல்லிக்குச் செல்கிறார்!

டெல்லி இன்றைக்கும் அரசியலில் தந்திரபூமிதான்! பிற்பாடு டெல்லியிலிருந்து அஸ்தினாபுரத்திற்கு வந்து கௌரவர்கள் என்ற பலமான கூட்டணி, பெரிய கூட்டணி இருந்தாலும் பாண்டவர்கள் என்ற நெறிகளுக்கு மதிப்பளிக்கும் வலுவில்லாத எளியவர்களை வலிந்து தான் வழிநடத்த தேர்வுசெய்கிறார்! உண்மையில் பிழைக்கத் தெரியாத கிருஷ்ணன்!

கௌரவர்கள் பாண்டவர்களின் நாட்டை அவர்களிடம் ஒப்படைக்க விதித்த 14ஆண்டுகள் வனவாசத்தில் கிருஷ்ணன் பதவி வசதிகளுக்காக கட்சி தாவிவிடாமல் கானகத்திலே சிரமப்படுகிறான்! கானகத்திலே அதுவும் தனது சார்பினருக்காக 14 ஆண்டுகள் திரிவது இது சோகமில்லையா?

கானகத்திலே 14 ஆண்டுகள் இருந்து சிரமப்பட்டு கௌரவர்களின் உடன்படிக்கையை நிறைவேற்றி விட்டுத் திரும்பி வந்து பாண்டவர்களிடம் உடன்படிக்கைப்படி நாட்டைத் திருப்பிக்கொடு என்று கேட்டதற்கு கௌரவர்கள் என்ன சொன்னார்கள்? அதிகமாக சிந்திக்காமல் அவசரமாகப் போடப்பட்ட அந்த உடன்படிக்கை செல்லுபடியாகாது! சாரி! நாட்டைத் திருப்பித்தருவது என்பதெல்லாம் ஆகவே ஆகாது என்று!

*பகவான் கிருஷ்ணன் சரி பாதி ராஜ்ஜியமாவது பிரித்துக் கொடு என்றதற்கு! கௌரவர்கள் நடக்கவே நடக்காது என்றார்கள்.

*கிருஷ்ணன் சரி ஐந்து மாவட்டங்களாவது கொடு என்றதற்கு முடியவே முடியாது என்றனர் கௌரவர்கள்!

*ஐந்து கிராமங்களையாவது பாண்டவர்களுக்குக் கொடு என்று கிருஷ்ணன் கேட்டதற்கு கௌரவர்கள் நாங்கள் அவ்வாறு செய்வதில்லை என்று கையை விரித்தனர்!

*ஐந்து வீடுகளாவது தாருங்கள் என்று பகவான் கிருஷ்ணன் பாண்டவர்களுக்காக மன்றாட இயலாது என்றுரைத்தனர் கௌரவர்கள்!

*கடைசியாக ஐந்து அறைகளுடன் ஒரு வீடாவது தரவேண்டும் என்று பகவான் கிருஷ்ணன் கேட்க கௌரவர் தலைவன் துரியோதனனோ ஊசிமுனை இடம் கூடத் தெரியாது என்று கொக்கரித்தான்!

பகவான் கிருஷ்ணன் பின்னும் எவ்வளவோ சமாதானப்படுத்தியும், பேச்சுவார்த்தை தொடர்ந்தபோதும், பலனில்லை. துரியோதனன் கிருஷ்ணனிடம் சொன்னான் " பாண்டவர்கள் என்ன பிராமணர்களா பிச்சை கேட்டுப் பெற... சஷத்ரியர்களான பாண்டவர்கள் போரிட்டு தங்கள் ராஜ்ஜியத்தை மீட்டுக்கொள்ளட்டும்" என்றான்.

குருசேஷத்திரத்தில் போர்க்களத்தின் நடுவே மீண்டும் பகவான் கிருஷ்ணனுக்கு கடும் சோதனை, பாண்டவர்களது படைத்தளபதி அர்ஜூனன் இத்தனை நடந்தபின்னும் போரிடமாட்டேன் என்று தனது ஆர்மரைக் கீழேபோட்டுவிட்டு அமர்ந்துவிட நமக்குக் கிடைத்தது " பகவத் கீதை"

குருசேஷத்திரப் போரில் வென்று பாண்டவர் அரசமைத்ததும் கிருஷ்ணன் இனிமேலும் தான் அஸ்தினா புரத்தில் இருக்க இயலாது என்று சொல்லி பாண்டவர்களின் எந்த சமாதானத்திற்கும் மயங்காமல் மீண்டும் துவாரகைக்கு
வருகிறான்! துவாரகையில் யாதவர்கள் ஓயாத தாயாதி / அதிகார/ பதவிச் சண்டையில் பெரும்பாலான யாதவர்கள் மாண்டுபோக, மீதியிருந்தவர்களில் அநேகப் பேர் இந்த சண்டையில் கை, கால் ஊனமுற்றவர்களாக இருந்த நிலையை மாற்ற பெரிய முயற்சி எடுத்துச் சூழலை துவாரகையில் சரி செய்து பின் மன அமைதிக்காக கானகத்தினுள்ளே சென்று விடுகிறான்!

கானகத்தில் தனித்துச்சென்ற கிருஷ்ணன் ஒரு மரத்தடியிலே படுத்து ஓய்வெடுக்க புதர்மறைவினின்று வேடுவன் கிருஷ்ணனை மிருகம்/பறவை என்று எண்ணி எய்த அம்பில் உயிரை விடுகிறான்!

பகவான் கிருஷ்ணர் பூமியில் தோன்றியதிலிருந்து மறையும் வரை வாழ்வில் சந்தித்தது பல சோகங்களையே! என்ற போதும் கிருஷ்ணனின் சார்மிங் பெர்சனாலிட்டி எப்போதும் உற்சாகத்துடன் எந்த சிக்கலையும் எதிர்கொண்ட விதம் இவை மிக உன்னதமானவை!

ஒரு சமயம் கிருஷ்ணனை அவமானப்படுத்த துரியோதனன் தனது அவையினரை கிருஷ்ணன் வரும்போது எழுந்து நின்று மரியாதை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தி வைத்திருந்தான். கிருஷ்ணன் சரியான நேரப்படி அவையில் நுழைய ஆசனத்திலிருந்து தன்னை அறியாமல் துரியோதனன் எழுந்துவிட அவையோர் அனைவரும் எழுந்து மரியாதை செய்தனர். கிருஷ்ணன் அம்மாதிரி கம்பெல்லிங் பெர்சனாலிட்டி!

மேலும் மகாபாரத சமயத்தில் இருந்த நேர்மை, உண்மை, நெறியற்ற சமூகத்தின் தேவை கிருஷ்ணர் மாதிரி உள்ளத் தூய்மையொடு டிப்ளோமேடிக் பாலிடிக்ஸ் செய்யக்கூடிய திறமையான அவதாரமே!

மூன்றரை வயதில் காளிங்கனை வதம் செய்த, பூதகியை வதம் செய்த, மழலைக் குறும்புகளால் கோபியரின் உள்ளம் கவர்ந்த, கோவர்த்தன மலையைக் குடையாக்கி ஆநிரை காத்த கிருஷ்ணனை அரசியல் திரா"விடப்" பெத்தடின் பகுத்தறிவுப் பார்ட்டிகள் அவர்களது கட்சித்தலைமைகள் மாதிரி "ஜல்சா"பார்ட்டியாகப் பார்ப்பது பெத்தடின் போதையாலான தடுமாற்றமே அன்றி வேறென்ன?

"பகவான் கிருஷ்ணன் கடமையைப் பலனை எதிர்பாராமல் செய்து மறக்கப்பட்ட நல்ல நெறிகளை மீண்டும் நிறுவிட்ட அவதாரம்!

பகுத்தறிவுப் பகலவனின் சீழ்பிடித்த சிந்தனையின் சிஷ்யர்கள் எண்ணிக்கொள்வது மாதிரி கோகுலத்து கோபியருடன் காமத்துக்காக வந்த அவதாரம் அல்ல!"


அன்புடன்,

ஹரிஹரன்

Saturday, November 25, 2006

(63) அக்கிரஹாரத்து வந்தேறிகளும் நொங்குப் பனையேறிகளும்

ஆ ஊன்னா எல்லாத்துக்கும் பாப்பான்...ஆ(றி)ய வந்தேறியே... என்ற இனவெறியோடு பகுத்தறிவுச் சேவல்(பிரியாணி)களின் "அறை"-கூவல்கள்!

அன்றைக்கு மதியம் அகத்துக்காரி கைவண்ணத்தில் அக்கறையோடு செய்யப்பட்ட அக்காரவடிசலை உண்டு பசியாறிய பின்பு அக்கிரஹாரத்துத் திண்ணையில் படுத்தபடி காற்றைப் பிரிக்கும் அய்யர்வாள்தான் எல்லாத்துக்கும் காரணம் என்று ஆவேசம்! இவாளது கண்டுபிடிப்பான வேதம் வர்ணாஸ்ரமம் என்பதால் தான் சே! சே! என்று இன்றிருக்கும் எல்லாச் சிரமத்துக்கும் இவாள்தான் காரணம்!

முயற்சி திருவினையாக்கும் என்ற தமிழ் மூதுரையினை சுயமாக முயன்று பார்க்காத மூதேவிகளின் மூலாதார ஓலம் இது தான்!

இந்த இவாள் இருக்காளே இவா எல்லாம் அவாளுக்குள்ளே விட்டே தரமாட்டா? அப்படி ஒரு இன/குல/ஜாதிப் பாசம் அவா மேலே இவாளுக்கு இவா மேலே அவாளுக்கு என்று எத்தனை அக்கறை என்று பிராமணனை நோண்டி நொங்கெடுப்பது பகுத்தறிவு! கனிந்த மாமரம் கல்லடி படும்!

கைலாயத்தில் Knowledge of fruit என்ற ஞானப்பழத்துக்கு நாரதனால் கலகம் விளைக்கப்பட்டு அடித்துக்கொண்டார்கள் சிவபார்வதி குமாரர்கள். கைலாய சிவபார்வதி மீது நம்பிக்கை இல்லையென்ற கொள்கையோடு முற்போக்குச் சிந்தனையோடு தானே நேரடியாகக் கல்லடித்துப் பெற்ற மாங்கனிக்காக எச்சல்வுட்ட ஒரு அல்பத்திற்கு தாடையில் குத்தித் தாம்பூலம் போடவைத்துச் சாதீயம் கண்டுணரச் செய்வது 2006ல் அரசியல் திரா'விட'ப் பகுத்தறிவு!


1950- 60 களில் கடைவீதிக் காட்சியைப் பார்ப்போம்:

*அஞ்சுராந்தலில் ஆறுமுகச் செட்டியார் கடையில ஆறு ஆழாக்கு எண்ணைய் வாங்கிட்டு வாங்க!

*தெருமுக்கு முருகப்பச் செட்டியார் கடையில மூணுவீசை சக்கரை வாங்க மறந்துடாதீங்க!

*வரும்போது அப்படியே வழியிலிருக்கும் வஜ்ரவேல் செட்டியார் கடையில கடுகு உளுத்தம் பருப்பு வாங்கிவந்துடுங்கோ!

*உடுப்பி ஐயர் கடையிலேர்ந்து இட்லி/வடை , சைவச்சாப்பாடு பார்சல் வாங்கிட்டு வந்துடுங்க!

இப்படி தினசரி வணிகத்தில் எல்லாருமே செட்டியார்கள் தான்! வாணிகச் செட்டியார்களது முழுமையான கட்டுப்பாட்டில் வணிகம் தமிழ்நாட்டில் இருந்தது! வெஜிடேரியன் உணவுக்கு ஆரிய வந்தேறிகளின் உடுப்பிஐயர் சாப்பாட்டுக் கடைதான்!

தற்போதைய 2006-ல் கடைவீதிக் காட்சியைப் பாருங்கள்!

*நகர்ப்புறம் என்றால் முன்னாள் பனையேறி செல்வரத்தின நாடார் அண்ணாச்சியின் சரவணா ஸ்டோர்ஸ் தெரியாத ஆள் இருக்க முடியாது!

*வசந்த் அண்ட் கோ என்ற பனையேறி வசந்தகுமார் அவர்களது வீட்டுப் பொருட்கள் கடை அறியாதவர் இருக்கமுடியாது!

*தெரு என்று இன்னும் ஆகிவிடாமல் அங்கே இங்கே என்று நாலே வீடு இருக்கும் புற நகர்ப் பகுதி என்றாலும் அங்கும் எதாவது ஒரு பனையேறி நாடார் அண்ணாச்சி பத்துக்குப் பத்து என்ற சிறிய இடத்தில் ஒரு மளிகைக் கடை / பொருட்கள் கடை வைத்திருப்பார்!

சென்னைக்குள்ளும் தமிழர் வாழும் வெளி மாநிலங்களில்/ வெளி நாடுகளில் நம்ம பனையேறி அண்ணாச்சி ராஜகோபால் தான் சரவணபவன் மூலம் சைவ உணவுப்பிரியர்களைப் பசியாற வைக்கிறார்!

பனையேறி நாடார் அண்ணாச்சிகளின் சரவணா ஸ்டோர்ஸ், சரவண பவன், வசந்த் அண்ட் கோ மற்றும் இதர பெரிய, சிறிய மளிகைக்கடைகள் என்று எல்லா நிறுவனங்களிலும் வந்தேறி அவாள், இவாள்களது அவாளை இவாள் விட்டுக் கொடுக்காததும் இவாளை அவாள் விட்டுக் கொடுக்காததும் என்கிற சாப்டான, தான் அறிந்திருக்கும் தனது வட்டத்தில் சிரமப்படும் சகமனிதனை நேசிக்கும் கான்சப்ட் அமலில் மிலிட்டரி கட்டுப்பாட்டுடன் காணப்படும்.

சென்னையின் , தமிழகத்தின் பல பகுதிகளில் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர்,சிவகாசியிலிருந்து வந்தேறிய பனையேறிகள் மளிகை மட்டும் மக்களின் அத்தியாவசியப் பொருட்கள் வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கின்றார்கள் இன்று.

காரணம் கடினமான உழைப்பு. பல பத்து ஆண்டுகளாக முன்னேற வேண்டும் எனும் முனைப்போடு முட்டி மோதி உழைப்பைச் சிந்திக்கும் தனது திறமையைப் முற்போக்குப் பகுத்தறிவிடமும், அரசியல் திரா'விட'ப் பெத்தடின் கொள்கையிடமும் அடைக்கலம் என அடமானம் வைத்துப் பகுத்தறிவுப் பிச்சை எடுப்பதினை விட சுயமாக உழைப்பதில் சுகம் கண்டவர்கள்.

தமிழகத்தில் தேனீ மாதிரியாக உண்மையான உழைப்புக்கு உரிமையோடு உதாரணம் காட்ட 30-40 ஆண்டுகளாக ஒரு சமூகமாக மிகக் கடினமாக உழைத்து முன்னேறி வந்தவர்கள்!

இந்தப் பனையேறிகள் தமது நிறுவனங்களில் ஆரம்ப காலத்தில் வியாபாரம் ஒரு நிலை உயரும் வரை தனது சுற்றம் / பனையேறி சமூகத்தினின்று மட்டுமே உதவிக்கு வேலைக்கு ஆட்களை நியமிப்பவர்கள்!

சிவநாடார் என்ற பனையேறி கல்வி கற்ற பனையேறி சென்னை பெருங்குடியில் சிவா கம்ப்யூட்டர்ஸ் என்று 1980களின் மத்தியில் ஆரம்பித்து இன்று HCL Computers என்று அமெரிக்க Hewlett Packard Computers உடன் தொழில்நுட்ப உடன்பாட்டோடு மிகப்பெரும் கணிணி ஹார்டுவேரில் இந்திய முகமாக உயரமேறி இருக்கிறார்!

Why பார்ப்பான வந்தேறி? என்று மத்திய/மாநில அரசுகள் கைவிட்ட போதும் Time என்ற கடவுளாகிய காலத்தினால் Y2K bug மூலமாக பிழைப்புவாத அரசியல்வாதிகளால் வெந்தேறிய பிராமண வந்தேறிகள் கணிணி சாப்ட்வேரில் பெரும்பாலும் நலிந்த உடலோடு, செறிவான லாஜிகல் மூளையோடு காணப்பட்ட வந்தேறி பார்ப்பான்களில் ஒருவனான இன்பொசிஸ் நாராயணமூர்த்தி இன்னும் பல பார்ப்பான் வந்தேறிகள் சிறிதும் பெரிதுமாக கணினியில் சாப்ட்வேர் எழுதி வேத நெறிக் கலாச்சாரத்தில் செறிந்த இந்தியர்களின் லாஜிகல் திங்கிங் கெப்பாசிட்டி சுப்பீரியர் எனும் க்ளைம் இல்லாஜிகல் இல்லை என நிரூபித்தனர்.

கூடுதலாக வெளிநாட்டு வைத்தியநாத சுவாமிகளது மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் சாப்ட்வேர் வேலைகளாலும் வர்ணாஸ்ரம, வேத லாஜிக்கல் திங்கிங் என்பதையும் அதன் திறனை வெளிக்காட்ட சந்தர்ப்பம் கிட்டினால் முந்நூறு ஆண்டுகள் ஆங்கிலேயனது அடிமைப்படுத்தல் அதன் முன்பு இசுலாமிய இரக்கமற்ற ஆயிரம் வருட ஆட்சி என எதனாலேயும் இந்தியப் பாரம்பர்ய வேதநெறி கொள்கையினால் செலுத்தப்படும் சிந்தனையை மழுங்க வைத்துவிடாது என முதலில் உலகத்துக்கு மிகச்சமீபமாக மீண்டும் சந்தேகமற நிரூபித்துக் காட்டியவர்கள் வந்தேறிகளான அறிவால் பொருதுபவர்கள் அம்மாதிரியான அறிவால் பொருதுபவர்களது கூடுதல் பங்களிப்புடன்!

எந்த ஒரு புதிய உழைக்கும் களத்துக்கு / இடத்துக்கு வந்தேறியாக வந்தேறும் எவருக்கும் மிக அவசியமானது அவரது ஆக்கத்துக்குப் பக்கவாதம் தரும் அநாவசிய விதண்டாவாதங்களின்று 'உண்மை"யாக அவசியப்படுகின்ற "விடுதலை"யே.

குழுவாய் இருக்கிறார்கள் குழுவாய்ச் செயல்படுகிறார்கள் என்று சுயநல, பிழைப்புவாத அனலில் இட்ட புழுவாய் கிடந்து துடிக்கும் பகுத்தறிவாக முற்போக்காகச் செயல்படுவோர் ஒத்தசிந்தனையோடு குழுவாய்க் கூடிக்கதைப்பதை வந்தேறி,பனையேறிகளின் உழைப்பால் உருவாகும் அவர்களது பொருட்களுக்குத் தரும் முன்பே "டிஸ்கௌண்ட்டாக" அறிந்து/அறிவித்துக் கொள்ளத் தோன்றவில்லை எனில் நீங்கள் எத்தனை பெரிய வந்தேறி, பனையேறியாக இருந்தாலும் பகுத்தறிவு அற்றவர், பிற்போக்குவியாதிதான்! வேத வியாதி,வர்ணாஸ்ரம அடிவருடிகள்தான்!


"செட்டியார்களை ஓட ஓட விரட்டியவர்கள் பனையேறிகளான நாடார்கள்!"

"வந்தேறி உடுப்பி ஐயர்களை ஓட ஓட விரட்டியவர்கள் பனையேறி நாடார்கள்!"

-இச்சாதனையைச் பனையேறி நாடார்கள் செய்தது பித்தலாட்டக் கொள்கைகள், பொய்கள், அரசு அதிகாரத்தினால் அல்ல... இடைவிடாத தமது உழைப்பினால்... கடின உழைப்பினால்.

*செட்டியார்கள் வெறெங்கும் ஓடிவிடவில்லை ஸ்பிக் நிறுவனம், எம்பிஎல், என்று பெட்ரோ புராடக்ட்ஸ், செமிகண்டக்டர்கள், கணினி சாப்ட்வேர் மற்றும் இன்னும் பெரிய வணிகத்துக்கு இடம் பெயர்ந்து விட்டார்கள்.

*உடுப்பி வந்தேறி பாப்பான்களை சென்னை மற்றும் இதர இடங்களில் / மாநிலங்களில்/ நாடுகளில் சைவ உணவு ஓட்டல் தொழிலில் இருந்து ஓட ஓட விரட்டினார்கள் பனையேறிகளான நாடார்கள்! பாப்பான்கள் அதுவரை அடுப்படியிலிருந்தவர்கள் அடுத்தபடியான பாரம்பர்ய கல்வி லாஜிக்கல் திங்கிங் செல்லுபடியாகும் சாப்ட்வேர் தொழிலில் தஞ்சம் புகுந்து பஞ்சம் பிழைக்கின்றார்கள்!

*உழைப்பால்... கடின உழைப்பால் வெட்டியாய்ப் பகுத்தறிவு, முற்போக்கு சிந்தனையாக சாதி மட்டுமே பேசி, வேதம் வர்ணாஸ்ரமம் இவையே பேதத்திற்கான மூலகாரணம் என்று பிதற்றியபடி உழைக்காமல் உட்கார்ந்து குந்தித் தின்னாமல் கடினமாய் உழைத்து உழைப்பாலேயே தமது சமூகத்தினையெ மேம்படுத்திய சம்காலப் பனையேறிகளான் நாடார்கள் போற்றப்பட வேண்டியவர்களே!

கடினமாக உழைத்துத் தனது தகுதியை தயார்நிலையில் வைத்திருக்கும் எவரும் அவரது அன்றைய சமூக நிலையினின்று மேலேறி மேம்பட வழிகள் என்றுமே திறந்தே காணப்படும். பிழைப்பு வாத அரசியல் மூலம் அதிகாரம்
க(கொ)ண்டு, சமூகநீதி என்ற போர்வையில் குரங்கு ஆப்பம் என்று நியாயம் வழங்கிடும் பிழைப்புவாதப் பகுத்தறிவுப் பகலவன்களால் எந்தத் தீர்வும் வராது! இந்தத் தகுதியற்ற சோம்பேறிக் கூட்டத்தின் பிழையான அரசியல் / சமூக சிந்தனைகளால் தகறாறுகள் மட்டுமே என்றைக்கும் விளையும்!


சமூகமே சங்கிலி மாதிரி தொடர்ச்சி கொண்டது, ஒன்றுக்கொன்று தொடர்புள்ளது! சங்கிலியின் ஒவ்வொரு கண்ணியும் ஆரோக்கியத்துடன் வலுவாக இருக்க வேண்டும். அரசியல் திரா'விட'ப் பெத்தடின் பகுத்தறிவு என்ற "துரு" எந்தச் சமூகத்தின் கண்ணியிலும் சேர அனுமதிக்கக்கூடாது. இந்தத்துரு தானும் உருப்படாது. உருப்பட முயல்கின்றவரையும் உருத்தெரியாது உள்ளிருந்தே அழிக்கும் "துரு!" வடக்கு - தெற்கு என்று எதிலும் எங்கும் எப்போதும் பேதம்/பாகுபாடு பேசியே தே(ஏ)ய்க்கும் துரு இது!

ஒரு சமூகத்தின் ஆக்கத்தினை அழித்தொழிக்கும் இந்த அரசியல் திரா'விட'ப் பெத்தடின் பகுத்தறிவு என்ற துருவை உணர்ந்த சமூகத்திற்கு வெற்றிக் கொடிநாட்ட வடதுருவம் தென் துருவம் என்ற எல்லைகள் கிடையாது!


"வந்தேறி அவாள் மாதிரியோ பனையேறிகளான இவாள் மாதிரியோ அந்தந்த சமூகத்தின் உள்ளுக்குள்ளேயே ஒருவருக்கொருவர் அவாளுக்கு இவாள், இவாளுக்கு அவாள் என்று அனுசரணையோடு குழுவாக இருப்பதில் எந்தத்தவறும் இல்லை!"

"ஒரு தனிமனிதன் தனது கடின உழைப்பால் ஒரு துறையில் வெற்றியடைந்து வெற்றிகரமாக விரிவடைவது என்பது வீட்டில் ஆரம்பித்து, தெரு, வார்டு, ஊர், வட்டம், மாவட்டம், மாநிலம், தேசம் என்று பரந்து நீள்வது இயற்கையான நியதி!"

அரசு அதிகாரத்தில் அமர எதையும் பேசிச் செயல்படும் அரசியல் திரா"விட"ப் பெத்தடின் ஏற்றிக்கொண்ட முற்போக்கு, பகுத்தறிவுப் பகலவனைப் போற்றும் வீணர்கள் என்ற குழுவாக ஆவது சொந்த செலவிலே சூனியம் வைத்துக்கொள்வது!


குறிப்பு:

இப்பதிவில் வந்தேறி என்றும் பனையேறி என்றும் திராவிட அரசியல் பகுத்தறிவுப் பகலவன்களது மொழியிலேயே சொல்லியிருக்கிறேன்.

**பனையேறி என்ற சொற்பதம் நாடார் சமூக மக்களைத் தாக்கப் பயன்படுத்தப்படவில்லை! நான் வியப்போடு அவர்கள் உழைப்பை/ அதனால் விளைந்த மாற்றம் + வெற்றியை வாடிக்கையாளர்கள் மீது இவர்கள் வைக்கும் நம்பிக்கையை ஆக்கபூர்வமானதாகவே எப்போதும் பார்க்கிறவன் என்பதைத் தெளிவு படுத்த விரும்புகிறேன்!


அன்புடன்,

ஹரிஹரன்

(62) நான் ஏன் சாதீயம் பார்ப்பதில்லை...

திருச்சிக்கருகில் பெரம்பலூர் ஹேன்ஸ் ரோவர் கல்லூரியில் தொழில்சார் மின்ணணுவியல் (Industrial Electronics) பட்டப் படிப்புப் படித்த காலத்தில் தான் அதுவரை மறவர், கள்ளர், தேவர் என்ற முக்குலத்தோர் சமூகத்தினை மட்டுமே அதிகம் அறிந்திருந்த எனக்கு இதர சமூகத்தினரோடு பழகும் வாய்ப்புக் கிடைத்தது!

விடுதியில் தங்கிப் படித்த காலத்தில் தஞ்சை/ குடந்தை /ஜெயங்கொண்டத்தில் இருந்து வந்து பயின்ற சோழப் பேரரசர்களின் வம்சங்களின் வாண்டையார் /அகமுடையார் வாரிசுகளுடனும், விழுப்புரம், திண்டிவனம், Sriமுஷ்ணம் போன்ற பல்லவ வம்ச, அந்நியர் குன்றிய வன்னியர் நிறைந்த மண்ணின் மைந்தர்களுடனும் பழகிடும் வாய்ப்பு எனது கல்லூரி வாழ்க்கையில் கிடைத்தது.

"நாயகனாக Sriமுஷ்ணம் சின்னராசுவை எடுத்துக்கொள்கிறேன்":

சின்னராசு வாயைத்திறந்து கருத்துக்களைக் கொட்டினால் தான் அவர் "பல்ல"வன் வழித்தோன்றல் என அறிந்துகொள்ளக் காத்திருக்க வேண்டியதில்லை கண்டவுடனே மறுபேச்சின்றி உடனேயே ஒத்துக்கொள்ளலாம்!

சின்னராசு பகுத்தறிவு மற்றும் முற்போக்கு சிந்தனைகளிலேயே ஊறி வளர்ந்தவர். தினசரி குளிக்கமாட்டார். வகுப்பறையில் புரொபஸர் சர்க்யூட் தியரி /எலக்ட்ரிகல் டெக்னாலஜியில் பாடம் எடுத்துக்கொண்டிருக்கும்போது மின்சாரம் பாய்ந்தமாதிரி தன் மறைவிடங்களிலும் / உடலின் மற்ற இடங்களிலும் ஆவேசமகச் சொறிந்து கொள்வார்!

மனிதனின் உடம்பில் வேறு உயிரினம் ஒட்டி வாழ்வதை இவர்தான் எனக்கு நேரடியாகக் கண்டு அறியத்தந்தார். க்ளாஸ் ரூமிலேயே சின்னராசு தனது உடம்பில்/உடையில் அடைக்கலம் புகுந்த சீலைப்பேன்களை குதிரைமீதேறாமல், வாள்,வேல் இல்லாமல் சொறிந்து போரிட்டு கொன்று ஊதித்தள்ளுவார்!

இச்செய்கைகளாலேயே நம் சின்னராசுப் பெருமானார் பெரும்பாலும் பெஞ்சிலே தனிமையில் விடப்படுவார்! இவர் அமர்ந்திருக்கும் பெஞ்சில் அமர்வதற்கு உண்மையிலேயே நெஞ்சுரம் வேண்டும். சரக்கடித்தபடி சாக்கடையோரம் விழாமல் கூடுதலாக சிலமீட்டர் தூரத்தை ஸ்டெடியாக நடந்து சமாளித்து கல்லூரிக்குள் வந்துவிட்ட பெரம்பலூர் லோக்கல் டே ஸ்காலர்கள் இவர் அருகில் விழுந்தமர்வார்கள் சில நேரம்.

இதிலே நம் சின்னராசு ஐயாவை யாராவது விழியிலே விழி இருத்தி யாரும் நேரிடையாக ஒரு பார்வை சாதாரணமாகப் பார்த்துவிடக் கூடாது! "என்னடா மொறைக்கிற" என்று அவரது முற்போக்குச் சிந்தனை வழிநடத்த பகுத்தறிவு துணைநிற்க பார்வை பார்த்தவனோடு பொருதத் தயாரகிவிடுவார்! சின்னராசுவின் கையில் சிக்காத சட்டைக்காலர்களே இல்லை கல்லூரியில் எங்களது வகுப்பில்!

17 வயதில் கல்லூரிக்கு வந்த சின்னராசு கல்லூரி முடியும் வரை இப்படித்தான் இருந்தார்! திருமேனியில் சீலைப்பேன் திரிகிற அளவுக்குச் சுகாதாரத்துடன் திரிந்த சின்னராசுவால் தினசரி காலை 6மணிக்கு எழுந்து குளித்து கோயில் சென்று கல்லூரிக்கு வரும் ஹரிஹரனை போடாங்க...அய்யப்பயலே... பாப்பாரநாய் என்று அழைக்கின்ற அரசியல் திரா'விட'பெத்தடின் முற்போக்குத்தனமும், அதற்கான பகுத்தறிவுமட்டும் இருந்தது!

கல்லூரி இறுதியாண்டு இறுதி நாட்களில் ஹரிஹரனின் ஆட்டோகிராப் புஸ்தகத்தில் சின்னராசு எழுத்துப் பிழையோடு இப்படி எழுதியிருந்தார் " நண்பா நீ எல்லோரிடமும் சமமாகப் பழகவேண்டும்" என்று!

சுரீர் என்று உறைத்தது எனக்கு சின்னராசுவுக்கு நகைச்சுவை இவ்வளவுக்கு இருப்பதை உணர்ந்து கொள்ளாத ஜடமாக நான் தான் இருந்திருக்கிறேன் என்று! ஏதோ ஒரு சமயத்தில் எனது சட்டையை இவருக்கு "காரணமாக" உடுத்த உடன்படாததால் நான் பாசிஸவாதியாகிப்போனது நினைவுக்கு வந்தது. ( உடை தர உடன்படாவிட்டாலும் அறையில் இவர் உடை பட்டதால் அதுவரை உடைபடாத அறைச்சுகாதாரம் எல்லோர் உடையிலும் சீலைப்பேன்வந்து உடைபட்டது, மிகுந்த சிரமத்தில் சுகாதாரம் அறைநாகரீகத்துடன் மீட்கப்பட்டது வேறு விஷயம்!)

சின்னராசு எனக்கு உணர்த்தியது அரசியல் திரா'விடப்' பெத்தடினின் வீச்சமடிக்கும் வீச்சினை மட்டுமே! பகுத்தறிவுப் பகலவன் ஈவெராவிடமிருந்து திராவிட உணர்வுள்ள சின்னராசு கற்றது சுகாதாரமின்மையான தினசரி குளிக்காததை மட்டுமே! சின்னராசு சமத்துவம் என்று அறிந்து கொண்டது எல்லா விடுதி மாணவர்களது பல்துலக்கும் பிரஷ்ஷும் தன்னுடையதே என்று பாவித்தது மட்டுமே!

இவ்வளவுக்கும் சுயமாய் பகுத்தறிவோடு, முற்போக்குச் சிந்தனையோடு சுகாதாரமாய் இருந்த சின்னராசு டே ஸ்காலர்களாக வந்து கொண்டிருந்த தாழ்த்தப்பட்டவர்கள் மீது கொண்டிருந்த கருத்து " இவனுங்களுக்கு எல்லாம் நாம புல்மீல்ஸ் வாங்கித்தந்திருப்போம்... அதை தின்னுட்டுக் கை கழுவின ஈரம் காயுமுன்பாக வேறு யாராச்சும் வந்து ஏ.ஆர்.ஆர் பாக்கு வாங்கித்தந்தா அவங்களோட போற பயலுகதான இவனுங்க"

சின்னராசுவின் முரட்டுத்தனத்திற்கும் முட்டாள் தனமான கோபாவேசத்திற்கும் காரணம் அவரது அறியாமை மற்றும் அது தரும் தாழ்வு மனப்பான்மை + இயலாமை! இதை மறைக்கத் தனது இயலாமையால் சின்னராசு மாதிரியானவர்கள் அணிந்துகொள்கின்ற போர்வையே சாதி + அரசியல் திரா'விட'க் கவசம்! வர்ணாஸ்ரமம், வேதத்தின் மீது சேறடிக்கும் என்பதான பேச்சு எல்லாம்!

"Keep your eyes and ears open for information to flow in!" என்பதில் "கீப்"-க்கு மட்டும் கண், காது, இன்னபிற எல்லா உறுப்புகளையும் திறந்துவைத்திருக்கும் இவர்களது முற்போக்குத்தனம் உண்மையான பகுத்தறிவா?

நான் சின்னராசு மாதிரியான நபர்களை வைத்து, இவர்கள் துப்பிய சாதி எச்சல் கருத்துக்களால் இவர்களது படையாச்சி-வன்னியசமூகமே இப்படித்தான் என்று பகுத்தறிவோடு முற்போக்காக நான் முடிவெடுக்கவில்லை! நான் சாதீயம் பார்ப்பதில்லை! சுகாதார/ ஒழுக்கக் கேட்டுடன் திரியும் சாதி பிராமணனை சாதிக்காக அரவணைப்பதுவும் இல்லை!

"பொதுஅறிவு என்று எல்லோருக்கும் பொதுவாக இருக்கும் விஷயத்தை சொற்பமாகப் பயன்படுத்தும் சிறுபான்மையான பலருள் அடியேனும் ஒருவன்".

"Especially in bad-worse-worst circumstances I continue to keep-on learning to see the Phenomenon and not the person! Phenomenons are universal but not persons!" இதற்கு அவசியமானது பொது அறிவே அன்றி திரா'விட'அரசியலில் பெத்தடின் பகலவானாய் காணக்கிடைக்கும் பகுத்தறிவு அல்ல!


அன்புடன்,


ஹரிஹரன்

Thursday, November 23, 2006

(61)அறிவுப்புரட்சிக்கு அக்க(ரை)றையான கட்டிப்புடிவைத்தியம்

"இந்தியாவுக்கு கம்பல்சரி மிலிட்டரி சர்வீஸை விட நல்ல வேலையிலிருக்கும் தனி நபர்களது கம்பல்சரி எஜுகேஷன் ஸ்பான்ஸர்ஷிப் சர்வீஸ் மிக மிக அவசியமானது."- ஹரிஹரன்

கொஞ்சம் பொறுமையோட முழுக்கப்படிக்கவும்.

நாடு விடுதலைபெற்று 1950களிலிருந்து 1975 வரை பல சமயங்களில் இந்திய தேசம் உணவுப் பஞ்சத்தால் அரிசி, தானியம் கிடைக்காமல் அமெரிக்கா கடலில் கொட்டும் கோதுமை US AID என்ற பிளாஸ்டிக் கித்தான் சாக்குகளில் ஓசியில் தந்ததை உண்டு அம்பது கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியா உய்த்திருந்த சூழ்நிலை இருபது வருடங்களில் திரு. சுவாமிநாதன் மாதிரியான விவசாய விஞ்ஞானிகளின் அயராத உழைப்பால் பசுமைப் புரட்சி நடத்திக் காட்டியதால் இன்று நூற்றுப்பத்துக் கோடியாக மக்கள் தொகை உயர்ந்தபோதிலும் இந்தியாவில் இன்னிக்கு உணவுப்பஞ்சம் இல்லை. இந்திய உணவுக்கழகத்தில் தேவைக்குமதிகமான உணவு தானியங்கள் கையிருப்பு இருக்கிறது. (ஏழைமக்களுக்கு வழங்கப்படும் விநியோக நிர்வாகக் குழப்பத்தோடு இதைக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.)

விளைவிப்பவன் விலை நிர்ணயம் செய்யமுடியாத நிலைக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இவற்றில் முக்கியமானவை சில:

1. விளைவிப்பவன் கல்வியறிவு அதிகம் அற்றவனாயிருப்பது. இதனாலே சந்தையில் நேரடியாக விவசாயி அவன் உருவாக்கிய பொருளுக்கு விலை நிர்ணயம் செய்ய வழிமுறைகளை அறிந்திருக்காதது.

2. விவசாய பொருட்கள் விலையினை இடைத்தரகர்கள் நிர்ணயிக்கும் நிலை. இடைத்தரகர்கள் அரசியல் வாதிகளின் கூடுதல் கரம். விவசாயிக்கு உதவுவதுமாதிரி பேசி நடித்து ஆனால் உண்மையில் அவர்கள் பொருட்களைக் கொள்ளையடிப்பவர்கள் நம்மூர் அரசியல் வாதிகள்.

இதுல முக்கியமா விவசாயி மட்டும் என்றில்லை எந்த ஒரு தனிமனிதனும் தான் மேம்படமுடியாததன் பின் புலத்துல இருக்குறது கல்வி மற்றும் அத்துறையிலான அனுபவ அறிவு. அடிப்படையில கல்வி இல்லைன்னா அனுபவம் முறையாகக் கிடைக்காது அந்த அனுபவங்களும் வகுதியாக கசப்பான வலிமிகுந்த தோல்வி அனுபவங்களாகவே இருக்கும்.

நூத்திப்பத்துக் கோடி மக்களுக்கு சுயமா உணவு உற்பத்தி செய்து பசுமைப் புரட்சி, அதே மாதிரி பெருவாரியான மக்களுக்கு பால் உற்பத்தி செய்து வெண்மைப் புரட்சி செய்திருக்கிறோம்.

எங்களுக்குக் உண்ண உணவில்லை, பால் வாங்கிக் குடிக்க வசதியில்லை என்போர் அந்நிலையில் இருக்க கல்வி இல்லாததே பிரதானம். அரசியல் வாதிகளுக்கு இவர்கள் மேம்பட்டுவிடக்கூடாது என்பதே குறிக்கோள் ஆட்டுமந்தை ஜாதி /மொழி வியாபார அரசியலுக்கு இவர்கள்தானே மூலப்பொருள்! படிச்சுட்டா கல்வி கண்ணைத் திறக்க வைத்துவிடும் இல்லியா?

"அரசு செய்யாததை தனிமனிதர்கள் உயரிய குறிக்கோளுக்காக வேண்டித் தங்களின் தனித்த பங்களிப்பு மூலம் கல்விப் புரட்சியை ஏற்படுத்தலாம்."

2006ல் எவ்வளவோ இந்தியர்கள் வெளிநாட்டில் / வெளிநாட்டு நிறுவனங்களில் இந்தியாவில் என்று சிறப்பான ஊதியத்துடன் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

"அயல்நாடுகளில் மாதம் ஆயிரம் டாலர்களிலிருந்து சம்பளம் வாங்குவோர், இந்தியாவில் மாதம் இருபதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குவோர் அவர்களது மாத சம்பளத்தில் இரண்டு சதவீதம் ஒதுக்கி தனது 40வது வயதுக்குள் தன் குடும்பம் சாராத ஓர் ஏழைக்கு கல்விக்கு உதவ வேண்டும். "

நாற்பதுக்கு மேல் தனது குடும்பத்தினரது உயர்கல்வி, திருமணம் என்று பொருள்தேவை கூடுதலாகும். எவ்வளவோ லோன்வாங்கி அபராத வட்டிகட்டும் நீங்கள் ஒரு ஏழையின் கல்விக்கு ஓரளவுக்கு உதவிட முடியாதா? கண்டிப்பாக முடியும்.

அறுபது வயதில் ஓய்வு பெறும் நிலையிலிருப்போர் செட்டில்மெண்ட்டுடன் பணியினின்று ஓய்வு பெறும் போது மனநிறைவோடு அவர்களது கடமையாக ஒரு 3% ஒரு ஏழைக்கு கல்விக்காக உதவ ஒதுக்கவும்.

அரசு வரி விதித்து இந்தப் பணிக்காக பணத்திற்கு வழி செய்தாலும் கேடு கெட்ட அரசியல் வாதிகளால் நலத்திட்ட நிதி களவாடப்படும். எனவே அரசியல் அரசு தள்ளியே நிற்கட்டும்.

எனவே பொதுமக்கள் கண்டிப்பாக அவரளவில் நேரடியாக நம் சமூதாயத்தில் இருக்கும் ஏழைக்கு கல்விக்காக ஸ்பான்ஸர் செய்யவேண்டும். கல்வியால் மட்டுமே ஒருமனிதன் மேம்பட முடியும்.

தனிநபர்களின் சேமிப்பு என்று பல லட்சங்கள் / கோடிகள் வங்கியிலே மட்டும் முடங்கி இருந்தால் சமூகத்திற்குப் பலனில்லை. பணக்கார தொழிலதிபராகிய அரசியல்வாதி திரும்பக்கட்டாத மஞ்சள் கடுதாசி தருவதற்காகவே தரப்படும் வங்கி லோனுக்குப் பயன்படும். இதற்கு சேமிப்பில் ஒரு பகுதியை கல்விபரப்பும் செயலுக்கு மங்களகரமாகத் தருவது எவ்வளவோ நல்லது!

"வீட்டில் உள்ள பெண்கள் தாங்கள் எப்போதோ அணிவதற்காக பெரிய தங்க, வைர நகைகள், மிக உயர்ந்த பட்டுப்புடவைகளில் ஒன்றைக் குறைத்தாலே ஏழைக்குப் படிப்பு ஸ்பான்ஸர்ஷிப் சாத்தியப்படும்.

தனிமனிதர்கள் வெறுமனே நீங்கள் அஞ்சாயிரம் வருஷத்துக்கு முந்தி இப்படி அதனால நாங்கள் இன்று இப்படி என்று மட்டுமே இன்னும் வெட்டியாகச் சமுதாயத்தின் சீர்கேடுகளுக்குக் காரணமான கல்வியின்மையை நீக்கிடும் தீர்வுக்காகச் சிந்திக்காமல் விவாதிப்பதால் விருட்சமாக விரோத மனப்பான்மையை வளர்த்துக்கொண்டு, அதையே அடுத்த தலைமுறைக்கும் பரிசளிக்கலாம்! இதுதான் தீர்வா? யோசிக்க வேண்டும் நாம் எல்லோரும்!

பேசலாம், விவாதிக்கலாம், கருத்து மோதல்கள் நடத்தலாம் ஆனால் இவைகட்கு நடுவே நம் முன்னோர்களை விடச் செயலில் ஆற்றலோடு விளங்கும் இத்தலைமுறையினராகிய நாம் நமது வாழ்நாளில் பேச்சிலர் லைஃபில்/திருமணமான புதிதில் ஒருமுறையும் பின்பு ஐம்பது வயதுகளில் மற்றொரு முறை என்று குறைந்த பட்சம் இரண்டு கல்வியற்ற ஏழைகளுக்கு கட்டிப்புடி வைத்தியம் செய்து கைதூக்கி மேலேற்றவும் வேண்டும் தனிப்பட்ட அளவில்.

இந்தியாவுக்கு கம்பல்சரி மிலிட்டரி சர்வீஸை விட நல்ல வேலையிலிருக்கும் தனி நபர்களது கம்பல்சரி எஜுகேஷன் ஸ்பான்ஸர்ஷிப் சர்வீஸ் மிக மிக அவசியமானது.

சாதி வியாபார அரசியல் நடத்துபவர்களால் ஆக்கமாக ஏதும் செய்ய இயலாது! ஆனால் முறையாகச் சிந்தித்திச் செயல்பட்டு வெற்றிகரமாக இருக்கும் ஒவ்வொரு தனிமனிதனாலும் அவனது நல்லவிதமான சமுதாய பங்களிப்பினால் சமுதாயத்தை மேம்படுத்த முடியும்.

பதிவுகளைப் போடும் வலைப்பதிவு உலகம் வெற்றியாளர்கள் நிரம்பியது. இம்மாதிரி செயல்கள் மிக வெகுதியாகச் செய்வதைத் தூண்டுவது, சொன்னபடி செய்வது என்பனவற்றால் வலைபதிவர்கள் அடுத்த நகர்வாக மேம்பாட்டுடன் நகரலாம் நெஞ்சை நிமிர்த்தியபடி!

அன்புடன்,

ஹரிஹரன்

(60) சாப்பாட்டைச் சந்தோஷமாக சாப்பிடுவது எப்படி?

எப்படி எப்படின்றது டாப் ட்ரண்டு இப்போ.

தமிழ் மணமே கல்யாணமண்டபம் மாதிரி மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இட்லி, வடை, போண்டா, பஜ்ஜி,முறுக்கு, சோறு தயாரித்து சாப்பிடச் சொல்றதும்... கரிசனத்தோட பிரிஜ்சுக்குள்ள தண்ணீர்பாட்டில் வைக்க சொல்லித் தருவதுமாகவும், பொண்ணுவீட்டுக்காரங்க அப்பளம், சூடா(காப்பி/டீ)தண்ணி தயாரிப்பைக் கோலம் போட்டு மங்களகரமாச் சொல்லிட்டு இருக்கும் போது ரொம்பச் சாப்பிட்ட ஆளை சும்மா எப்படி இருக்கறது என்பதும், முறுக்குத்தின்னுட்டு முறுக்கிக்கிட்டே கலாட்டா பண்ற பார்ட்டிங்களுக்கு எப்படி தர்ம அடி போடச்சொல்றது என்று களை கட்டி இருக்கு.

நாமளும் ஜோதியில ஐக்கியமாகணுமில்லியா?

சாப்பாட்டைச் சந்தோஷத்துடன் சாப்பிடணுமில்லியா? சந்தோஷம் முழுமையா சாப்பிடும்போது எப்போ கிடைக்கும்? தெரிஞ்சுக்கணுமில்லியா?


"பத்து விரல்களால் நாம் கஷ்டப்பட்டு தினம் உழைச்சா, உட்கார்ந்து அஞ்சு விரல்களில் அள்ளி அள்ளி சந்தோஷமா சாப்பிடலாம்"

எதோ நம்மால ஆனது.

அன்புடன்,

ஹரிஹரன்

Monday, November 20, 2006

(59) அதென்னெங்க... ஆமை புகுந்தவீடு வெளங்காதுன்னா?

தமிழ்நாட்டில் பாலை முன்பு இல்லாமல் இருந்தது. இப்போது நீர் வறண்டு விட்ட பாலாறு மாதிரி பல நதிப் படுகைகளை பாலைன்னு சொல்லிக்கலாம்.

தமிழ் இலக்கியத்தில் சொல்லப்படுகின்ற ஐந்து வகை நிலப்பரப்புகளான குறிஞ்சி, முல்லை, மருதம்,நெய்தல், பாலை இவையனைத்திலும் இருக்கும் மக்களிடம் புழக்கத்தில் இருப்பது "ஆமைபுகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் வெளங்காது" என்ற பழமொழி.


அமீனா எனும் கோர்ட் சிப்பந்தி வழக்கு, வாய்தா, ஜப்தி என்று ஒரு வீட்டிற்குள் வரும் நிலை வந்தால் அக்குடும்பம் சட்ட சிக்கலில், வில்லங்கத்தில் மாட்டியதால் விளங்கி மேலே வருவதற்கான ஆற்றல் கோர்ட், கச்சேரி என்று அலைந்து திரிய நேரிடுவதால் முடங்கிவிடும் என்ற எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளலாம்.

அதுசரி! ஆனால் ஆமை என்ற உயிரினம் என்ன மனிதனுக்கு தீமை விளைவிக்க முடியும். மிக மிக மெதுவாக ஊர்ந்து செல்லும் ஒரு பிராணி, கடித்தோ, பிராண்டியோ, விஷம் கொண்ட நாக்கால் கொத்தியோ என்று இல்லாத ஒரு உயிரினம் எப்படி அதன் வசிப்பிடமான கிணறு, குளம், கண்மாய் போன்ற நீர் நிலையினின்று, நெய்தல் என்ற கடலும் கடல் சார்ந்த இடங்களில் கடலை ஒட்டிய கடற்கரை, மார்ஷ் லேண்ட் எனப்படும் சதுப்புநிலம் போன்ற பகுதிகளில் வாழும் ஆமை எங்கனம் ஒரு முடிவெடுத்து ஒரு மனிதனின் வீட்டுக்குள் நுழைந்து அங்கு வசிப்போருக்குத் தீங்கு விளைவிக்க இயலும்?

நமது பெரியவர்கள் அப்படி ஒரு உயிரினத்தைப் பழித்துப் பழமொழி சொல்லியிருக்கவும் வாய்ப்பில்லை. ஆக பழமொழியை திரித்துப் பொருள் கண்டிருப்பதுதான் கண்டிக்கப்படவேண்டிய தவறாகும்.

பெரியவர்கள் குறிப்பிடும் ஆமை எது?

கல்லாமை என்ற கல்வி அறிவை அடையாமை என்பது அறியாமையை வரவைக்கும்.

அறியாமை என்பதுடன் முயலாமை என்ற முயற்சி செய்யாமை சேர்கின்ற போது அது இல்லாமையை அழைத்து வருகிறது.

இல்லாமையில் இருப்பவனை இயலாமை இருந்து படுத்தும்போது இயல்பாய் அவனுக்கு வருவது பொறாமை!

ஆகவே மனிதன் தனது மனம் எனும் வீட்டில் கல்லாமை, அறியாமை,முயலாமை, இல்லாமை, இயலாமை, பொறாமை ஆகிய ஆமைகளை உள்ளே வரவிட்டுவிட்டால் அவனால் வாழ்க்கையில் விளங்கி மேலேறி வந்துவிட இயலாது.


அதே வேளையில் ஒருவன் இந்த ஆமைகளை அவனது மனதுக்குள் வரவிடாமல் தடுத்து வெற்றி கொண்டால் அவன் வாழ்க்கையில் விளங்கி மேலே வந்துவிடுவான்!

நம்ம பெரியவங்க சொன்னா அது பெருமாள் சொன்ன மாதிரி! சரியாகத்தான் இருக்கும். நாம் தான் கால ஓட்டத்தில் திரிந்துவிட்ட பொருளை சரியாக தெரிந்து புரிந்து நடந்து கொள்ளவேண்டும்!


அன்புடன்,


ஹரிஹரன்

(58) பல்லிளிக்கும் இன்றைய தமிழ்குடிதாங்கி பல்லவ-சோழர்கள்

சென்னைத் தலைநகரிலிருந்து ஆரம்பிச்சுக் கணக்கெடுக்கலாம் வாங்க!

கத்திப்பாரா வேண்டாம் அது நாற்சந்தி விட்டுவிடுவோம்.

பல்லாவரத்தில் அனகாபுத்தூர் கூட்டுரோடு,

தாம்பரத்தில் கிழக்குபக்கம் வேளச்சேரி கூட்டுரோடு,

மேற்குதிசையில் படப்பை கூட்டுரோடு,

வண்டலூரில் கிழக்குப்பக்கம் திருப்போரூர் கூட்டுரோடு,

மேற்குதிசையில் காஞ்சிபுரம் கூட்டுரோடு,

கூடுவாஞ்சேரி தாண்டி சிங்கப்பெருமாள்கோயில் திருப்பெரும்பூதூர் கூட்டுரோடு,

செங்கல்பட்டு காஞ்சிபுரம் கூட்டுரோடு, செங்கல்பட்டு கல்பாக்கம் கூட்டுரோடு,

கருங்குழி-வேடந்தாங்கல் கூட்டுரோடு,

மேல்மருவத்தூர்தாண்டி திண்டிவனம் பாண்டிச்சேரி கூட்டுரோடு


இது எல்லாமே மூணுரோடு சந்திக்கும் கூட்டுரோடு எனப்படும் முச்சந்திங்க!

சரி ராமாயணத்துக்கு வருவோம். "டென்சென் ஆகாம கொஞ்சம் பொறுமையோட முழுக்கப் படிச்சுட்டு மறக்காம உங்க கருத்தைப் பின்னூட்டுங்க." ராம பிரானுக்கு பட்டம்சூட்டி அழகுபார்க்க ராமனின் தந்தையாகிய, பத்து ரதங்களை ஒரே நேரத்தில் திறனுடன் செலுத்தும் திறன் கொண்ட அரசன் தசரதன் விரும்பி ஏற்பாடுகளைச் செய்ய கூனியின் நினைவூட்டலால் கைகேயி தான் முன்பு ஒரு சமயத்தில் தசரதனிடமிருந்து பெற்ற வரத்தினை தசரதனிடம் நினைவூட்டி அதனை செயல்படுத்த கௌசல்யாவின் புத்திரனான ராமபிரானுக்குப் பதிலாக தனது மகன் பரதனுக்கு முடிசூட்டிவிட தசரதனை அவன் தந்த வாக்குறுதியால் நிறைவேற்றிக்கொள்கிறாள்.

வாக்குதந்தது தசரதன். வாக்குப் பெற்றது கைகேயி. தசரதனின் விருப்பம் ராமபிரானுக்கு முடிசூட்டுவது. கைகேயி Contractually right. ஆனால் பெற்ற விதம் தனது விருப்பத்தால் அல்ல. கூனிக்கிழவி தூண்டிவிட்டதால். பரதனுக்கு முடிசூட்டும் அதே வேளையில் இளவரசன் ராமபிரான் 14 ஆண்டுகள் வனவாசம் சென்று சிரமப்படவேண்டும் என்று கூனிக்கிழவியின் சாடிஸ்ட் விருப்பத்தை Contract condition ஆகப் போட்டதால் Morally incorrect!

ராமபிரான் முடிசூட்டிக்கொள்ள ஆசைப்படவில்லை எனவே வருத்தப்படவில்லை.

ஆசையே படாத ராமபிரான் தனது தந்தை தசரதன் தனது சிற்றன்னை(பெற்ற தாய்கூட இல்லை) கைகேயிக்குத் தந்த வாக்கினை நிறைவேற்ற வாக்குத்தவறியவன் என்ற பழிக்கு தன் தந்தை தசரதன் தன் பொருட்டு ஆளாகிவிடக்கூடாது என்று அதுவரை மாடமாளிகையில் வசித்த இராமபிரான் மரவுரிதரித்து கானகம் செல்கிறான். 14வருடம் வனத்திலே வாழ்ந்து பல்வேறு சிரமங்களை மானுடனாக எதிர்கொண்டு இறுதியில் வெல்கிறான்.

சத்தியவாக்கு தருவது மற்றும் (தந்தை) தந்த சத்திய வாக்கை நிறைவேற்றுவது என்பதை இறைவன் இராமபிரானாக அவதரித்து நெறியோடு மனிதனாக வாழ்ந்து சென்ற வாழ்க்கையைச் சொல்லும் இராமயணத்தில் காணக்கிடைக்கிறது. வேதநெறிகள் பின்பற்றி உண்மை, நேர்மை, செறிந்த வாழ்க்கைமுறையை மக்களுக்கு உணர்த்துவதற்க்காக சனாதன தர்மம் வாழ்க்கை முறையில் பாரதத்தில் நடந்த நிகழ்வை, வரலாற்றினை எளிதானவகையில் வெகுஜனத்தின் தினசரி வாழ்வு நேர்மை நிரம்பியதாக இருப்பதற்குத் தொகுக்கப்பட்ட சொல்லப்பட்ட சம்பவங்களே இதிகாசம் History as ithas happened என்பதே இராமாயணம்.

தசரதன் தந்த வரம்- கைகேயி கூனிக்கிழவியால் உந்தப்பட்டு பரதனை உள் நுழைத்தவிதம் - அதுவும் மறுநாள் காலை இராமபிரானுக்குப் பட்டாபிஷேகம் என்று 12மணிநேரம் கூட அவகாசம் தராமல் தசரதனை மடக்கியது இவை அனைத்தும் ரசிக்கத்தக்க பொலிடிகல் டிராமா! இன்றைக்கும் வெரி ரெலவண்டான முக்கியத்துவம்வாய்ந்த அரசியல் நிகழ்வு!

இத்தகைய ராமபிரானின் தாசனாகப் பெயர்கொண்ட தமிழ்க்குடிதாங்கி மருத்துவர் ஐயா ராமதாசு (தமிழ்ப்பாதுகாப்பு இயக்கங்களே தாஸை தாசுன்னு தமிழைத் தாங்கிட்டேங்க!) அரசியலில் நுழைந்ததே பெரும் வன்முறையோடுதான்!

தான் சார்ந்திருக்கும் வன்னிய சமூகத்தவர் பிரதானமாக வாழ்கின்ற மாவட்டங்களில், வன்னிய சமூகத்தவர் பிரதானமாக நூறாண்டுகளாக தமது நிழலில் இளைப்பாறி மேற்கொண்டு வயக்காட்டில் வேலைசெய்ய, சிறார்கள் ஏறிவிளையாடிய, பெண்கள் ஊஞ்சலாடி மகிழ்ந்த, வண்டிகளில் பயணம் செய்வோர் மேற்கொண்டு பயணிக்க, மற்றும் ஆயிரம் இயற்கைச்சீற்றங்களான புயல், மழை காற்று, மற்றும் தன்னை சார்ந்து ஒட்டிக்கொண்ட வெட்டுக்கிளி மாதிரி ஒட்டுண்ணிகளால் சாய்ந்துவிடாத ஆயிரம் சாலையோர மாபெரும் புளியமரங்களைப் இவரது குடும்ப அரசியல் எழுச்சிக்காக தீயிட்டுக்கொழுத்தியபின் வெட்டிச்சாய்த்த மரவெட்டிக்கிளியானவர்.

சமீபமாக தமிழ்குடிதாங்கும் மருத்துவர் ராமதாசு ஐயா அவர்கள் சாதி மகசூல் தேர்தல் களத்திலே பலமுறைகண்டவர். தமிழக அரசியல் களத்தில் தேர்தல்கால சாதி வியாபரத்திற்கு பெரியஅளவிலே சந்தையை ஏற்படுத்தியவர்! பெரிய சாதிவியாபார தொலைநோக்கு கொண்டவர்!

பொதுவிலே இவர் வைத்த வாக்குறுதி (செய்து கொண்ட சத்தியம்) இது :

"நானோ என் குடும்பத்தாரோ எம்.எல்.ஏ, எம்.பி, மந்திரி என்று எந்த விதமான பதவிகளும் வகிக்க மாட்டோம்! இந்த சத்தியத்தை மீறிப் பதிவி வகித்தால் எங்களை முச்சந்தியில் நிறுத்தி வைத்து சாட்டையால் அடிங்க என்பது தான் இவர் தந்த முதல் முக்கிய வாக்குறுதி!"

இன்றைக்கு தமிழ்க்குடிதாங்கி மருத்துவர் இராமதாசு தன்மகன் சின்ன ஐயா அன்புமணியை தேர்தலிலே தேர்ந்தெடுக்கப்படாமல் ராஜ்ஜியசபா எம்பியாக்கி இன்று அகில உலகம்போற்றும் வகையில்(டெல்லி டெங்கு , சிக்கன் குனியாவெல்லாம் பார்ப்பனீய சதி) இந்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சராக ஆக்கித் தனது வாக்கினைக் காப்பாற்றியிருக்கிறார்! ஏழைக்கேத்த எள்ளுருண்டையாக தனது சம்பந்தி கிருஷ்ணசாமியை கோஷ்டிசண்டை தமிழக காங்கிரஸ் தலைவராக்கியிருக்கிறார்!

காங்கிரஸுக்கு தமிழக அரசில் கூட்டணி மந்திரிசபை அமைக்க வாய்ப்பு வரும் நேரத்தில் இன்னொரு மக்கள் தியாகி விஷ்ணு பிரசாத் தமிழக மந்திரி ஆவார். யாரு விஷ்ணு பிரசாத்ன்றீங்களா? மக்கள் பொதுக்குழு ஏகோபித்து மந்திரியாக்கிய சின்ன மருந்து அன்புமணியின் மச்சானுங்க! கிருஷ்ணசாமியின் புதல்வர். தமிழக மந்திரியாக இதுக்கும் மேல தகுதி எதானும் தேவையா?

மேலே முதல்பாராவில் சொன்னமாதிரி வன்னியபூமியில் பல இடங்களில் கூட்டுரோடாக முச்சந்திகள் இருக்கின்றன! சாட்டை/சவுக்குக்கு அந்நியன் வேண்டாம் வயக்காட்டில் மாடுகளோடு போராடும் பாட்டாளி வன்னியனிடமிருந்தே பெற்றுக்கொள்ளலாம்!

தமிழ்க்குடிதாங்கி தசரத தந்தை ராமதாசும் தனயன் இராமபிரான் அன்புமணியும் வாக்குசுத்தம் பற்றி சிந்திப்பார்களா? இல்லை சிதறி ஓடுவார்களா? அல்லது பாமக மற்றும் தமிழகத்தின் அரசியல் திரா'விட' கட்சிகளின் வழக்கமான நேர்மையாகச் சிந்திக்கச் சொன்னவரை சிதறி ஓடச்செய்வார்களா?

இந்துமதம், வேதநெறி மற்றும் இராமாயணம் இவையெல்லாம் வாக்குச்சுத்தம், தந்தவாக்கைக் காப்பாற்றத் உண்மையிலேயே தியாகம் செய்வதைச் சொல்வதால் புகலிடமாக ஈரோட்டு வெங்காயத்தினைப் போற்றித் துதித்திவிட்டுப் ப.பகலவனின் பகுத்தறிவுக் கொள்கையைத் தத்தெடுத்துக்கொண்டால் தமிழ்நாட்டில் பிழைக்கவா முடியாது! இவரது அரசியல்காட்டில் அரசியல் திரா'விட'பகுத்தறிவுமேகம் முப்போகம் விளைக்க அவசியமான (சோ)"மாரி" இப்ப மாதிரியே எப்பவும் பொழியும்!

தமிழ்க்குடிதாங்கி மருத்துவர் ராமதாசுக்கும் தமிழின் தமிழ் கருணாநிதிக்கும் சுவையான புரிதல்கள் இருக்கிறது. ஏனெனில் இருவரும் வியாபாரிகள்.

"கருணாநிதி பிரதானமாக தமிழை வியாபாரம் செய்து பிழைப்பவர். துணை வணிகமாக சாதியை வியாபாரம் செய்பவர்."

"தமிழ்க்குடிதாங்கி ராமதாசு பிரதானமாக சாதியை வியாபாரம் செய்து பிழைப்பவர். துணை வணிகமாக தமிழ்(ப்பாதுகாப்பு) வியாபாரம் செய்பவர்."

ஆனா பாமக தலைவர் ஜிகேமணி ரொம்ப நல்லவர். இந்த தேர்தல்ல சந்தனக்கொள்ளையன் வீரப்பனின் மனைவி தேர்தலில் போட்டியிட்ட காரணத்துக்காக தொகுதியையே மாற்றிக்கொண்டுவிட்டவர்.

ஆனா காடுவெட்டி குரு பயங்கர காமடியானவர். பிளாப்பான ரஜினியின் பாபா திரைபடத்தின் பெட்டியை ஜெயங்கொண்டம் ரங்கா தியேட்டரில் ஸ்க்ரீனைக் கிழித்து என்று போராடி வண்டியெல்லாம் வச்சு முந்திரிக்காட்டுக்கு எடுத்துப்போய், கஷ்டப்பட்டு கைக்காசைப் போட்டு திருட்டு விசிடி எல்லாம் தயாரிச்சா பாவம் பாபாவைத்தான் வாங்கிப்பார்க்க ஆளில்லை! பெரிய நஷ்டம்! படப்பொட்டியக் கடத்தும் முன்பே பாபா ப்ரீவ்யூல என்ன ரிவ்யூன்னு கேட்கலை போலிருக்கு! பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்னு விஷ் பண்ணமுடியலை ஐ யம் வெரி சாரி! இந்தச் சம்பவத்துக்கப்புறமா காடுவெட்டி குரு ஏனோ மாவீரன் குரு ஆகிட்டாருங்க!

அன்றைய மகேந்திர,நரசிம்ம பல்லவ மற்றும் ராஜராஜன், ராசேந்திர சோழ அரசர்கள் மக்களுக்காக வாழ்ந்தார்கள். மக்களின் நலத்துக்கு என்று பல மருத்துவச்சாலைகள் அமைத்தார்கள்.

இன்றைய இந்தப் பல்லிளிக்கும் பல்லவ-சோழர்களான பெரிய,சின்ன மரு(ந்)துகள் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனி & ஆராய்ச்சி நிறுவனத்தினைச் சத்தமில்லாமல் சுருட்டிட முயலும் வல்லவர்கள்!


"Leadership by Example என்பது தமிழக அரசியலில் இருக்கும் சுயநல கயமைக் கட்சித் தலைமைகளிடம் காணப்படாத அம்சம்! "

அன்புடன்,

ஹரிஹரன்

Sunday, November 19, 2006

(57) ஈவெரா வெங்காயம் & சனாதனதர்மம்... இந்துமதநெறி...வழிபாடு

கடவுள் இல்லை.. இல்லை... இல்லவே இல்லை என்று சொன்ன கரும்பாறை ஈவெரா மக்கள் மனம் உருகி வழிபடுகின்ற கடவுள் சிலைகளை வெறும் கல் என்று சொல்லி ஒதுக்குவதே பகுத்தறிவு என்றார்.

இது என்ன வெங்காயம் என்று உண்மையைப் பகுத்தறிந்து பார்ப்போம்.

இன்று திரைகடல் ஓடித் தமிழர்கள் பல்வேறு நாடுகளில் பொருளீட்டச் செல்கிற இத்தருணத்தில் சுவைகூடுகிறது உருவ வழிபாடு எத்துணை உணர்வுபூர்வமானது என்று அறிந்துகொள்ள!

அயல் நாட்டிலும் , உள் நாட்டிலும் வேறு இடங்களில் குடும்பத்தினரைப் பிரிந்து வாழ்வோர் அவரது மேஜையின் மீது பெற்றோர், மகன், மகள் புகைப்படத்தினை வைத்திருப்போம், பர்சுக்குள் மனைவி, காதலி, காதலன், புகைப்படம் இருக்கும். கட்சித்தலைவன், சினிமாநடிகன் என்றும் இஷ்டமானவர்களது புகைப்படம் வைத்திருப்பதைக்காணலாம்.

ஈவெரா போட்டோவை ஈவெரா வாழ்ந்தகாலத்தில் வாழ்ந்தவர்கள் அவரை நேரிடையாகக் கண்டுணர்ந்தவர்கள் புகைப்படத்தில் இருப்பது ஈவெராவேதான் என்று சொன்னால் மட்டும்தான் ஈவெரா என்று ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது பகுத்தறிவாகாது என்பது உண்மை என்று ஏற்றுக்கொள்வது பகுத்தறிவு.

நியூயார்க் கான்க்ரீட் காட்டில் தனது அலுவலகத்தின் மேஜைமேல் இருக்கும் புகைப்படம் அவனது இருபதாயிரம் மைல்கள் தள்ளி தமிழகத்தின் பட்டிக்காட்டில் இருக்கும் வயதான தாயை மீண்டும் தரிசிக்க உதவுகிறது. மாண்டுபோய்விட்ட தந்தையை மீண்டும் காண புகைப்படம் உதவுகிறது.

அரேபியப் பாலைவனத்தில் ஏதாவது எண்ணைய் நிறுவன வாயிலில் நுழைவுச்சோதனையின் போது "Gatepass" எடுக்கும்போது பர்சுக்குள் புகைப்படமாய் இருக்கும் மனைவி /காதலி /மகன்/மகளை கண்டு உணரமுடிகிறது புகைப்படம் வாயிலாக, உடனடியாக.

நூறுதரம் பர்சிலிருந்து எடுத்து எடுத்துப் பார்த்து காதலியைக் கண்டு உணரவைத்து முத்தமிட்டு மகிழ்ந்த புகைப்படம் சிறிது காலத்திலேயே நைந்துபோய் கிழிபட்டுவிடக்கூடியது. கண்ணாடியோடு சட்டம் போட்டு வைத்தால் புகைப்படம் இன்னும் கொஞ்சம் கூடுதலாக சில காலம் நிலைத்து நிற்கும். பூச்சித்தாக்குதல், வேதிப்பொருள் நிறமிழப்பு இவைகளால் புகைப்படம் பிரதிபலிப்பது ஈவெராவா, இல்லை வேறு எதானும் வெங்காயமா என்று சந்தேகம் வரும்.

காலம் கடந்து நிற்கும் மெய்யாக இறைவனை பஞ்சலோகத்திலும், கரும்பாறைக் கற்களிலும் திருமேனி செய்து இறைசக்தியை உள்ளிருத்திப் பிரதிஷ்டை செய்தார்கள். தினம் பக்தி உணர்வோடு அர்ப்பணித்தபடி ஆடிப் பாடித் தொழுதார்கள்.

தலைவன்/தலைவி மீது காதல் உணர்வோடு இருப்போருக்கு காதலை வெளிப்படுத்தியபடி புகைப்படம் அஞ்சலில் வரட்டும் ஆனந்தக்கூத்தாடுவார்கள். அம்மாதிரியே பக்தியுணர்வோடிருப்பவர் இறைவனது உருவம் கண்டு உணர்ந்த வேளையில் ஆனந்தக் கூத்தாடுவார்கள்!

ஆக தாயாக, தந்தையாக, காதலியாக, மகன், மகளாக புகைப்படமாக இருப்பது வேதிப்பொருள் காகிதம் என்று சம்பந்தப்பட்ட நபர் உணர்வதில்லை. இத்தருணத்தில் உருவமாகத் தென்படுவது வெறும் வேதிப்பொருளும் காகிதமும் என்று நினைவுக்கு வந்தால் அப்போது காதலி காணாமல் போய்விடுகிறாள், தாய், தந்தை, மகன், மகள் அதில் பிரதிபலிக்கப்படுவதில்லை!

உணர்வுகளால் உருவம் பிரதிபலிக்கப்படும்போது புகைப்படத்தின் உள்ளிருக்கும் உறவு புலப்படுகிறது. உணர்வற்ற கரும்பாறையாக மனது இருக்கும்போது கடவுள் சிலை கல்லாகத்தான் தெரியும். உணர்வு அற்றுப்போய் வாழ்கின்ற கரும்பாறையாகிப்போன ஒரு குத்துகல்லுக்குக் கடவுளுக்கு பதில் கல்தான் புலப்படும்!

பாசம் எனும் உணர்வு மேலோங்கியநிலையில் மனதினால் பார்க்கப்படும் போது வேதிப்பொருள் காகிதம் தன் நிலைஉயர்ந்து தாய்/தந்தை/காதலி என்று உறவாகிறது. பக்தி எனும் உணர்வு மேலோங்கிய நிலையில் மனதால் பார்க்கப்படும்போது கடவுள் கற்சிலையில் புலப்படுவார்!

இன்றைக்குத் தனது இளைய தலைமுறைக்கு தனது முன்னோரை அடையாளம் காட்ட உறுதியான நிலையான பிரதிபலிப்பாகவே சிலைகள் அமைகின்றன. பலநூறு ஆண்டுகள் முன்பு வாழ்ந்த ராஜராஜ சோழனை, திருமலைநாயக்கரை காணாதவர்கள் அவர்களது உருவச்சிலைகளினின்று எவ்வாறு இருந்தார்கள் என அறிய முடிகிறது.

இறைவுணர்வோடு பக்தியோடு தியானநிலையில் அமர்ந்த கடுந்தவம் புரிந்த, தான் எனும் அகந்தை அகற்றி இறைசக்தியிடம் அர்ப்பணித்த அடியவர்கள் >தாம் கண்ட இறைவனை அவர்கள் கண்டு உணர்ந்ததை காட்சியாக்கியிருக்கின்றார்கள் சிலைகளாக.

நூறாண்டுகளுக்கு முன் தோன்றிய ஈவெரா இன்று உணரப்படுவது அறியப்படுவது உருவங்களாகிய சிலை மற்றும் புகைப்படங்கள் வாயிலாகத்தான்.அவர் சொன்ன வார்த்தைகள்தான் பகுத்தறிவுவாதிகள் பின்பற்றும் வேதம். இதை வெளிக்காட்டிடும் அடையாளமாக, குறியீடுகளாக பகுத்தறிவுஆட்கள் அணிவதுதான் கருஞ்சட்டை! (வேத அறிவுகொண்ட பிராமணனுக்குப் பூணூல் அடையாளம் மாதிரி!)

உருவ வழிபாட்டை வெங்காயம் முட்டாள்தனம் என்ற ஈவெரா வெங்காயம் இன்று இளையவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுவதே சிலை + புகைப்படம் போன்ற உருவப் பிரதிபலிப்புகள் மூலமே!

கோவிலில் இறை உருவங்களுக்கு அபிஷேகம் செய்யப்படும் பால் மற்றும் இதர பூஜைப்பொருட்கள் விரயம் என்கிற பகுத்தறிவுப் புனிதங்களுக்கு இவர்கள் பிறந்தநாள் மற்றும் நினைவுநாட்களின் போது சாற்றப்படும் மாலைகளும், வைக்கப்படும் மலர்வளையங்களும், சிலைமுன்பு கைகூப்பி கரும்பாறைச் சிலையை தொழுவது என்பதுமானவை தானாடாவிட்டாலும் தன்வழியே சனாதனதர்ம கலாச்சாரம் எனும் சதையாடுவதே என்பதை அறியாதமாதிரி நடிப்பது பகுத்தறிவு!

தனிமையில் காதலன்/காதலி புகைப்படங்கள் முத்தமிடப்படும் போது உணரப்படுவது காகித வேதிப்பொருளைத் தன் இதழ்களால் தீண்டும் செயலா?

எப்பேர்ப்பட்ட விஞ்ஞானியானாலும் ஒரு காகிதவேதிப்பொருள் துண்டைக் கண்டதும் புன்முறுவல் பூத்து மை லிட்டில் டார்லிங் என்று சொல்லியபடியே பேத்தியை நினைவு கொள்வது எனும் செய்கை சொல்வது விஞ்ஞானி அஞ்ஞானி ஆகிவிட்டார் என்பதையா?

ரஜினியோட பாட்ஷர் திரைப்படம் தெலுங்குக்குப் போய் பின்னர் தமிழில் மீண்டும் விஜய்காந்த் நடித்த கஜேந்திராவாக வந்தது மாதிரியான உறவு வேத அறிவுக்கும் பகுத்தறிவுக்குமான உறவு!


வேத அறிவு பிரகடனங்கள் பொதுவில் எல்லா மனிதனுக்குமானது. பகுத்தறிவு பிழைப்புவாத மனிதனுக்கானது!

வேத அறிவு நிஜமானது வேதத்தின் பின்னே போகிற நிழல்தான் பகுத்தறிவு!

வேதம் சொல்லும் நிஜம் பல நிறங்களோடு வர்ணமயமாக இருக்கும். நிழல் எப்போதுமே கருமைதான்!

என்றுமே நிழல் நிஜம் ஆகாது என்பதை பிழைப்புவாத பகுத்தறிவும் அறிந்தே செய்யும் மாய்மாலம்தான் கருஞ்சட்டைகளின் சேட்டை!

தமிழ்க்கடவுள் முருகன் சரி இருக்கட்டும்... பகவான் கிருஷ்ணன் வருணாசிரம போதிப்பாளன் எனவே எப்படி பகவான்?... தமிழன் நீரை வணங்கியவன் எனவே அக்னியை வணங்கமுடியாது என்பதான பிழைப்புவாதத்தினால் விளைத்துக்கொண்ட பேத உணர்வுகளோடு பார்த்தால் மனம் போல மாங்கல்யம்!

"நிறுவனப்படுத்தப்பட்ட மதங்களின் அச்சில் இன்னுமொரு சேர்க்கையாக பெரியார்மதம் புத்தம்புதிய ரிலீசுக்காக நெடுங்காலமாக இதர நிறுவனப்படுத்ப்பட்ட மதக்கொள்கைகளை விமர்சிக்காது ஆபிரகாமிய மதங்களின் அடிவருடியபடி, மஞ்சள்துண்டு அணிந்தால் ஆக்கம் என்று பகுத்தறிவுப் பகலவனின் கொள்கையை மூத்த தளபதிகள் சோழிஉருட்டிப் பலன்கேட்டபடி வழிநடத்தியபடி உருவாகிவருகிறது! இதுவே இவர்களது செயல்கள் "விடுதலை" செய்கின்ற "உண்மை"


அன்புடன்,

ஹரிஹரன்


Saturday, November 18, 2006

(56) இன்று நான் புதிதாய் பிறந்தநாள்!

இன்னிக்கு 18 நவம்பர் எனது பிறந்தநாள். அதனால் என்னன்றீங்க! நான் பிறந்த நாளைவிட பிறந்த ஆண்டு சரித்திர முக்கியம் வாய்ந்தது.

1969 ரொம்ப முக்கியமான வருஷம். ஹரிஹரன் பிறந்த ஆண்டு என்பதால் அல்ல!
விண்வெளி அறிவியல் ரீதியாகவும் தமிழகத்தின் அரசியல் ரீதியாகவும்.

நீல் ஆம்ஸ்டிராங் நிலவிலே கால்பதித்தானா இல்லை அமெரிக்க நெவெடா பாலைவனத்தில் எடுத்த படங்களை நிலவிலே கால்வைத்ததாகக் கதை விட்டார்களா என்பதற்கு இன்றுவரையில் சிறுவயதில் நான் நிலவில் பார்த்த இன்றும் குழந்தைகள் பார்த்து ரசிக்கும் ஊன்றுகோலுடனான கிழவி தான் சாட்சி!

இதே 1969ல் தற்போதைய முதல்வர், தமிழின மான, சமூகநீதி காவலர் கருணாநிதி நேர்மையுடன் தமிழக முதல்வராக அரியணை ஏறிய ஆண்டு.

இந்த 37 ஆண்டுகளில் ஹரிஹரனை சில பல பிரச்சினைகள் Hurricane புயல் மாதிரி சுழன்றடித்தபோது ஹரி"can do it" என்று அரிக்கேன் விளக்காய் ஹரிஹரனுக்கு இருட்டில் வழிகாட்டி நடத்துவது ஹரியும் ஹரனுமான நாரயணனே!

ஐந்தாறுமாதமாகிய என் தமிழ்மணத் தொடர்பு இன்று எனது இந்த 38வது வயது துவக்கத்தை கூடுதலாக சுவைகூட்டியதாக ஆக்கியிருக்கிறது. அரசியல் களத்தில் நேரிடையாக எதிர்தரப்பில் இருப்போரது கருத்தை அறிந்து (அதிர்ந்து)கொள்ள முடிகிறது.


என்னுடய எண்ணங்களை என்போக்கில் எழுத இந்த வலைப்பதிவு. இதில் தொடர்ந்து தமிழக அரசியல் குறித்து கருத்துக்களை எழுதினாலே புகழ் /இகழ் வெற்றி/தோல்வி சந்தோஷம்/கவலை என்றில்லாமல் "ஸ்திதப்ரக்ஞன்" ஆகிவிடலாம் என்று நம்புகிறேன்!

எனது வலைப்பூவிற்கு வருகை தந்த, வந்துகொண்டிருக்கும், இனிவரப்போகும் அனைவருக்கும் மேலான என் நன்றிகள்.

வலைப்பதிவு,தமிழ்மணம், தேன்கூடு என்று இணைத்துக்கொண்டதில் கனடியக் கால்கரியிலிருந்து ஐரோப்பா மத்தியகிழக்கு இந்தியா சிங்கைவழியாக நியூஸி கிறிஸ்ட்சர்ச் வரை பல தமிழ் நெஞ்சங்களையும் அவர்களது எண்ணங்களை அறிந்து கொள்ள முடிகிறது.

"அடுத்தவர் மனதிலான எண்ணங்களை அறியும் ஜன்னலாகிய இந்த வலைப்பதிவு உலகத்தை எனது 38வது பிறந்தநாளின் மிகச் சிறந்த பரிசாக எண்ணுகிறேன்."

அன்புடன்,

ஹரிஹரன்

Tuesday, November 14, 2006

(55) மக்கள் நலனை கோவிந்தா போடுவோருக்கு "பஜகோவிந்தம்"

"வேதமே விஷ விருட்சம் என்று அதிலே பகுத்தறிவுப் பகலவன் அமிலம் பாய்ச்சியதாகக் கருதினால் அது முழுமையான பகுத்தறிவல்ல. கனக்கும் கரும்பாறையாகி பாரதத்தின் பாரம்பர்யமான பகுத்தறியும் அறிவின் மீது விழுந்த ஒரு பாறாங்கல் சீர்மிகுந்த, செறிவான, பரந்து பட்ட இந்துமத வேதத்தை என்றைக்கும் சிதைத்திட முடியாது!"

பல்வேறு காலத்தில் இந்துமதம் ஷீணித்திருந்தபோது (வலுகுறைந்தபோது) இந்துமதத்தில் ரிஷிகள் / முனிவர்கள் மாதிரி பரந்துபட்ட அறிவுடன் பெரியோர் தோன்றி பாரதத்தின் வாழ்க்கை நெறியான இந்துமதத்தை மீண்டும் சுணக்கத்திலிருந்து மீட்பது தொடர்ச்சியாக நிகழ்வது.

சமஸ்கிருதம் பாப்பான் பாசைன்னு பல இந்துமத நூல்கள் வாழ்வியலில் தினசரியாகப் பின்பற்ற வேண்டிச் சொல்லப்பட்ட பல நல்ல கருத்துக்களைக் பல காலமாக 40-50 வருஷம் பின்பற்றாமல் விட்டு விட்டதால் தரமான வாழ்க்கைக்கு பெரிய சங்கடம் ஏற்பட்டிருக்கிறது.

இன்றைக்கு தமிழகத்தில் 40 ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கும் இயக்கங்கள், பகலவனாய் பகுத்தறிவைப் பரப்பிய தாய்க்கழகம் என்பவை ஆதி சங்கரர் அருளிய பஜ கோவிந்தத்தின் முதல் மூன்று சுலோகங்களைக் கற்று அதன் பொருளை அறிந்து அவற்றைப் பின்பற்றி இருந்தால் நாடு பெரிய அளவில் சுபிட்சம் பெற்று இருந்திருக்கும்:


எந்நேரமும் சொத்து, பொருள் என்று பேயாய் அலையும் அரசியல் தலைமையிலிருக்கும் கருணாநிதியும் ஜெயலலிதாவும், கி.வீரமணியும் கண்டிப்பாக கற்று, அறிந்து, முழுமையாகப் பின்பற்ற வேண்டிய சுலோகம் இது!

பஜகோவிந்தத்தில் இரண்டாவது சுலோகம்.

மூட ஜஹீஹி தனாகமத்ருஷ்ணம்
Moodha Jahihi Danaagamatrsnam
குரு சத்புத்திம் மனசி விதிர்ஷ்ணம்
Kuru Sadbuddhim Manasi Vitrsnam
யல்லபசே நிஜகர்மோபாடம்
Yallabhase Nijakarmopaattam
வித்தம் தேன வினோதய சித்தம்
Vittam Tena Vinodhaya Cittam
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்

Moodha - மூட - fool
Jahihi - விட்டுவிடுதல்-giveup
dana agama trsnam - பொருள் சேர்க்கும் வெறி -thirst to posses wealth
kuru - உருவாக்குதல் - create
satbudhim - உண்மை பற்றிய அறிவு - thoughts of reality
manasi- தன் மனதில் - in your mind
vithirshnam- ஆசைகள் அற்ற நிலை- devoid of passions
yathu-உடன் இருப்பவை - with whatever
labse- உனக்குக் கிடைப்பவை (முன் பிறப்பின் பரிசு)-you get (as reward of past)
nija karmaa- உனது செயல்களால்-by your actions
upattam- ஈட்டப்பட்டவை - obtained
vittam- பொருள் - the wealth
thena- அதனுடன் - with that
vinodhaya- காட்டிட- entertain
cittam- உன்மனம் - your mind
bhaj-தேடு- seek -
Govind - கோவிந்தனை

சுருக்கமாக ஆங்கிலத்தில் விளக்கம் சொன்னால் இப்படி :

Oh You fool give yp the thirst to posses / aggrandize wealth.
Create in your mind, devoid of passions, thoughts of Reality.
With whatever you get ( as a reward of your past) entertain your
mind to be content.

எப்படியாயினும் எதைச் செய்தேனும் செய்து பணம், நகை, சொத்து என்று பொருளைச் சேர்த்துக் குவிக்க என்ணும் மனதுடைய மூடனே உனது பணம், பொருள் குவிக்கும் பேராசையை விட்டு விடு! மாற்றாக உன் மனதில் இந்தப் பேராசை உந்துதல்களை நீக்கிட உண்மையான எண்ணங்களை உருவாக்கு. உனக்கான வாழ்க்கையில் எதெல்லாம் உனக்குக் கிடைக்கிறதோ அவை உனது முற்பிறப்பு எனும் செயல் cause களினால் விளைந்த carried over பலன்களின் effect. என்று உன் மனதுக்கு எடுத்துக்கூறி மனதை நிறைவடையச் செய்வாய் என்பது சுருக்கமான பொருள்.

அடிப்படையான அறிவியல் தத்துவமான Cause and Effect என்பதை இந்துமத தத்துவம் முற்பிறப்பு, பலன் என்கிறது. நவநாகரீக யுகத்தில் இது "Luck factor" என்றும் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

ஆக பணம்,நகை, சொத்து என்ற பொருள் குவிப்பு அரசியல்வாதிகளால் திறம்படச் செய்வதற்கு அவர்களது தனிப்பட்ட நிறைவற்ற, பேராசைகொண்ட மனமே பிரதான காரணம். மனதைச் சுத்தகரிக்க எந்த முயற்சியும் செய்யாமல், பொதுவாக மக்களின் நல்ல நலமான வாழ்க்கைக்குச் ஹிந்துமத வாழ்க்கைமுறையில் சொல்லப்பட்ட கருத்துக்களை கடவுள் மறுப்பு, ஜாதி, பார்ப்பானீயம், வடமொழி மறுப்பு என்று பகுத்தறிவுப் போர்வையில் முட்டாளாக்கியதில் நல்லது எது என்று அறிந்த்திடாமல் உண்மையான உண்மைக்கு விடுதலை தந்த கரும்பாறைகள் கொண்ட கொள்கைகள் பகுத்தறிவா?

அடுத்த இந்த மூன்றாவது பஜ கோவிந்த சுலோகம் கூடுதல் ஸ்டெப்னி வாழ்க்கைத்துணையுடனான பெரியார்மட(த) / அரசியல் திரா'விட' இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் அவர் வழி நடக்கும் குட்டிப் பகுத்தறிவுப் பகலவன்கள் மற்றும் சுயமரியாதைப் புலி / சிங்கங்களுக்கும் மற்றும் சுயமரியாதைப் புலி / சிங்கக் குட்டிகளுக்கும் மிக "ரெலவண்டான" சுலோகம்.

இவர்கள் இதைப் படித்து, பொருளறிந்து அதன்படி நடந்தால் நாடு சுபிட்சமடையும்!


நாரிஸ்தனபரனாபிதேசம்
Naaristanabharanabidesam
த்ரிஷ்ட்வா மா கா மோகாவேசம்
Drstva Maa Gaa Mohaavesam
ஏதான்மாம்சவாசதிவிக்ரம்
Etanmaamsavasadivikaaram
மனஸி விசிந்த்யா வாரம் வாரம்
Manasi Vicintaya vaaram vaaram
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்

நாரி -பெண் - women
ஸ்தனபரநாபிதேசம்- முலைகள்-தொப்பூள்-தேகம் -bosom
த்ரிஷ்ட்வா - பார்த்து-having seen
மா கா - வீழ்ந்து இரையாகாதே-donot fall prey
மோகாவேசம்- பெண்ணாசை -Maddening delusion
ஏதத் - இவையெல்லாம் -this is
மாமிச - மாமிச சதை - of flesh
வஸ ஆதி - கொழுப்பு ஆகியன- of fat etc..
விகாரம்- மாற்று உருப்பெற்ற- modification
மனஸி - உன் மனது- your mind
விசிந்த்யா - நற்சிந்திப்பு- think well
வாரம் வாரம் - மீண்டும் மீண்டும்- again and again
bhaj-தேடு- seek -
Govind - கோவிந்தனை

ஆங்கிலத்தில் சிறு விளக்கமாகச் சொன்னால் இது தான் அர்த்தம்:

"Donot fall prey to the maddening delusion (desire) of Seeing the full bosom ( body) of young maidens (women) and their navel. Educate your mind by telling all this is nothing but a modification of flesh and fat. Think well in your mind again and again! seek Govind.. seek Lord govind. "

பெண்ணாசை(ஆணாசை) மோகம் தம் தலைக்கேற்றிக்கொண்ட பல தமிழக அரசியல் திரா'விட' இயக்கத் தலைமைகள் அறம் பிறழ்ந்து, இல்லாள் தாண்டி, இல்லற அறம் ஸ்டெப்னியாகக்கூட இல்லாமல் இஷ்டத்துக்கும் ஸ்டெப்னி ஸ்பெஷல் சபலிஸ்டுகளாகிப்போனதில் சமூகம் தவறான வழிகாட்டலில் கலாச்சாரத்தைச் சிதைத்த முன்னோடும் கருப்பாக இருக்கின்றார்கள்.

இன்றைய அரசியல் தலைவர்கள் இந்துமதம் காட்டிய வாழ்க்கை நெறிகளை அவர்கள் பிழைப்புவாதத்திற்காக நெறிக்காமல் விட்டிருந்தால் இந்துமத, வேத, இந்திய வாழ்க்கைமுறைக்கு நெறிகட்டியிருக்காது.

"இந்துமத/ வேத நெறி வாழ்க்கை நியதி நெறிமுறைகள் பணம், பொருள், சொத்து இருக்கவே கூடாது எனக் கூறவில்லை. இவை மீது தீராத மோகம் /வெறி கூடாது என்றுதான் கூறுகிறது."

"அம்மாதிரியே பெண்/ஆண் கூடிவாழும் இல்லறமே கூடாது என்று எங்குமே கூறவில்லை. பெண்/ஆண் மீதான அளவற்ற பேராசை மோகம் தவறு என்று தான் கூறுகிறது."

நானறிந்தவரையில் கடந்த 75ஆண்டுகளாக தமிழகத்துப் பகுத்தறிவுப் பகலவன்கள் எல்லோரும் ஸ்டெப்னி துணையின்றி வாழ்ந்ததில்லை. இவர்க்ளுக்கு இது ஆளுமையாகவும் / ஆண்மையின் வெளிப்பாடாகவும் இருக்கிறது.

அரசன் எவ்வழி அவ்வழியே மக்கள்!

அளவுக்கு மீறி பெண்ணின் உடல் மீது மோகம் என்பதுதான் தமிழக திராவிட இயக்கத்தவர்களை இந்த ஸ்டெப்னி வாழ்க்கைத்துணைக் கலாச்சாரத்திற்கு இட்டுச் செல்கிறது. அதிகாரத்தைப் பயன்படுத்தி நடிகைகளோடு முறையற்ற உறவுகள் இன்ன பிற...

கூடுதலாக இந்த நெறியற்ற வாழ்தலை..தமிழர் வாழ்வுமுறை என்று ஜல்லியடிப்பு மேற்கோளாக கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்குமாதிரி கூத்தியா இருக்கணும்" என்று திசை திருப்பல்கள் வேறு!

அரசியல்வாதிக்குக் கூடுதலான ஸ்டெப்னி வாழ்க்கைத்துணை கொண்ட வாழ்க்கை என்று அமையும் போது தேவைகள் பலமடங்கு கூடுதலாகிறது. மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதிக் களவாணியாக ஆகியே தீரவேண்டும். மக்கள் நலனுக்கு மிகக் கேடான வாழ்வுநெறி இது!

எனவே மக்கள் நலனுக்கு கோவிந்தா போடுவோரை படிக்கச்சொல்லுங்கள் பஜகோவிந்தத்தை!

பகலவனாய் பகுத்தறிவு பேசி பகல் கொள்ளையடிக்கும் இந்த வெள்ளையுஞ் சொள்ளையுமாய் மஞ்சள் துண்டுபோட்ட மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதிப்பற்றாக்குறை மஞ்சக்கடுதாசி நிறையத்தரும் அரசியல் திரா'விட' பெத்தடின் இயக்கப் பிரதிநிதிகளுக்கு அவசியம் தாருங்கள் பஜகோவிந்தத்தின் புத்தம் புதிய தமிழ்ப் பொழிப்புரையுடன் கூடிய பதிவின் பிரதியை!

வேதம் , வடமொழி என்ற இவை பாப்பான்,அக்ரஹாரம் மட்டுமே படிக்கவேண்டிய விஷயம் இவை என்று இன்று இவர்கள் சொல்லுவது மிக பேதம் மற்றும் அக்கிரமமான அயோக்கியத்தனம்!

பஜ கோவிந்தம்... பஜ கோவிந்தம். கோவிந்தனைத் தொழுது தேடுவோம்! எல்லோரும் மகிழ்ச்சியான முழுமையான சீர்மிகு வாழ்விற்கு!

அன்புடன்,

ஹரிஹரன்

(54) யாருங்க நீங்க?

உடலால பெரியவராகிய ஆனால் மனதால் உண்மை அறியாத குழந்தைகளாக இருக்கும் குழந்தைகளுக்கு குழந்தைகள் தினமான இன்று இது apt ஆக அப்பீலானதால இந்தப் பதிவு!

பொதுவா இது பத்தி நிறையக் கேள்விப்பட்டிருப்போம் ஆனால் இதுல நேரடியாக என்ன இது என்று அறிவதற்கு முயற்சியோடு முயல மாட்டோம். முன்னெல்லாம் அதாவது வெள்ளைக்காரன் அடிமைகளான இந்தியர்களுக்கு என்று உருவாக்கிய இன்றைய கல்விமுறையான அடிமைத்தனமாக மனனம் செய்ததை திருப்பி ஒப்பிக்கும் மெக்காலே கல்விமுறை திணிக்கப்படுமுன் எல்லோரும் இதை தினசரி முயன்று இருக்கிறார்கள்!

தினசரி வாழ்வில் நாம் ஒவ்வொருவரும் பெரும்பாலுமாக பெற்றோருக்கு மகன் / மகளாக, வாழ்க்கைத்துணைக்கு கணவன் /மனைவியாக, குழந்தைகளுக்கு தாய்/தகப்பனாக, பல்வேறு உறவுமுறைகளாக, நண்பராக, அலுவலகத்தில் பணியளிப்போராக/பணிபுரிவோராக என்று இப்படித்தான் இருக்கிறோம். அடுத்தவருக்கு இன்னாராக என்று! உண்மையில் தான் யார் என்று அறிய முற்படுவதேயில்லை. 95% நபர்கள் இந்த எண்ணம் தோன்றாத அளவிலேயே வாழ்ந்து மடிகிறார்கள்.

வாழ்ந்தபோது நாட்டியப் பேரொளி பத்மினியின் அழகை வருணித்து ரசிக்காதவர்கள் இல்லை. ஏராளமான நாட்டியத்திறமை அதனால் ஈட்டப்பட்ட பெரும்பொருள் இருந்தும் ஒருநாள் தூங்கச் சென்றவர் எழவேயில்லை! மறுநாள் குளிரூட்டப்பட்ட பேழையினுள் நாட்டியப்பேரொளி! அதே கை கால்கள் ஆனால் செயல்படா சடலம். நேற்றுவரை இவை பத்மினியின் நாட்டியத்தை வெளிப்படுத்தியவை! நிறைபார்க்கும் இயந்திரத்தில் நிறுத்தால் நேற்றைக்கு பத்மினி உயிரோடு இருந்தபோது இருந்த எடைக்கும் உயிரற்ற பத்மினியின் சடலத்திற்கும் எடையில் மாறுபாடு இல்லை!

பின் எது பத்மினியிடமிருந்து விடைபெற்று விலகியதால் பத்மினியின் சடலத்தினால் நாட்டியத்தை அபிநயிக்க இயலாது வெளியே நீண்டநேரம் வைத்திருந்தால் அழுகக்கூடிய சடலமாக குளிர் பேழைக்குள் வைக்கும்படி ஆகிப்போனது?

இறைத்தன்மையான ஆத்மா, பத்மினி என்று பெயரிடப்பட்ட ஸ்தூலத்தைச்(உடலை) செலுத்திய சூட்சுமசக்தியான ஆத்மா ஸ்தூலத்தின் ப்ராரப்தம் முடிந்ததும் விலகி விடைபெற்றது!

(அனைவரும் அறிந்த நபர் என்பதால் சமீபத்தில் இறைவனடி சேர்ந்த பத்மினியை உதாரணமாகச் சுட்டி இருக்கிறேன்)

ஒவ்வொருவரும் தனியே அமர்ந்து ஒவ்வொருவரும் தினமும் ஒரு 5-10 நிமிடம் தன்னோடு பேசவேண்டும். தன் காலைச் சுற்றிய பாம்புகளாகிய பந்தங்களின் நினைவுகளை ஒதுக்கித் தனியாக அமர்ந்து தனக்குத் தன்னையே அறிமுகம் செய்து கொள்வதையே ஹிந்துமதம் தியானம் என்று அழைக்கிறது. ஹதயோகமாகி மெடிட்டேஷன் மற்றும் யோகா என்று இது உலகெங்கும் கமர்ஷியல் சிதைவுகளோடு பின்பற்றப்படுகிறது!

"இறைத்தன்மை என்ற ஆத்மா என்பது எலக்டிரிசிட்டி மாதிரி." ஸ்தூலம் (உடல்) என்பது சாதனங்கள்! மின்விசிறி, பல்பு, ரெப்ரிஜிரேட்டர், மைக்ரோவேவ் ஒவன், ஹீட்டர்,காலிங் பெல், டிவி இன்னபிற சாதனங்கள் என்று ஒவ்வொருவரும் அவரது குணாதிசயங்கள், சிந்தனை மற்றும் செயல்பாடு இவை காரணமாக ஒவ்வொரு வகையான சாதனங்கள்!

பல்பின் கடமை ஒளி தருவது. பல்பு ப்யூஸானால் ஒளியைத் தராது. குற்றம் பல்புடையதே அன்றி எலக்டிரிசிட்டியின் குற்றம் அல்ல!

"ஒரு பல்பானது தான் ஒளிதருவதைப் போன்று காலிங்பெல் ஒளிதரவில்லை என்று கவலைப்பட வேண்டியதில்லை."

"அம்மாதிரியே ஒரு ரெப்ரிஜிரேட்டர் என்மாதிரி ஓரிடத்தில் நின்று குளிர்ச்சியாக பொருளைப் பாதுகாக்காமல் மைக்ரோவேவ் ஏனில்லை என வருந்தவேண்டியதில்லை."

"மின்விசிறி ஓயாமல் சுற்றுகிறேன் நான் காலிங்பெல் ஓரிடத்திலேயே சுகமாக இருக்கிறதே என்று பொறாமை அடைய வேண்டியதில்லை..."

(ஆத்மாவின் All pervading effect ஐ எளிதான புரிதலுக்காக மின்சக்தியாக உதாரண உருவகம் செய்திருக்கிறேன்!)

ஆத்மா ஒன்றே! இறைத்தன்மை என்பது ஒன்றே!
அதன் வெளிப்பாடு ஸ்தூலத்தின் தன்மையைக் கொண்டு பல்வகையாக பிரதிபலிக்கப்படுகிறது! நம்மில் உறையும் ஆத்மா என்ற இறைத்தன்மையான சக்தியை/ ஒளியை ஆசை, பொறாமை, குரோதம், காமம் என்று கடினமான உறைகள் கொண்டு மூடியே வைத்திருக்கும் போது அது மங்கலாகக் கூட வெளிப்பட அனுமதிப்பதில்லை நாம்.

உணவு , காற்று,மனம், புத்தி, ஆனந்தம் என்ற ஐந்து உறைகளைத்தாண்டி இருக்கும் ஆத்மாவை உணரப் பஞ்சகோச (பஞ்ச = ஐந்து, கோசம்= உறைகள்) விவேகம் தேவை!

இறைத்தன்மையான ஆத்மா ஒளிர்ந்து நம்மில், நமது சிந்தனை, எண்ணம், பேச்சு, செயல் என இவைகளில் பிரதிபலித்து வெளிப்பட முதலில் செய்யவேண்டியது:

1. நம்மில் பகலவனாய் ஒளிரும் ஆத்மா இருக்கிறது என்று உணரவேண்டும்.

2. நமது ஆத்ம /தெய்வ சக்தியை எவை மூடிமறைக்கின்றன எனப் பகுத்தறியவேண்டும்.

3. ஆத்ம / தெய்வ ஒளியை மறைப்பனவற்றை நீக்கவேண்டிய அவசியம் உணரவேண்டும்.

4. இறைத்தன்மை/ஆத்மாவை மறைக்கும் பேச்சு/ சிந்தனை/ எண்ணம்/செயலை குறைத்தல்.

நமது ஆத்மாவை தரக்குறைவான சகதிச் சிந்தனை/செயல்/எண்ணம் இவைகளினின்று மீட்டெடுக்க மனச்சுத்திகரிப்பு மிக அவசியமாகிறது.

புறத்தூய்மை நீரால் அமையும். மனத்தூய்மை வாய்மையாக இருப்பதால் வரும்.

தியானம் / மெடிட்டேஷன் என்ற தன்னோடு பேசுதல் மிகவும் அவசியமானது. வேறு எவரிடமும் இவ்வளவு நம்பிக்கையாக உங்கள் குறைபாடுகளைப் பேசி விவாதிக்க இயலாது. இறைவனிடல் ஆலயங்களில் தொழும் போது உணர்ச்சி மேலிட்ட்டுப் பேசினால் கூட அருகாமையிலிருப்போர் கேட்டுவிட வாய்ப்புள்ளது!

தன்னோடு பேசுதலினால் தன்குறை அறியமுடியும். தன்குறை அறிந்தபின்பு அவற்றை அகற்றி மாற்றும் ஆக்கபூர்வ சிந்தனையை பக்தி யோக மார்க்கம் / ஞானயோக மார்க்கம் மற்றும் கர்மயோக மார்க்கத்தில் பயணப்பட்டு மேம்பாட்டை அடையலாம்.

எடுத்தவுடனே மனத்தை ஐந்து நிமிடத்திலெல்லாம் தன் வசப்படுத்திட முடியாது. மெடிட்டேஷன் எனும் ஆழ்நிலை தியானத்தினால் பரவசநிலை அடைவதும் நெடும்-கடும் பயிற்சிவேண்டும்.

ஆனால் இவ்வழிக்கு ஆரம்பநிலை ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து பழகுவது என்பது. இதன் நோக்கம் தன்னை அறிவது / தன்னுள்ளிருக்கும் இறைத்தன்மையைச் செயல்களில் வெளிப்படுத்துவது என்பதால் இறைவனின் நாமத்தை ஜெபித்தபடி 10-20 நிமிடம் தன்னோடு பேசுவது.

இறைவனை ஜெபித்தபடி தன்னோடு பேசுவதால் கூடுதலாக வாய்மையோடு பேசுவீர்கள்! அகர்பத்திவாசம், தீப ஜோதி, இறைவனது படம்/உருவம் சூழலை வாய்மையாக இருத்தலுக்கு ஏற்றதாக்கும். மனம் இலக்கினின்று விலகி ஓடும் போது பூஜைமணிச் சத்தம் ஓடுகாலி மனதை மீண்டும் கட்டுக்குள் எடுத்துவரும்.

ஆரம்பத்தில் கதவை மூடித் தாழ் போட்டுக் கொண்டு ஓர் அறையில் (பூஜையறை) முயற்சிக்கவும். தொடர்ந்து தினசரி செய்யவும் காலையிலோ /மாலையிலோ எது வசதியோ அப்போது செய்யவும். ஆனால் அவசியம் செய்யவேண்டும்.

ஜெபத்தில் அமர்ந்திருக்கும் போது மனம் அமைதிப்படுவதால் சமாதானப்படுத்தப்பட்ட குழந்தைமாதிரி மனம் ஆகிறபடியால் தூக்கம் அமுக்கும். பூஜைமணியால் சத்தம் செய்துகொண்டும் / சத்தமாக இறைவனின் நாமத்தை உச்சரித்தபடி ஜெபிக்கவும்.

ஜெபம் முடிந்து வெளிவரும் போது வள் வள் என்று குழந்தைகள் மனைவி மீது எரிந்து விழலாம். இது தன்னோடு பேசியபோது வெளிப்பட்ட தனது முரண்பாடுகளான வாய்மைகுன்றிய தனது எண்ணம், சிந்தனைகளால் ஆதங்கப்படுவதால் வருவது. தொடர்ந்து செய்ய மென்மையான சாத்வீக குணம் மனதில் குடி புகும்.


யாருங்க நீங்க? பொதுவா இப்படிச் சவாலா கைநீட்டி எதிர்த் தரப்பு ஆட்களைக் சுட்டிக் கேட்கும் இந்தக் கேள்வியை உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்! நான் யார்? என்று!

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்

வள்ளுவர் சொன்னதை நான் சொன்னதை தினசரி பின்பற்ற முயற்சிப்பதால் முற்றிலும் உணர்ந்திருக்கிறேன். இதைச்சொல்ல யாருங்க நீங்கன்னு கேட்டா... எனக்கு ஆக்கமாகத் தினசரி வாழ்வில் பயன் தருகிறது என்பதால் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

அன்புடன்,

ஹரிஹரன்

Sunday, November 12, 2006

(53) நீங்களும் பொதுநலத்தில் டிரஸ்ட் ஏற்படுத்தலாம்

பெறுதல் மட்டுமே எல்லா நேரங்களிலும் இன்பம் தருவதாக நினைக்கிறோம். இதனாலேயே முறையற்ற நேர்மை குன்றிய கையூட்டுப் பெறுதல்கூட சமூகத்தில் கிம்பளம் என்று கௌரவிக்கப்படுகிறது. இன்பமாய் தோன்றினாலும் "உண்மையில் முறையற்ற, நேர்மையற்ற பெறுதல் பெரிய மாயை... மகிழ்ச்சியை மெல்லக்கொன்றிடும் மாயை அது"!

கொடையாக, உதவியாகக் கொடுத்தலில், தேவையுள்ளோருக்கு தேடிப்போய் உதவுவது என்பதான பொதுநலச் செயல்கள் கொடுத்தலினால் கிட்டும் சாத்வீக மகிழ்ச்சி இன்பம் நீடிப்பதோடல்லாமல் மன அழுக்கைக் கரைக்கும் சீரிய செயல்! பொருளுடையோரும் பொருள் தேவையுள்ளோரும் கூடி வாழ்தல் என்பதன் நற்ப் பொருளை உணர்த்தும்.

பொதுநல டிரஸ்ட் என்று பதிவு செய்துதான் நல்லது செய்ய வேண்டும் என்றில்லை. முதலில் தனி மனிதனாக / குடும்பமாக பொதுநலத்தின் மீது டிரஸ்ட் ஏற்படுதல் அவசியம்!

"சார். பொது நலத்திற்கு உதவத்தான் நினைக்கிறேன் ஆனால் சம்பாதிப்பது வாய்க்கும் வயிற்றுக்குமே போதவில்லை" என்று மத்தியதரக் குடும்ப தேசியகீதம் பாடுவீர்கள் எனில் சில வழிகள் உங்கள் பட்ஜெட்டுக்குள்ளேயே எப்படி பொதுநல டிரஸ்ட் நிதி ஏற்படுத்துவது என்று:


சாக்லெட்டில் 200 வேதிப்பொருட்கள் இருக்கின்றன. அடிக்கடி சாக்லெட் உண்போர் பற்சிதைவு, பல்நோய்க்கு உள்ளாகி பின்னாளில் பல் வைத்த்தியத்துக்கு பெரும் பொருள் செலவிட வேண்டியிருக்கும். நீங்கள் /உங்கள் குடும்பத்தவர் சாக்லெட் உண்ணும் பழக்கம் கொண்டவர் எனில் அதைப் பாதியாகக் குறைக்கவும். இந்தப் பாதிக்குறைத்ததால் கிடைக்கும் பணத்தினால் உங்களது பொதுநல டிரஸ்டுக்கு மாதம் /ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகை சேரும். நீங்கள் அறிந்த பொருளாதாரதேவையுள்ள குழந்தைக்கு கல்விக்கு பாடபுஸ்தகம் / யூனிபார்ம் வாங்கித்தாருங்கள் உங்கள் பிறந்தநாளன்று!

சிகரெட் பிடிப்பவர் எனில் கவலையே இல்லை தன்மும் 5 பில்டர் கிங்ஸ் அல்லது ஒருபாக்கட் சிசர்ஸ் அல்லது 2கட்டு காஜாபீடி / சொக்கலால்பீடி/கவ்னர்பீடி , சுருட்டு என்று ஏதாவது ஒன்றில் தீவிர ஈடுபாடு இருப்பின் நீங்கள் அதிர்ஷ்டக்காரர்! இதை அப்படியே நிறுத்துங்கள். நிறுத்தியபின் ஏதும் குடி முழுகாது! ஒருவருஷம் தினசரி இந்தப் புகைப்புக்காசை உண்டியலில் போட்டு புதுவருஷம், பிறந்தநாள், பண்டிகை அன்னிக்கு உண்டியலை உடைச்சுப/ திறந்து பாருங்க
ஒரு ஏழை மாணவனுக்குக் கல்லூரிப் படிப்புக்கு ஸ்பான்ஸர் செய்யுமளவுக்கு பணம் சேர்ந்திருக்கும். சிகரட் விட்டதாலே நிம்மதியாக மூச்சும் விடுவீங்க!

வாரவிடுமுறை, நட்பு என ஏதாவது காரணம் காட்டி அரசமீனவன்/ தங்கக்கழுகு பீரோ, ஓல்டுமாங்கை மாவிரன்நெப்போலியனாய் குவார்ட்டரோ /கட்டிங்கோ வாரம் தப்பாது உள்ளே விடும் ஆள் எனில் மாசத்துக்கு ஒருதரம் குவார்ட்டர் கோவிந்தனா அவதாரம் எடுங்க மீதி மூணுவாரத்துக்கும் நல்ல புள்ளயா கோந்துபோட்ட மாதிரி வீட்டுலயே நல்லதா புஸ்தகம் படிங்க! மாதத்தின் மீதி மூன்று வார இறுதிக்கான குவார்ட்டர் மற்றும் சைட் டிஷ் காசை உண்டியலில் சேமிங்க! சரிக்காசு தேறும் ஒரு ஆண்டு இறுதியில்! சேரியில இருக்குற புள்ளைங்களுக்கு படிப்பதற்கு உதவி செய்ங்க! கல்விக்கு உதவினாலே அவங்க மெள்ள தானா மேலேறி வந்துடுவாங்க!

பில்லுப் போடாம கடை வியாபாரம் செஞ்சி வரிகட்டலைன்னா பரிகாரமா அதில பாதிக்காசை ஏழைங்க ரெண்டு பேருக்கு தையல் மிஷினோ வேறு எதாவது அவசியமான சுயமா உழைச்சு முன்னேற உதவி ஸ்பான்சர் செய்யுங்க.

பைக் வைத்திருக்கும் நண்பர்கள் சாலைவிதிகளை மீறி அடிக்கடி பைன் /கப்பம் கட்டிப் பழகியவர்கள் கவனமாக பொறுமையோடு சாலைவிதிகளைப் பின்பற்றி அபராதமாகக் கட்டும் பணத்தை அவசியப்பட்ட ஏழை மாணவச்செல்வத்துக்குத் தேவையான உதவியாக மிதிவண்டி ஸ்பான்ஸர் செய்யலாம்.

கார் வைத்திருப்பவர்கள் குறிப்பாக வெளிநாட்டில் வேலைசெய்து வாழ்பவர்கள் அதிக வேகத்திற்காக பிடிக்காவிட்டாலும் ரேடார் ஸ்பீட் கேமராவில் அடிக்கடி க்ளிக்கப்படுபவர் எனில் கவனத்துடன் வேகவிதிகளுக்குட்பட்டு காரோட்டவும். ஆண்டு இறுதியில் இரண்டு மூன்றுமுறை ஸ்பீட் கேமராவில் மாட்டாததால் கைவசப்பட்ட டாலர் /திர்ஹாம்/தினார்/ரியால்களைக் கொண்டு ஏழைச்சிறுவனை ஸ்பீடாக கல்வியில் ஸ்பான்சர் செய்து முன்னேற்றலாம்!

இது எதுவுமே முடியவில்லை எனில் 20ரூபாய்க்கு ஐந்துகிலோ கொள்ளும் டப்பா வாங்குங்கள். ஒவ்வொருமுறை சோறு சமைக்கும் முன்பு ஒரு கைப்பிடி அரிசி டப்பாவில் போடுங்கள் மாதக்கடைசியில் ஐந்துகிலோ அளவுக்கு சேரும். அருகில் உள்ல முதியோர் / அநாதைக் குழந்தைகள் இல்லத்திற்குப் போய் நேரிடையாகக் கொடுங்கள்.


நேரடியாகத் தேவைப்படுவோருக்கு உதவுவதற்கு முன்னுரிமை தாருங்கள்! நேரடியாகத் தேவையுடையோர் தெரியாதபோது தொண்டுநிறுவனங்கள் மூலமாக யாரேனும் இயலாத முதியவர் / அநாதைக்கு ஓராண்டுச்செலவை ஸ்பான்சர் செய்யுங்கள்!.

நேரடியாகக் கொடுக்கவும் என்று வலியுறுத்துவது கொடுத்தல் என்ற அறச்செயல் தரும் நிறைவினை பெறுதல் என்பதை விட எவ்வளவுக்கு மேம்மட்ட மகிழ்ச்சியைத் தருகிறது என்று சுயமாக உணர்வதற்காகவே! அந்த நிறைவை வார்த்தைகளால் விளக்கமுடியாது அனுபவித்துப் பரவசப்படும் போது மன அழுக்கு மெல்லக் கரைய ஆரம்பிக்கும்!


கல்விக்கு பொருளாதாரத் தன்னிறைவு பெற்ற எல்லோரும் இல்லாமையால் உழலும் படிக்கின்ற மாணவர் எல்லோருக்கும் முடிந்த அளவுக்கு உதவ முன் வர வேண்டும்.

கல்வி என்ற ஒளி ஒவ்வொரு குடும்பத்தின் உள் வந்தாலே சமூகத்தில் ஏழ்மை என்ற இருளும் அதன் பக்கவாத்தியங்களான பேதங்களும் விலகி ஓடிவிடும்!


நீ யாரு அட்வைஸ் ஆறுமுகமான்னு கேட்டா... இல்லீங்கோ இதெல்லாம் நான் பழகிக்கொண்டதால் எனது பொதுநலத்தின் மீதான டிரஸ்ட் ஏறுமுகமா இருப்பதாக உணர்வதாலேயே... யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என்பதாலேயே இப்பதிவு!

அன்புடன்,

ஹரிஹரன்

(52) பெரியார்மதம் நாடெங்கும் பல்கிப்பெருகும்போது...

இன்றைக்கு நாலு ஷேர் ஆட்டோவுக்கு ரெண்டு பேர் குறையும் அளவில் காணப்படும் கூட்டமாக இந்துமதக் கோட்பாடுகள், இந்தியக் கலாச்சாரத்திற்கு கண்டமாக இருக்கும் பெரியார்மதம் நாடெல்லாம் தழைத்துப் பல்கிப் பெருகினால் (நெருப்புன்னா வாய்வெந்துடாது)அந்த கருப்புக்காண்டம் எப்படியிருக்கும்னு கொஞ்சம் தொலைநோக்கியபோது வந்த சீர்திருத்தக் காட்சிகள் இவை:

1. மணியாட்டிப் பூசை நடக்கும் கோவில்களில் இந்து தெய்வச்சிலைகளுக்குப் பதிலாக....
மணியம்மை ஆட்டிப்படைத்த கடவுள்வெங்காயம் ஈ.வெ.ரா உருவச்சிலைகள் இருக்கும்!

2. இந்துமதக் கோவில் பிரசாதங்களில் வெங்காயம் தவிர்க்கப்பட்ட நிலைமாறி சீர்திருத்தமாக வருணாசிரமத் "துளசிஇலை தீர்த்தம்" தூக்கப்பட்டு "வெங்காயஇலை தீர்த்தம்" வழங்கப்படும்.


3. ராமபிரான் வாழ்ந்து காட்டிய ஏகபத்தினி விரதத்தை ஏகடியம் செய்து மணியம்மை, ஈவெரா போட்டோவுக்கு /சிலைக்கு மணியாட்டிப் பூசை செய்து தொழுவர்!

4. காருக்கு ஸ்டெப்னி இல்லை என்றால் கூட கவலை இல்லை. வாழ்க்கைக்குத் துணையாக கூடுதல் ஸ்டெப்னி இல்லை எனில் ஏகடியம் செய்யப்படுவர். ஒரே வாழ்க்கைத்துணைதான் என்றால் அவருக்கு அய்யோ பாவம்...வார்டு கவுன்சிலருக்கு வெற்றிலை கூஜாதூக்கும் பதவி கூட கிடைக்காது!

5. பகுத்தறிவு...பகுத்தறிவு, சீர்திருத்தம்..சீர்திருத்தம் என மூலையிலே அமர்ந்து, கருஞ்சட்டையணிந்து தெருமூலையிலே நின்று சூரியவெப்பத்தை உள்வாங்கித் தனது மூளையால் யோசித்ததால் பெரும்பாலோர் தன் மூலாதாரம் சூடேறி உடல் வெளித்தள்ளிய மூலத்திற்கு பத்தியமாகச் சின்னவெங்காயம் தின்று தீர்ப்பார்கள்.

6. நாட்டிலே இதனால் முதன்மை விவசாயப் பொருளாக சின்ன /பெரிய வெங்காயம் பெரிய அளவில் சாகுபடி செய்ய மத்திய/மாநில அரசுகள் வற்புறுத்தும். தரிசு நிலங்களில் கூடுதலாக வெள்ளை வெங்காயம் விளைவிக்கப்படும்!

7. இன்னிக்கு கொஞ்சூண்டு சுரணையோடு சம்பளம் இவ்வளவு கிம்பளம் இவ்வளவு எனும் நிலையில் மாபெரும் சீர்திருத்தம் வரும். லஞ்சம் இத்தனை என்று காலரைத்தூக்கிவிட்டுச் சொல்வார்கள்!
எல்லா இரண்டாம் த(ர்)ர விஷயங்கள் பூரிக்கும், செழிக்கும்.

நேர்மை தீண்டத்தகாத லிஸ்டிலிருந்து காணாமல் போன லிஸ்டுக்கு புரமோஷன் பெறும்!

8. ஆறிய டீ குடித்தபடியே தேநீர்க்கடைகளில் அப்போதும் ஆரிய முறியடிப்பு பற்றிப் பேச்சு நடக்கும்!

9. பழக்க தோஷத்தில் எதிர்கருத்துச் சொன்னவர் பற்றி நாத்திகமானதொரு அச்சகத்தில் அடித்த அவதூறு கருப்பு போஸ்டர்களை கும்மிருட்டு நள்ளிரவில் சாராய போதையோடு ஒட்டி ஊரெல்லாம் வெளிச்சம் வருமுன் "உண்மை"யான தகவலாக "விடுதலை" செய்வர்!

பெரியார்மதத்திற்கு எதிர்கருத்து உடையவர்களது தாய், தமக்கை, தங்கை, தாரம், மகள்களை விபசாரிகள் என்பார்கள், பிராத்தல் செய்ய ரேட் ஃபிக்ஸ் செய்ய முன்வருவார்கள்!

10. அரசு சொன்னைதையும் சொல்லாததையும் செய்யும். திருமணம் , எளவுக்கு வந்து நடத்தித்தரும் சீர்திருத்தவாதிகள் முன்னுதாரணமாக மேம்பட்டு வாழ்ந்து மக்களுக்கு சீரியபடி எடுத்துக்காட்டிக்கொண்டிருப்பர்!

11. சேர, சோழ, பாண்டிய, பல்லவன் கட்டிய கலை வளாகங்களான கோவில்கள் ஊமத்தம் புதர்மண்டிப்போய் எதாவது ஒரு சுயமரியாதைச் சிங்கத்தின் சுராபான தயாரிப்பு வளாகங்களாகும்!

12.அப்போதும் இடஒதுக்கீட்டுக்கு ஏதாவது காரணம் தேடிகொண்டிருப்பார்கள். கூட்டணியிலே வாக்குவாதத்தின் போது அரிவாள் தூக்கிப் பொருதாமல் தன் அறிவால் பொருதுபவனை அப்போதும் பலியாடாக்குவார்கள்!யப்பா...ஒரு டஜனே கண்ணைக்கட்டுகிறது!

இளமையோடு ஆக்கமும் ஆற்றலும் ஒருசேரப்பெற்ற தமிழ்க்கடவுளே குமரா! கந்தா! கடம்பா! கதிர்வேலா! முருகா! தமிழைக் காத்து ரட்ஷிப்பதோடு பார்ட் டைமில் இந்துமதத்தையும் இந்திய தேசமும் காப்பாய்!

அன்புடன்,

ஹரிஹரன்