(50) செயற்கரிய ஜெயலலிதா
தமிழக அரசியல் நிகழ்வுகளை பாசாங்கில்லாமல் எதார்த்தமாக எடுத்துவைக்கும் போது எத்தனை முயற்சித்தாலும் எழுத்தின் தரம் தாழ்ந்துபோகிறது. நான் எழுதி என்ன மாற்றம் வரப்போகிறது, எதுக்கு இதெல்லாம் என்ற கிணற்றுத்தவளை / சுயநல நபராய் இருக்க வேண்டாம் என்பதாலேயே தமிழக அரசியலை சார்பற்ற சதா ரணப்பட சாதாரண மத்தியதரக் குடும்ப நபர், பொதுவாக அரசியலில் தன் கருத்தையோ தேர்தலின்போது ஓட்டையோ போடாது கழகங்கள் கள்ளஓட்டுக்கு தானமளிக்கும் நபர் என்ற கோணத்திலிருந்து பாசாங்கின்றி எழுதுகிறேன்.
இரு ஐந்தாண்டுகள் முழுமையாக தமிழகத்தை ஆட்சிசெய்த ஜெயலலிதா சகாப்தமா? சாபமா?
முதுமையான தலைவர்களுக்கு மத்தியில் ஆற்றல் நிரம்பிய இளவயதில் நாற்பத்திசொச்சம் வயதில் தமிழக முதல்வரானபோது இளரத்தம் சாதனைகளை விரைந்து சாதிக்கும் என்ற தமிழ்மக்களின் எதிர்பார்ப்பு ஒரு துளி கூட விழாது ஏமாற்றிய பருவமழை மாதிரியான ஆட்சி.
உடன்பிறவாத் தோழியா? இல்லை உன்னால்
தமிழகத்தின் உடனுறைய வந்த சனியா சசிகலா?
உங்கள் இருவருக்குமான உறவு பூடகமானதோ
வெளிப்படையானதோ கவலை இல்லை தமிழ்மக்கள்
உன்னிடம் வெளிப்படையாக எதிர்நோக்கியது கூடாநட்பையல்லவே!
கூழும் கூடுதல் அடிப்படை வசதிகளையுமல்லவா!
எதிர்ப்படும் எவரையும் எடுதெறிந்து பேசிடவா
எடுத்துத் தரப்பட்டது உன்கையில் அரசதிகாரம்!
ஏனைய எல்லோருக்கும் எடுத்துக்காட்டாய் தமிழன்
ஏழ்மைவிலகி எல்லா வளங்களுடனும் வாழ்வதற்குத்தானே!
இதுதானே தமிழ்மக்களுக்கு நீயளித்த வாக்குறுதி
ஏன் இல்லையென எதிர்த்துக் கேட்டோருக்கு
கராத்தே கொண்டு வரவைத்தாய் வாயில்குருதி!
அரியணை இருமுறை தந்தான் தங்கத்தமிழன்
ஆனால் ஆற்றிடவில்லை தர்மத்துடன் ஆட்சியை நீ!
"ஜெய"என்று உன்பெயரில்மட்டும் உறைந்தது வெற்றி!
வேதனையே உண்மைச்சாதனை உரைக்கிறது பறைசாற்றி!
உறுதிக்கும் வீரத்திற்கும் ர.ரக்களின் ஜான்சிராணி
அரசுநிலம் அமுக்கியதில் மக்களுக்கு டான்சிராணி!
சர்ச்பார்க் பெண்ணேநீ ர.ரக்களால் ஆனாய்மேரி!
சர்ச்சைவெடித்திட பின்பு சொன்னாய் சாரி!
உன்கட்சியோ ஈவெராஅண்ணாஎம்ஜிஆர் கொள்கை முக்கூடல்
சோத்துக்கட்சி எதிர்காலம் வீழ்ந்தது மூன்றுவீதிக்கூடலில்!
இந்திரபுரி வெண்யானையே நீ தந்தாய்
குட்டியானை கேரள குருவாயூர்புரக் கண்ணனுக்கு!
என்றபோதும் ஆனாய்நீ பெண் பெரியாராய்!
ஈவெரா வெங்காயம் செய்யாத பெரியபுரட்சியை
செய்ததாலேயே நீ என்றென்றும் புரட்சித்தலைவியே!
கர்மவீரர் காமராஜர் கூட தனிமரந்தானே!
மக்கள் தேவையறிந்து கடமையாற்றினதால் தானே
மக்கள் மனக்கோவிலில் ஆன கொடிமரந்தானே!
ஜெஜெநீயுங்கூட காமராஜர்போல தனிமரந்தானே!
தங்கநகை டான்சிநிலமென மக்கள்நலம் மறந்தேபோனே!
நீஒருரூபாய் சம்பளம் வாங்கிய காலம்
தமிழ்மக்கள் மறந்திடா வளம் மங்கியகாலம்!
பணப்புழக்கம் கூடுதாம் உன் ஆட்சியிலே!
மனப்புழுக்கம் இல்ல எகிறுது சோத்துக்கட்சியிலே!
அக்ரி காலேஜ் பொண்ணுங்களை பஸ்ஸூக்குள்ள
அக்கினி காட்டி கொன்னதுக்கு என்னபரிகாரம்?
இத்தனையிலும் செஞ்சிருக்க ஒண்ணு ரெண்டு நல்லது
அதை இப்போ இல்லை அடுத்தபதிவில சொல்றது நல்லது!
அன்புடன்,
ஹரிஹரன்
7 comments:
டெஸ்ட் மெசேஜ்!
அம்மாவைப் பற்றி நான் போட்ட பதிவு
http://madippakkam.blogspot.com/2006/07/blog-post_21.html
லக்கி,
உஷரான பார்ட்டிதானுங்க நீங்க.
டாக்டர் ஜெயலலிதாவையும் ரொம்ப நேரடியா விமர்சிக்காமா எதுக்கும் இருக்கட்டும்ன்ற தொலைநோக்கோட இருக்கீங்க! அம்மோவோட லக்கிலுக் விழுந்தா லக்கிலுக் அமைச்சர் தான்!
எதுக்கும் எனக்கு ஆட்டோவை அனுப்பிடவேண்டாம்னு உங்களாண்ட சொன்னா ரெட்டைப்பலன் இருக்கும்!
/*********************************
நீஒருரூபாய் சம்பளம் வாங்கிய காலம்
தமிழ்மக்கள் மறந்திடா வளம் மங்கியகாலம்!
*********************************/
இக்காலமும் கூட,
தமிழ்மக்கள் மறந்திடா வளம் மங்கியகாலம்!
//நீஒருரூபாய் சம்பளம் வாங்கிய காலம்
தமிழ்மக்கள் மறந்திடா வளம் மங்கியகாலம்!
*********************************/
//இக்காலமும் கூட,
தமிழ்மக்கள் மறந்திடா வளம் மங்கியகாலம்!//
வெங்கட் ராமன்,
இன்னும் நான்கரை ஆண்டுகள் இருக்கிறது. இந்த ஆட்சிக் காலம் வளம் குறித்து முடிவாக ஒரு முடிவெடுக்க!
//இன்னும் நான்கரை ஆண்டுகள் இருக்கிறது. இந்த ஆட்சிக் காலம் வளம் குறித்து முடிவாக ஒரு முடிவெடுக்க//
ஹரிஹரன் அய்யா,
நீங்க என்ன eternal optimist ஆ?
இவங்க ட்ராக் ரிகார்ட் என்ன என்பது எல்லாருக்கும் தெரியுமே?
பாலா
//நீங்க என்ன eternal optimist ஆ?
இவங்க ட்ராக் ரிகார்ட் என்ன என்பது எல்லாருக்கும் தெரியுமே?//
கருணாநிதியின் வாழ்க்கையில் இந்த ஐந்தாண்டுகள் மிக முக்கியமானது. சங்கரா..சங்கரான்னு சிவனை நினைத்து ஏதானும் நல்லது செய்யலாம்! அப்படிச் செய்யலைன்னா இது மொதத்தரம் ஏமாற்றது இல்லியே நமக்கு!
Post a Comment