Wednesday, November 29, 2006

(67) ஈவெரா.சாமி ஒரு (தீர்க்க) தரிசி

குடியரசில் ஈவெரா.சாமி 18.12.43 அன்று சொன்னது:

"கட்சிகள் இந்த நாட்டில் பெரும்பாலும் சாதி இனத்தைப்பற்றியவைகளாக இருப்பதால், பொதுமக்கள் நலத்தைவிட அவரவர்கள் கட்சி நலத்தையே கருதி அரசியல் நடக்கிறது".

தமிழகத்தில் பகுத்தறிவு இவரது சிஷ்யகோடிகள் கருணாநிதி, கி.வீரமணி, ராமதாசு, தொல்.திருமா, டாக்டர்.கிருஷ்ணசாமி, போன்றவர்களின் ஆக்கமான செயல்பாட்டால் தன்னிறைவு பெற்ற நிலையில் இன்றிருக்கும் காட்சி:

1. திமுக தொகுதி வாரியாக சாதிவேட்பாளர்களை அறிமுகப்படுத்திய கட்சி
2. அதிமுக தேவர்கள் சாதிக்கான கட்சி
3. பாமக குடிதாங்கியால் துவங்கப்பட்ட வன்னிய சாதிக்கட்சி
4. பார்வர்டு பிளாக் - முக்குலத்தோர் சாதியின் கட்சி
5. விடுதலை சிறுத்தை - தாழ்த்தப்பட்டவர்களின் கட்சி
6. புதிய தமிழகம் - தலித்களின் கட்சி
7. புதியநீதிக்கட்சி - முதலியார்கள் கட்சி
8. "நியூ"மக்கள் தமிழ்தேசம் - யாதவர்களின் கட்சி

9. சரத்குமார் நாடார் சாதிக்கென ஒருகட்சியை கூடிய விரைவில் துவங்கலாம்!


அய்யா ஈவெரா.சாமி அந்தக்காலத்தில் 1943-ல் தரிசித்ததைக் காட்டிலும் அவரது சிஷ்யகோடிகள் சாதிப் பாகுபாட்டிற்கு கடினமாக உழைத்து வெங்காயத்தினை தீர்க்கதரிசி ரேஞ்சுக்கு உயர்த்தியிருக்கின்றார்கள்!

இன்று 2006ல் தமிழகத்தில் அரசியல் திரா'விட'த்தினால் எங்கு காணினும் சாதீ, சாதீ, சாதீயடா.... சாதீய உணர்வில் தன்னிறைவு பெற்று எங்கு வேண்டுமானாலும் எக்ஸ்போர்ட் செய்யுமளவுக்கு எக்ஸ்பர்டைஸ் கைவசம் இன்று இருக்கிறது!

க்ரேட் ஒர்க் கீப் இட் அப்னு காட்டுமிராண்டித் தமிழ் இல்லாமல் ஆங்கிலத்தில் கூட வாழ்த்தமுடியாத அவலம்!

அன்புடன்,

ஹரிஹரன்

7 comments:

பிரதீப் said...

ஒரு சின்னத் திருத்தம்...
புதியநீதிக் கட்சி - முதலியார்க்கட்சி
யாதவர்களின் கட்சி - மக்கள் (ஏதோ) கழகம் - இப்போது திமுகவில் இருக்கும் கண்ணப்பனால் ஆரம்பிக்கப்பட்டது.

Hariharan # 26491540 said...

வாங்க பிரதீப்,

பிழை சுட்டியமைக்கு நன்றி. பதிவில் சரிப்படுத்தி விட்டேன்.

முதன் முறையாக வருகின்றீர்கள் என்று நினைக்கிறேன்.

விடாதுகருப்பு said...

அட புண்ணாக்கு,,,

தி.க சாதி சார்பா இயங்குதா? அதையும் சொல்லனும்ல!!!

அப்புறம் இன்னொன்னு கேட்க மறந்துட்டேன்.

பாஜக, விஷ்வ ஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ் இதெல்லாம் ஜாதி இல்லாமத்தான் இயங்குதா?

வடுவூர் குமார் said...

"திமுக திகுதி "
ஹரி
தொகுதி தவறுதலாக உள்ளது.

Hariharan # 26491540 said...

ஜென்டில்மேன் கருப்பு,


"கட்சிகள் இந்த நாட்டில் பெரும்பாலும் சாதி இனத்தைப்பற்றியவைகளாக இருப்பதால், பொதுமக்கள் நலத்தைவிட அவரவர்கள் கட்சி நலத்தையே கருதி அரசியல் நடக்கிறது".

//தி.க சாதி சார்பா இயங்குதா? அதையும் சொல்லனும்ல!!!//

தி.கன்னா கட்சியா? அது இதுவரை எவனுக்கும் இல்லாத பகுத்தறிவைக் கண்டுபிடித்த "ஆய்"வகமாச்சே!

மொட்டையா தி.கன்னா எப்படி?
எந்த திக? வீரமணியோட தி.கவா? சமணர்களை சமீபமாக துரத்திய பெரியார் தி.கவா?

உடைந்தது பெரியார் தி.கன்னா ஒரிஜினல் கி.வீரமணியோடது பெரியார் தி.க. இல்லியா?

சிதறிப்போன ஆக்கமாகச் செயல்படாத அமைப்புகள் எல்லாம் தி.க அப்படித்தானே?

//அப்புறம் இன்னொன்னு கேட்க மறந்துட்டேன்.

பாஜக, விஷ்வ ஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ் இதெல்லாம் ஜாதி இல்லாமத்தான் இயங்குதா?//

இவனுங்க எல்லாம் பகுத்தறிவுப் பட்டறை பாசறையில் எப்போ பயிற்சி எடுத்தானுங்க? எனக்குத் தெரியலயே?

உங்களது இந்தக் கேள்வி இவனுங்களுக்கு அவுட் ஆப் சிலபஸ்!

பகலவனின் பகுத்தறிவு புண்ணாக்கு சாப்பிட்டு கோயில் மாடுமாதிரி கோபமா அக்னியா மூச்சு விட்டவாறே பாயுமுன்பு சாதரணமாகவும் அப்பப்ப சிந்திக்கணும் கருப்பு!

Hariharan # 26491540 said...

குமார்,

பிழையை திருத்திவிட்டேன். சுட்டியமைக்கு நன்றி

Hariharan # 26491540 said...

அய்யா கருப்பு,

புண்ணாக்கு, வெண்ணைய்ன்னு கூவியவாறே தாங்கள் வந்ததால் வாருங்கள் என்று உபசரிக்க மறந்துவிட்டேன். விருந்தோம்பல் மிக முக்கியம் இல்லியா.

வந்ததற்கும், கருத்து(வசையும்) மழை பொழிந்ததற்கும் நன்றிகள்! :-)))