(60) சாப்பாட்டைச் சந்தோஷமாக சாப்பிடுவது எப்படி?
எப்படி எப்படின்றது டாப் ட்ரண்டு இப்போ.
தமிழ் மணமே கல்யாணமண்டபம் மாதிரி மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இட்லி, வடை, போண்டா, பஜ்ஜி,முறுக்கு, சோறு தயாரித்து சாப்பிடச் சொல்றதும்... கரிசனத்தோட பிரிஜ்சுக்குள்ள தண்ணீர்பாட்டில் வைக்க சொல்லித் தருவதுமாகவும், பொண்ணுவீட்டுக்காரங்க அப்பளம், சூடா(காப்பி/டீ)தண்ணி தயாரிப்பைக் கோலம் போட்டு மங்களகரமாச் சொல்லிட்டு இருக்கும் போது ரொம்பச் சாப்பிட்ட ஆளை சும்மா எப்படி இருக்கறது என்பதும், முறுக்குத்தின்னுட்டு முறுக்கிக்கிட்டே கலாட்டா பண்ற பார்ட்டிங்களுக்கு எப்படி தர்ம அடி போடச்சொல்றது என்று களை கட்டி இருக்கு.
நாமளும் ஜோதியில ஐக்கியமாகணுமில்லியா?
சாப்பாட்டைச் சந்தோஷத்துடன் சாப்பிடணுமில்லியா? சந்தோஷம் முழுமையா சாப்பிடும்போது எப்போ கிடைக்கும்? தெரிஞ்சுக்கணுமில்லியா?
"பத்து விரல்களால் நாம் கஷ்டப்பட்டு தினம் உழைச்சா, உட்கார்ந்து அஞ்சு விரல்களில் அள்ளி அள்ளி சந்தோஷமா சாப்பிடலாம்"
எதோ நம்மால ஆனது.
அன்புடன்,
ஹரிஹரன்
20 comments:
டெஸ்ட் மெசேஜ்!
//"பத்து விரல்களால் நாம் கஷ்டப்பட்டு தினம் உழைச்சா, உட்கார்ந்து அஞ்சு விரல்களில் அள்ளி அள்ளி சந்தோஷமா சாப்பிடலாம்"//
அற்புதமான வரிகள் ஹரிஹரன்.
சரியாகச் சொன்னீர்கள் கல்யாண மண்டபம் மாதிரி என்று. இறுக்கம் குறைந்து கலகலப்பாகியிருக்கிறது இப்போது.
மணம் தமிழ் மனங்களால் மணம் வீசட்டும்
முத்துக்குமரன்,
"பத்து விரல்களால் நாம் கஷ்டப்பட்டு தினம் உழைச்சா, உட்கார்ந்து அஞ்சு விரல்களில் அள்ளி அள்ளி சந்தோஷமா சாப்பிடலாம்
இது எனது தந்தை வழிப்பாட்டி அடிக்கடி சொல்லியபடியே வாழ்ந்து காட்டியது. மிகவும் சுறுசுறுப்பாக 80வயதிலும் இருந்து மறைந்தவர்.
சூழலில் இறுக்கம் காணாமல் போய் உணர்வு/உறவுகளில் இறுக்கம் கூடவேண்டும் தமிழ் மணத்தில். சாத்தியப்படும் சீக்கிரமே!
//முறுக்குத்தின்னுட்டு முறுக்கிக்கிட்டே கலாட்டா பண்ற பார்ட்டிங்களுக்கு எப்படி தர்ம அடி போடச்சொல்றது என்று களை கட்டி இருக்கு.
//
சூப்பர்.
:))
//"பத்து விரல்களால் நாம் கஷ்டப்பட்டு தினம் உழைச்சா, உட்கார்ந்து அஞ்சு விரல்களில் அள்ளி அள்ளி சந்தோஷமா சாப்பிடலாம்"//
நல்ல மெசாஜூம் கூட!
நன்றி!
//"பத்து விரல்களால் நாம் கஷ்டப்பட்டு தினம் உழைச்சா, உட்கார்ந்து அஞ்சு விரல்களில் அள்ளி அள்ளி சந்தோஷமா சாப்பிடலாம்"//
டாப் 10 "எப்படி" போட்டி வெச்சா, இந்த வரிகள் தான் முதல்ல வரும் ஹரிஹரன் அவர்களே.
அருமையான வரிகள்.
காலில் இருக்கும் பத்து விரல்களைக் கைவிட்டதற்காக, இந்தப் பதிவை வண்மையாகக் கண்டிக்கிறோம்...
இவண்
கார் ஓட்டுநர்கள் சங்கம், தையல் காரர்கள் சங்கம் மற்றும் தறியில் துணி நெய்பவர்கள் சங்கம் சார்பாக
பொன்ஸ் :))))))
btw, சாப்பாட்டை() சந்தோஷமாக - ச் வராதோ?
//சாப்பாட்டை() சந்தோஷமாக - ச் வராதோ?//
அவசியம் வரத்தான் வேணும். ஜோதியில கலக்கணும்ன்ற பரவசத்தில ப்ச்... ச் விடுபட்டுடுத்து. சரி பண்ணிட்டேன் இப்போ!
//காலில் இருக்கும் பத்து விரல்களைக் கைவிட்டதற்காக, இந்தப் பதிவை வண்மையாகக் கண்டிக்கிறோம்...//
"பத்து விரல்களால் நாம் கஷ்டப்பட்டு தினம் உழைச்சா, உட்கார்ந்து அஞ்சு விரல்களில் அள்ளி அள்ளி சந்தோஷமா சாப்பிடலாம்
அய்யா கார் ஓட்டுநர்கள் சங்கம், தையல் காரர்கள் சங்கம் மற்றும் தறியில் துணி நெய்பவர்கள் சங்கத்து ஆட்களா... பத்து விரல்கள்னு தானேய்யா சொல்லியிருக்கேன்... பட் நான் காலைக் கைவிட்டுட்டேன்னு மெரட்டரேளே..
கம்ப்யூட்டர் ஆட்களுக்கு கை உங்களுக்கு கால் + கை 10 விரல்ஸ்
பொன்ஸ் ஒகெவா இப்ப!
நாமக்கல் சிபி,
ரசிப்புக்கும் பாராட்டுக்கும் நன்றிகள்
நன்மனம்,
//டாப் 10 "எப்படி" போட்டி வெச்சா, இந்த வரிகள் தான் முதல்ல வரும்//
உங்கள் நன்மனத்திற்கு மிக்க நன்றி
பார்த்தீர்களா...
அங்கே வெந்நீர் வைத்ததற்கே பாயை பிராண்டிக்கொண்டிருக்கிறேன்.
அதற்குள் காபி/தே தண்ணிக்கு தாவி விட்டீர்களே...
:))
நான் 11 விரல்களால் உழைப்பவளாக்கும்..
நல்லா சொன்னீங்க ஹரி!
உழைச்ச காசுல அரிசி வாங்கினேன் சோறு வெந்தது வீட்டுல சோறு வெந்தது..
இன்னிக்கு அந்த காசுல சரக்கடிச்சேன் கொடலு வெந்தது!...
பிள்ளைங்க அழுது பொலம்புது...
உங்க பதிவ படிச்சிட்டு இருக்கும்போது இந்த பாட்டு ஸ்பீக்கர்ல ஓடிட்டு இருந்தது. பதிவுக்கு சம்பந்தமிருப்பதாக தோன்றியதால்....
பூங்குழலி,
வெந்நீர் பாத்திரத்திஸ்குள் கைதவறி காபி/டீத்தூள் விழுந்தாலே காப்பி/டீத்தண்ணி தயார்!
//நான் 11 விரல்களால் உழைப்பவளாக்கும்.. //
எல்லாம் அந்த ஆறுமுகன் அருள்
வாங்க தம்பி,
குடிக்கிறதுக்காக உழைக்கிறது என்பது குடும்பத்தைக் குதறிப்போட்டுவிடும் என்பது மிகச் சரியே!
இன்னிக்கு உழைப்பு வெறும் ஒம்போது விரல்கள்தான்.
சாப்பிட்டதும் நாலு விரல்களில்தான்:-))))
சாப்பிட்டது ஜிரணம் ஆன பின்னும்.. இது எப்படி தமிழ்மணத்துல முன்னாடி வருது...? யாருக்கு இன்னும் ஜிரணம் ஆகலியோ!
துளசியக்கா,
//இன்னிக்கு உழைப்பு வெறும் ஒம்போது விரல்கள்தான்.
சாப்பிட்டதும் நாலு விரல்களில்தான்//
என்ன ஆச்சு கிச்சன் கத்தியா?
//சாப்பிட்டது ஜிரணம் ஆன பின்னும்.. இது எப்படி தமிழ்மணத்துல முன்னாடி வருது...? யாருக்கு இன்னும் ஜிரணம் ஆகலியோ! //
61வது பதிவு போட்டா அதோட 60வது சாப்பாட்டுப்பதிவும் ஏப்பம் மாதிரி வரும் தமிழ்மணத்துல! கூடத்துக்கு விடிஞ்சா தாழ்வாரத்துக்கும் வெளிச்சம் வருவதுதானே பாலபாரதி!
Post a Comment