(49) ஆறியமாலா ஜெயலலிதா.. திராவிடரத்னா கருணாநிதி
ஜெயலலிதா = ஆணவக்கார பெண்மணி மற்றும் இதர டெரிவேட்டிவ்களான புதுமைப்பெண், தன்னம்பிக்கைப் பெண், துணிச்சல் மிகுந்தபெண் தனியாளாய் சட்டமன்றத்திலே பேசிய பெண் என்பதிலே உண்மை ஓரளவுக்கு இருப்பது மாதிரியே இன்னொரு உண்மை இது ஆணாதிக்க அரசியல் வாதிகளுக்காக வலிய மாட்டிக்கொண்ட இரும்புக்கவசம்.
உண்மையில் ஜெயலலிதா என்ற பெண்
1) திரையுலகில் நடிகையாக இருந்த பெண்மணி
2) நியாயமான ஆசைகள் உரியகாலத்தில் நிறைவேறாத பெண்மணி
3) முறையாக ஒரு பெண்ணுக்குரிய ஆசையான திருமணம், குழந்தைகள் என வாழ்க்கை அமைந்திடாத பெண்மணி
இப்படியான தனிப்பட்ட குறைகள் பொதுவாழ்வில் வந்தபின்பு குறிப்பாக எம்.ஜி.ஆரின் மறைவுக்குப்பின் வந்த பொதுவாழ்வில் திராவிட ரத்னா கருணாநிதிமாதிரி நபர்களை எதிர்க்க இந்த ஆணவக்கவசம் பூணப்பட்டிருக்கிறது. இப்படி ஆணவக்கவசம், எடுத்தெறிந்துபேசுகின்ற துணிச்சல் பெண் எனும் கவசம் இல்லை எனில் துரைமுருகன் துகிலுரிந்த சட்ட மன்றத்தில் தமிழிந்தமிழ் கருணாநிதி திராவிடரத்னா கவி கருணாநிதியாக இப்படி கவி இயற்றி இருப்பார்:
இளவயது ஆரியநங்கை நீ ஜெ. ஜெ
இந்திர லோக நங்கையர் கூட்டணி
ரம்பையும் ஊர்வசியும் சே! சே எனவெட்கிட
தகிக்கும் தங்கத் தாரகையே நீ!
இன்றுவயதாகியும் ஆணவ அம்மையாகிய ஜெ.ஜெ
பொய்யெனும் செருக்குக் கொழுப்பு மெய்யூறியதாலே
ஊதிப் பெருத்திட்ட ஊர்வசியா சே! சே!
இந்திரபுரியிலே வெளியுலாவும் வெண்யானையே நீ!
கவி கருணாநிதி இருபதாண்டுக்கு முன்பாக இவரது அரசில் பெண் அமைச்சராக இருந்த ஈரோட்டு சுப்புலட்சுமியின் மேலுதட்டு மச்சம் குறித்து கவிபாடிய கம்பன் தானெ கருணாநிதி!
ஜெயலலிதா மட்டும் ஆணவ அகம்பாவக் கவசம் இல்லாமல் சாதாரணமாகப் பெண்ணாய் வந்திருந்தால் தமிழக அரசியலில் இருக்கும் ஆணாதிக்கம் அரசி(யல் பெண்)களை இப்படித்தான் இல்லை இன்னும் கூசிடுமளவுக்கு ஆராதித்திருக்கும்.
ஜெயலலிதா தன் காலிலே அமைச்சர்கள் சாஷ்டாங்கமாக விழுவதை மானசீகமாக ஏற்றுக்கொள்வது உளவியலாக இந்த ஆணாதிக்கத்தினைத் தன் காலடியில் விழவைத்துவிட்டதாக எண்ணுவதாலேயே எனபது என் கருத்து.
ஆகவே ஜெயலலிதாவின் ஆணவம் அகம்பாவம் இவைகட்கு அவரளவுக்கு அரசியல் சமூகத்திலிருக்கும் ஆணாதிக்கமும் மறுத்திடமுடியாத மறுகாரணம்.
இதல்லாம் சரி. மக்கள் பணியிலே இடர்ப்பாடு வரத்தான் செய்யும் நல்ல(தல்ல)து என என்னவெல்லாம் செய்தாய் ஜெயலலிதாவே?
இலைசின்னத்தால் ஜெயித்து ஆட்சியிலமர்ந்ததும் உன் உள்வளையத்திலோ ஒரு குடும்பத்தின் இளைய சூரியன்கள் கூட்டம்கூடி கும்மியடித்தது. பாஸ்கரன், சுதாகரன், தினகரன் என்பதெல்லாம் சூரியன்கள்தானே!
செல்வியே நீ பெறாமலே பெற்றால்தான் பிள்ளையா என்று சுதாகரனைத் தத்தெடுத்து மக்கள் வரிப்பணம் வாரியிறைத்து நட்சத்திரங்களே வெட்கிட ஜொலி ஜொலித்திட நீ நடத்திய நவயுக நட்சத்திரத் திருமணச்செலவுக்கு ஒரு ஆயிரம் தமிழ்க்குழந்தைகளைத் தத்தெடுத்துப் படிக்கவைத்திருந்தால் பெரும்பயன் கிட்டியிருக்கும் குழந்தைகளுக்கு! நற்பெயர் உனக்கு!
தமிழ்மக்களுக்கான நலத்திட்டங்கள், செயல்பாடுகள், இவை பற்றி :
எப்போதும் எதிலும் சூடாகக் காணப்படும் ஜெயலலிதா இதில் மட்டும் ஏன் ஆறிய ஜெயலலிதாவாகிப்போனாய்?
ஜெய எனும் வெற்றி வெறுமே உன் பெயரில்மட்டும் தானே உறைந்து கிடக்கிறது!
உன்னால் ஜே ஜே என்று நிறைவேற்றப்பட்டு தமிழக நலத்திட்டங்களால் சீர்மிகுவாழ்க்கை கிட்டும் எனக்கனவிலிருந்து நினைவுக்கு வருகையில் சே! சே! என்ன இங்கும் இதுதானா? என்று சோர்ந்துதானே போகிறான் சோத்துக்கட்சித் தமிழன்!
மீதி விமர்சனம் அடுத்த பதிவில். சீறிவரும் கழக ஆட்டோக்களிடமிருந்து திருப்பதி பேரரசு மாதிரி தாவி ஓடுகிறேன் அடுத்த பதிவுக்கான குறிப்புக்களோடு!
அன்புடன்,
ஹரிஹரன்
15 comments:
டெஸ்ட் மெசேஜ்!
ஏன்ன்ன்ன்ன்ன்...
//ஏன்ன்ன்ன்ன்ன்... //
ஆட்டோவில டிடிஎஸ் எபெக்ட்ல ஏ என்கிறீர்களா இல்லை ஏன்னு காரணம் கேட்கிறீர்களா?
ஏன் எனில் எனக்கு ரெண்டு கழகமும் பிடிக்காது! சரி உனக்கு கிரகம் புடிச்சிடுச்சுன்றீங்களா...
ரவி நான் ஒதுங்கி ஓடியாகணும் ஆட்டோவிலிருந்து
/கவி கருணாநிதி இருபதாண்டுக்கு முன்பாக இவரது அரசில் பெண் அமைச்சராக இருந்த ஈரோட்டு சுப்புலட்சுமியின் மேலுதட்டு மச்சம் குறித்து கவிபாடிய கம்பன் தானெ கருணாநிதி!//
ஹரிஹரன் அய்யா,
கவி கருணாநிதியின் ஈரோட்டு சுப்புலட்சுமியின் மச்சப் பாட்டை இந்த வலையுலகம் போற்றும் வண்ணம் எடுத்து போடுங்க.
நம்ம முதல்வர் மச்ச வீர மாமன்னன் தான் என்பதில் சந்தெகமில்லை.
////ஏன் எனில் எனக்கு ரெண்டு கழகமும் பிடிக்காது! சரி உனக்கு கிரகம் புடிச்சிடுச்சுன்றீங்களா...///
அப்போ மூன்றாவது (திராவிட ?!!) கழகமான விசயகாந்து பற்றியும் அங்கங்கே டச் பண்ணிக்கோங்க..
பாலா,
கருணாநிதி இயற்றிய மச்சம் பற்றிய பாட்டையெல்லாம் அவர் அபிமானிகள் போடட்டும்.
மொத்த ஆட்டோகளுக்கு மத்தியில் நியூக்ளியஸ் மாதிரி என்னைப் பாக்கணும்னு ஆசைப்படுறீங்களே!
ஆ'றி'ய மாலாவா? ஆரிய மாலாவா? எதுவாக இருந்தாலும் தொடரட்டும் இந்த துகிலுரிப்பு - (துச்சாதன துரை பண்ணியதில்லை).
//விசயகாந்து பற்றியும் அங்கங்கே டச் பண்ணிக்கோங்க..//
விசயகாந்து மப்பு மேட்டருக்கு மப்பா சொன்ன பதில்லேயே அவர் மீது இருந்த கொஞ்சநஞ்சம் நம்பிக்கையும் காலி!
அதே குட்டையிலே ஊறின மூணாவது பிஞ்சுபோன மட்டை மாதிரி சிந்திச்சு பதில் சொல்லியிருந்தாரே!
//ஆ'றி'ய மாலாவா? ஆரிய மாலாவா? எதுவாக இருந்தாலும் தொடரட்டும் இந்த துகிலுரிப்பு//
தமிழகத்தின் முன்னேற்றம் தனது அரசு செயல்பாட்டில் ஆறியமாலாவாகத்தான் ஜெயலலிதாவை விமர்சிக்கிறேன்.
ஆரிய வாதம் ஆறிய வாதம் அதில் எனக்கு பெரிய அக்கறையில்லை
/கவி கருணாநிதி இருபதாண்டுக்கு முன்பாக இவரது அரசில் பெண் அமைச்சராக இருந்த ஈரோட்டு சுப்புலட்சுமியின் மேலுதட்டு மச்சம் குறித்து கவிபாடிய கம்பன் தானெ கருணாநிதி!//
அதனாலதான் மறுபடியும் மறுபடியும் மினிஸ்டரா ?
என்று திராவிட கழகங்கள் ஒழிகின்றனவோ அன்றுதான் தமிழகத்தின் விடிவுகாலம்
சிவா,
//என்று திராவிட கழகங்கள் ஒழிகின்றனவோ அன்றுதான் தமிழகத்தின் விடிவுகாலம்//
ஒழியாவிட்டாலும் சித்தாந்தங்களில் மாற்றம் மக்கள் நலனில் உண்மையான அக்கறைகாட்டும் தலைமை என வந்தால் விடிவு பிறக்கும்.
இதுக்கு புதுசா ஒரு இயக்கம் வருவது எளிது என்கிறீர்களா? ஒருவகையில் Repairing is too expensive than replacing!
பரத் அரசு,
//அதனாலதான் மறுபடியும் மறுபடியும் மினிஸ்டரா ? //
அதனாலேயும் இருக்கலாம்!
என்ன பண்றது போங்க,
நம்ம தலை எழுத்த யாரால மாத்த முடியும்.
/***********************************
விசயகாந்து மப்பு மேட்டருக்கு மப்பா சொன்ன பதில்லேயே அவர் மீது இருந்த கொஞ்சநஞ்சம் நம்பிக்கையும் காலி!
***********************************/
இப்படி உடனே முடிவு செய்வது சரியல்ல. . . .
வெங்கட் ராமன்,
நம்ம தலை எழுத்த யாரால மாத்த முடியும்.
/***********************************
விசயகாந்து மப்பு மேட்டருக்கு மப்பா சொன்ன பதில்லேயே அவர் மீது இருந்த கொஞ்சநஞ்சம் நம்பிக்கையும் காலி!
***********************************/
இப்படி உடனே முடிவு செய்வது சரியல்ல. . . .
நாம தான் lesser evils ஐத் தேர்ந்தெடுப்பத்தில் பலகாலப் பயிற்சி பெற்றவர்கள் தானே! விஜய்காந்திடம் எதிர்நோக்குவது இம்மாதிரி tit for tat தலைமையை அல்ல என்பதால் வந்த வெறுப்பு
Post a Comment