Monday, November 20, 2006

(58) பல்லிளிக்கும் இன்றைய தமிழ்குடிதாங்கி பல்லவ-சோழர்கள்

சென்னைத் தலைநகரிலிருந்து ஆரம்பிச்சுக் கணக்கெடுக்கலாம் வாங்க!

கத்திப்பாரா வேண்டாம் அது நாற்சந்தி விட்டுவிடுவோம்.

பல்லாவரத்தில் அனகாபுத்தூர் கூட்டுரோடு,

தாம்பரத்தில் கிழக்குபக்கம் வேளச்சேரி கூட்டுரோடு,

மேற்குதிசையில் படப்பை கூட்டுரோடு,

வண்டலூரில் கிழக்குப்பக்கம் திருப்போரூர் கூட்டுரோடு,

மேற்குதிசையில் காஞ்சிபுரம் கூட்டுரோடு,

கூடுவாஞ்சேரி தாண்டி சிங்கப்பெருமாள்கோயில் திருப்பெரும்பூதூர் கூட்டுரோடு,

செங்கல்பட்டு காஞ்சிபுரம் கூட்டுரோடு, செங்கல்பட்டு கல்பாக்கம் கூட்டுரோடு,

கருங்குழி-வேடந்தாங்கல் கூட்டுரோடு,

மேல்மருவத்தூர்தாண்டி திண்டிவனம் பாண்டிச்சேரி கூட்டுரோடு


இது எல்லாமே மூணுரோடு சந்திக்கும் கூட்டுரோடு எனப்படும் முச்சந்திங்க!

சரி ராமாயணத்துக்கு வருவோம். "டென்சென் ஆகாம கொஞ்சம் பொறுமையோட முழுக்கப் படிச்சுட்டு மறக்காம உங்க கருத்தைப் பின்னூட்டுங்க." ராம பிரானுக்கு பட்டம்சூட்டி அழகுபார்க்க ராமனின் தந்தையாகிய, பத்து ரதங்களை ஒரே நேரத்தில் திறனுடன் செலுத்தும் திறன் கொண்ட அரசன் தசரதன் விரும்பி ஏற்பாடுகளைச் செய்ய கூனியின் நினைவூட்டலால் கைகேயி தான் முன்பு ஒரு சமயத்தில் தசரதனிடமிருந்து பெற்ற வரத்தினை தசரதனிடம் நினைவூட்டி அதனை செயல்படுத்த கௌசல்யாவின் புத்திரனான ராமபிரானுக்குப் பதிலாக தனது மகன் பரதனுக்கு முடிசூட்டிவிட தசரதனை அவன் தந்த வாக்குறுதியால் நிறைவேற்றிக்கொள்கிறாள்.

வாக்குதந்தது தசரதன். வாக்குப் பெற்றது கைகேயி. தசரதனின் விருப்பம் ராமபிரானுக்கு முடிசூட்டுவது. கைகேயி Contractually right. ஆனால் பெற்ற விதம் தனது விருப்பத்தால் அல்ல. கூனிக்கிழவி தூண்டிவிட்டதால். பரதனுக்கு முடிசூட்டும் அதே வேளையில் இளவரசன் ராமபிரான் 14 ஆண்டுகள் வனவாசம் சென்று சிரமப்படவேண்டும் என்று கூனிக்கிழவியின் சாடிஸ்ட் விருப்பத்தை Contract condition ஆகப் போட்டதால் Morally incorrect!

ராமபிரான் முடிசூட்டிக்கொள்ள ஆசைப்படவில்லை எனவே வருத்தப்படவில்லை.

ஆசையே படாத ராமபிரான் தனது தந்தை தசரதன் தனது சிற்றன்னை(பெற்ற தாய்கூட இல்லை) கைகேயிக்குத் தந்த வாக்கினை நிறைவேற்ற வாக்குத்தவறியவன் என்ற பழிக்கு தன் தந்தை தசரதன் தன் பொருட்டு ஆளாகிவிடக்கூடாது என்று அதுவரை மாடமாளிகையில் வசித்த இராமபிரான் மரவுரிதரித்து கானகம் செல்கிறான். 14வருடம் வனத்திலே வாழ்ந்து பல்வேறு சிரமங்களை மானுடனாக எதிர்கொண்டு இறுதியில் வெல்கிறான்.

சத்தியவாக்கு தருவது மற்றும் (தந்தை) தந்த சத்திய வாக்கை நிறைவேற்றுவது என்பதை இறைவன் இராமபிரானாக அவதரித்து நெறியோடு மனிதனாக வாழ்ந்து சென்ற வாழ்க்கையைச் சொல்லும் இராமயணத்தில் காணக்கிடைக்கிறது. வேதநெறிகள் பின்பற்றி உண்மை, நேர்மை, செறிந்த வாழ்க்கைமுறையை மக்களுக்கு உணர்த்துவதற்க்காக சனாதன தர்மம் வாழ்க்கை முறையில் பாரதத்தில் நடந்த நிகழ்வை, வரலாற்றினை எளிதானவகையில் வெகுஜனத்தின் தினசரி வாழ்வு நேர்மை நிரம்பியதாக இருப்பதற்குத் தொகுக்கப்பட்ட சொல்லப்பட்ட சம்பவங்களே இதிகாசம் History as ithas happened என்பதே இராமாயணம்.

தசரதன் தந்த வரம்- கைகேயி கூனிக்கிழவியால் உந்தப்பட்டு பரதனை உள் நுழைத்தவிதம் - அதுவும் மறுநாள் காலை இராமபிரானுக்குப் பட்டாபிஷேகம் என்று 12மணிநேரம் கூட அவகாசம் தராமல் தசரதனை மடக்கியது இவை அனைத்தும் ரசிக்கத்தக்க பொலிடிகல் டிராமா! இன்றைக்கும் வெரி ரெலவண்டான முக்கியத்துவம்வாய்ந்த அரசியல் நிகழ்வு!

இத்தகைய ராமபிரானின் தாசனாகப் பெயர்கொண்ட தமிழ்க்குடிதாங்கி மருத்துவர் ஐயா ராமதாசு (தமிழ்ப்பாதுகாப்பு இயக்கங்களே தாஸை தாசுன்னு தமிழைத் தாங்கிட்டேங்க!) அரசியலில் நுழைந்ததே பெரும் வன்முறையோடுதான்!

தான் சார்ந்திருக்கும் வன்னிய சமூகத்தவர் பிரதானமாக வாழ்கின்ற மாவட்டங்களில், வன்னிய சமூகத்தவர் பிரதானமாக நூறாண்டுகளாக தமது நிழலில் இளைப்பாறி மேற்கொண்டு வயக்காட்டில் வேலைசெய்ய, சிறார்கள் ஏறிவிளையாடிய, பெண்கள் ஊஞ்சலாடி மகிழ்ந்த, வண்டிகளில் பயணம் செய்வோர் மேற்கொண்டு பயணிக்க, மற்றும் ஆயிரம் இயற்கைச்சீற்றங்களான புயல், மழை காற்று, மற்றும் தன்னை சார்ந்து ஒட்டிக்கொண்ட வெட்டுக்கிளி மாதிரி ஒட்டுண்ணிகளால் சாய்ந்துவிடாத ஆயிரம் சாலையோர மாபெரும் புளியமரங்களைப் இவரது குடும்ப அரசியல் எழுச்சிக்காக தீயிட்டுக்கொழுத்தியபின் வெட்டிச்சாய்த்த மரவெட்டிக்கிளியானவர்.

சமீபமாக தமிழ்குடிதாங்கும் மருத்துவர் ராமதாசு ஐயா அவர்கள் சாதி மகசூல் தேர்தல் களத்திலே பலமுறைகண்டவர். தமிழக அரசியல் களத்தில் தேர்தல்கால சாதி வியாபரத்திற்கு பெரியஅளவிலே சந்தையை ஏற்படுத்தியவர்! பெரிய சாதிவியாபார தொலைநோக்கு கொண்டவர்!

பொதுவிலே இவர் வைத்த வாக்குறுதி (செய்து கொண்ட சத்தியம்) இது :

"நானோ என் குடும்பத்தாரோ எம்.எல்.ஏ, எம்.பி, மந்திரி என்று எந்த விதமான பதவிகளும் வகிக்க மாட்டோம்! இந்த சத்தியத்தை மீறிப் பதிவி வகித்தால் எங்களை முச்சந்தியில் நிறுத்தி வைத்து சாட்டையால் அடிங்க என்பது தான் இவர் தந்த முதல் முக்கிய வாக்குறுதி!"

இன்றைக்கு தமிழ்க்குடிதாங்கி மருத்துவர் இராமதாசு தன்மகன் சின்ன ஐயா அன்புமணியை தேர்தலிலே தேர்ந்தெடுக்கப்படாமல் ராஜ்ஜியசபா எம்பியாக்கி இன்று அகில உலகம்போற்றும் வகையில்(டெல்லி டெங்கு , சிக்கன் குனியாவெல்லாம் பார்ப்பனீய சதி) இந்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சராக ஆக்கித் தனது வாக்கினைக் காப்பாற்றியிருக்கிறார்! ஏழைக்கேத்த எள்ளுருண்டையாக தனது சம்பந்தி கிருஷ்ணசாமியை கோஷ்டிசண்டை தமிழக காங்கிரஸ் தலைவராக்கியிருக்கிறார்!

காங்கிரஸுக்கு தமிழக அரசில் கூட்டணி மந்திரிசபை அமைக்க வாய்ப்பு வரும் நேரத்தில் இன்னொரு மக்கள் தியாகி விஷ்ணு பிரசாத் தமிழக மந்திரி ஆவார். யாரு விஷ்ணு பிரசாத்ன்றீங்களா? மக்கள் பொதுக்குழு ஏகோபித்து மந்திரியாக்கிய சின்ன மருந்து அன்புமணியின் மச்சானுங்க! கிருஷ்ணசாமியின் புதல்வர். தமிழக மந்திரியாக இதுக்கும் மேல தகுதி எதானும் தேவையா?

மேலே முதல்பாராவில் சொன்னமாதிரி வன்னியபூமியில் பல இடங்களில் கூட்டுரோடாக முச்சந்திகள் இருக்கின்றன! சாட்டை/சவுக்குக்கு அந்நியன் வேண்டாம் வயக்காட்டில் மாடுகளோடு போராடும் பாட்டாளி வன்னியனிடமிருந்தே பெற்றுக்கொள்ளலாம்!

தமிழ்க்குடிதாங்கி தசரத தந்தை ராமதாசும் தனயன் இராமபிரான் அன்புமணியும் வாக்குசுத்தம் பற்றி சிந்திப்பார்களா? இல்லை சிதறி ஓடுவார்களா? அல்லது பாமக மற்றும் தமிழகத்தின் அரசியல் திரா'விட' கட்சிகளின் வழக்கமான நேர்மையாகச் சிந்திக்கச் சொன்னவரை சிதறி ஓடச்செய்வார்களா?

இந்துமதம், வேதநெறி மற்றும் இராமாயணம் இவையெல்லாம் வாக்குச்சுத்தம், தந்தவாக்கைக் காப்பாற்றத் உண்மையிலேயே தியாகம் செய்வதைச் சொல்வதால் புகலிடமாக ஈரோட்டு வெங்காயத்தினைப் போற்றித் துதித்திவிட்டுப் ப.பகலவனின் பகுத்தறிவுக் கொள்கையைத் தத்தெடுத்துக்கொண்டால் தமிழ்நாட்டில் பிழைக்கவா முடியாது! இவரது அரசியல்காட்டில் அரசியல் திரா'விட'பகுத்தறிவுமேகம் முப்போகம் விளைக்க அவசியமான (சோ)"மாரி" இப்ப மாதிரியே எப்பவும் பொழியும்!

தமிழ்க்குடிதாங்கி மருத்துவர் ராமதாசுக்கும் தமிழின் தமிழ் கருணாநிதிக்கும் சுவையான புரிதல்கள் இருக்கிறது. ஏனெனில் இருவரும் வியாபாரிகள்.

"கருணாநிதி பிரதானமாக தமிழை வியாபாரம் செய்து பிழைப்பவர். துணை வணிகமாக சாதியை வியாபாரம் செய்பவர்."

"தமிழ்க்குடிதாங்கி ராமதாசு பிரதானமாக சாதியை வியாபாரம் செய்து பிழைப்பவர். துணை வணிகமாக தமிழ்(ப்பாதுகாப்பு) வியாபாரம் செய்பவர்."

ஆனா பாமக தலைவர் ஜிகேமணி ரொம்ப நல்லவர். இந்த தேர்தல்ல சந்தனக்கொள்ளையன் வீரப்பனின் மனைவி தேர்தலில் போட்டியிட்ட காரணத்துக்காக தொகுதியையே மாற்றிக்கொண்டுவிட்டவர்.

ஆனா காடுவெட்டி குரு பயங்கர காமடியானவர். பிளாப்பான ரஜினியின் பாபா திரைபடத்தின் பெட்டியை ஜெயங்கொண்டம் ரங்கா தியேட்டரில் ஸ்க்ரீனைக் கிழித்து என்று போராடி வண்டியெல்லாம் வச்சு முந்திரிக்காட்டுக்கு எடுத்துப்போய், கஷ்டப்பட்டு கைக்காசைப் போட்டு திருட்டு விசிடி எல்லாம் தயாரிச்சா பாவம் பாபாவைத்தான் வாங்கிப்பார்க்க ஆளில்லை! பெரிய நஷ்டம்! படப்பொட்டியக் கடத்தும் முன்பே பாபா ப்ரீவ்யூல என்ன ரிவ்யூன்னு கேட்கலை போலிருக்கு! பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்னு விஷ் பண்ணமுடியலை ஐ யம் வெரி சாரி! இந்தச் சம்பவத்துக்கப்புறமா காடுவெட்டி குரு ஏனோ மாவீரன் குரு ஆகிட்டாருங்க!

அன்றைய மகேந்திர,நரசிம்ம பல்லவ மற்றும் ராஜராஜன், ராசேந்திர சோழ அரசர்கள் மக்களுக்காக வாழ்ந்தார்கள். மக்களின் நலத்துக்கு என்று பல மருத்துவச்சாலைகள் அமைத்தார்கள்.

இன்றைய இந்தப் பல்லிளிக்கும் பல்லவ-சோழர்களான பெரிய,சின்ன மரு(ந்)துகள் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனி & ஆராய்ச்சி நிறுவனத்தினைச் சத்தமில்லாமல் சுருட்டிட முயலும் வல்லவர்கள்!


"Leadership by Example என்பது தமிழக அரசியலில் இருக்கும் சுயநல கயமைக் கட்சித் தலைமைகளிடம் காணப்படாத அம்சம்! "

அன்புடன்,

ஹரிஹரன்

13 comments:

Hariharan # 03985177737685368452 said...

டெஸ்ட் மெசேஜ்!

Amar said...

ஹிஹ்ஹி
another good one, boss.

ஜயராமன் said...

நீங்க போர ஸ்பீடு பார்த்தா ஏதாவது ஒரு நெடுஞ்சாலை புளியமரத்துல முட்டி ஆக்ஸிடெண்டாக ஆகாம இருக்கனுமா? அப்படியே ஆயிட்டா, அதுக்கு மருத்துவம் பார்க்க ஜிப்மருக்கு போங்க....

bala said...

//"Leadership by Example என்பது தமிழக அரசியலில் இருக்கும் சுயநல கயமைக் கட்சித் தலைமைகளிடம் காணப்படாத அம்சம்//

ஹரிஹரன் அய்யா,

அப்படி சொல்லிவிட முடுயாதுங்கய்யா.
இந்த கும்பலுக்கு மூலமே தந்தை பெரியார் தான். அவர் தான் example.
தமிழகத்துக்கே வெங்காய அல்வா கொடுத்து ஏமாத்தின அவர் ஏற்படுத்திய அரசியல் business model தான் அனைத்து திராவிட கட்சிகள் தலைமையும் வெற்றிகரமா replicate செய்யறாங்க.
நம்ம அண்ணாவே, தந்தையோட சுயநல குணத்தைப் பாத்து நொந்து போய் எழுதினதை நீலகண்டன் அய்யா பதிவுல படிக்கலாம்.

பாலா

Hariharan # 03985177737685368452 said...

சமுத்ரா,

வருகைக்கும் பாராட்டினதுக்கும் நன்றிகள்!

Hariharan # 03985177737685368452 said...

ஜெயராமன் சார்,

எனது ஸ்பீடு average and within Facts and truths. எப்படியும் மஞ்சள் துண்டுக்காரர் அடுத்த பச்சைதுரோகம் செய்யுமுன்பு ஜிப்மருக்கு தைலாபுரத் தன்னாட்சி அதிகரம் மத்திய சுகாதாரத்துறையால் வழங்கப்பட்டுவிடும்!

கூட்டணிதர்மமே கூட்டுக் கொள்ளைதானே! :-)))

மனிதன் said...

"இன்றைய இந்தப் பல்லிளிக்கும் பல்லவ-சோழர்களான பெரிய,சின்ன மரு(ந்)துகள்" பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனி & ஆராய்ச்சி நிறுவனத்தினைச் சத்தமில்லாமல் சுருட்டிட முயலும் வல்லவர்கள்!

அன்பு ஹரிஹரன் பெரிய, சின்ன மருது அடையாளங்களை இவர்களுக்கு கொடுக்காதீர்கள். அதற்கு வேறு ஆட்கள் சிதம்பரத்தில் இருக்கிறார்கள்.இந்த மருத்துவர்களுக்கு அந்த மருதுகளை கண்டால் மருட்சி.

ஜெயங்கொண்டத்தில் பாபா பெட்டி சுருட்டிய குரு கோஷ்டிகள்,சிதம்பரத்தில் பெட்டிப் பாம்பாய் இருப்பார்கள். இந்த மருதுகளின்
cinema theatre பக்கம் அந்த மருத்துவர்களின் தொ(கு)ண்டர் படை மருந்துக்கு கூட எட்டிப்பார்க்காது.
என்றென்றும் அன்புடன்,
பா.ராமசந்த்ரன்.

Hariharan # 03985177737685368452 said...

மனிதன் (எ) பா.ராமச்சந்திரன்,

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

//பெரிய, சின்ன மருது அடையாளங்களை இவர்களுக்கு கொடுக்காதீர்கள். அதற்கு வேறு ஆட்கள் சிதம்பரத்தில் இருக்கிறார்கள்.இந்த மருத்துவர்களுக்கு அந்த மருதுகளை கண்டால் மருட்சி//

இது என்ன விஷயம் என்பதை கொஞ்சம் விளக்க முடியுமா? நன்றி

Hariharan # 03985177737685368452 said...

வரதன்,

நம்ம எல்லோர் பிறந்த நாட்களுக்கு முன்னேயும், பின்னேயும் இவர்கள் செய்துகொண்டிருப்பதை மௌனமாக பார்த்துக்கொண்டே தானே இருக்கிறோம் பொதுவாக!

நம் மாதிரி சாதாரணர்கள் இவர்களது செயல்பாடுகளை இனியும் மௌனமாகப் பார்க்கும் மனோநிலையில் இல்லை என்பதை பாமக எம்.எல்.ஏ, எம்.பிக்களின் சொந்தங்கள் அறிந்து கொள்வது பதிவின் கருத்து அதன் இலக்கை அடைகிறதாகவே எடுத்துக்கொள்ளப் படவேண்டும்.

//வெள்ள ரவி தலைமையில முதல் இரவு செஞ்சிக்கிட்டவுங்க//

கொச்சையாக இது போன்று எழுத வேண்டாம். அநாகரீகமாக சொல்லாட வேண்டாம். சுட்டியதற்கு வருத்தப்பட மாட்டீர்கள் என நம்புகிறேன்.

மனிதன் said...

ஹரிஹரன்,
கொஞ்சம் குழலி பக்கம் போய் பாருங்க.
சிதம்பரத்துல ரயிலடிக்கு அந்தண்ட,ரயிலடிக்கு இந்தண்ட என்று பொலம்பி இருப்பாரு. இந்த மருது சகோதரர்கள், வாண்டையார் கோஷ்டிதான்
ஒரிஜனல் பெரிய மருது சின்ன மருது.இதுல ஒருத்தர் விபத்துல இறந்துவிட்டார்.இருந்தாலும் சிதம்பரத்துல அவங்க வெச்சதுதான் சட்டம்.
என்றென்றும் அன்புடன்,
பா.ராமச்சந்த்ரன்.

ஜடாயு said...

நல்ல நகைச்சுவைப் பதிவு. குடிதாங்கியை முச்சந்தில நிக்க வெச்சி இப்படி இடிதாங்கி ரேஞ்சுக்கு ஆக்கிட்டீங்களே ஐயா!

Karthik Sambuvarayar said...

வன்னியர்களான பிச்சாவரம் ஜமீன் கிட்ட பல்லக்கு தூக்கின மாரியப்ப வாண்டையார் மகன் தான் இந்த ஸ்ரீதர் வாண்டையார் ....யாரு யாரை பார்த்து பயப்டரது??? நல்ல காமெடி போங்க...வன்னியன் எவனுக்கும் பயப்படமாட்டான்....

Unknown said...

காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு தான்(இருவருக்கும் தான்)...