(65) தீண்டாமை தோன்றிய விதம்
தீண்டாமையை உருவாக்கியவன் பாப்பான் என்பது குற்றச்சாட்டு! வேதம் பயின்ற பிராமணர்கள்தான் முதலில் பேதம் பார்த்தனர் என்பது பகுத்தறிவுப் பழிச்சொல்.
மனிதனை மனிதன் வெறுக்கும் அளவுக்குத் தீண்டாமை எப்படித் தோன்றியது என்று பார்க்கலாம்.
ஒரு சிறு கதைமூலம் எப்படி மூடநம்பிக்கைகளை நமது புரிதல் குறைவு, அக்கறையின்மை, அல்லது சோம்பேறித்தனத்தால் உருவாக்குகிறோம் என்று காண்போம்.
ஒரு சிறிய கதை முதலில்:
ஒரு முனிவரின் குருகுலத்தில் மாணாக்கர்கள் கல்வி பயின்று கொண்டிருந்தார்கள். வகுப்பறையில் பூனை ஒன்று தினமும் நுழைந்து அன்றைய பயிற்சியின் இறுதியில் முனிவர் கண்ணைமூடியபடி இறைவழிபாட்டிலிருக்கும் போது இறைவனுக்கு நைவேத்தியம் செய்ய வைக்கப்பட்டிருந்த பாலைக் குடிப்பது என்று சில நாட்களாக பழக்கமாகியிருந்தது. இதைக்கண்டு முனிவர் அடுத்தநாளிலிருந்து வகுப்பறைக்குள் வந்த பூனையை கயிற்றால் அங்குள்ள தூணில் கட்டிவைத்தார். இதனால் பயிற்சி முடிந்து நைவேத்தியம் தடையின்றி நடந்தது.
சில ஆண்டுகள் கழித்து முனிவர் இறைவனடி சேர்ந்தார்.
இதைக் கண்டவாறே அடுத்து பொறுப்பில் வந்த நபர்கள் தொடர்ச்சியாக குருகுல பயிற்சியை தொடர நைவேத்தியத்தின் போது கண்டிப்பாக பூனை தூணில் கட்டப்பட்டிருக்கவேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்தினர். பின்னாளில் அடுத்து வந்த நபர்கள் கறுப்புப்பூனையைத் தூணில் கட்டினால் தான் முழுமையான நன்மை என்று அடுத்தடுத்த மூடநம்பிக்கைகளைக் குட்டி போடவைத்தனர்.
சரி இப்போ தீண்டாமைக்கும் வேத நெறி வாழ்ந்த பிராமணனுக்கும் வருவோம்:
தீண்டாமையை உருவாக்கியவன் பாப்பான் என்பது பிரதான குற்றச்சாட்டு! வேதம் பயின்ற பிராமணர்கள்தான் முதலில் பேதம் பார்த்தனர் என்பது பழிச்சொல்
அக்கிரஹாரத்திலே நடக்கும் போது செருப்பைக் கையில் எடுத்துச்செல்ல வற்புறுத்தினவர்கள் பிராமணர்கள் என்பது அடுத்த குற்றச்சாட்டு!
அக்கிரஹாரத்தில் நுழைந்தவுடன் பிரதானமாக இருக்கின்ற பத்து இருபது வலது இடது வரிசை வீடுகளின் நடுநாயகமாக இருப்பது பெருமாளோ/ கிருஷ்ணனோ விநாயகரோ சுப்ரமணியனோ அமர்ந்திருக்கும் கோவில். அக்கிரஹாரத்தின் அடுத்தமுனையில் ஓடுகின்ற ஆறு என்பதுதான் அக்கிரஹாரத்தின் அமைப்பு. ஆறு இல்லை என்றாலும் கோவில் 100% எல்லா அக்கிரஹாரத்திலும் இருக்கும்.
ஐம்பது நூறாண்டுகள் முன்பு அக்கிரஹாரத்தில் தினசரி கோவிலில் ஏதாவது ஒரு யாகம், ஹோமம், பூஜைகள் என்று தெய்வம் சார் நிகழ்வுகள் நடந்தபடியே இருக்கும். இரண்டாவதாக அக்கிரஹாரத்தினை ஒட்டி நீர் ஓடும் ஆற்றில் செருப்பத்தூக்கியவாறே போவது சிரமம் இதன் பொருட்டே செருப்பை அக்கிரஹாரத்தில் தவிர்க்கவேண்டும் என்ற நடைமுறை வந்தது. அக்கிரஹாரத்து வயதான கிழப் பிராமணர்கள் செருப்பைக் கையில் எடுத்தவாறே நடந்திருப்பதை நான் 1970களின் இறுதியில் எனது உறவுக்காரர்கள் இருந்த கிராமத்து அக்கிரஹாரத்தில் நேரில் கண்டிருக்கிறேன்!
இன்றைக்கும் இறைநம்பிக்கை உடையவர்கள் உற்சவம் திருவுலா என்று தெய்வம் இருக்கும், தெய்வ நிகழ்வுகள் நடக்கும் ஒரு இடத்தில் இன்றைக்கும் காலில் செருப்போடு நாம் யாரும் போக விழைவதில்லை.
"பிராமணர் வீட்டிலே வேலைசெய்யும் இதரசமூகத்தினர் தொட்டால் தீட்டு என்று பாத்திர பண்டங்கள் மீது நீர் தெளித்து இழிவுசெய்தனர் என்பது அடுத்த குற்றச்சாட்டு."
அம்பது நூறாண்டுகளுக்கு முன்பாக இருந்த சூழலை நிகழ்வின் பின்ணணியாக எண்ணிக்கொள்ளுங்கள்.
முந்தைய காலத்தில் பிராமணன் வீட்டிலே நாலு பசுமாடு ரெண்டு காளைகள் கன்னுக்குட்டி என்று கால்நடைகள் பராமரிப்பும் இருந்தது. வீட்டிலே வேலை செய்பவர்கள் பால் கறந்த குவளையைக்கூட நேரடியாக வீட்டினுள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டதில்லை. நன்கு தேய்த்துக்கழுவிய பாத்திரத்தில் கை பட்டுவிடாமல் தூக்கித்தான் பால் ஊற்ற அறிவுறுத்தப்பட்டார்கள். காரணம் மாடுகளுக்கு கோமாறி நோய், கொள்ளை நோய் என்று தொற்று நோய் வேறு வீடுகளில் இருக்கும் மாடுகளைப் பராமரிக்கும் நபர் மூலமாக வீட்டில் உள்ள குழந்தைகளிடம் பரவி விடும் வாய்ப்பை குறைக்கவே. அறிவியல் பூர்ணமான "க்வாரன்டைன் செய்யும் ஆக்டிவிட்"டி!
வயல் காடுகளிலும், களத்து மேட்டிலும் உழவு மாடுகள் என்று கால்நடைகளோடு புழங்கியவர்கள் அக்கிரஹாரத்தில் நுழையுமுன்பே குறைந்த பட்சமாக Rinse cleaning காக ஆற்றிலே குளித்தபின்னர் வருவர். வீட்டுநபர்கள் இல்லாத நபர்கள் தொற்று நோய் அச்சம் /சுகாதாரம் காரணமாக பின்வாசலைப் பயன்படுத்தப்பட்டது.
இன்றைக்கும் கொள்ளையிலே போறவனே என்பது கிராமங்களில் வசவாகவே பயன்படுத்தப்படுகிறது. கொள்ளை நோயின் தீவிரம் இதிலிருந்தே ஓரளவுக்கு உணரலாம். பழைய தாத்தா/பாட்டிகள் நாங்க 14பேர் கூடப்பிறந்தவங்க ஆனால் 6பேர் சின்னப்பவே 10வயசாகும் முன்பே இறந்துட்டாங்கன்னு சொல்ல அக்கால குழந்தைகள் இறப்பு, தொத்து நோய் தீவிரம் உணரலாம்!
"முடிவெட்டிக்கொண்ட பின்பு வீட்டிலே நுழைவதிலிருந்து குளியல் அறை வரைக்கும் அடிமேல் அடிவைத்து முன்னே நடக்க நடக்க பின்னாலேயே தண்ணீர் தெளித்தவாறே வருவது என்பது பிராமணவீடுகளில் இருந்த பழக்கம்."
இங்கும் அறிவியல் பூரணமான காரணமே இச்செயலின் பின்புலம். ஐம்பது நூறாண்டுகளுக்கு முன்பாக கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த வாழ்க்கை முறையில், மருத்துவ வசதிகள் இல்லாத அந்தக் காலகட்டத்தில் வீட்டுத் திண்ணையிலே முடிவெட்டி / சவரம் செய்து கொண்டு வரும்போது நுண்ணிய முடித்துகள்கள் பறந்து பரவி வீட்டிலிருக்கும் சிறு குழந்தைகள்/ முதியவர்க்கு சுவாச அசௌகர்யம் இன்னபிற தொந்தரவுகள் வராமலிருக்க கொல்லைப்புறம் குளியல் அறை வரையில் முன்னே ந்டக்க நடக்க வீட்டினர் பின்னே நீர் தெளித்தபடி, பின் துணியால் மொழுகித்துடைத்து என்று சுகாதாரம் முன்னிறுத்திய செயல். நாவிதர் இல்லாமல் சுயமாய் சவரம் செய்தாலும் பிராமணவீட்டில் சவரம் செய்து கொண்ட ஆளுக்கு இதே மரியாதைதான். சவரப் பொருட்கள் மூட்டைகட்டி வீட்டிலே பரணில் இல்லை புழக்கம் குறைந்த எங்காவது தனிமைப்படுத்தப்பட்ட இடத்திலேயே வைக்கப்படும். இதிலிருந்தே இது நாவிதர்க்கு அநீதி இழைக்கச் செய்யப்பட்ட செயலில்லை எனப் புரியும்.
அடுத்த குற்றமாக பிராமணர்கள் எவனையும் மதிப்பதில்லை எல்லாரையும் நீ வா போ என்று ஒருமையில் மரியாதை இன்றி அழைத்து இழிவு செய்பவர்கள்.
பாசாங்கின்றி தன்வீட்டாரை எங்கனம் அழைக்கிறானோ அப்படியே தானெ வீட்டில் வேலை செய்ய போவோர் வருவோரிடம் பிராமணர்கள் பழகுகின்றார்கள்! இதைக் குறையாக மட்டுமே ஏன் பார்க்கின்றீர்கள். இதில் இன்றைக்கு பிராமணர்களிடையே பெரிய மாற்றம் வெளியுலகோடு தொடர்பு என்ற விதத்தில் ஏற்பட்டு இருக்கிறது.
இப்போ முதலில் சொன்ன கதையில் குருகுலத்தில் க்ளாஸ் நடக்கும் போது பூனையைப் பிடித்து தூணில் கட்டியே ஆகவேண்டும் என்பது இன்றியமையாத நடைமுறை என்று ஆக்கி அதில் கட்டப்படும் பூனையின் நிறம் எவ்வளவு முக்கியம் என்கிற அளவுக்கு விவாதிக்கும் நாம் ஏன் பூனை தூணில் கட்டப்பட்டது என்பதை அறிய முற்படுவதில் நேர்மையாக கவனம் செலுத்துவதில்லை.
இதிலே சமூகத்தில் பல பிரிவிலும் இருந்த ஆதிக்கமனப்பான்மை கொண்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் அச்சமயங்களில், அந்தக் காலகட்டத்தில் வேறு நல்ல காரணத்திற்காக இருந்த மனிதர்களைக் "க்வாரன்டைன் செய்யும் நடைமுறைகளின்" பின்ணணியில் இருக்கும் அறிவியல் உண்மையை அறியாமலோ இல்லை மறைத்தோ ஒரு பிரிவு ஆட்களின் மீது ஆதிக்கம் செலுத்த, அடிமைப்படுத்திய பிரித்தாளும் சூழ்ச்சியோடு ஆங்கிலேயன் இன்னும் பலமாக நடைமுறைப்படுத்திச் சென்றான்.
சுயநலம் மேலோங்கிய இன்றைய 2006லும் வேதம் என்ற கடலின் ஓரத்தில் கட்டைவிரலை நனைக்க முயலும் என்னாலேயே ஓரளவுக்கு மேம்படும் முயற்சியாக மனிதனாகச் சிந்தித்து மனிதனாய் நடந்து பிறரை மனிதனாய் நடத்தவே வேத நெறி என் மனம் வழி நடத்துகிறது. முழுமையாக வேதத்தினை அறிந்து நடந்த முன்னோர்களின் ஒரு சமுதாயம் மனிதனை மனிதனாகத்தான் நடத்தியிருக்கும்.
பிராமணன்தான் தீண்டாமைக்கு மூல காரணம் என்பது அறிவியல் பூர்வமாக ஆகாது. ஆதிக்க சாதியினர், சாதிவியாபார அரசியல் பிழைப்புவாதிகளுக்கு உண்மைகளால் ஆதாயமில்லை எனவே செக்குமாடு மாதிரி பிராமணன் மட்டும் தான் அனைத்திற்கும் காரணம் என்கிற ஆதாரமற்ற ஆதாயப் பேச்சுக்களைத் தொடர்கின்றனர்.
இன்றைக்கு மருத்துவ வசதிகள் வந்து தொற்றுநோய் அச்சம் குறைந்து குழந்தை இறப்பு பயம் நீங்கியதில் மனிதர்களை இதன் காரணமாக "க்வாரன்டைன்" செய்யவேண்டிய நடைமுறையின் அவசியம் குறைந்து கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது.
அதேமாதிரி கிராமத்திலேயே அக்கிரஹாரத்திலேயே சாதிப்பெருமை பேசியபடியேதான் வாழ்வேன் என்று பெரும்பான்மையான பிராமணர்கள் வெட்டிப் பெருமை பேசி வீணாகவில்லை.
கால மாற்றத்தில் முதலில் சீர்திருத்தம் வீட்டில் எடுத்துவருப்வர்களாக பெரும்பான்மை பிராமணர்கள் இருக்கின்றார்கள்.
இன்றைக்கும் சாதி ஆதிக்கம் வேறு யாரோ செய்ய பழியைச் சுமக்கும் சுமைதாங்கியாக இருந்துகொண்டே ஆக்கமாகச் செயல்படுகின்ற பிரிவாகவே இருக்கின்றார்கள்.
முழு வால்யூமில் மைக்கும் ஸ்பீக்கரும் அருகருகில் வைத்தால் காது கிழிய கூகூகூஊஊ என்று காது கிழிகின்ற பேச்சுக் கேட்காத Haunting High frequency sound வரும் அதுதான் இப்போ பிழைப்புவாத ஜாதிவியாபாரி அரசியல் வாதிகள் போடும் சாதிக் கூச்சலில் பொதுஜனத்திற்குக் கிட்டிய பயன்.
அன்புடன்,
ஹரிஹரன்
22 comments:
டெஸ்ட் மெசேஜ்!
இந்த தமிழ் அவுங்களுக்கு புரியுமா?
மன்னித்துக்கொள்ளுங்கள்,
இவை ஏற்புடையதாக இல்லை. இந்து தருமமும் சமுதாயமும் வாழ சாதி வேரும் வேரடி மண்ணுமற அழிய வேண்டும். சாதி வேறுபாடின்றி அனைவரும் வேதம் கற்க அனுமதிக்கப்பட வேண்டும். அனுமதிக்கப்படுவது என்ன அனுமதிக்கப்படுவது. அனைவரும் வேதம் கற்க வேண்டும். மேல்சாதி எனப்படுவோர் கல்லூரி படிப்பில் ஒரு பகுதியாக அவர்கள் கட்டாயமாக ஒருவருடம் சமுதாயத்தில் நலிவடைந்த மக்கள் வாழும் பகுதிகளில் தங்கி அவர்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுக்க வேண்டும். எவ்வாறு இஸ்லாமிய பயங்கரவாதம் எதிர்க்கப்படுகிறதோ அதே தீவிரத்துடன் (ஒரு வேளை அதைவிட தீவிரத்துடன்) சாதீய கொடுமைகள் எதிர்க்கப்பட வேண்டும். சாதிய வட்டத்துக்கு அப்பால் வாருங்கள் சகோதரரே. இந்துத்வ உணர்வுடன் சமுதாயத்தை முழுமையாக அரவணையுங்கள்.
இங்கே எங்கூரு கோயிலில் (ஹரே க்ருஷ்ணா) சாயந்திரம் தீப ஆராதனைக்கு
ஒரு பாட்டு (சிடி)போடுவாங்க. அது அந்தக் காலத்துலே யாரோ வெள்ளைக்காரம்மா
நாக்குப் படியாம குழறிக்குழறிப் பாடுனது. என்ன வார்த்தைங்க அந்தப் பாட்டுலெ இருக்குன்றது
அந்த கிருஷ்ணனுக்கே வெளிச்சம்.
அதுக்கப்புறம் எத்தனையோ பஜனை சிடி இருந்தாலும், அது என்னமோ தவறாம மேற்படிப் பாட்டு
மட்டும் ஆரத்தி சமயம். நான் அந்தப் பாட்டுக்கு இதே பூனைக் கதையைச் சொல்லி,
இந்தப் பாட்டுக்கே, 'பூனை'ன்னு பேர் வச்சுருக்கேன்:-))))
நீலகண்டன்,
இந்துமத வேதம் எல்லோருக்கும் பொதுவானது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
வேதம் கற்க தனிமனிதனின் மனோபாவம் அதில் நம்பிக்கையோடு இருத்தலே மிகவும் அவசியம்.
சாதியக் கொடுமைகளுக்கும் வேதத்திற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. வேத நெறி ஒழுக்கம் குன்றியதில் ஏற்படுகின்ற குறைபாடே தனிமனிதனிடம் மனதில் பெரும் அகங்காரமாக தான், தன் சாதி என்று கோரமுகம் காட்டுகிறது. நலிந்தவனை நசுக்க முற்பட்டு முன்செல்ல வைக்கிறது!
வலிமையுடையவன் வலிமை குன்றியவனைக் காக்கவேண்டும் என்பது வேதத்தின் நெறி. இது அறிவு,பொருளாதார,பாதுகாப்பு, என எவர் எவைகளில் வலிமையோடு இருக்கின்றார்களோ அவர்கள் சமுதாயத்தில் அவையில்லாத வலிமை குன்றியவர்களைப் பாதுகாக்கவேண்டும்.
இந்த வேத நெறி வாழ்க்கையில் அடிப்படையாக அனைவராலும் பின்பற்றப்பட்டது முறையாக மீண்டும் தொடரப்பட்டாலே சமூகத்தில் இன்றிருக்கும் மேடுபள்ளம் சரியாகும்!
நீங்கள் இசுலாமிய பயங்கரவாதம் அதை எதிர்ப்பது எனும் கோணத்தில் மட்டும் இந்துத்வாவை சுட்டியிருக்கின்றீர்கள்.
பிறர்க்கு ஊறு விளைக்கின்ற சாதீய வட்டத்திற்குள் நானில்லை.
வடுவூர் குமார்,
அர்த்தம் புரிந்து விஷயத்தின் மூலத்தை அறிய தமிழ் உதவும் என்றே நினைக்கிறேன்!
பிராமண எதிர்ப்பு என்பது பிழைப்புவாதிகளின் கொள்கையின் பிரதானமாயிருக்க புரியவே வேண்டாம் என்று நினைப்பவர்கள் ஏராளம் இருக்கிற சூழலில் எழுதவேண்டும் என்று விழைந்தது இது!
துளசியக்கா,
நீங்கள்தான் டீச்சராச்சே! சிடி-பூனையைக் கூட அடையாளம் கண்டுகொண்டிருக்கின்றீர்கள்! :-)))
நமது சமுதாயத்தில் எல்லோரும் இந்தப் பூனைகளை அடையாளம் காணவேண்டும்!
//வீட்டிலே வேலை செய்பவர்கள் பால் கறந்த குவளையைக்கூட நேரடியாக வீட்டினுள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டதில்லை. நன்கு தேய்த்துக்கழுவிய பாத்திரத்தில் கை பட்டுவிடாமல் தூக்கித்தான் பால் ஊற்ற அறிவுறுத்தப்பட்டார்கள். காரணம் மாடுகளுக்கு கோமாறி நோய், கொள்ளை நோய் என்று தொற்று நோய் வேறு வீடுகளில் இருக்கும் மாடுகளைப் பராமரிக்கும் நபர் மூலமாக வீட்டில் உள்ள குழந்தைகளிடம் பரவி விடும் வாய்ப்பை குறைக்கவே. அறிவியல் பூர்ணமான "க்வாரன்டைன் செய்யும் ஆக்டிவிட்"டி!//
அரிஅரன் உங்கள் வீட்டுக்கு கண்ணன் வந்து பால் கறந்தாலும் இதே ட்ரீட்மெண்ட்தானா?
ஆமாம் கிருமிகள் சாகவேணுமென்றால் சுடவைக்கலாம் தானே அதற்கு பதிலாக அதென்ன நீர் தெளித்தல்? ஐயா சிறிதே சிந்தியுங்கள். சுத்தம் குறித்த தவறான எண்ணவோட்டத்தால் பிழையான சிந்தனையால்ல் ஏற்பட்ட பழக்கங்களுக்கு எதற்கு வக்காலத்து வாங்குகிறீர்கள்? உங்கள் அறிவை நீங்களே சிறுமைப்படுத்துகிறீர்கள்? நாங்கள் இந்துத்வத்தை இஸ்லாமிய எதிர்ப்பு எனும் குறுகிய வட்டத்தில் காணவில்லை. மாறாக மனிதகுலமனைத்தையும் வாழ்விக்க வந்த வரப்பிரசாதமாகவே காண்கிறோம். ஆவுரித்து தின்பவரும் இந்துவெனில் எம் சோதரரே எனும் பாரம்பரியத்தின் அடிப்படையில் கூறுகிறோம். வேதகாலம் முதல் வீர சாவர்க்கர் வரை ஆன்மநேய மானுட ஒற்றுமையின் பதாகையை ஏந்திப்பிடித்த வீரர்களின் தியாகத்தால் உந்துதல் பெற்று கூறுகிறோம். சாதீயத்துக்கு அப்பால் வாருங்கள். இந்துத்துவத்துக்குள்.
நீலகண்டன்,
//அரிஅரன் உங்கள் வீட்டுக்கு கண்ணன் வந்து பால் கறந்தாலும் இதே ட்ரீட்மெண்ட்தானா?//
அய்யா எனது 17 ஆண்டுகளுக்கு நான் நாடார் சமூகத்தினர் நடத்தும் நாடார் உறவின்முறை பால்பண்ணையின் பால் குடித்து வளர்ந்தவனே!
//ஆமாம் கிருமிகள் சாகவேணுமென்றால் சுடவைக்கலாம் தானே அதற்கு பதிலாக அதென்ன நீர் தெளித்தல்? ஐயா சிறிதே சிந்தியுங்கள். உங்கள் அறிவை நீங்களே சிறுமைப்படுத்துகிறீர்கள்? //
Pasteurization என்ற பாலின் வழி வரும் விஷயம் பால் கொதிக்கக் கொல்லப்படும்.
//சுத்தம் குறித்த தவறான எண்ணவோட்டத்தால் பிழையான சிந்தனையால்ல் ஏற்பட்ட பழக்கங்களுக்கு எதற்கு வக்காலத்து வாங்குகிறீர்கள்? //
இன்றைக்கு 2006லும் சுத்தம் சுகாதாரம் இவைகள் வாழ்க்கை முறைகளில் முழுமையாக அறியப்படாத சிக்குன் குனியா /டெங்கு வைரஸ் காய்ச்சல் இருப்பவரை "க்வாரன்டைன்" செய்யத்தான் செய்கிறோம் அவர் சொந்தக்காரராகவே இருந்தாலும்.
அறியப்படாத நோய் அதுவும் உயிர்க்கொல்லி நோய் எனும்போது பெரிய உபகரண வசதிகள் இல்லாத காலகட்டத்தில் முன்னெச்செரிக்கையாக ஆரோக்கியம் மற்றும் குழந்தை இறப்பு இவைகளுக்காகச் செய்யப்பட்டவை.
//உங்கள் அறிவை நீங்களே சிறுமைப்படுத்துகிறீர்கள்?//
நீங்கள் அப்படிக் கருதவேண்டாம் என வேண்டுகிறேன்.
//Pasteurization என்ற பாலின் வழி வரும் விஷயம் பால் கொதிக்கக் கொல்லப்படும். //
Pasteurization என்ற சூடாக்கும் முறைக்கு முன்பே பாலின் வழி வரும் கிருமி விஷயம் பால் கொதிக்க வைத்தலால் கொல்லப்படும் தான்.
நான் சுட்டியது சூழல் வழி கிருமிகள் வரும் வழிகளை.
சில வார்த்தைகள் விடுபட்டிருந்ததால் இவை மீண்டும்
dear hari haran
You are correct. ur opinion is true. i tried to type in tamil but i could not i dont know why e kalapai not work in comments section.
and i am also like to study "vedham" but iam not a brahmin and iam living in Sri Lanka can u me to study Vedham do u know any websites having vedham in tamil like e books ?
pls tell to me.
and Mr.neelakandan plz see this blog for ur "Jathiyam"
hindhu.blogspot.com
any one help me to add coments in tamil plz
ஹிந்து அய்யா,,
எனது கருத்தை சரி என்று ஒத்துக்கொண்டதற்கு மகிழ்ச்சி.
தமிழில் கமெண்ட் தட்டச்ச இ-கலப்பை
யூனிதமிழ் alt+2 எனும் அமைப்பில் இருப்பதை உறுதிப்படுத்தவும்.
இந்துமத வேதம், பகவத்கீதை, உபநிடங்கள் கற்க பல்வேறு இணைய தளங்கள் உள்ளன. சின்மயா மிஷனில் ஆன்லைன் வேதப்படிப்பும் சொல்லித்தரப்படுகிறது. கீழ்காணும் இணையச் சுட்டிகள் தங்களது வேதம் கற்கும் ஆர்வத்திற்க்கு முறையாக வழிநடத்தும்.
www.hinduonnet.com
www.hinduism.about.com
www.hinduwisdom.info
www.hindubooks.org
www.vedah.com
Chinmaya Yuva Kendra
www.chyk.net
www.chinmayamission.org
www.chinmayamission.com
Chinmaya Mission of Sri Lanka
www.cmslonline.org
www.sriramakrishna.org
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.
தங்களுக்குத் தேவைப்பட்டால் தனிமடல் இடவும். எனது புரொபைலில் ஈமெயில்தொடர்பு முகவரி உள்ளது.
அன்புடன்,
ஹரிஹரன்
ஹரிஹரன்,
பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு வழிமுறைகள் கண்டுபிடிக்கப் படாத காலத்தில் சில பழக்கங்கள் கடைப்ப்பிடிக்கப் பட்டதனாலேயே, அவற்றின் பின்னால் அறிவியல் இருந்தது என்று நீங்கள் கற்பிதம் செய்வதாக எனக்குப் படுகிறது.
இவற்றில் உண்மையிலேயே அறிவியல் இருந்தால் அது ஏதாவது நூலில் கண்டிப்பாகப் பதிவு செய்யப் பட்டிருக்கும் அல்லவா? வேத கணிதத்தின் சுலப சூத்திரங்கள், சரகர் சுஷ்ருதரின் ஆயுர்வேத நூல்கள், வராஹமிஹிரரின் ப்ருஹத் சம்ஹிதா இவையெல்லாம் solid scientific documentation based on *Real* science. சம்ஸ்கிருதத்தில் ஓரளவு தேர்ச்சி பெற்றவன் நான். இந்த சாதி பழக்கங்களுக்கு இத்தகைய விளக்கங்களை நான் எங்கும் படித்ததாக நினைவில்லை.
நீலகண்டன் சொல்வது போல சுத்தம் என்பது புனிதம், தீட்டு போன்ற concept உடன் இணைத்து, அதை சாதி மேன்மை எனும் நூலிழையில் கோத்தவையே இந்தப் பழக்கவழக்கங்கள்.
அடிப்படையில் சாதிக் கொடுமைகள், தீண்டாமை இவை இந்து தர்மத்தினின்று முற்றிலும் வேறானவை என்பதை மீனவ மகரிஷி வியாசர் முதல் சிந்தனையாளர் விவேகானந்தர் வரையிலான ஞானப் பாரம்பரியம் தெளிவாக உபசேதித்து விட்டது.
இன்றைய இந்துத்துவம் இந்த சமத்துவ சித்தாந்தத்தின் அடிப்படையிலேயே உருவானது.
இடையில் ஒரு சாராரால் கடைப்பிடிக்கப் பட்ட இந்தத் தவறான பழக்கங்களுக்கு அறிவியல் முலாம் பூச வேண்டாம். இப்படிப் பலர் செய்தால், உண்மையான வேத அறிவியல் பற்றி நாம் சொன்னாலும், அது கேலிக்கூத்தாகப் பார்க்கப் படும் அபாயம் உள்ளது.
// இந்து தருமமும் சமுதாயமும் வாழ சாதி வேரும் வேரடி மண்ணுமற அழிய வேண்டும். சாதி வேறுபாடின்றி அனைவரும் வேதம் கற்க அனுமதிக்கப்பட வேண்டும். அனுமதிக்கப்படுவது என்ன அனுமதிக்கப்படுவது. அனைவரும் வேதம் கற்க வேண்டும். //
நன்று சொன்னீர்கள் நீலகண்டன் அவர்களே. அனைவரும் வேதம் கற்க வேண்டும். வேதமாதா சரஸ்வதியே தனது வாய்மொழியில் அதைத் தான் சொல்கிறாள்! பிறகு யார் அனுமதி தர வேண்டும்?
வேதம் எல்லாருக்கும் உரியது என்ற இந்தக் கருத்து சுக்ல யஜுர் வேதத்தின் இந்த மந்திரத்திலேயே இருப்பதாக சுவாமி விவேகானந்தர் அழகாக விளக்குகிறார்.
"yathA-imAm vAcham kalyaNIm AdadAmi janebhyah;
Brahma-rAjanyAbhyAm sUdrAya cha AryAya cha svAya-chAraNAya cha"
Just as I am speaking these blessed words to
the people, in the same way you also spread these words among
all men and women -the Brahmanas, kshtriyas, vysayas, Sudras and
all other, whether they are our own people or aliens.
வேத ரிஷி கூறுகிறார் -
(சீடர்களே) நான் உங்களிடம் இந்த நலம் பயக்கும் வேத மந்திரங்களைக் கூறியது போலவே, நீங்களும் பிராமணர், அரசர், வைசியர், சூத்திரர் எல்லா மக்களிடத்திலும் இவற்றைப் பரப்புங்கள். ஆரியர்களிடமும் (மேன்மை மிக்கோர்), அனாரியர்களிடமும் (மேன்மை இல்லாதோர்) இவற்றைப் பரப்புங்கள்"
வேதத்தை முதல் மூன்று வர்ணங்களுக்கு மட்டும் என்று பிறகு வந்த மனு ஸ்மிருதி ஒதுக்கிற்று, பின்னர் காலத்தின் கோலத்தால் அது ஒரு ஜாதியில் உள்ள சிலருக்கு மட்டும் என்று ஆயிற்று.
அதனால், இது ஏதோ புதிய சீர்திருத்தக் கருத்து அல்ல. உண்மையான வேத நெறியும் இது தான்.
// மேல்சாதி எனப்படுவோர் கல்லூரி படிப்பில் ஒரு பகுதியாக அவர்கள் கட்டாயமாக ஒருவருடம் சமுதாயத்தில் நலிவடைந்த மக்கள் வாழும் பகுதிகளில் தங்கி அவர்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுக்க வேண்டும். //
நாடு உருப்படுவதற்கான நல்ல வழி.
ஜடாயு,
//இடையில் ஒரு சாராரால் கடைப்பிடிக்கப் பட்ட இந்தத் தவறான பழக்கங்களுக்கு அறிவியல் முலாம் பூச வேண்டாம்.//
எனது எண்ணம் தவறானவற்றின் மீது போலியாக முலாம் பூச அல்ல எனத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அய்யா நான் மகரிஷி வியாசர் வாழ்ந்த காலம் வரையில் எல்லாம் போகவில்லை அதற்கு இந்துமதத்தில் அவசியமும் இல்லை.
திரு. ஹரிஹரன் அவர்களே,
எதையும் ஒரு நல்ல காரணத்தை முன்னிட்டே செய்யும் இந்து மதங்களைப் பின்பற்றிய சமூகத்தில் தாங்கள் சொல்லியிருக்கும் காரணங்களையும் அடையாளம் காணலாம். ஆனாலும், எந்த நல்ல, உயர்ந்த, உன்னதமான காரணங்களுக்காக இவை ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் தற்போது மனிதரை மனிதர் தாழ்த்தும் வழமைக்கு வழிசெய்வதால் கைவிட்டுவிடுவதே சிறப்பு. கைவிடுதல் மட்டுமின்றி அழித்தல் அதனினும் உயர்வு. செத்துப்போனது ஞானி என்றாலும் உடம்பு நாறித்தான் அழுகும். அழுகும் விஷயங்களை எரிப்பதுதான் இந்து மதங்கள் சொல்லித்தருவது.
தங்களுடைய இந்த கட்டுரையை சாதிவெறியின் மறுவடிவமாக புரிந்துகொள்ளும் அபாயம் இருப்பதை அறிகிறேன். தங்களின் தெளிவு தங்களுக்கு மட்டும் தெரியும் என்றாலும் அதை நாம் வாழும் சமூகமும் உணரவேண்டியது அவசியமாக இருக்கிறது.
மற்ற சாதியினருக்கு இணையாக பார்ப்பன சாதியிலும் சாதியை, சாதி வெறுப்பை அழித்த பெரியோர் பலர் உண்டு. அவர்கள் பற்றி தாங்கள் எழுத நினைத்திருந்திருக்கலாம். இதுவே சமயம்.
அதே போல இந்து சமயம் சாதி மதங்களை தாண்டியது என்பதை நிறுவும் வகையிலும் தாங்கள் எழுத வேண்டும். இவை என் கோரிக்கைகள். தங்களின் பரிசீலனைக்கு.
ம்யூஸ் அவர்களே,
தங்களது அக்கறையான பின்னூட்டத்திற்கு நன்றிகள். இப்பதிவில் சாதியை முன்னிறுத்தி பெருமை பேச முயலவில்லை தீண்டாமை எனும் தவறு எங்கிருந்து ஆரம்பித்திருக்கலாம் என்பதே முக்கிய
நோக்கம்.
இந்துமதத்தின் வேதங்களின் சாதியைச் சொல்லாத சிறப்பை, பொதுவான மனிதத் தன்மையை அடுத்தடுத்த பதிவுகளில் வெளியிடுகிறேன்.
வேதம் கற்கும் போதெல்லாம் அந்தச் சமயங்களில் என் மனதில் தோன்றும் முதல் எண்ணம் இந்த நல்ல விஷயத்தை தமிழ்பேசும் திரா"விட" மாயையில் உழலும் மக்களுக்கு சாமனியனின் எழுத்தில் சொல்லவேண்டும் என்ற உந்துதலே!
வேதம் அனைத்து மக்களுக்கானது. நான் ஒரு பிரிவின் பிரதிநிதியாகச் செயல்பட்டதில்லை, செயல்பட விருப்பமும் இல்லை.
தவறாகத்தான் புரிந்துகொள்வோம் என்ற பிரிவினரும் தொடர்ந்து எனது பதிவுகளை வாசிக்க வேண்டுகிறேன். இது எனது நிறைவுப்பதிவு அல்ல.
நான் இப்படித்தான் என்று எவரும் உடனடி தீர்மானத்திற்கு வருவதற்கு.
// எனது எண்ணம் தவறானவற்றின் மீது போலியாக முலாம் பூச அல்ல எனத் தெரிவித்துக்கொள்கிறேன். //
ஹரிஹரன், தங்கள் நோக்கத்தில் தவறு இல்லாமல் இருக்கலாம். ஆனால், அதை வெளிப்படுத்திய விதம் தவறான புரிதலுக்கு வழிவகுக்கும் சாத்தியம் உள்ளது. அதனால் தான் இப்படிக் கூறினேன்.
உங்கள் பதிவில் வந்து பின்னூட்டமிடாமல் இதைப் படித்துச் சென்று, பின்னர் தங்கள் பதிவுகளில் இதைச் சுட்டி "பார்ப்பன சாதிவெறி" என்றெல்லாம் முத்திரை குத்தி கும்மியடிக்க ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
// அய்யா நான் மகரிஷி வியாசர் வாழ்ந்த காலம் வரையில் எல்லாம் போகவில்லை அதற்கு இந்துமதத்தில் அவசியமும் இல்லை. //
வியாசர் அழியாத சிரஞ்சீவி என்று புராணங்கள் கூறுகின்றன. இன்றைக்கு நாம் கடைப்பிடுக்கும் இந்து தர்மத்தின் ஒவ்வொரு நூலிலும், ஒவ்வொரு கருத்திலும் அவரது முத்திரை உள்ளது (வியாசர் என்பது ஒருவரா, பலரா என்ற விவாதம் கூட சரித்திர வல்லுனர்களிடையே ஓடிக் கொண்டிருக்கிறது).
அதனாலேயே அவர் பெயரைக் குறிப்பிட்டேன்.
//உங்கள் பதிவில் வந்து பின்னூட்டமிடாமல் இதைப் படித்துச் சென்று, பின்னர் தங்கள் பதிவுகளில் இதைச் சுட்டி "பார்ப்பன சாதிவெறி" என்றெல்லாம் முத்திரை குத்தி கும்மியடிக்க ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். //
ஜடாயு,
பகுத்தறிவுப்பகலவனின் பீரங்கிகளாக விடாது புண்ணாக்கு கருத்துச் சொல்லும் சிஷ்யகோடிகளுக்கு ஈவேராவின் வார்த்தைகளில் சொன்னால்
"காட்டுமிராண்டி என்றால் யார்? அறிவில்லாதவன், பகுத்தறிவில்லாதவன், இரண்டும் இருந்தும் சிந்திக்காதவன், சிந்திக்காமலே குறை கூறுபவன் ஆகியவர்கள் காட்டுமிராண்டி என்பதுதான்".
சூத்திரன் என்று ஒரு பிரிவினரை நீசர்கள் என்று வேதங்கள் குறிப்பிடுகிறதா இல்லையா?
உங்களுக்குள் சேர்ந்து நீங்களே கற்பனை செய்து புத்திசாலித்தனத்துடன் எதையாவது எழுதினால் அது சரியாகி விடாது.
வேதங்களையும் பிராமிணர்கள் என்ற குழு மனப்பான்மையையும் விட்டு உண்மையை உணருங்கள் சும்மா அது சரி இது சரி என்று ஜல்லி அடிக்காதீர்கள்.
Bajji(#07096154083685964097) has left a new comment on your post "(65) தீண்டாமை தோன்றிய விதம்":
Good post. But how many will be willing to understand?
Bajji
செந்தில் குமரன்,
//சூத்திரன் என்று ஒரு பிரிவினரை நீசர்கள் என்று வேதங்கள் குறிப்பிடுகிறதா இல்லையா?//
பிறக்கும் போது எல்லோருமே சூத்திரர்கள்தான். எத்தகைய குணாதிசயங்களை வளர்த்தெடுத்து ஆளாகிறார்கள் என்பதைப் பொறுத்தே நீசர்கள் என்று சமூகத்தில் ஒரு பிரிவை உருவாக்குகிறார்கள்.
இந்த நீசர்கள் பிரிவு சமூகத்தில் நற்குணம் குன்றிய சாதி பிராமணன், சாதி சத்திரியன், சாதி வைசியன், என்று எல்லோரும் இருந்து பங்களிக்கிறார்கள்!
//உங்களுக்குள் சேர்ந்து நீங்களே கற்பனை செய்து புத்திசாலித்தனத்துடன் எதையாவது எழுதினால் அது சரியாகி விடாது.//
அது என்ன "உங்களுக்குள் சேர்ந்து கற்பனை செய்து புத்திசாலித்தனத்துடன் எழுதுவது?
தீதும் நன்றும் பிறர்தர வாரா. இப்பதிவு முற்றிலும் என்னுடையதுதான்... என்னுடையதுதான்.. என்னுடடையதுதான் ஐயா செந்தில் குமரன்.
//வேதங்களையும் பிராமிணர்கள் என்ற குழு மனப்பான்மையையும் விட்டு உண்மையை உணருங்கள் //
வேதங்கள் என்ற உண்மையை உணர்ந்து கொண்டிருப்பதால்தான் பிராமணன் என்ன எந்தக் குழு மனப்பான்மையையும் விட்டு வர தைரியம் கிட்டியிருக்கிறது!
Post a Comment