(62) நான் ஏன் சாதீயம் பார்ப்பதில்லை...
திருச்சிக்கருகில் பெரம்பலூர் ஹேன்ஸ் ரோவர் கல்லூரியில் தொழில்சார் மின்ணணுவியல் (Industrial Electronics) பட்டப் படிப்புப் படித்த காலத்தில் தான் அதுவரை மறவர், கள்ளர், தேவர் என்ற முக்குலத்தோர் சமூகத்தினை மட்டுமே அதிகம் அறிந்திருந்த எனக்கு இதர சமூகத்தினரோடு பழகும் வாய்ப்புக் கிடைத்தது!
விடுதியில் தங்கிப் படித்த காலத்தில் தஞ்சை/ குடந்தை /ஜெயங்கொண்டத்தில் இருந்து வந்து பயின்ற சோழப் பேரரசர்களின் வம்சங்களின் வாண்டையார் /அகமுடையார் வாரிசுகளுடனும், விழுப்புரம், திண்டிவனம், Sriமுஷ்ணம் போன்ற பல்லவ வம்ச, அந்நியர் குன்றிய வன்னியர் நிறைந்த மண்ணின் மைந்தர்களுடனும் பழகிடும் வாய்ப்பு எனது கல்லூரி வாழ்க்கையில் கிடைத்தது.
"நாயகனாக Sriமுஷ்ணம் சின்னராசுவை எடுத்துக்கொள்கிறேன்":
சின்னராசு வாயைத்திறந்து கருத்துக்களைக் கொட்டினால் தான் அவர் "பல்ல"வன் வழித்தோன்றல் என அறிந்துகொள்ளக் காத்திருக்க வேண்டியதில்லை கண்டவுடனே மறுபேச்சின்றி உடனேயே ஒத்துக்கொள்ளலாம்!
சின்னராசு பகுத்தறிவு மற்றும் முற்போக்கு சிந்தனைகளிலேயே ஊறி வளர்ந்தவர். தினசரி குளிக்கமாட்டார். வகுப்பறையில் புரொபஸர் சர்க்யூட் தியரி /எலக்ட்ரிகல் டெக்னாலஜியில் பாடம் எடுத்துக்கொண்டிருக்கும்போது மின்சாரம் பாய்ந்தமாதிரி தன் மறைவிடங்களிலும் / உடலின் மற்ற இடங்களிலும் ஆவேசமகச் சொறிந்து கொள்வார்!
மனிதனின் உடம்பில் வேறு உயிரினம் ஒட்டி வாழ்வதை இவர்தான் எனக்கு நேரடியாகக் கண்டு அறியத்தந்தார். க்ளாஸ் ரூமிலேயே சின்னராசு தனது உடம்பில்/உடையில் அடைக்கலம் புகுந்த சீலைப்பேன்களை குதிரைமீதேறாமல், வாள்,வேல் இல்லாமல் சொறிந்து போரிட்டு கொன்று ஊதித்தள்ளுவார்!
இச்செய்கைகளாலேயே நம் சின்னராசுப் பெருமானார் பெரும்பாலும் பெஞ்சிலே தனிமையில் விடப்படுவார்! இவர் அமர்ந்திருக்கும் பெஞ்சில் அமர்வதற்கு உண்மையிலேயே நெஞ்சுரம் வேண்டும். சரக்கடித்தபடி சாக்கடையோரம் விழாமல் கூடுதலாக சிலமீட்டர் தூரத்தை ஸ்டெடியாக நடந்து சமாளித்து கல்லூரிக்குள் வந்துவிட்ட பெரம்பலூர் லோக்கல் டே ஸ்காலர்கள் இவர் அருகில் விழுந்தமர்வார்கள் சில நேரம்.
இதிலே நம் சின்னராசு ஐயாவை யாராவது விழியிலே விழி இருத்தி யாரும் நேரிடையாக ஒரு பார்வை சாதாரணமாகப் பார்த்துவிடக் கூடாது! "என்னடா மொறைக்கிற" என்று அவரது முற்போக்குச் சிந்தனை வழிநடத்த பகுத்தறிவு துணைநிற்க பார்வை பார்த்தவனோடு பொருதத் தயாரகிவிடுவார்! சின்னராசுவின் கையில் சிக்காத சட்டைக்காலர்களே இல்லை கல்லூரியில் எங்களது வகுப்பில்!
17 வயதில் கல்லூரிக்கு வந்த சின்னராசு கல்லூரி முடியும் வரை இப்படித்தான் இருந்தார்! திருமேனியில் சீலைப்பேன் திரிகிற அளவுக்குச் சுகாதாரத்துடன் திரிந்த சின்னராசுவால் தினசரி காலை 6மணிக்கு எழுந்து குளித்து கோயில் சென்று கல்லூரிக்கு வரும் ஹரிஹரனை போடாங்க...அய்யப்பயலே... பாப்பாரநாய் என்று அழைக்கின்ற அரசியல் திரா'விட'பெத்தடின் முற்போக்குத்தனமும், அதற்கான பகுத்தறிவுமட்டும் இருந்தது!
கல்லூரி இறுதியாண்டு இறுதி நாட்களில் ஹரிஹரனின் ஆட்டோகிராப் புஸ்தகத்தில் சின்னராசு எழுத்துப் பிழையோடு இப்படி எழுதியிருந்தார் " நண்பா நீ எல்லோரிடமும் சமமாகப் பழகவேண்டும்" என்று!
சுரீர் என்று உறைத்தது எனக்கு சின்னராசுவுக்கு நகைச்சுவை இவ்வளவுக்கு இருப்பதை உணர்ந்து கொள்ளாத ஜடமாக நான் தான் இருந்திருக்கிறேன் என்று! ஏதோ ஒரு சமயத்தில் எனது சட்டையை இவருக்கு "காரணமாக" உடுத்த உடன்படாததால் நான் பாசிஸவாதியாகிப்போனது நினைவுக்கு வந்தது. ( உடை தர உடன்படாவிட்டாலும் அறையில் இவர் உடை பட்டதால் அதுவரை உடைபடாத அறைச்சுகாதாரம் எல்லோர் உடையிலும் சீலைப்பேன்வந்து உடைபட்டது, மிகுந்த சிரமத்தில் சுகாதாரம் அறைநாகரீகத்துடன் மீட்கப்பட்டது வேறு விஷயம்!)
சின்னராசு எனக்கு உணர்த்தியது அரசியல் திரா'விடப்' பெத்தடினின் வீச்சமடிக்கும் வீச்சினை மட்டுமே! பகுத்தறிவுப் பகலவன் ஈவெராவிடமிருந்து திராவிட உணர்வுள்ள சின்னராசு கற்றது சுகாதாரமின்மையான தினசரி குளிக்காததை மட்டுமே! சின்னராசு சமத்துவம் என்று அறிந்து கொண்டது எல்லா விடுதி மாணவர்களது பல்துலக்கும் பிரஷ்ஷும் தன்னுடையதே என்று பாவித்தது மட்டுமே!
இவ்வளவுக்கும் சுயமாய் பகுத்தறிவோடு, முற்போக்குச் சிந்தனையோடு சுகாதாரமாய் இருந்த சின்னராசு டே ஸ்காலர்களாக வந்து கொண்டிருந்த தாழ்த்தப்பட்டவர்கள் மீது கொண்டிருந்த கருத்து " இவனுங்களுக்கு எல்லாம் நாம புல்மீல்ஸ் வாங்கித்தந்திருப்போம்... அதை தின்னுட்டுக் கை கழுவின ஈரம் காயுமுன்பாக வேறு யாராச்சும் வந்து ஏ.ஆர்.ஆர் பாக்கு வாங்கித்தந்தா அவங்களோட போற பயலுகதான இவனுங்க"
சின்னராசுவின் முரட்டுத்தனத்திற்கும் முட்டாள் தனமான கோபாவேசத்திற்கும் காரணம் அவரது அறியாமை மற்றும் அது தரும் தாழ்வு மனப்பான்மை + இயலாமை! இதை மறைக்கத் தனது இயலாமையால் சின்னராசு மாதிரியானவர்கள் அணிந்துகொள்கின்ற போர்வையே சாதி + அரசியல் திரா'விட'க் கவசம்! வர்ணாஸ்ரமம், வேதத்தின் மீது சேறடிக்கும் என்பதான பேச்சு எல்லாம்!
"Keep your eyes and ears open for information to flow in!" என்பதில் "கீப்"-க்கு மட்டும் கண், காது, இன்னபிற எல்லா உறுப்புகளையும் திறந்துவைத்திருக்கும் இவர்களது முற்போக்குத்தனம் உண்மையான பகுத்தறிவா?
நான் சின்னராசு மாதிரியான நபர்களை வைத்து, இவர்கள் துப்பிய சாதி எச்சல் கருத்துக்களால் இவர்களது படையாச்சி-வன்னியசமூகமே இப்படித்தான் என்று பகுத்தறிவோடு முற்போக்காக நான் முடிவெடுக்கவில்லை! நான் சாதீயம் பார்ப்பதில்லை! சுகாதார/ ஒழுக்கக் கேட்டுடன் திரியும் சாதி பிராமணனை சாதிக்காக அரவணைப்பதுவும் இல்லை!
"பொதுஅறிவு என்று எல்லோருக்கும் பொதுவாக இருக்கும் விஷயத்தை சொற்பமாகப் பயன்படுத்தும் சிறுபான்மையான பலருள் அடியேனும் ஒருவன்".
"Especially in bad-worse-worst circumstances I continue to keep-on learning to see the Phenomenon and not the person! Phenomenons are universal but not persons!" இதற்கு அவசியமானது பொது அறிவே அன்றி திரா'விட'அரசியலில் பெத்தடின் பகலவானாய் காணக்கிடைக்கும் பகுத்தறிவு அல்ல!
அன்புடன்,
ஹரிஹரன்
7 comments:
டெஸ்ட் மெசேஜ்!
//Keep your eyes and ears open for information to flow in!" என்பதில் "கீப்"-க்கு மட்டும் கண், காது, இன்னபிற எல்லா உறுப்புகளையும் திறந்துவைத்திருக்கும் இவர்களது முற்போக்குத்தனம் உண்மையான பகுத்தறிவா//
ஹரிஹரன் அய்யா,
என்ன சொல்லவரீங்க? கரும்பாறை கொடுத்த அல்வா சாப்பிட்டதால் தான் ஒரு மாதிரி லுக் விடுபவர்கள் அறிவே இல்லாமல் சாதீயம் பார்க்கிறார்கள் என்று சொல்கிறீர்களா? இதுவும் சரியாகத்தான் இருக்கும்னு தோணுது.
பாலா
//"Especially in bad-worse-worst circumstances I continue to keep-on learning to see the Phenomenon and not the person! Phenomenons are universal but not persons!" இதற்கு அவசியமானது பொது அறிவே அன்றி திரா'விட'அரசியலில் பெத்தடின் பகலவானாய் காணக்கிடைக்கும் பகுத்தறிவு அல்ல!//
சாட்டை அடி!!!
சாட்டை அடி கிடைக்க பெற்றவர்கள் வந்து வருகை பதிவேட்டில் கையொப்பம் இட்டார்களா ஹரிஹரன் அவர்களே.
இவர்களின் நோக்கமே தனி மனித ஒழுக்கத்தை மீற என்ன வழி இருக்கிறது என்று தேடுவதுதான். அதை கொடுக்கும் இந்த அரசியல் திராவிட பெத்தடின் போர்வையை போர்த்திக்கொண்டு உலாவுகிறார்கள்.
பரவாயில்லை. ஓரிரு உதாரணத்தை வைத்துக் கொண்டு ஒரு சாதியையையே குறை சொல்லுவது தர்க்க சாஸ்திர விதிப்படி Fallacy of hasty generalization என்பதை புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பாலா,
கரும்பாறை அல்வா சாப்பிட்டால் பல்லுப் போகும். பல்லுப்போனா சொல்லுப் போகும்! சொல்லுப்போனா பேச்சு உளறலாகும்!
Being truthful is not easy it requires guts!
///பொது''அறிவு'' என்று எல்லோருக்கும் பொதுவாக இருக்கும் விஷயத்தை சொற்பமாகப் ''பயன்''படுத்தும் சிறுபான்மையான பலருள் அடியேனும் ஒருவன்". //
//இவர்களது படையாச்சி-வன்னியசமூகமே இப்படித்தான் என்று ''பகுத்தறிவோடு'' முற்போக்காக நான் முடிவெடுக்கவில்லை!//
முத்துக்குமரன்,
அறிவு பயன்படுத்தப்பட்டால் பகுத்தறிவு என்கிறீர்கள்.
நான் கற்றுக்கொண்டிருக்கும் வேதநெறியோ மனித அறிவு நல்லவிதமான விஷயங்களுக்கு நல்லவிதமாகப் பயன்படுத்தப் படவேண்டும் என்றே சொல்லுகிறது!
Post a Comment