Thursday, November 02, 2006

(42) வேதங்களின் நெறியிலான வாழ்க்கையின் அடிப்படைகள்

வேதம் என்றாலே வேப்பங்காய் என்று நினைக்குமாறு சுயநல பிழைப்புவாத அரசியல் சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. வேத நெறி என்றாலே ஏதோ வர்க்கச்சார்பு நிலைகண்ட வாழ்க்கைக் கோட்பாடுகளின் தொகுப்பு என்று வேற்றுமை பாராட்டும் வேண்டாத சூழல் நிலவி வருகிறது. இளைய தலைமுறையினரும் இளைஞர்களும் வேதம் என்றாலே வெறுப்போடு பார்த்தால்தான் பகுத்தறிவு என்பது மாதிரியான கருத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

அரசியல் இயக்கத்தினால் உந்தப்பட்டு கண்மூடித்தனமாக எதிர்க்காதவர்களும் வேத நெறிகளாக வேதங்களிலே சொல்லப்பட்வை பற்றித் தெரிந்து கொள்ளவே முற்படுவதில்லை. இந்து மதத்தில் பிறந்து இந்துமதத்தில் சொல்லப்பட்ட வாழ்க்கை நெறிக் கோட்பாடுகளை செறிவாக படிக்க 90% மக்கள் முயல்வதுமில்லை.

வேதம் என்றாலே உடனே காட்டப்படுவது வேண்டாம் என்ற பிடிவாதம்!
வேதம் என்றாலே ஏன் பூதம் என்று காத தூரம் ஓடவேண்டும்?

வேத நெறிவாழ்க்கையின் அடிப்படைகளாக அப்படி என்ன இடியாப்பச் சிக்கலாக, புரிந்துகொள்ளவே முடியாத விஷயங்கள் மட்டுமே சொல்லப்பட்டிருக்கின்றனவா? கண்டிப்பாக இல்லவே இல்லை.

வேதம் படிக்கலாம் என்று எடுத்த எடுப்பிலேயே "கெனோஉபநிடம்" என்று ஆரம்பித்தால் என்ன இது கேனத்தனம் என்று தான் தோன்றும். "மாண்டூக்ய உபநிடம்" என்று ஆரம்பித்தால் இது என்ன மண்டூகத்தனமாய் என்று படும்!

வேதநெறியில் உபநிடங்கள் பி.எச்.டி மாதிரியானவை. இவை புரிய ஆரம்ப அடிப்படைகளின் மீது முழுமையான புரிதல்களுடன் வேத நெறி அடிப்படைகளை முற்றிலுமான அளவில் தினசரி வாழ்வில் மிக அவசியமாக பின்பற்றவும் வேண்டும்.

சரி. தினசரி வாழ்வில் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டிய வேதநெறி அடிப்படைகளின் லிஸ்ட் மிகவும் பெரியதா? என்றால் இல்லவே இல்லை. மூன்றே மூன்று அடிப்படைகள் தான் மொத்தமே!

அந்த மூன்று அடிப்படைகள்:

1. பிரம்மச்சர்யம் என்ற சுய கட்டுப்பாடு (Self Control)
2. அஹிம்சை என்ற இன்னலிழைக்காமை (Non- Injury)
3. சத்யம் என்ற உண்மைத்தன்மை (Truthfulness)

இந்த அடிப்படை வேதநெறிகள் இன்று பிரம்மச்சர்யம் என்பது Celebacy என்ற ஆண்-பெண் உடலால் கூடுதல் என்பதைத் தவிர்த்தலே என்று தப்பான அர்த்தம் கொள்ளப்படுகிறது.

பிரம்மச்சரியம் என்பது சுயகட்டுப்பாடு. ஞான இந்திரியங்களான பார்வை,வாசம், சுவை, தொடுதல், பேச்சு என்ற ஐம்புலன்களினால் கிட்டும் இன்பங்கள் மற்றும் கர்ம இந்திரியங்களான கைகள், நாக்கு,கால்கள்,இனப்பெருக்க உறுப்பு, கழிவு உறுப்பு என்ற எதிலும் கூடுதலாக கட்டற்று முழுகிப்போகாமலிருத்தலே பிரம்மச்சரியம்.

இன்று தவறுதலாக குறிப்பிடப்பட்டு கூறப்படுகின்ற "குறிகளால் கூடுதலை மறுப்பது" என்பது மட்டுமே பிரம்மச்சர்யம் அல்ல!

டி.விசீரியலில் மாலை முழுதும் 5மணி நேரம் செலவிட்டால் அவர் பார்வை பிரம்மச்சரியம் தப்பியவர்!

டி.விசீரியல் பார்த்துக்கொண்டே அம்மா தரும் நல்ல வாசனையான அரோமாவுடன் சுவைகூடிய உணவை கணக்கில்லாமல் உட்தள்ளி உப்பி couch potato ஆகியிருந்தால் அவர் வாசம் + சுவையில் பிரம்மச்சர்யம் தப்பியவர்.

வாயைத்திறந்தாலே பலமணிநேரம் அடுத்தவரைப் பேசவிடாது பேசி அறுத்தால் அவர் பேச்சிலே பிரம்மச்சர்யம் இல்லாதவர். எதிர் கருத்துச் சொன்னவரை கும்மாங்குத்து குத்தியும், காலாஉ உதைத்துத் தள்ளியவரும் கைகள், கால்கள் பயன்பாட்டில் பிரம்மச்சர்யம் இல்லாதவர்!

இப்படி கட்டுப்பாடற்று தச இந்திரியங்களைப் பயன்படுத்தாமல் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே உண்மையான பிரம்மச்சரியமாகும்!

இரண்டாவது வேத நெறியான "அஹிம்சை" என்பது பிற உயிரைக் கொல்லாத குணம் என்று இன்றைய சூழ்நிலையில் மக்களின் இந்த வேத நெறிமீதான புரிந்துகொள்ளலில் குறுகிப்போய் கிடக்கிறது! உண்மையில் அஹிம்சை என்பது துன்பம் இழைக்காமை என்பது. பிற உயிரை உடலால் மட்டுமின்றி மனத்தாலும் துன்புறுத்தாத தன்மையே அஹிம்சை ஆகும்.

இன்று கழகங்கள் மாதிரியான பிழைப்புவாத அரசியல் சக்திகளால் அஹிம்சை=உயிர்க்கொல்லாமை, பார்ப்பனர் = வெஜிடேரியன், எனவே இது அசைவ உணவு உண்பவர்களுக்கு எதிரான கருத்து. இது வர்க்கச்சார்பு கொண்ட வேற்றுமை பாராட்டுகின்ற நெறி என்று திரிக்கப்பட்டு மனிதர்களிடையே சாதீ / குழு என்று பிரித்துக் குளிர்காய மிக எபஃக்டிவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வன் சொல் பேசுதல், திரித்துப்பேசுதல், கருத்தோடு எதிர்கருத்தை வைத்து எதிர்நோக்காமல் ஆட்டோவை வீட்டுக்கு அனுப்புதல் போன்றன செய்தால் அஹிம்சை நெறி மீறியவராகிறார்!

மூன்றாவது வேத நெறியான " சத்யம்" எனப்படுகின்ற உண்மைத்தன்மையோடு வாழ்தல். இன்று இருக்கும் சூழ்நிலையில் லஞ்சம் வாங்காமல் உண்மையாய் வாழ்ந்தால் அம்மாஞ்சி, பேக்குப் பேர்வழி என்று ஆகியிருக்கிறது. கமிஷன் அடித்து, பொய்க்கணக்குக காட்டி, நிதியை கையாடல் செய்பவர் ஸ்மார்ட் பேர்வழி என்று சிலாக்கியமாகக் கொடிபிடிக்கப்படுகிறது.

எது நேர்ந்தாலும் உண்மையாக இருக்கவேண்டும். அதுவே சத்யம் என்ற வேதநெறி சொல்கிறது. இன்று அரசு, ஆட்சியில் இருப்போர் எதிர்தரப்பினரைப் பொய்யாக கஞ்சாக்கேசில் உள்ளே தள்ளுவது, புறம்போக்கு நிலத்தினைத் தனக்குப் பட்டாபோடுவது கேட்டால் கட்சிக்காக உண்மையாக் இத்தனை ஆண்டுகள் உழைத்தவர் திரு. ---- என்று அதனை நியாயாப்படுதல் வேறு!

வேத நெறி அடிப்படைகளான இந்த பிரம்மச்சர்யம், அஹிம்சை, உண்மைத்தன்மையோடு வாழ்தல் என்று கடைப்பிடியுங்கள். முதலில் மிகச் சிரமம், பிழைக்கத்தெரியாதவன் என்ற சமூக ஏச்சு என்று கடினமான சூழல் இருக்கும். நெறியற்ற வாழ்வு நிலையற்ற குதூகலம் தரலாம். நெறியோடு வாழ்ந்தால் மகிழ்ச்சியோடு ஆரோக்கியமாக வாழலாம்!

இந்த வேத நெறி அடிப்படைகள் இன்றைய வாழ்வின் மிக அவசியமாக மீட்டெடுக்கப்பட்டு தனிமனிதனின் தினசரி வாழ்வில் கண்டிப்புடன் நிலைநிறுத்தப்பட வேண்டியவை!

அவரவர் அளவில் மீட்டெடுக்கவேண்டும் இந்த சீரிய வேத நெறி அடிப்படைகளை!

அன்புடன்,

ஹரிஹரன்

8 comments:

ஜயராமன் said...

அற்புதமாக சொல்லியிருக்கிறீர்கள்,

பிரம்மசரியம் என்பதற்கு வேதவழி என்பதே லிட்டரல் மொழிபெயர்ப்பு.

மேலும் எழுதவும்.

நன்றி

murali said...

ஹரிஹரன்,
மிக அற்புதமான பதிவு. அனுபவத்தின் மீது ( கடைபிடித்து )எழுதி இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.ஞானம் வளர்க/வளர்க்க.

வேத நெறியிலான வாழ்க்கை முறை மிக சுலபம்தான். அப்பறம் ஏன், அதற்கு தமிழ்நாட்டில் இத்தனை பொய்யான கற்பிதங்கள்.

தல உங்களுக்கு தெரியாததா?..
ஜனமெல்லாம் இத கடைபிடித்து வாழ ஆரம்பிச்சிட்டா, சில பிழைப்புவாதிகளின் வாழ்க்கை கடினமா போய்டும் இல்ல.

ஜனங்க சுயமா நல்லபடியா சிந்திச்சிர கூடாது, அதனால அவங்க கண்ண கருப்பு துணியால கட்டி, பகுத்தறிவுன்னு கவர்ச்சியா ஒரு பேரை வச்சி சோற்றால் அடித்த பிண்டங்களா வைச்சிருக்காங்க.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளிதரன்.

Hariharan # 03985177737685368452 said...

வாங்க ஜெயராமன்,

பாராட்டுக்கு நன்றிகள். வேதநெறிப்படியான வாழ்க்கை வழி வலிக்கக்கூடிய அளவுக்கு சிக்கலானதோ, சிரமமானதோ இல்லைன்னு நான் படித்து படிப்படியாகப் பின்பற்றி தினசரி வாழ்வில் பயன்பாட்டில் எடுத்துவரும் அடிப்படைகளைச் சொல்லலாம் என்ற முயற்சிதான். தங்கள் மாதிரி பெரியவர்களின் ஆசிர்வாதம் வேண்டும்.

Hariharan # 03985177737685368452 said...

வாங்க முரளிதரன்,

//வேத நெறியிலான வாழ்க்கை முறை மிக சுலபம்தான். அப்பறம் ஏன், அதற்கு தமிழ்நாட்டில் இத்தனை பொய்யான கற்பிதங்கள்.

தல உங்களுக்கு தெரியாததா?..
ஜனமெல்லாம் இத கடைபிடித்து வாழ ஆரம்பிச்சிட்டா, சில பிழைப்புவாதிகளின் வாழ்க்கை கடினமா போய்டும் இல்ல.

ஜனங்க சுயமா நல்லபடியா சிந்திச்சிர கூடாது, அதனால அவங்க கண்ண கருப்பு துணியால கட்டி, பகுத்தறிவுன்னு கவர்ச்சியா ஒரு பேரை வச்சி சோற்றால் அடித்த பிண்டங்களா வைச்சிருக்காங்க.//

இப்போ இந்த 40 ஆண்டுகளில் இந்த பகுத்தறிவு ஆட்களின் முழுலட்சணமும் மக்களுக்குத் தெரிஞ்சிருக்கு. உண்மை எது, பொய் எதுன்னு இப்போ நிதானமா இளைய தலைமுறைக்கு காலத்தால் அழிந்துவிடாத வேதநெறி அடிப்படைகளை மீண்டும் வீரியத்துடன் மீட்டெடுக்க அடித்தட்டு மக்களிலிருந்து அனைவருக்கும் முதலில் அவர்களுக்கு மறக்கடிக்கப்பட்டதை மீண்டும் நினைவூட்ட வேண்டியது அவசியமாகிறது.

Hariharan # 03985177737685368452 said...

//அனுபவத்தின் மீது ( கடைபிடித்து )எழுதி இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.ஞானம் வளர்க/வளர்க்க.//

முரளி
Are you contemplative? என்று கேட்கின்றீர்கள். முழுமையாக முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன். லஹே ரகோ முன்னாபாயில் கெமிக்கல் லுச்சாவினால் காந்தி தென்படுவது மாதிரி, கீதையைப் படித்ததும் ஒரு லுச்சா ஏற்பட்டிருக்கிறது என்னமோ உண்மையே! தினசரி வாழ்வில் சிறு ஹார்ம்லெஸ் என்ற பொய்களை (பொய்க்கு இப்படி ஒரு சமாளிப்புகேஷன் வேறு) தற்போது சொல்வதை வெகுவாகக் குறைந்திருக்கிறது!

ஒருநாள் கூத்தல்லவே இது! தினசரி கடைபிடிக்கப்படவேண்டும் மரணிக்கும்வரை!

ஈசன் அருள் கிட்டவேண்டும்!

bala said...

//ஈசன் அருள் கிட்டவேண்டும்!//

ஹரிஹரன் அய்யா,

கண்டிப்பாக கிட்டும். தொடரட்டும் உங்கள் பணி.


பாலா

Hariharan # 03985177737685368452 said...

பாலா,

////ஈசன் அருள் கிட்டவேண்டும்!////

//கண்டிப்பாக கிட்டும். தொடரட்டும் உங்கள் பணி.//

தங்கள் நல்லெண்ணத்துக்கும், நல்வாக்குக்கும் நன்றிகள்!

Vi said...

இன்றைய தலைமுறை ஓரளவிற்கு அரசியல்வாதிகளின் பகுத்தறிவு பிரச்சாரத்தை அறிந்து கொண்டு வருகின்றன என்று தான் கூற வேண்டும். அதனால் அவற்றில் இருந்து முடிந்த வரை அவர்கள் விலகிக் கொள்கிறார்கள்.

ஆனால் சமூகத்தின் ஏளனத்திற்கு அஞ்சி அறவழி வாழ்வை தேர்ந்தெடுக்க அஞ்சி இருக்கிறார்கள். இதனால் இன்றைய தலைமுறையினர் தேர்ந்தெடுத்திருக்கும் ஒரே ஆயுதம் அறிவியல். பகுத்தறிவு, வேதம் எது எப்படி இருந்தாலும் எமக்கு அக்கறை இல்லை. அறிவியல் சொன்னால் அதன் வழி செல்வேன் என்ற மனநிலை மக்களிடையே உருவாகி விட்டது.

நம் நாட்டில் இல்லாத அறக்கருத்துக்கள் என்ன? ஆனால் இன்றும் மேலை நாட்டு மேலாண்மை புத்தகக் கருத்துக்களை நம்பும் அளவிற்கு நம் புத்தகங்களில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை.