Saturday, November 04, 2006

(43) தமிழக போலீஸ்மந்திரி "n" ஸ்காட்லாந்துயார்டு

இங்கிலாந்தில் இருக்கும் ஒரிஜினல் அக்மார்க் ஸ்காட்லாந்துயார்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைகாகப் பொதுஜனம் போனால் விசாரணை முடிவில் ஆஸ்பத்திரி வார்டுக்குத்தான் வந்து படுத்துக்கிடக்கணும்னு இல்லை!

இங்கிலாந்து ஸ்காட்லாந்துயார்டுக்குத் தனியாக பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுக்கச் சென்றால் அவர் பலாத்காரம் செய்யப்பட்டு ஆஸ்பத்திரியின் மார்ச்சுவரி வார்டில்தான் பிணமாகப் பொட்டிக்குள் போய் நிரந்தரமாகத் தூங்கணும்னு இல்லை!

இங்கிலாந்து ஸ்காட்லாந்துயார்டு போலீசார் லண்டன் மாநகரின் பிரபலமான வர்த்தகச் சாலையான "ஆக்ஸ்போர்டு ஸ்ட்ரீட்டில்" உள்ள கடை கண்ணிகளில் ஆண்டுதோறும் கிறிஸ்துமசுக்கும் ஈஸ்டருக்கும் கைச்செலவுக்குக் கொடு என்று ஈனத்தனமாகக் காசு கேட்டு கெஞ்சுவதில்லை!

இங்கிலாந்து ஸ்காட்லாந்துயார்டு போலீசார் சாலையில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக, போக்குவரத்து விதிகளை மீறும் வாகனஓட்டிகளை சாண்டாக்ளாஸ்(காமதேனு) என்றெண்ணி கேசு புக் பண்ண்ட்டா, நடமாடும் நீதிமன்றம் அந்தோ நிக்குது பார் ஃபைன் 500பவுண்ட் கட்டுறியா அல்லது எனக்கு 100பவுண்ட் தந்துட்டுப் போய்க்கிட்டே இருக்கியா? என்று நீதியை நடமாட விடாமல் நடுரோட்டில் சாலையைப் பயன்படுத்துவோரிடம் காலையிலேயே கட்டப்பஞ்சாயட்த்து செய்வதில்லை!

இங்கிலாந்து ஸ்காட்லாந்துயார்டு போலீசாரிடம் வீட்டிலே பொருள் திருட்டுப் போய்விட்டது என்று புகார் தரச்சென்ற பொதுஜனத்திடம் எஸ்.ஐ அய்யாவுக்கு, கான்ஸ்டபிள் அய்யய்யோவிற்கு ஃபார்மாலிட்டீஸ் பார்க்க இவ்வளவு தந்தால்தான் களவு போன இடத்துக்கு விசாரிக்க வருவேன் என்று படுஸ்டிரிக்டாகச் உரைத்து வீட்டிலே பொருளைத்திருடிய களவாணிப்பயலே மேல் என்று உணரவைப்பதில்லை!

இங்கிலாந்து ஸ்காட்லாந்துயார்டில் யாரும் "ஆக்ஸ்போர்டு ஸ்ட்ரீட்" காவல் நிலையத்துக்குச் சேர பல லட்சம் பவுண்டுகளைச் சுமந்துகொண்டு கியூ வரிசையில் மினிஸ்டர் சிபாரிசுக்கடிதத்துடன் முட்டி மோதுவதில்லை!

ஒரிஜினல் இங்கிலாந்து ஸ்காட்லாந்துயார்டு இப்படிக் கேணத்தனமா இருக்கப் பலகாரணங்களில் ஒன்று போலீஸ் மந்திரியாக கால் நூற்றாண்டுக்குமாக ஒரே ஆள் உட்கார்ந்து கும்மி அடிக்காததும்
மிக முக்கியமான காரணம்!

தமிழ்நாடு போலீஸ் ஸ்காட்லாந்து யார்டு-2 அப்படின்னு தமிழக போலீஸ்மந்திரிகளே சர்டிபிகேட் தந்திருக்காங்க பலமுறை! தமிழகத்துக்கு யாரு முதல்மந்திரியோ அவுங்கதான் ஆட்டோமாடிக் போலீஸ் மந்திரியும்ன்றது தமிழகத்தின் 40 ஆண்டு தலை எழுத்து!

தமிழகத் தலைநகர் சென்னையில் மொத்தம் 88 போலீஸ் நிலையங்கள் இருக்கின்றன. இங்கு சில போலீஸ் ஸ்டேஷன்கள் வி.ஐ.பி அந்தஸ்து பெற்றவை. இங்கே பணிபுரிய காவல் அதிகாரிகளிடையே குழாயடி சண்டையைவிட போட்டா போட்டி மல்யுத்தம் நடக்கிறது. ஒரு ஆண்டுக்கு மேல் பணிபுரிய முடியாது இடம் மாற்றிடுவார்கள்.

இதிலே மிக முக்கியமா பூக்கடை போலீஸ் ஸ்டேஷன். இங்கு காவல் அதிகாரியா பணிபுரிய சிபாரிசுத் தொகையின் இன்றைய மார்க்கட் ரேட் ஒருகோடி ஒரு வருஷத்துக்கு! மக்களுக்குப் பணிபுரியும் மக்கள் நண்பனா முட்டிமோதி இங்க அதிகாரியா கியூவரிசை கட்டி நின்னுட்டே இருக்காங்க!

போலீஸ் மந்திரியே நேரடியா சிபாரிசு பண்ணினாமட்டுமே இந்தமாதிரி கடைகண்ணிகள் இருக்கிற பூக்கடை, கோயம்பேடு, தி.நகர் ஏரியாக்களுக்கு இன்னொரு காவாலியா காவல் காக்கமுடியும்.

போலீஸ் மந்திரிக்கு ஒருகோடி கப்பம் கட்டினா 12 மாசம் இந்த ஸ்டேஷனில் பணியாற்றலாம். ஒரு நாளைக்கு 2முதல் 3 லட்சம் வசூல் பண்ணக்கூடிய இடங்கள் மாதத்திற்கு 60 முதல் 90 லட்சம் கியாரண்டி! ஆண்டுக்கு 7 முதல் 10 கோடி வசூலாகிறது. ஷேர்மார்க்கட்டில் கூட 12மாதங்களில் இப்படி 600% ரிட்டர்ன் கிடைக்காதுங்க!

தமிழ் நாட்டில் கால்நூற்றாண்டுக் காலமாய் போலீஸ் மந்திரியா பழுத்த, மூத்த, பண்பாளர் பாசறையில் பயின்ற நேர்மையோடு கடமை, கண்ணியம் , கட்டுப்பாடு காத்து, போலீஸ்துறையில் பொருளீட்டுவது எப்படின்னு பெரிய பொருளாதாரமேதையா யோசிச்சு, நேரடியாகத் தானே நடைமுறைப்படுத்தி, தமிழ்நாட்டுப் போலீஸை இங்கிலாந்த்துப் போலீசுக்கு இணையான ஸ்காட்லாந்துயார்டு-2 என்று உலக அரங்கிலே உன்னத போலீஸாக உழைத்து இருக்கிறாருங்க!

பெருசா க்விஸ் எல்லாம் இல்லீங்க! இப்போதைய போலீஸ்மந்திரி கருணாநிதிதானுங்க 25 வருஷமா ஐந்துமுறை தனது அரசுகளால் இந்தக் கடின உழைப்புக்கும் தமிழக போலீஸின் தரமான, வீரியமான, நேர்மையான , நியாயமான இன்றைய முன்னேறிய நிலைக்கு உழுது, ஊழல் விதையிட்டு,நீர்பாய்ச்சி, எக்கச்சக்க ஏராளமான ஊழல் மகசூல் கண்டு கறை(ரையேறியவர்!

ஸ்காட்லாந்துயார்டுன்னு நம்ம தமிழகபோலீஸைச் சொல்லி இங்கிலாந்து போலீஸை "லந்து" பண்றாங்க போங்க!

அன்புடன்,

ஹரிஹரன்

11 comments:

Hariharan # 26491540 said...

டெஸ்ட் மெசேஜ்!

bala said...

ஹரிஹரன் அய்யா,

காமராசர் காலம் வரைக்கும் நம்ம போலிஸ் தமிழ் நாடு போலிஸாகத் தான் இருந்தது. நம்ம டாக்டர் கலைஞர் பெரியார்/அண்ணா காட்டிய வழியிலே திறம்பட ஆட்சி பண்ண ஆரம்பித்தவுடன் தமிழ்நாடு போலிஸ் ஸ்காட்லேண்ட் யார்ட் போலிஸா அவதாரம் எடுத்து நாட்டுக்கே முன்னுதாரணமா செயல்படுகிறது.
சமீபத்திலே ஆந்திர போலிஸ் வந்து அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சில தீவிரவாதிகள் ஸ்காட்லேண்ட் யார்ட் போலிஸுக்கு தெரியாமல் ஆயுதங்கள் உற்பத்தி செஞ்சு வந்ததை கண்டுபிடித்தார்கள்.
தன் பொருள் தேடும் முயற்சியில் சற்றும் மனம் தளராத கலைஞர், முழுமூச்சோட இன்னும் வேகமா அண்ணா/பெரியார் காட்டிய பாதையில் ஓடுவதால்,நம்ம போலிஸ் கூடிய சீக்கிரம் ஸ்காட்லேண்ட் யார்ட் cum FBI ஆக அவதாரம் மீண்டும் எடுத்து பீஹார் போலிஸுக்கு இணையா வரப்போவுது பாருங்க.

அப்புறம் என்ன..
தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா தான்.

பாலா

Hariharan # 26491540 said...

வாங்க பாலா,

//தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா தான்.//

இது பொதுஜனத்தின் ஆசை!

இந்துமதம் திருடர்களின் மதமாச்சே! அதனால் அம்பேத்கார் தழுவிய புத்தமதம் கருணாநிதியையும் கவர்ந்திருக்கிறது.

புத்தனாகிய சித்தார்த்தனது தத்துவம் ஆசையே துன்பத்திற்குக் காரணமாகிறதாலேயோ என்னமோ தமிழனை தலைநிமிரச்செய்யும் எந்த செயலையும் கருணாநிதி ஆசைப்படுவது இல்லை.

சும்மா தமிழ்...தமிழன் என்பதோடு நிறுத்திக்கிட்டாரு கருணாநிதி!

bala said...

//புத்தனாகிய சித்தார்த்தனது தத்துவம் ஆசையே துன்பத்திற்குக் காரணமாகிறதாலேயோ என்னமோ தமிழனை தலைநிமிரச்செய்யும் எந்த செயலையும் கருணாநிதி ஆசைப்படுவது இல்லை. //


ஹரிஹரன் அய்யா,

அற்புதம். நம்ம புத்தர் பெருமான் தான் (தமிழர்களின்) ஆசையை அறவே ஒழித்த கருணாநிதியா அவதாரம் எடுத்திருக்கிறாரா? மொட்டை அடித்துக் கொண்டவர் இன்று மொட்டை அடிக்கிறாரா?
கருணாநிதிக்கு இன்னும் ஒரு பட்டம்.
Guinness Book ல் நம்ம முதல்வருக்கு இடம் உள்ளதா? சொல்லுங்கய்யா.

பாலா

Hariharan # 26491540 said...

//நம்ம புத்தர் பெருமான் தான் (தமிழர்களின்) ஆசையை அறவே ஒழித்த கருணாநிதியா அவதாரம் எடுத்திருக்கிறாரா? //

அவதாரம் என்ற சொல் பகுத்தறிவுப் பகலவன் பாசறை ஸ்காட்லாந்துயார்டால் (மாரல் போலீஸ்) இந்துமதம் சார்ந்த சொல்லாக பகுத்தறியப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது!

வெங்கட்ராமன் said...

ஹரிஹரன் சார் உண்மையை இப்படி எழுதி இருக்கிறீர்கள்.

தமிழ்நாட்டுப் பக்கம் திரும்ப வராம இருந்தா நல்லது.

வெங்கட்ராமன் said...

இதப் படிச்சா,

ஸ்காட்லாந்துயார்ட தன்னோட பெயரை மாற்றிக் கொள்ளக் கூட வாய்ப்பு இருக்கு.

Hariharan # 26491540 said...

வெங்கட் ராமன்,

//ஹரிஹரன் சார் உண்மையை இப்படி எழுதி இருக்கிறீர்கள்.

தமிழ்நாட்டுப் பக்கம் திரும்ப வராம இருந்தா நல்லது. //

உண்மையப் பேசினா உண்மையான நிலைமை என்னன்னு சொல்றீங்க! என்னன்னு சொல்லி மறுக்க இது உண்மையில்லைன்னு?

சென்னை பல்லவன் டிப்போ பாடிகாட் முனீச்வரர் காப்பாற்றட்டும் இந்த ஹரிஹரனை!

வடுவூர் குமார் said...

ஹரி
என்னதாக இருந்தாலும் இவர்கள் சம்பளம் மற்றும் வேலை பார்க்கும் சூழல் பலருக்கு விருப்பம் இல்லாததாக இருக்கும்.

சீர் திருத்தம் "தலை"யில் இருந்து ஆரம்பிக்கவேண்டும்.

ஏதோ சில பேர் "ஆர்வக்கோளாராக" இருக்ககூடும்.

இன்றும் சென்னை சாலையில் மூக்குக்கவசம் கூட இல்லாமல்,வெய்யிலில் "சொல்லவே கஷ்டமாக உள்ளது".பார்க்க சகிக்காமல் தலையை குனிந்துவிடுவேன்.

இதற்காக நீங்கள் சொன்னதெல்லாம் செய்யலாம் என்றாகிவிடாது.

இருக்கு,குணப்படுத்தவேண்டும்.

வெங்கட்ராமன் said...

/*************************
இதற்காக நீங்கள் சொன்னதெல்லாம் செய்யலாம் என்றாகிவிடாது.

இருக்கு,குணப்படுத்தவேண்டும்
*************************/

வடுவூர் குமார் அவர்களே,

குணப்படுத்த மருத்துவரும், நோயாளியும் முன்வரவேண்டும்.

வருவார்களா. . . ?

Hariharan # 26491540 said...

வாங்க குமார்,

//என்னதாக இருந்தாலும் இவர்கள் சம்பளம் மற்றும் வேலை பார்க்கும் சூழல் பலருக்கு விருப்பம் இல்லாததாக இருக்கும்.//

போலீஸ் மந்திரி நேரடியாக சாலையில் நிற்கும் காவலரின் சம்பளத்தைக் கணிசமாகத் தரட்டும், தரமான மருத்துவசிகிச்சையும், விபத்துக்காப்புறுதியும் ஏற்பாடு செய்யட்டும். இந்தப் பணியில் விருப்பம் தானாகவே வரும்!

//சீர் திருத்தம் "தலை"யில் இருந்து ஆரம்பிக்கவேண்டும்.//

போலீஸ் மந்திரிதானெ தலை காவல் துறைக்கு. கால் நூற்றாண்டாக அந்தத்துறையின் தலைமை திருந்த வேண்டும் இல்லியா?