Saturday, November 25, 2006

(63) அக்கிரஹாரத்து வந்தேறிகளும் நொங்குப் பனையேறிகளும்

ஆ ஊன்னா எல்லாத்துக்கும் பாப்பான்...ஆ(றி)ய வந்தேறியே... என்ற இனவெறியோடு பகுத்தறிவுச் சேவல்(பிரியாணி)களின் "அறை"-கூவல்கள்!

அன்றைக்கு மதியம் அகத்துக்காரி கைவண்ணத்தில் அக்கறையோடு செய்யப்பட்ட அக்காரவடிசலை உண்டு பசியாறிய பின்பு அக்கிரஹாரத்துத் திண்ணையில் படுத்தபடி காற்றைப் பிரிக்கும் அய்யர்வாள்தான் எல்லாத்துக்கும் காரணம் என்று ஆவேசம்! இவாளது கண்டுபிடிப்பான வேதம் வர்ணாஸ்ரமம் என்பதால் தான் சே! சே! என்று இன்றிருக்கும் எல்லாச் சிரமத்துக்கும் இவாள்தான் காரணம்!

முயற்சி திருவினையாக்கும் என்ற தமிழ் மூதுரையினை சுயமாக முயன்று பார்க்காத மூதேவிகளின் மூலாதார ஓலம் இது தான்!

இந்த இவாள் இருக்காளே இவா எல்லாம் அவாளுக்குள்ளே விட்டே தரமாட்டா? அப்படி ஒரு இன/குல/ஜாதிப் பாசம் அவா மேலே இவாளுக்கு இவா மேலே அவாளுக்கு என்று எத்தனை அக்கறை என்று பிராமணனை நோண்டி நொங்கெடுப்பது பகுத்தறிவு! கனிந்த மாமரம் கல்லடி படும்!

கைலாயத்தில் Knowledge of fruit என்ற ஞானப்பழத்துக்கு நாரதனால் கலகம் விளைக்கப்பட்டு அடித்துக்கொண்டார்கள் சிவபார்வதி குமாரர்கள். கைலாய சிவபார்வதி மீது நம்பிக்கை இல்லையென்ற கொள்கையோடு முற்போக்குச் சிந்தனையோடு தானே நேரடியாகக் கல்லடித்துப் பெற்ற மாங்கனிக்காக எச்சல்வுட்ட ஒரு அல்பத்திற்கு தாடையில் குத்தித் தாம்பூலம் போடவைத்துச் சாதீயம் கண்டுணரச் செய்வது 2006ல் அரசியல் திரா'விட'ப் பகுத்தறிவு!


1950- 60 களில் கடைவீதிக் காட்சியைப் பார்ப்போம்:

*அஞ்சுராந்தலில் ஆறுமுகச் செட்டியார் கடையில ஆறு ஆழாக்கு எண்ணைய் வாங்கிட்டு வாங்க!

*தெருமுக்கு முருகப்பச் செட்டியார் கடையில மூணுவீசை சக்கரை வாங்க மறந்துடாதீங்க!

*வரும்போது அப்படியே வழியிலிருக்கும் வஜ்ரவேல் செட்டியார் கடையில கடுகு உளுத்தம் பருப்பு வாங்கிவந்துடுங்கோ!

*உடுப்பி ஐயர் கடையிலேர்ந்து இட்லி/வடை , சைவச்சாப்பாடு பார்சல் வாங்கிட்டு வந்துடுங்க!

இப்படி தினசரி வணிகத்தில் எல்லாருமே செட்டியார்கள் தான்! வாணிகச் செட்டியார்களது முழுமையான கட்டுப்பாட்டில் வணிகம் தமிழ்நாட்டில் இருந்தது! வெஜிடேரியன் உணவுக்கு ஆரிய வந்தேறிகளின் உடுப்பிஐயர் சாப்பாட்டுக் கடைதான்!

தற்போதைய 2006-ல் கடைவீதிக் காட்சியைப் பாருங்கள்!

*நகர்ப்புறம் என்றால் முன்னாள் பனையேறி செல்வரத்தின நாடார் அண்ணாச்சியின் சரவணா ஸ்டோர்ஸ் தெரியாத ஆள் இருக்க முடியாது!

*வசந்த் அண்ட் கோ என்ற பனையேறி வசந்தகுமார் அவர்களது வீட்டுப் பொருட்கள் கடை அறியாதவர் இருக்கமுடியாது!

*தெரு என்று இன்னும் ஆகிவிடாமல் அங்கே இங்கே என்று நாலே வீடு இருக்கும் புற நகர்ப் பகுதி என்றாலும் அங்கும் எதாவது ஒரு பனையேறி நாடார் அண்ணாச்சி பத்துக்குப் பத்து என்ற சிறிய இடத்தில் ஒரு மளிகைக் கடை / பொருட்கள் கடை வைத்திருப்பார்!

சென்னைக்குள்ளும் தமிழர் வாழும் வெளி மாநிலங்களில்/ வெளி நாடுகளில் நம்ம பனையேறி அண்ணாச்சி ராஜகோபால் தான் சரவணபவன் மூலம் சைவ உணவுப்பிரியர்களைப் பசியாற வைக்கிறார்!

பனையேறி நாடார் அண்ணாச்சிகளின் சரவணா ஸ்டோர்ஸ், சரவண பவன், வசந்த் அண்ட் கோ மற்றும் இதர பெரிய, சிறிய மளிகைக்கடைகள் என்று எல்லா நிறுவனங்களிலும் வந்தேறி அவாள், இவாள்களது அவாளை இவாள் விட்டுக் கொடுக்காததும் இவாளை அவாள் விட்டுக் கொடுக்காததும் என்கிற சாப்டான, தான் அறிந்திருக்கும் தனது வட்டத்தில் சிரமப்படும் சகமனிதனை நேசிக்கும் கான்சப்ட் அமலில் மிலிட்டரி கட்டுப்பாட்டுடன் காணப்படும்.

சென்னையின் , தமிழகத்தின் பல பகுதிகளில் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர்,சிவகாசியிலிருந்து வந்தேறிய பனையேறிகள் மளிகை மட்டும் மக்களின் அத்தியாவசியப் பொருட்கள் வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கின்றார்கள் இன்று.

காரணம் கடினமான உழைப்பு. பல பத்து ஆண்டுகளாக முன்னேற வேண்டும் எனும் முனைப்போடு முட்டி மோதி உழைப்பைச் சிந்திக்கும் தனது திறமையைப் முற்போக்குப் பகுத்தறிவிடமும், அரசியல் திரா'விட'ப் பெத்தடின் கொள்கையிடமும் அடைக்கலம் என அடமானம் வைத்துப் பகுத்தறிவுப் பிச்சை எடுப்பதினை விட சுயமாக உழைப்பதில் சுகம் கண்டவர்கள்.

தமிழகத்தில் தேனீ மாதிரியாக உண்மையான உழைப்புக்கு உரிமையோடு உதாரணம் காட்ட 30-40 ஆண்டுகளாக ஒரு சமூகமாக மிகக் கடினமாக உழைத்து முன்னேறி வந்தவர்கள்!

இந்தப் பனையேறிகள் தமது நிறுவனங்களில் ஆரம்ப காலத்தில் வியாபாரம் ஒரு நிலை உயரும் வரை தனது சுற்றம் / பனையேறி சமூகத்தினின்று மட்டுமே உதவிக்கு வேலைக்கு ஆட்களை நியமிப்பவர்கள்!

சிவநாடார் என்ற பனையேறி கல்வி கற்ற பனையேறி சென்னை பெருங்குடியில் சிவா கம்ப்யூட்டர்ஸ் என்று 1980களின் மத்தியில் ஆரம்பித்து இன்று HCL Computers என்று அமெரிக்க Hewlett Packard Computers உடன் தொழில்நுட்ப உடன்பாட்டோடு மிகப்பெரும் கணிணி ஹார்டுவேரில் இந்திய முகமாக உயரமேறி இருக்கிறார்!

Why பார்ப்பான வந்தேறி? என்று மத்திய/மாநில அரசுகள் கைவிட்ட போதும் Time என்ற கடவுளாகிய காலத்தினால் Y2K bug மூலமாக பிழைப்புவாத அரசியல்வாதிகளால் வெந்தேறிய பிராமண வந்தேறிகள் கணிணி சாப்ட்வேரில் பெரும்பாலும் நலிந்த உடலோடு, செறிவான லாஜிகல் மூளையோடு காணப்பட்ட வந்தேறி பார்ப்பான்களில் ஒருவனான இன்பொசிஸ் நாராயணமூர்த்தி இன்னும் பல பார்ப்பான் வந்தேறிகள் சிறிதும் பெரிதுமாக கணினியில் சாப்ட்வேர் எழுதி வேத நெறிக் கலாச்சாரத்தில் செறிந்த இந்தியர்களின் லாஜிகல் திங்கிங் கெப்பாசிட்டி சுப்பீரியர் எனும் க்ளைம் இல்லாஜிகல் இல்லை என நிரூபித்தனர்.

கூடுதலாக வெளிநாட்டு வைத்தியநாத சுவாமிகளது மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் சாப்ட்வேர் வேலைகளாலும் வர்ணாஸ்ரம, வேத லாஜிக்கல் திங்கிங் என்பதையும் அதன் திறனை வெளிக்காட்ட சந்தர்ப்பம் கிட்டினால் முந்நூறு ஆண்டுகள் ஆங்கிலேயனது அடிமைப்படுத்தல் அதன் முன்பு இசுலாமிய இரக்கமற்ற ஆயிரம் வருட ஆட்சி என எதனாலேயும் இந்தியப் பாரம்பர்ய வேதநெறி கொள்கையினால் செலுத்தப்படும் சிந்தனையை மழுங்க வைத்துவிடாது என முதலில் உலகத்துக்கு மிகச்சமீபமாக மீண்டும் சந்தேகமற நிரூபித்துக் காட்டியவர்கள் வந்தேறிகளான அறிவால் பொருதுபவர்கள் அம்மாதிரியான அறிவால் பொருதுபவர்களது கூடுதல் பங்களிப்புடன்!

எந்த ஒரு புதிய உழைக்கும் களத்துக்கு / இடத்துக்கு வந்தேறியாக வந்தேறும் எவருக்கும் மிக அவசியமானது அவரது ஆக்கத்துக்குப் பக்கவாதம் தரும் அநாவசிய விதண்டாவாதங்களின்று 'உண்மை"யாக அவசியப்படுகின்ற "விடுதலை"யே.

குழுவாய் இருக்கிறார்கள் குழுவாய்ச் செயல்படுகிறார்கள் என்று சுயநல, பிழைப்புவாத அனலில் இட்ட புழுவாய் கிடந்து துடிக்கும் பகுத்தறிவாக முற்போக்காகச் செயல்படுவோர் ஒத்தசிந்தனையோடு குழுவாய்க் கூடிக்கதைப்பதை வந்தேறி,பனையேறிகளின் உழைப்பால் உருவாகும் அவர்களது பொருட்களுக்குத் தரும் முன்பே "டிஸ்கௌண்ட்டாக" அறிந்து/அறிவித்துக் கொள்ளத் தோன்றவில்லை எனில் நீங்கள் எத்தனை பெரிய வந்தேறி, பனையேறியாக இருந்தாலும் பகுத்தறிவு அற்றவர், பிற்போக்குவியாதிதான்! வேத வியாதி,வர்ணாஸ்ரம அடிவருடிகள்தான்!


"செட்டியார்களை ஓட ஓட விரட்டியவர்கள் பனையேறிகளான நாடார்கள்!"

"வந்தேறி உடுப்பி ஐயர்களை ஓட ஓட விரட்டியவர்கள் பனையேறி நாடார்கள்!"

-இச்சாதனையைச் பனையேறி நாடார்கள் செய்தது பித்தலாட்டக் கொள்கைகள், பொய்கள், அரசு அதிகாரத்தினால் அல்ல... இடைவிடாத தமது உழைப்பினால்... கடின உழைப்பினால்.

*செட்டியார்கள் வெறெங்கும் ஓடிவிடவில்லை ஸ்பிக் நிறுவனம், எம்பிஎல், என்று பெட்ரோ புராடக்ட்ஸ், செமிகண்டக்டர்கள், கணினி சாப்ட்வேர் மற்றும் இன்னும் பெரிய வணிகத்துக்கு இடம் பெயர்ந்து விட்டார்கள்.

*உடுப்பி வந்தேறி பாப்பான்களை சென்னை மற்றும் இதர இடங்களில் / மாநிலங்களில்/ நாடுகளில் சைவ உணவு ஓட்டல் தொழிலில் இருந்து ஓட ஓட விரட்டினார்கள் பனையேறிகளான நாடார்கள்! பாப்பான்கள் அதுவரை அடுப்படியிலிருந்தவர்கள் அடுத்தபடியான பாரம்பர்ய கல்வி லாஜிக்கல் திங்கிங் செல்லுபடியாகும் சாப்ட்வேர் தொழிலில் தஞ்சம் புகுந்து பஞ்சம் பிழைக்கின்றார்கள்!

*உழைப்பால்... கடின உழைப்பால் வெட்டியாய்ப் பகுத்தறிவு, முற்போக்கு சிந்தனையாக சாதி மட்டுமே பேசி, வேதம் வர்ணாஸ்ரமம் இவையே பேதத்திற்கான மூலகாரணம் என்று பிதற்றியபடி உழைக்காமல் உட்கார்ந்து குந்தித் தின்னாமல் கடினமாய் உழைத்து உழைப்பாலேயே தமது சமூகத்தினையெ மேம்படுத்திய சம்காலப் பனையேறிகளான் நாடார்கள் போற்றப்பட வேண்டியவர்களே!

கடினமாக உழைத்துத் தனது தகுதியை தயார்நிலையில் வைத்திருக்கும் எவரும் அவரது அன்றைய சமூக நிலையினின்று மேலேறி மேம்பட வழிகள் என்றுமே திறந்தே காணப்படும். பிழைப்பு வாத அரசியல் மூலம் அதிகாரம்
க(கொ)ண்டு, சமூகநீதி என்ற போர்வையில் குரங்கு ஆப்பம் என்று நியாயம் வழங்கிடும் பிழைப்புவாதப் பகுத்தறிவுப் பகலவன்களால் எந்தத் தீர்வும் வராது! இந்தத் தகுதியற்ற சோம்பேறிக் கூட்டத்தின் பிழையான அரசியல் / சமூக சிந்தனைகளால் தகறாறுகள் மட்டுமே என்றைக்கும் விளையும்!


சமூகமே சங்கிலி மாதிரி தொடர்ச்சி கொண்டது, ஒன்றுக்கொன்று தொடர்புள்ளது! சங்கிலியின் ஒவ்வொரு கண்ணியும் ஆரோக்கியத்துடன் வலுவாக இருக்க வேண்டும். அரசியல் திரா'விட'ப் பெத்தடின் பகுத்தறிவு என்ற "துரு" எந்தச் சமூகத்தின் கண்ணியிலும் சேர அனுமதிக்கக்கூடாது. இந்தத்துரு தானும் உருப்படாது. உருப்பட முயல்கின்றவரையும் உருத்தெரியாது உள்ளிருந்தே அழிக்கும் "துரு!" வடக்கு - தெற்கு என்று எதிலும் எங்கும் எப்போதும் பேதம்/பாகுபாடு பேசியே தே(ஏ)ய்க்கும் துரு இது!

ஒரு சமூகத்தின் ஆக்கத்தினை அழித்தொழிக்கும் இந்த அரசியல் திரா'விட'ப் பெத்தடின் பகுத்தறிவு என்ற துருவை உணர்ந்த சமூகத்திற்கு வெற்றிக் கொடிநாட்ட வடதுருவம் தென் துருவம் என்ற எல்லைகள் கிடையாது!


"வந்தேறி அவாள் மாதிரியோ பனையேறிகளான இவாள் மாதிரியோ அந்தந்த சமூகத்தின் உள்ளுக்குள்ளேயே ஒருவருக்கொருவர் அவாளுக்கு இவாள், இவாளுக்கு அவாள் என்று அனுசரணையோடு குழுவாக இருப்பதில் எந்தத்தவறும் இல்லை!"

"ஒரு தனிமனிதன் தனது கடின உழைப்பால் ஒரு துறையில் வெற்றியடைந்து வெற்றிகரமாக விரிவடைவது என்பது வீட்டில் ஆரம்பித்து, தெரு, வார்டு, ஊர், வட்டம், மாவட்டம், மாநிலம், தேசம் என்று பரந்து நீள்வது இயற்கையான நியதி!"

அரசு அதிகாரத்தில் அமர எதையும் பேசிச் செயல்படும் அரசியல் திரா"விட"ப் பெத்தடின் ஏற்றிக்கொண்ட முற்போக்கு, பகுத்தறிவுப் பகலவனைப் போற்றும் வீணர்கள் என்ற குழுவாக ஆவது சொந்த செலவிலே சூனியம் வைத்துக்கொள்வது!


குறிப்பு:

இப்பதிவில் வந்தேறி என்றும் பனையேறி என்றும் திராவிட அரசியல் பகுத்தறிவுப் பகலவன்களது மொழியிலேயே சொல்லியிருக்கிறேன்.

**பனையேறி என்ற சொற்பதம் நாடார் சமூக மக்களைத் தாக்கப் பயன்படுத்தப்படவில்லை! நான் வியப்போடு அவர்கள் உழைப்பை/ அதனால் விளைந்த மாற்றம் + வெற்றியை வாடிக்கையாளர்கள் மீது இவர்கள் வைக்கும் நம்பிக்கையை ஆக்கபூர்வமானதாகவே எப்போதும் பார்க்கிறவன் என்பதைத் தெளிவு படுத்த விரும்புகிறேன்!


அன்புடன்,

ஹரிஹரன்

14 comments:

Hariharan # 03985177737685368452 said...

டெஸ்ட் மெசேஜ்!

வஜ்ரா said...

பனையேறி பனையேறி என்று சொல்வது பயங்கர Racist ஆகக் கேக்குதுங்க...

நாடார் சமூகம் என்று சொல்லிவிட்டுப் போகவேண்டியது தானே.

நாய் கடிச்சா நம்ம திருப்பிப்போயா கடிக்க முடியும்.?

மற்றபடி திராவிடம் தலைக்கேறிய தமிழகத்தில் அடிமட்டத்திலிருந்து முன்னேறிய சமூகம் என்றால் அது நாடார் சமூகம் தான்.

பலசரக்கு மளிகை சாமான்கள் தமிழகத்தில் முழு சொந்தக்காரர்கள் அவர்களே.

இதைச் செய்ய எந்தப் பகுத்தறிவு மடையனையும் அவர்கள் நம்பவில்லை என்பது உண்மை.

இதே பகுத்தறிவினால் சீரழிந்த சமூகம் ஒன்று உண்டென்றால் அது தேவர் சமூகம். கழகங்களின் கலகங்களால் சமூகம் ரெண்டு பட்டது மட்டுமல்லாமல் படிப்பறிவற்று படு மோசமான நிலைக்குப் போனது.

இன்று தேவர் என்ற "மேல் சாதி" தமிழர்கள் நாடார் என்ற முன்னாள் "கீழ் சாதி" தமிழர்களைவிட மோசமான நிலையில் இருக்கிறார்கள் என்றால் அதற்கு திராவிடக் கொள்கையே காரணாம்.

dondu(#11168674346665545885) said...

சபாஷ் ஹரிஹரன் அவர்களே. நாடார் சமூகத்தைப் பற்றி நீங்கள் எழுதியது 100% சரி. அவர்களை உதாரணமாக வைத்துத்தான் நான் தலித்துகளை பீடிக்கும் இரட்டை தம்ளர் முறையைப் பற்றி பதிவு போட்டேன். அங்கு போய் அப்பதிவிற்கு வந்தப் பின்னூட்டக் கூத்துக்களைப் பார்க்கவும். பெரும்பான்மை பின்னூட்டங்கள் அதைரியப்படுத்துவதாகவே அமைந்தன. சிரமத்தைப் பார்க்காது முழுபதிவு மற்றும் அதன் பின்னூட்டங்களைப் பார்க்கவும்.

இது பற்றி நான் ஒரு தலித் நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் அரசே அந்த டீக்கடைகளை பொதுப்பணத்திலிருந்து அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று அபிப்பிராயப்பட்டார். அந்த அளவுக்கு அவர்களை அரசு சார்ந்திருக்க எல்லோரும் பழக்கி விட்டுள்ளனர். நான் என்ன கூறினாலும் அவர் ஒப்புக் கொள்ளும் மனநிலையில் இல்லை. ஒரு ஆயாசம்தான் ஏற்பட்டது.

மறுபடியும் நாடார்களிடம் வருகிறேன். தங்கள் இனத்துக் குழந்தைகள் படிப்புக்காக அவர்கள் என்னென்ன கஷ்டப்பட்டார்கள் என்பதையும் நான் காமராஜர் அவர்களைப் பற்றிய இப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன். அவர்களாக உழைத்து மெர்கண்டைல் பேங்கையே உருவாக்கியதைத்தான் மறக்க முடியுமா?

வஜ்ரா அவர்களே, இப்பதிவின் காண்டக்ஸ்டில் வந்தேறியோ பனையேறியோ இழிவான அர்த்தத்தில் கூறவேயில்லை என்று நான் உறுதியாகக் கூறுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Hariharan # 03985177737685368452 said...

குறிப்பு:

இப்பதிவில் வந்தேறி என்றும் பனையேறி என்றும் திராவிட அரசியல் பகுத்தறிவுப் பகலவன்களது மொழியிலேயே சொல்லியிருக்கிறேன்.

**பனையேறி என்ற சொற்பதம் நாடார் சமூக மக்களைத் தாக்கப் பயன்படுத்தப்படவில்லை! நான் வியப்போடு அவர்கள் உழைப்பை/ அதனால் விளைந்த மாற்றம் + வெற்றியை வாடிக்கையாளர்கள் மீது இவர்கள் வைக்கும் நம்பிக்கையை ஆக்கபூர்வமானதாகவே எப்போதும் பார்க்கிறவன் என்பதைத் தெளிவு படுத்த விரும்புகிறேன்!


அன்புடன்,

ஹரிஹரன்

Hariharan # 03985177737685368452 said...

டோண்டுசார்,

நாடார் சமூகத்தில் தோன்றி தமிழகத்துக்குத் தொண்டு செய்த காமராஜர் காலத்தில் கல்விக்குத் தரப்பட முக்கியத்துவம் அதை தனது அரசியல் கட்சி ஆட்கள் வியாபாரமாக்காமல் முழுமையான மக்கள் அக்கறையோடு காமராஜர் ஆட்சி செய்தது தமிழகத்தின் பெருமைகளில் இன்றும் ஜொலிப்பது.

என் போன்ற சாதாரணர்கள் கல்வி பயில காமராஜர் உருவாக்கிய பள்ளிக்கூடங்கள் மிக மிக முக்கியமானவை. இன்னைக்குச் சென்னை தொழில் ந்கரமாய், சாப்ட்வேர் அறிவுக் கிடங்காய், திறமையான எஞ்ஞிசனியர்கள் கிடைக்கின்ற இடமாக தமிழ்நாடு ஆகியிருப்பதில் காமராஜர் போட்ட கல்வி அஸ்திவாரம் மிக முக்கியம்!

அம்மாதிரியே பிற சாதி/சமூகத்திற்கு, குறிப்பாக வெட்டியான அரசியல் பேசுவோருக்கு நாடார்கள் சமூகம் உழைப்பு என்பது எப்படி ஒரு சமூகத்தையே உய்விக்கும் என்பதை மிகச் சரியாக உழைத்து வாழ்ந்து எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள்!

Hariharan # 03985177737685368452 said...

ஷங்கர்,

பதிவிலும், பின்னூட்டத்திலும் டிஸ்கியாக பனையேறி என்ற சொல் பயன்படுத்தப்பட்ட தொனியை விளக்கியிருக்கிறேன். எனிவே சுட்டிக்காட்டியதற்கு நன்றிகள்!

//நாடார் சமூகம் என்று சொல்லிவிட்டுப் போகவேண்டியது தானே.

நாய் கடிச்சா நம்ம திருப்பிப்போயா கடிக்க முடியும்.?//

பதிவுப் பொருளின் வீச்சு அதிகமாக வேண்டியே வந்தேறி என்ற சொல் பயன்படுத்தப்படுத்தியிருக்கிறேன்!

மற்றபடி கடந்த 40 ஆண்டுகளில் உழைக்காத பிழைப்புவாத ஆட்களின் அரசியல்ஆட்சியில் எவ்வளவு அமுக்கினாலும் எத்தனை நசுக்கினாலும் உண்மையான கடுமையான உழைப்பு வெற்றியையே தரும் என்பதனை நாடார்சமூகத்தினரரும் வந்தேறி பிராமண சமூகத்தினரும் ஏனைய தமிழ் மக்களுக்குத் தங்கள் கடுமையான உழைப்பின் மூலம் வெற்றிகரமாக மேம்பட்டு வாழ்ந்து உதாரணமாகத் திகழ்கின்றனர் என்பதே பதிவின் மூலம் நான் கூற விழைவது!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் வஜ்ரா!

Hariharan # 03985177737685368452 said...

வஜ்ரா

//பதிவுப் பொருளின் வீச்சு அதிகமாக வேண்டியே வந்தேறி என்ற சொல் பயன்படுத்தப்படுத்தியிருக்கிறேன்//

பழக்கத்தில் வந்தேறி என்றே வருகிறது!

பதிவுப் பொருளின் வீச்சு அதிகமாக வேண்டியே பனையேறி என்ற சொல் பயன்படுத்தப்படுத்தியிருக்கிறேன் என்று இருக்கவேண்டும்.

வடுவூர் குமார் said...

ஹரி,
இந்த வீச்சு செம ஷார்ப்.

பங்காளி... said...

திருமதி.ஜாய் ஞானதாசன் அவர்கள் எழுதிய "ஒரு மறக்கப்பட்ட வரலாறு" படித்துப் பாருங்கள். அந்த சமுதாயம் பிராமணர்களால் எந்த அளவு கொடுமைப் படுத்தப்பட்டது என்பதை...

அந்த வைராக்கியமே அவர்களை இந்த அளவிற்கு உயர்த்தியுள்ளது என்பது என்னுடைய எண்ணம்.

bala said...

ஹரிஹரன் அய்யா,

தமிழ்நாட்டில் நோகாமல் நுங்கு தின்னும்(courtesy: living smile) சமூகம் ஒன்று உண்டு என்றால் அது தி. க, தி. மு. க, பா. ம. க ., போன்ற பெரியாரிஸ அரசியல் செய்யும் அயோக்யர்களும், அந்த கும்பலுக்கு ஜால்ரா போடுபவர்களும் தான்.

பாலா

Hariharan # 03985177737685368452 said...

பங்காளி,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

திருமதி.ஜாய் ஞானதாசன் மிஷனரிகளை திருப்தி செய்ய இப்படி பிராமணர்கள் கொடுமைகள் செய்ததாக அவர்களை உள்ளே இழுத்து
எழுதுவது என்பதுதான் ஞானஸ்நானம் பெறும்போதே கூடுதலாகப் பெறும் ஞானம் தானே!

Hariharan # 03985177737685368452 said...

பாலா,

//தமிழ்நாட்டில் நோகாமல் நுங்கு தின்னும் சமூகம் ஒன்று உண்டு என்றால் அது தி. க, தி. மு. க, பா. ம. க ., போன்ற பெரியாரிஸ அரசியல் செய்யும் அயோக்யர்களும், அந்த கும்பலுக்கு ஜால்ரா போடுபவர்களும் தான்.//

இக்கருத்த்தை ஏற்றுக்கொள்வது உள்ளத்து நேர்மையைப் பிரதிபலிக்கும்!
வழிமொழிந்து ஏற்றுக் கொள்கிறேன் நான்!

வஜ்ரா said...

பங்காளி சொல்லும் புத்தகத்தின் முழு பெயர்.

A Forgotten History: The Story of the Missionary Movement and the Liberation of People in South Travancore
by Gnanadason, Joy

வெள்ளையன் விட்டுச் சென்ற "மிச்ச-நரி" களின் பயணத்தைக் காட்டும் இந்த புத்தகம்.

இதில் peoples liberation என்றெல்லாம் கம்யூனிச அடிப்படைகளில் கிருத்துவத்தைப் புகுத்துவதில் சில வெற்றியைக் கண்டுள்ளனர்.

Hariharan # 03985177737685368452 said...

ஷங்கர்,

//A Forgotten History: The Story of the Missionary Movement and the Liberation of People in South Travancore
by Gnanadason, Joy//

பெரும்பான்மையான நாடார் சமூகத்தினரிடம் தனிப்பட்ட முறையில் பேசிப் பழகி இருக்கிறேன். அவர்கள் ஒருபோதும் வெளிப்படுத்தாத ஒரு கருத்தை பலனுக்காக இந்துமதம் விட்டு கிறித்துவத்துக்குச் சென்ற ஒருவர் கிறித்துவ மிஷநரியின் மவுத்பீஸாக எழுதியதைத்தான் பங்காளி பிராமணர்களின் கொடுமையினால் விழைந்த வைராக்கியமே நாடார்களின் இன்றைய வெற்றிக்குக் காரணம் என்று குறிப்பிட்டிருக்கிறார்!

பங்காளி மிஷநரியின் பங்காளியாகி வக்காலத்து வாங்குகிறாரோ?