(59) அதென்னெங்க... ஆமை புகுந்தவீடு வெளங்காதுன்னா?
தமிழ்நாட்டில் பாலை முன்பு இல்லாமல் இருந்தது. இப்போது நீர் வறண்டு விட்ட பாலாறு மாதிரி பல நதிப் படுகைகளை பாலைன்னு சொல்லிக்கலாம்.
தமிழ் இலக்கியத்தில் சொல்லப்படுகின்ற ஐந்து வகை நிலப்பரப்புகளான குறிஞ்சி, முல்லை, மருதம்,நெய்தல், பாலை இவையனைத்திலும் இருக்கும் மக்களிடம் புழக்கத்தில் இருப்பது "ஆமைபுகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் வெளங்காது" என்ற பழமொழி.
அமீனா எனும் கோர்ட் சிப்பந்தி வழக்கு, வாய்தா, ஜப்தி என்று ஒரு வீட்டிற்குள் வரும் நிலை வந்தால் அக்குடும்பம் சட்ட சிக்கலில், வில்லங்கத்தில் மாட்டியதால் விளங்கி மேலே வருவதற்கான ஆற்றல் கோர்ட், கச்சேரி என்று அலைந்து திரிய நேரிடுவதால் முடங்கிவிடும் என்ற எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளலாம்.
அதுசரி! ஆனால் ஆமை என்ற உயிரினம் என்ன மனிதனுக்கு தீமை விளைவிக்க முடியும். மிக மிக மெதுவாக ஊர்ந்து செல்லும் ஒரு பிராணி, கடித்தோ, பிராண்டியோ, விஷம் கொண்ட நாக்கால் கொத்தியோ என்று இல்லாத ஒரு உயிரினம் எப்படி அதன் வசிப்பிடமான கிணறு, குளம், கண்மாய் போன்ற நீர் நிலையினின்று, நெய்தல் என்ற கடலும் கடல் சார்ந்த இடங்களில் கடலை ஒட்டிய கடற்கரை, மார்ஷ் லேண்ட் எனப்படும் சதுப்புநிலம் போன்ற பகுதிகளில் வாழும் ஆமை எங்கனம் ஒரு முடிவெடுத்து ஒரு மனிதனின் வீட்டுக்குள் நுழைந்து அங்கு வசிப்போருக்குத் தீங்கு விளைவிக்க இயலும்?
நமது பெரியவர்கள் அப்படி ஒரு உயிரினத்தைப் பழித்துப் பழமொழி சொல்லியிருக்கவும் வாய்ப்பில்லை. ஆக பழமொழியை திரித்துப் பொருள் கண்டிருப்பதுதான் கண்டிக்கப்படவேண்டிய தவறாகும்.
பெரியவர்கள் குறிப்பிடும் ஆமை எது?
கல்லாமை என்ற கல்வி அறிவை அடையாமை என்பது அறியாமையை வரவைக்கும்.
அறியாமை என்பதுடன் முயலாமை என்ற முயற்சி செய்யாமை சேர்கின்ற போது அது இல்லாமையை அழைத்து வருகிறது.
இல்லாமையில் இருப்பவனை இயலாமை இருந்து படுத்தும்போது இயல்பாய் அவனுக்கு வருவது பொறாமை!
ஆகவே மனிதன் தனது மனம் எனும் வீட்டில் கல்லாமை, அறியாமை,முயலாமை, இல்லாமை, இயலாமை, பொறாமை ஆகிய ஆமைகளை உள்ளே வரவிட்டுவிட்டால் அவனால் வாழ்க்கையில் விளங்கி மேலேறி வந்துவிட இயலாது.
அதே வேளையில் ஒருவன் இந்த ஆமைகளை அவனது மனதுக்குள் வரவிடாமல் தடுத்து வெற்றி கொண்டால் அவன் வாழ்க்கையில் விளங்கி மேலே வந்துவிடுவான்!
நம்ம பெரியவங்க சொன்னா அது பெருமாள் சொன்ன மாதிரி! சரியாகத்தான் இருக்கும். நாம் தான் கால ஓட்டத்தில் திரிந்துவிட்ட பொருளை சரியாக தெரிந்து புரிந்து நடந்து கொள்ளவேண்டும்!
அன்புடன்,
ஹரிஹரன்
17 comments:
ஹரிஹரன் அய்யா,
ஆமைய்யா..சரியாக சொன்னிங்க..சூப்பர்.
பாலா
ஹரி
அட்டகாசமாக சொன்னீங்க.
போன பதிவுக்கு பின்னூட்டம் போடமுடியவில்லை.பிளாக்கர் முடியாது என்று மறுத்துவிட்டது.
அருமையான கருத்துகள் திரு.ஹரிஹரன் அவர்களே.
நல்ல கருத்துகள் ஹரிஹரன்.
வழக்கமான உங்க டச் மிஸ்ஸிங்:-)
hehehe wonderfull idea, Boss.
பாலா,
தங்கள் வருகைக்கும் "சூப்பர்"க்கும் நன்றிகள்!
குமார்,
வருகைக்கு நன்றிகள். ப்ளாக்கர்தானே மறுத்தது... மீண்டும் ஒருமுறை முயன்றால் போச்சு!
பதிவுகளை செறிவாக நெறிப்படுத்த தங்களது பின்னூட்டம் மிக அவசியம்!
நன்மனம்,
வருகைக்கு நன்றிகள்.
உங்க மேலே கோவமா இருக்கேன். அரசியல் திரா'விட' பெத்தடின் பத்தி ஒண்ணுமே இந்த பதிவுல எழுதலியே
முத்துக்குமரன்,
//வழக்கமான உங்க டச் மிஸ்ஸிங்//
இல்லியே இதிலும் பெரிய சைஸ் எழுத்துக்களில் முடிவாகச் சொல்லியிருக்கிறேனே! :-))
அன்புள்ள ஹரிகரன்,
சொந்த மண்ணைப் பிரிவதன் துக்கம் பற்றி மிகுந்த புரிந்துணர்வோடு எழுதியிருந்தீர்கள். என்னைக் கேட்டால் மரணத்துக்கு ஈடான துக்கம் அதுதான் என்பேன். எங்களது நாட்டில் தற்காலிக சமாதானம் ஏற்பட்டபோது, கனடாவிலிருந்து என்னைப் பிய்த்துக்கொண்டோடினேன். வாழ்வதற்கு சகல வசதிகளோடும் ஒரு வீடு கட்டினேன். ‘இளவேனில்’என்று பெயர் வைத்து ஒவ்வொரு நாட்களையும் அதில் கொண்டாடினேன். மீண்டும் போர்ப்புயல் வீச ஆரம்பிக்க இரண்டாவது தடவை அகதியாக நேரிட்டது. இப்போது எனது மண்ணுக்கு அயலில் சென்னையில் தங்கியிருந்துகொண்டு ‘எப்போதடா ஊருக்குப் போவோம்…’என்று ஏங்கிக் காத்திருக்கிறேன். ‘பனைமரக் காடே… பறவைகள் கூடே… மறுபடி மறுபடி காண்போமா…’என்ற பாட்டைக் கேட்கும்போதெல்லாம் அழுகையாக வரும். சொந்த ஊர் கரிசல்காடாக, கள்ளிப்பற்றையாக இருக்கட்டும். அதுதான் மண்ணில் சொர்க்கம். நீங்களும் நானும் உணர்கிறோம்.
//அரசியல் திரா'விட' பெத்தடின் பத்தி ஒண்ணுமே இந்த பதிவுல எழுதலியே//
லக்கி,
அந்தப் பெத்தடின் போட்டிருந்தா தான் நிதானம் தப்பும். நான் பெத்தடின் போடுறவங்களையும், வலிந்து போட்டுக்கொள்கிறவர்களையும் எழுதுற ஆள்தானே கைக்கு க்ளவ்ஸ் + மூக்குக்கு உறைன்னு இந்தப் பெத்தடின் contamination எனக்கு வந்துடாம கவனமாத்தான் இருக்கேன்!
தமிழ்நதி,
அகதி எனும் சொல்லே கண்ணில் நீர்க்கசிய வைக்கிறது!
புத்தன் சொன்ன உயிர் கொல்லாமை எனும் நல்ல ஆமை இலங்கை ஆட்சியாளர்களின் மனதில் புகட்டும்.
தங்களுக்கு அமைதி நிரம்பிய, நிம்மதியான வாழ்வு நிரந்தரமாய் விரைந்து அமைந்திட இறைவனை வேண்டுகிறேன்!
என்னதான் இருந்தாலும் நீங்கள் அரசியல் திரா'விட' பெத்தடின் பதிவுகள் போட்டா தான் ஜிவ்வுன்னு இருக்கு :-)
இப்படிக்கு
அரசியல் திரா'விட' பெத்தடின் ரசிகர் மன்றம்
//என்னதான் இருந்தாலும் நீங்கள் அரசியல் திரா'விட' பெத்தடின் பதிவுகள் போட்டா தான் ஜிவ்வுன்னு இருக்கு//
லக்கி,
இந்த ஜிவ்வுன்னு இருக்கிறது போதையாலா, பொங்கிவரும் சினத்தாலா?
//இப்படிக்கு
அரசியல் திரா'விட' பெத்தடின் ரசிகர் மன்றம்//
அட்றா சக்கை! அட்றா சக்கை!
ரசிகர் மன்றம் கட்சியாவது இப்போ ஃபேஷன்தான்!
ஆனா தமிழக அரசியல் கட்சிகள் தந்த "அரசியல் திரா'விட' பெத்தடினுக்கு" மீண்டும் ரசிகர் மன்றம் என்பது புகழ் பெற்ற பழைய பாடலை திரும்பவும் ரீ மிக்ஸ் பண்ற "யூத்புல்" கான்சப்ட் மாதிரியா இது?
சினமா?
உங்கள் பதிவுகளைக் கண்டால் சிரிப்பு தான் வரும், சினம் வராது :-))))))
//உங்கள் பதிவுகளைக் கண்டால் சிரிப்பு தான் வரும், சினம் வராது //
அப்பச் சரி(யான போதை)!ன்றேன்
:-))) :-)))
Post a Comment