Wednesday, March 28, 2007

(138) காதல்...காதல்.. காதல் போயின் "நோ" சாதல்

காதல்....அத்வைதம் சொல்லுற விஷயமான எல்லோருக்குள்ளும் இறைவன் இருக்கிறான் என்பதைப் புரிஞ்சுக்காத ஆட்களுக்கும் புரிகிற விஷயம், எல்லோருக்குள்ளும் நீக்கமற நிறைந்திருப்பது! ஆன்மீகம், நாத்திகப்பகுத்தறிவு, ஜாதி, மதம் எனக் கூறுபட்டு,கூறுகட்டி, கூறை விற்கும் எல்லோரையும் அவர்கள் இளமைக் காலத்தில் அடி-துவம்சம் செய்திருக்கும் ஒரு விஷயம் காதல்!

காதல் சூறாவளியில் வீரம் நிறைந்த, பலம் மிக்கவர்கள் வேரறுந்து வீழ்ந்த மரங்கள் மாதிரி சாய்ந்திருக்கின்றார்கள்.

காதல் சைக்ளோனை எதிர்கொள்வதில் பெரும்பாலும் நம்மில் பெரும்பாலானவர்கள் நிலை
பத்ம வியுகத்தில் சிக்கிய அபிமன்யு மாதிரிதான்! காதல் வளையத்தின் உள்ளே சுலபமாக நுழைந்துவிடலாம் (ரெஸ்பான்ஸே இல்லைன்னாலும் ஒருதலைக்காதல் என்றவகையில்)

டீன் ஏஜில் ஹார்மோன்கள் காதல் வாழ்த்து ஆரம்பிக்க ஒரு சுபயோகதினத்தில் பஸ் ஸ்டாப்பில், கல்லூரியில், கடைவீதியில், கோடை விடுமுறையில், பணியிடத்தில், நண்பனின் வீட்டில், வசிக்கின்ற தெருவில் எதிர்வீட்டில், அதுவரை கண்ணுக்குத் தெரியாத இந்தக் காதல் இம்சை ஏதாவது ஒரு சப்பை சம்பவத்தால் "டிரிக்கர்" ஆகி அடையாளம் காணப்பட்டு, வெளிப்பட்டு அதன் பின் வேப்பிலை அடிக்காத மண்டைக்குள் மோகினியாய் ஆட்டம் போட்டு அப்பப்பா... இந்தக் காதல் எனும் விஷயம் எத்தனை எழுத்துகொண்டு எழுதினாலும் புரியாது... அனுபவித்தால் மட்டுமே அது என்னவெல்லாம் செய்யும்னு தெரியும்.

காதல் பண்பு ஏற்படுத்தும் ஹார்மோன் சேர்வதால், உடனே உயர் அழுத்தத்தில் 2000 psi ரேஞ்சுக்கு நரம்புகளுக்குள் ரத்தம் சுற்றவைக்கிறதால் தானோ என்னவோ இரத்த Pump ஆகிய இதயம் காதலுக்கான சிறப்புச் சின்னமாகிப் போனது !

ஹார்மோன் கோளாறு எனக் காதல் அறிவியலால் அறியப்படுகிறது. இக்காதல் பலசமயம் ஒருவரது வாழ்வுகுறித்தான குறிக்கோள் அறு திருப்பதிகம் பாடிச் சென்றுவிடும் அபாயம் இருக்கிறது. இது காதலின் பிழையல்ல... காதலர் பிழை!

காதல் பண்பு ஒருநபரை சிறப்பாகச் செயல்பட வைக்கிறது. இது நான் உணர்ந்த விஷயம் என்பதால் கொஞ்சம் கேரண்டியோடு சொல்கிறேன்! ஒரு காதல் தோற்குமா? ஜெயிக்குமா? என்பதைப் பல்வேறு காரணிகள் நிர்ணயிக்கும்! அது பற்றி அப்புறம் பார்க்கலாம்!

மனம் கவர்ந்த பெண்ணின் பெரிய கருவிழிகள் ஒருவனுக்கு உண்மையாகவே மீளச் சிரமம் தரும் சுழல்! லிப்டில், வீட்டில் , அலுவலகத்தில் திடீரெனக் கிடைக்கும் அருகாமைச் சூழலில் உணரும் நறுமணமிக்க மூச்சுக்காற்று வெப்பம் மூர்ச்சை அடைய வைக்கும்!

ஒரே பெண் ஒன்றுக்கும் மேற்பட்டவரின் மனங்களைக் கவரும் வகையில் அமைந்துவிட்டால், குறிப்பாக மாமாவின் ஒரே பெண் அத்தைகளின் மகன்களிடையேயும், அலுவலகத்தில் சக நண்பனோடும் ஏற்படுத்தும் நாகரீகமான போட்டா போட்டி என்பது இன்றைய நவீன சுயம்வரம்! தன்னை அவள் நினைவுகளில் நிலை நிறுத்தும் செயல்கள் , முயற்சித்தல் என்று டபுள் ஓவர்டைம் யோசித்துச் செயலாற்றவேண்டும்!

கஞ்சா மாதிரி போதைவஸ்து அடித்தால் அதை அடிக்கும்போது இருக்கும் மனோபாவம் ஒருவர்க்கு அப்படியே போதை இறங்கும் வரை தொடரும் என்று கேட்டிருக்கிறேன்! சிரித்தால் மணிக்கணக்கில் சிரிப்பது... சோகமாக இருந்தால் தேம்பி அழுவது என்று!

காதல் போதை வேறு வகை! அது வரை தாய், தகப்பன், சகோதரன், சகோதரி என இருக்கும் ப்ரையாரிட்டி வரிசை அழிக்கப்படும். ப்ரையாரிட்டி எனும் குழப்பம் நீங்கும். ஒரே நினைப்புத்தான்... காதல் ... காதல்...காதல் மட்டுமே மனதில் யார் oppose செய்தாலும் மனதில் un-opposed ஆக முதன்மை நிலையில் இருக்கும்.

தகப்பன் ஏற்கனவே கல்லூரிப்படிப்பு விடுதியில் தங்கிப்படித்த காலத்திலேயே பலருக்கும் பாக்கட் மணித் தகறாறில் வில்லன் ஆன நபர். காதல் விஷயம் எக்ஸ்போஸ் ஆனதும் மீண்டும் இந்தத் தகப்பன் -வில்லனின் மறு அவதாரம் சில எபிஸோடுகளில் விஸ்வரூபம் எடுக்கும்! தாய்-சகோதரியின் எமோஷனல் பிளாக் மெயில் ஆரம்பிக்கும். சகோதரனின் வெளியிலிருந்து ஆதரவு ஆறுதல் தரும்!

நண்பர்கள் சுமைதாங்கிக் கல் ஆவார்கள். தினம் இவனுக்கு அலுக்காத அவர்கள் சிதறி ஓட நினைத்தாலும் இவன் தரும் டீ-பொறை போன்ற ஸ்பான்ஸர்ஷிப் காரணங்களால் முடியாத நிலையில் டீ-பொறை வாயில் இருக்கும் வரை இவன் காதல் புராணம் கேட்டு ஆதரவு நல்குவர்!

1)சின்னவயசு ஈர்ப்பு-பள்ளிக்காதல்,
2)கல்லூரி இன்பாச்சுவேசன்,
3)பணிக்கு வநது பொருளீட்டும் நிலையிலிருக்கும் போது எழும் காதல் பண்பு

இந்த மூன்றுவகைக் காதலிலே சிறந்தது எது என்றால் மூன்றாவதைத் தான் நான் ரெக்கமெண்ட் செய்வேன். சுயமாய் பரிசோதனை செய்ததைத்தானே பரிந்துரைக்க முடியும்! மேலும் படிப்பு பாழாகாது இந்த வகையால்! ஜெயித்தாலும் தோற்றாலும் Win-Win சிச்சுவேஷன் இந்த மூன்றாவது வகையில் மட்டுமே சாத்தியம்!

தோற்றாலும் எப்படி Win சிச்சுவேஷன்? இருக்கு! அப்புறமா மெல்லமா வரலாம் காதல் வாட்டர்லூவான இதுக்கு!

காதல் பன்னீரைக் கொஞ்சம் அள்ளித் தெளிக்கலாம் அதுவரை அடுத்த பதிவுகளில்!

அன்புடன்,

ஹரிஹரன்

9 comments:

Hariharan # 03985177737685368452 said...

டெஸ்ட் மெசேஜ்!

கார்மேகராஜா said...

nice

Hari said...

/*டீன் ஏஜில் ஹார்மோன்கள் காதல் வாழ்த்து ஆரம்பிக்க ஒரு சுபயோகதினத்தில் பஸ் ஸ்டாப்பில், கல்லூரியில், கடைவீதியில், கோடை விடுமுறையில், பணியிடத்தில், நண்பனின் வீட்டில், வசிக்கின்ற தெருவில் எதிர்வீட்டில், அதுவரை கண்ணுக்குத் தெரியாத இந்தக் காதல் இம்சை ஏதாவது ஒரு சப்பை சம்பவத்தால் "டிரிக்கர்" ஆகி அடையாளம் காணப்பட்டு, வெளிப்பட்டு அதன் பின் வேப்பிலை அடிக்காத மண்டைக்குள் மோகினியாய் ஆட்டம் போட்டு அப்பப்பா... */

ஆஹா....

கங்குலியின் down-the-track சிக்ஸர்.

எல்லாம் சரி, ஆபிஸ்ல யாரும் கிடைக்கலைனா?

ஆதிசேஷன் said...

நன்றாக இருக்கிறது பதிவு.

Hariharan # 03985177737685368452 said...

வாங்க கார்மேகராஜா,

//nice //

காதல்ன்ன உடனே இங்கிலீபீஸில் கமெண்டு போட்டுத்தாக்குறீங்க!

ச்ச்சும்மா வெளாட்டுக்கு :-))

நல்லா இருங்க!

வடுவூர் குமார் said...

3ன்றாவதில் அதிகம் உணரப்படுவது என்னவோ நிச்சயம் என்றாலும்,காலில் நிரந்தரமாக கட்டு விழுந்துவிடும்.
வேணுமா இது?
:-))

சேதுக்கரசி said...

இதைத் தான் கலக்கல் ஆரம்பம்னு சொல்றதா? தொடர்ச்சிக்காகக் காத்திருக்கோம்ல... :-)

mglrssr said...

சார் முடியலை..........

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மங்களூர் சிவா

mglrssr said...

சார் இன்றுதான் முதல் முறையாக உங்கள் பதிவுக்கு வருகிறேன். ஏகப்பட்ட மேட்டர் இருக்கு.


மங்களூர் சிவா