Friday, March 09, 2007

(127) திருக்குறள் - பகுத்தறிவு - உலகத் தமிழனின் இரு கண்கள்

அரசியல் திரா"விடம்" பேசும் தமிழகத்துத் தலைவர்கள் பல தலைமுறைகளாகக் கடந்த 50ஆண்டுகளுக்கும் மேலாகச் சொல்லி வருவது அய்யன் திருவள்ளுவர் ஈன்ற உலகப் பொதுமறை திருக்குறளும் ஈரோடு ஈன்ற அய்யாவினால் கிடைக்கப் பெற்ற பகுத்தறிவும் உலகத்தமிழனின் இரு கண்கள் என்பதே.

கிறிஸ்து, கிரிகோரியன் ஆண்டுக்கு இணையாகத் தமிழ் ஆண்டு திருவள்ளுவர் ஆண்டு என்று சொல்வது, குமரிக்கடலிலே 133 அடிக்கு சிலை என அய்யன் திருவள்ளுவருக்கு ஒருபக்கம் நடக்கிறது. அடுத்த பக்கம் பகுத்தறிவுப் பகலவன் என ஈவெராவைச் சொல்லி துதி,வழிபாடு நடக்கிறது 128 ஈவெரா சிலைகள் வைக்க ஏற்பாடுகள் என தமிழனின் இருகண்களாக அய்யனையும் அய்யாவையும் சொல்லி வெண்ணை ஒருகண்ணிலும், சுண்ணாம்பு ஒரு கண்ணிலும் என தமிழன் பார்வைக் கோளாறுடன் போராடுவதை ஆராய்வோம்.

அய்யன் திருவள்ளுவர் உலகப் பொதுமறை திருக்குறளில் என்ன சொல்கிறார் என்பதை அய்யா பகுத்தறிவு சொன்னதோடு பொருத்திப் பார்க்கலாம்.

படித்துப் பார்த்துவிட்டு உலகத் தமிழனின் எந்தக் கண் "பூ"விழுந்த கண் என்று சீர்தூக்கிப் பார்க்கவும்.
----------------------------------------------------------------------------------
வெறுப்பு-இகல்-Hatered பற்றி அய்யன் வள்ளுவர் Vs அய்யா பகுத்தறிவு

அய்யன் திருவள்ளுவர் வெறுப்பு-இகல்-Hatered பற்றிச் சொன்னது:


851. இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பா¡¢க்கும் நோய்.

விளக்கம்: வெறுப்பு என்பது கொடும் நோய் அது பிரிவுணர்வையும் மிகக் கெட்ட எண்ணங்களையும் அனைத்து பக்கங்களிலும் பல்கிப் பெருகச்செய்து கேடுவிளைக்கும்.

Hatred is a plague that divides 851
And rouses illwill on all sides.

இன்சொல் பற்றி ஈவெரா பாசறை அமைத்துப் பரப்பிய பகுத்தறிவு:

1. பாம்பையும் பார்ப்பனனையும் பார்த்தால் பாம்பை விடு பார்ப்பனனை அடித்துக்கொல்!

----------------------------------------------------------------------------------

பெண் மாண்பு பற்றி அய்யன் வள்ளுவர் Vs அய்யா பகுத்தறிவு

அய்யன் திருவள்ளுவர் பெண் மாண்பு பற்றிச் சொன்னது:

57. சிறைகாக்கும் காப்பவென் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.

விளக்கம்: சிறை வைத்துக் காப்பதால் என்ன பயன்? பெண்கள் தங்கள் நிறைமாண்பு காத்தலே தலைமையானது.
Of what avail are watch and ward? 57
Their purity is women's guard.

பெண் மாண்பு பற்றி ஈவெரா பாசறை அமைத்துப் பரப்பிய பகுத்தறிவு:
1. கற்பு என்பது பெண்களுக்கு அவசியமற்றது.
2. பெண்கள் கள்ளப்புருஷன் வைத்துக்கொள்ள வேண்டும்.
3. கண்ணகி, கற்பு என்பவை ஏமாற்று

கண்ணகி, கற்பு பற்றி ஈவெரா வின் கீழான எண்ணங்களும் கற்பு பற்றிய குஷ்பூ பேச்சுக்கு பகுத்தறிவுக் குஞ்சுகள் வெளக்கமார் போராட்டம் நடத்தியதும் தனிச்சுவையானது

-------------------------------------------------------------------------------------

இனிய சொல் பேசுதல் பற்றி அய்யன் வள்ளுவர் Vs அய்யா பகுத்தறிவு

அய்யன் திருவள்ளுவர் இன்சொல் பேசுதல் பற்றிச் சொன்னது:

100. இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
Leaving ripe fruits the raw he eats 100
Who speaks harsh words when sweet word suits.

விளக்கம்: பேச / விவாதிக நல்ல வார்த்தைகள் இருக்க கொடிய வார்த்தைகள் பேசுவது என்பது கனிந்த கனிகள் இருக்கக் கசக்கும் காயை உண்பதற்குச் சமம்!

இன்சொல் பற்றி ஈவெரா பாசறை அமைத்துப் பரப்பிய பகுத்தறிவு:

1. பாம்பையும் பார்ப்பனனையும் பார்த்தால் பாம்பை விடு பார்ப்பனனை அடித்துக்கொல்!
2. பார்ப்பனப் பெண்களை தேசிய உடமை ஆக்கு!

----------------------------------------------------------------------------------

உடல்-உள்ளத் தூய்மை வாய்மை பற்றி அய்யன் வள்ளுவர் Vs அய்யா பகுத்தறிவு

அய்யன் திருவள்ளுவர் உடல்-உள்ளத் தூய்மை-வாய்மை பற்றி சொல்லுவது:

298. புறம்தூய்மை நீரான் அமையும் அகம்தூய்மை
வாய்மையான் காணப் படும்.

விளக்கம்: ஒருவனுக்கு நீரினால் உடல் தூய்மை கிடைக்கும். உண்மை பேசுவதால் உள்ளத் தூய்மை கிடைக்கும்.

Water makes you pure outward 298
Truth renders you pure inward.



உடல்தூய்மை- வாய்மை பற்றி ஈவெரா பகுத்தறிவாக வாழ்ந்து காட்டியது:

1) குளிப்பதை நான் வெறுக்கிறேன். அதை ஒரு தொல்லையாகவே பார்க்கிறேன் என்றவர் ஈவெரா.

2)பிள்ளையார் சிலையை தெருவில் உடைத்துவிட்டு தன்வீட்டில் ரகசியமாக பிள்ளையாரை வணங்கியவர்!

3)வெங்காயமே வித்து என்கிற எளிய உண்மையை விடுதலை செய்யாமல் உண்மை, விடுதலை, மேடைகள் வாயிலாக இந்துமதம் வித்தற்ற வெங்காயம் எனச்சொல்லி வெங்காயத்தில் விதை தேடிய வீரியம் மிக்க விஞ்ஞானி!
-------------------------------------------------------------------------------

புலால் உண்ணாமையில் அய்யன் வள்ளுவர் VS அய்யா பகுத்தறிவு


அய்யன் திருவள்ளுவர் புலால் உண்ணாமை பற்றிச் சொன்னவை:

254. அருள் அல்லது யாது எனின் கொல்லாமை கோறல்
பொருள் அல்லது அவ்வூன் தினல்.

விளக்கம்: உயிரைக் கொல்லுதல் இரக்கமற்ற செயல், உயிரைக் கொன்று சாப்பிடுதல் என்பது ஈனமானது.
If merciless it is to kill, 254
To kill and eat is disgraceful.


260. கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.

விளக்கம்:. கொல்லாதவனை, புலால் உணவை மறுத்தவனை எல்லா உயிர்களும் கைகூப்பித் தொழும்
All lives shall lift their palms to him 260
Who eats not flesh nor kills with whim

257. உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்அது உணர்வார்ப் பெறின்.

விளக்கம்: .
ஒருவன் புலால் உண்ணாமல் இருக்க புலால் என்பது இன்னொரு உயிரின் "புண்" எனத் தன் மனதால் உணரவேண்டும்From eating flesh men must abstain 257
If they but feel the being's pain

புலால் உண்ணாமை குறித்து ஈவெரா காட்டிய பகுத்தறிவு:

1)கொன்றால் பாவம் தின்றால் போச்சு!

2)ஆடு, மாடு, கோழி எல்லாம் மனிதன் கொன்று தின்பதற்காகத்தான்!

3)மாட்டுக்கறி ஈவெராவின் சிறப்பு விருப்ப உணவு!

-------------------------------------------------------------------------------
பார்ப்பனர்-அந்தணர் பற்றி அய்யன் வள்ளுவர் VS அய்யா பகுத்தறிவு


அய்யன் வள்ளுவர் பார்ப்பனர்-அந்தணர் பற்றிச் சொன்னது

8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.


30. அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

விளக்கம்: எந்த உயிருக்கும் கேடுவிளைவிக்காமல் அறவழி வாழ்பவர்கள் அந்தணர்கள்.

134. மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

விளக்கம்: பார்ப்பனன் வேதத்தை மறந்தாலும் ஏற்கலாம். ஆனால் பார்ப்பனனாக இருக்கவேண்டிய ஒழுக்கமின்றி வாழ்ந்தால் கேடு.

560. ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.

விளக்கம்: கொடுங்கோல்அரசன் காக்கவில்லை எனில் பசுக்கள் பால் குறைந்து தரும், வேதநெறி ஒழுகி அறுவகைத் தொழில் செய்வோர் வேதம் மறப்பர்.
The *six-functioned forget their lore 560
Cows give less if kings guard no more.
* the six functions are: learning, teaching, giving,
getting, sacrificing, kindling sacrifice.
These are duties of Vedic savants

பார்ப்பனர்-அந்தணர் பற்றி அய்யா பகுத்தறிவு தமிழகத்தில் ஈவெரா பாசறை அமைத்துச் சொல்லித் தந்த அரசியல் திரா"விட" பகுத்தறிவு சொல்வது:

1. பார்ப்பனன் பாம்பை விடக் கொடிய விஷம் பொருந்தியவன்.
2. சமூகத்தில் சமநிலை வரவேண்டுமெனில் வேதம் ஓதும் பார்ப்பனனை மலம் அள்ள விடு!
3. வேதம் ஓதும் அந்தணர் மீது தாக்குதல் நடத்தி குடுமி, பூணூல் அறுத்து எறி!
------------------------------------------------------------------------------------

1330 குறள்கள் இயற்றிய பரந்து பட்ட பார்வை கொண்ட பச்சைத்தமிழனான
அய்யன் திருவள்ளுவருக்கு வேதநெறி, பார்ப்பனர்கள்,வழிபாடுகள் மற்றும் அஸ்வமேத யாகம் குறித்து இன்றைய ஈவெரா வழிவந்த நபர்களின் பகுத்தறிவுப் புரிதல்கள் இல்லை என்பது அவரது குறட்பாக்களே விடுதலை செய்கிற உண்மை!

(அய்யனைப் பச்சைத் தமிழன்னு சொல்லாம் தானே:-)) அட காமத்துப்பால் களவியல், கற்பியல் என்று எழுதியிருக்காருங்க அய்யன் வள்ளுவர்)

எந்த விதமான தயக்கமும் இன்றி உலகப்பொதுமறை இயற்றிய அய்யன் திருவள்ளுவரை ஒருகண்ணாக ஏற்றுக் கொள்கின்றீர்களா? சரி. அப்போ வாழ்நாள் முழுதுமாகப் பொய்மையைப் பகுத்தறிவு என்று ஈவெரா பிதற்றியதை இன்னொரு கண்ணாக ஏற்றுக்கொண்ட பூவிழுந்த கண்ணின் கதி?

ஒரு கண் மட்டும் உலகத் தமிழனுக்குச் சரியான பார்வை தருமா?
பூவிழுந்த பொய்ப் பகுத்தறிவுக்கண்ணை நம் தாய்த்திருநாட்டில் நம் முன்னோர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த சனாதனதர்மம் எனும் லேசர் டிரீட்மெண்ட்டில் சரி செய்துவிடலாம்.

சந்தேகம்-1
திருக்குறள் இனி உலகப் பொதுமறை என பகுத்தறிவுகள் ஏற்குமா?

சந்தேகம்-2
இனி அய்யன் திருவள்ளுவரும் பார்ப்பனீய அடிவருடி பட்டம் சூட்டப் படுவாரா?

அன்புடன்,

ஹரிஹரன்

6 comments:

Hariharan # 03985177737685368452 said...

31902 டெஸ்ட் மெசேஜ்

Osai Chella said...

Ginger eaten monkey maathiri aakivitteerkal pola!Lol! paavaamaaka irukkiRathu animal sex loversn nilamai!

Hariharan # 03985177737685368452 said...

//Ginger eaten monkey maathiri aakivitteerkal pola!Lol!//

செல்லா,

இது ரொம்ப நாளாகவே குறுந் தொடராகப் பதியத் தொகுத்திருந்தது.

// paavaamaaka irukkiRathu animal sex loversn nilamai! //

இதை நீங்கள் என்னை நோக்கி சுட்டிச் சொல்லியிருந்தால் இந்த வரம்பு மீறிய அநாகரீகக் கருத்தை நான் இங்கே வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஜடாயு said...

அருமையான தொகுப்பு ஹரி. பாராட்டுக்கள்.

மகரிஷிகளில் ஒருவராக நாம் போற்றி வணங்கும் திருவள்ளுவரை ஒரு சுயநல, வக்கிரம் பிடித்த, ஒழுக்கம் கெட்ட ஜாதி வெறியருடன் எப்படி ஒப்பிட்டுப் பேசத் துணிகிறார்கள் இந்தக் கயவர்கள்? மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் இதைக் கண்டிக்க வேண்டும்.

இதே போன்று "திருவிளங்க சிவலோக சித்தியெல்லாம் விளங்க, சிவஞான நிலை விளங்க சிவானுபவம் விளங்க" வாழ்ந்த மகாயோகி, மகாஞானி வள்ளலாரையும், ஈவெராவையும் ஒப்புமை கொடுத்துப் பேசும் சில ஈனர்களும் இங்கே உள்ளனர். வள்ளலார் பெயரைக் கெடுத்து வரும் இவர்களை அவரது பக்தன் என்ற முறையில் வன்மையாகக் கண்டிக்கிறேன்!

Hariharan # 03985177737685368452 said...

ஜடாயு,

உண்மைதான். திருக்குறள் தமிழனின் ஒரு கண்ணாக இருந்து வழிகாட்டும். பிழைப்புவாத திரா"விட" அரசியல் திணித்த இன்னொரு பகுத்தறிவுக் கண் பாரம்பரிய நரம்புகளைத் துண்டிக்கும் பார்வை தராத, ஒளி ஏற்றிடாத குருட்டுக்கண்!

தமிழனுக்கு கூடுதலாக தாழ்வுமனப்பான்மையும், வெறுப்பும் மட்டுமே மேலிடும் இந்தக் குருட்டுச் சித்தாந்தத்தினால் !

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Unknown said...

திருவள்ளுவர் சொல்லும் பார்பணன் என்ற வார்த்தை இன்றைய ஆரிய பிராமணர்களை குறிப்பது அல்ல அந்தனர் என்போர் அறவோர் சான்றோர். ஈ.வே.ரா என்கின்ற நாக்கியர் பிராமணர்களின் எதிரியல்ல அவர்களின் உண்மையான அன்பன் ஒன்றைபற்றி நாம் அதிகம் பேசும்போதும் விமர்சிக்கும்போதும் அது அதன் தனித்துவத்தை மீட்க பெரிய அளவில் அது வெளிவரும் அப்படித்தான் ஆகிவிட்டது பெரியாரின் பிராமண எதிர்ப்பு இன்றுவரை பிராமண ஆதிக்கம் வலுத்துதான் இருக்கிறது அதற்கு உதாரணம் தில்லை நடராசர் ஆலய தீர்ப்பு