(134) கடவுள் எங்கே இருக்கிறார்?!!
கடவுள் எங்கே இருக்கிறார்? ஜிபிஎஸ் சிஸ்டம் மூலமாக அகப்படுமா இறைவன் இருக்கும் இடம்? பெரும்பாலானவர்கள் தேடி அலையும் இந்த இறைவன் பூட்டப்பட்டு இருக்கும் இடத்தின் சாவியைக் கண்டுபிடிக்க புதிய ஜேம்ஸ்பாண்ட் 007 வரணுமா?
இறைவன் எங்கே இருக்கார்ன்னு கண்டுபிடிக்க முதல்ல 916 தர உத்திரவாதம் தரும் தங்க நகைக்கடைக்குள் போகலாம் வாங்க!
தங்க நகைக் கடையின் உள்ளே பல தரப்பட்ட டிசைனில், கைவேலைப்பாடுகள் நிறைந்த நெக்லஸ், ராசிக்கல் பதித்த தோடு, பல்வகையான மோதிரம், நவீன மெஷின் கட் செயின், பாரம்பரிய ரெட்டை வடம் சங்கிலி, மூக்குத்தி, புல்லாக்கு, பல்வகை வடிவங்களில் திருமாங்கல்யம், ஒட்டியாணம், நெத்திச்சுட்டி, ஜிமிக்கி, முருகன் டாலர், கை வளையல்கள் இப்படி எவ்வளவோ நகைகள் பார்க்கிறீர்கள்.
இந்த நெக்லஸ், தோடு, மோதிரம், நவீன மெஷின் கட் செயின், ரெட்டை வடம் சங்கிலி, மூக்குத்தி, புல்லாக்கு, திருமாங்கல்யம், ஒட்டியாணம், நெத்திச்சுட்டி, ஜிமிக்கி, வளையல்கள் முருகன் டாலர் இப்படிக் கேட்டு வாங்கும் நகைகள் அனைத்தும் தங்கத்தின் வடிவங்கள், இவை எல்லாம் தங்கம் என்ற ஒரு சொல்லில் அடங்கிவிடும்.
இறைவன் தங்கம் போன்றே இப்படிப் பல்வகை வடிவங்களில் காணப்படுகிறான்.
16K, 18K,22K, 24K எனப்படுவது எல்லாம் இந்த நகைகளில் இருக்கும் தங்கத்தன்மையினை குறிப்பிடவே!
24காரட் சுத்தத் தங்கம் என்பது 16காரட் ஆக்க தங்கமாக அல்லாதது சேர்க்கப்படுகிறது.
16 காரட் தங்கம் 100% சுத்தத் தங்கம் ஆக வேண்டுமெனில் அதனுள் இருக்கும் தங்கம் அல்லாதது வெளியேற்றப்படவேண்டியது அவசியம்.
தங்கம் என்பது சத்யமானது. அதன் பல்வேறு வடிவங்கள் மாயை அல்லது மித்யா.
பல்வேறு வடிவங்களாக இருந்தாலும் அதுவும் தங்கமே!
ஆக தங்கமே உருவான நகைவடிவம் தங்கத்தைத் தேடி அலைவது அறியாமையாகும்.
இறைவனை உள்ளிருத்திய வடிவங்களாகிய நாம் இறைவனை நீ எங்கே இருக்கிறாய் என ஜிபிஎஸ் சிஸ்டம் வைத்து வெளிப்புறத்தில் தேடும் முயற்சி வீணானது.
எம் ஏழை மக்களிடம் இருந்து சிலரால் பிரிக்கப்பட்ட இறைவன் எங்கோ அடைக்கப்ட்டு இருக்கிறான்... அவனை விடுவிக்கிறேன் என சமூக நீதிக்கா சீற்றத்துடன் கிளம்புவது சட்டைப்பையில் சாவியை வைத்துக்கொண்டு உலகமெல்லாம் அதைத் தேடி அலைவதற்குச் சமமானது.
என்ன குழப்பமா இருக்கா!..சரி. குழம்பிய மனத்தைச் சரி செய்ய காற்றுவாங்க மெரீனா பீச்சுக்குப் போகலாம்... வாங்க!
கடலில் கால் நனைத்தபடியே காலைத் தொடும் அலையை ரசித்தபடி உற்று நோக்குங்கள்.
அலை என்பது இறைவன் எங்கே இருக்கிறார் என்பதை உங்களுக்கு எளிதில் உணர்த்தும்!
10 நிமிடத்தில் எத்தனை ஆயிரம் அலைகள் தோன்றுகின்றன. கடல் என்பதும் அலை என்பதும் வெவ்வேறா? அலை என்று தனித்து ஏதும் இருக்கிறதா?
நிச்சயம் அலை என்ற ஒன்று தனித்து இல்லை!
அலை என்பது கடலின் வெளிப்பாடு! கடலின் வடிவம் அலை!
இறைவன் கடல் மாதிரியானவன். நாமெல்லாம் அலைகள். இறைவனின் வெளிப்பாடுகள்!
அலையாகிய நாம் இறைவனாகிய கடலைத் தேடிக்கண்டுபிடிக்க முயற்சிப்பது எத்துணை அறியாமை!
ஆண்டவனை கண்டுபிடித்து யுரேகா!!..யுரேகா! என்று ஆர்க்கிமிடீஸ் மாதிரி கண்டுபிடித்துவிட்டேன் எனக் களிப்புடன் இதுதான் கடவுள் என்று காட்டிவிட முடியுமா?
கடவுள் எங்கே இருக்கிறார் என்பதே அபத்தமான கேள்வி! எங்கும் வியாபித்திருக்கும் கடவுளை தேடிக்கண்டுபிடித்தல் நடக்கிற காரியமா? கடவுள் காணப்படவேண்டியவர் அல்ல.
கடவுள் உணரப்படவேண்டியவர்!
கடவுளை உணர ஒருநபர் என்ன செய்யணும்? கடவுளை உணர ஒரு நபர்க்கு எதுவெல்லாம் தடையாக இருக்கும்? அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்!
அன்புடன்,
ஹரிஹரன்
18 comments:
33200 டெஸ்ட் மெசேஜ்!
எக்ஸ்க்யூஸ் மீ, தயவுசெஞ்சி என்னை கூப்பிட்டிக்கிட்டு போய் கீழ்ப்பாக்கத்துலே அட்மிட் பண்ண முடியுமா? :-(
இந்தப் பதிவை தெரியாத்தனமா புல்லா படிச்சித் தொலைச்சிட்டேன்.
test message :-)
உணர்வுகள் இல்லை என்றால் எங்கு போகவேண்டும் என்பதை நமது சக பதிவாளரே சொல்லிட்டாரே!!
அன்பு ஹரிஹரன்,
நல்ல கருத்தாழமிக்க
பதிவு.இதே தங்கம் உதாரணத்தை, வாரியார் சுவாமிகள் வேறு ஒரு கேள்விக்கு பதிலாக கொடுத்துள்ளார்.
அந்த கேள்வி: இந்து மதத்தில் ஏன் இத்தனை கடவுள்கள்?
பதில்: தங்கம் வெவ்வேறு அணிகலன் களாக செய்யப்பட்டாலும்,அந்த அணிகலன்கள் வெவ்வேறு பெயர் கொண்டு அழைக்கப்பட்டாலும் ( உதாரணம் மோதிரம், வளையல், தோடு ) அதன் மூலப் பொருள் ஒன்றுதான் ( தங்கம்தான் ).
அதுபோல இந்துமதத்தில் பல கடவுள்கள் இருந்தாலும், அனைத்து கடவுள்களும் ஒரே மஹாசக்தியின் வெவ்வேறு வடிவங்கள்தான்.
அப்பறம் பதிவு எண் 1331131331நூற்றி முப்பத்து மூன்றுக்குப் பிறகு நூற்றி முப்பத்து ஐந்துக்கு வந்திட்டிங்க?.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.
கடவுளுக்கும் நகைக்கடைக்கும் என்னய்யா சம்பந்தம்? சுத்த மறை கழண்ட ஆளா இருப்பே போலருக்கே?
//எக்ஸ்க்யூஸ் மீ, தயவுசெஞ்சி என்னை கூப்பிட்டிக்கிட்டு போய் கீழ்ப்பாக்கத்துலே அட்மிட் பண்ண முடியுமா? :-(//
லக்கி,
பாவம் கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் சீனியர்ஸ்! எதுக்கு அவங்க நிம்மதியா இருக்கிறதைப் போய் ஏன் கெடுக்கணும்?
:-))
//உணர்வுகள் இல்லை என்றால் எங்கு போகவேண்டும் என்பதை நமது சக பதிவாளரே சொல்லிட்டாரே!!//
குமார்,
நீங்களும் உள்குத்து விளையாட்டில் தேறிவருகின்றீர்கள்? :-))
காமெடி பண்ணாதீங்க ஹரிஹரன்!
உங்களுக்கு நகைச்சுவை பதிவு நல்லா வரல!
வழக்கம்போல சீரியசா எழுதுங்க!
//(134) கடவுள் எங்கே இருக்கிறார்?!! //
வாங்க சேர்ந்து தேடுவோம்!
//test message//
one day message :-))))
முரளிதரன்,
வருகைக்கும் சுட்டலுக்கும் நன்றி! பதிவு எண்ணைத் திருத்திவிட்டேன்.
//சுத்த மறை கழண்ட ஆளா இருப்பே போலருக்கே?//
கருப்பு,
நான்மறை வேதங்கள், உலகப்பொதுமறை திருக்குறள் எனக் கற்று மறை கழண்டு விடாமல் இருக்க ஆவன செய்தபடியேதான் இருக்கிறேன் அய்யா!
இந்த மறைகள் பறை அறைந்து விடுதலை உண்மைகளை கருத்தில் கொள்ளாமல் இருக்கும்... சுத்தமா மறைகழண்ட ஆள் விடாதுகருப்பு தானுங்க!
----------
சுற்றிலும் நீலம் கடலின் நடுவே
இரண்டு மீன்கள் சந்தித்த வேளை
சிறிய மச்சம் கேள்வியை கேட்டது
கடலென சொல்லுதீர் அதெங்கே உள்ளது
தாயும் அதற்கான பதிலை சொன்னது
உன்னுள் உள்ளதும் நீ உலவி வருவதும்
யாதென கண்டாய் மூட மச்சமே
கடலிலே வாழ்கிறாய் உன் முடிவும்
கடலிலே முடியலாம்.. இருந்தும்
கடலது யாதென உணர ஏன் மறுக்கிறாய் ??
-------
//----------
சுற்றிலும் நீலம் கடலின் நடுவே
இரண்டு மீன்கள் சந்தித்த வேளை
சிறிய மச்சம் கேள்வியை கேட்டது
கடலென சொல்லுதீர் அதெங்கே உள்ளது
தாயும் அதற்கான பதிலை சொன்னது
உன்னுள் உள்ளதும் நீ உலவி வருவதும்
யாதென கண்டாய் மூட மச்சமே
கடலிலே வாழ்கிறாய் உன் முடிவும்
கடலிலே முடியலாம்.. இருந்தும்
கடலது யாதென உணர ஏன் மறுக்கிறாய் ??
-------//
வாங்க ஜீவ்ஸ்,
ஜீவனுள்ள கவிதை. எல்லா ஜீவன்களுக்குள்ளும் இருந்து இயக்குபவன் இறைவனே!
//காமெடி பண்ணாதீங்க ஹரிஹரன்!
உங்களுக்கு நகைச்சுவை பதிவு நல்லா வரல!
வழக்கம்போல சீரியசா எழுதுங்க!//
வாங்க கார்மேகராஜா,
டெஸ்ட் மேட்ச் , ஒன் டே மேட்ச் மெசேஜ்ன்னு பதிவுப்பொருளான சீரியஸ் மெசேஜை இப்படி சீரியஸா நகைச்சுவைன்னு சொல்லிட்டீங்களே சாமிகளா!
// நகைகள் அனைத்தும் தங்கத்தின் வடிவங்கள், இவை எல்லாம் தங்கம் என்ற ஒரு சொல்லில் அடங்கிவிடும்.
இறைவன் தங்கம் போன்றே இப்படிப் பல்வகை வடிவங்களில் காணப்படுகிறான். //
"நின்னின் பிரியா நிலையின் உளவோ
பொன்னின் பிறிதாகிய பொற்கலனே?"
என்ற கம்பன் கவியை மிக அழகாகப் பிரதிபலிக்கிறது உங்கள் விளக்கம்.
// இறைவன் கடல் மாதிரியானவன். நாமெல்லாம் அலைகள். இறைவனின் வெளிப்பாடுகள்! //
இதுவும் அற்புதமான உவமை. அத்வைத தத்துவ விளக்கங்களில் அடிக்கடி எடுத்தாளப் படும் உவமை இது.
// அலையாகிய நாம் இறைவனாகிய கடலைத் தேடிக்கண்டுபிடிக்க முயற்சிப்பது எத்துணை அறியாமை! //
// கடவுள் காணப்படவேண்டியவர் அல்ல.
கடவுள் உணரப்படவேண்டியவர்! //
அருமை. வேறான ஒன்றைத் தான் வெளியே போய்த் தேடவேண்டும்.
அலை என்பதே கடல் அல்ல, ஆனால் அது கடலில் இருந்து வேறானதும் அல்ல. இதை ஆழ்ந்த மெய்யுணர்வில் அறிதல் அத்வைதம்.
"ஸாமுத்ரோபி தரங்க:
க்வசன ஸமுத்ரோ ந தாரங்க:"
சங்கரரின் 'ஷட்பதி ஸ்தோத்திரம்' என்ற நூலில் உள்ள ஆழமான வரி இது! உங்களுக்கு சம்ஸ்கிருதம் தெரியும் என்பதால் இதை இன்னும் நன்றாக அனுபவிக்கலாம்..
Post a Comment