Thursday, March 08, 2007

(130) இந்து தரும முருக பக்தர்கள் மன்னிக்கவும்!

அரசியல் திரா"விட"ப் பகுத்தறிவுகளுக்கு பதில் என்பதை விட இந்து தரும வழி நடக்கும் ஆன்மீக அன்பர்களுக்கு மன அதிர்வைத் தரும்படியான வகையில் அமைந்துவிட்ட முருகக் கடவுள் குறித்த பகுத்தறிவு வழியிலான பார்வைக்கோணத்தில் எழுதப்பட்ட முந்தைய பதிவு "உறைய வைக்கப்பட்டு" திரும்பப் பெறப்படுகிறது. பார்வையாளர்களது பார்வையிலிருந்தும் அப்ப பதிவு நீக்கப்படுகிறது எனத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கந்தசாமிக் கடவுளிடமும் சனாதன இந்து தருமத்தின் படி நடக்கும் கந்தனின் பக்தர்களிடமும் மன அதிர்வு ஏற்படுத்தும் விதத்தில் சென்ற பதிவிட்டதற்காக நிபந்தனை அற்ற மன்னிப்பைக் கோருகிறேன்.

சுட்டிக்காட்டி இடித்துரைத்த ஆன்மீக அன்பர்க்கு என் நன்றிகள் பல.

முருகா! உடன் இருந்து உடனே வழிகாட்டி என் தவறைத் திருத்திய வடிவேலா! கந்தசாமிக் கடவுளே! உன் கருணையே கருணை!

13 comments:

Hariharan # 26491540 said...

டெஸ்ட் மெசேஜ்!

ஜடாயு said...

ஹரிஹரன், அந்தப் பதிவைப் பார்த்து அதை நீக்கக் கோரவேண்டும் என்று இருந்தேன். ஆனால் அதற்கு முன் நீங்களே தூக்கி விட்டீர்கள்.

உங்கள் உயர் பண்பையும், ஆன்மிகப் பக்குவத்தையும் இது காட்டுகிறது. மிக்க நன்றி.

கார்மேகராஜா said...

அரை நாள் இந்த பக்கம் வரலைனா என்ன நடக்குதுனே புரியமாட்டேங்குது.

லக்கிலுக் said...

ஹரிஹரன்!

உங்க கூத்துக்கும், கும்மிக்கும் அளவே இல்லையா? :-))))))))

உங்கள் பதிவுக்கு வரும் திரா"விட" பெத்தடின்கள் யாருமே ஆவேசமாகவோ, உங்களிடம் வாதாடவோ வரவில்லை. அது வீண் என்று எங்களுக்கு ஏற்கனவே தெரியும் :-))))

Mind reliefக்காகவே பலரும் வருகிறோம்.. எங்களை ஏமாற்றாமல் வழக்கம்போல ஜாலியாக பதிவிடுங்கள் ப்ளீஸ்.....

வரவனையான் said...

உண்மையில் வேதனைப்பட்டேன் அந்த பதிவை பார்த்து

லக்கிலுக் said...

தலை!

எங்கே என் பின்னூட்டம்?

Pot"tea" kadai said...

பின்னிட்டீங்க தல...
சூப்பர் பதிவு...உங்களோட உயர் பம்பு எந்த திரா"விட"ங்களுக்கும் கிடையாது.

இங்கே அனுமார் ஆட்டம் ஆட அனுமதி உண்டா?

அமுக
அவுசுதிரேலியா

Pot"tea" kadai said...

எக்ஸாம் பேப்பர்.

கோபி(Gopi) said...

நீங்க "முருகக் கடவுள் குறித்த பகுத்தறிவு வழியிலான பார்வைக்கோணத்தில் எழுதப்பட்ட முந்தைய பதிவு"ல என்ன எழுதியிருந்தீங்களோ எனக்குத் தெரியாது.

ஆனா இப்போது இந்து மதக் கடவுளாக கருதப்படும் முருகனின் மதம் (வைணவம்/சைவமெல்லாம் மதங்களாய் இருந்த சமயத்தில்) 'கௌமாரம்'.

தமிழ் வலைப்பதிவிலுள்ள "முருக பக்தர்கள்" யாருமே கௌமாரம் பத்தி ஏன் பேசமாட்டேங்கறாங்க... அவங்களுக்கே இது பத்தி தெரியலையா இல்லை வேறெதாவது சிறப்புக் காரணமான்னு தெரியலை.

ராஜநாகம் said...

ஒண்ணுமே புரியலே ஒலகத்துலே
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது

Hariharan # 26491540 said...

//தமிழ் வலைப்பதிவிலுள்ள "முருக பக்தர்கள்" யாருமே கௌமாரம் பத்தி ஏன் பேசமாட்டேங்கறாங்க... அவங்களுக்கே இது பத்தி தெரியலையா இல்லை வேறெதாவது சிறப்புக் காரணமான்னு தெரியலை.//

வாருங்கள் கோபி,

என்னைக் கேட்டால் எனக்கு கௌமாரம் பற்றி அதிகம் தெரியாது எனவே அமைதி. ஜிரா, எஸ்கே குமரன் போன்றவர்கள் இது பற்றி எழுதலாம். அவர்கள் ஏன் எழுதவில்லை என நான் அறியேன்.

SK said...

s.k. என்ற பெயரில் நீங்கள் இட்டிருக்கும் பின்னூட்டம் நான் இட்டதில்லை என்பதை அனைவர்க்கும் சொல்லிக் கொள்கிறேன்.

வழக்கம் போலவே முறையாகச் சோதிக்காமல், எனக்கு பதிலிட்டிருக்கிறீர்கள் என்பதால் சொல்ல வந்தேன்.

நன்றி.

Hariharan # 26491540 said...

//s.k. என்ற பெயரில் நீங்கள் இட்டிருக்கும் பின்னூட்டம் நான் இட்டதில்லை என்பதை அனைவர்க்கும் சொல்லிக் கொள்கிறேன்.

வழக்கம் போலவே முறையாகச் சோதிக்காமல், எனக்கு பதிலிட்டிருக்கிறீர்கள் என்பதால் சொல்ல வந்தேன்.//

எஸ்கே சார்,

நீங்கள் சுட்டிய பின்னூட்டத்தையும் அதற்கான பதில் பின்னூட்டங்களையும் நீக்கிவிட்டேன்.

உங்கள் பெயருமா இப்படிக் கும்மியடிப்பில் இழுக்கப்படுகிறது:-((