(126) அய்யன் திருவள்ளுவரின் இரட்டை நாக்கு
இணையம்-வலைப்பூ-பதிவுகள் வழியாக தமிழகத்தின் அரசியல் திரா"விட" பகுத்தறிவு எனக்கும் பீடித்ததில் உலகப்பொதுமறையாம் திருக்குறள் அளித்த அய்யன் திருவள்ளுவரின் அதிகார இரட்டை நாக்கு சில அதிகாரங்களில் எனக்குப் புலப்பட்டது.
எனது கடவுள் நம்பிக்கையும், இறை வழிபாடும் துணையாக வந்ததால் நல்லவேளையாகத் நான் தப்பிப் பிழைத்தேன்!
380. ஊழின் பெருவலி யாஉள மற்றுஒன்று
சூழினும் தான்முந் துறும்.
விளக்கம்: விதியினும் வலிமை மிக்கது ஏதும் உண்டோ? மனிதனுடைய முயற்சியினும் வலிவுடையது விதி என்கிறார் அய்யன் திருவள்ளுவர்.
What power surpasses fate? Its will 380
Persists against the human skill.
620. ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.
விளக்கம்: சோம்பல் விடுத்து முயற்சியால் உழைத்துக் களைப்பவர்கள் விதியையும் பின்னுக்குத் தள்ளிவிடுவர் என்கிறார் திருவள்ளுவர்.
Tireless Toiler's striving hand 620
Shall leave even the fate behind.
அய்யன் திருவள்ளுவரின் அப்பட்டமான மோசடியைப் பார்த்தீர்களா? தனது 380வது குறளில் விதிதான் வலியது என்றும், மனித முயற்சியை முறிக்கும் வல்லமை கொண்டது விதின்னு விதிக்கு துதி பாடிவிட்டு அய்யன் திருவள்ளுவர் 620வது குறளில் அந்தர்பல்டி அடித்து சோம்பித்திரியாது உழைத்தால் அவர் பின் ஓடி ஒளிந்து கொள்ளும் விதி என்கிறார்.
அரசியல் திரா"விடம்" பேசும் பகுத்தறிவுகளின் பகவத் கீதை ஆராய்ச்சி-அனாடமி-டிசெக்சன் என்பதன் படி பகவத் கீதை என்பது பார்ப்பனீய வர்ணாசிரமத்தை நிறுவி, பதவி, அரசுக்காக கொலை செய்யத் தூண்டும் நூலை கிருஷ்ணன் சொன்னான் எனும் அளவுகோல் வைத்து அளந்தால் அய்யன் திருவள்ளுவர் அய்யோ என்று திரு திருன்னு வல்லமை இழந்து பேசா நா இரண்டுடையாய் போற்றி-க்குத் தகுதி உடையவர் ஆகிறார் இல்லையா?
திரா"விட" பகுத்தறிவுக்கு ஸ்டிரிக்ட்டாக "கெட் அவுட்" சொல்லி ஒருவன் தனது இயல்பான பொது அறிவோடு திருக்குறளைப் படித்தால் திருவள்ளுவர் சொல்வது புரியும். விதியை யாருக்கு, எப்போது, எந்தச் சூழலில் சொல்கிறார் என்றும் புரியும்.
380வது குறளில் தன்னால் இயன்ற எல்லாவிதமான முயற்சிகளும் முயன்று செய்துவிட்டும் தோல்வியைத் தழுவிகிற சூழலில் அய்யன் திருவள்ளுவர் அவனைத் தோளில் தட்டிக்கொடுத்து " அய்யா மனித முயற்சியினும் விதி பெரியதல்லவா" என்று தேறுதல் சொல்வது புரியும்.
620வது குறளில் காலை 10மணி வெயில் முகத்தில் விழத் தூங்கி வழிந்து சோம்பிச் செயல் பட்டுவிட்டு தோல்வியைச் சந்திக்கும்போது எல்லாம் என் தலைவிதி என்று சொல்பவனுக்கு அய்யன் திருவள்ளுவர் அதிரடியாகச் "சோம்பலின்றி, உழைத்துக் களைத்துச் செயல்படுபவனாயிரு...விதி உன்பின்னே ஒளிந்து கொள்ளும் என்று கடிந்து கொண்டு சொல்கிறார் என்பது பொது அறிவோடு நோக்கினாலே புரியும்.
வள்ளுவர் இருவிதமாக விதியைப் பற்றிச் சொன்னது என்பது குணாதிசயங்களால் வேறுபட்டு அதனால் வேறு வேறு மனோநிலைகள் கொண்ட மனிதர்களின் முற்றிலும் வேறுபட்ட செயல்பாடுகளை முன்கூட்டியே நினைவில் இருத்தி அவரவர்க்கு உகந்ததைப் பின்பற்றி மேம்படவேண்டும் என்பதாலேயே.
அரசியல் திரா"விட"ப் பகுத்தறிவோடு , பகவான் கிருஷ்ணன் -பகவத்கீதை வர்ணாசிரமம் போதிக்கும் கொலைநூல் மட்டையடி அளவுகோல் கொண்டு அளந்து அய்யன் வள்ளுவர் தன் திருக்குறள் மூலம் கர்ணம் / அந்தர்பல்டியடித்து ரெட்டைநாக்கு காட்டியிருக்கிறார் என்போமா?
ஈவெரா தந்த பகுத்தறிவும்- உலகப் பொதுமறை திருக்குறளும் உலகத் தமிழனின் இருகண்கள்.
உலகப்பொதுமறை படித்து அறிய பொது அறிவு போதும். மறை கழன்று அவதிப்பட வேண்டும் என்றால் பகுத்தறிவை நாடவும். :-))
அன்புடன்,
ஹரிஹரன்
6 comments:
டெஸ்ட் மெசேஜ்!
எப்பிடித்தான் இப்பிடி டிசைன் டிசைனா கண்டு பிடிக்கிறீங்களோ :)))
இதுக்குன்னு தனியா உக்காந்து யோசிப்பீங்களோ ??
எக்ஸ்க்யூஸ்மி மிஸ்டர் சொறியண்ணா,
மனு சொன்னது வேதம் சொன்னது என்று சொல்லி மக்களுக்குள் நால்வகை வர்ணங்களை வலியப் புகுத்தி மக்களை கீழ்ப்படுத்தி அழகு பார்த்துவிட்டு இன்றைக்கு இடஒதுக்கீடு என்று வரும்போஒது கையைக் காலை உதைத்துக் கொண்டு அழுகின்றனரே பார்ப்பனர்கள்?
அதுக்கு என்ன சொல்றீங்கன்னா?
ஹரி,
அநியாயத்துக்கு உங்களுக்கு பெரிய மனசு. சம்பந்தா சம்பந்தமில்லாம பின்னூட்டம் போட்டாக் கூட அதையெல்லாம் publish பண்றீங்களே. கேட்ட கேள்விக்கு பதில சொல்லுன்னா, எதிர் கேள்வியாம்?
அய்யோ, அய்யோ
//மனு சொன்னது வேதம் சொன்னது என்று சொல்லி மக்களுக்குள் நால்வகை வர்ணங்களை வலியப் புகுத்தி மக்களை கீழ்ப்படுத்தி அழகு பார்த்துவிட்டு இன்றைக்கு இடஒதுக்கீடு என்று வரும்போஒது கையைக் காலை உதைத்துக் கொண்டு அழுகின்றனரே பார்ப்பனர்கள்?//
ஜெண்டில்மேன் கருப்பு,
//எக்ஸ்க்யூஸ்மி மிஸ்டர் சொறியண்ணா//
கருப்பு நீங்கள் ஏதோ பெரிய கம்யூட்டர் பிஸ்தா என நினைத்தால் இப்படி சொறி, சிரங்கு என்று பேசி கடைசியா நீங்கள் மெடிமிக்ஸ் சோப்பு விற்கும் நபர் எனக் காட்டிவிட்டீர்களே.
சரி அதை விடுங்கள். பார்ப்பனர் வர்ணம் புகுத்தினர் என்று பாசறை முழக்கத்தை விடுத்து வேறு ஆதாரம் இல்லை.
இட ஒதுக்கீடு இங்கே பதிவுக்குச் சம்பந்தமானதாக இருக்கிறதா?
ஹரிஹரன், மிகத் தெளிவான பார்வையுடன் இதை விளக்கி உள்ளீர்கள். நன்று.
பார்ப்பதற்கு முரண் போன்று தோன்றினாலும் ஓட்டைகள் இல்லாத விஷயம் இது.
கம்பனும் ராமாயணத்தில் ஓர் இடத்தில் "விதியின் பிழை, நீ இதற்கென்னை வெகுண்டதென்றான்" (ராமன் இலக்குவனின் கோபம் பார்த்துக் கூறுவது). இன்னும் ஓர் இடத்தில் ராமனை "மேல் நின்ற விதிக்கு நாயகன்" (அங்கதன் தூது) என்று சொல்வான். நீங்கள் தந்த அதே விளக்கம் இங்கும் பொருந்தும்.
Post a Comment