Monday, March 05, 2007

(128) பூணூல் அணிவது சாதி அடையாளமா?

பூணூல் என்பது பிராமணர்கள் மட்டுமே அணிவது சாதித் திமிர் காரணத்தால் தானே?

பூணூல் எனும் 8ம் நம்பர் நூல் அணிவதால் மட்டுமே ஒருவர் சமூகத்தில் உயர்ந்தவரா?

இந்து தருமத்தைப் பேணுபவர்கள் ஏன் பூணூல் அணிய வேண்டும்?

இந்துக்களில் பெரும்பான்மையாகப் பிராமணர்கள் மட்டும் தொடர்ச்சியாகப் பூணுல் அணிவது ஏன்?

இப்படிப் பூணூலைச் சுற்றி சுற்றப்பட்ட கேள்வி நூல்கள் சிக்கலான நூல்கண்டு மாதிரி இன்றைக்குக் காணப்படுகிறது.

கேள்வி-1: பூணூல் பிராமணர்கள் மட்டுமே அணிய வேண்டியதா?

பதில்: இல்லை. இந்து தருமத்தினைப் பின்பற்றும் அனைவரும், ஆண், பெண் பால் வேறுபாடு இன்றி அணியப்பட வேண்டியது பூணூல். வேத காலத்தில் அப்படியே அனைவரும் அணிந்திருந்தனர்.

கேள்வி-2: பூணூல் ஏன் பிராமணர்களிடையே மட்டுமே அணியும் வழக்கமாக இருக்கிறது?

பதில்: இது ஈவெரா ஏற்படுத்திய குழப்பத்தால் ஏற்பட்ட நிலை. பிராமணர்கள் ஆசிரியராகவும், இறைப்பணியிலும் இருந்த அந்தணர்கள் ஈவெராவினால் விழைந்த குழப்பத்தில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நமது பாரம்பரியத்தை இன்னும் இறந்த பாரம்பரியமாக மியூசியம் சென்று விடாமல் காக்கின்றனர். செட்டியார், ஆசாரியார் என பிராமணரல்லாதவர்களும் பூணூல் அணிகின்றனர்.

கேள்வி-3: பூணூல் எனும் அடையாளம் சொல்வது என்ன?

பதில்: பூணுல் என்பது மூன்று நூல் ஒரு முடிப்பில் முடிந்தாக அமைப்பில் காணப்படுகிறது. இந்த முடிப்பு பிரம்ம முடி என்று அழைக்கப்படும். பிரிக்கவே முடியாத முடிப்பு எனச் சொல்லப்படும். முடிக்கப்பட்ட இந்த மூன்று நூல் கயிறுகள் உபநயனத்தின் போது அணிவிக்கப்படுபவருக்கு அவரால் தப்பிக்க முடியாத, மூன்று பிரிக்கமுடியாத சமூக பந்தங்களையும், அதற்குச் செய்நன்றி காட்டவேண்டிய கடமையையும் அந்த நபர்க்கு உணர்த்துவது.

பூணூலின் முதல் நூல் கயிறு: வேதம், உபநிடம், வாழ்வியல் நெறி, தருமங்களை உபதேசித்த பல்வேறு ரிஷி, முனிவர்கள், ஆசிரியர்களுக்குச் செலுத்தப்பட வேண்டிய நன்றியை மறக்காமல் நினைவு படுத்துவது. குருபரம்பரைக்கு ஒரு நபர் செலுத்தவேண்டிய நன்றியைக் குறிப்பது.

பூணூலின் இரண்டாம் நூல் கயிறு: தான் தோன்றக் காரணமான தனது முன்னோர்களை, வளர்த்து ஆளாக்கிய பெற்றோரையும் அவர்க்குச் செய்ய வேண்டிய நன்றிக்கடனையும் நினைவு படுத்துவது. குலப்பரம்பரைக்கு ஒரு நபர் செலுத்தவேண்டிய நன்றியைக் குறிப்பது.

பூணூலின் மூன்றாம் நூல் கயிறு: தான் வாழ உதவும் தேவதைகளான (இயற்கை) நீர், நிலம், காற்று,சூரியன், ஆகாயம், எனும் பஞ்சபூதமாகிய தேவதைகளுக்கு ஒரு நபர் செலுத்த வேண்டிய நன்றியை நினைவு படுத்துவது.

இந்த மூன்று விதமான நன்றிக் கடன்களை ஒருவன் எப்படித் திருப்பிச் செலுத்த வேண்டும்?

குருபரம்பரைக்கான நன்றிக்கடனை அவர்கள் அருளிய வேதம், வாழ்வியல், உபநிடத்தத்துவங்களைக் கற்று அறிந்து சமூகத்தில் தன்னைச் சுற்றி இருக்கும் பிறரோடு அந்த அறிவைப் பகிர்ந்து கொண்டு வழி வழியாக இந்த நல்ல நெறிகள் தழைக்க தானும் இரு கருவியாகப் பயன்படுவதன் மூலம் குரு பரம்பரைக்கான நன்றி திருப்பிச்செலுத்தப்படுகிறது.

குலப் பரம்பரைக்கான நன்றிக்கடனை முன்னோர்கள், பெற்றோர் நற்சொல்ல்லுக்குக் கட்டுப்பட்டு நடத்தல் மூலமும், முறையான வகையில் தன் சந்ததியைப் பெருக்குவதன் மூலமும் சமூகத்தில் நெறியான வாழ்வு வாழ்ந்து காட்டுதல் மூலமும் கருவியாக ஒருவன் செயல்படுவதன் மூலம் திருப்பிச் செலுத்தப்படுகிறது.

மூன்றாவதான தேவதை (இயற்கை) களுக்கான நன்றிக்கடனை நதி, குளம், ஏரி என நீரை, ப்ராண வாயு நிறைந்த காற்றை, பூமியை, ஆகாசத்தை, நெருப்பு சக்தியை அசுத்தப்படுத்தாமல் பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கு நீர், நில, காற்று, வெளி,வளங்கள் பயன்பாட்டுக்கு இருக்கும் வண்ணம் வனம் அழிக்காது மரம் வைத்து என பஞ்ச பூத தேவதைகளிடமிருந்து தான் பெற்று வாழ்ந்ததை தான் உருவாக்கிய அடுத்த தலைமுறை அதே செறிவோடு பயன்படுத்த தர ஒருவன் தன்னைக் கருவியாக்கிச் செயல்படுவதால் தேவதைகளுக்கான நன்றிக்கடன் திருப்பிச் செலுத்தப்படுகிறது.

ஆக பூணூல் அணிவது எனும் சடங்கு மூலம் பாலகனாக இருக்கும் ஒரு சிறுவனுக்கு அவனுக்கான கடமைகள் என்ன என்பதை எடுத்துரைக்கும் நிகழ்வான உபநயனத்தில் பாலகன் எனும் பிறப்பு முடிந்து இந்தச் சமூகக் கடமைகள் கற்பிக்கப்பட்டு ஒருவன் புதிய பிறப்பு எய்துகிறான்.

பூணூல் என்பது சாதி அடையாளம் என்று அறியப்பட்டிருப்பது கேவலமான திரிபு.

மெய்யாகப் பூணூல் என்பது ஒரு நபரின் சமூகக் கடமையை தினமும் நினைவூட்டும் இந்து தருமப்படியிலான அணியக்கூடிய செயல்பாட்டு ரிமைண்டர்.

காயத்ரி மந்திரம் என்பது ஒருவனுக்கு சீர்தூக்கிப்பார்க்கும் சிந்தனையை, அறிவைத் தரும்படி சூரியக்கடவுளிடம் வேண்டும் மந்திரமே. சிந்தனை செறிவோடு இருந்தால் தான் கடமைகள் செவ்வனே சமுதாயத்தில் ஆற்ற முடியும்.

ஏழுமுதல் பதிமூன்று வயதுக்குள் உப நயனம் செய்யப்பட வேண்டும் ஒரு நபருக்கு. ஏழு வயதில் போட்ட பூணூல் அப்படியே இருந்துவிட முடியாது. உடல் வளர்ச்சியாலும், நூல் பழையதாவதாலும் உபநயனம் நடத்திப் போட்ட பூணூலைக் கழற்றி எறிந்து விட்டு பூணூல் அடையாளமாக நினைவூட்டும் கடமைகளை மறந்து விடக்கூடாது என்பதால் ஆவணி அவிட்டம் என்று வருடம் ஒருநாள் பூணூல் மாற்றி அதன் மூலம் ஒருவன் தனக்குப் புகட்டப்பட்ட கல்விவழி அறிந்த கடமைகள், நன்றிக்கடன் திருப்பிச் செய்தலை நினைவில் புதுப்பித்துக் கொள்கிறான்.பூணூலின் மூன்றாம் நூல் நன்றிக்கடன் திருப்பிச் செலுத்தல் என்பதில் ஓசோன் படல ஓட்டை, கியாட்டோ புரோட்டோகால், க்ரீன் ஹவுஸ் வாயுக்கள், க்ளோபல் வார்மிங், கூவம், அடையாறு நதிகள் சாக்கடை ஆக்கம், பொதுவில் எங்கும் சிறுநீர் கழிப்பது, ரயில்வே டிராக் பக்கம் எங்கும் மலம் கழிப்பது, சென்னைக் காற்றில் கார்பன் துகள்கள், முகமூடி, முழுநீளக்கையுறைத் தேவைகள் என பஞ்சபூதங்களை சுயநலமாக நசித்து அடுத்த தலைமுறைக்கு பஞ்சபூதங்களின் பஞ்சம் பூதாகாரமாக ஆக்கிய சுயநலமனிதச் செயல்பாடுகள் உள்ளடங்கி இருப்பது சனாதன தருமம் எவ்வளவுக்கு இயற்கையைத் துதித்துப் பாதுகாக்கச் சொல்லுகின்ற மிக உயர்ந்த சுற்றுச்சூழல் புரோட்டோகால் என்பதைத் தெளிவுபடுத்தும்.

ஆக பூணூல் என்பது இந்து தருமத்தைப் பின்பற்றும் எல்லோராலும் பாகுபேதமின்றி அணியப் படவேண்டியது. சனாதன தருமப் பாரம்பரியம் என்பது சரியாகப் புரிந்து கொள்ள ஒவ்வொருவரும் அவரால் ஆன முயற்சிகளைச் செய்யவேண்டும்.

ஆக ஆவணி அவிட்டம் ஒரு பண்டிகையா? பூணூல் 8ம் நம்பர் நூலுக்கு இவ்வளவு மரியாதையா? என்றெல்லாம் சவுண்டு விடும் பகுத்தறிவுகளுக்கு : ஆவணி அவிட்டம் உண்மையில் உலக அளவில் கொண்டாடப்பட வேண்டிய சமூக வாக்குறுதி நினவூட்டல் திருவிழா!

எனவே அனைவரும் வாருங்கள்... இந்து தருமத்தில் இருப்போர் அனைவரும் பூணூல் அணிவோம்... புவனம் காப்போம்! இந்து தருமப்படியான "ஆச்சாரியர்-முன்னோர்-சுற்றுச்சூழலுக்கான தேங்க்ஸ் கிவிங் டே"ஆன ஆவணி அவிட்டம் கொண்டாடுவோம்!

குறிப்பு:
ஏதோ என்னாலான வகையில் நான் நமது சனாதன தருமத்தினை உரைத்த குருபரம்பரைக்குப் பட்ட நன்றிக்கடன் திருப்பிச் செலுத்துவதாக நான் கற்ற உயரிய இந்து தரும அறிவைத் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:-))


அன்புடன்,

ஹரிஹரன்

19 comments:

Hariharan # 26491540 said...

டெஸ்ட் மெசேஜ்!

லக்கிலுக் said...

ஈ.வெ.ரா. தோன்றுவதற்கு முன்னால் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் பூணூல் அணிந்து ஓஹோவென வாழ்ந்தார்கள் என்ற உண்மையை உங்கள் பதிவு கண்டு அறிந்து மகிழ்ந்தேன்.

நன்றி!!!!

வடுவூர் குமார் said...

சரியான விளக்கம்- ஹரி.
நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்.

Hariharan # 26491540 said...

ஈவெரா தோன்றி, சீர்திருத்திய பின்னும் இன்றும் இவர்கள் மலம் திண்ண வைக்கப்படுகிறார்கள், பம்பு செட் ரூம்களில் வன்புணரப்படுகிறார்கள், என்பதையும் அறிவீர்கள் என நம்புகிறேன்.

இது எல்லாமுமே ஆங்கிலேய, இசுலாமியர்களால் 1200 ஆண்டுகளில் வாழ்வியல் ஊடுருவி வந்த சீர்கேடுகள். அப்பட்டமான Might is Right & Divide and Rule என்கிற ஆதிக்கக் கொள்கை, கோட்பாடுகளால் வந்தவை!

சனாதன இந்து தருமம் இவை என கருதுபவர்கள் சனாதனத்தை முறையாகப் படித்தல் அவசியம்.

லக்கிலுக் said...

//இது எல்லாமுமே ஆங்கிலேய, இசுலாமியர்களால் 1200 ஆண்டுகளில் வாழ்வியல் ஊடுருவி வந்த சீர்கேடுகள்.//

இஸ்லாமிய, ஆங்கிலேயே ஊடுருவலுக்கு முன்னால் எல்லோருமே பூணூல் அணிந்திருந்தோம் என்பது அறிந்து மகிழ்ச்சி!!!

கோவி.கண்ணன் said...

//பம்பு செட் ரூம்களில் வன்புணரப்படுகிறார்கள்,//

ஹரி,
பருத்திவீரன் படம் பார்த்துட்டிங்க போல இருக்கு !
:)

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

//இந்து தருமத்தினைப் பின்பற்றும் அனைவரும், ஆண், பெண் பால் வேறுபாடு இன்றி அணியப்பட வேண்டியது பூணூல். வேத காலத்தில் அப்படியே அனைவரும் அணிந்திருந்தனர்.//

சனாதன தருமத்தைக் காத்துக் கொண்டு இருக்கும் நல்லவர்களின் குடும்பங்களில் பூணூலும்,காயத்ரி மந்திரமும் இன்றும் நடந்து கொண்டுதான் உள்ளது.இவர்களால்தான் உலகம் இன்னும் அழியாமல் உள்ளது.

ஏற்கனவே பூணூல் போட்டு மந்திரம் சொல்லி வாழும் இத்தகைய நல்லவர்கள் முதலில் அவர்களின் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும் பூணூல் அணிவித்து , அவர்களுக்கும் சமூக பந்தம், அதற்குச் செய்நன்றி காட்டவேண்டிய கடமையையும் உள்ளது என்று அறிவுறுத்தவும்.

இவ்வாறாக, ஏற்கனவே ஆண்கள் மட்டுமே பூணூல் அணியும் குடும்பங்களில் உள்ள பெண்களும் பூணூல் அணிந்த பிறகு, மற்ற சாதி,மத மக்களும் சனாதன தருமத்தைக் காக்க பூணூல் அணியலாம்.

என்ன சொல்றீங்க ஹரிகரன்?

OSAI Chella said...

Brahmanas should not go abroad~ is my next sanathana topic my dear NRI poonoolaar!

Hariharan # 26491540 said...

//சனாதன தருமத்தைக் காத்துக் கொண்டு இருக்கும் நல்லவர்களின் குடும்பங்களில் பூணூலும்,காயத்ரி மந்திரமும் இன்றும் நடந்து கொண்டுதான் உள்ளது.இவர்களால்தான் உலகம் இன்னும் அழியாமல் உள்ளது.//

நன்றி கல்வெட்டு இந்தப் பாராட்டை ஏற்புடையதே!

//ஏற்கனவே பூணூல் போட்டு மந்திரம் சொல்லி வாழும் இத்தகைய நல்லவர்கள் முதலில் அவர்களின் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும் பூணூல் அணிவித்து , அவர்களுக்கும் சமூக பந்தம், அதற்குச் செய்நன்றி காட்டவேண்டிய கடமையையும் உள்ளது என்று அறிவுறுத்தவும்.

இவ்வாறாக, ஏற்கனவே ஆண்கள் மட்டுமே பூணூல் அணியும் குடும்பங்களில் உள்ள பெண்களும் பூணூல் அணிந்த பிறகு, மற்ற சாதி,மத மக்களும் சனாதன தருமத்தைக் காக்க பூணூல் அணியலாம்.//

பெண்கள் வேதம் கற்பதோ, வேதம் ஓதுவதோ கூடாது என்கிற திரிபுவை எனது தலைமையில் என் வீட்டில் பெண்கள் வேதம் கற்று ஓதுவதை நடைமுறைப் படுத்தி வருகிறேன்.

பஞ்ச் டயலாக் பேசாமல் என்னால் இயன்ற அளவில் சனாதனத்தில் திரிக்கப்பட்டு பாகுபாடுபேதம் என்று விகாரமாகி இருப்பதை எனது குடும்பத்தில் முதலில் திருத்தத்தை எடுத்து வருகிறேன்.

சொல்வதற்கும்- செய்வதற்குமான இடைவெளியை என் அளவில் முதலில், அடுத்து என் குடும்ப அளவில் என கவனமாக முயற்சித்துக் குறைக்க தினமும் முற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறேன் திரு. கல்வெட்டு அவர்களே.

முத்துகுமரன் said...

//சொல்வதற்கும்- செய்வதற்குமான இடைவெளியை என் அளவில் முதலில், அடுத்து என் குடும்ப அளவில் என கவனமாக முயற்சித்துக் குறைக்க தினமும் முற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறேன் திரு. கல்வெட்டு அவர்களே.//

நல்லது ஹரி. இப்பிடி சுத்தி வளைக்காமால் உங்க வீட்டு பெண்களுக்கு பூணுல் போட்டு விட்டு இருக்கீங்களானு சொல்லுங்களேன். கல்வெட்டுவின் கேள்வியும் அதுதான்.

Hariharan # 26491540 said...

//இப்பிடி சுத்தி வளைக்காமால் உங்க வீட்டு பெண்களுக்கு பூணுல் போட்டு விட்டு இருக்கீங்களானு சொல்லுங்களேன். கல்வெட்டுவின் கேள்வியும் அதுதான்.//

முத்துக்குமரன் வாங்க.

எனக்குத் திருமணமாகி நான் எனது குடும்பத்துக்குத் தலைவனாகி சில வருடங்கள் தான் ஆகிறது. என்வீட்டு அடுத்த தலைமுறை பெண் குழந்தைகளுக்கு பூணூல் போட இன்னும் பல ஆண்டுகள் செல்ல வேண்டும்.

பெண்ணுக்கு நடைமுறையில் தோளில் தொடங்கி நெஞ்சுக்குக் குறுக்காக பூணூலாக அணிவதில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு கழுத்தில் ஆரமாக அணியும் விதத்தில் பூணூலை அணிவிக்கலாம் என்பது எனது பரிசீலனையில் இருக்கிறது.

பூணூலை எப்படி அணிவது என்பதை விட பூணூல் அணிவது திரும்பத் துவங்க வேண்டும் என்று எண்ணுகிறேன்! சமூக பந்தங்கள் சனாதன தருமப்படி நினவூட்ட ஆவன செய்யப்படும்.

இந்த விளக்கம் போதுமா? முத்துக்குமரன்+ கல்வெட்டு?

லக்கிலுக் said...

அய்யகோ!

பூணூலரிக்குதே.... சாரி... புல்லரிக்குதே....

murali said...

ஹரிஹரன்,
பல விஷயங்களை தெளிவு
படுத்தி உள்ளீர்கள்.பதிவுக்கு நன்றி.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

விடாதுகருப்பு said...

உங்க வீட்டுப் பெண்களுக்கு பூணூல் அணிவிக்கும்போது சொல்லுங்க. கண்டிப்பா வந்து பார்க்கிறோம்!

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

ஹரிஹரன்,
//பூணூலை எப்படி அணிவது என்பதை விட பூணூல் அணிவது திரும்பத் துவங்க வேண்டும் என்று எண்ணுகிறேன்//

பூணூல் எப்படி அணிய வேண்டும் என்பதைவிட அது தேவையா எனபதுதான் முக்கியம்.பூணூல் போட்டுத்தான் சமூகக்கடமைகளையும் பிற நல்லவைகளையும் செய்ய முடியும் என்று நீங்கள் எண்ணினால் அது உங்கள் உரிமை.

மனிதனாக வாழ்வதற்கு இந்த அடையாளங்கள் தேவை இல்லை என்பது என் கருத்து.

**
//பெண்ணுக்கு நடைமுறையில் தோளில் தொடங்கி நெஞ்சுக்குக் குறுக்காக பூணூலாக அணிவதில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு கழுத்தில் ஆரமாக அணியும் விதத்தில் பூணூலை அணிவிக்கலாம் என்பது எனது பரிசீலனையில் இருக்கிறது.//

:-))

இதெல்லாம் கொஞ்சம் ஓவர். ஏற்கனவே பல அடையாளங்களை மதமும், ஆணீய அதிகார வர்க்கமும் பெண்களின் மீது பல கலாச்சார அடையாளங்களைத் அள்ளித் தெளித்து உள்ளது.

பொட்டு,தாலி,பர்தா,முக்காடு,விளையாடும் போது சானியாவுக்கு டவுசர் தேவையா.... போன்ற பல..

இப்போது புதிதாக இன்னொன்று கழுத்தில்.... :-(((

அது ஏன் பெண்களுக்கும் மட்டும் எல்லா அடையாளங்களும் வெளியில் தெரியும் வண்ணம் இருக்க வேண்டும் என்று ஒரு ஆண் சிந்திக்கிறான்?

தாலி- ஆணுக்கு அப்படி ஏதும் இல்லை. திருமணம் ஆனவனா இல்லையா என்பது அவனாக சொன்னால் தவிர தெரியாது. (மோதிரம் மாற்றிக் கொள்ளும் மேலைக் கலாச்சார முறை பரவாயில்லை.)

மெட்டி-ஆணும் ஒரு காலத்தில் போட்ட இந்தச் சமாச்சாரம் இப்போது பெண்களுக்கு மட்டும் என்றாகிவிட்டது.

Miss/Mrs - திருமணம் ஆனாலும் ஆகாவிட்டாலும் ஆண் எப்போதும் Mr ஆகவே இருக்கிறான். பெண் மட்டும் அடையாளத்தை பதவிக்குத் தகுந்தவாறு மாற்ற வேண்டியுள்ளது.(இப்போது பொதுவாக Ms என்று பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்கள்.)

***

உங்கள் தகவலுக்காக :-))))

தோளில் தொங்கி நெஞ்சுக்கு குறுக்காக ஏற்கனவே பெண்கள் அணிவது:

1.கார் சீட் பெல்ட்.

2.கமிஷனர்,DGP போன்ற பதவிகளில் இருக்கும் பெண்கள் நெஞ்சுக்கு குறுக்காக ஒரு பட்டை அணிந்து இருப்பார்கள்.


சும்மா ஒரு கயிரை குறுக்காக அணிவது ஒன்றும் சிரமம் இல்லை. :-)))

***

சானதன தருமம் உங்களுக்கு பிடித்துவிட்டதால் அதில் உள்ள எல்லாம் நல்லதாகத் தெரிகிறது உங்களுக்கு.
பெண்கள் என்றால் மட்டும் பல நடைமுறைச் சிக்கல்களை சரியாக அடையாளம் காட்டுகிறீர்கள். பெண் அர்ச்சகராக் இருந்தால் வருபவன் பர்ப்பான்/பூணூல் போட்டால் சிக்கல் :-)))

இரகசியம்:
நாம் என்னதான் இங்கெ வலைப்பதிவில் மாஞ்சு மாஞ்சு விவாதித்தாலும் நடைமுறை வாழ்வில் நமது கருத்துக்களை குடும்பத்தில் உள்ளவர்களுக்கு புரிய வைப்பது சிரமம். கலைஞரின் குடும்பம் சிறந்த எடுத்துக்காட்டு.

***
ஒங்ககூட குடும்பம் நடத்துவது கொஞ்சம் சிரமம்தான் போலத் தெரிகிறது :-)). உங்கள் மனைவி இந்த வலைப்பதிவுகள் எல்லாம் படிப்பாரா?

Hariharan # 26491540 said...

//பூணூல் எப்படி அணிய வேண்டும் என்பதைவிட அது தேவையா எனபதுதான் முக்கியம்.பூணூல் போட்டுத்தான் சமூகக்கடமைகளையும் பிற நல்லவைகளையும் செய்ய முடியும் என்று நீங்கள் எண்ணினால் அது உங்கள் உரிமை.

மனிதனாக வாழ்வதற்கு இந்த அடையாளங்கள் தேவை இல்லை என்பது என் கருத்து.//

மெக்காலேமுறையில் கற்ற கல்வியை தனது சர்டிபிகேட் பேப்பர் நினைவூட்டுவது மாதிரி பாரம்பரியக் கல்வி ஒருநபரின் சமூகக் கடமையை
நினவூட்ட எல்லோருக்கும் பூணூல் மாதிரியான அடையாளம் அவசியப்படுகிறது.

எம்பிஏ டிகிரி சர்டிபிகேட் இல்லாமலே ஒருசிலர் மேலாண்மையில் சிறந்தும் நினைவூட்டல் தேவையில்லாமலும் இருக்கும்படியாக எல்லோருக்கும் அமைவது சாத்தியமில்லையே!

//பெண் அர்ச்சகராக் இருந்தால் வருபவன் பர்ப்பான்//

எல்லோருக்கும் பூணூல் அணிவிக்கப்பட்டு அவனது நெறியான கடமைகள் நினைவூட்டப்படும் பாரம்பரியக் கல்வி பெறும் போது ஆலயங்களில் எவர் அர்ச்சகர் என்பது அவசியமற்றதாகும். சமூக விகாரம் குறைய சீரமைப்பு ஸ்டெப் பை ஸ்டெப் செய்ய வேண்டும்.


//சானதன தருமம் உங்களுக்கு பிடித்துவிட்டதால் அதில் உள்ள எல்லாம் நல்லதாகத் தெரிகிறது உங்களுக்கு.//

வேறெந்த வாழ்வியல் நெறியினும் குறைகள் குறைவானது சனாதனம். சமூகத்தில் நிகழும் மாற்றங்களுக்கேற்ப காலங்களுக்கும் மாறியும் தன்னைப் புதுப்பித்துக்கொள்வதும் சனாதன தருமம் மட்டுமே.

//நாம் என்னதான் இங்கெ வலைப்பதிவில் மாஞ்சு மாஞ்சு விவாதித்தாலும் நடைமுறை வாழ்வில் நமது கருத்துக்களை குடும்பத்தில் உள்ளவர்களுக்கு புரிய வைப்பது சிரமம். //

உண்மை. ஏதோ கொஞ்சம் மாற்றம் வந்தால் மகிழ்ச்சியே!

//அது ஏன் பெண்களுக்கும் மட்டும் எல்லா அடையாளங்களும் வெளியில் தெரியும் வண்ணம் இருக்க வேண்டும் என்று ஒரு ஆண் சிந்திக்கிறான்?//

மனிதன் அடிப்படையில் விலங்கு. ஆண் ஆளுமை விலங்கினத்தின் தொடர்ச்சியே.

இன்னொரு உயிரை பிறப்பிக்கும் வல்லமை இயற்கையாக அமையப்பெற்ற பெண்ணைக் கண்டு அஞ்சி, குழம்பி தனது அடுத்த தலைமுறை 100% தன்னால் உருவாக்கப்பட்டது தான் என்கிற எண்ணம் தான் பெண்களுக்கு சமய, சமூக அடையாளங்களைத் தந்திருக்கிறது.

காட்டுக்குள்ளே சாதி, சமயம் இல்லாத சிங்கம், புலிக்கும் வாரிசு கேரண்டிக்காக போராட்டம் ஆண் தலைமை- அதன் வாரிசு அழித்தொழிப்பு என்று இருக்கிறது.

பெண் விடுதலை, மேம்பாடு என்று எல்லா அடையாளங்களும் அழிக்கப்பட்டால் நாடு மீண்டும் காடாகும்!

திரிபடைந்து விகாரமான பல பெண்ணுக்கெதிரான மிக மோசமான வழக்கங்கள், நடைமுறைகள், அடையாளங்கள் சனாதனத்தில் தொடர்ந்து மாறிக்கொண்டுதான் வருகின்றன.

சனாதனம் எனக்குப் பிடித்திருக்கிறது என்பது எனது முன்னோர்கள் வாழ்ந்த வாழ்வியல் நெறியில் அவர்கள் மிகச் சரியாகச் சிந்தித்தவர்கள் என எனக்கு இருக்கும் நம்பிக்கை.

சனாதனத்தில் இருக்கும் குறைபாடுகளைச் சரி செய்ய சனாதனத்தினை விட்டு விலகுதல் என்பதில் எனக்கு ஒப்புமை இல்லை.

தந்தையின் வழிகாட்டுதலில் பழமைகள் சில இருப்பதால் தந்தையே தேவையில்லை எனச் சொல்வது சிறுபிள்ளைத்தனம்.

//ஒங்ககூட குடும்பம் நடத்துவது கொஞ்சம் சிரமம்தான் போலத் தெரிகிறது.//

இந்த ரகசியம் உங்களுக்கும் தெரிந்து விட்டதா? :-)))

உங்கள் மனைவி இந்த வலைப்பதிவுகள் எல்லாம் படிப்பாரா?

இல்லை. அதனால் பிழைத்தேன்.

ஆதிசேஷன் said...

அருமையாகச் சொன்னீர்கள் ஹரிஹரன்.

ஆனால் எனக்கு சில மாறுபாடுகள் உண்டு.

அதாவது எல்லோரும் அணியக் கூடாது பூணூலை. ஒழுக்கமான, நல்ல குடும்பத்தில் பிறந்த நல்ல குணங்கள் உடைய ஆடவன் மட்டுமே அணிய வேண்டும். அனைவருமே அணிந்தால் அதன் புனிதம் என்னாவது?

மற்றபடி பெண்களுக்கு அணிவித்தல் என்பதில் எனக்கு ஒப்புமை இல்லை. மற்றபடி உங்கள் இஷ்டம்.

Namo said...

Here is my 2 cents about Poonool.

1. If a person gets married, he hets one more poonool. so he wears two sets of poonool.
Even if he loses his wife(By natural or by other means), He has to wear two sets of poonool till his death.

So theres a way to distinguish married man from bachelor.

Unlike western culture, he can not throw away his ring after divorce.


2) Why women were not allowed to learn vedas?

It is very simple if you think, scientifically.

To recite sanskrit mantras one person is required to make sound from his/her bottom of the stomach.
One can recite mantras only if his stomach is empty.
The sounds generated will be proper only if you do that way.

For women the tender nature of the body does not allow them to do that. If they do that it may affect their ovary and other reproduction systems.
That is why they were not preferred.

There is no discrimination here.

Please understand the reasons behind without jumping to conlusion.

Poonool is not a fashionable item!

genuine said...

you will never change (brahmans) . you wiill steal the best avaialbel in the world and announce them as yours . this one is another plan to get the throne(plunder) from others . this will never happen . go to ttemple and call your lord vishnu and brahma . give my lord shiva to me and move to your caucausian plateau . you can fool most but not all . people this brahman aryan supporter is brainwashing you . everything will be false or made up statements to make you believe brahmans are best that is a blunder forever.