Saturday, March 10, 2007

(131) அதர் ஆப்ஷனில் என்பெயர் நம்பரில் கும்மியடித்த நபருக்கு நன்றி நன்றி!

முத்துக்குமரனின் இப்பதிவில் எனது பெயர் புரோபைல் நம்பருடன் போலியாகப் பின்னூட்டமிட்ட அந்த அறிமுகமில்லாத அன்புள்ளத்திற்கு நன்றி!

எனது போட்டோ புரைபைலில் இல்லாததும் இது அதர் ஆப்ஷனில் எனது பெயர் புரோபைல் நம்பர் பயன்படுத்தி சில அதி நல்ல உள்ளங்கள் செய்த இச்செயலை முத்துக்குமரன் முதல் கொண்டு இந்த இரு பின்னூட்டங்களுக்குச் செவிமடுத்து பதிலளித்த மூத்த, இளைய வலைஞர்கள் தங்கள் கவனத்தில் கொள்ளாது ஒரிஜினல் ஹரிஹரன் என எண்ணி இந்த ஹரிஹரனுக்கு கண்டனக் கும்மி அடித்தது என்பதை எம்பெருமான் முருகனைத் அடியேன் பகுத்தறிவுப் பாடை கொண்டு பயன்படுத்தி, அணுகியதற்கு எனக்குக் கிட்டிய ஊழ்வினையாக எடுத்துக்கொள்கிறேன்!

//அரசியல் திரா"விட" பெத்தடின்கள் தமிழ் கடவுள் முருகனை பெரிய யோக்கியமாக சித்தரித்து சித்து விளையாட்டு விளையாடும் அயோக்கியதனத்தை ஐம்பது நூற்றாண்டுகளாக நடத்தி வருவதை பகுத்தறிந்து தமிழ் கடவுள் முருகன் ஒரு காமாந்தகன் என்றொரு பதிவு போட்டிருக்கிறேன். படிக்கவும். முருகன் குறத்திமகளை வண்புணர்ந்ததை பற்றியும் எழுதி இருக்கிறேன். முருகன் பிராமணன் அல்ல என்பதையும் திரா"விட" பெத்தடின்கள் உணரவேண்டும்.//

//நான் அந்த பதிவு போட்டதுமே நான் எதிர்பார்த்த மாதிரி இல்லாமல் எதிர்பாராவிதமாக திரா"விட" பெத்தடின்களும் மகிழ்ச்சி அடைந்து விட்டார்கள். திரா"விட" பெத்தடின்கள் என்ன செய்தாலும் எரிச்சல் அடைய மறுக்கிறார்கள் என்பதாலும், சில ஆரிய அன்பர்கள் மனம் புண்பட்டதாலும் அந்த பதிவினை முருகன் அருளால் நீக்கிவிட்டேன்.//

முத்துக்குமரன் போன்ற மூத்த வலைஞர்களுக்கு கண்டனக்கும்மி ஆரம்பிக்கும் முன் கண்டனத்திற்கான கருத்து ஒரிஜினல் பதிவருடையதா என ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள் என்பது எனது வேண்டுகோள்.

கந்தசாமிக் கடவுளே அதர் ஆப்ஷனில் எனது பெயர், புரொபைல் நம்பர் கொண்டு கும்மியடித்த பகுத்தறிவு அனானிக்கு கொஞ்சூண்டு பொது அறிவு கொடு!

அன்புடன்

ஹரிஹரன்

11 comments:

Hariharan # 03985177737685368452 said...

டெஸ்ட் மெசேஜ்!

கார்மேகராஜா said...

நல்லவேளை தெளிவு படுத்துனீங்க! இல்லைனா இன்னிக்கு இதபத்தி ஒரு பதிவு போடலாம்னு நினைச்சிருந்தேன்.

Hariharan # 03985177737685368452 said...

என்ன செய்ய கார்மேகம் சார்,

வாரவிடுமுறைன்னு தமிழ்மணம் பார்க்காம இருக்கும் 30 மணிநேர சைக்கிள் கேப்ல ஹரிஹரன் பேர்ல சாக்கடையைத் தெளிச்சுடுறாங்க சிலர்!

இப்படிக் கிரிமினலா வழிவகை கண்டு தன் கருத்தைச் சொல்றதைச் சொந்தமா தன்பேர், நம்பர், போட்டோன்னு ஒரிஜினல் புரோபைல் வழியாச் சொல்லலாமே!

முருகன் அருளால் இந்த முட்டாள்கள் இனியாவது திருந்தட்டும்!

முத்துகுமரன் said...

நண்பர் ஹரிஹரனுக்கு,

உங்கள் பின்னூட்டத்திற்கு பின் போலியாக வந்த இரு பின்னூட்டங்களையும் நீக்கிவிட்டேன். இது தொடர்பான கும்மி பதிவின் பின்னூட்ட பெட்டியும் மூடப்பட்டிருக்கிறது. நீங்கள் முருகனை பற்றிப் போட்ட பதிவை திரும்பப் பெற்றுவிட்டதால் உங்களின் முருகன் பதிவை நான் வாசிக்கவில்லை. ஆனால் நீங்கள் முருகணை விமர்சித்து போட்டு திரும்ப பெற்றிருக்கிறிர்கள் என்பதையும் நீங்களே உங்கள் பதிவில் தெளிவு செய்திருக்கிறீர்கள். எனவே முருகனை பற்றியான உங்கள் எண்ணத்திற்கான பதில்தான் அந்தக் பதிவு. உங்கள் கருத்திற்கான விமர்சனம்தான் அந்தப்பதிவு. நீங்கள் பின்னூட்டத்தில் போட்டதாக மேற்கோள் காட்டப்பட்ட அந்த வரிகள் நீக்கப்படும். ஆனால் முருகனை காமந்தகன் சொன்னது உண்மை என்பதால் அந்தப்பதிவு அப்படியே இருக்கும்.

நன்றி ஹரிஹரன்

Hariharan # 03985177737685368452 said...

//நீங்கள் முருகனை பற்றிப் போட்ட பதிவை திரும்பப் பெற்றுவிட்டதால் உங்களின் முருகன் பதிவை நான் வாசிக்கவில்லை.

ஆனால் முருகனை காமந்தகன் சொன்னது உண்மை என்பதால் அந்தப்பதிவு அப்படியே இருக்கும். //

முத்துக்குமரன்,

எனது அந்தப் பதிவைப் படிக்காமலே ஒருகருத்தும் கொண்டு போட்ட உங்கள் பதிவு என்பது 100%உங்கள் உடமை!

அப்பதிவில் விமர்சிக்கப்பட்டது முருகன் இல்லை திரா"விட"ப் பகுத்தறிவின் குறைபாட்டுப் பார்வைக்கோணம் மட்டுமே!

மற்றபடி நான் எனத் தோற்றம் ஏற்படுத்திய போலிப்பின்னூட்டம் நீக்கியதற்கு என் நன்றிகள்!

முத்துகுமரன் said...

நன்றி ஹரிஹரன்.
தனிமடலிலாவது உங்களுடைய அந்தப் பதிவை அனுப்பி வைத்தால் வாசிக்க உதவியாக இருக்கும்.

மனம் என்பது மாற்றங்களுக்குரியது.

நீங்கள் பார்வைக் குறைபாட்டுக் கோணமே என்று சொல்லியிருப்பதால் என்னுடைய அந்த பதிவைத் திரும்ப பெற்றுக் கொள்கிறேன்,

dondu(#11168674346665545885) said...

நான் என்ன நினைக்கிறேன் என்றால், சில வடமொழி சுலோகங்களை காண்டக்ஸ்டுக்கு வெளியே எடுத்து, அரைகுறையாக அர்த்தம் புரிந்து கொண்டு ராமன், கிருஷ்ணன் போன்ற தெய்வங்களை திராவிடக் கட்சியினர் தூற்றும்போது, எல்லோருக்கும் தெரிந்த தமிழில் எழுதப்பட்டதை வைத்துக் கொண்டு தமிழ்க்கடவுளாம் முருகனையும் அட்டாக் செய்தால் அவர்கள் எவ்வாறு செய்வார்கள் என்பதை காட்ட அங்கதமாக நண்பர் ஹரிஹரன் எழுத முயல, அது நிஜமாகவே அவர் முருகப் பெருமானை தூற்றியது போன்றத் தோற்றத்தை தந்து விட்டது.

அப்பதிவை நானும் படிக்கவில்லை, அதனால் ஊகமே. அதுவும் நண்பர் ஹரிஹரன் அவர்கள் கண்ணியமாக எழுதுவர் என்ற நிச்சயம் என் மனதில் உண்டு என்பதாலேயே இதை எழுதுகிறேன்.

இது குறித்து மேலும் எனது கருத்து.

விளையாட்டே என்றாலும், அல்லது வாதத்துக்கே என்றாலும் நம் தமிழ்க்கடவுளாம் அழகன் முருகனை இவ்வாறு எழுதியது கண்டிக்கத் தக்கது. அதுவும் தனது சடையர் நோக்கத்தை வெளிப்படையாகக் கூறாதது ஹரிஹரனது மொழி குறைபாடு.

இது அத்தனையும் அவர் மேல் உண்மை அக்கறை கொண்ட டோண்டு ராகவன் வெளிப்படையாகவே கூறுவது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கருப்பு said...

என்னய்யா நடக்குதே இங்கே,

எங்க சொறியண்ணாவே ஒரு அனானிதான். இதில் அவருக்கே ஒரு அனானியா???

Hariharan # 03985177737685368452 said...

//வாதத்துக்கே என்றாலும் நம் தமிழ்க்கடவுளாம் அழகன் முருகனை இவ்வாறு எழுதியது கண்டிக்கத் தக்கது. //

டோண்டு சார்,

இந்தக் காரணம் ஆன்மீக அன்பரால் சுட்டிக்காட்டப்பட்டதாலேயே எனது பதிவை நீக்கிக் கொண்டேன்.

மற்றபடி Satire என்பது தெளிவாகத் தெரிவிக்கப்படும் முன்னுரையோடு எனது வழக்கமான் நடையிலேயே எழுதியிருந்தேன்.

//நண்பர் ஹரிஹரன் அவர்கள் கண்ணியமாக எழுதுவர் என்ற நிச்சயம் என் மனதில் உண்டு //


கண்டிப்பாக முருகக் கடவுளைத் தாக்கி எழுதவில்லை. முருகப்பெருமானைத் தாக்கியதாக் யாரும் உணர்ந்து தெரிவிக்கவும் இல்லை. அப்பதிவில் நான் தாக்கியது பகுத்தறிவின் அவுட் ஆப் காண்டக்ஸ்ட் தட்டைத்தனமான பார்வைக்கோண்த்தையே.


என்மீதான இந்த நம்பிக்ககைக்கு நன்றி. இதனைப் பொய்யாக்காமல் தொடர்ந்து எழுதுவேன்.

Madhu Ramanujam said...

என்ன ஹரி பண்றது? பல பதிவர்கள் போலினு தெரிஞ்சே கூட அவங்க கேள்விக்கெல்லாம் பொறுமையா பதில் சொல்லிகிட்டிருப்பாங்க. எழுதினது உண்மையான ஆள் தானா இல்லையானெல்லாம் அவங்களுக்கு நேரமில்லை! அந்தப் போலிகளும், போலிகளை ஆதரிப்போரும் நல்லா இருக்கட்டும்.

Hariharan # 03985177737685368452 said...

//எங்க சொறியண்ணாவே ஒரு அனானிதான். இதில் அவருக்கே ஒரு அனானியா???/

கருப்பு,

எப்படி சாமி உன்னால் மட்டும் இப்படி?
வேக்குவம் க்ளீன்? பளிச்சிடுகிறது:-))
சந்தோஷமா இருங்க!