(139) சபரி படம்..ஈழஅகதிகளுக்கு ஆதரவுக் குரல்...ஜல்லிகள்
சபரி படத்தில் விசய்காந்த் ஈழ அகதிகள் குறித்து ஆதரவாகப் பேசி இருக்கிறார். பாராட்டுவோம். இது குறித்து லக்கிலுக்கின் இந்தப்பதிவில் பல சொ.செ.சூ ஜல்லிகள்
//முகாமுக்கு வருபவர்களை காவல்துறையினர் நடத்தும் முறை, சோதனை என்ற பெயரில் நடத்தும் அட்டூழியம்//
இந்தப் போலீஸ் டிபார்ட்மெண்ட் தமிழக அரசின் முதல் மந்திரி -கம்- போலீஸ் மந்திரி கையில் தானுங்க இருக்கு! கால் நூற்றாண்டாக கருணாநிதிதானுங்க தமிழ்நாட்டுப் போலீஸ் மந்திரி!! முதல் மந்திரி!!
ஈழ அகதிகளிடம் முறையற்று நடக்கும் காவல்துறையினர் தமிழ் நாட்டுத் தமிழன் இல்லையா?
இல்லை.. ஈழ அகதிகள் முகாமில் பார்ப்பனர்கள் மட்டுமே காவலர்களாக இருக்கின்றார்கள் அதனால் தான் இப்படின்னு சொல்லுவீங்களா?
//அடிப்படை வசதிகளை கூட இந்தியா ஏற்படுத்தித் தர முன்வராத கொடுமை போன்றவைகளை//
கக்கூஸ், குடிநீர், தங்குமிடம் கட்டுவது தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இல்லையா?
பொதுப்பணித்துறை, குடிநீர் வாரியம், கழிவு நீர் அகற்றும் வாரியம், மின்வாரியம் இதெல்லாம் தமிழக அரசுத்துறைகள் இல்லீங்களா?
ராமேஸ்வரம் ஈழ அகதிகள் முகாமில் கக்கூஸ் கட்ட, மின்சாரவசதியுடன் தங்குமிடம் அமைக்க இந்திய மத்திய அரசு தடையாக இருக்கிறதா? அப்போ ஏன் அய்யா தமிழகக்த்து தமிழினத்தலைவர் கருணாநிதி கட்சி பாஜக மத்திய அரசில், சோனியாகாந்தி காங்கிரஸ் மத்திய அரசில் மந்திரிகளாக இருக்கின்றீர்கள்??
கால் நூற்றாண்டாக தமிழகத்தின் முதன்மந்திரியாக தமிழினத்தலைவர் கருணாநிதிதானே இருக்கிறார்!
அடிப்படை கழிவறை வசதிகளுக்கு இந்தியாவை வசதியா வசைபாட வந்துட்டீங்க!
மத்திய அரசில் இந்த ஈழ அகதிகள் அவலநிலை காரணத்துக்காக எத்தனை முறை தமிழினத்தலைவர் கருணாநிதி இதற்குத் தேவையான மந்திரி பதவிகளைக் கேட்டு வாங்கிப் போராடி இருக்கிறார்? ராஜினாமா செய்திருக்கிறார்?
//இந்தியாவிலேயே முதன்முறையாக ஈழத்தமிழ் அகதிகளுக்கு சினிமா எனும் ஊடகம் மூலமாக மிகத்தைரியமான ஆதரவைத் தந்திருக்கும் கேப்டனை எப்படிப் பாராட்டினாலும் தகும்.//
சன் தொலைக்காட்சி ஊடகமே கருணாநிதி கைவசம்! பிரச்சனையை ஏன் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா,டெல்லி, உலககம் அறியும்படியாகக் காட்டவில்லை? கழிவறை, அடிப்படை வசதியின்மைப் பிரச்சினையைக்கூட ஏன் தமிழ்நாட்டு அரசு தீர்க்கவில்லை?
அப்போ சுத்தமாக தைரியம் இல்லாதவர் கருணாநிதி என்கிறீர்களா?
இல்லை பச்சையான சுயநலவாதின்னு ஒப்புக்கொள்கிறீர்களா?
கால் நூற்றாண்டுகள் முதல் அமைச்சர்-போலீஸ் மந்திரியா இருந்தும் ஈழ அகதிகளுக்கு அடிப்படையாக எதுவுமே உருப்படியாகச் செய்யாமாட்டீங்க ஆனா தமிழினத்தலைவர் பட்டம் மட்டும் வேணும்? சபாஷ் திமுக!
போங்கய்யா! இன்னும் நல்லா ஜல்லி அடிங்க!
அன்புடன்
ஹரிஹரன்
8 comments:
டெஸ்ட் மெசேஜ்!
ஹரிஹரன்,
ஈழப்பிரச்சனை தொடங்கியதிலிருந்து கலைஞர் இருமுறை மட்டுமே முதல்வராக இருந்திருக்கிறார். 89-91, 96-2001 மற்ற தருணங்களில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதா அம்மையாரும்தான் முதல்வராக இருந்திருக்கிறார்கள்.
கலைஞர் ஆட்சிக்கு வந்த பின்பு அகதி முகாம்கள் நிலைப்பற்றி சட்டமன்ற உறூப்பினர் ரவிக்குமார் அவர்களும், அமைச்சரும் அகதி முகாம்களை நேரடியாக பார்வையிட்டு அவர்களின் தேவைகள் குறீத்து அறிக்கைகள் சமர்பித்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து சில உதவிகளும் செய்யப்பட்டிருக்கின்றன.
ஈழத்தமிழர் பிரச்சனைக்காக குரல் எழுப்பும் போதெல்லாம் புலி கானம் பாடியவர்கள் இன்றவர் துயர்களை வெளிக்கொணரும் போது நீலிக்கண்ணீர் வடிப்பது அவர்களின் இரட்டைத் தன்மையை பறைசாற்றுகிறது. அம்மையார் ஆட்சியில் இதெல்லாம் பேச முடியாது. வெளிச்சொல்ல முடியாது. ஏனென்றால் அவர் தீவிரவாதத்தை இரும்ம்புக்கரம் கொண்டு ஒடுக்குபவர்.
கலைஞர் முழுமையாக உதவி செய்யவில்லை என்பதை ஒத்துக் கொள்கிறேன். என்ன செய்ய அவர் சுத்தமான இந்திய குடிமகனாக இருக்கிறாரே :-)
முத்துக்குமரன்,
ஈழப்பிரச்சினயின் ஆரம்ப நிலை ஆண்டுகளில் 1983-88 வரை எம்ஜிஆர் முழு ஆதரவு தந்திருக்கிறார்.
கருணாநிதியின் 89-91 களில் பத்மநாபா கொலை, ராஜீவ் கொலை தமிழகத்தில் அரங்கேறியது. புலிகள் மீது பார்வையை இவை இந்தியாவில் மாற்றிய சம்பவங்கள்.
ஈழத்தமிழ் அகதிகள்முகாம் குறித்தே சுட்டியிருக்கிறேன். இந்தியாவின் பார்வை ஈழஅகதிகள் பிரச்சினையில் வேறு புலிகள் பிரச்சினையில் வேறு!
அகதிகளின் அடிப்படை கழிவறை, தங்குமிடப் பிரச்சினைக்குப் புலிகள் பேச்சு என்று பூச்சு பூசவேண்டாம்.
இந்தியாவின் பார்வை ஈழ விஷயத்தில் ஈழ அகதிகள், புலிகள் என்று இரட்டையானதுதான். நீலிக்கண்ணீர் இதில் என்ன வேண்டி இருக்கிறது??
பார்வைத்தெளிவு இருந்தால் புலிகள் மீதான அணுகுமுறை, ஈழ அகதிகள் மீதான இருவேறு அணுகுமுறை தெளிவாகத் தெரியும்.
பத்மநாபா கொலை , ராஜீவ் கொலை மாதிரியான நிகழ்வுகள் தமிழகத்துக்குத் தலைவலி! அவசியமற்றவை.
அகதிகள் முகாம் கழிவறைக் கட்டுமானத்துக்குக்கூட செயல்பாட்டு வக்கு இல்லாமல் இந்தியாவைச் சாடவேண்டுமா? அதுவும் 25 ஆண்டுகள் ஈழப்பிரச்சினையில் 10 ஆண்டுகள் மாநில, மத்திய ஆட்சி அதிகாரத்தில் இருந்துகொண்டு??
வெட்கமாக இல்லையா?
பதிவிலே சேர்க்க விடுபட்டுப்போனது:
தமிழ்நாட்டில் ஈழத்தவர் பிரச்சினை என்பது தான் அடிக்கும் டாஸ்மாக் சரக்க்குக்கு உடன் நக்கும் ஊறுகாய் மாதிரி!
தமிழக அரசியல் கட்சிகளுக்கு தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தல்களுக்கான ஒரு பெர்மனண்ட் விளம்பரம்... ஈழத்தமிழர் பிரச்சினை...அவ்வளவே!
//ஈழப்பிரச்சனை தொடங்கியதிலிருந்து கலைஞர் 89-91, 96-2001 இருமுறை மட்டுமே முதல்வராக இருந்திருக்கிறார்.//
முத்துக்குமரன்,
2006-2007லும் மூன்றாவதாக கருணாநிதி தற்போது முதல்வர் இல்லையா? ஸ்டாலினா நடப்பு முதல்வர்?
ஸ்கூப் நியூஸ் தந்திருக்கீங்க! :-))
மலைசாமி & ஹரி,
உங்களுக்கு இது தேவையா. கலைஞர், "வறியா இரண்டு பேரும் சேந்து கக்கூஸ் கட்டலாம்?"-னு கேப்பார். The ultimate Escapist
மலைச்சாமி,
தமிழினமான ஜல்லிக் கொள்கை, ஜல்லி முழக்கங்கள், இவற்றின் மேல்ரொம்பக் கோவமா இருக்கீங்க!
கூல் டவுன்.
//உங்களுக்கு இது தேவையா. கலைஞர், "வறியா இரண்டு பேரும் சேந்து கக்கூஸ் கட்டலாம்?"-னு கேப்பார். The ultimate Escapist//
சேர்ந்து தீக்குளிக்கத்தான் சிரமம்:-))
மானமிகு அகிலஉலகத் தமிழினத் தலைவர் கருணாநிதி கக்கூஸ் கட்டலாம் வர்றியான்னு கூப்பிட்டால் கருணாநிதியோட சேர்ந்து ஈழத்தமிழ் அகதிகளுக்காக கக்கூஸ் கட்ட ரெடி நான்!
இப்படியாவது அகதிகளுக்கு கழிப்பிடம் கிடைத்தால் சரிதான்!!
Post a Comment