Monday, April 02, 2007

(140) இட ஒதுக்கீடு Vs மிகப்பிற்படுத்தப்பட்டவர் நிறைந்த தமிழகமும்

ஐஐடி, ஐஐஎம், என்.ஐடி பொன்ற உயர் கல்வி நிறுவனங்களில் 27% பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்கு நேர்மையான விளக்கம் இல்லை.

ஆனால் தமிழகத்தில் இரவோடு இரவாகக் கருணாநிதியால் பொது பந்த் நடத்தப்படுகிறது! சமூக நீதியின் குரல் வளைப்பவர்கள் சமூகநீதிக்காவலர்களாக வேடம் போட போட்டா போட்டி போடுகிறார்கள்!

இட ஒதுக்கீடு ஓட்டுப்பிச்சை கேரண்டி தரும் அட்சய பாத்திரம் என்பதாலேயே இந்தப் போட்டா போட்டி! பகுத்தறிவு, சுயமரியாதை வெட்டிப்பேச்சு வீணர்களின் ஓலம்! ஆளுக்கொரு கட்சி! கட்சிக்கொரு தொலைக்காட்சி சேனல்!

சமூக நீதி எப்படி பேணப்படுகிறது? நாற்பதாண்டுகள் திரா"விட" ஆட்சியில் 69% இட ஒதுக்கீட்டில் சமூக நீதி நிதர்சனமான நிஜம் தமிழகத்தில் எப்படி இருக்கிறது என்று காண்போம்!

சமூக நீதியின் தலைநகரம் சென்னை. சென்னையின் இதயம் அண்ணாசாலையில் எதையும் தாங்கும் இதயம் கொண்ட அண்ணாதுரையின் சிலை அருகே சாக்கடை அடைப்புநீக்க சாராயம் குடித்து மலம், நச்சு அமிலங்கள், வேதிப்பொருட்கள், விஷ வாயு என நிறைந்த சாக்கடைக்குழிக்குள் சாராயம் போதையோடு கயிறு கட்டி இறங்கும் துப்புறவுத் தொழிலாளார்களைத் தினமும் பகுத்தறிவு, சுயமரியாதைத் தலைநகரமான சென்னையில் தினமும் பல தரம் பார்க்கலாம்.

இந்த நவீன யுகத்திலும், போர்டு, ஹூண்டாய், அசோக்லேலண்ட், ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ், ராணுவக் கவசவண்டி தயாரிப்புத் தொழிற்ச்சாலை என பெரும் இயந்திரமாக்கப்பட்ட கனரகத் தொழிற்சாலைகள் நிறைந்த தமிழகத் தலைநகரத்தில் இன்னமும் மலம் அள்ள, சாக்கடைத் தூர்வாங்க, குப்பைத் துப்புறவுக்கு இயந்திரம் ஏன் பயன்படுத்தப்படாமல் இம்மனிதர்கள் மலக்குழியில் முழுகி அடைப்பு எடுக்க வேண்டிய நிலை?

சுயமரியாதைப், பகுத்தறிவைத் தலைமையாகக் கொண்ட தமிழகத்திலும் அதன் தலைநகரமான சென்னையிலும் சமுகநீதிகாக்கும் 69% இட ஒதுக்கீடு ஏன் இன்னும் இந்த துப்புறவுத் தொழிலாளிகளை கல்வியில், வாழ்க்கைத்தரத்தில் மேம்படுத்தவில்லை?

தென்சென்னை, வடசென்னை மீனவக் குப்பங்கள் அயோத்தியா குப்பம் "வீரமணி" போன்ற தாதாக்களை உருவாக்குகிற அவல இடமாகத் தொடர்கிறதே அன்றி கல்வி கற்று மேம்பட்ட விவேகமணிகளை உருவாக்கிட தமிழகத்தின் 69% சமூகநீதி காக்கும் இடஒதுக்கீடு ஏன் பயன்படவில்லை?

சென்னையின் புதுப்பேட்டையும், சேத்துப்பட்டும் மாநகரப்பேருந்துகளில் பயணிபோரிடமும், மின் தொடர் வண்டிகளில் பிரயாணிக்கும் பயணிகளிடம் பிளேடு போட்டு பிக்பாக்கெட்டு அடிக்கும் தொழில் நுட்பக்கல்லூரி நடக்கும் இடமாக இருக்கிறது. தமிழகத்தின் சமூகநீதி காக்கும் 69% இட ஒதுக்கீடு தமிழகமெங்கும் நீக்கமறக்காணப்படும் இந்தப் பிக்பாக்கெட்டுகளை ஏன் கல்வி ஒளி தந்து சீர்படுத்த வில்லை?

சென்னையின் புதுப்பேட்டையில் பத்துநிமிடம் பல்ஸர்பைக்கை பார்க் செய்துவிட்டுப்போனால் பல்ஸர் பைக் ஸ்பேர் பார்ட்ஸாகி பைக் உரிமையாளரின் பல்ஸ் எகிற வைக்கும் சூழல்! சமூக நீதி காக்கும் 69% இட ஒதுக்கீடு கல்வி ஒளி தந்து திருட்டைச் சமூகத்தில் இருந்து ஏன் நீக்கவில்லை?

நாற்பதாண்டுகளாக நடக்கும் பகுத்தறிவு, சுயமரியாதை திரா"விட" ஆட்சிக்குப் பின்னரும் இன்றும் நாற்றமெடுக்கும் கூவம் , அடையாறு நதிக்கரை, கடற்கரையோரம் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான அடித்தட்டு மக்களை 69% சமூகநீதி இடஒதுக்கீடு ஏன் கல்வி, பொருளாதாரத்தில் மேலேற்றவில்லை??

தமிழ்நாட்டில் நடக்கும் நாற்பதாண்டு கால பகுத்தறிவு, திரா"விட" ஆட்சியில் சுயமரியாதையின் இலட்சணம் இதுதான்!

மூன்று முறை தமிழக முதல் அமைச்சராக மு.கருணாநிதியும், தமிழகத் தலைநகரான சிங்காரச் சென்னையின் நகரத்தந்தையாக (மேயராக), உள்ளாட்சித்துறை அமைச்சர் எனப் பல பதவிகளில் மு.க ஸ்டாலின் எனப் பல ஆண்டுகள் பதவிகளில் இருந்திருக்கிறார்கள் இந்த சமூக நீதிக்காவலை தமிழகத்தில் 999 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்த திரா"விட"க் குடும்பக் கட்சியினர்.


தமிழ்நாட்டில் ஆதிகாலத்தில் இருந்து ஆதிக்க சாதியினராகவே தொடரும், மக்கள் தொகையில் அதிகமான வன்னியரும், தேவரும், அகமுடையாரும், கவுண்டரும், யாதவரும் இருபத்திஒன்றாம் நூற்றாண்டில் சமூகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாமா?

இவர்களுக்கு இடஒதுக்கீட்டுச்சலுகை எனும்போது பிச்சைக்காரவேசம் போடுவதும், விளைநிலத்தில் பணிபுரிபவரை வன்புணரும்போது பண்ணையார் என உயர்வதும், திண்ணியத்தில் சக திராவிடருக்கு மலத்தைத் தின்னத் தரும்போது ஆதிக்க சாதி வெறியாட்டம் போடுவதும் கை வந்த கலை! அரசியல் வழியாக எம்.எல்.ஏ, எம்.பி ஆகித் தமிழகத்திலே சமூகநீதியைப் பேணும் சமூகநீதிக்காவல் காரர்கள் இக்கயவர்கள்தான்!!

தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் இந்த ஆதிக்க ஜாதியினர் தம் சுயநல சலுகைகளுக்காகக் கூட்டமாக ஓட்டுப்போட்டதால், இந்தியநாடு சுதந்திரம் பெற்ற சமயத்தில் முன்னேறிய சமுகமாய் இருந்து, திராவிட கட்சிகளின் ஆட்சியில் சலுகைகளுக்காக பிற்படுத்தப் பட்டவர்களாகி, சலுகைகள் தொடர சாலை எங்கும் நிழல்தந்த மரங்கள் பல வெட்டி வீழ்த்தி மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாகி சமூக நீதி காக்கின்றார்கள் இந்த முன்னாள் பல்லவ, சேர,சோழ, பாண்டியர்கள்?

மெய்யாக பொருளாதாரத்தில் நலிந்த அனைத்துப்பிரிவினரும் மேம்பட கல்வியில் , அரசு வேலையில் இட ஒதுக்கீடு என்பது பொருளாதார நிலை கொண்டே நிர்ணயிக்கப்படவேண்டும்.
பொருளாதாரத்தில் மேம்பாடு வந்தாலே சமூகநிலையில் மேம்பாடு தானே வரும்.

பார்ப்பனர் உட்பட முதலியார்,பிள்ளைமார்,உடையார், வன்னியர், தேவர், அகமுடையார், கவுண்டர், யாதவர் என அனைத்து ஆதிக்க சாதியினராலும் அழுத்திவைக்கப்பட்ட துப்புறவுத் தொழிலாளர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் என வெகுசிலருக்கு மட்டும் சிறப்புச்சலுகையாகப் பொருளாதாரநிலையோடு சாதியும் சேர்த்து இரண்டும் கருத்தில் கொள்ளப்படலாம்.

"வன்னியர், தேவர், யாதவர், செட்டியார், முதலியார், பிராமணர்,கவுண்டர்,பிள்ளைமார், பொற்கொல்லர், நாடார், கிறித்துவர், இசுலாமியர் எனப் பொருளாதாரத்தில் நலிவுற்ற அனைத்துப்பிரிவினரும் வீட்டுக்கு ஒருவர் உத்திரவாதத்துடன் உயர் கல்வி கிடைத்து முன்னேற வழி வகுக்கும் திட்டமாக இட ஒதுக்கீட்டுத் திட்டம் அமைய வேண்டும்.

"அரசியல் கட்சிகளுக்கு ஓட்டுப் பொறுக்கும் சமூக சீரழிப்புத் திட்டமாக அரசியல் வாதிகளால் அலைக்கழிக்கப்படும் திட்டமாக இடஒதுக்கீட்டுத்திட்டம் இருப்பது அறவே உடனே நிறுத்தப்பட வேண்டும்."

ஒருமுறை அரசு இட ஒதுக்கீட்டில் மருத்துவ, பொறியியல், உயர் கல்வி, அரசு வேலை வாய்ப்பு பெற்று முன்னேறியவர்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தும்போதே அவரது அடுத்த தலைமுறைக்கு அந்த இட ஒதுக்கீட்டு முறை முன்னுரிமை அளிக்கப்படமாட்டாததை ஏற்று ஒப்புதல் அளிக்கும் புகைப்படம் + கைரேகை + ஐரிஸ் (கண்விழி) இமேஜ் அடையாளத்துடன் கூடிய படிவத்தில் கையொப்பம் இடவேண்டும்.

எம்.எல்.ஏ, எம்பி, மாவட்ட கலெக்டர், உதவி கலெக்டர், இன்ஸ்பெக்டர், எஸ்பி, டிஐஜி, ஐஜி, தாசில்தார், கல்லூரிப் பேராசிரியர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் , மின்வாரிய துணை இஞ்சினியர்கள் போன்ற மாதம் 20000/- மத்திய, மாநில, வங்கிப்பணி போன்ற அரசு வேலையில் இருந்து சம்பளம் பெறுவோர், இதர துறைகளிலான சீனியர் அரசு அலுவலர்கள் என மாதம் 20,000/- (அனைத்துப்படிகளுடன் கூடிய மொத்தத்தொகை Gross salary) சம்பள நிலை வரும் போது இம்மாதிரியான இடஒதுக்கீட்டுக்கு அவசியமில்லாத நிலையை உறுதி செய்யும் கைரேகை+ ஐரிஸ்(கண்விழி)இமேஜ்+புகைப்பட அடையாளத்துடன் கூடிய படிவத்தில் ஒப்புதல் தரவேண்டியது கட்டாயமாக்கப்படவேண்டும், இவர்களது பணிக்காலம் முடிந்து ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதியோடு இந்த இட ஒதுக்கீட்டுத் தகுதி இணைக்கப்படவேண்டும்.

ஒரு நபர் பெற்ற இட ஒதுக்கீட்டுப் பயன்கள் உதாரணமாக: உயர்கல்விக்கு மூன்றாண்டு டிப்ளோமோ, நான்காண்டு பொறியியல், பல்கலைக்கழக மூன்றாண்டு பட்டப்படிப்பு, முதுகலைப் பட்டப்படிப்பு, எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பு, உயர் மருத்துவப்படிப்பு, நர்சிங் படிப்பு, பல்மருத்துவப்படிப்பு, அரசு வேலை (சம்பள அடிப்படையில்) என ஒரு நபரின் /ஒரு குடும்பத்தின் இடஒதுக்கீட்டுப் பயன்பாட்டை அறியும் வகையிலான கட்டாயப் பாயிண்ட் சிஸ்டம் அறிமுகப்படுத்தலாம்.

எலக்டிரானிக் கார்டு வெரிபிகேஷனுடன் கூடியதாக இந்த இடஒதுக்கீட்டுப் பயன்பெறுதல் தனிநபர்/குடும்ப அளவில் நடைமுறைப்படுத்தல் என்பது இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ போன்ற தனியார் நிறுவனங்களால் அரசியல்வாதிகள் தலையீடு, குறுக்கீடு இல்லாமல் மேலாண்மை செய்யப்பட வேண்டும்.


தமிழ்க்குடிதாங்கி மருத்துவர் ராமதாஸ், கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி, தயாநிதி, கலாநிதி, ஜிகே.மணி, காடுவெட்டி"மாவீரன்" குரு, மருத்துவர் சேதுராமன், வைகோ, சசிகலா-நடராஜன், வீரபாண்டி ஆறுமுகம், ஜிகேவாசன், கிருஷ்ணசாமி,பீட்டர் அல்போன்ஸ்,பார்வர்டு பிளாக் கார்த்திக், விஜய்காந்த், சரத்குமார்,ராதிகா, விஜய், அஜீத், விவேக், சிநேகா, ஏஆர்.ரகுமான், யுவன் சங்கர் ராஜா, போன்றோர் தன் மகனுக்கு, பேரனுக்கு, கொள்ளுப்பேரனுக்கு இன்னும் 1931 அடிப்படையிலான சமூக நிலையினை அடிப்படையாகக் கொண்ட சுயநல, சமூகச் சீரழிவான ஓட்டுப்பொறுக்கி இடஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கும் சமூக அநீதி முற்றிலும் தடுக்கப்படவேண்டும்!


பொருளாதாரத்தில் மேம்பட்ட அனைத்து ஜாதியைச் சார்ந்தவர்களுக்காக ஒரு குறிப்பிட்ட சதவீதம் கூடுதலாகப் பணம் கட்டிப் படிக்க என் ஆர் ஐ கோட்ட்டா போன்ற ஒரு வழிமுறையை ஏற்படுத்த வேண்டும்.

அயல்நாட்டில் மாதம் ஆயிரத்து ஐந்நூறு அமெரிக்க டாலர்களுக்கு இணையான சம்பளத்தில் ஐந்தாண்டுகள் பணிபுரிந்திருந்தால் குறைந்தகட்டணத்தில் கல்வியிடங்களில் இட ஒதுக்கீட்டுச் சலுகைக்கு உள்ளூரில் முன்னுரிமை விலக்கப்படவேண்டும்.

இப்படிச் செய்தாலே அன்றி சமூகத்தில் பொருளாதாரரீதியாக உண்மையில் நலிந்த பல ஜாதியைச் சார்ந்த பல லட்சக்கணக்கான நலிந்த மக்கள் அனைவரும் இட ஒதுக்கீட்டில் பயன்பெற்று முன்னேறுவது அடுத்த 50-100 ஆண்டுகள் கழிந்தாலும் கனவிலும் நடக்காது.


மு.கருணாநிதி குடும்பத்தில் நாற்பதாண்டுகளில் ஒவ்வொருவரும் பல நூறு கோடிகளுக்கு அதிபதிகள்! இட ஒதுக்கீட்டு சமூகநீதி காத்ததால் கருணாநிதி பெற்றது பத்துக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சானல்கள்! ஸ்டாலின் மகன் உதயநிதி நுங்கம்பாக்கத்தில் ஸ்நோ பௌலிங் செண்டர் எனும் பொங்கு தமிழ் பண்பாட்டு விளையாட்டுக்குத் தன்னை அர்ப்பணித்து சொந்த செலவில் அரங்கமைத்து சமூக நீதி காக்கிறார்!

தமிழ்நாட்டில் சமூகத்தில் படித்த 30 வயது சாமானியன், பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் மாதம் 1லட்சம் சம்பளம் வாங்கினால் நுங்கம்பாக்கத்தில் 800 சதுர அடிக்கு அடுக்குமாடி ப்ளாட் வீடு வாங்க 40 லட்சத்துக்கு 10 ஆண்டுகள் முதுகு உடைய உழைக்கவேண்டும்! கருணாநிதி 30வயது பேரனுக்கு 20,000 இருபதாயிரம் சதுர அடிக்கு நுங்கம்பாக்கத்தில் பிரதான இடத்தில் "ஸ்நோ பௌலிங்" செண்டர் சொடக்குப்போடும் நேரத்தில் அமைந்துவிடுகிறது!

அரசியல் சமூக நீதிக்காவல் என்பது செக்யூரிட்டி கூர்க்கா / செண்ட்ரி என்பது மாதிரி அல்லல் படுவதில்லை! பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தையே அன்புமணிக்குப் பெற்றுத்தர தமிழ்க்குடிதாங்கி மருத்துவர் ராமதாசு கூட்டணி தர்மம் என ஜிப்மர் தர்மம் பண்ணுமாறு மத்திய அரசை வற்புறுத்துவது சமூகநீதிக் காவல்!

வந்தேறி பார்ப்பனர்கள் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆடுமேய்த்து வந்து தமிழனை ஏய்த்துத் தலையில் மிளகாய் அரைத்தனர் எனும் புருடாவை விட்டு கிருமிலேயர் ஓபிசி சிங்கங்கள் உண்மையில் நலிந்தவர்கள் தலையில் மிளகாய் அரைப்பது சமூக நீதி என்று குடும்ப /கட்சி சார் தொலைக்காட்சிகளில் முழங்குவது சமூக நீதியா?

கடைந்தெடுத்த சமூக ஏய்ப்பு!!

அன்புடன்,

ஹரிஹரன்

9 comments:

Hariharan # 03985177737685368452 said...

34156
டெஸ்ட் மெசேஜ்!

viswa said...

இட ஒதுக்கீடு என்பது பொருளாதார நிலை கொண்டே நிர்ணயிக்கப்படவேண்டும்

enRenRum-anbudan.BALA said...

Hariharan,
பதிவு பயங்கர சூடு !

அதே நேரத்தில், நீங்க அளித்துள்ள ஆலோசனைகளில் பல, சிறப்பாகவே
உள்ளன.

அவற்றை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தால், ஓட்டு வங்கி காலியாகி விடும் !

பார்க்க:
http://balaji_ammu.blogspot.com/2007/03/5.html

Osai Chella said...

:-)

BadNewsIndia said...

Good one!

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவது ஒன்றும் rocket science அல்ல.

இதைக் கொண்டுவர நல்ல மனம் தான் வேண்டும். மக்களை ஏய்த்தது போதும் என்ற மனம் வேண்டும்.

ஆதி said...

ஹரிஹரன் சார்,

சூப்பர் பதிவு. கையைக் கொடுங்க. வாழ்த்துக்கள் சார்.,

ஆனால் நாம என்னதான் எழுதினாலும் திம்மிகளின் காதில் ஏறப்போவது இல்லை. மூளை இருந்தால்தானே சார் சிந்திப்பதற்கு?

வடுவூர் குமார் said...

ஹரி
பல நல்ல திட்டங்கள்/கருத்துக்களை முன் வைத்துள்ளீர்கள்.
முதலில் கவனிக்கப்பட வேண்டியது..
ஒவ்வொரு இந்தியனின் அடையாளம்.
இன்றும் ஓட்டு போட கடவுச்சீட்டு/டிரைவிங் லைசென்ஸ்/சிலரிடம் அடையாள அட்டை, என்று பல விதமாக உள்ளது.நம் தேசம் மாதிரி மக்கள் தொகை பெருகிய இடங்களில்,Accountability மிக அவசியம்.
ஐரீஸ் அடையாளம் நல்ல முன் மாதிரி.

இதெல்லாம் நம் அரசு அலுவலர்களுக்கு நன்கு தெரிந்திருந்தாலும் அதை அமுல் படுத்த முடியாத "காரணங்களை" களையவேண்டும்.

Hariharan # 03985177737685368452 said...

//இட ஒதுக்கீடு என்பது பொருளாதார நிலை கொண்டே நிர்ணயிக்கப்படவேண்டும் //

வாருங்கள் விஸ்வா,

இன்றைக்கு சமூகத்தில் ஒருவரது கல்வி, வேலை+பொருளாதாரம் இவைகளாலேயே அவரது சமூக அந்தஸ்து அமைகிறது.


எனவே பொருளாதாரத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது சரியான கருத்து.

Hariharan # 03985177737685368452 said...

//பதிவு பயங்கர சூடு !

அதே நேரத்தில், நீங்க அளித்துள்ள ஆலோசனைகளில் பல, சிறப்பாகவே
உள்ளன.

அவற்றை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தால், ஓட்டு வங்கி காலியாகி விடும் //

எ.அ.பாலா,

உண்மையோடு உரசுவதால் சூடு தீப்பொறி கொஞ்சம் பறக்கும்!

அரசியல்வாதிகளுக்கு எல்லாம் தெரியும். ஓட்டுப்பொறுக்கியாக நலத்திட்ட நிதிக் களவாணித்தனம் செய்ய இட ஒதுக்கீடு சாகாவரம் பெற்ற அஸ்திரம்!

மக்கள் நலன் பரவலாகச் சாமனியனைச் சென்றடைய எதாவது உருப்படியாகக் கொஞ்சம் செய்ய இப்படிக்கிடுக்கிப்பிடி சுப்ரீம் கோர்ட் போட்டால்தான் ஆச்சு என்பதே மகா கேவலமான ஆட்சித்திறன்!!

ஏட்டையா செய்யவேண்டியதைக்கூட சிபிஐ தான் விசாரிக்க வேண்டியிருக்கிறது! முன்சீப்கோர்ட் முன்வந்து செய்ய வேண்டிய சீர்திருத்த விஷயங்களை சுப்ரீம்கோர்ட் செய்யவேண்டிய அவலம்!!