Wednesday, April 04, 2007

(142) இடஒதுக்கீடு VS தோப்பனார்...அத்திம்பேர் தரும் விழிப்புணர்ச்சி

இடஒதுக்கீடு குறித்த செந்தழல்ரவியின் இந்தப்பதிவில் குழலி இட்ட பின்னூட்டத்தில் உண்மை கொஞ்சம் வெளிப்பட்ட பகுதி கீழே:

"முற்படுத்தப்பட்ட சாதி மாணவர்களுக்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கும் எங்கே தெரியுமா இடைவெளி? அவர்களுக்கு கிடைக்கும் சூழல், அப்பா, அம்மா, அக்கா, அத்திம்பேர் என அத்தனை படித்தவர்களின் வழிநடத்துதல் இருக்கும், ஆனால் எத்தனை பணமிருந்தாலும் இவைகள் மற்றவர்களுக்கு கிடைப்பதில்லை, கண்கூடாக நீயே கூட பார்த்திருக்கலாம், கொஞ்சம் பணம் உள்ள தொழில் செய்யும் குடும்பங்களிலே படிக்கறதை விட்டுட்டு கடையில் உக்கார் என்று சொல்வதை, இதற்கு காரணம் படிப்பை பற்றிய ஒரு விழிப்புணர்ச்சி இல்லாமை, அல்ட்டிமேட்டாக இதற்கு பின்னுள்ள காரணத்தை நோண்டினால் அது நிறுத்துமிடம் சாதியாகவே இருக்கின்றது. மேலும் பணம், வருமானம் சொத்து இவைகள் நிலையானதில்லை, எந்த நேரத்தில் பணம் சொத்துகளை இழந்து அடுத்த வேளை சோற்றுக்கு சிங்கியடிக்கலாம், அப்போது க்ரீமிலேயராக இருந்தவன் இப்போது பாவர்ட்டி லைனுக்கு கீழ் வரலாம்."


குழலியின் பின்னூட்டம் சொல்லும் இந்த உண்மையை அலசலாம்:

//முற்படுத்தப்பட்ட சாதி மாணவர்களுக்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கும் எங்கே தெரியுமா இடைவெளி? அவர்களுக்கு கிடைக்கும் சூழல், அப்பா, அம்மா, அக்கா, அத்திம்பேர் என அத்தனை படித்தவர்களின் வழிநடத்துதல் இருக்கும், ஆனால் எத்தனை பணமிருந்தாலும் இவைகள் மற்றவர்களுக்கு கிடைப்பதில்லை//

அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டுதல் தர வாழ்க்கையை நெறியோடு வாழ்ந்திருத்தல் அவசியம். நெறி என்பது எந்தப் பிராயத்தில் எதைச்செய்யவேண்டும் என்கிற வாழ்வியல் ஒழுக்கம்.

குடி, கூத்து, கும்மாளம், என்பவைகளில் தன் பெரும்பகுதி வாழ்வைச் செலவிட்டு விட்டுப் பின்னாளில் தோப்பனார்கள்.. அத்திம்பேர்கள் மாதிரி வழிகாட்ட வழிவகை இல்லாமல் இருக்கிறதே என்பதான எண்ணம் அழுக்காறை மட்டுமே தரவல்லது.

ஏழ்மையால் குடும்பம் சரிவர உண்ண உணவில்லை எனும் இயலாமையிலும் திங்கள் கிழமை பட்டினிக்கு சோமவார/பிரதோஷ சிவனுக்கு விரதம், செவ்வாய் வெள்ளிக்கிழமை பட்டினிக்கு சரஸ்வதி, லஷ்மி என்று அம்பாள் விரதம், வியாழக்கிழமைக்கு ராகவேந்திரர், தஷிணாமூர்த்திக்கு விரதம் சனிக்கிழமை பெருமாளுக்கு விரதம் என்று இயலாமையால் விளைந்த பட்டினிக்கொடுமையை தெய்வீகத்துடன் இணைத்து எதிர்கொள்ளும் மனோவலிமையை பிராமண அப்பா, அம்மா, அத்திம்பேர் தாங்கள் முன்னுதாரணமாக இருந்து வாழ்ந்து வழிகாட்டுகிறார்கள். லீடர்ஷிப்/Guidance பை எக்ஸாம்பிள் என்று வாழ்ந்து வாழ்வில் பிச்சைப்புகினும் கற்கை நன்றே என்பது முற்படுத்தப்பட்ட பிராமணசாதி மாணவர்களுக்கு அவர்கள் பெற்றோரால் சொல்லித்தரப்படுவது!

உடலைப் போற்றி வாழ்வதாக பகுத்தறிவு பேசிவிட்டு, தெய்வத்தை வழிபட்டு நெறிப்படுத்தி மனவலிமை தரும் சம்பிரதாயங்களை இழித்துரைத்து, வீசி மிதித்து எறிந்துவிட்டு ஐம்பதுகளில் தன் அடுத்ததலைமுறையை வழிகாட்ட தான் பின்பற்றிவிடாத சிறந்த நெறிகள் எங்கே திடீர் என்று வரப்போகிறது உதவிக்கு!

மூன்று தலைமுறையாக இருக்கும் பிராமண டாக்டரைப்பார்,ஆடிட்டரைப்பார், வக்கீலைப்பார் எனும் கணக்கெடுப்பு கதைக்கு உதவாது!

குடி, கும்மாளம், கூத்து, சூதாட்டம் என்று வாழ்ந்த வாழ்க்கையில் தகறாறு முற்றி கொலை,வெட்டு, குத்து என்று மிருகமாக உணர்வுகளைக் காட்டிவிட்டுப் பின்பு போலீஸ் ஸ்டேஷன், ஜெயிலில் அடைபட்டு எத்தனை பிராமண அப்பா, சித்தப்பா,மாமா, அத்திம்பேர்கள் இருக்கிறார்கள் என்று கணக்கெடுப்பு எடுத்தால் வழிகாட்டுதல் தர தோப்பனார் அத்திம்பேர்களுக்கு உதவுவது எது என்பது புலப்படும் ?

குடி, கூத்து, சூதாட்டம் , கும்மாளமாக தன் உடலுக்காகவும், உணர்வுகளுக்குமாக வாழ்வை அர்ப்பணித்து அடுத்த தலைமுறைகளுக்கு வழிகாட்ட இயலாமல் முடக்கிக்கொள்வது யார்?

உடல் சுகம், உணர்வுகளுக்கு அடிமையாவதிலிருந்து விடுதலை பெற ஒருவனுக்கு அறிவு எங்கிருந்து கிட்டும்? சிறப்பான வாழ்க்கை வாழ்ந்து அனுபவங்களை வாழ்வியல் தத்துவங்களாக, நெறிகளாகத் தொகுத்துவைத்த முன்னோர்களின் , ரிஷிகளின், முனிவர்களின், சித்தர்களின் வாக்குகளில் இருக்கிறது.

குடும்பத்தில் மேன்மையான எண்ணங்கள் அனைவரிடமும் மேலோங்க நன்னெறி ஒழுகி வாழ்க்கை வாழ்வது இன்றியமையாதது!

ஆசை உந்தித்தள்ள, உணர்வுகள் பொங்க அரிவாளைத்தூக்கி அப்பன் வழிச் சொந்தங்களை சொத்துக்காக வெட்டிவீசி தன் குடும்பத்தை, தன் வாரிசுகளை அவர்கள் சிறப்பான வாழ்க்கையை சின்னாபின்னப்படுத்துவது யார்?

பழிவாங்கும் நடவடிக்கையாக அடுத்துத் தொடர்ந்து அரிவாள் எடுத்து வெட்டிக்கொண்டு பொருதி, பொருந்தாத வாழ்வை வாழ்வது யார்? உணர்வுகளை மேம்படுத்தாமல் பிற்பட்டு, மிகவும் பிற்படுத்தப்பட்டு, தாழ்த்தப்பட்ட சிந்தனைகளைச் சிந்தித்து வாழ்க்கையில் தான் மேலே ஏறாமல் இருப்பது என்பது முற்றிலும் தனிநபர் - குடும்பத்தின் மனம்-சிந்தனை சம்பந்தப்பட்டது! குடும்பச்சூழலை உருவாக்கிக்கொள்வது ஒவ்வொரு தனிநபருமாகத்தானே!

தோப்பனார், அத்திம்பேர்கள் அறிவால் பொருதுவதால் தாங்கள் மோசடி செய்யப்பட்டாலும் பகவான் உன்னை தண்டிப்பார் என்று தன்னைத் தேற்றிக்கொண்டு அடுத்ததாக் காத்திருக்கும் தினசரி வாழ்வுப் பிரச்சினையை பார்க்கக் கிளம்பிச்செல்ல எது உதவிக்கு வருகிறது தோப்பனார், அத்திம்பேர் வகையறாக்களுக்கு??

வேதாந்தம், உபநிடம் சொல்லும் தத்துவங்களை மேற்கோள் காட்டி தினசரி வாழ்வை உணர்வுகள் கொந்தளித்து தவற்றைச் செய்து சிக்கலில் மாட்டாமல் இருக்க முற்பட்ட சாதி அப்பா, அம்மா, அத்திம்பேர்கள் மாணவர்களுக்குத் தாம் வாழ்ந்து வழிகாட்டுகிறார்கள்.

வழிகாட்ட நல்லவழியில் வாழவேண்டும். நல்லவழியை அறிய மனம் திறந்த நிலையில் இருக்கவேண்டும். தன் அப்பன், பாட்டன் நல்ல உதாரணம் இல்லை எனில் அருகாமையில் நன்னெறியில் வாழ்பவர்களது துணையோடு வழிகண்டு வாழ வேண்டும்!

எத்தனை துரோகம் செய்த உறவினராக இருந்தாலும் தோப்பனார், அத்திம்பேர்கள் நீ துரோகம் செய்த அவனைப் பழிவாங்க வேண்டும் என்று வெறுப்பு ஊட்டி வளர்ப்பதில்லை! தெய்வ சங்கல்பம்! விடு அவனை! நினைக்காதே அதை மறந்துட்டு நாரயணன் பேரைச் சொன்னாலாவது புண்ணியம் என்று வெறுப்பு வழியில் அடுத்த தலைமுறை சக்தியை விரயம் செய்து விட்டு அல்லல் படாமல் இருக்க தெய்வத்தைத் துணைக்குக் கொண்டு தோப்பனார், அத்திம்பேர்கள் வழிகாட்டுகிறார்கள்!

வெறுப்பு நொடியில் பல்கிப்பெருகி சக்தியை வீண்விரயமாக்கி ஆளைக்குழியில் தள்ளும்!

சேவல்சண்டையில் சேவல்காலில் பங்காளி, எதிரியின் சேவலைக் வெல்ல கத்தியைப் பழுக்கக் காய்ச்சி விஷத்திராவகத்தில் முக்கி, மறுபடி பழுக்கக்காய்ச்சி விஷத்தில் முக்கி என்று கத்தியே விஷம் ஆகும்படி விஷத்தை ஏற்றி எதிரியின் சேவலை வெல்லத் தன் சேவலை மூஞ்சிக்கு மேல் தூக்கிக்கொஞ்சும்போது விஷக்கத்தி தன்மீதே கீறி மாண்டு போவதற்கு இணையானதான "பார்ப்பன எதிர்ப்பு" விஷத்தை ஏற்றிக்கொண்டு திரிந்தால் பார்ப்பன எதிர்ப்பு எனும் விஷத்தை மட்டுமே விஷயமாக, விஷமமாகச் சொல்லி வழிகாட்டினால் சமூக முன்னேற்றம் ஆதாய பிழைப்புவாத அரசியலால் பிற்படுத்தப்பட்ட , மிகவும் பிற்படுத்திக்கொண்டுவிட்ட சமூகத்தினர்க்கு முறையான வழிகாட்டுதல் கானல் நீராகவே அமையும்!

வீட்டிலே அப்பா, அம்மா, அத்திம்பேர் வழிகாட்டல் உருப்படியாக அமைய முதலில் தனிமனித ஒழுக்கம் வேண்டும்! அர்ப்பணிப்பு உணர்வு வேண்டும்! தியாகம் செய்யும் மனம் வேண்டும்!

இன்று நான் மேம்பட்ட வாழ்வு வாழ்வதற்கு எனது தந்தையின் தியாகம், அர்ப்பணிப்புடன் கூடிய வழிகாட்டல் பின்புலமாக இருக்கிறது! என் தந்தை குடிக்காத சாராயம், ஆடாத சூதாட்டம், அதில் இழக்காத பொருள், மன நிம்மதி,
இறைவனிடத்தில் சமர்ப்பித்துவிட்டு அந்த சமர்ப்பண சிந்தனை தந்த மனோவலிமையால் சிரமங்களை எதிர்கொண்டது, வெற்றி பெற்றது என அனைத்தும் நல்ல நெறிகளைப் பின்பற்றி வாழ்ந்த வாழ்வியல் தந்த வழிகாட்டுதல் தந்த பரிசு!



//இதற்கு காரணம் படிப்பை பற்றிய ஒரு விழிப்புணர்ச்சி இல்லாமை, //

விழிப்புணர்ச்சிக்கு விழிகள் திறந்திருக்க்க வேண்டும். உணர்ச்சிகள் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டியது அவசியம். டாஸ்மாக்கில் கட்டிங், குவார்ட்டர் என்று பொருளை விரயம் செய்து எதிர்காலம் வீணாக்குவது ஏன்? டாஸ்மாக்கில் வரிசையில் நிற்பவர்களில் யார் பெரும்பான்மையாக இருக்கின்றார்கள்? தோப்பனார், அத்திம்பேர் வகையறாக்களா?

டாஸ்மாக் மூடினால் முள்காட்டில், முந்திரிக்காட்டில் ஊறல் போட்டு சரக்க்கு காய்ச்சுவது யார்? தினம் சரக்கு உள்ளே சென்றே ஆகவேண்டிய தாமச மனோநிலையில் இருந்து உழல்வது யார்?

கல்லூரிக்குப் படிக்கையில் தினம் அருகாமை திரையரங்கில் அஞ்சரைக்குள்ளே வண்டி, பிரமீளா, பாலன் கே நாயர் நடித்த பலான படங்கள் பார்த்து உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைக்காமல், கிங்பிஷர், ஹேவர்ட்ஸ்,கல்யாணி, கோல்டன் ஈகிள் பீர் அடிப்பது எனும் முனைப்பு முக்கியமாகக் காட்டுவது யார்? தோப்பனார், அத்திம்பேர் வகையறாக்களா?

வசதி இல்லை என்றாலும் தந்தையானவன் தினமும் தீர்த்தவாரியிலேயே இருப்பது, வசதி இருந்தால் தந்தைஒருபக்கம், மகன் இன்னொருபக்கம், அல்லது தந்தை மகன், மாமா-மருமகன் என்று தீர்த்தவாரி, கும்மாளம் , சூதாட்டம், கூத்து என்று உடலைக் கொண்டாடுவது மட்டுமே வாழ்க்கை என்று தொலைநோக்கைத் தொலைத்து வாழ்வது விழிப்புணர்ச்சியைத் தருமா?

தோப்பனார், அத்திம்பேர் வகையறாக்கள் இம்மாதிரியான தொலைநோக்குடனா இருக்கின்றார்கள்? உடலைக்கொண்டாடுகின்றார்கள். அத்வைதம் சொல்லி கடவுள் உனக்கு உள்ளே இருக்கின்றார் என்று உடலை உருப்படியான தெய்வீகமான, நல்ல நெறிமிகுந்த சூழலில் இருப்பதை பேணுவதன் மூலம், தம் உள்ளத்தை ஒருமுகப்படுத்தி தொலைநோக்கை வாழ்வில் போதிக்கின்றனர்!

நாட்டிலிருக்கும் அ ஆ இ தலைவன் , தலைவி வாழ்க, என்று குவார்ட்டர்,பிரியாணி பேட்டாக்காசுக்கு வேண்டி முப்பெரும், ஐம்பெரும் விழா பகுத்தறிவு, சுயமரியாதை அரசியல் கூட்டங்களுக்கு சென்று வாழ்க்கையைத் தேடுகின்றார்களா தோப்பனார், அத்திம்பேர் வகையறாக்கள்??

ஊரில் திரையரங்குகளில் ஈஉ ஊ சினிமா நடிக நடிகையர்க்கு தற்கொலைப்படை அமைத்துத் தோரணம், கட் அவுட்க்குப் பாலாபிஷேகம் செய்த படி வாழ்க்கையை வாழ்கின்றார்களா அத்திம்பேர், தோப்பனார் வகையறாக்கள்

//மேலும் பணம், வருமானம் சொத்து இவைகள் நிலையானதில்லை,எந்த நேரத்தில் பணம் சொத்துகளை இழந்து அடுத்த வேளை சோற்றுக்கு சிங்கியடிக்கலாம், அப்போது க்ரீமிலேயராக இருந்தவன் இப்போது பாவர்ட்டி லைனுக்கு கீழ் வரலாம்."//

அடடே! குழலி ! உங்களையே அறியாமல் கீதை / உபநிடம் சொல்லும் நித்ய-அநித்ய விவேகம் சொல்லும் நிலையானது எது? நிலையற்றது எது? உண்மையைச் சொல்லும் ஞானமே நிலையானது எனும் உயர்ந்த தத்துவத்தை உணர்ந்த வார்த்தைகள் வந்து விழுகின்றன!

அன்புடன்,

ஹரிஹரன்

15 comments:

Hariharan # 03985177737685368452 said...

34482
டெஸ்ட் மெசேஜ்!

Hariharan # 03985177737685368452 said...

பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் பின்னூட்டமாக வெளியிடச் சொன்ன தகவல் கீழே:

பிராமண சமுதாயத்தின் மேன்மைக்கு அவர்களின் குல, தனிமனித ஒழுக்கமும், இறையையொத்த வாழ்வும் முக்கிய காரணங்கள் என்பதை நான் ஒப்புகிறேன்.

வாழும் சூழல் இன்று பாமர இதர சாதி மக்களுக்கு கெட்டிருக்கிறது என்பது வெளிப்படை.

இதை பேசினாலோ, இருப்பதை ஒப்புவதாகும் என்று குறுகிய மணம் கொண்டு அரசு ஒன்றும் இதுவரை செய்யவில்லை.

என் தனி வாழ்வில் அமைந்த ஒரு நிகழ்ச்சியை இங்கு பதிகிறேன். நான் இருந்த மயிலை பிருந்தாவனம் தெரு கடைசியில் பல ஏழை சேரிகள் இருக்கின்றன. இவற்றில் தினமும் கொண்டாட்டமும் அல்லது கூச்சல் சண்டையும் நடக்கும். பல குடும்பங்களில் தனிமனித ஒழுக்கம் கெட்டு மனை மாட்சி அழிந்து போயிருந்தன. கணவனுக்கும், மனைவிக்கும் பல குடும்பங்களில் சந்தேகமும், காழ்ப்பும் இருக்கும். ஏழ்மை பல அயர்வுகளை கொடுத்து வாழ்வை ஒரு நரகமாக்கி இருந்தது. அதற்கு அவர்கள் தன் புண்களை மறைக்க தற்காலிக மலிவு சாதனங்களையே தேடினார்கள்.

குழந்தைகளை கவனிப்பார் இல்லை. அவை பள்ளிக்கு சென்று பாடம் படித்தாலும் அவற்றை கூர்ந்து நோக்கி தினசரி வழிநடத்துவார் இல்லை. வாழ்க்கையின் சூழலில் சிக்கிக்கொண்ட பல தாய் தந்தையர்களை மறந்து அந்த குழந்தைகள் எப்போதும் பிற குழந்தைகளுடன் எப்போதும் சாலியில் விளையாடிக்கொண்டும் விளக்கு வெளிச்சத்தில் மதில் மேல் அமர்ந்தும் பெரிதும் வீண்டித்துக்கொண்டிருந்தார்கள்.

நான் கல்லூரியில் இருந்தபோது ஒரு குழு அமைத்து அம்மாதிரி சிறுசிறு குழந்தைகளுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் ட்யூஷன் மற்றும் பிற கலைகளை கற்றுக்கொடுக்க முயற்சித்தோம். அது பெரிய ஃப்ளாப் ஆகிவிட்டது. ஆறு மாதம் முயன்றும் அந்த குழந்தைகளை மனது ஒருமைப்படுத்த முடியவில்லை. அவர்கள் பேசும் ஆபாச வார்த்தைகள் சாதாரணமாக பொருள் அறியாமல் பேசினார்கள். தாம்பத்திய ரகசியங்கள் அவர்களுக்கு பள்ளிப்பாடமாய் இருந்தன. தாய், தந்தை உடலுறவை இவர்கள் ஏதோ நாட்டுநடப்பு போல் சிரித்து பகிர்ந்து கொண்டார்கள். அந்த குழந்தைகளுக்கு மாமன், அப்பன் முதலானவர்களால் சிகரெட் பழக்கம் வலுக்கட்டாயமாய் வரவழைக்கப்டுகிறது.

இந்த கொடுமைகளை கண்டு மனம் வெம்பினேன். இவர்கள் வாழ்க்கையில் எது முக்கியம், எது மோசம் என்று கூட அறியாமல் இருக்கிறார்களே என்று பதைத்தேன்.

ஏழை வர்க்கத்தினர் செய்ய வேண்டிய முயற்சிகள் இன்னும் அதிகம். ஒரு தியாக மனப்பான்மை வேண்டும். உழைப்பில் ஒரு ஈர்ப்பு வேண்டும்.

கடைசியில், ஜானகிராமன் என்ற அந்த தெரு பெரிய மனிதர் (டிரான்ஸ்போர்ட் கம்பெனி வைத்திருக்கிறார். பார்ப்பனர் அல்ல) எங்களை கூப்பிட்டு ஏன் இந்த வேலை, ஒரு பயனும் இல்லை, இவர்களுக்கு முடிந்தால் காசு கொடுங்க. வேறு ஒன்றும் முடியாது என்று வருத்தப்பட்டு சொன்னார். எங்கள் பாட வகுப்புகள் இனிமையாக இழுத்து மூடப்பட்டன.

Unknown said...

ஹ்ரிஹரன்

நீங்கள் இருக்கும் திசை நோக்கி எனது சாஷ்டாங்க நமஸ்காரம்.

தியாகி நெல்லை ஜெபமணி என்று ஒரு அருமையான பேச்சாளர் இருந்தார். அவர் நாடார் இனத்தைச் சார்ந்தவர். நீங்கள் சொன்ன அனைத்து விஷயங்களையும் அவருக்கே உரிய நகைச்சுவை பாணியில் சொல்லி, பிராமணர்களை வெறுப்பதற்குப் பதிலாக அவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களை நாம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பார். நீங்கள் சொன்னால் அடிக்க வருவார்கள் எந்த ஜாதியையைச் சேர்ந்தவராக இருந்தாலும் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நீங்கள் சொல்லும் நல்லொழுக்கத்தைப் பேணும் குடும்பங்கள் நல்ல வழியில் வளரும்.

அன்புடன்
ச.திருமலை

உண்மைத்தமிழன் said...

மிக அருமை ஹரிஹரன். இப்போது சிறைச்சாலைகளில் உள்ளவர்களில் முக்கால்வாசிப் பேர் பிராமணர் அல்லாதவர்கள்தான்.. சினிமா தியேட்டர்களில் பால் அபிஷேகம் செய்பவர்களில் ஒருவர் கூட பிராமணனாக இருக்க மாட்டான். அவர்களுக்குத் தெரியும் நேரம் பொன் போன்றது என்று.. ஆனால் திராவிட இயக்கத்தினர்தான் மக்களை வெறும் உணர்ச்சி ஜென்மங்களாக்கி நமக்கு கல்வி தேவையில்லை.. அது தானாக வருவது. வந்தால் வரட்டும். வரவில்லையென்றால் தேடிப் போய் கஷ்டப்படாதே.. என்று எம்மக்களை முட்டாளாக்கி தாங்களும், தங்கள் குடும்பத்தினரின் வளர்ச்சியை மட்டுமே பெருக்கிக் கொண்டார்கள். இதுதான் உண்மை. இதைக்கூட புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு நம் மக்களை மூளைச் சலவை செய்து வைத்திருக்கிறார்கள். புரிந்து கொண்டவர்களும் ஒதுங்கிப் போய் விடுகிறார்கள். என்ன செய்வது? தமிழ்நாட்டின் தலையெழுத்து..

அது ஒரு கனாக் காலம் said...

Forget the arguments, but be it is Kuzali or chella, are not going to see the truth in the situation ( or your statement ).

It calls of lot of sacrifice from parents to bring up a child, I just wanted to say one instance, I was in a flight, my co passager from Canada with a cap and beard ( originally from Hyderabad but moved to Canada 25 years back.) , he just asked with bit of sarcassism what’s my take on Mira Nair’s Water..( she is from Canada) I had to tell him, that there is so many widows (single mothers,) with so many restrictions on their dress, movements, what they can eat , what they can’t eat ( onion /garlic) …. They just took upon the task of brining up the young ones as a Tabas …a single motto in their life. And we had seen lots and lots of good human beings from their effort… now, the gentleman from Canada, give a little thought, and nodded, yeah…he shares his experience, as he too know lots of incidence, what is shown in the movie is not correct, taking a exception and bringing disrepute to section of people or religion.

Back to reservation, certainly reservation should be denied to quite a lot of section of backward castes, however the improvement if any should be in the primary level, more schools, may be residential schools, as their home atmosphere is not conductive…these are constructive measures, what Kuazali or chella is looking for a vote capturing techniques …

I hope they respond !!!!????

Sundar - Dubai

Krishna (#24094743) said...

அருமையான பதிவு ஹரிஹரன். இதே போல நிகழ்ச்சி என் வாழ்விலும் நிகழ்ந்தது. எங்கள் வயல்களில் வேலை செய்யும் ஏழை தொழிலாளிகளின் குழந்தைகளை (சுமார் 20 பேர்), எனது பாட்டனார் கல்விச் சாலையில் சேர்த்து, பாட புத்தகங்கள் மற்ற இதர செலவுகளையும் செய்தார். முதல் முறை அவர்களுடைய பெற்றோரிடம் கல்வி உதவித் தொகை கொடுக்கப்பட்டது. புத்தகங்களும் வரவில்லை, பள்ளிக் கட்டணமும் செலுத்தப் படவில்லை. எல்லாம் கள்ளுக் கடைகளுக்கும், பீடிக் கட்டுகளுக்குமே செலவு செய்யப்பட்டிருந்தது. நானும், எனது கல்லூரி நண்பர்களும் அன்றிலிருந்து இக்குழந்தைகளின் கல்வியை ஒழுங்கமைக்கப் பணிக்கப் பெற்றோம் எனது பாட்டனாரால். எங்கள் வீட்டு மாடியில், ஓலைப் பந்தல் வேயப்பட்டு இச் சிறுவர்/சிறுமியருக்கு எங்களால் ஆன அளவு கற்பித்தோம். 20-ல் கடைசியில் தேறியது 5 பேர் தான். மற்ற அனைவரும் அவர்களுடைய பெற்றோரின் சுய நலத்தால் கல்வியிழந்தனர். பெண் குழந்தைகள் பீடி சுற்றினர். பல ஆண் குழந்தைகள் தீப்பெட்டி ஆலையிலும், மற்ற சில அடிமை கூலி வேலைகளுக்கும் அனுப்பப் பட்டனர். இன்றும் அதில் சிலர் சிறந்த 'குடி'மகன்களாக ஊர் சுற்றி வருகின்றனர். மற்றவர்கள் கதி தெரியவில்லை - அவர்களது பெற்றோருக்கே. நன்கு கற்ற 5 பேரில் ஒருவர் இப்போது வெளி நாட்டில் வாழ்கிறார். இருவர் அரசுப் பணியிலும், ஒருவர் தனியார் பணியிலும், மேலும் ஒருவர் சொந்தமாக வியாபாரமும் செய்து தங்களை வாழ்வில் நிலைநிறுத்தியுள்ளனர். இன்றளவும், வருடம் பொங்கலன்று என் பாட்டனாரைச் சந்தித்து ஆசி பெறத் தவறுவதில்லை.

தோப்பனார், அத்திம்பேர் இல்லாவிடினும், மக்கள் முன்னேற வழியுண்டு என எடுத்துக் காட்டவே இதைப் பதிகிறேன்.

Hari said...

once again, good post frm u. It will be a wake-up call for all.

Hariharan # 03985177737685368452 said...

//கடைசியில், ஜானகிராமன் என்ற அந்த தெரு பெரிய மனிதர் (டிரான்ஸ்போர்ட் கம்பெனி வைத்திருக்கிறார். பார்ப்பனர் அல்ல) எங்களை கூப்பிட்டு ஏன் இந்த வேலை, ஒரு பயனும் இல்லை, இவர்களுக்கு முடிந்தால் காசு கொடுங்க. வேறு ஒன்றும் முடியாது என்று வருத்தப்பட்டு சொன்னார். எங்கள் பாட வகுப்புகள் இனிமையாக இழுத்து மூடப்பட்டன. //

இவர்களது விழிப்புணர்வு எல்லாம் கழக முப்பெரும் விழாக்கு இன்ன அமௌண்ட், வாழ்க, ஒழிக குரலுக்கு இன்ன அமௌண்ட், எம்.எல்.ஏ எலக்சனுக்கு இன்ன அமௌண்ட், எம்பி எலக்சனுக்கு இன்ன அமௌண்ட், ஆர்ப்பாட்டம், கிளர்ச்சி ஊர்வலத்துக்கு சாராயம், பிரியாணி, அமௌண்ட் எனும் ரேஞ்சிலேயே வைத்திருப்பது பகுத்தறிவு, சுயமரியாதைக் கழகங்கள்!

சாராயம், பிரியாணி, காசு தவிர்த்து யோசிப்பதைக் கற்றுக்கொள்வதில் ஆர்வமற்ற தாமச குணத்திலேயே ஊறிப்போய் இருந்தால் வழிகாட்டல் எப்படி நல்லதாக இருக்கமுடியும்???

Anonymous said...

I pity the Bramins.... and here is why ....

1. In the animal kingdom, minimum nos are required to survive

2. Darwin [survival of the most numerous and fittest] is basic and goes across animal and even plant kingdoms.

3. Over the EARLIER centuries Bramins understood this and had enough children to continue progeny / survival .... Dhrama. அபுத்ராஹ் புத்ரிணஸ்ஸந்து [plural !!] is the invocation. Not புத்ரஸ்சந்து NOR "..we two our two.." or இரண்டுக்கு மேல் வேண்டவே வேண்டாம்

4. In the 1950s and 1960s South Indian Bramins whole heartedly embraced family planning.

Already being a numerical minority and being the first to embrace family planning and being politically divided, they soon lost their political power in a democracy.

5. In south India, In the 60s and early 70s, many Upper castes [esp. bramins ] were driven out of agriculture & lost their lands and totally uprooted due to a pseudo communist ... pseudo Dravidian hogwash where the commie leaders became kings.

The same was to be repeated in the North of India over the late 80s and 90s - esp. after VP Singh unleashed the mandal power.

It took more time in the North as the North India brahmins were less divided and more populous and slower to bite the family planning pill

6. To continue : ....In general, Bramins who were already numerically inferior and politically divided left villages lock stock and barrel. (one sees RSS / BJP supporting bramins, Some congress, some forward block and some nowhere !!)

7. Many bramins were driven to abject poverty in a single generation and had to resort to மனோ வலிமை or கீதை or உபவாசம் or திருக்குறள் as the original poster said, so as to continue their lives with sanity

Its a further pity that few like the Kashmiri Pandits who continued to have average 3 kid per family and stuck to their roots were ethnic cleansed

That most bramins resorted to மனோ வலைமை and NOT bullet வலிமை is commendable

That the brahmins as a whole haven't been as good as Nadars or the Muslims to come up political solution*s* to their plight, or common platforms to leverage on their strength, is sad and the main point of my post here

8. To continue with my post, ...After some struggle bramins found that "education" could uplift them.

This happened 10 ... 15 .... 20 years after their migration to cities and in waves. So this started in the early 70s in TN, Kerala etc and some 10 .. 15 years later in other places

9. Initially professional education and later குமாஸ்தா தொழில் did save the bramins to a great extent !!...until the BCs / OBCs / MBCs / DNCs who often follow and copy the bramins now want a share of that pie too - i.e. the education pie!! [look at the names of OBC children these days and you will find Shekar - OK சேகர் !!, சுரேஸ் ! and you will see what I state about copying)

10. To add fuel to fire, Bramins have now adopted a unique policy of having one kid and sending that kid to USA or Canada or Dubai

11. End result these one kid wonders do NOT have votes in India and hardly have votes abroad (at least these do NOT have votes till they become citizens in US ... UK, and no hope anyhow in Sheikdoms !!)

Bramins anyhow did not resort to the gun ....

12. Fast forward ... : Now MBCs and mandals want reservation in IIMs and IITs.

Next will be private companies.

Jagjivan Ram's daughter is already threatening private cos. நீங்களா ரிசர்வேஷன் குடுங்க கண்ணுங்களா... இல்லையின்னா நான் கெட்ட பேர் வாங்க வேண்டி வரும் ன்னு சின்ன புள்ளைங்களுக்கு சொல்லுத மாதிரி சொல்லுதாங்க ....

தலைவிதி யாரை விட்டது. சுப்ரீம் கோர்டின் மண்டை உருளுது !!

13. In the meanwhile well educated bramins are immigrating to US, UK an venting their anger in the blogs about how some sections of society aren't learning it all

Keep them comming

amen என்று சொல்லி முடித்தால் செமத்திய தனமாய் இருக்கும் .... என்ன சொல்லலாம் ?

/by
/Vinayak

Unknown said...

Dear Hariharan

Please read the below statistics also. This speaks volume about who are the real beneficiaries of reservation

Thanks
Sa.Thirumalai

http://www.business-standard.com/economy/storypage.php?leftnm=lmnu2&subLeft=3&autono=279973&tab=r

Hariharan # 03985177737685368452 said...

//தியாகி நெல்லை ஜெபமணி என்று ஒரு அருமையான பேச்சாளர் இருந்தார். அவர் நாடார் இனத்தைச் சார்ந்தவர். நீங்கள் சொன்ன அனைத்து விஷயங்களையும் அவருக்கே உரிய நகைச்சுவை பாணியில் சொல்லி, பிராமணர்களை வெறுப்பதற்குப் பதிலாக அவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களை நாம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பார். நீங்கள் சொன்னால் அடிக்க வருவார்கள் எந்த ஜாதியையைச் சேர்ந்தவராக இருந்தாலும் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நீங்கள் சொல்லும் நல்லொழுக்கத்தைப் பேணும் குடும்பங்கள் நல்ல வழியில் வளரும்.//

வாங்க திருமலை,

கண்களையும், காதுகளையும் திறந்த்துவைத்துக்கொண்டு நல்லதைப் பகுத்தறிந்து தனக்கு மேம்பாட்டுக்கு உதவும் ஆக்கமான வழியைத் தெரிவு செய்யப் பழகவேண்டும்!

RMS said...

//http://www.annauniv.edu/tnea06/rama21.doc

CATEGORY OC BC MBC SC ST
ANNA UNIVERSITY 0 0 0 0 0
GOVT. & GOVT AIDED 0 0 0 0 1
SELF FINANCING 2839 4757 3804 4569 434
//

As per this stats, 2849 seats in OC are vacant. OC is not for FC, it is for all. When people get a seat based on their marks,
Anna University would call all those who secured above the cut-off marks for conselling.
For example, if the cutoff mark for OC is 98%, anna university would a list of people (irrespective of their caste) who secured 98% and above for conselling. In this list all castes will come. During the conselling they can choose the college they want from the available list.

Also the self-financing colleges are affiliated to Anna University. So the government merit seats are available in those colleges also. I studied in Tamil Nadu college of engineering in merit quota only. when I studied 50% seats were management seats and 50% for government merit quota.

Kuzahili is tyring to fool everyone by hiding the reality and trying to project incorrect image.

ஜடாயு said...

// பகுத்தறிவு பேசிவிட்டு, தெய்வத்தை வழிபட்டு நெறிப்படுத்தி மனவலிமை தரும் சம்பிரதாயங்களை இழித்துரைத்து, வீசி மிதித்து எறிந்துவிட்டு ஐம்பதுகளில் தன் அடுத்ததலைமுறையை வழிகாட்ட தான் பின்பற்றிவிடாத சிறந்த நெறிகள் எங்கே திடீர் என்று வரப்போகிறது உதவிக்கு //

சரியான கேள்வி கேட்டிருக்கிறீர்கள் ஹரிஹரன். மிக அருமையான பதிவு.

நீங்கள் குறிப்பிடும் சீர்கேடுகள் அனைத்தும் தினசரி வாழ்க்கையையே போராட்டமாக இருக்கும் ஏழைகள் வீடுகளில் நடந்தால் அதை அனுதாபத்தோடு பார்க்கலாம். ஆனால் ஓரளவு வசதிகள், வாய்ப்புகள் இருக்கும் குடும்பங்களிலும் நிகழ்வதை அதிகப் படுத்தியது திராவிடப் பகுத்தறிவு தான். உண்மை, உண்மை.

// குடும்பத்தில் மேன்மையான எண்ணங்கள் அனைவரிடமும் மேலோங்க நன்னெறி ஒழுகி வாழ்க்கை வாழ்வது இன்றியமையாதது! //

// வழிகாட்ட நல்லவழியில் வாழவேண்டும். நல்லவழியை அறிய மனம் திறந்த நிலையில் இருக்கவேண்டும். //

// வெறுப்பு நொடியில் பல்கிப்பெருகி சக்தியை வீண்விரயமாக்கி ஆளைக்குழியில் தள்ளும்!//

அருமையான பொன்மொழிகள்.

உங்கள் உள்ளத்தில் உண்மை இருப்பதால் தான் இப்படி சக்தியுடன் எழுத முடிகிறது.

உள்ளத்தில் உண்மையது உண்டாகில் வாக்கினிலே ஒளியுண்டாகும்!
- பாரதி

ஜடாயு said...

// Krishna (#24094743) said...
அருமையான பதிவு ஹரிஹரன். இதே போல நிகழ்ச்சி என் வாழ்விலும் நிகழ்ந்தது. எங்கள் வயல்களில் வேலை செய்யும் ஏழை தொழிலாளிகளின் குழந்தைகளை (சுமார் 20 பேர்), எனது பாட்டனார் கல்விச் சாலையில் சேர்த்து, பாட புத்தகங்கள் மற்ற இதர செலவுகளையும் செய்தார். ..//

நண்பர் கிருஷ்ணா எழுதியதைப் படிக்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 20ல் 5 தேறினாலும், அவர்களுக்கு உதவி செய்த உங்கள் சேவை, உங்கள் தலைமுறைகளைக் காக்கும். ஏழைகளுக்கு செய்யும் உதவிக்கு இறைவன் வரம் தருவான்.

அந்த 5 பேரைத் தேறவைத்த உங்கள் உழைப்புக்குத் தலைவணங்குகிறேன்.

// இவர்களுக்கு முடிந்தால் காசு கொடுங்க. வேறு ஒன்றும் முடியாது என்று வருத்தப்பட்டு சொன்னார். எங்கள் பாட வகுப்புகள் இனிமையாக இழுத்து மூடப்பட்டன. //

இந்த அனுபவம் அதற்கு நேர்மாறாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் பொறுமையைக் கடைப் பிடித்திருந்தால் இங்கும் ஒரு சில பேரைக் கடைத்தேற்றியிருக்கலாம். நடுவில் கைவிட்டாலும் இந்த முயற்சியைத் தொடங்கியதற்காக நண்பரைப் பாராட்டுகிறேன்.

K.R.அதியமான் said...

Subject: reg : creamy layer misusing reservation policy

From : K.R.Athiyaman, Chennai - 96

To : Thriru.Ki.Veeramani Ayya Avargal, Chennai

Anbulla Ayya,

The creamy layer (that is, those who are upper middle class and above) among BC/SC/ST communities continue to enjoy the benifits of reservation unashamedly.(i hail from such a family).

We propose that economic criteria should also be included as an additional qualification for being eligible for reservation benefits. Families whose annual income is above say, Rs.1,80,000/- and where the parents are well educated may be deemed as FCs. And many schools, where annual fees are above Rs.60,000 may be classified as FC schools.

Reservation was meant to be a short term issue and never a permenent institution as it has become now. And there should be a standing committe consisting of eminent jurists, educationalists and honest people to perodically evaluate the effects/abuse of reservation benefits. The whole process should a dynamic one, not a static one, which is now a vote bank issue and nutured by vested interests. And there should be a maximum limit for resrvation (and not the present >70%), which should be gradually brought down to zero.

And in promotion among govt staff only seniority, merit and efficency should be the criteria. Only one generation of any family must be eligible for the benefits. Subsequent generation must be deemed FCs.

Unfair reservation benefits to numerous well off students has created resentment and heart burn among FCs and many fair minded people. The caste divisions has become more rigid and divisive (esp in govt offices).

I am sure Thandai Periyar and Ambedhkar would endorse my above views if they are alive today. They were basicaly honest in all issues.

DK should have functioned as a bridge between BCs and SCs (esp in rural areas) and established peace committes for stopping caste clashes. The aliented SCs have formed many organisations of their own to fight for their rights, instead of joinning DK. Blaming brahmins alone for all the ills of the society will not solve any thing.

Thanks & Regards

K.R.Athiyaman
Chennai