Saturday, April 07, 2007

(144) காஞ்சி சங்கரமடத்தின் சேவை Vs தமிழக அரசு சேவை

சின்மயா வித்யாலயா பள்ளிகள், சங்கரா வித்யாலயா பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் தருவது மக்கள் சேவையே அல்ல வெறும் வியாபாரம்தான் என்கிறார் ஜெய்சங்கர்.

முதலில் பொது மக்களுக்குச் சேவை செய்வது என்றால் அது கட்டாயம் இலவசமாகத்தான் இருந்தாகவேண்டும் எனும் எண்ணத்தால் விளைகின்ற பார்வைக்குறை காரணமாக எழும் எண்ணம் என்றே கருதுகிறேன்.

தரம்மிக்க பள்ளிக் கல்வி என்பது தமிழகத்தின் தலைநகரமான சென்னை மட்டுமில்லாமல் தமிழகமெங்கும் சென்னை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கோவை,என அனைத்துப் பகுத்திகளிலும் கிடைக்கவேண்டும் எனும் எண்ணம் சேவை மனப்பான்மையால் விளைவது.

சங்கரா பள்ளிகள், சின்மயா பள்ளிகளின் கல்விச்சேவையின் தரம் உயர்ந்தது. படிக்கும் மாணாக்கர்களின் எதிர்காலம் ஒளிமயமாக அமைக்க நல்ல கல்வி புகட்டுகிறது.

கள்ளச்சாராயம் குடித்து கெட்டு அழிவதைத் தடுக்க அதிமுக தமிழக அரசு அறுநூறு டாஸ்மாக் கடைகளை தமிழகமெங்கும் திறந்தது! டாஸ்மாக் திட்டத்துக்க்கு எதிர்ப்புத் தெரிவித்து தேர்தலில் வென்ற பாமக,திமுக கூட்டணி அரசில் டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை எட்டாயிரமாக அதிகரிக்கப்பட்டு 34000 பேருக்கு வேலை வாய்ப்புத்தரப்பட்டு "நல்ல" சாராய வியாபாரம் மூலம் 2005-2006 ஆம் ஆண்டில் 5660 கோடி லாபம் தமிழக அரசுக்குக் கிடைத்தது 2006-2007 ஆம் ஆண்டு லாபம் 6965 கோடி லாபம் டாச்மாக் சரக்குகள் மீதான விற்பனை வரிமூலம் அரசுக்கு லாபமாகக் கிடைக்கிறது! டாஸ்மாக் பிஸினஸ் விபரம் இங்கே

இலவச நிலம், இலவச டிவி, இலவச கேஸ் ஸ்டவ் திமுக கூட்டணி அரசு (திமுக+ கூட்டணிக் கட்சி சார்ந்த)பொதுமக்களுக்கு வழங்குவதற்கான செலவு சில நூறு கோடிகள்தான்
மொத்தமே ஆயிரம் கோடிக்குள் வந்துவிடும்!

இம்மாதிரி குடும்பத்தைக் குடிகொண்டு கெடுக்கும் இலவச சேவைத்திட்டங்கள் தமிழகத் தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுவது, கீழ்மட்ட தமிழ் மக்களின் வாழ்வை டாஸ்மாக் சாராயக்கடைகளில் அழித்துவிட்டு அரசு செய்வது எனும் உண்மை பெரும்பான்மை பொது மக்களுக்குப் புரியாதது முழுமையான விழிப்புத்திறன் தரும் தரமான கல்விக்கூடங்கள் வெகுதியாக தமிழக மெங்கும் இல்லாததால் தானே இந்த ஏமாற்றுதல் நடந்தேறுகிறது தமிழகத்தில்!

ஒரு பீர் பாட்டில் விலை 35 ரூபாய், ஒரு குவார்ட்டர் பாட்டில் விலை 60 ரூபாய் ஒருநாளைக்கு ஒரு குடிமகன் 50 ரூபாய்க்குக் குடித்தால் மாதத்திற்கு 1500ரூபாய் மூன்று மாதத்திற்கு 4500 ரூபாய். இது போக போதையில் தெருவில் கவிழ்ந்து கிடந்து கிழிபடும் உடைகள், தொலைக்கும் பொருட்கள், ஆரோக்கியக்குறைவுக்கு மருத்துவச்செலவு என இன்னொரு ஆயிரம் ரூபாய் சேர்த்துக்கொள்ளுங்கள்.

சின்மயா பள்ளிக்கூடத்தில் எல்கேஜிக்கு மூன்று மாத டெர்ம் கட்டணம் 2500 மிக அதிகம் என்று குற்றம் சாட்டினார் ஜெய்சங்கர். மூன்று மாதம் சாரயம் குடிப்பதற்கு ஒரு சாமானியத் தமிழன் செலவழிப்பது குறைந்தபட்ட்சம் 3500 ரூபாய்!

மூன்று மாதத்திற்கு 2500 ரூ செலவில் தரமான கல்விக்காக சங்கரா வித்யாலயா, சின்மயா வித்யாலயா பள்ளிகளில் படிக்கச் சராசரியான தமிழனால் முடியாதா??


எஸ்பிஓஏ பள்ளிகளில் வங்கிப்பணியில் இருப்போர் குழந்தைகள் தவிர பொதுவாக படிக்க விருப்பப்படும் அனைவருக்கும் வாய்ப்புக் கிடைக்கிறதா?

நல்ல சாராயத்தை, சரக்கை டாஸ்மாக்கிலே காசுகொடுத்துப் பெறும் தமிழன் நல்ல தரமான கல்வியை பெற அது இலவசமாகத் தரப்படவேண்டும் எனச் சேவை என்றால் அது இலவசமாகத்தான் எனும் திராவிட அரசியல் மனோவியாதிக்கு உட்பட்டு எதிர்பார்ப்பது சரியானதா?


தமிழ்நாட்டில் கல்வி கற்க இல்லாமையைக் காரணம் காட்டுவது மிகவும் தவறானது. அரசே மக்களுக்கு காலம் காலமாக உவப்போடு தருவது இலவசச் சேவைத்திட்டங்களும், சாரயமும் தான்! சாமானியப் பொதுமக்கள் தமிழ்நாட்டில் பெருவாரியாகக் கல்வி கற்றால் அடுத்து திமுக, அதிமுக, பாமக , தேமுதிக என இலவசத்திட்டங்கள் வாயிலாக மக்களைக் கவர்ந்து ஓட்டுப்பொறுக்கி ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடியாது.

பெருவாரியான கல்விக்கூடங்கள் தமிழகத்தில் ஏற்படுத்தப்படும் போது இடஒதுக்கீடு அரசியலும் தானே காணாமல் போகும்! ஆனால் நாற்பதாண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் தமிழகத்தில் மைனாரிட்டி கிறித்துவக் கல்வி, மருத்துவ நிறுவனங்கள் வெகுதியாகத் தெரியும்படியாகக் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையை குறைவாகவேயும், இன்னமும் படிக்க இடங்களை படிக்கும் மாணவர்களுக்கு ஒதுக்கித்தரும் அளவிலேயே இடப்பற்றாக்குறையிலேயே வைத்திருப்பது சமூக நீதி அரசியல்வாதிகளின் சமூகநீதி இயக்கங்கள்?!

டாஸ்மாக் சாராயக்கடைகளில் ஊற்றித்தர 35000 வேலைவாய்ப்பு ஏற்படுத்திய பகுத்தறிவுத் தமிழகஅரசு மிகநிச்சயமாக அழித்தது மூன்றரை இலட்சம் குடும்பங்களாவது இருக்கும்.

கழகங்களின் தமிழக அரசுகள் தரமான கல்வி நிறுவனங்கள் அமைத்து கல்வி பற்றிய விழிப்புணர்வை தமிழ்நாட்டு அடித்தட்டு மக்களிடம் ஏற்படுத்தவில்லை ஏன்? அனைவரும் கல்வி கற்றால் ஆட்சி, அதிகாரத்தில் இருந்து முதலில் காணாமல் போவது கழகங்கள் தான்!

மருத்துவ மனையில் பதிவுக்கட்டணம் 30 ரூபாயில் இருந்து 100-125 ரூபாய்க்கு சங்கரா மருத்துவமனைகளில் இருக்கிறது என்றார் ஜெய்சங்கர். சங்கரா மருத்துவமனையில் தேவையே இல்லாத எக்ஸ்ரே, லேப் டெஸ்ட்கள், என ஐநூறு ரூபாய்க்குச் செலவு என்ற இதர மருத்துவமனையில் நோயாளிகளிடம் பிடுங்குவதுமாதிரி செய்வதில்லைதானே!

சங்கரா கண்மருத்துவமனை நோயாளிகளுக்கு சிகிச்சை தரும் நவீன டெக்னாலஜியில் என்றுமே முன்னோடியாக முதன்மையில் இருக்கிறது. அரவிந்த் நிறுவனத்தையும் குறை கூறமுடியாது. என்றபோதும் கண்தான, மாற்று சிகிச்சை இவைகளில் முன்னோடி சங்கர நேத்ராலயா!

10 ஆண்டுகளுக்கு முன் சர்க்கரை நோயாளியான எனது தாய்க்கு காட் ராக்ட் கண் அறுவை சிகிச்சைக்கு லென்ஸைக் கண்விழிக்குள்ளேயே வைத்துச் செய்யும் நவீனமுறையில் 25,000 ரூபாய்க்கு செய்தார்கள் சங்கர நேத்ராலயாவில். இன்றுவரை பிரச்சினையில்லை!

சென்னையில் வேலை செய்த காலத்தில் இஎஸ்.ஐ மருத்துவமனையில் மருத்துவம் பெற என்று 3% சம்பளத்தினைப் பிடித்துக்கொள்வார்கள். இஎஸ்.ஐ மருத்துவமனைக்காக பல ஆயிரம் ரூபாய்கள் ஐந்தாண்டுகளில் கட்டாயமாகத் தந்திருக்கிறேன். சைதாப்பேட்டை, கே.கே நகர் இஎஸ்.ஐ கிளை மருத்துவமனைகளுக்கு ஒருமுறை சென்றிருக்கிறேன்! ஐயோ பரிதாபம் எனும் சேவை! இத்தனைக்கும் மாதம் பணம் கட்டாயமாக எடுத்துக்கொள்ளப்பட்ட மருத்துவச் சேவையின் இலட்சணம்! அரசு மருத்துவமனைகள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை! எல்லாவற்றுக்கும் த.நா வெள்ளை மாத்திரை + பொட்டாசியம் பெர்மாங்கனேட் ஊதாநிறத் திரவம் தான்!

முறையான கட்டணத்தில் உயர் தரமான கல்வி, மருத்துவம் தரும் முயற்சி சேவை இல்லாமல் வேறு என்ன?? இல்லாத சில ஆயிரம் ஏழைகளுக்கு ஆண்டுதோறும் நன்கொடையாளர்களுடன் இருக்கும் நல்ல உறவைப் பயன்படுத்தி இலவசமாக கல்வி, மருத்துவம் தருபவை சங்கரா, சின்மயா நிறுவனங்கள்!

அப்பல்லோவுடன் சங்கரா மருத்துவமனைகளின் சேவைத்தரத்தை வேண்டுமானால் ஒப்பிடலாம். கட்டணம் அப்பல்லோவினை விட மிகவும் குறைவானதே என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

தமிழகத்தில் வன்னியர்களது பங்களிப்பாக செங்கல்வராயன் பாலிடெக்னிக், ஆதிபராசக்தி கல்விநிறுவனங்கள் என்பவையும், சௌராஷ்டிர சமூகத்தினரது பங்களிப்பாக சௌராஷ்டிரா பாலிடெக்னிக்,கல்லூரி நிறுவனங்கள், செட்டியார்கள் சமூகத்தினரது பங்களிப்பாக அழகப்பா, அண்ணாமலை கல்வி நிறுவனங்கள், நாடார்கள் சமூகத்தினரது பங்களிப்பாக வெள்ளைச்சாமிநாடார் கல்லூரி நிறுவனங்கள் என இச்சமூகத்தினர் அடர்த்தியாக வாழும் இடங்களில் இச்சமூகத்தினரது பிரத்யேக முன்னேற்றத்திற்கென அமைக்கப்பட்ட இந்த நிறுவனங்கள் வாயிலாக அப்பகுதியில் வசிக்கும் அனைவரும் பயன்பெற்றிருக்கின்றார்கள். விழிப்பு பெற்று இருக்கின்றார்கள்.

அரசு ஆதரவு , அதிகாரம் இல்லாமல், இன்றைக்கும் லாரியிலே ஏற்றினால் நாலு பேர் குறைவார்கள் எனும் அளவுக்குக் குறைந்த அளவில் தமிழக,இந்திய மக்கள் தொகையில் இருக்கும் பிராமணர்கள் தமிழ் நாடெங்கும் , இந்தியாவெங்கும் வெகுதியாக இருப்போருக்காகவும் தமிழகம், இந்தியா முழுக்க நல்ல தரமான பள்ளிக்கல்விக்கு தரமான மத்தியக் கல்வித்திட்ட, மெட்ரிக்குலேசன் பாடத்திட்டத்தில் சங்கரா வித்யாலயா, சின்மயா பள்ளிகள், மருத்துவமனைகள் திறந்து நடத்துவது பொதுமக்கள் சேவை இல்லையா??

சசிகலாவின் மதுத்தொழிற்சாலை, உடையாரின் மதுத்தொழிற்சலை, விஜய் மல்லயாவின் மதுத்தொழிற்சாலைகளில் இருந்து வாங்கப்படும் மதுவகைகளை 7500 கோடிக்குத் தமிழகத்தில் மட்டும் ஆண்டுதோறும் சாராய வியாபரம் செய்து நல்ல சாராயத்தை டாஸ்மாக்கின் வாயிலாக பெருவாரியான பொதுமக்களுக்கு இல்லந்தோறும் 8000 கடைகள் வாயிலாக எடுத்துச்சென்று போதையில் இருக்கும் சமூகத்திற்கு சில நூறுகோடிகளுக்கு கழக ஏஜெண்டுகளுக்குக் கமிஷன், கட்டிங்குகள்குக்காக இலவச டிவி, இலவச அடுப்பு, இலவச கோவணம் என்று சீரழித்துவிட்டு
பார்ப்பனர்கள் அடிமைப்படுத்தினார்கள், பார்ப்பனர்கள் ஒடுக்கினார்கள் என்று ஓலம் போடுவதுதான் மக்கள் சேவையா??

சங்கரா வித்யாலயா, சின்மயா வித்யாலயா கல்வி, மருத்துவ நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளால் மூன்று பேரைக்கூட அழிக்காது ஆண்டுக்கு 100,000 ஒரு லட்சம் மாணவர்களுக்கும் மேல் தரமான கல்வி அறிவோடு நல்ல சிந்தனையையும் மனதில் விதைத்து சாராயபோதையில் சீரழிந்த தமிழ்நாட்டு மக்கள் சமூகத்தினை தெளிவாக்கிவரும் சேவையைச் தொடர்ந்து செய்கிறது!

இந்தக் கல்வி இயக்கங்கள் அமைத்து நல்ல கல்வி முறையான கட்டணத்தில் அனைவருக்கும் தந்து, பெரிய அளவிலான சமூக விழிப்பை ஏற்படுத்துவதில் பெரும்பங்கு ஆயிரக்கணக்கான பிராமணர்களைச் சேர்கிறது எனும் வகையில் நான் முன்பே சொன்ன கருத்தான:
"//பல ஆயிரம் பிராமணசாதியினர் தாங்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தில் சாதிப்பாகுபாடு பார்க்காமல் கல்வி , மருத்துவம் எனப் பல நல்ல விஷயங்கள் செய்துவருவதை, நல்ல முன்னுதாரணத்தை முன்னெடுத்துச்செல்வதை பிராமணீயம் என்று குறிப்பிடலாமே?//"

மிகவும் சரியானது! சமூக விழிப்புணர்வை எடுத்துவரும் தரம்மிக்க சேவையை வழமையாக பிராமணர்கள் தற்போதும் முன்ணணியில் இருந்து முன்னோடியாகச் செய்துவருகின்றார்கள் என்பதில் ஐயம் இல்லை!

பகுத்தறிவு சுடர்விட, சுயமரியாதையோடு யோசியுங்கள்!

அன்புடன்,

ஹரிஹரன்

9 comments:

Hariharan # 03985177737685368452 said...

34947
டெஸ்ட் மெசேஜ்!

We The People said...

//எஸ்பிஓஏ பள்ளிகளில் வங்கிப்பணியில் இருப்போர் குழந்தைகள் தவிர பொதுவாக படிக்க விருப்பப்படும் அனைவருக்கும் வாய்ப்புக் கிடைக்கிறதா?//

எஸ்பிஓஏ பள்ளிகளில் பெரும்பாலான மாணவர்கள் வங்கி பணியில் உள்ளவர்களின் குழந்தைகள் அல்ல என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். என் மகனும் அங்கு தான் படிக்கிறான்! சின்மயா, சங்கரா, பத்மா சேஷாத்ரி, டி.ஏ.வி, ஆதர்ஷ் பள்ளிகள் போன்ற எல்லா பள்ளிகளின் தரம் ஆராய்ந்த பிறகு தான் எஸ்பிஓஏ பள்ளியில் என் மகனை சேர்த்தேன். இதில் பத்மா சேஷாத்ரி தரம் நல்ல இருக்கு, ஆனா அங்கு பிராமணர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுது! பிராமணர் அல்லாதவர்களுக்கு குறைந்தது 50 ஆயிரம் நன்கொடை கேட்கிறார்கள்.(இந்த நிறுவனத்தை பற்றி நீங்க கூறவில்லையே! ஏன்!!!, அவங்களும் நீங்க சொல்லற மாதிரி கல்வி சேவை தானே செய்யறாங்க, அவர்களும் பிராமணர்கள் தானே!)

திரும்ப வரேன்! இன்னும் சொல்ல நிறைய இருக்கு! நீங்க சொல்லறத பார்த்தா எல்லா தமிழனும் குடித்து கும்மாளம் அடித்து மாதம் இரண்டாயிரம் அதுக்கு மட்டும் செலவு செய்யற மாதிரி எழுதியிருக்கீங்க! இது வண்மையா கண்டிக்கதக்கது! உங்க பார்வை கோளாரு தான் இதுக்கு காரணம். திரும்ப வந்து இதை பற்றி விரிவாக விவாதிக்கிறேன்.

Hariharan # 03985177737685368452 said...

//நீங்க சொல்லறத பார்த்தா எல்லா தமிழனும் குடித்து கும்மாளம் அடித்து மாதம் இரண்டாயிரம் அதுக்கு மட்டும் செலவு செய்யற மாதிரி எழுதியிருக்கீங்க! இது வண்மையா கண்டிக்கதக்கது! உங்க பார்வை கோளாரு தான் இதுக்கு காரணம். திரும்ப வந்து இதை பற்றி விரிவாக விவாதிக்கிறேன்//

தமிழ் மக்கள் ஆறரைக்கோடியில்
52% பெண்கள் 3.38 கோடி
மீதி 3.12 கோடி ஆண்கள்
இதில் ஒரு ஒன்றரைக்கோடி ஆண்கள் சிறுவர்கள், குடிக்காதவர்கள் எனக்கொள்வோம்.

மீதி இருக்கும் 1.62 கோடி ஆண்களில் ஒருகோடிப்பேராவது கண்டிப்பாக மொடாக் குடியர்கள் தான்!

இந்த ஒருகோடித்தமிழர்கள் ஆண்டுக்கு எட்டாயிரம் கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் சாரயத்தைக் குடித்துக் கெட்டு அழிபவர்கள்.

வன்மையாக என்னைக் கண்டிக்காதீர்கள் ஜெய்சங்கர்! நான் இருப்பதையே எழுதுகிறேன். தமிழக மொத்த மக்கள் தொகையில்,ஆறில் ஒருபகுதியினரான, தமிழகத்தில் ஆண்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒருபகுதியினர் குடிகாரர்கள் என்பது உறைக்கும் உண்மை!

தங்களது வன்மையான கண்டனத்தை, சாராய விற்பனையை ஊக்குவிக்கும் கழக அரசுகளின் சாராயக் கொள்கையைக் கண்டியுங்கள்!

Hariharan # 03985177737685368452 said...

பத்மா சேஷாத்ரி தரம் நல்ல இருக்கு, (இந்த நிறுவனத்தை பற்றி நீங்க கூறவில்லையே! ஏன்!!!, அவங்களும் நீங்க சொல்லற மாதிரி கல்வி சேவை தானே செய்யறாங்க, அவர்களும் பிராமணர்கள் தானே!)

பத்மா சேஷாத்ரி தமிழகமெங்கும், இந்தியாவெங்கும் கல்வி நிலையங்களைச் சங்கிலியாக அமைத்துச் செயல்படாததால் அம்மாதிரியான தனிப்பட்ட பள்ளிகளைக் குறிப்பிடவில்லை. வேறு காரணமில்லை ஜெய்.

விவாதக் கருத்துக்களுடன் திரும்பி வாங்க ஜெய்!

அது ஒரு கனாக் காலம் said...

Hello Sir,

There is a feeling among masses that shnkara madam with its reach and capcity, probably didn't do much, particularly in areas like drinking water facilities , roads, primary health, free eye camps, or primary schools in villages...here I am talking without any statistics or inside informations.

During sunami, they were showing in the TV, regarding items send by shankara madam from kanceepuram, ...it was few corruaged boxes, may be 25 in nos, and it was being despatched in that yellow colour van.

It was pea nuts, they could have send atleast 50 lorry loads of rice,cloths, vegetbles etc., easily. They just have to make an appeal to bhaktha's , it could have been much more in substance, quantitiy, quality.

Ofcourse, various other organisations like Amirthananthami, Art of living, RSS did a very great service during those times, it was well appreciated by the people as well.

Anyway, its just a remark/feedback by some of the publc that Shankara madam didn't do much, so here is an opportunity, if addressed properly, can easily take the masses with them.

Sundar - Dubai

Unknown said...

Dear Sunder,

Just you saw one load that too in TV during Sunami should not be your basis for judgement. That time the entire Knchi episode has cretaed lot of shock among devotees and swamigal was behaind bars.See overall what is done by Kanchi Matt with out much media Hype.

Swami

Rajaraman said...

I have given Rs.10,000 as dionation to SBOA to enroll my duaghter in LKG by year 1999 itself. First priority always to SBOA staff children only.

Anonymous said...

வலைப்பூ, வலைக்காய், வலை மொட்டுகள்ள அடிதடி சங்கர மடத்தை பத்தியோ வீ எச் பீ யை பத்தியோ தான் இருக்கும்

நாமும் ஓடி வந்து பதில் போட்டுக்கிட்டு இருப்போம்....இல்லண்ணா ?

யாராவது பிளாகுல வந்து செவெந்த் டே அட்வென்சரிஸ்டு மிஷன் நல்ல மிஷன்னு வாதம் பண்ணுதாங்களா ? ... இல்லை ...

யாராவது பிளாகுல வந்து Jamaat-E-Islami Hind நல்ல சேவை நிருவனம்... வலைப்பூவினரே நம்புங்கள் நம்புங்கள்ன்னு சொல்லுதாங்களா ?? சத்தியமா இல்லை

ரொம்ப வேணாண்ணா ... குறைச்சலா, 15 எம் எல் ஏ சீட்டில பிராமணர்கள் deciding factorராக இருந்துவிட்டால், இருந்துவிட்டால்.... பிளாகு என்ன்னாணே.... பிளாகு.....

பெரியவரை புடிச்சு உள்ள வெச்ச கைய்யோட அம்மையார் காஞ்சீவரத்தில ஜெயிச்ச கொடுமையை எங்கண்ணா போய் சொல்ல ? ......

அதாண்ணா ... அதாண்ணா நாம வந்த்து பிளாகுல எழுதுதோம்.....

என்ன சொல்ல.....

Anonymous said...

பெரிய குடிமக்கள் பேசும் போது நான் சும்மா சந்தில சிந்து பாடக் கூடாது.....

இருந்தாலும் ஒண்ணே ஒண்ணு சொல்லிட்டு போவலியின்னா துக்கம் வராது ...

அகவே ஒன் பார் த நைட்

- Per capital Alcohol consumption in Tamil Nadu is amoung the highest in India

- If one were to remove city states like Delhi, Chandigarh etc TN may be all India No. 1 in this

- While in most countries Beer is more consumed than spirits, and Wine is included in total Alcohol consumption statistics, in India more spirits are consumed than beer or wine

- Ditto in TN as well

- Unlike in the rest of the western world, in India, and in TN, certain portions of the population do NOT consume alcohol and so the actual consumption per consuming adult is very high.

- Add to this the fact that spirits have a higher % of alcohol .... and well....
வந்தாரை வாழவைக்கும் தமிழகம் .........,
விருந்தோம்பலுக்கு பேர் போன தமிழகம் ........,
செம்மொழிக்கு இருப்பிடமாம் தமிழகம் ...... ஐய்யகோ ........ படும் அல்லல் சொல்லாமலே புரியும்

.........

நான் இந்த ஒன்று மட்டும் சொன்னதால், தமிழகத்தில ரொம்ப பேர் குடிக்கிதாங்கன்னோ, தமிழகத்தில எல்லாரும் .... மொந்தைன்னோ ... இது தமிழருக்கு எதிராய் விநாயக் செஞ்ச சதீஈஈஈன்னோ ..... யாராவது புரிஞ்சுக்கிட்டால் .... யாராவது புரிஞ்சுக்கிட்டால் , அதுக்கு நான் ..நான் சத்தியமா பொறுப்பு இல்லை

இது எல்லாத்தையும் விட்டு,
- குடிப்பது நல்லது
- குடிக்காதவன் காட்டுமிராண்டி ன்னு ஒரு இழை ஆரம்பிச்சிட்டா, சூப்பரா இருக்கும்

நண்பன்
விநாயக்