Saturday, April 14, 2007

(149) "சர்வஜித்" தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

தமிழில் வலைப்பூ பதிபவர்கள், பதிவுகள் படிப்பவர்கள் என அனைவருக்கும் எனது "சர்வஜித்" தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக!

இந்தத் தமிழ்ப்புத்தாண்டில் உலகத் தமிழர்கள் 1500 பேர் இருந்து தமிழால் எழுதி தமிழ் வலைப்பூ மூலம் ஏற்படுத்தும் தொடர்புகளில் மீண்டும் மீண்டும் ஆபாச போலி எழுத்து, தனிநபர் அடையாளத் திருட்டு, மோசடி என்பதிலேயே மீண்டும் மீண்டும் அருவருப்பாக உழன்று வருவது என்பது நின்றுவிடும்படி செய்துவிடுமாறு இறைவனை வேண்டுகிறேன்.

இந்தப் புத்தாண்டில் தொழில்நுட்பம் தந்த பரிசாகிய வலைப் பதிவுகளை நாம் அனைவரும் நேர்மையாகவும், நல்லவிதமாகவும் மட்டுமே பயன்படுத்துவோம் என உறுதி கொள்வோம்!

நான் அறிந்த நல்லதை அடுத்தவர்க்குப் பயன்பட வேண்டிச் சொல்லணும். அப்படி நல்லதை அடுத்தவர்க்குச் சொல்லுகின்ற போதே எனக்கான தார்மீக அருகதையையும் தொடர்ந்து செம்மைப்படுத்த வேண்டியதும் மிக அவசியமானது என்பதை உணர்ந்தே இருக்கிறேன்!

நானும் எனக்குக் கிட்டிய "விழிப்பு"உணர்ச்சியைப் பயன்படுத்தி சில சமயங்களில் சிலவிதமான எழுத்துக்கு நான் எதிர்வினை ஆற்றுகையில் எழும் கோபத்தினால் விளையும் எதிர்மறைத் தாக்கம் தரும் விதத்தில் அமைகின்ற எழுத்தை, பாங்கினை விடுத்து ஏற்றம் தரும் விதத்திலேயே முழுதும் எழுத முயற்சிப்பேன் என்பதை அறியத்தருகிறேன்!

எத்தகைய சமூக மாற்றம் வர வேண்டும் என்றி எதிர்பார்க்கிற நம் அனைவருக்கும் முதலில் அந்த மாற்றம் தன்னில் இருந்தே ஆரம்பிக்கவேண்டும்!

நல்ல மாற்றம் முதலில் என்னில் இருந்து வெளிவர நான் ரெடி! நீங்களும் ரெடிதானே!


குறிப்பு:

சமீபத்தில் "விழிப்பு" எனும் பதிவர் வேறு ஒரு பதிவில் எனது பின்னூட்டத்தின் ஒரு சொற்றொடரை அவர் பதிவில் அவுட் ஆப் காண்டக்ஸ்டில் பயன்படுத்தி என் எழுத்தை மறைமுகமாகச் சாடியிருந்தார். இந்தப் புத்தாண்டில் இருந்து எனது கருத்தைத் தாங்கிவரும் எனது எழுத்து இன்னமும் கூடுதல் பொறுப்புணர்வுடன் அமைய என்னால் ஆன அனைத்தையும் ஆவன செய்ய விழைவேன்! இடித்துரைத்த நண்பருக்கு என் நன்றிகள்!


அன்புடன்,

ஹரிஹரன்

9 comments:

Hariharan # 03985177737685368452 said...

சோதனைப் பின்னூட்டம்:-))
(தமிழ்ப்புத்தாண்டு ஸ்பெஷல் டெஸ்ட் மெசேஜ்!)

ஜடாயு said...

நன்றி. புத்தாண்டு வாழ்த்துக்கள் ஹரிஹரன்.

ஆதிபகவன் said...

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

பங்காளி... said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே....

நலமும் வளமும் விழைய வாழ்த்துகிறேன்.....

சுப.செந்தில் said...

நீங்கள் என்ன தமிழ் ஆசிரியரோ? தேடினாலும் ஒரு பிழை கூட தென்படவில்லை..நல்ல மொழி ஆளுகை

Hariharan # 03985177737685368452 said...

லக்கிலுக்,

வகுப்பறை ஆசிரியர் சுப்பையா அவர்கள் போன்ற மூத்தவர்கள் ஒரே மூச்சில் அறுபது ஆண்டுகளின் பெயர்களை இந்தப்பதிவில் சொல்லியிருக்கிறார்.

http://classroom2007.blogspot.com/2007/02/4.html

தமிழ் ஆண்டுகளின் பெயர்க்காரணங்கள், பெயர் தோன்றிய விதம் பற்றிய கூடுதல் விளக்கங்கள் காலநிலை, ஜோதிடம் அறிந்டஹ சுப்பையா சாரிடம் தங்களுக்குக் கிடைக்கலாம்.

தங்கள் பின்னூட்டம் அதன் பொருள் அடக்கம், மொழிநடை இவை காரணமாக வெளியிடப்படவில்லை.
புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்!

Hariharan # 03985177737685368452 said...

வாருங்கள், சுப. செந்தில்,


//நீங்கள் என்ன தமிழ் ஆசிரியரோ?//

இல்லை. தமிழ் ஆசிரியர்களினால் படிக்கும் போது பாராட்டப் பெற்றவன். தமிழில் பள்ளி அளவில் முதல் மாணவனாக வந்ததற்கு பரிசாக பாரதியார் கவிதைகள் பெற்று இருக்கிறேன்.

// தேடினாலும் ஒரு பிழை கூட தென்படவில்லை//

எத்தகைய சமூக மாற்றம் வர வேண்டும் என்றி எதிர்பார்க்கிற நம் அனைவருக்கும் முதலில் அந்த மாற்றம் தன்னில் இருந்தே ஆரம்பிக்கவேண்டும்!

மேற்சொன்ன வரியில் ஒரு பிழை உள்ளது. "என்று" என இருக்கவேண்டியது தவறாக "என்றி" என இருக்கிறது.

என் தமிழ் மீதான உங்கள் நம்பிக்கையை அடுத்தமுறை 100% தக்க வைக்க முயற்சிப்பேன்!

//..நல்ல மொழி ஆளுகை//

பாராட்டுக்கு நன்றி செந்தில்.

Hariharan # 03985177737685368452 said...

ஜடாயு, ஆதிபகவன், பங்காளி - தங்கள் அனைவரது வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் என் நன்றிகள்!

உமையணன் said...

இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள். தாமதமான வாழ்த்துக்களுக்கு மன்னிக்கவும்.
கூக்ள் வாசிப்பானில் உங்கள் பதிவுகள் மட்டும் 1, 2, 3 என்று பதிவு வரிசை எண்ணைக் காண்பிக்கின்றன. மற்றவர்களுக்கு காண்பிப்பதில்லை. அதற்கு என்ன செய்ய வேண்டும்