Saturday, April 21, 2007

(153) சனாதன தருமம்... கோபர்நிக்கஸ்..கலிலியோ

பூமியைச் சுற்றியே சூரியன் உட்பட அனைத்து கோள்களும் சுற்றிவருகின்றன் என்று கி.பி 1500 வரையில் இருந்த மேற்கத்திய நாடுகள் வகுத்த வானியல் அறிவியல் கொள்கையில் போலந்து நாட்டைச் சார்ந்த 1473 ல் பிறந்து 1543 வரை வாழ்ந்த நிக்கோலஸ் கோபர்நிகஸ் எனும் வானியல் விஞ்ஞானி அதுவரையில் பூமிப்பந்துதான் இதர கோள்களின் மையம் என்ற கருத்தை மறுத்து, சூரியன் தான் கோள்களின் மையம். பூமி உட்பட இதர கோள்கள் சூரியனை மையமாக வைத்துத்தான் சுற்றிவருகின்றன என்றார்.

வானியல் தொலைநோக்கி கண்டுபிடித்த, கி.பி 1564 முதல் 1642 வரை வாழ்ந்த இத்தாலிய நாட்டு வானியல் அறிஞரான கலிலியோ சூரியனே அனைத்துக்கோள்களுக்கும் மையமாக இருக்கின்றது எனும் கோபர் நிகஸின் வானியல்-கோள்கள் அமைப்பு முறையினை உறுதி செய்தார்.

இப்படியாக மேற்கத்திய ஐரோப்பிய வானியல், கோள்கள் பற்றிய கண்டுபிடிப்பு சூரியன் தான் மற்ற எல்லாக் கோள்களுக்கும் மையம் எனும் உண்மையை விடுதலை செய்து கிட்டத்தட்ட 450 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.

அறிவியல் என்றாலே மேற்கத்திய கிறித்துவ ஐரோப்பா சொல்லுவது தான் என்ற மறைப்பு வாதத்தில் மூழ்கிய நாமும் நம்பி வருகிறோம்.

இப்போது பாரதப் பாரம்பரியமான சனாதன தருமத்திற்கு வருவோம்.

சனாதன தரும வேத நெறி வாழ்வியல் முறை என்பது எவ்வளவுக்கு அறிவியல் பூர்வமானது என்பதை எளிதில் விளங்கிக்கொள்ளலாம்.

இந்தியாவின் பண்டைய கோவில்கள் உபவேதமான ஸ்தபதி சாஸ்திரப்படி ஆகம விதிப்படி கட்டப்பட்டன என்பதை அறிந்திருக்கின்றோம். ஒவ்வொரு பண்டைய கோவிலிலும் நவக்கிரஹங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்றும் நடைமுறையில் வழிபடுவதாக இருக்கிறது.

எந்தப் பழைய சனாதன தரும இந்துக் கோவிலில் இருக்கும் நவக்கிரஹங்களின் அமைப்பை உற்று நோக்குங்கள். மத்தியில் சூரியன் அமைந்திருக்கும். இதர கிரஹங்கள் சூரியனைச் சுற்றி அமைந்திருக்கும்.

சனாதன தரும ரிஷிகள், முனிவர்கள் இந்த வானியல் உண்மையை உணர்ந்திருந்தவர்கள். கோபர்நிகஸ், கலிலியோ இவர்கள் கண்டறிந்து சொல்லுவதற்கு பல நூறு ஆண்டுகள் முன்னரே சனாதன தருமத்தில் இவை நடைமுறை தினசரிப் பயன்பாட்டில் ஆலய வளாகங்களில் அமைக்கப்பட்டிருந்தது.

சனாதன தருமத்தில் பல விரதங்கள் மக்களின் ஆரோக்கியத்திற்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. சதுர்த்தசி விரதம், பௌர்ணமி விரதம், அமாவாசை உபவாசம், கார்த்திகை விரதம் என்பவை ஒருசில.

இப்போது கொஞ்சம் அறிவியல் மீண்டும்.
பூமியின் பரப்பில் 70% நீர், மீதி 30% நிலப்பரப்பு என்று இருக்கிறது. (இன்றைக்கு நிலவும் க்ளோபல் வார்மிங்கில் 2% நீர் கூடுதலானால் பல நாடுகள் அழியும் என்பது உண்மை)


பௌர்ணமி அன்றும், அமாவாசை அன்றும் கடல் நீர் High Tide, Low tide என்று பொங்குவதும், உள்ளிறங்குவதுமாக பாலன்ஸ் தடுமாறும். கடல் புறங்களில் இருப்பவர்களுக்கு நன்கு தெரியும். மீனவர்க்ள் இந்நாட்களில் கடலில் இறங்க மாட்டார்கள்.

மனிதனின் உடம்பில் கிட்டத்தட்ட 70% நீர், மீதி 30% எலும்பு, மயிர், நகம் எனும் திடப்பொருள் என்று அமைந்திருக்கிறது.

சனாதன தருமத்தில் சந்திரன் என்பது பஞ்சபூதங்களில் நீருக்கும், சூட்சும சரீரமான மனதிற்கும் ஆதரமான தெய்வம்(presiding deity).

சந்திரனின் தாக்கம் கடல் நீர்மீது இருப்பது போலவே மனிதர்கள் மனதின் மீதும் உண்டு. மனநலம் குறைபாடு உடையவர்களை Luna-tic என்று கிரேக்க சந்திரக்கடவுளான Lunaவின் பேரால் அழைக்கப்படுகிறார்கள். மனநலம் குன்றிய இவர்கள் செயல்பாடுகளில் பௌர்ணமி, அமாவாசை அன்று தீவிரமான தாக்கம் இருக்கும்.

மனநலம் பேண உடல் நலம், உடல் நலத்திற்காக உண்ணும் உணவு மீது கட்டுப்பாடு அவசியம் என்பதாலேயே பௌர்ணமி, அமாவாசை, சதுர்த்தசி நாட்களில் உபவாச விரதங்கள் வாயிலாக ஆன்மிகத்துடன் இணைத்து மனநலம், உடல் நலம் பேணும் வழிமுறைகள் செய்து வைத்தார்கள் சனாதன தரும ரிஷிகள், முனிவர்கள்.

அறிவியலை ஆன்மீகத்துடன் இணைத்து மக்களுக்கு நலம் தரும் வாழ்க்கைமுறையே சனாதன தருமம். நாம் சனாதன இந்து தருமத்தில் சொல்லப்பட்ட பல விஷயங்களை, பல ஆயிரம் ஆண்டுகளுகள் கழித்து,பல தலைமுறைகள் தாண்டி மக்களுக்கு மொழித்தடை தாண்டி குறியீடுகளாக சிம்பாலிஸமாக பல வாழ்வியல் நலம் பேணும் செய்திகளை நுணுக்கமாக இன்றைய அறிவியல் விஞ்ஞானிகள் வியக்கும் விதத்தில் செய்து வைத்துச் சென்றிருக்கின்றார்கள் சனாதன தரும ரிஷிகள், முனிவர்கள்.

சனாதன தருமம் நிக்கோலஸ் கோபர்நிகஸ், கலிலியோ போன்ற அறிவியல் சிந்தனையாளர்கள் தோன்றுவதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறிவியல் பூர்வமான வாழ்வுமுறையில் அதனைப் பின்பற்றிய மக்களை வழிநடத்திய அறிவியல் தொன்மை நிறைந்த வாழ்வுமுறையாக பாரதப் பாரம்பரியமாக இருந்து வருவது என்பதை அறிந்து கொள்வீர்.


ஆகம விதியில் ஸ்தபதி சாஸ்திரப்படி கட்டப்பட்ட பாரதத்திலிருக்கும் கோவில் வளாகங்கள்
சனாதன தருமத்தின் அறிவியல் வாழ்வுமுறையைப் பறைசாற்றும் ஆய்வுக்கூடங்கள் என்பதை அறியவேண்டும் அடுத்து வரும் நம் இளைய தலைமுறைகள்.

சனாதனம் போற்றுவீர்! சனாதன தருமம் அறிவியல் தருமம் என்று அறிவீர். சனாதன தருமம் பேணுவதை எண்ணிப் பெருமை கொள்வீர்!


அன்புடன்,

ஹரிஹரன்

7 comments:

Hariharan # 03985177737685368452 said...

36276
டெஸ்ட் மெசேஜ்!

Hariharan # 03985177737685368452 said...

ஓசை செல்லா,

ஆதி சங்கரர் அருளிய "ஆத்ம போதம்" போன்றவை போதிப்பது வேத நெறி சனாதன தருமம் என்று அறியவும்.

Osai Chella said...

அப்படியென்றால் சிவவிஷ்ணு வடகலை தென்கலை எந்த தருமத்தில் வருகிறது! சனாதன தருமம் என்றால் என்ன...என்றென்றும் இருந்துவந்த ஒரு தருமம்! இப்பொழுதும் அது அதே வழியில் உள்ளதே ? இல்லையே நண்பரே!

Hariharan # 03985177737685368452 said...

//சனாதன தருமம் என்றால் என்ன...என்றென்றும் இருந்துவந்த ஒரு தருமம்! இப்பொழுதும் அது அதே வழியில் உள்ளதே ? இல்லையே நண்பரே! //


ஓசை செல்லா,

பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது சனாதன தருமம். இதில் ஆயிரமாண்டுகள் என்று காலம் கொணர்ந்த சமூகத்திரிபுகள் சனாதன தருமத்தின் குறையல்ல!

சனாதன தருமத்தைப் பின்பற்றாததால் விளைந்ததே இந்த சமூகத்திரிபுகள்!

சனாதன தருமத்தைச் சொல்லிச் சென்றவர்களான ரிஷிகளும் முனிவர்களும் தங்களது எந்த அடையாளத்தையும் விட்டுச்செல்லவில்லை.

அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வாழ்வியல் விஷயங்களை சொல்லியவர்கள் ரிஷிகள், முனிவர்கள்.

இன்று பிறப்பால் பிராமணனாகிய நான் செய்யும் பிழைப்புத் தொழில் உலைக்கலன், கருவிகள், வணிகம் என்றும் அறிந்த நல்லதைச் சொல்லுவதில் நான் பிழைப்புக்காக ஒதுக்கிய ஆசிரிய-பிராமணப்பண்பு வெளிப்படுத்தப்படுகிறது.


பிறப்பில் அடிப்படையான தொழில்கள் எனும் சமூகத்திரிபு மறைந்து வரும் இன்றைய நிதர்சன சூழல் என்பது சனாதன தருமம் மீண்டு வருகிறது அதன் மெய்யான தோற்றத்திற்கு என்பதையே முன்னோட்டுகிறது.

In Essence சனாதன தருமம் மிக மேன்மையானது!

Ram Ravishankar said...

a very meaningful post Hariharan! The astronomical thinking is very evident from the temples in Kumbakonam (suryanar temple in the center with temples representing other planets surrounding Suryanar temple!)

I wish there is a set of analytical/rational thinking minds come together to build such meaningful posts/articles to educate the educateds!

Krishna (#24094743) said...

அருமையான பதிவு ஹரிஹரன். உடம்புத் திமிருடன் அலைந்த கல்லூரி நாட்களில், நாத்திகம் பேசுவதே நாகரிகம் என்ற மாயையுடன் என் பாட்டனாரிடம் எதிர்வாதம் புரிந்திருக்கிறேன். அப்பொழுது அவர் சொன்ன அதே உதாரணத்தை மறுபடியும் இந்தப் பதிவில் பார்க்கையில் மகிழ்ச்சி. Hi-tide, low-tide-ஐ நம்புகிற நீ, 70% watery substance-னால் ஆன உன் உடலும், மனமும் கிரக நிலைகளைப் பொருத்து மாறும் என்பதை ஏன் நம்ப மறுக்கிறாய் என்று அவர் அன்று கேட்டது இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது. தொடர்ந்து இதைப் போன்ற சனாதன தர்மத்தின் சிறப்புக்களை விளக்கும் பதிவுகளை எழுதுங்கள்.

அது ஒரு கனாக் காலம் said...

Hi,
Good post, some time back I happened to see a art form called கவனகம் in Jaya TV, I was astonished that such an art form did ( do) exist... I have even heard,game theory is explained thrugh a slogam or poem..

keep it up.

Sundar - dxb