Saturday, April 28, 2007

(155) சனாதனதருமம்... Cosmic Science, Criptology

உலகில் அதிர்வு Vibration இல்லாமல் எந்த உயிரினமும் இல்லை. Cosmic Vibration என்பது எல்லாவற்றிலும் இருக்கிறது. மனித , உயிர்களின் இதயத்துடிப்பு, 50Hz, 60Hz மின்சாரம், ரேடியோ, தொலைதொடர்பு, மைக்ரோவேவ், சூரிய ஒளிக்கதிர், தெருவிளக்கு, மொபைல் போன், என Vibration இல்லாது இயக்கம் இல்லை.

Ultraviolet rays, Infra red rays, Microwave, Radio waves, Electric frequency இவை அனைத்தும் 100 ஆண்டுகளுக்குள் மேற்கத்திய விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டதாக நம்புகிறோம்.

சனாதன தருமத்தில் ஆன்மீக விஞ்ஞானிகள் காஸ்மிக் அறிவியலையும், கிரிப்டாலஜி எனும் குறியீட்டு அறிவியலையும் ஒருங்கே இணைத்து பல அறிவியல் விஷயங்களைச் சொல்லிச் சென்றிருக்கின்றார்கள் நம் சனாதன் தரும முன்னோர்களான ரிஷிகள், முனிவர்கள்.

மேக்னடிக் வைப்ரேஷன் கொண்டு மூளை, இதயம் இவைகளை ஆராயும் கருவி MRI எனப்படும் Magnetic Resonance Imaging, மற்றும் CT Scan Computed Tomography இவைகளில் பயன்படுத்தப்படும் காந்தத்தின் காந்தப்புல அதிர்வுத்திறன் அளவிடும் குறியீடு அதைக் கண்டறிந்த விஞ்ஞானி பெயரான Tesla.

காஸ்மிக் வைப்ரேஷன் குறித்து ஆராய்ந்த விஞ்ஞானி

நிக்கோலோ டெஸ்லாவின் கருத்து

சனாதன தருமத்திற்கு வருவோம். பாரதத்தின் பாரம்பரிய ரிஷிகள், முனிவர்கள் எவ்வளவு உயரிய அறிவியல் விஞ்ஞானிகள் என்பது விளங்கும்.

சனாதன தருமத்தின் பெரும் சிறப்பே சிம்பாலிஸம் எனப்படும் குறியீடுகள் வழி உணர்த்தப்படும் விஷயங்கள் தான். மொழிப்பயன்பாட்டின் தடைகளை உடைத்து இல்லாமல் செய்வது குறியீடுகள். Symbols overcome the barrier of Language என்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உணர்ந்தவர்கள் சனாதன தரும விஞ்ஞானிகளான ரிஷிகளும் , அருந்தவம் செய்த முனிவர்களும்!

சனாதன ரிஷிகள் தந்தருளிய நடராஜப் பெருமானின் உருவப்படத்தை உற்று நோக்குங்கள்:

ஒரு கையில் உடுக்கை. ஒலிக்கும் உடுக்கை ஏற்படுத்துவதோ அதிர்வுகள் vibrations! அழிக்கும் கடவுள் என்பதை உணர்த்தும் அக்கினி அடுத்த கையில். காலடியிலே பக்தனுக்குக் குறியீடு வழியாக நடராஜன் நவில்வதோ என்னை அடைய நான் எனும் "ஈகோ"வை மிதித்து அடக்கிப் பழகு என்பது. இன்னொரு கை பக்தனுக்கு அபயம் தருகிறது

சனாதன தருமத்தில் இதர மார்க்கங்கள் போல் அல்லாது இறைவனே பக்தனோடு நேரடியாகக் குறியீடுகள் வாயிலாகப் பேசுகிறான் இறைவன்!

அடுத்து சனாதன மாமுனிவர்கள் தந்தருளிய விஷ்ணு பெருமானின் உருவப்படத்தை உற்று நோக்குங்கள்:ஒருகையில் சங்கு. ஒலிக்கும் சங்கு எழுப்புவது அதிர்வுகள் Vibrations. இன்னொரு கையில் சுதர்சன சக்கரம். யுகங்களாய் வளைய வரும் காலம் நான் என்று எடுத்துச் சொல்கிறது. ஒரு கை பக்தனுக்கு அபயம் தந்து அரவணைக்கிறது.

மக்கள் பின்னாளில் மொழியால் பிரிக்கப்பட்டு அடித்துக்கொள்வார்கள் என்பதால் முக்காலம் உணர்ந்த ரிஷிகள், முனிவர்கள் இறைவனை ஆலயங்களில் குறியீடுகள் வாயிலாக பக்தனோடு நேரடியாக பேசும்படியாக அமைத்துச்சென்றார்கள் சனாதன விஞ்ஞானிகள்!

ஓம் (AUM) எனும் எழுத்து நேரடியாக இறைவன் மொழி எனப்படுவது அது ஏற்படுத்தும் காஸ்மிக் Vibration காரணமாகத்தான். அ உ ம என்று செய்யப்படும் ஓம் உச்சரிப்பு, மொழி தாண்டிய இறையுடன் ஒலி அதிர்வுகளால் இணைக்கும் இணைப்பு.

ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் அதிர்வு, அது ஏற்படுத்தும் காஸ்மிக் வைப்ரேஷன், ஓம் பற்றிய முழுவிளக்கம் Mandokya Upanisad எனும் உபநிடத்தில் முற்றிலும் விளக்கப்பட்டிருக்கிறது. வைப்ரேஷன் பற்றிய அறிவு சனாதன தரும ரிஷிகளுக்கு, முனிவர்களுக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது தெளிவாகும்.

சங்கு, உடுக்கை, ஓம் என்று காஸ்மிக் வைப்ரேஷனைக் குறியீடாக வழிபாட்டில் வைத்த சனாதன ரிஷிகள், முனிவர்கள் ஆரவாரம் இல்லாத அறிஞர்கள்!

சனாதன தருமம் உயர் அறிவியல் என்று அறிவீர்!

போற்றுவோம் பாரதப் பாரம்பரிய சனாதன தருமத்தினை!

பாரத சனாதன தருமம் பழமையானது, தொன்மையானது, இன்றைக்கும் முழுமுதலாக அறிவியல் பூர்வமானது! சனாதனப் பாரம்பரியம் கிடைத்ததற்கு பெருமை கொள்வீர்!


அன்புடன்,

ஹரிஹரன்

3 comments:

Hariharan # 03985177737685368452 said...

டெஸ்ட் மெசேஜ்!

Srini said...

உங்களுடைய சனாதன தர்மம் பற்றிய பதிவுகள் அருமை. நான் 7 வருஷத்துக்கு முன்னாடி நாத்திகனா இருந்தவன் தான். அப்புறம் விவேகானந்தர், அரவிந்தர் எல்லாம் படிச்ச பிறகு நம் நாடு முன் காலத்திலேயே அறிவியல்பூர்வமா எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தது என்று புரிந்துகொள்ள முடிந்தது.

நிக்கோலா தெஸ்லா பற்றி சொல்லியிருந்தீங்க. வேத வேதாந்தத்துடைய பாதிப்பு அவர் மேல் எவ்வளவு தூரம் இருந்தது என்று இந்த வலைப்பக்கத்தில்.

Hariharan # 03985177737685368452 said...

வாருங்கள் சீனி,


பாராட்டுக்கு நன்றிகள். சனாதனதருமம் போன்று இன்றளவுக்கும் அறிவியல்பூர்வமான தொன்மையான விஷயம் ஏதும் இல்லை.

சும்மா நம்மாட்கள் செய்யும் திரிந்துபோன ,மடத்தனமான பழக்கவழக்கங்கள் மட்டுமே இந்துமதம் என்று கும்மியடிப்பதை விட்டுவிட்டு சனாதன தரும பாரம்பரியத்தை ஏற்க வேண்டும்.

இந்தியர்கள் பெருமைப்பட வேண்டிய விஷயம் சனாதன பாரம்பரியம்.

தங்கள் சுட்டி நிக்கோலோ டெஸ்லா பற்றிய கூடுதல் தகவலுக்கு உதவி.