Sunday, October 15, 2006

(35) முரசொலிப்பு : சென்னையில் "அர'வழியில் தேர்தல்!

சென்னையில் 13-10-2006 வெள்ளியன்று 'அர"வழியில் ஒரிஜினல் அக்மார்க் அரசியல் திரா"விட' க் கழகக் கட்சியின் ஒப்பெற்ற சாதனையாக சென்னை மாநகராட்சித் தேர்தல் நடைபெற்றது.

உடன்பிறப்பே, சென்ற ஆட்சியில் அம்மையாரால் சிறையிலிடப்பட்ட நமது அரசியல் திரா'விட' ப் பெத்தரின் இயக்கக் கொள்கைகளில் பற்றுக்கொண்ட பெரியார், அண்ணா பாசறைகளில் கடும் பயிற்சிபெற்ற சமூகத்தியாகிகள், சமூகத் தியாகிகளான தம்பிகள் மாட்டு' மனோகர், "பங்க்' பரமன், 'தளபதி' தயா, 'பாட்டில்' பாபு, 'சைக்கிள் செயின்' சையது, 'ஜெலட்டின்" ஜெரோம், 'பொருள்' பாண்டி, "கடா"கபிலன் ஆகியோர் அடங்கிய சமூகநீதிக்காவலர்கள் குழு பார்வையாளர்களாக அரம், கொடுவாள், பட்டாக்கத்திகளோடு டாடாசுமோ போன்ற சிற்றுந்துகளில் தெருவெங்கும் சுற்றித் திரிந்து சென்னை மாநகராட்சி தேர்தல் அர நெறியோடு சீரிய முறையில் நடத்திக்காட்டியுள்ளனர்.

பார்ப்பன அம்மையாரால் சிறையிலடைக்கப்பட்ட இந்த அக்மார்க் திராவிடத் தம்பிகளைச் சரியான தக்க சமயத்தில் 'பரோலிலாவது" விடுவிப்பது 83வயதான இந்த அண்ணனின் தலையாய அரசியல் 'திரா'விடக் கடமையன்றோ!

ஆனால் இங்கு பார்ப்பன அச்சு, ஊடக முதலாளிகளான ஆரியப்பாம்புகளின் விஷம நாளேடுகளான தினமலர், தினமணி போன்ற நாளேடுகளில் அய்யோ...அய்யய்யோ... கொல்றாங்களே..., வன்முறை, ஜனநாயகக் கொலை என்று மாய்மால ஒப்பாரிவைப்பதன் நோக்கம் இந்த ஏழையான 83வயதான, 15தொலைக்காட்சி சான்ல்கள், 10 அச்சுப்பதிப்பு வார, நாளேட்டு நிறுவனங்கள் கொண்ட நான் ஒரு சூத்திரன் என்பதாலேயே இந்த பார்ப்பன ஏடுகள் முகாரி, ஒப்பாரி வைக்கின்றன எனும் பேருண்மையை என்மாதிரியே நீயும் அறிந்திருப்பாய்.

தமிழ் நண்டு போல் தமிழர் தந்தை நிறுவிய அவர் காலத்தில் நடுநிலைமையோடு செய்தி வெளியிட்ட தினமும்தந்தி, மாலையில்முரசு, மாலையில்மலர் ஏடுகள் பார்ப்பன அடிவருடியாய் இவ்விஷயத்தில் செய்தியைத் திரித்து வெளியிட்டுள்ளதால் அக்மார்க் திராவிடனான, தமிழுணர்வுள்ள உடன் பிறப்பே நீ முழுமையான, உண்மையான செய்திகளுக்கு இந்த ஆரிய, மற்றும் ஆரிய அடிவருடிச் செய்திகளை நம்பிவிடக்கூடாது.

உண்மையான , கலப்பற்ற அரசியல் திரா'விட'ப் பெத்தடின் செய்'தீ'களுக்கு முழுக்க கழக நாட்டு நடப்புகளுக்கு என்றும் முரசொலிப்பை வாங்கிப் படி.

"நச்சு" என்ற செய்'தீ'க்ளுக்கு தமிழர்முரசு நாளேட்டினை வாங்கிப் படி.

தித்திக்கும் கல(ழ)க ஆட்சி சாதனைச் செய்திகள் தினசரிகரனி(ன்)ல் வரும்-படி!

தமிழுணர்வோடு 'பேஸ்ட் கண்ணா பேஸ்ட்" என்று வாராவாரம் வரும்
மங்கலகுங்குமத்தினை படித்தால் மட்டுமே வரும் கும்மாளம், குதூகலம்!

சத்தியமாய்ச் சொல்கிறேன் சூரியச்சானல் செய்திகளில் மட்டுமே சடாரென்று உடனுக்குடன் வரும் நான் "எழுதிய" செய்திகள்! ..நீ விரும்பும் செய்திகள்!

சமூக அக்கறையில் இயக்கத்தின் இளைய தம்பிகள் திருடர்கள்=இந்துக்கள் பண்டிகையாம் தீபாவளிக்குள்ளும், மனதிற்கும் உடலுக்கும் நன்மை பயத்து முடிவுற்று நமது நல்லிணக்கம் கூறி வரும் ரம்ஜான் பண்டிகைக்கு முன்பே தமிழனை இன்றையதினம் நிமிர விடாமல் செய்யும் சிக்குன்-குனியா பரப்பும் கொசுக்களை தெருக்களிலே விரட்டி வெட்டி வீழ்த்தக் கையில் பட்டாக் கத்திகளை ஏந்தி ரத்தம் சிந்த வைத்ததை, வந்தேறி பார்ப்பன நாளேடுகளும்
ஆரிய மாயை, பார்ப்பன அடிவருடி ஏடுகளும் மாநகராட்சித் தேர்தல் வன்முறை, வாளெடுத்துக் கொலைவெறியாட்டம் என திரிப்பது... உடன் பிறப்பே உண்மையற்றது என உணர்வாய்!

சென்னையில் நடந்தது "அர'வழியிலான (அரம்= வாள்/கத்தி)க்லகத் தேர்தல்!

அன்புடன்,

ஹரிஹரன்

8 comments:

Hariharan # 26491540 said...

டெஸ்ட் மெசேஜ்

bala said...

ஹரிஹரன் அய்யா,

''உண்மையான , கலப்பற்ற அரசியல் திரா'விட'ப் பெத்தடின் செய்'தீ'களுக்கு முழுக்க கழக நாட்டு நடப்புகளுக்கு என்றும் முரசொலிப்பை வாங்கிப் படி.''

இந்த கும்பலுக்கு யார் பெதடின் de addiction செய்வார்கள்?

பாலா

Hariharan # 26491540 said...

ப்ரொபைல் நம்பர் 26491540
சேர்த்ததைச் செக்கிங் கயமைதான்!ஹி..ஹி

Varadhan said...

தம்பி ஜெயில் கம்பி, தர்மமிகு சென்னை வாழ் மக்களுக்கு ஆயிரம் வேலை, அவர்களுக்கு நாம் இன்மொரு இன்னல் தரலாமா? அவர்களை ஓட்டுச் சாவடிக்கு அழைத்துச் சாவடிக்கலாமா? அவர்கள் வீடுகளில் கொசு ஓட்டவே அவர்களுக்கு நேரமில்லை. இந்த இக்கட்டான தருணத்தில் சென்னை வாழ் ம்மக்களின் பொன்னான நேரத்தைக் காத்திட என் அன்புத் தம்பிகளாம் உங்களை சிறையில் இருந்து விடுவித்தேன். அதில் குறை காணுகிறார்கள் இந்தக் குருடர்கள். பார்ப்பனப் புலம்பல்களைக் கண்டு கொள்ளாதே, நம்மையெல்லாம் ஈன்றெடுத்த தந்தை அன்றே சொன்னார். பாம்பை விட்டு விட்டுப் பார்ப்பானை அடி, அதை நாம் அன்று முழுமையாகச் செய்யாததன் காரணமே இன்றும் மிச்சம் மீதமுள்ள பாப்பான் எல்லாம் நமக்கு எதிராகா ஒட்டுப் போடத் துணிந்தனர். பயந்த பாப்பான் எல்லாம் ஓடிட தமிழ் நாடு முழுக்க இன்று பாம்புகள் தான் மிச்சம் உள்ளன. இருந்தாலும் பாம்புகள் மட்டுமே வாழும் இடமாக தமிழ்நாட்டை மாற்றிட வா.

குரங்கு போல் குதித்து வா
அரக்கர் போல் ஆடி வா
வாளோடு வா
வேலோடு வா
கம்போடு வா
சிறையீல் இருந்து சிரித்து வா
பரோலில் வா
பாடை கட்ட வா

உன் ஆருயிர் அண்ணன் அழைக்கிறேன். வா, வந்து சென்னைவாழ் மக்களுக்கு வேலை கொடுக்காமல் நீயே அனைத்து ஓட்டையும் போடு, அதன் பின் நீ ஆடு. நம் மக்களுக்கு நாம் ஒரு புதிய சனநாயகத்தைக் கற்றுக் கொடுப்போம். எந்தவொரு வாக்காளருக்கும் ஓட்டுப் போட வேண்டும் என்ற இன்னலை மட்டும் வைத்திடாதே, மறக்காமல் எல்லோர் வாக்கையும் நீயே போடு, எதிர்ப்போர் நாக்கை அறுத்துப் போடு.
உன் சனநாயகக் கடைமையை தடையற ஆற்ற உன் ஆருயிர் அக்காள் லத்திகா சரண் காத்திருப்பாள். கவலையின்றி வா. வெற்றி நம் பக்கம்.

Varadhan said...

ஹரிஹரன்

சரியானச் சாட்டையடி. இந்த ஜென்மங்கள் இந்த ஜென்மத்தில் திருந்தப் போவதில்லை. நீங்கும் ஊதும் சங்கைத் தொடர்ந்து ஊதுங்கள்.

அன்புடன்
வரதன்

Hariharan # 26491540 said...

பாலா,

அய்யா என்ற பதமெல்லாம் சொல்லி அழைக்க வேண்டாம்!

பெத்தடின் De addiction நம் போன்ற இளையர் தொடர்ந்து சுட்டி, விமர்சித்து வந்தாலே தானாகவே ஆகும்.

Hariharan # 26491540 said...

வாருங்கள் வரதன்.

தீவிரமாகத் தொடர்ந்து சுட்டவேண்டியதும், மாற்றம் வராத போது சாட்டையடியாக விமர்சிக்க வெகுவான பொதுஜனம், நம் மாதிரி படித்த மிடில் கிளாஸ் வகுப்பினர் பகுதிநேரமாக நேர்மையான அரசியல் மாற்றத்திற்கும் சிந்திக்கவேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகியிருக்கிறதே!

Hariharan # 26491540 said...

வரதன், நீங்களும் உடன்பிறப்புக்கு உங்கள் கருத்துக்களை முரசொலித்துச் சொல்லியிருக்கிறீர்கள்.