(36) தமிழகநிதி 234 எம்.எல்.ஏ+ 39எம்.பி- கூட்டுக்களவாணித்தனம்
தமிழனை இன்னும் தமிழகத்தில் மலம் அள்ளவிட்டும், சென்னை நகரிலேயே மவுண்ட் ரோடு அண்ணாசிலை அருகிலேயே பாதாள சாக்கடையில் முக்குளித்து முத்தெடுக்கவிடும் தமிழக திராவிடகட்சிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்கள் தமிழகத்தின் தொகுதி மேம்பாட்டு நிதிகளாக ஆண்டுக்கு பெறும் நிதிகளின் அளவினைப் பார்க்கலாம்.
எம்.பி தொகுதி மேம்பாட்டு நேரடி நிதித்திட்டம் தொகுதிக்கு ஒரு கோடி என்று நரசிம்மராவின் காங்கிரஸ் அரசால் 1992ல் ஏற்படுத்தப்பட்டது பின்பு தொகுதிக்கு 2கோடி என்று உயர்த்தப்பட்டது.
தமிழகத்தில் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டம் 1997ல் ஏற்படுத்தப்பட்டது
ஆரம்பத்தில் ஒரு ஆண்டுக்கு ஒரு எம்.எல்.ஏவுக்கு 35லட்சம் தரப்பட்டது
பின்பு இரண்டாண்டுகளில் 1999ல் 77 லட்சம் என உயர்த்தப்பட்டது.
இதுவரை தமிழகத்தின் வளர்ச்சிக்கு என்று ஒதுக்கப்பட்ட எம்.எல்.ஏ + எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதி விபரங்களைத் தோராயமாகப் பார்க்கலாம்:
1992-1996 ஆண்டு வரையிலான நான்காண்டு எம்.பி நிதி = 39 x 1 x 4 = 156 கோடி
1997 ஆண்டு எம்.எல்.ஏ நிதி 234 X 35 = 81.90 கோடி
1997 ஆண்டு எம்.பி நிதி 39 X 2 = 78 கோடி
1998 ஆண்டு எம்.எல்.ஏ நிதி 234 X 35 = 81.90 கோடி
1998 ஆண்டு எம்.பி நிதி 39X 2 = 78 கோடி
1999 ஆண்டு எம்.எல்.ஏ நிதி 234 X 77 = 180.18கோடி
1999 ஆண்டு எம்.பி நிதி 39X 2 = 78 கோடி
2000 ஆண்டு எம்.எல்.ஏ நிதி 234 X 77 = 180.18கோடி
2000 ஆண்டு எம்.பி நிதி 39X 2 = 78 கோடி
2001ஆண்டு எம்.எல்.ஏ நிதி 234 X 77 = 180.18கோடி
2001ஆண்டு எம்.பி நிதி 39X 2 = 78 கோடி
1997-2001 ஐந்து ஆண்டுகளுக்கான மொத்த எம்.எல்.ஏ நிதி = 704.34 கோடி
1997-2001 ஐந்து ஆண்டுகளுக்கான மொத்த எம்.பி நிதி = 390 கோடி
97- 01 ஐந்து ஆண்டு மொத்த எம்.எல்.ஏ+ எம்.பி நிதி= 1094.34 கோடி
2002ல் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி 82லட்சமாக உயர்த்தப்பட்டது.
2002ஆண்டு எம்.எல்.ஏ நிதி 234 X 82 = 191.88கோடி
2002 ஆண்டு எம்.பி நிதி 39X 2 = 78 கோடி
2003ஆண்டு எம்.எல்.ஏ நிதி 234 X 82 = 191.88கோடி
2003 ஆண்டு எம்.பி நிதி 39X 2 = 78 கோடி
2004ஆண்டு எம்.எல்.ஏ நிதி 234 X 82 = 191.88கோடி
2004 ஆண்டு எம்.பி நிதி 39X 2 = 78 கோடி
2005ஆண்டு எம்.எல்.ஏ நிதி 234 X 82 = 191.88கோடி
2005 ஆண்டு எம்.பி நிதி 39X 2 = 78 கோடி
02-05 நான்கு ஆண்டுகளுக்கான மொத்த எம்.எல்.ஏ நிதி = 767.52 கோடி
02-05 நான்கு ஆண்டுகளுக்கான மொத்த எம்.பி நிதி = 304.2 கோடி
02- 05 ஆண்டு மொத்த எம்.எல்.ஏ+ எம்.பி நிதி= 1071.72 கோடி
ஆக 1992 ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில்
தமிழகத்தின் எம்பிக்களுக்குத் தரப்பட்ட நிதி= 850.2கோடி
1997 ஆண்டு முதல் 2005 வரையிலான காலத்தில் தமிழகத்தின் எம்.எல்.ஏக்களுக்கு தரப்பட்ட நிதி = 1471.86 கோடி
2300கோடிகளை தொகுதி வளர்ச்சிக்காக தமிழகத்து எம்.பிக்களும் எம்.எல்.ஏக்களும் வாங்கிப் பயன்படுத்திக்கட்டியவை மொத்தத்தில் 300 பேருந்து நிறுத்த நிழற்குடைகளும் கல்வர்ட் எனப்படும் சிறுபாலங்களும்தான். உபயோகமற்ற கட்சி சார் அலங்காரவளைவுகள் அடுத்த சாதனை.
திட்ட நிதி பகிற்வுப் பட்டியல்
கழகத்தலைவர்க்கு ....%
- முதலமைச்சருக்கு ...%
- கழக-இயக்கநிதி...%
- துறை அமைச்சருக்கு ...%
- எம்.எல்.ஏ ....%
- எம்.பி ....%
- ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு ...%
- மாவட்டம் ...%
- வட்டம் ...%
- தொண்டர் ....பிரியாணி + பேட்டாக்காசு
- தொகுதி வளர்ச்சித் திட்டம் = நிதிப் பற்றாக்குறை அடுத்த நிதியாண்டு கவனிக்கப்படும் என்ற வாக்குறுதி!
பொதுமக்கள்.... தலையில் பூசிக்கொள்ள சந்தனம்
ஆக எம்.எல்.ஏவாக இருந்தால் பெட்டி கேஷ் ஆண்டுக்கு ஒரு கோடி தொகுதி வளர்ச்சி நிதி புரளும். எம்.பி எனில் 2 கோடி!
ஐந்தாண்டுக்கு கூட்டணியோடு அரசை ஒப்பேத்தினால் ஐந்து கோடி பெட்டி கேஷ் உத்திரவாதம்! எம்.பிக்கு 10 கோடி!
இது போக தொகுதியில் இன்டர்செக்ட் ஆகிற எந்த திட்டத்திலும் % நெகோஷியேட் செய்து கறக்கும் வாய்ப்பு.
அரசு காண்ட்ராக்டர்களாக தம் கழக கைத்தடிகளை வட்டம், மாவட்டம் என்போரை நியமித்து போடாத ரோடு, வெட்டாத கேணி என்று அதிலும் காசு பார்க்கலாம்.
தமிழன் மலம் அள்ளுகிறான், சாக்கடையில் முத்துக்குளிக்கிறான்னு செய்திக்கு தமிழக எம்.எல்.ஏ /எம்.பி பதில் என்ன.... ம்ம்ம்...
பதில் 1: பாப்பான்கள் தான் பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் பாம்பை விடு பாப்பானை அடி!
பதில் 2: ஆரிய வந்தேறிகளின் வருணசாஸ்திரம். பாப்பானை பீயள்ளவிடவேண்டும், சாக்கடையில் முக்குளிக்க விடவேணும்!
பதில். 3 பார்ப்பன ஏடுகளின் புரட்டுச் செய்தி. இந்த ஏழை சூத்திரன் மீது விஷம் கக்குகின்றன!
பதில் 4 : பாப்பான்களின் ஆரிய மாயையில் சிக்கிய ஆரிய அடிவருடிகளின் திட்டமிட்ட சதி! கோயபல்ஸ் அறிக்கை!
பதில் 5: (மனதுக்குள் ) அவன் தலைவிதி அது! அவனில்லை எனில் ...நிதி, ...நிதி, ...நிதி.... நிதியாக் களவாண்டு சேர்த்து ஆசியாவின்...உலகின் முதல் நிதிகூடிய குடும்பம்/கூட்டம் என்று எப்படி ஆவது!
தமிழனின் நலனுக்கான வளர்ச்சித்திட்டத்திற்கான எல்லா நிதியையும் இப்படிக் கூட்டுக்களவானிகளாகக் கொள்ளையடித்தால்..
தமிழன் எப்படி வளர்வது?
தமிழ்ச்சாதி எப்படி சாதிப்பது?
தமிழ்ச்சமுதாயம் எப்படி உலகிலேயே முன்னேறிய சமுதாயமாவது?
என்று கேள்விகள் எழுவது நியாயமே.
அரசியல் திரா'விட"க் கட்சித் தலைவர்களின் பதில்:
நாங்கள் அக்மார்க் திராவிடர்கள் தானே, தீந்தமிழ், பைந்தமிழை தினமும் பேசுபவர்கள்தானே, செம்மொழியாம் தனித்தமிழில் ஒரு பழமொழி உண்டு " ஒருபானைச் சோறுக்கு ஒரு சோறு பதம்" என்பதை இக்கணத்தில் நினவு கூர்வது அவசியம்!
அடியேன் தமிழிந்தமிழான எனது முன்னேற்றம் தமிழின் முன்னேற்றம்!எனது நிதி உயர்வு நிலை உலகத் தமிழ்ச் சாதியின் நிதிகூடியநிலை!
அன்புடன்,
ஹரிஹரன்
25 comments:
பின்னூட்ட டெஸ்ட்
இது விதியா. . ?
காலம் செய்த சதியா. . ?
இல்லை திருடர்களின் மதியா. . ?
வாருங்கள் வெங்கட்ராமன்.
தமிழக வளர்ச்சி நிதியைத் திருடும் கெடுமதியாளர்களைக் கேள்விகள் கேட்காமல் எதுக்கு வம்பு என்று ஒதுங்கி ஒதுங்கிப்போகும் போக்கு காலத்தினை சதி செய்ய வைத்துப் புதிய மோசமான விதியைச் செய்து கொண்டிருக்கிறோம்.
மத்திய வர்க்க, படித்த ஆற்றலுடையவர்கள் நேர்மையான அரசியலுக்கு அரசியலில் பகுதிநேரமாக ஆர்வம் காட்டவேண்டும்!
//தமிழக திராவிடகட்சிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்கள் //
ஹி ஹி.. அப்படின்னா மத்த (கம்யூனிஸ்ட், பா.ஜ.க....) எம்.எல்.ஏ, எம்.பி. எல்லாம் நல்ல புள்ளைங்களா?
வாருங்கள் அருண்மொழி,
//ஹி ஹி.. அப்படின்னா மத்த (கம்யூனிஸ்ட், பா.ஜ.க....) எம்.எல்.ஏ, எம்.பி. எல்லாம் நல்ல புள்ளைங்களா? //
தமிழகத்தில் கம்யூனிஸ்ட், பா.ஜ.க எம்.எல்.ஏ, எம்.பிக்கள் ஒன்றோ, இரண்டோ என்றிருப்பவர்கள் they are not entities in TN. ஆடிக்கழிவு, தீபாவளி டிஸ்கௌண்ட் சேல் மாதிரி கழிச்சுக்கலாம். இன்பாக்ட் இவர்கள் கூடுதலாக ஒரு நிழற்குடையும் , சிறு பாலமும் கட்டி யிருக்க்கலாம். (கழகக்காரர்கள் அலங்கார வளைவுக்குச் செலவிடுவது மாதிரி வாய்ப்பு இல்லாததால் :-))
சோ அவர்கள் தன்னுடைய எம்.பி. மேம்பாட்டு நிதியிலிருந்து ஏராளமான உதவிகளைச் செய்திருக்கிறார் - துக்ளக் பத்திரிக்கையில், பட ஆதாரத்துடன் பல வாரங்களுக்கு இந்தச் செய்தி பிரசுரமாயிற்று. ஒரே ஒரு எம்.பி. மனது வைத்தாலே இவ்வளவு நலத்திட்டங்களைச் செயல்படுத்த முடிகிறதே என பிரமிக்க வைத்தது. நாற்பதாண்டு காலம் ஆண்டு அனுபவித்து இன்னும் ஆசை அடங்காமல் ஆடிக் கொண்டிருக்கும் திராவிட அரசியல்வாதிகள் தங்களுடைய நிதியினை எவ்வாறு செலவு செய்தனர் என்பதை பட்டிலியட தயாரா?
/ பார்பன அடிவருடி மற்றும் இன்ன பிற அசிங்கங்களை கொண்டு என்னை வசைபாட வரும் அனைவருக்கும் - ஒரு வேண்டுகோள். சோ அவர்களைத் தவிர யார் இந்த மாதிரி செய்து இருந்தாலும், நான் பாராட்டியிருப்பேன். ஆகவே இதிலாவது சாதியினைக் கொண்டு இகழ மாட்டீர்கள் என் நம்புகிறேன்//
இதற்குத் தான் தந்தை பெரியார் சமூகநீதி இயக்கங்கள் அரசியல் கட்சிகளாவதை எதிர்த்தார். ஆரிய திராவிட வாதம் அரசியலுக்கும் ஆட்சிக்கும் அப்பாற்பட்டது. ஆனால் திராவிட கட்சிகள் ஆட்சியில் குற்றம் கண்டுபிடிப்பதே சமூகநீதிக்கு ஒவ்வாதது போல ஒரு மாயை உருவாக்கப் பட்டிருக்கிறது. இன்று மன்மோகனை குற்றம் சொன்னால் சீக்கியர்கள் எல்லோருக்கும் எதிரானதாக யாரும் கொள்வதில்லை. உங்கள் வாதமும் அந்த 'மாய' திசையிலேயே செல்கிறது. சமீப தேர்தல் வன்முறைகள் தமிழருக்கு, அவர் ஆரியராக இருந்தாலும், திராவிடராக இருந்தாலும், பெருமை சேர்ப்பன அல்ல.திராவிடன் நெடுஞ்செழியன் செங்கோல் வழுவிய அடுத்த கணம் உயிர் நீத்தான்.
இனி RTI வந்தாயிற்று; ஒவ்வொரு குடிமகனும் தங்கள் பிரதிநிதிகள் அவர்களுக்கு கிடைத்த நிதியை எப்படி செலவழித்தார்கள் என்று கேட்கலாம், கேட்க வேண்டும். யார் பூனைக்கு மணி கட்டுவது ?
வாருங்கள் கிருஷ்ணா.
//சோ அவர்கள் தன்னுடைய எம்.பி. மேம்பாட்டு நிதியிலிருந்து ஏராளமான உதவிகளைச் செய்திருக்கிறார் //
கிருஷ்ணா சோவை நீங்கள் சுட்டிய பின்பு தான் தமிழக ராஜ்யசபா நியமன எம்பிக்க்கள் எஸ்.எஸ் சந்திரன், சரத்குமார், அன்புமணி ராமதாஸ் போன்றோரது கோடிகள் கூட்டுக்களவாணி நிதியில் சேர்க்க மறந்தது நினைவிற்கு வந்தது.
சோ தமிழ்நாட்டுக்கு அவரது நிதியைப் பயன்படுத்தியிருப்பது மகிழ்ச்சி.
என்ன பண்றது இப்போ நாற்பதாண்டுகளாக நேர்மையற்ற அரசியல் திரா'விட'த்தில் ஊறிய சூழலில் "அம்மணமா திரியுறவங்க ஊர்ல - கோட் சூட் போட்டவன் கிறுக்கன்" So சோ ஒரு கிறுக்கு!
வாருங்கள் மணியன்.
தமிழகத்தின் ஆளும் கட்சித்தலைவர் மு.க சமூகநீதிக்காக பலதியாகங்கள் செய்த இயக்கம் ஒரிஜினல் அக்மார்க் திராவிட இயக்கம் என்று சூப்பர் க்ளைம் செய்வது அவர் இயல்பு. உண்மையில் அடித்தட்டு மக்களுக்கு இந்த திராவிட இயக்கங்கள் எதுவும் செய்யவில்லை. முனிசிபாலிட்டியில் மலமள்ள, தமிழகத் தலைநகரில் சாக்கடையில் முக்குளிக்க இயந்திரங்கள் வாங்கி தமிழனை மேம்படுத்தவில்லை.
ஜெயா, எம்.ஜி.ஆர் ஊழல்வாதிகள் என்றாலும் மு.க மாதிரி திரா'விட' நெருப்பில் குளிர்காய்வதில்லை.
காஃபி டாஃபி சண்டை மாதிரி முடிவற்றது ஆரிய-திராவிட வாதம்.
இந்த வாதத்தினை விட ஒட்டுமொத்த தமிழனின் அன்றாட வாழ்வியல் மேம்பாட்டுக்கு சிறப்பிக்க இந்த அரசியல் திரா'விட'ம் பேசும் கட்சிகள் தேவையானவற்றைச் செய்வதற்குத் தரப்பட்ட நிதியைக் கூட்டுக் களவாணிகளாக களவாடி வருகிறார்கள்.
//உங்கள் வாதமும் அந்த 'மாய' திசையிலேயே செல்கிறது//
மணியன் எதை நீங்கள் இங்கு மாயதிசை என்கின்றீர்கள் என்று புரியவில்லை.
//இனி RTI வந்தாயிற்று; ஒவ்வொரு குடிமகனும் தங்கள் பிரதிநிதிகள் அவர்களுக்கு கிடைத்த நிதியை எப்படி செலவழித்தார்கள் என்று கேட்கலாம், கேட்க வேண்டும். யார் பூனைக்கு மணி கட்டுவது ?//
மணியன், தகவலறியும் உரிமை வந்திருக்கிறது உண்மைதான். நிதிப்பகிற்வு தகவலறிய முற்பட்டால் ஆசிட்பல்பும், ஆட்டோவும் தகவலுக்கு முன் வரும் நிலை என்று ஏற்படுத்தியிருக்கும் அரசியல் திரா'விட' க் கட்சிகள், தங்கள் நேர்மையை அதன் தலைவர்கள் leadership by example என்றிருந்து மாற்றிட ஆவன செய்வார்களா?
//இனி RTI வந்தாயிற்று; ஒவ்வொரு குடிமகனும் தங்கள் பிரதிநிதிகள் அவர்களுக்கு கிடைத்த நிதியை எப்படி செலவழித்தார்கள் என்று கேட்கலாம், கேட்க வேண்டும். யார் பூனைக்கு மணி கட்டுவது ?//
மணியன், தகவலறியும் உரிமை வந்திருக்கிறது உண்மைதான். நிதிப்பகிற்வு தகவலறிய முற்பட்டால் ஆசிட்பல்பும், ஆட்டோவும் தகவலுக்கு முன் வரும் நிலை என்று ஏற்படுத்தியிருக்கும் அரசியல் திரா'விட' க் கட்சிகள், தங்கள் நேர்மையை அதன் தலைவர்கள் leadership by example என்றிருந்து மாற்றிட ஆவன செய்வார்களா?
ஹரி, உங்கள் கண்ணுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்ட்ரா ஆகிய ஏனைய மாநிலங்கள் தெரியாதா? ஏன் எங்களை மட்டும் பார்க்கிறீர்கள் என "புறங்கையைதானே நக்கினோம்" என்று கன்பென்ஷன் செய்தவர்கள் வருவார்கள்.
வாருங்கள் சிவா,
//உங்கள் கண்ணுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்ட்ரா ஆகிய ஏனைய மாநிலங்கள் தெரியாதா? ஏன் எங்களை மட்டும் பார்க்கிறீர்கள் என "புறங்கையைதானே நக்கினோம்" என்று கன்பென்ஷன் செய்தவர்கள் வருவார்கள். //
தமிழகத்தில் கால்நூற்றாண்டு முதலமைச்சராக இருந்து ஆட்சி புரிந்த பெருமையுடைய கட்சி அடித்தட்டுத் தமிழன் நரகலை நவீனமாக துப்புரப்படுத்தவும், பட்டை சாராயம் அடித்துவிட்டு சாக்கடை மேன்ஹோலில் இறங்கி முக்குளிக்காமல் இயந்திரப்படுத்த இந்த வளர்ச்சி நிதியைப் பயன்படுத்தியிருக்க வேண்டும் முழுமையாக.
இந்த அவலத்தினை சரி செய்யாமல் மஹாராஷ்டிராவைப் பார், குஜராத் பார்ன்னு திசை திருப்பி ஒப்பீடு செய்யும் பீடைகள் ஒழிய /ஒழிக்கப்பட வேண்டும்.
அருமையான பதிவு ஹரிஹரன்.
நச்சுன்னு கேட்டிருக்கீங்க.
RTI உபயோகித்து, ஒவ்வொரு MLA MP கிட்ட கணக்கு கேக்க வேண்டிய கடமை நம்ப எல்லார் கிட்டேயும் இருக்கு.
ஆசிட் பல்புக்கும், கத்தி வீச்சுக்கும் பயந்துட்டே இருந்தா, என்று தான் மேலே வருவது?
நாம் எல்லாரும் சேர்ந்துதான் ஒரு இயக்கம் உருவாக்கி ஒன்றாக செயல்படவேண்டும். செய்வோம்!
25 வருடத்திர்க்கும் மேல் சுரண்டியும், சுறண்டவிட்டும் ஆட்சி செய்த முதல்வருக்கு, 5/100 மதிப்பெண்கள்தான்.
He miserably failed.
மரணப் படுக்கையிலாவது செய்த பிழைகளை எண்ணி வருந்துவாரா அவர்?
BNI,
கேட்கிறதையாவது இனி முழுவீச்சில் செய்யவேண்டும்.
மு.க வருந்தவெல்லாம் மாட்டார். புரட்சின்னு சொத்தெல்லாம் புடுங்கிட்டா மரணத்தையே படுக்கையில் தள்ளி அடுத்த இன்னிங்ஸ் ஆட ரெடி ஆகிடுவார் :-))
நல்ல பதிவு ஹரிஹரன். இதுமாதிரியான விழிப்புணர்வு நோக்கம் கொண்ட பதிவுகள், சமூகத்தின் தேவை. நன்றி..
நல்ல பதிவு...திராவிட கட்சிகளை ஆதரிப்பவர்கள் தரப்பிலிருந்து எந்த சத்தமும் காணோமே :))
ஹரிஹரன்,
கட்டுரையின் நோக்கம் நல்லவிதமாக இருந்தாலும், பிற்பகுதியில் அது சிதைக்கப்பட்டுவிட்டது. இதுவரை வந்துள்ள பின்னூட்டங்களும் அதை மெய்பித்துள்ளது.
நீங்கள் யாரிடம் இவ்விடயத்தில் கருத்தை எதிர்பார்க்கிறீர்களோ, அவர்கள் யாரும் பின்னூட்டமிடுவது சந்தேகமே.
சோத்துக்கட்சியாரே,
//இதுமாதிரியான விழிப்புணர்வு நோக்கம் கொண்ட பதிவுகள், சமூகத்தின் தேவை.//
நம் மாதிரி வெகுதியான பொதுஜனம் இம்மாதிரி நடைமுறை சீர்கேடுகளை வலைப்பூவில் கேட்க ஆரம்பித்து சிறுதுளி பெருவெள்ளமாகி ஏதானும் மாற்றம் கொணர உதவிகரமாக இருந்தால் நல்லது!
வாங்க பெத்தராயடு,
//கட்டுரையின் நோக்கம் நல்லவிதமாக இருந்தாலும், பிற்பகுதியில் அது சிதைக்கப்பட்டுவிட்டது. இதுவரை வந்துள்ள பின்னூட்டங்களும் அதை மெய்பித்துள்ளது.//
இல்லை. மலமள்ளுபவனின் வாழ்வில் ஒளியேற்றாது இவர்கள் பாப்பானைப் பீயள்ள்ள விடவேண்டும் என்று விதண்டாவாதம் செய்வதைச் சுட்டவே அப்பகுதி!
//நீங்கள் யாரிடம் இவ்விடயத்தில் கருத்தை எதிர்பார்க்கிறீர்களோ, அவர்கள் யாரும் பின்னூட்டமிடுவது சந்தேகமே.//
உண்மையில் எவரிடமும் கருத்தை எதிர்பார்த்து இப்பதிவிடவில்லை. எனக்குப் பட்டதைப் பதிய நினைத்து எழுதியதே.
என்ற போதும் சம்பந்தப்பட்ட இயக்க ஆதரவாளர்களாக தங்கள் வலைப்பூக்களில் முழக்கமிடும் வலைஞர்கள் பதிலளித்தால் சிறப்பாக அமையும் விவாதம்.
ஹரிஹரன் (& everyone else),
//காந்தியின், காமராஜரின் எளிமையைத், தியாகத்தைக் கூட்டம்கூடி ஏளனம் செய்ய எவரெடியாய் இருப்பார்கள்!
இல்லை சும்மா பாப்பான் பாப்பான்னு கதறுவார்கள்!
//
நல்ல விஷயங்களை பட்டியலிட்டு பதிவாக கொடுத்துள்ளீர்கள். இதை மாதிரி தான் எல்லோரும் முன்னேற்றப் பாதயில் ஊரை கொண்டு செல்ல என்னென்ன செய்ய் வேண்டுமோ, அதை செய்ய வேண்டும்.
இதன் நடுவில், வலைப்பதிவாளர்களுக்குள் இருக்கும் இந்த 'தாக்குதல்கள்' வேண்டாமே.
'அவன நிறுத்த சொல்லு, நான் நிறுத்தறேன்' - அதுவும் வேண்டாம்.
ஒவ்வொருவரும் தானே மாறிக் கொள்ளலாமே.
நீங்கள் ஆரம்பித்து வையுங்கள், மற்றவர் தானால் வருவார்கள்.
ஒன்றுபட்டால்தான் வாழ்வு வரும். கூத்தாடிக்குக் கொடுத்தது போதும்.
BNI,
//இதன் நடுவில், வலைப்பதிவாளர்களுக்குள் இருக்கும் இந்த 'தாக்குதல்கள்' வேண்டாமே.
'அவன நிறுத்த சொல்லு, நான் நிறுத்தறேன்' - அதுவும் வேண்டாம்.
ஒவ்வொருவரும் தானே மாறிக் கொள்ளலாமே.
நீங்கள் ஆரம்பித்து வையுங்கள், மற்றவர் தானால் வருவார்கள்.//
நான் ஆரம்பிச்சாச்சு. தாக்குதல் வரிகளாக நீங்கள் சுட்டியதை நீக்கிவிட்டேன்.
Thank you sir.
மற்றவர்களும் உங்கள் வழி வரட்டும்.
வாங்க விசித்திரகுப்தன்,
//திராவிட கட்சிகளை ஆதரிப்பவர்கள் தரப்பிலிருந்து எந்த சத்தமும் காணோமே//
நேரடியான குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல பம்மாத்துப் பாசறை பயிற்சியில் சொல்லித்தந்திருந்தால் தானே இவர்கள் பதில் சொல்ல?
Post a Comment