Saturday, December 16, 2006

(85) திருவரங்கத்தில் ஈவெரா சிலை.... சுயமரியாதை..பகுத்தறிவு

உலகிலே எவனுக்குமே இல்லாத சிந்திக்கும் திறன் கொண்ட, சுயமரியாதையோடு பகுத்தறிகிற மூளை தமிழ்நாட்டில் இன்றைக்கு அதிகாரத்திலும், ஆட்சியிலுமாக இருக்கும் அரசியல் திரா"விட" இயக்கங்களின் தலைவனாக இருந்த , இருக்கின்றவர்களுக்கு மட்டுமே உண்டு.

அக் மார்க் பகுத்தறிவு + சுயமரியாதைக்குத் தகுதி கடவுளே கிடையாது என்பதில் ஆரம்பித்து, உருவ வழிபாட்டை உடைத்து, மூடநம்பிக்கைகளை முறியடிப்பதில் முனைந்து, சமூக நீதியில் பயணித்து, (இது ஒரு முடிவு இல்லாத பயணம் பயணித்துக்கொண்டே இருக்கும். இலக்கு இருந்தால் தானே அதைச் சென்று அடைய எண்ணம் பிறக்கும்.)

நாற்பதாண்டுகள் அரசியல் திரா"விட" இயக்க ஆட்சியின் மகிமை:

1947-48ல் இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் மீது அணுகுண்டுகள் வீசப்பட்டு மிக மோசமாக உருக்குலைந்தது. ஜப்பானிய சாமுராய் வீரர்களின் தாம் எவரினும் உயர்ந்தவர்கள் என்கிற எண்ணம் ஜப்பானின் இரண்டாம் உலகப்போர் செயல்பாடுகளுக்கு முக்கியமான காரணம்.

ஜெர்மனி நாடு ஹிட்லரால் வழிநடத்தப்பட்டு அவனது சிந்தனையான ஜெர்மானியன் எவரினும் மிக உயர்ந்தவன் என்கிற எண்ணத்தினால் உலகிற்குப் பரிசாகத் தந்தது இரண்டாம் உலகப் போர். யூதர்கள் கொத்துக் கொத்தாக கொன்றுகுவிக்கப்பட்ட ஹோலொகாஸ்ட் எனும் இன அழித்தொழிப்பைக் கிட்டத்தட்ட முழுமையாக நிறைவேற்றியவன் அடால்ஃப் ஹிட்லர்.

உலகநாடுகள் கூட்டாகப் போரிட்டு ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள் மிகுந்த சேதப்படுத்தப் பட்டு இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது.

1947-ல் இந்தியா வெள்ளைக்காரனிடமிருந்து சுதந்திரம் அடைந்தது. 1950க்குள் இந்தியா சிதறுண்டு சிற்றரசுகளாக, ஜமீன், சமஸ்தானங்கள் என்று இருந்த நிலையை சர்தார் வல்லபாய் படேல் இன்றைக்கிருக்கும் இந்தியாவை உருவாக்கினார்.

வெள்ளையன் இருந்த போது வெள்ளையனே தொடர்ந்து இருக்க வேண்டும் இங்கிலாந்தின் நல்லாட்சி இன்னும் தொடரவேண்டும் என்று சுதந்திரத்தினை ஆதரிக்காத சுயமரியாதைகூடிய, பகுத்தறிவுடனான சிந்தனை ஈவெரா தனது கொள்கையாக முழங்கியது.

சுதந்திரத்துக்காகப் போராடிய வவெசு ஐயர் அந்தமான் சிறையில் தொழுநோய் பீடித்து இறந்து என்று தேசதுரோகம் செய்தவர்! சொந்தக்காசைப் போட்டு கப்பல் ஓட்டி ஓட்டாண்டியாய் சிறைவாசம் சென்ற வ.உ.சிதம்பரம் பிள்ளை சுயநலவாதி! வெள்ளையனை எதிர்த்து வணிகம் செய்ய முற்பட்ட பகுத்தறிவற்றவர்! குடும்பத்தோடு வாழாமல் புதுச்சேரி, சென்னை என்று சிறைகளில் வாசம் செய்தபடி சுதந்திரத்தீயோடு கவிதைகள் மூலம் விடுதலை உணர்வூட்டிய எட்டயபுர சுப்பிரமணிய பாரதி த்சோ..த்சோ கோழை! சுப்ரமண்யசிவா, வாஞ்சிநாதன் இவர்கள் எல்லாம் பொதுநலனில் வாஞ்சையில்லாத சுயமரியாதை அறியாத, பகுத்தறிவில்லாத ஜடங்கள்!

தமிழ்நாட்டின் ஏழைகளுக்காக கல்விக்கூடங்கள் திறந்த காரைக்குடி அழகப்பச் செட்டியார், கருமுத்து தியாகராஜர், போன்ற பொதுமக்கள் கல்விக்கண் திறக்கத் தமது செல்வத்தினைச் செலவழித்தவர்கள் எல்லாம் இந்துமத வெறியாளர்கள்! அறிவிலிகள்! பகுத்தறிவற்றவர்கள்!

உலகப்போர் முடிந்த 40 ஆண்டுகளுக்குள்ளாக பிணக்கிடங்காக, இடிந்த கட்டிடங்களின் குவியலாக இருந்த ஜப்பான் அதன் உண்மையான அக்கறையுள்ள, அர்ப்பணிப்புள்ள தேசம் முன்னேற வேண்டும் என்கிற பொதுப்புத்தியுடன் செயல்பட்ட தலைவர்களின் வழிநடத்தலால் முழுமையான அக்கறையோடு பொதுமக்கள் அனைவர்க்குமான ரயில் இருக்கை கிழிந்திருப்பதைத் சுயமரியாதையாய், பகுத்தறிவோடு சிந்தித்து கிழிசலைத் தைத்து சரிசெய்யும் ஆக்கமான சிந்தனையுள்ள பொதுப்புத்தி பொதுஜனங்களை உருவாக்கியதன் மூலம் பலமான கட்டமைப்பு, அதிலும் நிலநடுக்கம், சுனாமிகள் என்கின்ற நிரந்தரமான இயற்கை அழிவுச் சீற்றங்கள் ஜப்பானின் வாசலில் தொடர்ந்து இருக்கும் நிலையிலும் உலகமே வியக்க ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடத்தியது. உலகப்போர் அழிவில் இருந்து வெறும் நாற்பது ஆண்டுகளில் ஜப்பான் அதன் தலைவர்களால் உலகப்போருக்கு முன்பாக தான் இருந்த இடத்தினையும் மிஞ்சி வென்றிருக்கின்றது! ஜப்பானியத் தலைவர்கள் ஆக்கமாக ஜப்பானிய மக்களை வழிநடத்தியதற்கு இதை விடவும் சான்றுகள் தேவையில்லை.

இப்படி முன்னேறிய ஜப்பானின் புத்தர் கோவில்கள் முன்பாக சிலை வைக்கப் பொதுப்புத்தி ஜப்பானியன் சுயமரியாதை, பகுத்தறிவு வழி நடந்து தொலைக்கவில்லை! ஜப்பானில் கல்வி கற்க கற்கும் ஆர்வம் இருந்தால் மட்டும் போதும்! சாமுராய் இனத்தவரின் செயலால்தான் ஹிரோஷிமா, சாகசாகியில் அணுகுண்டு விழுந்தது எனவே சாமுராயைச் சாகடிக்கவேண்டியது சமூகநீதி என்று சுயமரியாதையோடும், பகுத்தறிவோடும் பொதுப்புத்தி ஜப்பானியனை காவல்நாய்கள் என்று குரைப்புப் பேச்சு பேசவைக்கவில்லை! ஜப்பானியத் தலைமை காட்டிய ஆக்கமான வழிகாட்டலில் ஜப்பானியனை அரசு முன்வந்து போதும் நிறுத்து வேலை செய்யாதே தாங்காது என்கிற அளவிற்கு ஆக்கமாக மனித சக்தியை பயன்படுத்த வைத்தார்கள்!

ஜப்பானியத் தலைமை அய்யோ பாவம் சுயமரியாதை அற்றது! லாரியிலே ஆடுமாடுகள் மாதிரி ஏற்றி கலிஞரு வாழ்க! அம்மா ஒழிக! அம்மா வாழ்க! கலிஞரு ஒழிக! என்று கோஷம் போடவும், இயற்கையின் கொடையிலேயே மிகச் சிறப்பானது வெங்காயம் மட்டுமே(பிரியாணிக்கு) என்று சிலைகள் வைத்துக் கலவரம் செய்யும் சாணக்கியத்தனம் தெரியவில்லை!

அதுசரி இடுங்கிய கண்ணும், குட்டையான உயரமும் இருக்கின்ற ஜப்பானியனுக்கு என்ன தெரியும் பகுத்தறிவு, சுயமரியாதை பற்றி?

பாருக்குள்ளே எங்காவது ஒருBarக்குள்ளிருந்த படியும், டாஸ்மாக் Barகளுக்குளேயும் சிந்தித்து சுயமரியாதையோடும், பகுத்தறிவோடும் எண்ணமுடியாத எண்ணப் பிழைகள் மற்றும் எழுத்துப்பிழைகளுடன் கூப்பாடுபோடும் கூட்டமாக இளைய தலைமுறைத் தமிழர்களை வழிநடத்திய அரசியல் திரா"விட"ப் பெத்தடின் சிந்தனையை, சுயநல, பிழைப்புவாதத்தினை கொளுகையாகக் கொண்ட சுயமரியாதைப், பகுத்தறிவு இயக்கங்கள் வாழையடி வாழையாக இந்த 40 ஆண்டுகளில் தமிழகத்தில் "சாதி"த்திருக்கின்றன!

ஆட்சி அதிகாரத்தில் இருப்போரது பயிற்சிப் பாசறையான மனிதனின் சுயமரியாதை, பகுத்தறிவை ஆராய்ந்து முதன் முதலில் கண்டுபிடித்துப் பறைசாற்றிய ஒரிஜினல் அக் மார்க் திரா"விட" கொளுகை இயக்கம் வெல்லமாய் இனிக்கும் வெள்ளம்போன்ற வல்லிய சொத்தைப் பேணுவதற்காக வல்லத்திலே நடத்தப்படும் சால்ஜாப்புக் கல்வி நிறுவனங்களின் பயன்பாடு உண்மை, விடுதலை பத்திரிக்கைகளின் மினிமம் கியாரண்டி சர்க்குலேஷனுக்கு என்பதான சுயநல கால்குலேஷன்களே!

இன்றைக்கு மத்தியில், மாநிலத்தில் ஆட்சி, அதிகாரம், பதவி, சுகங்களில் திளைக்கும் கால் நூற்றாண்டு காலமாக ஆட்சியில் இருக்கும் அக் மார்க் திராவிட இயக்கம் ஏன் ஒரு பள்ளியையோ, கல்லூரியையோ, எந்த ஒரு கல்வி நிறுவனத்தையோ இன்றைக்கு வரையில் துவக்கவில்லை? வீட்டுக்கு ஒருவர் என்கிறபடியாக இலவசமாக தமிழக ஏழை மக்களுக்கு கல்லூரிப்படிப்பைத் தந்து முன்னோடியாக ஏன் இருக்கவில்லை?

ஆட்சிக்கட்டிலில் அதிகாரத்தைப் பயன்படுத்தி டாட்டா பிர்லா ரேஞ்சுக்கு நாலாயிரம் ஐந்தாயிரம் கோடிகளுக்கு அதிபதியாக வெறும் இருபது ஆண்டுகளில் மக்கள் நலத்திட்ட நிதியைக் கொள்ளையடித்து இருபது தொலைக்காட்சிச் சேனல்கள் எனத் தனது மனச்சாட்சியினை அடமானம் வைத்ததன் மூலமாக அடையத் தெரிந்த கலிஞரு ஏன் மெயான அறிவாலயங்களான கல்வியைப் புகட்டுவதற்கு இரண்டு கல்லூரிகள் கூட ஆரம்பிக்கவில்லை? ஒருவேளை தனது தலைமையிலான மாநில அரசின் பெர்மிஷன் கிடைக்கல்லியோ?

பகுத்தறிவு என்றும் சுயமரியாதை என்றும் மேடைக்கு மேடை வெறும் வெட்டிப் பேச்சுப் பேசி வாய்கிழியப் பேசும் இந்தப் பகுத்தறிவு திரா'விட"த் தலைவர்கள் ஏன் இலவச வேட்டி, இலவச சேலை, இலவச செருப்பு, இலவச அடுப்பு, இலவச தொலைக்காட்சி என்று ஏழைத்தமிழனை வரிசையில் நின்று பகுத்தறிவோடும், சுயமரியாதையோடும் பிச்சையெடுக்க மட்டுமே திட்டங்கள் தீட்டி ஆட்சிக்கு வருவதென்ன?

பகுத்தறிவு வெங்காயத்தின் சொத்து அனுபவிப்புத் திலகமான கோழைமணிகள் சுயமரியாதையோடும், பகுத்தறிவோடும் இலவச டிவி ஏழைகள் "அந்த"விஷயத்தைக் குறைக்கும் கருத்தடைச் சாதனம் என்று வெளங்கியமாதிரி வெளக்கம் சொல்வதான சுயமரியாதை, பகுத்தறிவுக் கூத்துக்கள் ஏன்? 40ஆண்டுகளில் தன் சம்பாத்தியத்துக்கு மிஞ்சிக் கூடுதலான குழந்தைகள் தவறு என்றும் சம்பாத்தியத்துக்காகவே கூடுதல் குழந்தைகள் என்பது கொடுமை என்று சுயசார்புச் சிந்தனை வளர அடிப்படையான உயர்கல்வியை அல்லவா இலவசமாக எல்லோருக்கும் அளித்திருகவேண்டும்?

அரசியல் திரா"விட"ச் சுயமரியாதைச் சிந்தனை ஏழையைச் சுயதரித்திரத்திலே மூழ்கி மூழ்கி அடிக்க அவனது வேதனையை டாஸ்மாக் கடைகள் வைத்து அதிலும் காசு பார்க்கும் சுயமரியாதையான, பகுத்தறிவுச் சிந்தனை வராத ஜப்பானியனின் பொதுபுத்தி இகழப்பட வேண்டியதே! இதைச் செய்யத்தவறிய ஜப்பானிய சமூகத் தலைமை மூடநம்பிக்கைகள் கொண்ட முட்டாள்கள் தான்!

உலகப் போரில் உருக்குலைந்த ஜெர்மனி ஹிட்லரினால் தான் அனைத்தும் என்று ஹிட்லரின் உறவு, சார்பாளர்களைச் சாடிக்கொண்டு 40 ஆண்டுகளைக் கடத்தவில்லை! ஆக்கமாகப் பணியாற்றினார்கள். போரில் சிதைந்து பிரிந்த கிழக்கு, மேற்கு ஜெர்மனி மீண்டும் இணையும் படியாக ஜெர்மனியின் தலைமை மக்களை வழிநடத்தியது.

எந்தப் பொருளும் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது என்பது தரத்தில் சிறந்தது, நீடித்து உழைக்கும் என்கின்ற நம்பிக்கையை உலகமெங்கும் மக்கள் மனதில் விதைக்கும் அளவுக்கு மக்களை தரமான தயாரிப்புக்களைத் தயாரிக்கவைக்க உதாரணமாக இருந்து வழிநடத்தினார்கள்! ஜெர்மனியின் தலைவர்கள் சுயமரியாதை, பகுத்தறிவு என்று வெட்டிப் பேச்சு பேசவில்லை!

உலகமே வியக்க உலகப்போர் அழிவிலிருந்து மீண்டு கட்டமைப்பில், ஒலிம்பிக்ஸ் மாதிரி உலகத் திருவிழாக்கள் நடத்தி உலக மக்கள் நம்பிக்கையை மீண்டும் பெற்றார்கள்!

சுயமரியாதை, பகுத்தறிவு என்று பேசாத ஜெர்மனியின், ஜப்பானின் தலைநகர்களில் ஓடும் நதிகளில் இன்றும் நல்ல நீர் ஓடுகிறது. உலகிற்கே பகுத்தறிவையும், சுயமரியாதையும் கண்டுபிடித்துச் சொன்ன பகுத்தறிவுப்பகலவன்கள் ஒளிவீசிய தமிழகத்தின் தலைநகரான சென்னையில் ஓடும் நதிகளான கூவம் ஆறு, அடையாறு இரண்டும் இந்த அரசியல் திரா'விட'ப் பெத்தடின் சுயமரியாதை, பகுத்தறிவு எத்தகைய தரம், மணம் கொண்டது என்பதற்கு நிகழும் சான்றுகள்.


துர்நாற்றம் பிடித்த நாற்பது ஆண்டுகள்! சுயமரியாதை, பகுத்தறிவு உணர்விருந்தால் மட்டுமே நிதர்சனம் இன்று விடுதலை செய்யும் இந்த துர்நாற்றமான உண்மையை உணரமுடியும்!

இந்தக் கேடுகட்ட வெங்காயமாகிய ஈவெரா எனும் பகுத்தறிவுப் பகலவனுக்குச் சிலை ஒரு கேடு! உண்மையில் சுயமரியாதை, பகுத்தறிவுக்கு வெட்கக்கேடு!



அன்புடன்,

ஹரிஹரன்

16 comments:

Hariharan # 03985177737685368452 said...

டெஸ்ட் மெசேஜ்!

Iyappan Krishnan said...

:) நூத்துல ஒண்ணு சொன்னாலும்
***ல குத்துற மாதிரி சொல்லிருக்கீறு

பகுத்தறிவு said...

If you donot want a statue for periyar, you can ask government to erect statue for your ayya! I think it would be more useful for the country.

பகுத்தறிவு said...

கோயிலுக்கு முன்னால் தந்தை பெரியார் சிலை வைப்பதில் நியாயம் உண்டே! அவர்தானே கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்களை நுழைய விட்டார். அவர்தானே கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவர் செல்லுவதற்கான உரிமைக்குக் குரல் கொடுத்தார். அவர்தானே தாழ்த்தப்பட்டவர் உள்பட அனைவருக்கும் அர்ச்சகர் ஆவதற்கான உரிமையைப் பெற்றுக் கொடுத்தார். ஏன் அந்தக் கண்ணோட்டத்தில் இதனை அணுகக் கூடாது?
சிந்திக்கும் தன்மை கொண்டவர்கள் சிந்திப்பார்களாக!

dondu(#11168674346665545885) said...

'அவர்தானே' என்று கூறி என்னவோ அவர் மட்டும்தான் இக்காரியத்தை செய்தார் என்பது போன்ற ஃபிலிம் ஏன் காட்ட வேண்டும்? ராஜாஜி, ரெட்டைமலை சீனுவாசன், வைத்தியநாத ஐயர் இன்னும் பலரும்தான் அக்காரியத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இப்போது பிரச்சினை என்னவென்றால் ஈவேரா அவர்களின் சிலையின் பீடத்தில் பொறிக்கப்படும் வாசகங்களைப் பற்றியே. ஆத்திக அன்பர்கள் கூடும் இடத்தில் கடவுளை நம்புவன் காட்டுமிராண்டி என்று எழுதி வைத்தால் கலகம் பிறக்குமா பிறக்காதா என்பதை பகுத்தறிவுடனேயே கூறுங்கள்.

அப்படி இருக்க, ஏய் டோண்டு ராகவா நீ மட்டும் உன் பதிவில் சிலை இருக்கட்டுமே என்று ஏன் இரட்டை நிலை எடுத்தாய் என்று கேட்பவர்களுக்கு எனது பதில் இதுதான்:

பகுத்தறிவின்படியே கூறுகிறேன். ஈவேரா அவர்களின் பெற்றோர் மிகுந்த கடவுள் பக்தியுடையவர்கள். கடவுளை நம்பியவர்கள். அவரது முதல் மனைவி நாகம்மை கடவுள் பக்தியுடையவர். ஆகவே அவரது கூற்றுப்படி அவர் காட்டுமிராண்டிகளின் மைந்தர், ஒரு காட்டுமிராண்டியை மணந்து குடும்பம் நடத்தியவர். ஆகவே இதை நினைவுபடுத்தும் அவரது சிலை அங்கேயே இருந்து தொலையட்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Hariharan # 03985177737685368452 said...

அய்யா பகுத்தறிவு,

ஹிட்லரின் ஹோலொகாஸ்ட் யூத இனக்கொலைக்குப்பின் உலக அரசியல் அரங்கில் திராணியற்ற யூதர்களுக்காக வேண்டி தனிநாடாக இஸ்ரேல் ஏற்படுத்தியவருகுக் கூட யூதக் கோவில்களின் முன்பாக சிலைகள் வைத்ததாக வரலாறில்லை!

சிலை வைக்கும் வெட்டிச் செயலை சுயமரியாதையாகவும், பகுத்தறிவோடும் உலகில் அரங்கேற்றியது அரசியல் திரா"விட"ப் பெத்தடின் கொளுகை இயக்கங்கள் தான் ஐயா!

இந்தச் சிலை வைத்தல் என்கிற வெறுமையான கலாச்சாரத்தினால் நாற்பதாண்டுகளாகச் சிலையாகச் சமைந்து , உறைந்து, நின்றுபோய் அவலமாய் இருப்பது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றமே!

தமிழகத்தின் ஆட்டையாம் பட்டியைத் தாண்டி வெளியேறி வந்து படித்த அரைகுறை உலக வரலாற்றுடன் 40 ஆண்டுகளில் அவர்கள் அடைந்த ஒட்டுமொத்த சமூக முன்னேற்றம், தேசக் கட்டமைப்பில் மெய்யான சுயமரியாதையோடும், பகுத்தறிவினைப் பயன்படுத்தியும் முன்னேறி இருப்பதைக் காணும் போது உலகம் சுற்றும் உழைப்பாளித் தமிழனால் வெட்கத்துடன் உணரப்படுவது இந்த திரா"விட'த் தலைமைகளும் அதன் வெட்டித்தனமான தலைமைப்பண்பும், சமூக வழிகாட்டுதலும்!

சமகால ஜப்பானிய, ஜெர்மானிய, உலகத்தலைவர்களின் ஆக்கமான ஆளுமையான மக்கள் நல கொள்கைகளுக்கும், அர்ப்பணிப்புக்கும் அவர்கள் தேசத்தினை, சமூகத்தினை முன்னேற்றிய உண்மைகள் விடுதலை செய்யும் சாதனைகள் முன்பாக வெறுப்பு விரோதம் இவைகளைக் கொள்கையாக்கிய வெங்காயத்தலைவன் ஈவெராவும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அடிப்பொடி சிஷ்ய கேடிகளும் சமூக நலனுக்கு மிகவும் விரோதிகள்!

Hariharan # 03985177737685368452 said...

//If you donot want a statue for periyar, you can ask government to erect statue for your ayya! I think it would be more useful for the country. //

அய்யா பகுத்தறிவு,

என்னைத் தாக்குவதிலிருந்து மெய்யான பகுத்தறிவையும், அடுத்தவர் சுயமரியாதை பற்றியும் கொஞ்சம் கவலைப் படுங்கள்!

ஜெர்மனிக்கு வெங்காயம் ஈவெரா போய் நிர்வாணசங்கத்தில் முறையாகச் சேர்ந்து உளவியலாக கடல்தாண்டிய சுயமரியாதைத் தமிழனுக்கு உணர்த்த வேண்டிய கடமையுணர்வு உந்தித்தள்ள
"நிர்வாணமாக"ப் புகைப்படம் எடுத்து "குறி"ப்பாக உணர்த்தத் தெரிந்த பகுத்தறிவுப் பகலவனுக்கு ஜெர்மெனி உலகப் போர் சிதைவிலிருந்து மேலேறிவர உதவிய நேர்மையான விஷயங்களைக் கற்று அறிந்து வந்து தமிழகத்தில் அரசு நிர்வாகத்தில் தனது சிஷ்யகேடிகளிடம் ஜெர்மானியனின் சமூக வெற்றிக்கு வெறுப்பு விரோதம் காரணமில்லை என்பதை நேரடியாகச் சொல்லி வழிநடத்தியிருக்கலாமே?

மாறாக அதே ஜெர்மெனியின் தோல்விக்குக் காரணமான ஹிட்லரின் குறிப்பிட்ட இன, மத வெறுப்பு என்கின்ற குரோதத்தைத் தானே அடிப்படைக்கொள்கையாக பகுத்தறிவு என்றும் சுயமரியாதை என்றும் இயக்கமாக்கிச் செயல்படுத்திய வெங்காயம் தானே ஈவெரா?

வடுவூர் குமார் said...

ஹரி
என்ன இந்த மாதிரி ஐடியாவெல்லாம் ஜப்பானுக்கு கொடுக்கிறீர்கள்?
ஜாக்கிரதை ஏதாவது அனுப்பிவைக்கப்போகிறார்கள்.!!
வேலைக்குத்தான்.
:-))

Krishna (#24094743) said...

ஹரிஹரன் அய்யா: உண்மையிலேயே சமுதாய அக்கறையோடு சிந்திக்கத் தூண்டும் மிக நல்ல பதிவு. ஆனால் இதெல்லாம் அவர்களுக்கு புரியும் என்றா நினைக்கிறீர்கள்? 'பகுத்தறிவின்' பின்னூட்டமே சாட்சி! அவ்வளவு விஷயங்களைப் பற்றி எழுதியிருக்கிறீரே? அதையெல்லாம் படித்து ஏதாவது புரிந்த மாதிரியா எழுதியிருக்கிறார்? உப்பு பெறாத சிலையப் பற்றி (கட்டுரையின் கடைசி வரி) மறுபடியும் உளறி தங்களின் சிந்திக்கும் திறனை உலகுக்கு உணர்த்தியிருக்கிறார்! மற்ற குஞ்சுகளெல்லாம் இப்போ கூடி, வாழைஇலை, சதை இவைகளைப் பற்றி கும்மி அடிக்கணுமே? எங்க காணூம்? விளங்கின மாதிரி தான்.

Hariharan # 03985177737685368452 said...

வாங்க எல்லப்பன்,

உண்மை சுருக்கென்று குத்தத்தானே செய்யும்.

வருகைக்கு நன்றி. அடிக்கடி வாங்க!

Hariharan # 03985177737685368452 said...

வாங்க குமார்,


//என்ன இந்த மாதிரி ஐடியாவெல்லாம் ஜப்பானுக்கு கொடுக்கிறீர்கள்?//

ஜப்பானியனுக்கு சுயநம்பிக்கையும் மெய்யான சுயமரியாதையும், பகுத்தறிவும் உண்டு. :-)))

சொல்லியிருப்பது எல்லாம் நம்மூர் சுயமரியாதைச் சிங்கங்கள், பகுத்தறிவு ஆட்களுக்குத்தான் !

ஜடாயு said...

ஹரிஹரன், தலைப்பைப் பார்த்து ஏதோ லோக்கல் அரசியல் சரவெடி என்று உள்ளே வந்தால், அருமையான, கருத்துச் செறிவு நிறைந்த பதிவு. பாராட்டுக்கள்.

ஜப்பான், ஜெர்மனி, ரஷ்யா இந்த நாடுகளைப் பற்றி அவ்வப்போது ஈவெராவும் தன் பேச்சுக்களில் குறிப்ப்பிடுவார். அதை இப்போது எடுத்துப் படித்துப் பார்த்தால் ரொம்ப காமெடியாக இருக்கும். இந்த நாடுகளின் வரலாறு பற்றி அரருக்கு இருந்த ஞானம் அவருக்கு மிகப் பிடித்த அந்தக் காய்கறி அளவு தான் என்பது தெரிய வரும்.

நாட்டிற்கு உழைத்த நல்ல தலைவர்களை ஈவெரா மற்றூம் அவரது அடிவருடிகள் ஏளனம் செய்வது பற்றி உணர்ச்சிகரமாக எழுதியிருக்கிறீர்கள்.

அந்த நீள நீள வாக்கியங்கள் உங்கள் நடைக்கு ஒரு தனித் தன்மையைக் கொடுக்கின்றன. Keep it up!

Hariharan # 03985177737685368452 said...

டோண்டு சார்,

வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள்

Anonymous said...

//If you donot want a statue for periyar, you can ask government to erect statue for your ayya! I think it would be more useful for the country.//

இதுதான் எங்க வெங்காயம் கத்து கொடுத்த பகுத்தறிவு தெரிஞ்சுக்கோங்க

Hariharan # 03985177737685368452 said...

கிருஷ்ணா,

//உண்மையிலேயே சமுதாய அக்கறையோடு சிந்திக்கத் தூண்டும் மிக நல்ல பதிவு.//

உணர்ந்து பாராட்டியதற்கு நன்றிகள்:-))

// ஆனால் இதெல்லாம் அவர்களுக்கு புரியும் என்றா நினைக்கிறீர்கள்? 'பகுத்தறிவின்' பின்னூட்டமே சாட்சி!//

புரியாமல் இருக்க என்ன இருக்கிறது? தமிழில் எளிமையாகத் தானே பதிவு இருக்கிறது. எல்லாம் தெரியும், புரியும். பிடிச்ச முயலுக்கு மூணுகால் வெட்டி வீம்பு. வெறும் சுயநல பிழைப்புவாதம்!

சமூக நீதின்னு இன்னும் வெட்கமில்லாம முட்டாள்தனமாக பொய் சொல்லி இப்போ அடிக்கிற இந்தக் கும்மி எவ்வளவு தூரம் அடிப்பார்கள்?

Anonymous said...

ada vengAyangaLa
UngaLukku moolai enbathe kidaiyAthu enbathu nalla theriyuthu
Paapanukku pin puththi thaane

pAppanum thanmaanaththodu vaZhaNUm nu poradunavaruda PeriyAru

nenjula uram irunthAl un pEru mugavari ellam koduththu pathivu seyyungadA