Wednesday, December 06, 2006

(77) வாஸனைகளால் உந்தப்படுபவனே மனிதன்-பகுதி1

முதலில் சாப்பாட்டு விஷயமில்லை இது.

மனிதனின் செயல்பாடுகள் சிலவற்றின் மீதான அவனது ஈர்ப்பு அவனுள் காந்தம் மாதிரி இந்த இழுவைகளை ஏற்படுத்துகிற விஷயம். தனது முந்தைய தோற்றங்களினால் விழைந்த தற்போதைய தோற்றத்தில் தோன்றியதிலிருந்தே உடன் வரும் பாலன்ஸ் ஷீட் மூட்டையின் பெயர் "வாஸனாஸ்" Vasanaas எனப்படும் நறுமணம் Fragrance. இந்த நறுமணத்தின் தன்மையை வைத்தே அவனது சமூக இயங்குதல், சிந்திப்பு என்பது அமைகிறது.

உதாரணமாக சிறிய விஷயத்தைப் பார்ப்போம்:

சாலையிலே நடந்து கொண்டிருக்கும்போது முன்னே செல்கிற நபர் கவனக்குறைவால் அவரது பர்ஸைத் தவறவிடுகிறார். பின்னாலே வருகின்ற நீங்கள் அதைப் பார்க்கின்றீர்கள்.

உங்களுக்குள்ளான வாசனா எனும் விஷயம் இந்த சம்பவத்திற்கு நீங்கள் ஏற்படுத்துகின்ற எதிர் விளைவுகளின் தன்மைகளை நிர்ணயிக்கிறது.

1. பர்ஸைக் கையில் எடுக்கின்றீர்கள் மாதத்தின் முதல் வாரம் சம்பளம் கிடைத்திருக்கிறது என்பதால் பர்ஸ் நல்ல வெயிட்டாக இருக்கிறது. ஆகா எனக்கு இன்னிக்கு மச்சம் நரி மூஞ்சியிலே முழித்திருக்கிறேன் என்று எந்தவிதமான சஞ்சலமுமின்றி அது தங்களுடையதாக பாவிக்கும் குணாதிசயம்.

2. பர்ஸைக் கையில் எடுத்து ஆராய்ந்ததில் உள்ளே தொடர்புக்கான விபரம் இருக்கிறது. மனம் இது நல்ல சந்தர்ப்பம் நீயே வைத்துக்கொள் என்று கூப்பாடாக கூவுகிறது. இன்னொரு ஆங்கிளில் பர்ஸைத்தவரவிட்ட நபரின் குடும்பத்தவர் இந்தப் பணத்தின் மூலம் எதையெல்லாம் எதிர் பார்த்திருப்பர் எனும் எண்ணம் தோன்றுகிறது. சே! இது தப்பு நம்முடையதாக பாவிக்கக் கூடாது அது பாவம் என்று ஓட்டமாக ஓடி / தொடர்பு கொண்டு அந்த நபரிடமே அதைத் திருப்பித்தருகின்றீர்கள். நான் மட்டும் பாக்கலைன்னா... வேற எவன் கையிலாவது மாட்டியிருந்ததுன்னா... ஏதோ உங்க நல்ல நேரம் நான் இன்னிக்கு உங்க பின்னாடி வந்தேன் என்று பெருமை பேசியவாறே அடுத்த நபரது பொருள் மீது ஆசை வந்து, அது தப்புன்னு உடனே உணர்ந்து திருப்பித்தருகின்ற குணாதிசயம்.

3. பர்ஸை முன்னே செல்லும் நபர் தவற விட்டதைப் பார்த்து அதை எடுத்தவுடன் உடனே ஓடோடி நீங்க கீழே விட்டுட்டீங்க இந்தாங்க உங்க பர்ஸ் என்று உரிமையாளர் கையில் திணித்துவிட்டு எதனையும் மேலே எதிர்பார்க்காமல் ஓட்டமாக ஓடி தனது கடமையைச் செவ்வனே நிறைவேற்றுவதில் மட்டுமே கவனமாக இருக்கும் குணாதிசயம்.

இதெல்லாம் ஒரே சூழலில் வளர்ந்த ஒரு பெற்றோருக்கு மக்களான நபர்களிடமே காணப்படும் குணாதிசய முரண்பாடுகள்.

திருடுவதையே தொழிலாகக் கொண்டிருந்தாலும் பெண்களைத் தொந்தரவு செய்யாத நபர்கள் இருக்கிறார்கள்.

முழுமையாக ஆரோக்கியமான சூழலில் நெறியான வேடம் போட்டவாறே பெண்களை வேட்டையாடும் நபர்கள் இச்சமுகத்தில் இருக்கின்றார்கள்!

பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஏழ்மையான தன் வாழ்க்கையின் ஆரம்பகட்டத்தில் நினைத்து பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்கிற நபர்கள் இருக்கிறார்கள்.

மிக அரிதாக வெகுசிலர் என்ன சிரமம் வந்தாலும் நேர்மையாக வாழ்வதை மட்டுமே விரும்புவார்கள்.

தனிமனிதன் வாழ்வின் பயணப்பாட்டை இந்த எம்பெட்டட் விஷயமான வாஸனா என்கிற முற்பிறப்பில் நிறைவேறாத ஆசைகளுடன் திரும்ப அந்த நிராசை மீண்டும் பிறக்கும் போது டேக்டு லக்கேஜ்ஜாக மீண்டும் கூடவே பயணிக்கிறது என்கிற உண்மையை உணரவேண்டும்.

இந்த வாஸனா என்கிற ஆசை நறுமணம் நல்லதாகவும் கெட்டதாகவும் இருக்கலாம். நமது எண்ணங்களின் மூலமே அது நமக்குத் தெரியவரும். நாற்பது வயதிலும் சபலத்துடன் எதிரே இருக்கும் சிறுவயது பெண்களுடன் கறுப்பு எண்ணங்களுடன் பழக கெட்ட வாஸனாவே தூண்டுகிறது. கண்களால் காட்சியாக நயமாய் எதிரே இருக்கிற பெண்ணோடு பேசியபடியே மனதால் அப்பெண்ணை பலாத்காரம் செய்யும் சிந்தனையை சிந்திக்க இந்த கெட்ட வாஸனாவே காரணமாக அமைகிறது.

உணவில்லாமல் அவதிப்படுவோருக்கு, கல்வியில்லாமல் கஷ்டப்படுவோருக்கு அவர் உங்களுக்கு இரத்த உறவு இல்லாமலே அடுத்த நபருக்கு அவரது நிலையில் இருந்து உணர்ந்து இயன்றதை உதவுகின்ற என்பது மாதிரியான நல்ல குணாதிசயங்களை நல்ல வாஸனாவே காரணம்.

வாஸனா என்பது இந்து தத்துவ ஃப்ளோ சார்டில் உள்ளுறையும் இறைசக்தி ஆத்மாவுக்கு அடுத்த நிலையில் இருக்கிறது. ஆத்மாவைப் உள்ளுணர்ந்து பார்க்க/ உணர வாஸனா என்பது திரையாக அமைகிறது. கெட்ட வாஸனா கூடுதல் எனில் உங்கள் ஆன்மாவிற்கு இடையே இருக்கும் திரையில் அழுக்குகள் நிறைந்து ஆன்ம ஒளியை உங்களுக்குள் பரவ விடாமல் தடுக்கும். உயரிய நல்ல வாஸனா என்பதனால் ஆன்ம ஒளியை தடுக்காமல் உணர்ந்து பேரானந்தம் அடைய உதவும். மெடிட்டேஷன் என்பதே ஆன்ம ஒளியை பார்த்து உணர்ந்து ஒன்றுவதற்கான முயற்சி.. பயிற்சி!

ஆக Body Mind Intellect என்கிற BMI என்கிற உபகரணங்களின் பிரயோகிப்புத் தளத்தினை நிர்ணயிக்கும் சக்தியாக வாஸனா அமைகிறது. Body Mind Intellect என்கிற BMI இருந்தால் Perceiver Feeler Thinker என்பது இருந்தாக வேண்டும். நீங்கள் பார்க்கின்ற, உணர்கின்ற, சிந்திக்கின்ற இந்த தளங்களின் தன்மை / தரம் என்பது மீண்டும் வாஸானாவால் வழிநடத்தப்படுகின்ற உங்கள் உடல் சந்திக்கின்ற சம்பவங்களின் நினைவுகளால் ஏற்படும் மனம் முந்தைய சம்பவங்களினால் கிடைத்த ரெபரன்ஸ் டேட்டா என்கிற இண்டலக்ட் இவைகளின் கட்டுப்பாட்டில் முழுமையாக இருப்பவையே!

ஆபாசமாக படும் வார்த்தைகள் சர்வசாதாரணமாகப் படுவதும், உயரிய விஷயங்கள் வெட்டியான வீணானவை என்று ஒதுங்கிச் செல்ல வைப்பதும் இந்த வாஸனா என்கிற ஆசை பொங்கி வழிகாட்டிச் செயல்படுத்த வைப்பதனால் தான் என்பதை உணரவேண்டும்.

அப்போ கெட்ட வாஸனா என்கிற விஷயத்தை சரி செய்யவே முடியாதா? வழியே இல்லையா? மேம்பாட்டுக்கு என்ன வழி?

மனிதனுக்கான மேம்பாட்டு வழிகளை அடுத்த பதிவில் பார்க்கலாம்!


அன்புடன்,

ஹரிஹரன்

13 comments:

Hariharan # 03985177737685368452 said...

டெஸ்ட் மெசேஜ்!

ரவி said...

ஆஹா அட்வைசா ? நான் அப்பீட் ஆகிக்கிறேன் !!!

Hariharan # 03985177737685368452 said...

ரவி,

அப்பீட் ஆகவெல்லாம் அவசியமில்லை. யோகக்கலையை செய்துவருபவர். யோகம் உடலுக்கு இது மனதுக்கு. ரெண்டுமே ஆரோக்கியமா இருக்கணும் மொத்தமா மனிதன் மனிதனா இருக்க, சிந்திக்க, செயல்பட.. போரடிக்காம சொல்ல முயற்சிக்கிறேன் ரவி ;-)))

ரவி said...

பதிவுக்கு நடுவில் நமீதா படம் இருந்தா கண்டிப்பா வந்து பார்க்கிறேன் ஹி ஹி ஹி...

அதனால அடுத்த பதிவுல ஏதாவது படத்தை சேர்க்க முயற்சி செய்யுங்க :)))

Krishna (#24094743) said...

ஹரிஹரன்: நல்ல தொடக்கம். ஸனாதன தர்ம விளக்கங்களை எதிர் பார்க்கிறேன். ஹிந்து தர்மம் மட்டுமே "மரணத்திற்கு பின்னால் என்ன" என்னும் இரகசியத்திற்கான விடை காண முயற்சித்துள்ளது தெளிவு. கர்ம பலன்களின் வீச்சு என்பது மட்டுமே உலகில் பல விளக்கமுடியாத விஷயங்களுக்கு லாஜிக் பொருத்தி பார்க்க உதவும். இதை விட பெரியது வேறெதுவும் இல்லை. வெங்காயப் பதிவுகளைத் தொடர்ந்து இத்தகைய பதிவுகள் would reinstate the misdeeds! தொடரட்டும் உங்கள் பணி.

dondu(#11168674346665545885) said...

என்னை விடாமல் வியப்பில் ஆழ்த்துகிறீர்கள். நடத்துங்கள். ஒரு சிறு வேண்டுகோள். இதன் அடுத்தப் பகுதி(களை) விரைவில் கொணருங்கள். அவற்றுக்கே முன்னுரிமை தரவும். உங்களிடம் கற்றுக் கொள்ள பல விஷயங்கள் உள்ளன.

வெறுமனே என் வயதை மட்டும் அடிப்படையாக வைத்து உங்களையும் உங்கள் மனைவி மக்களையும் ஆசீர்வதிக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Hariharan # 03985177737685368452 said...

டோண்டு சார்,

ஆசிர்வாதங்களுக்கு நன்றிகள்.

இது சம்பந்தமான அடுத்த பகுதிகளை விரைவில் எழுதி வெளியிட கண்டிப்பாக முன்னுரிமை தருவேன்.

கருத்துக்கு நன்றிகள்! உங்களிடம் முரட்டு வைத்தியத்திலிருந்து நானும் கற்றேன்! :-)))

Hariharan # 03985177737685368452 said...

கிருஷ்ணா,


இந்தியப் பாரம்பரிய சனாதன தர்ம வாழ்வுமுறை தனிமனிதனுக்குப் பல விஷயங்களில் மிக அவசியமானது.

தனிமனித செயல்பாட்டை நேர்மையானதாகவும் அக்கறையானதாகவும், பொறுப்புணர்வுடையதாகவும் ஆக்கக்கூடிய நான் கற்ற, அப்ளை செய்கின்ற நல்ல வேத நெறி டெக்னிக்குகளை அடுத்தடுத்த பதிவுகளில் தரலாம் என்று இருக்கிறேன்!

ஒரு சிலருக்காவது பயன்பட்டால் சரி!

மிக முக்கியமானது நல்ல அறிவைப் பகிர்வது.

வருகைக்கும் ஊக்கத்துக்கும் நன்றி!

Hariharan # 03985177737685368452 said...

ரவி,

உங்களுக்காக நமீதாவை எனது பதிவுக்குள் சப்ஜக்டிவாக ஏற்ற ஆவன செய்கிறேன்!

கடுமையானஆன்மீக(!?) சவாலை என் முன் வைத்திருக்கின்றீர்கள்! :-))

வடுவூர் குமார் said...

வாஸனாஸ் கூட வரும் அடுத்த ஜன்மத்திலுமா?!!
எண்ணங்களை சுத்தப்படுத்துவது என்பது மிக கஷ்டமான வேலை அதை முடித்துக்காட்டினாலே நல்ல வாஸனாஸ் கூடவே இருக்கும்.

Hariharan # 03985177737685368452 said...

//வாஸனாஸ் கூட வரும் அடுத்த ஜன்மத்திலுமா?!!//

அதனால் தானே சிலரை அப்போதுதான் முதலில் பார்த்தாலும் எந்தவிதமான பரிச்சியம் இல்லாதபோதும் உடனே ஒட்டி உறவாடும் படியோ... வெட்டிக்கொள்ளும் படியோ நடந்து கொள்கிறோம்!

பின்ன அந்தந்த தனிமனிதர்களது அவர்கள் செய்த எல்லாவகையிலுமான causeகளால் விளைந்த effectகளை அவர்கள்தான் சுமக்க வேண்டும்! ப்ரையாரிட்டி என்பது புண்யமாகிய நல்லதெல்லாம் மொத்தமாகக் காலியாகி ஓவர் டிராப்ட் வசதியிலும் சமாளிக்காமல் பேங்ரப்ட் ஆகி டிபுரமோட் ஆகலாம்.

அம்மாதிரியே தொட்டால் 10 மடங்கு நன்மைகள் விளையலாம் அவரவர் செயல்படுத்திய causeகளால் விளைந்த effectகள் அதற்கான நியாயமான பலனைத்தந்தே தீரும்!

Anonymous said...

வெங்காய பதிவுகள் மட்டுமல்ல, இது போன்றவையும் நாட்டுக்கு மிகத்தேவையானவையே .

பரதரசு

Hariharan # 03985177737685368452 said...

//இது போன்றவையும் நாட்டுக்கு மிகத்தேவையானவையே .//

பரத்,

மிக அவசரமான தேவையாகவே உணர்கிறேன் அதனாலேயே எனக்குத் தெரிந்த வேத நெறி வாழ்க்கையில் இருக்கும் நல்ல விஷயங்களைப் பதிவுகளாக்கிப் பகிர்கிறேன்!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!